Wednesday, March 10, 2010

வாண்டுமாமா சித்திரக் கதைகள்!

வணக்கம்,

நேற்று கிங் விஸ்வா இட்ட வாண்டுமாமா குறித்த பதிவின் தொடர்ச்சியாக இந்த குறும்பதிவை இடுகிறேன்!

பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

இந்தப் பதிவைப் படித்த பல காமிக்ஸ் ரசிகர்கள் இன்று காலை முதல் வானதி பதிப்பகத்திற்கு தொடர்பு கொண்டு வாண்டுமாமாவின் புத்தகங்கள் கேட்டு அவை இருப்பில் இல்லை என்றதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்!

ஆனால் வாசகர்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை! இந்த உற்சாகமான வரவேற்பைக் கண்ட பதிப்பகத்தார் வாண்டுமாமாவின் பல புத்தகங்களை தங்கள் இருப்பிலிருந்து வரவழைத்துள்ளனர்!

வானதி பதிப்பகத்தில் தற்போது விற்பனையிலுள்ள மேலும் சில பல வாண்டுமாமா புத்தகங்கள் இதோ உங்கள் பார்வைக்கு! இவையெல்லாம் குறைவான பிரதிகளே உள்ளன! உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!

DSC01734

இதில் சி.ஐ.டி.சிங்காரம் நம் அனைவருக்கும் கோகுலம், பூந்தளிர் மூலம் பரிச்சயமானவர்! இவர் குறித்த நண்பர் சிவ் இட்டுள்ள பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

மற்ற இரு புத்தகங்களும் கோகுலத்திலும், பின்னர் பார்வதி சித்திரக் கதைகளிலும் வெளிவந்த சித்திரக்கதைகளின் தொகுப்புகள் ஆகும்! DON’T MISS IT!

தற்போது வானதி பதிப்பகத்தாரிடம் இருப்பு உள்ள மேலும் சில பல வாண்டுமாமா புத்தகங்கள்! பிரதிகளுக்கு முந்துங்கள்!

Marma ManithanKannadi Manithan

வாண்டுமாமா எழுதியுள்ள பிற புத்தகங்களின் பட்டியல்:

இது முழுமையான பட்டியல் அல்ல! இவற்றில் எல்லா புத்தகங்களும் கிடைக்கும் வாய்ப்புகளும் இல்லை! ஆனால் என்றேனும் ஒரு நாள் இவையனைத்தும் மறுபதிப்பு செய்யப்படும் என்று நம்புவோம்!

11077patti11762Vilaiyattu-vinothangal11781Poonai11783Theriyuma11837Thappiyodiyavargal11839Kadalodi11849Ariviyal12169MARMA-MALIGAI12321THATHA15585PB_00_0000_0611031925_Rs-101085228_Rs-101085632_Rs-281085935_Rs-301086439_Rs-421086641_Rs-251086742_Rs-141087450_Rs-101092031_Rs.401104396_Rs.91145902_Rs-401146205_RS-601146307_Rs-601146408_Rs-151147719_RS-241147820_Rs-701147921_Rs-401148022_RS-361148927_RS-251149229_Rs-1001155785_RS-50131841813209291373333_Rs-2001373734_RS-5014370611483233_Rs-2001483334_RS-5011595100_Rs.250PB_00_0000_079_sPB_00_0000_080_sPB_00_0000_081_sPB_00_0000_082_sPB_00_0000_084_sPB_00_0000_085_s

இது குறித்து கிங் விஸ்வா கூறியிருப்பதை இங்கு சுட்டுகிறேன்!

