Friday, June 11, 2010

ஒற்றைக் கண் ஜாக்!

You've got to ask yourself one question: 'Do I feel lucky?' Well, do ya, punk?
-CLINT EASTWOOD (DIRTY HARRY)

வணக்கம்,

கடந்த மே 31ம் தேதி பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும், இயக்குனருமான க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடினார்! 80 வயதைக் கடந்தாலும் இன்னும் GRAN TORINO, INVICTUS என்று அசத்திக் கொண்டிருக்கும் அவரது திறமையும், உழைப்பும் நம்மை மலைக்க வைக்கிறது! GRAN TORINO படத்துடன் அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டாலும் அவர் தொடர்ந்து டைரக்‌ஷனில் ஈடுபட்டு வருகிறார்! அவர் மென்மேலும் பல்லாண்டு வாழ்ந்து நமக்கு மேலும் பல சிறந்த படங்களை வழங்கி நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டுமென்று நம் அனைவரின் சார்பிலும் வேண்டிக் கொள்கிறேன்!

க்ளிண்ட் ஈஸ்ட்வுட் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவர் நடித்த கெள-பாய் படங்களே! அதிலும் குறிப்பாக அவர் ஸெர்ஜியோ லியோனியின் இயக்கத்தில் நடித்து வெளிவந்த DOLLARS TRILOGY படங்கள் உலகப் பிரசித்தம்! தான் இயக்கிய UNFORGIVEN படத்தை தனது குருமார்கள் ஸெர்ஜியோ லியோனி மற்றும் டான் ஸீகல் ஆகியோரின் நினைவிற்கு சமர்ப்பித்திருப்பார்! தான் நடித்த MAN WITH NO NAME கெள-பாய் கதாபாத்திரத்தின் வாழ்க்கை பிற்காலத்தில் எவ்வாறு திசைமாறுகிறது என்பதை சித்தரிக்கும் வகையில் UNFORGIVEN அமைந்திருக்கும்!

அதே போல் அவர் நடித்து புகழ்பெற்ற இன்னொரு கதாபாத்திரம் DIRTY HARRY! சட்டத்தின் ஓட்டைகளின் மூலம் தப்பி விடும் குற்றவாளிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிதான் DIRTY HARRY! நம்ம கேப்டன் விஜயகாந்த் நடித்த பற்பல போலீஸ் படங்களிலிருந்து இப்போது வந்துள்ள சாமி, வேட்டையாடு விளையாடு, சிங்கம் வரை இப்படத்தின் தாக்கம் இருக்கிறது! சுருக்கமா சொல்லனும்னா இவரு "போலீஸ் இல்ல, பொறுக்கி!"

1960களின் இறுதியில் அமெரிக்காவில் ZODIAC எனும் சைக்கோ கொலைகாரன் (இந்த மொக்கை சொல்லாடலை கண்டுபிடித்த தமிழ் பத்திரிக்கைகள் வாழ்க) உலவி வந்தான்! அவனை இறுதி வரை யாராலும் பிடிக்க, ஏன் அடையாளம் கூட காண இயலவில்லை! அப்படியே அவன் பிடிபட்டாலும் அவன் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவனுக்கு மரண தண்டனை வழங்க சட்டம் அனுமதிக்காது! இந்த சைக்கோ கொலைகாரனைப் பற்றி சமீபத்தில் ZODIAC என்றொரு திரைப்படமும் வந்தது!

இந்த சூழ்நிலையில் 1971ல் வெளிவந்த படம்தான் DIRTY HARRY! இதிலும் SCORPIO எனும் சைக்கோ கொலைகாரன் ஒரு நகரையே மிரட்டுகிறான்! ஆனால் அதிகாரத்தில் இருப்போர் அவனைப் பிடிக்க பெரிதாக எதுவும் முயற்சி செய்யாதிருக்கையில் DIRTY HARRY சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு எவ்வாறு SCORPIOவுக்கு முடிவு கட்டுகிறார் என்பதே கதை! இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து DIRTY HARRY தொடரில் மேலும் நான்கு திரைப்படங்கள் வந்தன! மேலும் DIRTY HARRY தன் வாழ்நாளின் கடைசி காலங்களை எவ்வாறு கழித்திருப்பார் என்ற கற்பனையே GRAN TORINO திரைப்படம் என்கின்றனர் தீவிர க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ரசிகர்கள்!

