Showing posts with label ஜார்ஜ் நோலன். Show all posts
Showing posts with label ஜார்ஜ் நோலன். Show all posts

Wednesday, April 14, 2010

கோடை மலர்!

“என்னடா விளம்பரம்! அந்த சினிமாக்காரங்கதான் அப்படி செய்யறாங்க! தனக்குதானே வால் போஸ்டரடிச்சு செவுத்த நாற வெக்குறாங்க! ஒன்னுமே கிடைக்கலேன்னா பொறந்த நாள் கொண்டாடுறாங்க! அதாவது 33 வயசுக்கு மேல போறானுங்களான்னா, போக மாட்டேங்குறானுங்க, அதே 33ல தான் நிக்குறானுங்க! இவனுங்கதான் பொறந்தானுங்களா இந்தியாவுல?!! நம்மெல்லாம் தேவையில்லாம அனாவசியமா பொறந்துட்டமா?!!”
-கவுண்டமணி (படம்: கரகாட்டக்காரன்)

வணக்கம்,

இந்த சித்திரைத் திருநாள்/தமிழ் புத்தாண்டு தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடா மன்னரும், எனக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியுமான கிங் விஸ்வா அவர்களுக்கு பிறந்த நாள்! இந்த நன்னாளில் அவரை வாழ்த்த வயதில்லையெனினும், வணங்குகிறேன்!

கோடை விடுமுறைகள் வேறு ஆரம்பித்து விட்டன! ஆகையால் கோடையின் வெம்மையைத் தணிக்க இதோ ஒரு கோடை மலர் பதிவு! இம்முறை நான் தேர்ந்தெடுத்திருப்பது லயன் காமிக்ஸ்-ன் 50வது இதழாகிய டிராகன் நகரம்!

50வது இதழ் பதிவைப் போடுவதால் கிங் விஸ்வாவின் வயது வெறும் 50 தான் என்று யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்!

ஓகே! மொக்கை போட்டது போதும், இனி பதிவுக்கு போவோம்!

வெளியீட்டு விவரங்கள்:

புத்தகம் : டிராகன் நகரம்!
இதழ் : லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
வெளியீடு # : 50
முதல் பதிப்பு : மே 1988
மறுபதிப்புகள் : இதுவரை இல்லை
பதிப்பகம் : பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
அச்சிட்டோர் : தி விஜய் புக்ஸ், சிவகாசி
ஆசிரியர் : S.விஜயன்
பக்கங்கள் : 212 (கருப்பு வெள்ளை)
சைஸ் : 5"x7"
விலை : ரூ:5/- (1988 முதல் பதிப்பின் போது)

Lion Comics # 050 - Credits

விளம்பரங்கள்:

லயன் காமிக்ஸ்-ன் 50வது இதழுக்கான விளம்பரங்கள் 1980களில் வளர்ந்த ஒவ்வொரு பள்ளி மாணவனின் வாழ்விலும் மறக்க முடியாத ஒரு அங்கம்! மாதாமாதம் லயன், மினி லயன், திகில் என அனைத்து புத்தகங்களிலும் கண்கவர் விளம்பரங்கள் வெளியிட்டு அசத்தியிருப்பார் ஆசிரியர்! இதோ அவற்றின் அணிவகுப்பு!

Lion Comics # 045 - Inner - AdLion Comics # 046 - Back Cover - AdLion Comics # 046 - Inner - AdLion Comics # 047 - Back Cover - Ad

Lion Comics # 049 - Back Cover - AdMini Lion Comics # 015 - Back Cover - AdThihil Comics # 027 - Back Cover - AdThihil Comics # 029 - Back Cover - Ad

50-வது சிறப்பிதழில் வெளிவரவிருக்கும் கதைகளுக்கான விளம்பரம் இதோ! ஆனால் வழக்கம் போலவே விளம்பரப்படுத்தப்பட்ட கதைகளுக்கும் வெளியிடப்பட்ட கதைகளுக்கும் நிறைய வேறுபாடுகள்! ஆர்ச்சியும், இரட்டை வேட்டையர்-ம் வழக்கம் போல ஸ்வாகாவாகி விட வேறிரு கதைகள் வெளிவந்தன!