காலையில் தான் திரு ராமநாதன் அவர்களை சந்தித்தேன். பதிவினால் சிறு பயன் - பதினைந்து இருவது பேர் கால் செய்து புத்தகங்களை கேட்டு வாங்கினார்களாம். நேற்றிலிருந்து தொடர்ந்து வந்த தொலைபேசி மற்றும் நேரிடை புத்தக வேண்டுகோள்களை ஏற்று புத்தகங்கள் இப்போது அதிகம் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. கைவசம் பிரதிகள் இருக்கும வரையே. ஆகையால் முந்திச் செல்லுங்கள்.
தியாகராய நகரில் பாண்டி பஜாரில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி (ICICI வங்கி ATM எதிரில்) உள்ள பூக்கடை சந்தில் சென்றால் (Left) அங்கு தியாகராயர் நகரின் தபால் ஆபிஸ் இருக்கும். அதன் எதிரில் இருக்கும் தெருதான் தீனதயாளு தெரு. இரண்டாவது மாளிகை நம்ம வானதி பதிப்பகம்.
புத்தகங்களை வாங்கும் வாசகர்கள் மறக்காமல் மற்ற சித்திரக் கதை புத்தகங்களையும் வாங்கிவிடவும். குறிப்பாக சித்திரக்கதை 1 மற்றும் சித்திரக் கதை 2.

ஃப்ளாஷ் நியூஸ்!

இந்த விடுமுறை காலத்தில் வாண்டுமாமாவின் புத்தகங்கள் பலவும் மறுபதிப்பு செய்யப்படவிருக்கின்றன!  அதே போல் இப்போது வெளிவந்துள்ள மர்ம மாளிகையில் பலே பாலு போன்ற இன்னொரு வாண்டுமாமாவின் சித்திரக்கதைகள் தொகுப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது! ஆகையால் இந்த முயற்சிகளுக்கு நம்மாலான ஆதரவை புத்தகங்கள் வாங்குவதன் மூலம் தெரிவித்து காமிக்ஸ் பேரின்பத்தில் தொடர்ந்து திளைக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளபடுகின்றனர்!

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

வானதி பதிப்பகம்/திருவரசு பதிப்பகம்
13, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை - 600017
Ph: +9144-24342810

DSC01724

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:

வாண்டுமாமா குறித்த விக்கிபீடியா இடுகை:

வாண்டுமாமா குறித்த கிங் விஸ்வாவின் இடுகை:

பூந்தளிர் குறித்த அய்யம்பாளையத்தார்-ன் பொக்கிஷப் பதிவு:

வாண்டுமாமா குறித்த அய்யம்பாளையத்தார்-ன் அட்டகாசமான பதிவு:

கனவா நிஜமா குறித்த நண்பர் சிவ்வின் பதிவு:

சி.ஐ.டி.சிங்காரம் குறித்த நண்பர் சிவ்வின் பதிவு:

அங்கதன் கோட்டை அதிசயம் குறித்த முத்து விசிறியின் முத்தான பதிவு:

குஷிவாலி ஹரீஷ் குறித்த காமிக்ஸ் பிரியர்-ன் பதிவு:

வாண்டுமாமா எழுதிய திரைவிமர்சனம்:

35 comments:

  1. டாக்டர் ஐயா
    நான் தான் முதல்ல வந்தேன். படித்த பின் வருகிறேன்!

    ReplyDelete
  2. பதிவுலக சாம்ராட்டே,

    நாந்தான் இரண்டாவது. மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  3. டாக்டர் ஐயா!
    வாண்டுமாமாவின் படைப்புகளை தொடர்ந்து அச்சேற்றி வரும் வானதி, பழனியப்பா பிரதர்ஸை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கிட்டத்தட்ட எல்லாவற்றையும் நான் பூந்தளிரில் படித்துள்ளேன். அதிலும் மர்ம மனிதன், ரத்னாபுரி ரகசியம், தப்பியோடியவர்கள், அதிசயப் பிராணிகளின் அற்புத கதைகள்,அழிந்த உலகம் போன்றவை நெஞ்சை விட்டு நீங்காத பொக்கிஷங்கள். விஸ்வாவும் நீங்களும் வாண்டுமாமா என்ற அற்புத மனிதரை வெகுஜனங்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. தலைவரே,
    நண்பர்களுக்காக இதோ புத்தக ஸ்டாக் விவரங்கள்:

    முதல் வரிசை:
    பாட்டி பாட்டி கதை சொல்லு, விளையாட்டு வினோதங்கள், பூனை வளர்ப்பு, தெரியுமா, தெரியுமே (தப்பியோடியவர்கள் ஸ்டாக் இல்லை).

    இரண்டாவது வரிசை:
    அறிவியல் தகவல்கள், மர்ம மாளிகையில் பலே பாலு (கடலோடிகள், தாத்தா, தாத்தா கதை சொல்லு, மீராவின் நண்பன் ஸ்டாக் இல்லை)

    மூன்றாவது வரிசை:
    அதிசயப் பிராணிகள்-அற்புத கதைகள், விண்வெளி வாழ்க்கை, விந்தை-வினோதம்-விசித்திரம், தேதியும்-சேதியும் (உலோகங்களின் கதை ஸ்டாக் இல்லை)

    நான்காவது வரிசை:
    விஞ்ஞான வித்தைகள், உலகம் சுற்றும் குழந்தைகள், தோன்றியது எப்படி (மாயசுவர் & கிரேக்க புராண கதைகள் ஸ்டாக் இல்லை)

    ஐந்தாவது வரிசை:
    சித்திரக் கதைகள், சரித்திர சம்பவங்கள், வேடிக்கை விளையாட்டு விஞ்ஞானம் (மீன் வளர்ப்பு & குரங்கு வகைகள் ஸ்டாக் இல்லை)

    ஆறாவது வரிசை
    க்விஸ்- க்விஸ்- க்விஸ், அன்றிலிருந்து இன்றுவரை, யானைகள் (நீங்களே செய்யலாமே & நீங்களும் மந்திரவாதியாகலாம் ஸ்டாக் இல்லை)

    ஏழாவது வரிசை:
    பலதேச கதைகள், தோன்றியது எப்படி, இயங்குவது எப்படி, மான்கள் (முன்னேற்றத்தின் முன்னோடிகள் ஸ்டாக் இல்லை)

    எட்டாவது வரிசை:
    தோன்றியது எப்படி, இயங்குவது எப்படி, மான்கள் (இயற்க்கை அற்புதங்கள் ஸ்டாக் இல்லை)

    ஒன்பதாவது வரிசை & பத்தாவது வரிசை: எதுவும் இப்போது ஸ்டாக் இல்லை.

    ReplyDelete
  5. சித்திரக் கதைகள் (முதல் தொகுப்பு) :

    இந்த புத்தகத்தில் ரத்தினபுரி ரகசியம் மற்றும் மரகத சிலை கதைகளுடன் சர்க்கஸ் சங்கர் கதையும் உள்ளது. மறக்காமல் வாங்கவும்.

    ReplyDelete
  6. பிரபல பதிவர் டாக்டர் செவனே,

    வணக்கம். சிறப்பான பதிவு. அட்டைப்படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.

    மேலும் உங்கள் பதிவில் இருக்கும் இரண்டு புகைப்படங்களும் அபாரம்.

    ReplyDelete
  7. வாண்டுமாமாவின் மாஸ்டர் பீஸ் ஆக கருதப்படும் புலி வளர்த்த பிள்ளை பற்றிய தகவல் எதுவும் இல்லையா?

    ReplyDelete
  8. சி.ஐ.டி சிங்காரம் புத்தகத்தின் விலை என்ன தெரியுமா? பதினெட்டு ரூபாய்தான்.

    இன்று இந்த புத்தகம் ஸ்டாக் இல்லாமல் போய் விட்டால் பின்னர் கிடைப்பது மிகவும் கடினம். ஆகையால் வாங்கிவிடுங்கள்.

    ReplyDelete
  9. கிங் விஸ்வா,

    தகவலகளுக்கு நன்றி!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  10. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    //வாண்டுமாமாவின் மாஸ்டர் பீஸ் ஆக கருதப்படும் புலி வளர்த்த பிள்ளை பற்றிய தகவல் எதுவும் இல்லையா?//

    எனக்கு மிகவும் பிடித்த இப்புத்தகமும் மறுபதிப்பு லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பதாக ஒரு பட்சி சொல்லிற்று!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  11. //கிங் விஸ்வா,

    தகவலகளுக்கு நன்றி!//

    உலக வலைப்பதிவுகளில் முதன்முறையாக டாக்டர் செவன் அவர்கள் எனக்கு நன்றி சொல்லி இருப்பதால் அதனை கொண்டாடும் வகையில் நான் நாளையும் ஒரு புதிய தமிழ் காமிக்ஸ் முயற்சி பற்றிய பதிவினை இடுகின்றேன்.

    ReplyDelete
  12. தலைவரே,

    சுடச்சுட தகவல்களை அள்ளித் தருவதற்கு நன்றிகள். அருமையான பதிவு.

    ReplyDelete
  13. மந்திர சலங்கை அற்புதமான கதை. அது இருக்கிறதா?

    நெருப்பு கோட்டை மறக்க முடியாத ஒரு கதை. ஒரு காலத்தில் என்னுடைய தந்தை லயன் காமிக்ஸ் மரணக் கோட்டை புத்தகத்தை வாங்கிவந்த அதே நாளில் நான் நெருப்பு கோட்டை புத்தகத்தை வாங்கி வந்தேன்.

    பழைய நினைவுகளுக்கு நன்றி

    ReplyDelete
  14. வாண்டுமாமாவின் சிறுகதை தொகுப்பாகிய அடிமையின் தியாகம் ஒரு சிறந்த கதைத் தொகுப்பு. அவரது சமூக பார்வையை வெளிப்படுத்தும்.

    ReplyDelete
  15. me the 16th.

    because iam always 16. he he.....

    ReplyDelete
  16. உண்மையில் இதுதான் மனதுக்கு மகிழ்வை அளிக்கிறது. உங்களின் பதிவுகளில் சமீப நேரங்களில் பல அட்டைப்படங்களின் அணிவரிசை கண்ணை கவர்கிறது.

    ReplyDelete
  17. நண்பரிடம் சொல்லி விட்டேன். அவரும் அதனை வாங்கி வைப்பதாக கூறி விட்டார். நன்றி.

    ReplyDelete
  18. Thank you.

    I recollect reading Muthu comics in the 70s.(Irumbukkai Mayavi, CID Lawrence& David, Johnny Nero etc) Any link to such publishing. Would help to purchase.

    Karthik
    Bangalore.

    ReplyDelete
  19. தலைவரே,
    இன்று காலை சென்று அனைத்து புத்தகங்களையும் கைபற்றி விட்டேன்.இப்போது தான் நிம்மதி ஆயிற்று.

    ReplyDelete
  20. //I recollect reading Muthu comics in the 70s.(Irumbukkai Mayavi, CID Lawrence& David, Johnny Nero etc) Any link to such publishing. Would help to purchase.//

    Karthick Sir, Kindly do call to the Lion comics office (04562-272649) and they do have a quite handfull of the reprints of the steel claw and lawrence david stories in the comics classics form.

    they have close to 15 such issues which are priced at 10 rs each and will contain 2 golden oldie stories.

    That is the best that can be done as of right now.

    ReplyDelete
  21. //வாண்டுமாமாவின் படைப்புகளை தொடர்ந்து அச்சேற்றி வரும் வானதி, பழனியப்பா பிரதர்ஸை//

    மன்னிக்கவும். இன்று தான் பழனியப்பா பிரதர்ஸ் அலுவலகம் சென்று வந்தேன். ஆனால் ஒரு புத்தகம் கூட அவர்களிடம் ஸ்டாக் இல்லை. அதனை மறுபதிப்பு செய்யும் எண்ணம் கூட இல்லையாம். என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  22. தலைவரே,

    நீங்கள் வழங்கியிருக்கும் அட்டைப்படங்கள் யாவும் அருமை. வாண்டுமாமா எவ்வளவு எழுதியிருக்கிறார் என்பதை ஒருங்கே காணும்போது உருவாகும் வியப்பு அவர் மீதான மதிப்பை அதிகரிக்கிறது. சிறப்பான பதிவு. அட்டைப்பட ஸ்கேன்களிற்கு நன்றி.

    ReplyDelete
  23. இலங்கையில் இருக்கும் என்போன்ற காமிக்ஸ் இரசிகர்கள் கொட்டாவிதான் விடமுடியும்.. ம்...! :'(

    ReplyDelete
  24. தலைவரே,

    உங்களின் அடிச்சுவட்டை பின்பற்றி வாண்டுமாமா அவர்களை பற்றி நானும் ஒரு பதிவினை இட்டுவிட்டேன்.

    உங்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  25. தலைவரே,

    வெளி உலகிற்கு அவ்வளவாக தெரியாமல் இருந்த ஒரு மாபெரும் மனிதரை பற்றி தெரிய வைத்தமைக்கு நன்றி. தொடருங்கள் உங்கள் சேவையை.

    ReplyDelete
  26. //இலங்கையில் இருக்கும் என்போன்ற காமிக்ஸ் இரசிகர்கள் கொட்டாவிதான் விடமுடியு//

    இல்லை, நீங்கள் அந்த தொலைபேசி என்னில் பேசி பாருங்கள். பணத்தை முன் கூட்டியே கட்டி விட்டு பின்னர் அவர்கள் அதனை தபாலில் அனுப்ப இயலும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  27. சவுரவ் கங்குலிMarch 15, 2010 at 2:54 PM

    என்னது, ஜோதி பாசு செத்துட்டாரா?

    ReplyDelete
  28. Thanks for the wonderful post..
    I remember reading many books in school days in library.
    Will try to add more to my collection with the info....

    ReplyDelete
  29. எனக்கு காட்டு சிறுவன் கந்தன் என்ற ஒரு கதையை பலமுறை எங்கள் ஊர் நூலகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. அந்தக்கதை இப்போது உள்ளதா இலையா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  30. வாண்டுமாமாவின் காமிஸ்களை அன்றே நல்ல பேப்பரில் வெளியிட்டிருந்தால் இன்று அதை பார்த்திருக்கலாம் போல..

    ReplyDelete
  31. நானும் நாளொருமேனியாக ஏங்குகிறேன்..பழைய புத்தகம் தென்படாதா என்று பழைய பார்வதி சித்திர கதைகள் அழிந்தே போய்விட்டன...அச்சகத்திற்கு சென்று கேட்கலாமா என தோனுகிறது..பழைய பத்திகைகளை புதிதாக பெற ஏதேனும் வழி இருக்கா நன்பரே

    ReplyDelete
  32. நன்பர்களே

    யாராயது உதவிச்செய்யுங்கள் தயவுச்செய்து ஜீராக்ஸ் எடுத்தாவது பயன்படுத்த வழி உண்டா..காட்டு சிறுவன் கந்தனை

    ReplyDelete
  33. வாண்டுமாமாவை பார்க்க பல தடவல முயன்று உள்ளேன். யாராவது அவர் பணியை தொடர்கிறார்களா..உறவினர் பழைய...புத்தகத்தை வெளியிடுவார்களா..

    ReplyDelete
  34. வணக்கம் நண்பர்களே தற்போது தான் இந்த தளத்திற்கு வருகை தந்தேன். எனக்கு வாண்டுமாமா வின் குள்ளன் ஜக்கு, நீலப் போர்வை, மூன்று விரல்கள், மூன்று வீரர்கள், இன்னும் பல புத்தகங்கள் வேண்டும். எவ்வாறு வாங்க வேண்டும் என்று கூறுங்கள்.நன்றி

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!