திரைப்படங்களை மட்டுமல்லாது நாம் விரும்பிப் படிக்கும் காமிக்ஸ்களிலும் DIRTY HARRY-ன் தாக்கத்தை நாம் காணலாம்! அவற்றில் தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் பரிச்சயமானதொரு காமிக்ஸ் கதாநாயகன் தான் ஒற்றைக் கண் ஜாக்!

தமிழில் இவர் கதைகள் மினி லயன்-ல் மொத்தம் மூன்றே மூன்றுதான் வந்துள்ளன! அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!

அட்டைப்படம் Mini Lion Comics # 10 - Oru Kalla Parunthin Kathai Mini Lion Comics # 12 - Vellai Pisasu Mini Lion Comics # 14 - Summer Special
முதல் பக்கம் Mini Lion Comics # 10 - One-Eyed Jack! Mini Lion Comics # 12 - One-Eyed Jack! Mini Lion Comics # 14 - One-Eyed Jack!
ஆங்கில மூலம் Valiant_1976-05-08_p01 Valiant_1976-02-28_p01 Valiant_700_1976-07-24_p01 001
முதல் பக்கம் Valiant_1976-05-08_p02 Valiant_1976-02-28_p02 Valiant_700_1976-07-24_p02 001
இதழ் மினி லயன் (மாத இதழ்) மினி லயன் (மாத இதழ்) மினி லயன் (மாத இதழ்)
வெளியீடு # 10 12 14
முதல் பதிப்பு 15th November, 1987 15th Febraury, 1988 15th April, 1988
மறுபதிப்புகள் இதுவரை இல்லை இதுவரை இல்லை இதுவரை இல்லை
பதிப்பகம் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
ஆசிரியர் S.விஜயன் S.விஜயன் S.விஜயன்
அச்சிட்டோர் தி விஜய் புக்ஸ், சிவகாசி தி விஜய் புக்ஸ், சிவகாசி தி விஜய் புக்ஸ், சிவகாசி
நாயகர்(கள்) ஒற்றைக் கண் ஜாக் ஒற்றைக் கண் ஜாக் ஒற்றைக் கண் ஜாக்
மூலம் ONE-EYED JACK  (ஆங்கிலம்) ONE-EYED JACK  (ஆங்கிலம்) ONE-EYED JACK  (ஆங்கிலம்)
இதழ் VALIANT (Weekly) VALIANT (Weekly) VALIANT (Weekly)
வெளியீடு # 689 679 700
முதல் பதிப்பு 8th May, 1976 28th Febraury, 1976 24th July, 1976
மறுபதிப்புகள் EAGLE (Weekly) EAGLE (Weekly) EAGLE (Weekly)
பதிப்பகம் IPC Magazines Ltd. IPC Magazines Ltd. IPC Magazines Ltd.
கதை ஜான் வாக்னர் ஜான் வாக்னர் ஜான் வாக்னர்
ஓவியம் ஜான் கூப்பர் ஜான் கூப்பர் ஜான் கூப்பர்
தமிழில் S.விஜயன் S.விஜயன் S.விஜயன்
சைஸ் 5"x7" 5"x7" 5"x7"
விலை ரூ:2/- (1987 முதல் பதிப்பின் போது) ரூ:2/- (1988 முதல் பதிப்பின் போது) ரூ:3/- (1988 முதல் பதிப்பின் போது)

Mini Lion Comics # 13 - One-Eyed Jack! - Adசுவாரசியமான துணுக்குகள்:

  • ஒற்றைக் கண் ஜாக் கதைகளுக்கு அற்புதமாக ஓவியங்கள் வரைந்த ஜான் கூப்பர் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான மற்றொரு காமிக்ஸ் தொடரான இரும்புக்கை நார்மன் கதைகளுக்கும் ஓவியம் வரைந்துள்ளார்!
  • கதாசிரியர் ஜான் வாக்னர் பல வகையான காமிக்ஸ் தொடர்களின் ஆசிரியர்! JUDGE DREDD தொடரில் வெற்றிகரமாக  பணியாற்றியவர்! JUDGE DREDDம் பார்க்கப் போனால் DIRTY HARRYன் தழுவலே! சில காமிக்ஸ் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்! தமிழில் சில பல JUDGE DREDD கதைகள் வந்துள்ளன! அவற்றை விரிவாக பின்பொரு நாளில் காண்போம்!
  • ஒற்றைக் கண் ஜாக்கிற்கு பிறகு அதே போல் DREDGER எனும் கதாபாத்திரத்தையும் ஜான் வாக்னர் உருவாக்கியுள்ளார்! இதில் ஒரேயொரு கதை மட்டும் தமிழில் படித்த ஞாபகம்!
  • VALIANTல் இத்தொடர் ஆரம்பிக்கும் போது அதன் ஆசிரியராகப் பணியாற்றிய ஜான் வாக்னர் காலத்திற்கேற்ப பழைய பாணியிலிருந்து மாறி பல புது வித ஆக்‌ஷன் தொடர்கள் வர வழிவகை செய்தார்! ஒற்றைக் கண் ஜாக் அந்த புது முயற்சிகளில் ஒன்று!
  • தமிழிலும் அதே போல் மினி லயன்-ல் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பல புதுவித மாற்றங்கள் கொண்டு வரும்போது ஒற்றைக் கண் ஜாக்கை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்! அந்த மாற்றங்கள் குறித்த மேல் விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
  • ஒற்றைக் கண் ஜாக் கதைகளுக்கு ஒரேயொரு முறைதான் விளம்பரம் செய்யப்பட்டது! அது மினி லயன் # 14 – சம்மர் ஸ்பெஷல்!க்கான விளம்பரமே! ஆனால் விளம்பரப் படுத்தப் பட்ட பெயரில் கதை வரவில்லை!

போனஸ்:

ஆங்கிலத்தில் வெளிவந்த ஒற்றைக் கண் ஜாக் அட்டைப்படங்களின் அழகிய அணிவகுப்பு, இதோ உங்கள் பார்வைக்கு!

Valiant 1975-12-27Valiant 1976-01-10Valiant 1976-02-07Valiant 1976-03-13

Valiant 1976-03-27Valiant 1976-04-10Valiant 1976-04-17Valiant 1976-05-15

Valiant 1976-05-22Valiant 1976-06-12Valiant 1976-06-19Valiant 1976-08-28

மேற்காணும் அட்டைப்படங்களுடன் கீழ்காணும் DIRTY HARRY ஆக்‌ஷன் ஸ்டில்களை ஒப்பிட்டுப் பாருங்கள்! க்ளிண்ட் ஈஸ்ட்வுட் சாயல் தெரிகிறதா?

dirty_harrydirty_harry (1)dirtyharryDirtyHarry1dirtyharry (1)dirty-harry-big2Magnum-Dirty-Harry

மேலும் நீங்கள் படித்து மகிழ தமிழில் வந்த ஒற்றைக் கண் ஜாக் கதைகளின் ஆங்கில மூலங்கள்! என்சாய்!

Valiant_1976-05-08_p02Valiant_1976-05-08_p03Valiant_1976-05-08_p04Valiant_1976-05-08_p05

Valiant_1976-02-28_p02Valiant_1976-02-28_p03Valiant_1976-02-28_p04Valiant_1976-02-28_p05

Valiant_700_1976-07-24_p02 001Valiant_700_1976-07-24_p03 001Valiant_700_1976-07-24_p04 001

தொடர்புடைய இடுகைகள்:

ஒற்றைக் கண் ஜாக் குறித்து பிரிட்டிஷ் காமிக்ஸ் சரித்திர சான்றோன் ஸ்டீவ் ஹாலண்ட்-ன் பதிவு! ஒற்றைக் கண் ஜாக்கின் முதல் கதையையும் இங்கே படித்து மகிழலாம்:

கதாசிரியர் ஜான் வாக்னர் பற்றி மேலும் அறிந்து கொள்ள:

ஓவியர் ஜான் கூப்பர் பற்றி மேலும் அறிந்து கொள்ள:

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!