Thihil Comics # 027 - Inner - Ad

வெளிவந்த கதைகளின் பட்டியல் இதோ:

  • கதை # 1 : மரணத்தைத் தேடி! (வேட்டை வீரர் ஜிம்பா சாகஸம்)
  • கதை # 2 : வீனஸ் கல் மர்மம்! (ஸ்பைடர் சாகஸம்)
  • கதை # 3 : டிராகன் நகரம்! (டெக்ஸ் வில்லர் சாகஸம்)
  • கதை # 4 : ஜார்ஜ் நோலனுடன் துப்பறியுங்கள்!
  • கதை # 5 : கடலில் முளைத்த பேய்! (திகில் சிறுகதை)
  • கதை # 6 : சுட்டிப் பயல்!

அட்டைப்படம்:

கண்கவர் க்ளாசிக் முன், பின் அட்டைப்படங்கள்! சொல்வதற்கு ஒன்றுமில்லை!

Lion Comics # 050 - Dragon NagaramLion Comics # 050 - Dragon Nagaram - Back

ஹாட்-லைன்:

ஹாட்-லைனின் ஆரம்ப காலங்களில் அது இதழின் கடைசி பக்கத்திலேயே இடம்பெற்றிருந்தது! டிராகன் நகரத்தில்தான் முதன் முறையாக முதல் பக்கத்தில் வந்தது! ஆனால் இதற்கு பின்னர் பல வருடங்கள் கழித்து தான் ஹாட்-லைன் முதல் பக்கத்தில் ரெகுலராக வர ஆரம்பித்தது!

Lion Comics # 049 - HotlineLion Comics # 050 - Hotline

இவ்விதழில் முதன்முறையாக லயன் காமிக்ஸ் முதல் 50 இதழ்களின் முழுப்பட்டியல் வெளியிடப்பட்டது! இதுவே பின்னர் 100, 150 மற்றும் 200வது இதழ்களிலும் பின்பற்றப்பட்டது!

Lion Comics # 050 - Lion Comics (1-50) List

இந்த பட்டியலில் எவ்வித குழப்பமும் இல்லாமல் வெளிவந்ததும் அநேகமாக இந்த ஒரு முறையாகத்தான் இருக்கவேண்டும்! இதில் விசேஷம் என்னவென்றால் லயன் காமிக்ஸ் # 048 – சூப்பர் ஸ்டார் ஸ்பைடர்! ஒரு இலவச இணைப்பாகும்! லயன் காமிக்ஸ் # 047 – மரணப் பணி! உடன் அது வழங்கப்பட்டது! ஆனால் இலவச இணைப்பை ஏன் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்கு விடையுண்டு!

லயன் காமிக்ஸ்-ன் 50வது இதழ் கோடை விடுமுறைகளின் போது வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என்றெண்ணிய ஆசிரியர் அதற்காக வழக்கமான ஷெட்யூலிலிருந்து மாற்றி அதை PREPONE செய்ய முயலும் போது இந்த யுக்தி தோன்றியிருக்க வேண்டும்! இதே மார்க்கெட்டிங் மதியூகத்தை அவர் லயன் காமிக்ஸ்-ன் 100வது இதழிலும் கையாண்டிருப்பார்! இந்த யுக்தியினால் இவ்விரு இலவச இதழ்களும் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது!

கதை # 1 : மரணத்தைத் தேடி!

கானக வீரர் ஜிம்பா-வின் சாகஸ சிறுகதை! அற்புதமான ஓவியங்கள் கதையின் ஹை-லைட்! இக்கதையின் ஆங்கில மூலம் LION ANNUAL 1963ல் இடம்பெற்றிருந்தது!

Lion Comics # 050 - Story # 1 - Maranathai ThediLion Annual 1963Lion Annual 1963 - Jungle Hunter

கதை # 2 : வீனஸ் கல் மர்மம்!

ஸ்பைடர்-ன் சாகஸ சிறுகதை!  சிறுகதையில் வந்தாலுமே அட்டைப் படத்தில் இடம்பிடிக்கும் அளவுக்கு இருந்திருக்கிறது ஸ்பைடர்-க்கு மவுசு அந்நாட்களில்! இக்கதையின் ஆங்கில மூலம் LION ANNUAL 1968ல் இடம்பெற்றிருந்தது!

கிங் விஸ்வா ரொம்ப வருடங்களாக ஸ்பைடர் சிறப்புப் பதிவு போடுவதாக போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்! இப்ப வருமோ? எப்ப வருமோ?

Lion Comics # 050 - Story # 2 - Venus Kal Marmam (Spider)Lion Annual 1968Lion Annual 1968 - The Spider and The Stone of Venus

இக்கதையின் ஆங்கில மூலத்தை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்! உபயம் : COUNTER-X

கதை # 3 : டிராகன் நகரம்!

டெக்ஸ் வில்லர்-ன் டாப் 10 கதைகளில் இக்கதை நிச்சயம் டாப் 5க்குள் வந்துவிடும்! டெக்ஸின் ராட்சத கதைகள் அடங்கிய ஸ்பெஷல்களுக்கு இக்கதையின் பெருவெற்றியே மூலகாரணம்! கதை முழுக்க நிரவியிருக்கும் அதிரடி ஆக்‌ஷனும், மெல்லிய நகைச்சுவையும் இக்கதையை ஒரு இன்ஸ்டண்ட் க்ளாசிக்காக மாற்றி விடுகின்றன!

Lion Comics # 050 - Story # 3 - Dragon Nagaram (Tex Willer)Western Classics No. 7 - Tex Willer - The Hired GunWestern Classics No. 6 - Tex Willer - The Hired Gun

டிராகன் நகரம் கதையின் சர்வதேச அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!

ts_tex0046ts_tex0047tt_tex0046tex088_2ed_bigrs_tex0046tex088_bigtt_tex0047txc074_bigrs_tex0047

மேல்விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

டெக்ஸ் வில்லர் ஆங்கில பதிப்புகள் குறித்து முத்து விசிறியின் முத்தான பதிவு!

கதை # 4 : ஜார்ஜ் நோலனுடன் துப்பறியுங்கள்!

ஜார்ஜ் நோலன்-ன் வழக்கமான பாணியிலான துப்பறியும் சிறுகதை! இவ்வகை கதைகள் என்னை மிகவும் கவர்ந்தவையாகும்! ஒரு சாம்பிள் பக்கம் மட்டும் உங்கள் பார்வைக்கு!

Lion Comics # 050 - Story # 4 - Zip Nolan

கதை # 5 : கடலில் முளைத்த பேய்!

திகில் சிறுகதை! இக்கதையின் ஆங்கில மூலம் SCREAM! - HOLIDAY SPECIAL (1986)ல் இடம்பெற்றிருந்தது! நம் ஆரம்ப கால திகில் இதழ்களுக்கு மூலமாக அமைந்தது இந்த SCREAM! வார இதழே! திகில் குறித்து ஒரு தீர்க்கமான ஆராய்ச்சிப் பதிவொன்று விரைவில் அ.கொ.தீ.க.வில் அரங்கேறும்!

Lion Comics # 050 - Story # 5 - Kadalil Mulaitha PeiScream! - Holiday Special (1986)Scream! - Holiday Special (1986) - Demon of the Deep

இக்கதையின் ஆங்கில மூலத்தை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்! இலவச இனைப்பாக வழங்கப்பட்ட தாய விளையாட்டும் இப்புத்தகத்தில் இடம்பெற்றதே!

பல திகில் காமிக்ஸ் கதைகளின் ஆங்கில மூலம் இந்த தளத்தில் உள்ளது! என்சாய்!

கதை # 6 : சுட்டிப் பயல்!

சுட்டிப் பயல் மொட்டைத் தலையன் ஹென்றியின் ஒரு பக்க நகைச்சுவைத் துணுக்கு! கூடவே ஆர்ச்சி கதை வெளியிடாததற்கு சப்பைக்கட்டு காரணமும்!

Lion Comics # 050 - Story # 6 - Henry

இலவச இனைப்பு:

இலவச இனைப்பாக பேய் வேட்டை என்னும்  தாய விளையாட்டு வழங்கப்பட்டது!

Lion Comics # 050 - Free Supplement

இந்த தாய விளையாட்டின் மூலம் SCREAM! - HOLIDAY SPECIAL (1986) இதழில் இடம்பெற்றிருந்தது!

Scream! - Holiday Special (1986) - Ghastly's Holiday Ghost hunt

இது குறித்த கிங் விஸ்வாவின் பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

வாசகர் கடிதம்:

புத்தகத்திற்கு கிடைத்த பெருத்த வரவேற்பு குறித்து ஆசிரியர் ஹாட்-லைனில் கூறியிருப்பதை படியுங்கள்! இந்த புத்தகத்தின் வெற்றியே இன்று வரை நாம் படித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் டெக்ஸ் வில்லர்  தோன்றும் சிறப்பிதழ்களுக்கு மூல காரணம்! டெக்ஸை லயனின் டாப் ஹீரோவாக உயர்த்தியது இது போன்ற சிறப்பிதழ்கள்தானே!

Lion Comics # 051 - Vaasagar KadithamLion Comics # 051 - Hotline

போனஸ்:

போனஸாக இதோ உங்கள் பார்வைக்கு டிராகன் நகரம் அட்டைப்படங்களின் ஒரிஜினல் ஓவியங்களின் புகைப்படங்கள்! உபயம் : கேப்டன் ஹெச்சை

Lion Comics # 050 - Front Cover - Original ArtLion Comics # 050 - Back Cover - Original Art

இப்படியொரு சிறப்பான புத்தகத்தை நமக்களித்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! ஆங்கில பதிப்புகளின் அத்தனை விபரங்களையும் அளித்த நண்பர் முத்து விசிறிக்கு மனமார்ந்த நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:-

டெக்ஸ் வில்லர் பதிவுகள்!

பிற சிறப்பிதழ்கள்:

Friday, November 6, 2009

கொலை செய்ய விரும்பு!

வணக்கம்,

இன்றுதான் சுடச்சுட தபால் மூலம் வந்திறங்கியிருக்கும் லயன் காமிக்ஸ்#207: கொலை செய்ய விரும்பு! காமிக்ஸ் புத்தகத்தின் முதற்பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இதைப் படிக்கும் உங்களைப் போலவே நானும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!

பதிவிற்கு செல்லும் முன் சிலபல தகவல்கள்!

  • முத்து விசிறி நீண்ட நாள் கழித்து பதிவிட்டுள்ளார், அதுவும் சுந்தரத் தமிழில்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
  • இந்தப் புத்தகம் உண்மையில் தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடிய மன்னனும் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியுமான  கிங் விஸ்வா-வின் சந்தா பிரதி! புத்தகம் எனக்கு இன்னும் வரவில்லை! எவருக்கும் முன்னர் அவருக்கு புத்தகம் மீண்டும் ஒரு முறை வந்திருப்பதனால் அவருக்கு லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் உள்குத்து இருக்கிறது என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகிறது!
  • அவர் நாட்டில்/வீட்டில் இல்லாத காரணத்தால், புத்தகத்தை அங்கிருந்து நைஸாக லவட்டிக் கொண்டு வந்து ஸ்கேன் செய்து நமக்கெல்லாம் வழங்கிய அய்யம்பாளையத்தார்-க்கு இந்த தருணத்தில் நாமெல்லாம் நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறோம்!

மொக்கை போட்டது போதும், இனி பதிவுக்கு வருவோம்!

ஆண்டு மலர்-ஆக வந்திருக்க வேண்டிய இந்த புத்தகம் மிக தாமதமாக தீபாவளி மலர்-ஆக வந்துள்ளது! தீபாவளி மலர் என்றதும் ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம்! ஆனால் பல சரவெடி சமாச்சாரங்கள் புத்தகத்தில் ஒளிந்துள்ளன! அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்!

அட்டைப்படம்:

ஏற்கெனவே நண்பர் ஜாலி ஜம்பர் மூலம் நீங்கள் அனைவரும் இந்த அட்டைப் படத்தை முன்னோட்டம் கண்டிருப்பீர்கள்! ஆகையால் இதில் புதுமை ஒன்றுமில்லை! எனினும் இதோ அட்டைப்படம் மீண்டும் உங்கள் பார்வைக்கு!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Cover

ஹாட்லைன்: 

புத்தகத்தைத் திறந்தவுடன் நான் படிக்கும் முதல் விஷயம் இதுதான்! உங்களில் பலரும் இதைத்தன் முதலில் படிக்க விரும்புவீர்கள் என்று தெரியும்! எனவே மேலும் வளவளவென எழுதாமல், ஓவர் டூ மிஸ்டர்.S.விஜயன்!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - HotLine01Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - HotLine02

பல கருத்துக்களை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார்! புத்தகத்திலேயே இந்த இரு பக்கங்கள் தான் ஹை-லைட்! படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்களேன்!

விளம்பரங்கள்:

ஹாட்லைனுக்குப் பிறகு என் கண்கள் நாடுவன விளம்பரங்கள்தான்! இதோ அதியற்புத விளம்பரங்களின் அணிவகுப்பு! சிக்பில்லை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Next IssueLion Comics # 207 - Kolai Seyya Virumbu - Advt01Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Advt02

இதில் கடைசி விளம்பரம் நம் கவனத்தைக் கவர்கிறது! மீண்டும் ஒரு முறை எனது பரம வைரியுடன் மோதும் நாளை விரைவில் எதிர்பார்க்கிறேன்! டெக்ஸ் வில்லர் கதை ஒரே பாகத்தில் முடிகிறதென்றால் கண்டிப்பாக  கதை மொக்கையாகத்தானிருக்குமென்பது வரலாறு (மரணத்தின் நிறம் பச்சை, பறக்கும் பலூனில் டெக்ஸ்)! பொறுத்திருந்திருந்து பார்ப்போம்!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - LCS01Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - LCS02

XIII ஸ்பெஷலுக்கு முன்பதிவு செய்திருக்கும் வாசகர்கள் பட்டியல் இதிலும் தொடர்கிறது! நீங்களும் விரைந்து முன்பதிவு செய்து பட்டியலில் உங்கள் பெயரை இடம்பெறச் செய்யுங்களேன்!

சிங்கத்தின் சிறுவயதில்: 

புத்தகத்தில் நான் அடுத்து படிக்கும் பகுதி இதுதான்! ஆசிரியரின் அற்புத நடையில் மீண்டும் ஒரு முறை திளைக்கும் வாய்ப்பு! படித்து மகிழுங்கள்!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-01Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-02Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-03

சென்ற இதழான லயன் காமிக்ஸ்#206: மாண்டவன் மீண்டான்! இதழில் வெளிவந்த சிங்கத்தின் சிறுவயதில் இதோ!

Lion Comics#206 - SSV 13aLion Comics#206 - SSV 13bLion Comics#206 - SSV 13c

இதற்கு முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ்கானும் சுட்டியை பயன்படுத்தவும்!

கொலை செய்ய விரும்பு!

கதையைப் படிக்க விரும்பும் பல வாசகர்களின் நலன் கருதி கதையை நான் இங்கு விமர்சிக்கப் போவதில்லை! மாறாக கதை குறித்த விவரங்கள் மற்றும் பயனுள்ள சுட்டிகள் மட்டுமே வழங்கப் போகிறேன்!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Page05Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Page06ModestyBlaise54-01

அச்சுத் தரம்(?!!) குறித்து நான் எதுவுமே கூறத் தேவையில்லை! நீங்க்ளே கண்கூடாகக் காணலாம்! ஹ்ம்ம்ம்! தமிழில் தரமான அச்சில் காமிக்ஸ் படிப்பதென்பது தற்சமயம் நிறைவேறாத கனவாகாவே உள்ளது!

ஒரு கொசுறு தகவல்! கதையில் ஒரு கிரிக்கெட் பந்து முக்கிய பங்கு வகிக்கிறது! நேற்று நமது இந்திய கிரிக்கெட் அணியினர் சொதப்பியதிலிருந்து மீள இந்தப் புத்தகத்தின் வருகை ஓரளவேணும் உதவக்கூடும்!

கதை : SWEET CAROLINE – கொலை செய்ய விரும்பு!
ஆசிரியர் : பீட்டர் ஒ’டான்னல்
ஓவியர் : நெவில் கால்வின் 
தமிழில் : S.விஜயன்
வெளியீட்டு விபரங்கள் : 29-11-1983 – 19-04-1984 (120 Strips)
EVENING STANDARD (5815-5914A)
தமிழில் : லயன் காமிக்ஸ் # 207 – நவம்பர் 06, 2009

துப்பறியும் ஜார்ஜ் நோலன்:

போனஸ் சிறுகதையாக வெளிவந்திருக்கும் துப்பறியும் ஜார்ஜ் நோலன் சிறுகதையின் சாம்பிள் பக்கம் ஒன்று இதோ உங்கள் பார்வைக்கு!

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - Story#2 - George Nolan

தீர்ப்பு:

நெடுநாள் கழித்து வந்திருக்கும் இந்தப் புத்தகம் காமிக்ஸ் ரசிகர்களுக்கு, குறிப்பாக மாடஸ்டி ரசிகர்களுக்கு நிச்சயம் நல்லதொரு விருந்தாக அமையும்! ஹாட்-லைன், சிங்கத்தின் சிறுவயதில், மற்றும் விளம்பரங்கள் கூடுதல் மதிப்பெண்களை அள்ளுகின்றன!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:

லயன் காமிக்ஸ்#207: கொலை செய்ய விரும்பு! முன்னோட்டம்:

சிங்கத்தின் சிறுவயதில்:

மாடஸ்தி: