Showing posts with label லயன். Show all posts
Showing posts with label லயன். Show all posts

Monday, November 1, 2010

வதந்திகளை நம்பாதீர்கள்!

வணக்கம்,

அனைவருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்தத் தீபாவளியை காமிக்ஸ் ரசிகர்களான நம் அனைவருக்கும் தித்திப்பானதாக ஆக்கிய ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் இத்தருணத்தில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

ஆனால் இந்த இனிய தருணத்தில் கசப்பான சில உண்மைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன்!

சமீப காலமாகவே தமிழ் காமிக்ஸ்-ன் எதிர்காலம் குறித்த பல வதந்திகள் வாசகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் உலவிக் கொண்டு வருகிறது! இவற்றைக் கொளுத்திப் போட்ட புண்ணியவான்கள் யாரென்று தெரியவில்லை! இவற்றை நீங்களும் கேட்டிருக்கக் கூடும்!

ஜம்போ ஸ்பெஷல் தான் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் வெளியிடப் போகும் கடைசி இதழ்! இதற்குப் பிறகு அவர் கடையை சாத்தி விட்டு நடையைக் கட்டப் போகிறார்! இத்தனை நாளாக காமிக்ஸ் போட்டு விளைந்த நஷ்டம் ஏராளம் என்பதால் தான் இந்த முடிவு!

அதோடு ஜம்போ ஸ்பெஷல் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிட்டும்! கடைகளில் வரவே வராது! ஆகையால் கடைகளில் வரட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்றிருந்தோருக்கு புத்தகம் விற்றுத் தீர்ந்து விட்டது… இனிமேல் கிடைக்கவே கிடைக்காது… என்றெல்லாம் வதந்திகளைக் கிளப்பிவிட்டு அதன் மூலம் ஆதாயம் தேடிக் கொள்கின்றனர் சிலர்!Lion 208 Front Cover

ஜம்போ ஸ்பெஷல் கடைகளுக்கு வராது என்பது உண்மைதான்! இதற்கு காரணம் விற்பனையாளர்கள் இம்முயற்சிக்கு கொடுக்காத ஆதரவே காரணமாகும்! ஆகையால்தான் முன்பதிவு மூலம் நேரடியாக விற்பனை செய்ய முன்வந்தார் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள்!

முன்பதிவு செய்தோருக்கு முதல் பிரதி கைக்கு வந்துவிட்டதென்று விஷயம் தெரிந்தவுடன் சென்னை, கோவை, திருச்சி முதலிய நகரங்களைச் சேர்ந்த வாசகர்கள் ஊரிலுள்ள கடைகள் அனைத்திற்கும் சென்று புத்தகத்தைத் தேடி ஏமாந்து திரும்பி வந்துள்ளனர்!

அவர்களது ஆர்வக் கோளாறைப் பயன்படுத்தி ரூ:200/- பெறுமானமுள்ள புத்தகம் இப்போதே ரூ:500/- வரை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது! முன்பதிவு செய்யத் தோன்றாத இவர்கள் முன்னூறு ரூபாய் அதிக விலை கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கொள்கின்றனர்! இதனால் யாருக்கு இலாபம்?!! சத்தியமாக ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு இல்லை!

புத்தகம் வருவதற்கு முன்பே ஒரு சிலர் மொத்தமாக 1500 புத்தகங்களையும் வாங்கி அவற்றை பிரிமியம் விலையில் விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்க திட்டமிட்டிருந்தனர்! இதற்காக முதலில் 20 சதவிகிதம் தள்ளுபடியும் கடைசியில் 10 சதவிகிதம் தள்ளுபடியும் கோரப்பட்டது!

ஆனால் ஆசிரியர்.திரு.S.விஜயன் அவர்கள் இதற்கு திட்டவட்டமான மறுப்பு தெரிவித்து விட்டார்! அதனாலேயே இப்போது முன் பதிவு செய்யாதோருக்கும் புத்தகம் கிடைக்க வாய்ப்புள்ளது! இந்த வதந்திகளை பற்றி விசாரிக்க நானும் நண்பர் கிங் விஸ்வாவும் ஆசிரியரை நேரில் சந்தித்த போது அவர் வாயாலேயே இந்த பதிலைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம்!

அதுமட்டுமின்றி இதுதான் அவர் வெளியிடவிருக்கும் கடைசி இதழ் என்ற வதந்திக்கும் அவர் முற்று புள்ளி வைத்துள்ளார் ஜம்போ ஸ்பெஷலில் வெளிவந்திருக்கும் தன் ஹாட்-லைன் மூலம்!

Lion 208 Hot Line 1Lion 208 Hot Line 1ALion 208 Hot Line 2

புத்தகம் வெளியிட விருப்பமில்லையெனில் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஜம்போ ஸ்பெஷலை வெளிக்கொணர வேண்டும் என்பதே அவரது வாதம்! அது மட்டுமின்றி அவர் வருங்காலத்தில் கடை பிடிக்கப் போகும் நேரடி விற்பனை முறையில் விற்பனையாளர்களுக்கு பங்கேதும் இருக்கப் போவதில்லை என்பதால் ஒரு வேளை அவர்களாகவே இவ்வாறு முடிவு செய்திருக்கக் கூடும்!

தற்போதைய நிலவரப்படி பதிக்கப்பட்ட 1500 பிரதிகளில் 1000 முன்பதிவுகள் போக 500 புத்தகங்கள் எஞ்சியுள்ளன! ஆகையால் முன்பதிவுக்கு முந்துங்கள்! காசோலை, வரைவோலை, மணியார்டர் என எவ்வகையிலும் முன்பதிவு தொகையை செலுத்தலாம்! முன்பதிவுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Lion 208 Advance Booking Coupon

சிங்கத்தின் சிறுவயதில்:

பதிவில் மேட்டர் குறைவாக இருப்பதாலும், சிங்கத்தின் சிறுவயதில் தொடரை நம் வலைத்தளத்தில் தொடர்ந்து தொகுத்து வருவதாலும் இதோ ஜம்போ ஸ்பெஷலில் வெளிவந்த சிங்கத்தின் சிறுவயதில் பக்கங்கள்!

Lion 208 SSV 15ALion 208 SSV 15BLion 208 SSV 15C

கொசுறு காமிக்ஸ் நியூஸ்:

காமிக்ஸ் நியூஸ் போட்டு ரொம்ப நாளாச்சு! அதனாலே இந்த வார குங்குமத்தில வந்த காமிக்ஸ் நியூஸ் உங்கள் பார்வைக்கு! எடிட் செய்ய நேரமில்லாத காரணத்தால் ‘குத்து’ ரம்யா என்று முன்பெல்லாம் செல்லமாக அழைக்கப்பட்ட திவ்யா ஸ்பந்தனாவின் கவர்ச்சிப் படமும் போனஸாக உங்கள் பார்வைக்கு! 

Kungumam - 08-11-2010 - Comics News

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்!  உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:-

XIII ஜம்போ ஸ்பெஷல் குறித்த எக்ஸ்பிரெஸ் பதிவுகள்:

பிற XIII பதிவுகள்:

மங்கூஸ் சித்திர நாவல்:

XIII ஜம்போ ஸ்பெஷல் வருவதில் தாமதம் குறித்த புலம்பல்/அலம்பல் பதிவுகள்:

CINEBOOK வெளியிட்டு வரும் XIII ஆங்கிலத் தொடர் குறித்த செய்திப் பகிர்வுகள்:

XIII காமிக்ஸ் ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய:

XIII COLLECTOR’S EDITION WIDGET-ஐ உங்கள் வலைத்தளத்தில் இணைக்க:

சிங்கத்தின் சிறுவயதில் அனைத்து பாகங்களையும் படிக்க:

Wednesday, August 4, 2010

ஜான் மாஸ்டர்!

வணக்கம்,

சமீபத்தில் கிங் விஸ்வா வெளியிட்டிருந்த காமிக்ஸ் கேள்வி-பதில் பதிவில் நண்பர்கள் சிலர் ஜான் மாஸ்டர் குறித்து விவரங்கள் கேட்டிருந்தனர்! அவர்களது கேள்விகளுக்கு பதில் கூறும் விதமாகவே இப்பதிவு வந்திருக்கிறது! விம்பிள்டன் போட்டிகளின் போதே வெளியிடப்பட்டிருக்க வேண்டிய பதிவு இது! ஆனால் சரியான விவரங்கள் கிடைக்கப் பெறாததால் மிகத் தாமதமாக வருகிறது!

இச்சமயத்தில் எனக்கும் கிங் விஸ்வாவுக்கும் உள்ள வேண்டப்பட்ட விரோதம் குறித்து எழுதியே ஆக வேண்டும்! அவர் தீவிர ரோஜர் ஃபெடரர் வெறியர்! எனக்கு ரஃபேல் நடால்-ஐயும் பிடிக்கும்! இம்முறை ரஃபா விம்பிள்டனில் இரண்டாவது முறையாக வெற்றிவாகை சூடியதில் மனிதர் கடுமையாக கொந்தளித்துப் போயிருக்கிறார்! அதுவும் ஃபைனலில் ஒரு செட்டைக் கூட வெல்ல முடியாத ஒரு மொக்கைப் பாண்டியிடம் அவரது ஆள் குவார்ட்டர்-ஃபைனலிலேயே தோற்றதை அவரால் ஜீரனிக்கவே முடியவில்லை! அவரை சாந்தப் படுத்தும் விதமாக இப்பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்!

ஓகே! மொக்கை போட்டது போதும்! இனி மேலும் நேரத்தை வீணாக்காமல்  நேரடியாக பதிவுக்கு போவோம்!

புத்தக விவரங்கள்:

அட்டைப்படம் Lion Comics # 013 - Sadhi Valai
கதை சதி வலை!
இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
வெளியீடு 13
முதல் பதிப்பு மே 1985 (கோடை மலர்)
மறுபதிப்புகள் இதுவரை இல்லை
பதிப்பகம் லயன் காமிக்ஸ்
ஆசிரியர் S.விஜயன்
அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி
நாயகர்(கள்) ஜான் மாஸ்டர்
மூலம் MASTER-SPY (ஆங்கிலம்)
இதழ் TIGER (Weekly)
வெளியீடு IPC MAGAZINES LTD.
முதல் பதிப்பு APR 1983 TO JAN 1984
கதை ???
ஓவியம் SANDY JAMES
தமிழில் S.விஜயன்
பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
சைஸ் 8"x11"
விலை ரூ:4/- (1985 முதல் பதிப்பின் போது)
CREDITS Lion Comics # 013 - Sadhi Valai - Credits
விளம்பரம் Lion Comics # 011 - Sadhi Valai - AdLion Comics # 12 - Sadhi Valai - Ad
முதல் பக்கம்

விம்பிள்டன்-ஐ வெல்ல வேண்டும் என்கின்ற இங்கிலாந்து கனவு இதில் வெளிப்படுகிறது! ஆனால் இன்னும் எந்த இங்கிலீஷ்காரனும் விம்பிள்டன் ஃபைனலுக்கு கூட போகவில்லை என்பது வேடிக்கையான வினோதம்!

Lion Comics # 013 - Sadhi Valai - First Page

வாசகர் கடிதம் அந்த காலத்து லயன் காமிக்ஸ்களில் ராணி காமிக்ஸ் ஸ்டைலில் சிறப்பான விமர்சனங்களுக்கு ரூ.25/- பரிசு! வழங்கப்பட்டது! இதோ அதற்கான அறிவிப்பு!
Lion Comics # 013 - Sadhi Valai - Rs.25 Parisu

லயன் காமிக்ஸ் # 015 - சைத்தான் விஞ்ஞானி-ல் வெளிவந்த வாசகர் கடிதம் பகுதி!
Lion Comics # 015 - Vasagar Kaditham

பரிசு பெற்ற அந்த விமர்சனம் இதோ!
Lion Comics # 015 - Vasagar Kaditham - Rs.25 Parisu

அட்டைப்படம் Lion Comics # 023 - Moscowil Master
கதை மாஸ்கோவில் மாஸ்டர்!
இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
வெளியீடு 23
முதல் பதிப்பு மார்ச் 1986
மறுபதிப்புகள் இதுவரை இல்லை
பதிப்பகம் லயன் காமிக்ஸ்
ஆசிரியர் S.விஜயன்
அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி
நாயகர்(கள்) ஜான் மாஸ்டர்
மூலம் MASTER-SPY (ஆங்கிலம்)
இதழ் TIGER (Weekly)
வெளியீடு IPC MAGAZINES LTD.
முதல் பதிப்பு APR 1983 TO JAN 1984
கதை ???
ஓவியம் SANDY JAMES
தமிழில் S.விஜயன்
பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
சைஸ் 10cmx14cm
விலை ரூ:2.50/- (1986 முதல் பதிப்பின் போது)
CREDITS Lion Comics # 023 - Moscowil Master - Credits
விளம்பரம் Lion Comics # 022 - Moscowil Master - AdThigil # 03 - Moscowil Master - Ad
முதல் பக்கம்

Lion Comics # 023 - Moscowil Master - First Page

வாசகர் கடிதம் Lion Comics # 024 - Vasagar Kaditham

சுவாரசியமான துணுக்குகள்:

  • இக்கதைத் தொடரின் ஓவியர் SANDY JAMES நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானவர்! அதிரடிப் படை, சூப்பர் ஹீரோ டைகர் (ராணி காமிக்ஸ்) கதைகளுக்கு துடிப்பான ஓவியங்கள் வரைந்தது இவர்தான்! துரதிர்ஷ்டவசமாக இவரைப் பற்றிய தகவல்கள் இனையத்தில் எதுவும் கிடைக்கவில்லை! மன்னிக்கவும்! இவரது அற்புத ஓவியங்கள் இக்கதைத் தொடருக்கு மேலும் மெருகூட்டுகின்றன!
  • லயன் காமிக்ஸ் # 013 - சதி வலை! தான் லயன் காமிக்ஸ்-ன் முதல் கோடை மலர் ஆகும்! பெரிய சைஸில் ரூ.4/- விலையில் அசத்தலான இந்த புத்தகம் காமிக்ஸ் வேட்டையர்களின் கனவு பொக்கிஷங்களில் ஒன்று! INFACT ஜான் மாஸ்டர் தோன்றும் இவ்விரு புத்தகங்களும் கிடைப்பது மிகவும் அரிது!
  • தமிழில் வெளிவந்த முதல் விளையாட்டு சம்பந்தப்பட்ட காமிக்ஸ் ஹீரோ ஜான் மாஸ்டர் தான் என்பது எனது கருத்து! இவரது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!
  • இவரது கதைகளில் இவரது கோணங்கி அஸிஸ்டெண்டாக வரும் ராபின் கதாபாத்திரம் காமிக்ஸ் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்! சூப்பர் ஹீரோ டைகர்-க்கு ஒரு ஹென்றி போல் ஜான் மாஸ்டர்-க்கு ஒரு ராபின் அமைந்தது அவரது அதிர்ஷ்டமே! இவரது கண்டுபிடிப்புகள் ஆபத்து நேரத்தில் வேலை செய்கிறதோ இல்லையோ நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்! ஆனால் இவரது ஆங்கில ஒரிஜினல் பெயர்தான் (FERGUS THATERY) வாயில் நுழைய மாட்டேனென்கிறது!
  • மொத்தம் இரண்டேயிரண்டு கதைகளில் மட்டுமே வந்திருந்தாலும் கூட தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார் ஜான் மாஸ்டர்! ஆனால் ஆங்கிலத்தில் இவரது நிலைமை பரிதாபகரமானது! இவர் குறித்த இந்த அற்ப தகவல்களை தேடிப் பிடிப்பதற்கே இவ்வளவு காலம் ஆகிவிட்டது! அதுவும் இவர் தோன்றிய TIGER வார இதழ் இவர் போன்ற விளையாட்டு வீரர்களை நாயகர்களாகக் கொண்ட காமிக்ஸ்களுக்கு பெயர் போனது! இவர்களுள் ROY OF THE ROVERS மட்டும் மிகப் பிரபலம்!  ஆனால் பல டஜன் கதாநாயகர்களுள் ஜான் மாஸ்டர் காணாமல் போய் விட்டது நமது துரதிர்ஷடமே!

ஆங்கில மூலம்:

இத்தொடரின் ஆங்கில மூலம் ஆன்-லைனில் கிடைப்பதென்பது வெகு அரிதாக உள்ளது! இது வரையில் இது ஒரு பாகம் மட்டுமே ஆன்-லைனில் கிடைத்தது! தமிழில் கூட புத்தகங்கள் எளிதாக கிடைத்துவிடும் போலிருக்கிறது! லயன் காமிக்ஸ் # 023 - மாஸ்கோவில் மாஸ்டர்! கதையிலிருந்து சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு!

000190002000021

ஹாட்-லைன்:

ஜான் மாஸ்டர் கதைகள் ஏன் தொடர்ந்து வருவதில்லை என்று வாசகர்கள் பலரும் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களை பலமுறை கேட்டிருக்கின்றனர்! அவர் எழுதிய முதல் ஹாட்-லைன்-லும் இக்கேள்வி கேட்கப்பட்டது! அதற்கு அவர் அளித்துள்ள சுவாரசியமான பதிலைப் படித்து மகிழுங்கள்!

Lion Comics # 042 - Lion Deepavali Super Special - Hotline

சிங்கத்தின் சிறுவயதில்:

ஜான் மாஸ்டர் குறித்து சிங்கத்தின் சிறுவயதில் தொடரில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் கூறியுள்ளதைப் படித்து மகிழுங்கள்!

Lion Comics # 192 - Singathin Siruvayadhil - John Master

சிங்கத்தின் சிறுவயதில் அனைத்து பாகங்களும் படிக்க:

நிறைகள்:

  • ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு சரியான விருந்து! விளையாட்டு சார்ந்திருப்பது கூடுதல் சிறப்பு!
  • அட்டகாசமான ஓவியங்கள்! அதிரடி கதைத் திருப்பங்கள்! ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் ஜெட் வேக கதையமைப்பு!

குறைகள்:

  • ஒன்றும் இல்லை! கதைத் தொடர் இரண்டு கதைகளோடு முடிந்து விட்டதைத் தவிர!

நன்றிகள்:

  • முத்து விசிறி – வழக்கம் போல ஆங்கிலத் தொடரின் அனைத்து விவரங்களையும் அளித்தமைக்கு!
  • ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் – இக்கதைத் தொடரை நமக்கு அறிமுகம் செய்தமைக்கு!
  • பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்த உங்களுக்கும்தான்!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

Wednesday, July 7, 2010

ஆண்டு மலர்!

வணக்கம்,

ஜூலை மாதம் வந்தாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது நமது அபிமான லயன் காமிக்ஸின் ஆண்டு மலரும் வழக்கமாக ஆண்டு மலரில் வரும் மாடஸ்டி கதைகளும் தான்! இந்த ஜூலையில் தனது 26வது பிறந்த நாளைக் கொண்டாடும் லயன் காமிக்ஸிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் அமைந்ததே இந்த சிறப்பு ஆண்டு மலர் பதிவு!

1984-ல் தொடங்கிய நமது அபிமான லயன் காமிக்ஸின் சகாப்தம் தற்போது பல முட்டுக்கட்டைகளைச் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி மென்மேலும் வளர இத்தருணத்தில் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம்! லயன் காமிக்ஸ் மூலம் நமக்கு தொடர்ந்து மகிழ்வூட்டி வரும் நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களையும் இத்தருணத்தில் பாராட்டுவோம்!

சுவாரசியமான துணுக்குகள்:

  • ஆண்டு மலர் என்றாலே நம் நினைவுக்கு வரும் மாடஸ்டி பிளைஸி இதுவரை மூன்றே மூன்று ஆண்டு மலர்களில் தான் சாகஸம் புரிந்துள்ளார் என்பது ஆச்சரியமளிக்கிறது! லயன் காமிக்ஸ் முதல் இதழில் தோன்றியது முதல் ஆஸ்தான நாயகியாக விளங்கும் மாடஸ்டியை நாம் லயன் காமிக்ஸின் ஆரம்ப காலத்தில் வந்த ஆண்டு மலர்களில் படித்து மகிழ்ந்த காரணத்தினாலோ என்னவோ ஆண்டு மலர் என்றாலே மாடஸ்டி என்கிற எண்ணம் நம் ஆழ்மனதில் வேரூன்றி விட்டதோ?!!
  • இதுவரை ஆண்டு மலரில் அதிகமாகத் தோன்றி சாகஸம் புரிந்தது வழக்கம் போல டெக்ஸ் வில்லர் தான்! அடுத்தபடியாக லக்கி லூக் அதிக சாகஸங்கள் புரிந்திருக்கிறார்!
  • 1985 முதல் வருடந்தவறாது வெளிவந்து கொண்டிருந்த ஆண்டு மலர் 2004-ல் தான் முதன் முதலாக வராமல் போனது! அதற்கு காரணம் மே 2004-ல் வந்த மெகா-ட்ரீம் ஸ்பெஷல் தான்!அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வரும் ரூ:100/- விலையிலான ஸ்பெஷல்கள் ஆண்டு மலர்களை கபளீகரம் செய்து விடுவது வழக்கமாகி விட்டது!
  • ஆண்டு மலரில் பல சமயங்களில் காணாமல் போய்விட்ட பழைய ஹீரோக்கள் திடீரென வந்து நம்மை திக்குமுக்காடச் செய்வர் (உதா: இரும்புக்கை நார்மன், ஆக்‌ஷன் ஹீரோ சைமன், இரகசிய ஏஜெண்ட் காரிகன், கேப்டன் பிரின்ஸ்...)!

பட்டியல்:

இது வரை வெளிவந்த லயன் காமிக்ஸ் ஆண்டு மலர்களின் பட்டியல் இதோ! விளம்பரப்படுத்தப்பட்டு வெளிவராத ஆண்டு மலர்களும், ஜூலை மாதம் வந்திட்ட பிற இதழ்களும் இதில் அடக்கம்!

ஆண்டு மலர் வருடம் TITLE Issue # விலை குறிப்புகள்
0 1984 கத்தி முனையில் மாடஸ்டி பிளைஸி 001 ரூ:2/- இங்கு தான் எல்லாம் ஆரம்பித்தது!
1 1985 சைத்தான் விஞ்ஞானி! + குதிரை வீரன் ஆர்ச்சி! 015 ரூ:3/- ஸ்பைடர் + ஆர்ச்சி = மாபெரும் வெற்றி!
2 1986 பவளச்சிலை மர்மம்! 027 ரூ:3/- டெக்ஸ் வில்லரின் சாகஸங்களில் இது தலையானது!
3 1987 அதிரடிப் படை! 039 ரூ:3/- அற்புதமான கதைத் தொடர்! அருமையான ஓவியங்கள்! இத்தொடர் குறித்து விரைவில் பதிவிடுகிறேன்!
4 1988 கானகத்தில் கண்ணாமூச்சி! 052 ரூ:2.50/- மாடஸ்டி + போனஸ் ஆக்‌ஷன் கதை! சூப்பர் கதையை எப்படி சொதப்புவதென்று வயிரக்கண் பாம்பு கூறும்!
5 1989 நடுக்கடலில் அடிமைகள்! 062 ரூ:3/- மாடஸ்டி + போனஸ் டெக்ஸ் வில்லர் (?!!) சிறுகதை!
6 1990 எமனுடன் ஒரு யுத்தம்! 070 ரூ:3/- டெக்ஸ் வில்லர் குழுவின் ஆக்‌ஷன் அதிரடி! 3வது பக்கத்திலேயே ‘டுமீல்!’ சத்தம் தொடங்கிவிடும்! கதை முடியும் வரை ஓயாது!
7 1991 மர்ம முகமூடி! 077 ரூ:3/- இரகசிய ஏஜெண்ட் காரிகன் சாகஸம்!
8 1992 மின்னலோடு ஒரு மோதல்! 084 ரு:3/- ஆக்‌ஷன் ஹீரோ சைமன் சாகஸம்! இவர் குறித்து விரைவில் ஒரு முழு நீள பதிவிடுகிறேன்!
9 1993 கானகக் கோட்டை! 091 ரூ:3.50/- ரிப் கிர்பியின் அற்புத சாகஸம்!
10 1994 மந்திர மண்ணில் மாடஸ்டி! 102   மீண்டும் மாடஸ்டி!
11 1995 பூம்-பூம்-படலம்! 114 ரூ:5.50/- லக்கி லூக்கின் இருவண்ண சாகஸம்!
12 1996 இரத்தப் படலம்! 6 122 ரூ:7.50/- XIII-ன் கண்ணீர் காவியம்! எனக்கு மிகவும் பிடித்த பாகம்!
13 1997 மிஸ்டர் மஹாராஜா! 133 ரூ:5/- சிக்-பில், டெக்ஸ் என இரு சர்ப்ரைஸ் கதைகள்! நீண்ட இடைவெளிக்குப் பின் நான் மீண்டும் ரெகுலராக காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது இந்த இதழ் முதல்தான்!
14 1998 கானகத்தில் கலவரம்! 142 ரூ:7.50/- கேப்டன் பிரின்ஸ்-ன் கடைசி சாகஸச் சிறுகதை! லக்கி லூக்கின் இருவண்ண போனஸ் சாகஸமும் உண்டு!
15 1999 தலை வாங்கும் தேசம்! 151 ரூ:6/- ரொம்ப நாள் விளம்பரத்திற்குப் பின் வந்த சிக்-பில் குழுவினரின் முழு நீள காமெடி கலாட்டா!
16 2000 இரத்த பூமி! 162 ரூ:7/- வித்தியாசமான கெள-பாய் கதை! 
17 2001 மெக்ஸிகோ படலம்! 169 ரூ:10/- டெக்ஸ் வில்லரின் வழக்கமான அதிரடி ஆக்‌ஷன்!
18 2002 பயங்கரப் பயணிகள்! 173 ரூ:10/- மொக்கை டெக்ஸ் வில்லர் கதையின் சுமாரான முதல் பாகம்! லயன் காமிக்ஸின் மறுமலர்ச்சி காலத்தில் வந்திட்ட முதல் ஆண்டு மலர்!
19 2003 பரலோகத்திற்கொரு பாலம்! 181 ரூ:10/- லக்கி லூக்கின் முழு நீள வண்ண கார்ட்டூன்!
20 2004       ஆண்டு மலர் எதுவும் வெளியிடப்படவில்லை!
21 2005 கோட்-நேம் மின்னல்!   ரூ:10/- விளம்பரப்படுத்தப்பட்டது! ஆனால் வெளிவரவில்லை!
22 2006 சூ-மந்திரகாளி...! 196 ரூ:10/- லக்கி லூக்கின் முழு நீள வண்ண கார்ட்டூன்!
23 2007 காட்டேரிக் கானகம்!   ரூ:10/- மீண்டும் மாடஸ்டி! ஆண்டு மலர் என விளம்பரப்படுத்தப்பட்டது! ஆனால் மிகத் தாமதமாக நவம்பரில் தான் வந்தது! ஜூலையில் டெக்ஸ் வில்லர் (காலன் தீர்த்த கணக்கு..!) தான் தாமதமாக வந்தார்!
24 2008 மரணத்தின் முன்னோடி! 203 ரூ:10/- டெக்ஸ் வில்லர் சாகஸம்! ஜுலையில் வந்தாலும் ஆண்டு மலர் என குறிப்பிடவில்லை!
25 2009 மாண்டவன் மீண்டான்! 206 ரூ:10/- இரகசிய ஏஜெண்ட் காரிகன் மறுபிரவேசம்! 25வது ஆண்டு மலர்!  திடீரென வந்து திக்குமுக்காடச் செய்தது!
26 2010       இதுவரையில் எதுவும் வரவில்லை!

விளம்பரம்:

ஆண்டு மலர் என்றாலே நம் கண் முன் விரியும் காட்சி அநேகமாக இந்த விளம்பரமாகத் தான் இருக்க முடியும்! அப்படி நம் உள்மனதில் ஊறிவிட்ட அந்த விளம்பரத்தின் முதல் பிரதி இதோ உங்கள் பார்வைக்கு!

Annual Ad

அட்டைப்படங்கள்:

இதுவரை வெளிவந்த ஆண்டு மலர் அட்டைப்படங்களின் கண்கவர் அணிவகுப்பு இதோ! இதுவரை வெளிவராத, ஜூலையில் வந்த ஆனால் ஆண்டு மலர் என்ரு விளம்பரப்படுத்தப்படாத, ஆண்டு மலர் என்று அறிவித்து தாமதமாக வந்த கதைகளின் அட்டைப்படங்களும் அடக்கம்!

Lion Comics # 001 - Kathi Munaiyil Modesty BlaiseLion Comics # 001 - Kathi Munaiyil Modesty Blaise - BackLion Comics # 015 - Saithaan Vingnani!Lion Comics # 015 - Kudhirai Veeran Archie!

Lion Comics # 027 - Pavalachilai Marmam!Lion Comics # 027 - Pavalachilai Marmam! - BackLion Comics # 039 - Adhiradi Padai!Lion Comics # 039 - Adhiradi Padai! - Back

Lion Comics # 052 - Kaanakathil Kannamoochi!Lion Comics # 062 - Nadukkadalil Adimaigal!Lion Comics # 062 - Nadukkadalil Adimaigal! - BackLion Comics # 070 - Emanudan Oru Yudham!

Lion Comics # 077 - Marma Mugamoodi!Lion Comics # 084 - Minnalodu Oru Modhal!Lion Comics # 091 - Kaanaga Kottai!Lion Comics # 102 - Mandhira Mannil Modesty!

Lion Comics # 114 - Boom-Boom--Padalam!Lion Comics # 122 - Ratha Padalam! 6Lion Comics # 133 - Mr.MaharajaLion Comics # 133 - Mr.Maharaja - Back

Lion Comics # 142 - Kaanagathil Kalavaram!Lion Comics # 151 - Thalai Vaangum Dhesam!Lion Comics # 162 - Ratha Boomi!Lion Comics # 169 - Mexico Padalam!

Lion Comics # 173 - Bayangara Payanigal!Lion Comics # 181 - Paralogathirkoru Palam!Lion Comics - 21st Annual - Code Name Minnal! (Unpublished)Lion Comics # 196 - Choo- Mandhira Kaali...!

Lion Comics # 193 - Kaalan Theertha Kanakku..!Lion Comics # 201 - Katteri Kanagam!Lion Comics # 203 - Maranathin Munnodi...!Lion Comics # 206 - Maandavan Meendaan!

அட்டைப்படங்கள் உபயம்:

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:

மாடஸ்டி பிளைஸி குறித்து கிங் விஸ்வாவின் இடுகை:

கோட்-நேம் மின்னல் குறித்து கனவுகளின் காதலரின் இடுகை:

மாடஸ்தி குறித்து ஒலக காமிக்ஸ் ரசிகரின் இடுகை:

டெக்ஸ் வில்லர் குறித்து முத்து விசிறியின் முத்தான பதிவு: