வணக்கம்,
நேற்று கிங் விஸ்வா இட்ட வாண்டுமாமா குறித்த பதிவின் தொடர்ச்சியாக இந்த குறும்பதிவை இடுகிறேன்!
பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
இந்தப் பதிவைப் படித்த பல காமிக்ஸ் ரசிகர்கள் இன்று காலை முதல் வானதி பதிப்பகத்திற்கு தொடர்பு கொண்டு வாண்டுமாமாவின் புத்தகங்கள் கேட்டு அவை இருப்பில் இல்லை என்றதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்!
ஆனால் வாசகர்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை! இந்த உற்சாகமான வரவேற்பைக் கண்ட பதிப்பகத்தார் வாண்டுமாமாவின் பல புத்தகங்களை தங்கள் இருப்பிலிருந்து வரவழைத்துள்ளனர்!
வானதி பதிப்பகத்தில் தற்போது விற்பனையிலுள்ள மேலும் சில பல வாண்டுமாமா புத்தகங்கள் இதோ உங்கள் பார்வைக்கு! இவையெல்லாம் குறைவான பிரதிகளே உள்ளன! உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!
இதில் சி.ஐ.டி.சிங்காரம் நம் அனைவருக்கும் கோகுலம், பூந்தளிர் மூலம் பரிச்சயமானவர்! இவர் குறித்த நண்பர் சிவ் இட்டுள்ள பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
மற்ற இரு புத்தகங்களும் கோகுலத்திலும், பின்னர் பார்வதி சித்திரக் கதைகளிலும் வெளிவந்த சித்திரக்கதைகளின் தொகுப்புகள் ஆகும்! DON’T MISS IT!
தற்போது வானதி பதிப்பகத்தாரிடம் இருப்பு உள்ள மேலும் சில பல வாண்டுமாமா புத்தகங்கள்! பிரதிகளுக்கு முந்துங்கள்!
வாண்டுமாமா எழுதியுள்ள பிற புத்தகங்களின் பட்டியல்:
இது முழுமையான பட்டியல் அல்ல! இவற்றில் எல்லா புத்தகங்களும் கிடைக்கும் வாய்ப்புகளும் இல்லை! ஆனால் என்றேனும் ஒரு நாள் இவையனைத்தும் மறுபதிப்பு செய்யப்படும் என்று நம்புவோம்!
- http://books.dinamalar.com/AuthorBooks.aspx?Page=2&id=3538
- http://www.tamilnool.com/keyboard_search/field_list.php?field=Author&q=வாண்டுமாமா
- http://preview.palaniappabrothers.com/ta/products/authors/61
இது குறித்து கிங் விஸ்வா கூறியிருப்பதை இங்கு சுட்டுகிறேன்!
காலையில் தான் திரு ராமநாதன் அவர்களை சந்தித்தேன். பதிவினால் சிறு பயன் - பதினைந்து இருவது பேர் கால் செய்து புத்தகங்களை கேட்டு வாங்கினார்களாம். நேற்றிலிருந்து தொடர்ந்து வந்த தொலைபேசி மற்றும் நேரிடை புத்தக வேண்டுகோள்களை ஏற்று புத்தகங்கள் இப்போது அதிகம் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. கைவசம் பிரதிகள் இருக்கும வரையே. ஆகையால் முந்திச் செல்லுங்கள்.
தியாகராய நகரில் பாண்டி பஜாரில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி (ICICI வங்கி ATM எதிரில்) உள்ள பூக்கடை சந்தில் சென்றால் (Left) அங்கு தியாகராயர் நகரின் தபால் ஆபிஸ் இருக்கும். அதன் எதிரில் இருக்கும் தெருதான் தீனதயாளு தெரு. இரண்டாவது மாளிகை நம்ம வானதி பதிப்பகம்.
புத்தகங்களை வாங்கும் வாசகர்கள் மறக்காமல் மற்ற சித்திரக் கதை புத்தகங்களையும் வாங்கிவிடவும். குறிப்பாக சித்திரக்கதை 1 மற்றும் சித்திரக் கதை 2.
ஃப்ளாஷ் நியூஸ்!
இந்த விடுமுறை காலத்தில் வாண்டுமாமாவின் புத்தகங்கள் பலவும் மறுபதிப்பு செய்யப்படவிருக்கின்றன! அதே போல் இப்போது வெளிவந்துள்ள மர்ம மாளிகையில் பலே பாலு போன்ற இன்னொரு வாண்டுமாமாவின் சித்திரக்கதைகள் தொகுப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது! ஆகையால் இந்த முயற்சிகளுக்கு நம்மாலான ஆதரவை புத்தகங்கள் வாங்குவதன் மூலம் தெரிவித்து காமிக்ஸ் பேரின்பத்தில் தொடர்ந்து திளைக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளபடுகின்றனர்!
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
வானதி பதிப்பகம்/திருவரசு பதிப்பகம்
13, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை - 600017
Ph: +9144-24342810
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:
வாண்டுமாமா குறித்த விக்கிபீடியா இடுகை:
வாண்டுமாமா குறித்த கிங் விஸ்வாவின் இடுகை:
பூந்தளிர் குறித்த அய்யம்பாளையத்தார்-ன் பொக்கிஷப் பதிவு:
வாண்டுமாமா குறித்த அய்யம்பாளையத்தார்-ன் அட்டகாசமான பதிவு:
கனவா நிஜமா குறித்த நண்பர் சிவ்வின் பதிவு:
சி.ஐ.டி.சிங்காரம் குறித்த நண்பர் சிவ்வின் பதிவு:
அங்கதன் கோட்டை அதிசயம் குறித்த முத்து விசிறியின் முத்தான பதிவு:
குஷிவாலி ஹரீஷ் குறித்த காமிக்ஸ் பிரியர்-ன் பதிவு:
வாண்டுமாமா எழுதிய திரைவிமர்சனம்: