“காட்ட வித்தே கள்ளக் குடிச்சாலும்… கவுண்டன் கவுண்டன்தான்!”
-கவுண்டமணி (படம்: நான் பாடும் பாடல்)
வணக்கம்,
நேற்று எவனோ ஒரு டிரங்கன் மங்க் நகைச்சுவை மன்னன் அண்ணன் கவுண்டமணி அவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி ஆள் அப்பீட் ஆகிவிட்டார் என்று வதந்திகளைக் கிளப்பி விட அகில உலக இனையமே அல்லோலகல்லோலப்பட்டுப் போனது!
கவுண்டர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? அவர் கடைசி உயிலில் செந்தில்-க்கு ஏதாவது எழுதி வைத்து விட்டு போயிருக்கிறாரா? (அட்லீஸ்ட் ஒரு உதையாவது!) என்றெல்லாம் மக்கள் மனக்கிலேசத்துடன் தாறுமாறாக யோசிக்க, ஒரு சில வலைப்பதிவர்கள் “அண்ணாருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலி!” என்றெல்லாம் பதிவு போட ரெடியாகிவிட்டனர்!
இந்நிலையில் கவுண்டர் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வந்ததும்தான் நிம்மதியாயிற்று! அவர் மேலும் பற்பல ஆண்டுகள் நலமுடனும், வளமுடனும் வாழ்ந்து மேலும் பற்பல திரைப்படங்களில் நடித்து நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும் என்று ஆண்டவனிடம் இத்தருணத்தில் வேண்டிக் கொள்கிறேன்!
அவரது மேன்மையைப் போற்றும் விதமாக நமது காமிக்ஸ் உலகின் கவுண்டமணி & செந்தில் ஜோடியின் அட்டைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு! இப்போதைக்கு இவர்களின் மினி லயன் சாகஸங்களின் அட்டைப்படங்கள் மட்டுமே வெளியிட்டுள்ளேன்! கூடிய விரைவில் சிக்பில் குழுவினர் குறித்த முழு நீள ஆய்வுக் கட்டுரை ஒன்றை நீங்களனைவரும் அ.கொ.தீ.க.வில் படித்து மகிழலாம்!
உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:
விற்பனைகொரு ஷெரீப்! ஒரு விரிவான பார்வை: