வணக்கம்,
2011ல் முதன்முறையாக உங்களைச் சந்திப்பதில் பேரானந்தம்! புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், காதலர் தினம் என்று பல சிறப்பு தினங்கள் வந்திட்டாலும் பணிச்சுமை காரணமாக பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன்! அனைத்து சிறப்பு தினங்களுக்கும் எனது தாமதமான வாழ்த்துக்கள்! மன்னிக்கவும்!
இரத்தப்படலம் அலை இன்னும் ஓய்ந்தபாடில்லை! அதற்குள் அடுத்த வெளியீடுகள் வந்துவிட்டன! இன்னும் ஓரிரு மாதத்திற்குள் கருப்பு வெள்ளையில் வெளிவரவிருக்கும் அனைத்து இதழ்களும் வெளிவந்துவிடும்! அதற்குப் பிறகு நாமும் கலர் கலராய் காமிக்ஸ் படிக்கலாம்! வந்துள்ள விளம்பரங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன!
லயன் காமிக்ஸ் # 209 – வெள்ளையாய் ஒரு வேதாளம்! இதழ் குறித்த கிங் விஸ்வாவின் அதிரடிப் பதிவில் மேற்கொண்டு தகவல்களைப் பெறலாம்! படித்து மகிழ கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
இதனுடன் வந்துள்ள இன்னொரு இதழான இரும்புக்கை மாயாவியின் அதிரடி மறுபதிப்பு சாகஸமான காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 25 - களிமண் மனிதர்கள்! குறித்து நாம் காணுவோம்!
படங்களைக் ‘க்ளிக்’கிப் பெரிதாக்கிப் பார்த்து மகிழவும்!
பதிவுக்கு போகும் முன்:
இயக்குனர் மிஷ்கின் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர் என்பது அறிந்ததே! குறிப்பாக இரும்புக்கை மாயாவியின் அதிதீவிர ரசிகர்! இப்புத்தகம் அவர் கையில் கிடைத்ததும் அவர் முகத்தில் கண்ட பூரிப்பை நீங்களே பாருங்கள்! உடனடியாக புத்தகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதித்து விட்டார்! அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
புகைப்படம் எடுத்து வழங்கிய கிங் விஸ்வாவுக்கு நன்றி!
ஓகே! இனி பதிவுக்குப் போவோம்!
புத்தக விவரங்கள்:
ஆங்கிலப் பதிப்பு | முதல் பதிப்பு | இரண்டாம் பதிப்பு | |
அட்டைப்படம் | |||
கதை | WARLOCK | களிமண் மனிதர்கள் | களிமண் மனிதர்கள் |
இதழ் | VALIANT | முத்து காமிக்ஸ் | காமிக்ஸ் க்ளாசிக்ஸ் |
# | 231-252 (22 ISSUES) | 138 | 25 |
தேதி | 04-03-1967 TO 29-07-1967 | 15, ஜூலை 1984 | ஃபிப்ரவரி 2011 |
பதிப்பகம் | FLEETWAY PUBLICATIONS LTD. | முத்து காமிக்ஸ் | பிரகாஷ் பப்ளிஷர்ஸ் |
எடிட்டர் | M.சவுந்திரபாண்டியன் | S.விஜயன் | |
அச்சிட்டோர் | FLEETWAY PRINTERS | A.M.தியாகராஜன் | தி விஜய் புக்ஸ், சிவகாசி |
கதை | TOM TULLY | ||
ஓவியம் | JESUS BLASCO | ||
தமிழில் | M.சவுந்திரபாண்டியன் | ||
பக்கங்கள் | 44 (2 PAGES PER ISSUE) | 108 (கருப்பு வெள்ளை) | 108 (கருப்பு வெள்ளை) |
சைஸ் | A4 | 13cmx19cm | B6 |
விலை | 7d (PER ISSUE) | ரூ:2/- (1984 முதல் பதிப்பின் போது) | ரூ:10/- |
அட்டைப்படம்:
முதல் பக்கம்:
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பதிப்பில் சில இடங்களில் மட்டும் எழுத்துக்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள்! முழு புத்தகத்துக்கும் இவ்வாறு செய்திருந்தால் படிப்பதற்கு சுலபமாக இருந்திருக்கும்!
விளம்பரம்:
களிமண் மனிதர்கள்-ன் முதல் பதிப்பு எவ்வித விளம்பரமும் இன்றி திடுதிடுப்பென வந்தது! அதற்கான காரணத்தை பின்னர் அலசுவோம்! ஆனால் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் மறுபதிப்பிற்கு உரிய முறையில் ஏகப்பட்ட விளம்பரங்கள் வெளியிட்டு நம்மையெல்லாம் ஆவலுடன் காக்க வைத்து விட்டார் ஆசிரியர்!
CREDITS:
கதைச்சுருக்கம்:
இலண்டனுக்கு அருகில் புதிதாக திறக்கப்படவிருக்கும் அனுமின் நிலையத்தை அழிக்க இரும்புக்கை மாயாவியின் பரம வைரிகளான அ.கொ.தீ.க.வினர் முயல்கின்றனர்! அவர்களது நாசவேலை சதிச்செயல்களுக்குப் போர்வையாக அனுமின் உலைக்கு அருகாமையிலுள்ள பழமையான வார்லாக் பகுதியில் நிலவி வரும் மூட நம்பிக்கையான மண் இனத்தவர் பற்றிய கட்டுக்கதைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்! இரசாயண முறையில் அற்புத சக்தி படைத்த களிமண் மனிதர்களை உருவாக்கி மக்களை அச்சுறுத்துகின்றனர்! அ.கொ.தீ.க.வினர் மேற்கொள்ளும் முயற்சிகளை மாயாவி முதன்முறையாக சூப்பர் ஹீரோ அவதாரம் பூண்டு எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே கதை!
மாயாவியின் சூப்பர் ஹீரோ அவதாரம்:
களிமண் மனிதர்கள்! கதையிலிருந்து இரும்புக்கை மாயாவி கதைத்தொடரில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன! முக்கியமானதும், முதன்மையானதுமாக மாயாவி சூப்பர் ஹீரோ வேடம் தரிக்கிறார்!
பல வித நூதன சக்திகள் மாயாவிக்கு நிழற்படை விஞ்ஞானிகளால் வழங்கப் படுகிறது! கூடவே எதிரிகள் அவரை அடையாளம் கண்டு கொள்ளாமலிருக்க அவருக்கு சூப்பர் ஹீரோ சீருடையும் வழங்கப்படுகிறது!
சூப்பர் ஹீரோ ஆகிவிட்ட பிறகு ரகசிய அடையாளம் இல்லாமல் எப்படி?!! சூப்பர் ஹீரோ வேடம் தறிக்காத நேரங்களில் டாக்ஸி ஓட்டும் சாதாரண மனிதனாக லண்டனின் தெருக்களில் உலவுகிறார்! இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்!
சிறுவன் மோரீஸ் இக்கதையிலிருந்துதான் அறிமுகம் ஆகிறான்! மாயாவியின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் அவனை தனக்கு துணையாக சேர்த்துக் கொள்கிறார்!
இது வரை முகம்காட்டாத நிழற்படைத் தலைவர் நமக்கு அறிமுகமாகிறார்! பின்னர் வரும் கதைகளில்தான் (விண்வெளிக் கொள்ளையர், இயந்திரப்படை) இவரின் பாத்திரம் முழுமை பெறுகிறது!
மாயாவி இப்படி திடீரென ஏன் சூப்பர் ஹீரோவாக மாற வேண்டும்? காரணம், 1960-களில் உலகெங்கிலும் மிகப் பிரபலமடைந்திருந்த பேட்மேன் தொலைக்காட்சித் தொடர்-ன் பாதிப்பேயாகும்!
இத்தொடரைப் பற்றியும் மாயாவி கதைத்தொடரின் மீது அதன் பாதிப்புகள் பற்றியும் ஏற்கெனவே விரிவாக எழுதியுள்ளேன்! படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
மாயாவியின் சக்திகள்:
மாயாவி இக்கதையில் பெறும் விசேட சக்திகளைக் காண்போம்! ரொம்ப விளக்கி எழுத முடியாத அளவுக்கு ‘காதுல பூ’ சுத்தியிருக்காங்க! அதனால் நீங்களே படித்துக் கொள்ளுங்கள்!
இக்கதையில் மாயாவி மின்காந்த சக்தியை உபயோகித்து சூப்பர்மேன் ரேஞ்சுக்கு பறக்கிறார்! அதுமட்டுமின்றி மின் காந்த சக்தியின் மூலம் அவரை நோக்கி வரும் தோட்டாக்களை சிதறடிக்கிறார்! மயிர்கூச்செறிய வைக்கும் சாகஸம்தான்…இல்லையா?!!
க்ளைமாக்ஸில் மின் காந்த சக்தியை உபயோகித்து ஒரு ஏவுகனையையே அழிக்கிறார்! நம்பமுடிகிறதா?!!
சூப்பர் கார்:
மாயாவி இக்கதையில் விசேட டாக்ஸி ஒன்றை ஓட்டுகிறார்! அதில் பல்வேறு சிறப்பம்சங்கள் பொருந்தியுள்ளன!
டாக்ஸி மீட்டரில் சாட்டிலைட் தொலை தொடர்பு வசதி!
உடனடி மாயத்தண்மை பெற சக்தி வாய்ந்த கார் பேட்டரி! இதை எந்திரன்-ல் அப்பட்டமாகக் காப்பியடித்துள்ளனர்!
எஜெக்டர் ஸீட்!
ராக்கெட் என்ஜின்!
BATMOBILE, BLACK BEAUTY, ஜேம்ஸ்பாண்ட் கார்களுக்கு எவ்விதத்திலும் சளைத்ததல்ல மாயாவியின் டாக்ஸி! இல்லையா நண்பர்களே?!!
வில்லன்கள்:
எந்த ஒரு சூப்பர் ஹீரோவின் கதைகளின் வெற்றி அவர் எதிர்த்து மோதும் வில்லன்களைப் பொறுத்தே அமைகிறது! இதில் அ.கொ.தீ.க.வினராக வரும் களிமண் மனிதர்கள் அவர்தம் பணிகளைத் திறம்படச் செய்கின்றனர்! அதாவது மாயாவியிடம் அடி வாங்கி தோற்றோடுகின்றனர்! முக்கிய வில்லனாக வரும் முகம்தெரியாத அ.கொ.தீ.க. தலைவர் கூட ‘சப்’பென்றே இருக்கிறார்!
சுவாரசியமான துணுக்குகள்:
- இது நம் அபிமான காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-ன் 25வது இதழ்!
- ஜூலை 15, 1984! இந்தத் தேதி முத்துவின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான நாளாகும்! முத்துவின் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்த சோக தினம் இதுதான்! அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பின்னரே முத்து காமிக்ஸ் மீண்டும் வந்தது! இதற்கு முன்பு கடைசியாக 1982-ல் தான் முத்து காமிக்ஸ் வெளிவந்தது! நடுவில் நவம்பர் 14, 1982 முதல் ஃபிப்ரவரி 19, 1984 வரை முத்து காமிக்ஸ் வார மலர் இதழ் 22 முறை தட்டுத் தடுமாறி வெளிவந்தது! அந்த சமயத்தில் முத்து காமிக்ஸ் எதுவும் வெளிவரவில்லை!
- இதே ஜூலை 1984-ல் தான் நமது ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் லயன் காமிக்ஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது! அதுமட்டுமின்றி மேத்தா காமிக்ஸ், ராணி காமிக்ஸ் முதன் முதலாக வெளிவந்ததும் இதே சமயத்தில் தான்!
- முதல் பதிப்பு சைடில் பின்னடித்து வந்தது! இப்போது வந்துள்ள காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பதிப்பு நடுவில் பின்னடித்து வந்துள்ளது! கெட்டி அட்டையும் இல்லை! இந்த FORMAT-ல் நம் பதிப்பகத்தார் புத்தகம் வெளியிட்டு நெடு நாட்கள் ஆகிறது!
காமிக்ஸ் குத்து!
காமிக்ஸ் குத்து! வெளியிட்டு நெடுநாள ஆகிவிட்ட படியால் இதோ இக்கதையிலிருந்து ஒரு வசனம்! சிறுவன் மோரீஸ் அடிக்கும் ‘பன்ச்’!
ஹ்ம்ம்ம்… “வெடலப் பசங்கெல்லாம் வெரல சொடுக்குறானுங்க!” (விவேக் | படம்: சிவாஜி)
ஆங்கில மூலம்:
இதுவரை ஆன்லைனில் வெளிவந்துள்ள கதையின் ஆங்கில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு!
ஆங்கிலப் பக்கங்களைப் படித்து விட்டு தமிழில் படிப்போர் ஆங்கிலத்தில் மூலக்கதையமைப்பும், வசனங்களும் எவ்வளவு மொக்கையாக இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்! அதிலும் மாயாவி சூப்பர்மேன் போல் வார்த்தைக்கு வார்த்தை “GREAT DYNAMOS!” என்று ‘பன்ச்’ அடிப்பது ஜீரணிக்கவே முடியவில்லை! தமிழின் மொழிபெயர்ப்புத் தரமும், ஆசிரியர் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்களின் சிறப்பான எடிட்டிங்கும் இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது!
கதாசிரியர்கள் விவரம்:
TOM TULLY | JESUS BLASCO |
இக்கதையின் ஆசிரியர் TOM TULLY குறித்த மேல் விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
- http://en.wikipedia.org/wiki/Tom_Tully_(comic_writer)
- http://www.dandare.info/artists/tully.htm
- http://www.royoftherovers.com/behindthescenes/writers.aspx#tully
இக்கதையின் ஓவியர் JESUS BLASCO குறித்த மேல் விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
- http://lambiek.net/artists/b/blasco_jesus.htm
- http://www.dandare.info/artists/blasco.htm
- http://en.wikipedia.org/wiki/Jes%C3%BAs_Blasco
நிறைகள்:
- டாம் டல்லியின் அதிரடி ஆக்ஷன் கதைக்கு ஜீசஸ் ப்ளாஸ்கோவின் சிறப்பான ஒவியங்கள்!
- ஆசிரியர் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்களின் சிறப்பான தமிழாக்கம்! ஆங்கிலத்தை விட தமிழில் சிறப்பாக உள்ளது!
குறைகள்:
- சுமாரான கதையமைப்பு!
- சொதப்பல் வில்லன்கள்!
- ஜட்டி போடாத சூப்பர் ஹீரோ மாயாவி!
- முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு ‘காதுல பூ’ சாகஸங்கள்!
ஆனால் இரும்புக்கை மாயாவி என்றொரு சூப்பர் ஸ்டார் இருக்கையில் இவைகள் மிகப்பெரிய குறைகளாகத் தெரியவில்லை!
அடுத்த வெளியீடு:
அடுத்த வெளியீடாக ஜானி நீரோ சாகஸமான கொலைகாரக் கலைஞன்! மீண்டும் ஒரு முறை மறுபதிப்பு செய்யப்படவிருக்கிறது! இது இக்கதையின் மூன்றாவது மறுபதிப்பாகும்!
இக்கதை குறித்த மேல்விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
- http://muthufanblog.blogspot.com/2008/07/kolaikaara-kalaigan-this-first-ever.html
- http://akotheeka.blogspot.com/2009/12/blog-post_15.html
பதிவை இவ்வளவு தூரம் பொறுமையுடன் படித்ததற்கு நன்றி! வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆங்கிலப் பதிப்புகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அளித்த நண்பர் முத்து விசிறி-க்கு நன்றி.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
பி.கு.:-
- ஹாட்-லைனில் ஆசிரியர் இம்முறை கூறியிருக்கும் சமாச்சாரங்கள் சிந்தனையைத் தூண்டுகின்றன! இனிமேல் வரும் பெரும்பாண்மையான இதழ்கள் முழு வண்ணத்தில் வருமென்று கூறியுள்ளார்! அப்போது சில இதழ்கள் கருப்பு வெள்ளையிலும் வருமா? அதே போல் சந்தா கூப்பனில் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இடம்பெறவில்லை! அப்போது இனிமேல் தொடர்ந்து காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வெளிவருமா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன! உங்கள் கருத்தைக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
- அடுத்த பதிவாக நமது அ.கொ.தீ.க.வின் 50வது சிறப்புப் பதிவு வெளிவரவிருக்கிறது! தொடர்ந்திடும் உங்கள் ஆதரவுக்கு நன்றி! ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் பதிவிட்டு உங்கள் அனைவரையும் அசத்தி விடுகிறேன்!
தொடர்புடைய இடுகைகள்:
இரும்புக்கை மாயாவி:
- http://muthufan.0catch.com/Maayavi.htm
- http://muthufan.tripod.com/Maayavi.htm
- http://muthufanblog.blogspot.com/2008/07/i-have-been-collecting-english.html
- http://muthufan.0catch.com/firstmuthu.html
- http://muthufan.tripod.com/firstmuthu.html
- http://sharehunter.wordpress.com/2008/10/17/comicssupers2/
- http://sharehunter.wordpress.com/2008/10/21/ironclaw2/
- http://akotheeka.blogspot.com/search/label/இரும்புக்கை%20மாயாவி
- http://browsecomics.blogspot.com/search/label/Steel%20Claw
- http://tamilcomic.blogspot.com/search/label/இரும்புக்கை%20மாயாவி
காமிக்ஸ் க்ளாசிக்ஸ்:
- http://muthufanblog.blogspot.com/2005/10/thanks-for-encouraging-messages-for-my.html
- http://muthufanblog.blogspot.com/2005/10/apologiesapologiesapologies-thanks-for.html
- http://muthufanblog.blogspot.com/2005/10/thanks-for-visiting-my-blog-and-big.html
- http://muthufan.0catch.com/classics/index.htm
- http://muthufan.tripod.com/classics/index.htm
- http://tamilcomicsulagam.blogspot.com/search/label/Comics%20Classics
- http://comicology.blogspot.com/search/label/Comics%20Classics
- http://tamilcomic.blogspot.com/search/label/காமிக்ஸ்%20கிளாசிக்ஸ்
- http://akotheeka.blogspot.com/search/label/காமிக்ஸ்%20க்ளாசிக்ஸ்