Showing posts with label காமிக்ஸ் க்ளாசிக்ஸ். Show all posts
Showing posts with label காமிக்ஸ் க்ளாசிக்ஸ். Show all posts

Thursday, February 17, 2011

களிமண் மனிதர்கள்!

வணக்கம்,

2011ல் முதன்முறையாக உங்களைச் சந்திப்பதில் பேரானந்தம்! புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், காதலர் தினம் என்று பல சிறப்பு தினங்கள் வந்திட்டாலும் பணிச்சுமை காரணமாக பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன்! அனைத்து சிறப்பு தினங்களுக்கும் எனது தாமதமான வாழ்த்துக்கள்! மன்னிக்கவும்!

இரத்தப்படலம் அலை இன்னும் ஓய்ந்தபாடில்லை! அதற்குள் அடுத்த வெளியீடுகள் வந்துவிட்டன! இன்னும் ஓரிரு மாதத்திற்குள் கருப்பு வெள்ளையில் வெளிவரவிருக்கும் அனைத்து இதழ்களும் வெளிவந்துவிடும்! அதற்குப் பிறகு நாமும் கலர் கலராய் காமிக்ஸ் படிக்கலாம்! வந்துள்ள விளம்பரங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன!

லயன் காமிக்ஸ் # 209 – வெள்ளையாய் ஒரு வேதாளம்! இதழ் குறித்த கிங் விஸ்வாவின் அதிரடிப் பதிவில் மேற்கொண்டு தகவல்களைப் பெறலாம்! படித்து மகிழ கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

இதனுடன் வந்துள்ள இன்னொரு இதழான இரும்புக்கை மாயாவியின் அதிரடி மறுபதிப்பு சாகஸமான காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 25 - களிமண் மனிதர்கள்! குறித்து நாம் காணுவோம்!

படங்களைக் ‘க்ளிக்’கிப் பெரிதாக்கிப் பார்த்து மகிழவும்!

பதிவுக்கு போகும் முன்:

இயக்குனர் மிஷ்கின் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர் என்பது அறிந்ததே! குறிப்பாக இரும்புக்கை மாயாவியின் அதிதீவிர ரசிகர்! இப்புத்தகம் அவர் கையில் கிடைத்ததும் அவர் முகத்தில் கண்ட பூரிப்பை நீங்களே பாருங்கள்! உடனடியாக புத்தகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதித்து விட்டார்!  அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

DSC02824

புகைப்படம் எடுத்து வழங்கிய கிங் விஸ்வாவுக்கு நன்றி!

ஓகே! இனி பதிவுக்குப் போவோம்!

புத்தக விவரங்கள்:

  ஆங்கிலப் பதிப்பு முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு
அட்டைப்படம்    Muthu Comics # 138 - Kaliman Manidhargal  Comics Classics # 25 - Kaliman Manidhargal
கதை WARLOCK களிமண் மனிதர்கள் களிமண் மனிதர்கள்
இதழ் VALIANT முத்து காமிக்ஸ் காமிக்ஸ் க்ளாசிக்ஸ்
# 231-252 (22 ISSUES) 138 25
தேதி 04-03-1967 TO 29-07-1967 15, ஜூலை 1984 ஃபிப்ரவரி 2011
பதிப்பகம் FLEETWAY PUBLICATIONS LTD. முத்து காமிக்ஸ் பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
எடிட்டர்   M.சவுந்திரபாண்டியன் S.விஜயன்
அச்சிட்டோர் FLEETWAY PRINTERS A.M.தியாகராஜன் தி விஜய் புக்ஸ், சிவகாசி
கதை TOM TULLY
ஓவியம் JESUS BLASCO
தமிழில் M.சவுந்திரபாண்டியன்
பக்கங்கள் 44 (2 PAGES PER ISSUE) 108 (கருப்பு வெள்ளை) 108 (கருப்பு வெள்ளை)
சைஸ் A4 13cmx19cm B6
விலை 7d (PER ISSUE) ரூ:2/- (1984 முதல் பதிப்பின் போது) ரூ:10/-

அட்டைப்படம்:

Comics Classics # 25 - Kaliman Manidhargal! - Cover

முதல் பக்கம்:

Muthu Comics # 138 - Kaliman Manidhargal

காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பதிப்பில் சில இடங்களில் மட்டும் எழுத்துக்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள்! முழு புத்தகத்துக்கும் இவ்வாறு செய்திருந்தால் படிப்பதற்கு சுலபமாக இருந்திருக்கும்!

Comics Classics # 25 - Kaliman Manidhargal

விளம்பரம்:

களிமண் மனிதர்கள்-ன் முதல் பதிப்பு எவ்வித விளம்பரமும் இன்றி திடுதிடுப்பென வந்தது! அதற்கான காரணத்தை பின்னர் அலசுவோம்! ஆனால் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் மறுபதிப்பிற்கு உரிய முறையில் ஏகப்பட்ட விளம்பரங்கள் வெளியிட்டு நம்மையெல்லாம் ஆவலுடன் காக்க வைத்து விட்டார் ஆசிரியர்!

Muthu Comics # 312 - Next Issue AdComics Classics # 24 - Next Issue AdLion Comics # 208 - Next Issue AdComing Soon!

CREDITS:

Muthu Comics # 138 - Kaliman Manidhargal - Credits

கதைச்சுருக்கம்:

இலண்டனுக்கு அருகில் புதிதாக திறக்கப்படவிருக்கும் அனுமின் நிலையத்தை அழிக்க இரும்புக்கை மாயாவியின் பரம வைரிகளான அ.கொ.தீ.க.வினர் முயல்கின்றனர்! அவர்களது நாசவேலை சதிச்செயல்களுக்குப் போர்வையாக அனுமின் உலைக்கு அருகாமையிலுள்ள பழமையான வார்லாக் பகுதியில் நிலவி வரும் மூட நம்பிக்கையான மண் இனத்தவர் பற்றிய கட்டுக்கதைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்! இரசாயண முறையில் அற்புத சக்தி படைத்த களிமண் மனிதர்களை உருவாக்கி மக்களை அச்சுறுத்துகின்றனர்!  அ.கொ.தீ.க.வினர் மேற்கொள்ளும் முயற்சிகளை மாயாவி முதன்முறையாக சூப்பர் ஹீரோ அவதாரம் பூண்டு எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே கதை!

மாயாவியின் சூப்பர் ஹீரோ அவதாரம்:

களிமண் மனிதர்கள்! கதையிலிருந்து இரும்புக்கை மாயாவி கதைத்தொடரில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன! முக்கியமானதும், முதன்மையானதுமாக மாயாவி சூப்பர் ஹீரோ வேடம் தரிக்கிறார்!

பல வித நூதன சக்திகள் மாயாவிக்கு நிழற்படை விஞ்ஞானிகளால் வழங்கப் படுகிறது! கூடவே எதிரிகள் அவரை அடையாளம் கண்டு கொள்ளாமலிருக்க அவருக்கு சூப்பர் ஹீரோ சீருடையும் வழங்கப்படுகிறது!

சூப்பர் ஹீரோ ஆகிவிட்ட பிறகு ரகசிய அடையாளம் இல்லாமல் எப்படி?!! சூப்பர் ஹீரோ வேடம் தறிக்காத நேரங்களில் டாக்ஸி ஓட்டும் சாதாரண மனிதனாக லண்டனின் தெருக்களில் உலவுகிறார்! இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்!

சிறுவன் மோரீஸ் இக்கதையிலிருந்துதான் அறிமுகம் ஆகிறான்! மாயாவியின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் அவனை தனக்கு துணையாக சேர்த்துக் கொள்கிறார்!

102103

இது வரை முகம்காட்டாத நிழற்படைத் தலைவர் நமக்கு அறிமுகமாகிறார்! பின்னர் வரும் கதைகளில்தான் (விண்வெளிக் கொள்ளையர், இயந்திரப்படை) இவரின் பாத்திரம் முழுமை பெறுகிறது!

071

மாயாவி இப்படி திடீரென ஏன் சூப்பர் ஹீரோவாக மாற வேண்டும்? காரணம், 1960-களில் உலகெங்கிலும் மிகப் பிரபலமடைந்திருந்த பேட்மேன் தொலைக்காட்சித் தொடர்-ன் பாதிப்பேயாகும்!

இத்தொடரைப் பற்றியும் மாயாவி கதைத்தொடரின் மீது அதன் பாதிப்புகள் பற்றியும் ஏற்கெனவே விரிவாக எழுதியுள்ளேன்! படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

மாயாவியின் சக்திகள்:

மாயாவி இக்கதையில் பெறும் விசேட சக்திகளைக் காண்போம்! ரொம்ப விளக்கி எழுத முடியாத அளவுக்கு ‘காதுல பூ’ சுத்தியிருக்காங்க! அதனால் நீங்களே படித்துக் கொள்ளுங்கள்!

006007008

இக்கதையில் மாயாவி மின்காந்த சக்தியை உபயோகித்து சூப்பர்மேன் ரேஞ்சுக்கு பறக்கிறார்! அதுமட்டுமின்றி மின் காந்த சக்தியின் மூலம் அவரை நோக்கி வரும் தோட்டாக்களை சிதறடிக்கிறார்! மயிர்கூச்செறிய வைக்கும் சாகஸம்தான்…இல்லையா?!!

017095

க்ளைமாக்ஸில் மின் காந்த சக்தியை உபயோகித்து ஒரு ஏவுகனையையே அழிக்கிறார்! நம்பமுடிகிறதா?!!

சூப்பர் கார்:

மாயாவி இக்கதையில் விசேட டாக்ஸி ஒன்றை ஓட்டுகிறார்! அதில் பல்வேறு சிறப்பம்சங்கள் பொருந்தியுள்ளன!

012

டாக்ஸி மீட்டரில் சாட்டிலைட் தொலை தொடர்பு வசதி!

021

உடனடி மாயத்தண்மை பெற சக்தி வாய்ந்த கார் பேட்டரி! இதை எந்திரன்-ல் அப்பட்டமாகக் காப்பியடித்துள்ளனர்!

043

எஜெக்டர் ஸீட்!

051

ராக்கெட் என்ஜின்!

BATMOBILE, BLACK BEAUTY, ஜேம்ஸ்பாண்ட் கார்களுக்கு எவ்விதத்திலும் சளைத்ததல்ல மாயாவியின் டாக்ஸி! இல்லையா நண்பர்களே?!!

வில்லன்கள்:

எந்த ஒரு சூப்பர் ஹீரோவின் கதைகளின் வெற்றி அவர் எதிர்த்து மோதும் வில்லன்களைப் பொறுத்தே அமைகிறது! இதில் அ.கொ.தீ.க.வினராக வரும் களிமண் மனிதர்கள் அவர்தம் பணிகளைத் திறம்படச் செய்கின்றனர்! அதாவது மாயாவியிடம் அடி வாங்கி தோற்றோடுகின்றனர்! முக்கிய வில்லனாக வரும் முகம்தெரியாத அ.கொ.தீ.க. தலைவர் கூட ‘சப்’பென்றே இருக்கிறார்!

030

சுவாரசியமான துணுக்குகள்:

  • இது நம் அபிமான காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-ன் 25வது இதழ்!
  • ஜூலை 15, 1984! இந்தத் தேதி முத்துவின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான நாளாகும்! முத்துவின் முதல்  இன்னிங்ஸ் முடிவடைந்த சோக தினம் இதுதான்! அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பின்னரே முத்து காமிக்ஸ் மீண்டும் வந்தது! இதற்கு முன்பு கடைசியாக 1982-ல் தான் முத்து காமிக்ஸ் வெளிவந்தது! நடுவில் நவம்பர் 14, 1982 முதல் ஃபிப்ரவரி 19, 1984 வரை முத்து காமிக்ஸ் வார மலர் இதழ் 22 முறை தட்டுத் தடுமாறி வெளிவந்தது! அந்த சமயத்தில் முத்து காமிக்ஸ் எதுவும் வெளிவரவில்லை!
  • இதே ஜூலை 1984-ல் தான் நமது ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் லயன் காமிக்ஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது! அதுமட்டுமின்றி மேத்தா காமிக்ஸ், ராணி காமிக்ஸ் முதன் முதலாக வெளிவந்ததும் இதே சமயத்தில் தான்!
  • முதல் பதிப்பு சைடில் பின்னடித்து வந்தது! இப்போது வந்துள்ள காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பதிப்பு நடுவில் பின்னடித்து வந்துள்ளது! கெட்டி அட்டையும் இல்லை! இந்த FORMAT-ல் நம் பதிப்பகத்தார் புத்தகம் வெளியிட்டு நெடு நாட்கள் ஆகிறது!

காமிக்ஸ் குத்து!

காமிக்ஸ் குத்து! வெளியிட்டு நெடுநாள ஆகிவிட்ட படியால் இதோ இக்கதையிலிருந்து ஒரு வசனம்! சிறுவன் மோரீஸ் அடிக்கும் ‘பன்ச்’!

காமிக்ஸ் குத்து!

ஹ்ம்ம்ம்… “வெடலப் பசங்கெல்லாம் வெரல சொடுக்குறானுங்க!” (விவேக் | படம்: சிவாஜி)

ஆங்கில மூலம்:

இதுவரை ஆன்லைனில் வெளிவந்துள்ள கதையின் ஆங்கில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு!

Valiant 1st April 1967 0020Valiant 1st April 1967 0021valiant 8th april 1967 0020valiant 8th april 1967 0021valiant 15th april 1967 0020valiant 15th april 1967 0021Valiant 6th May 1967 0014Valiant 6th May 1967 0015Valiant 13th May 1967 0020Valiant 13th May 1967 0021 

ஆங்கிலப் பக்கங்களைப் படித்து விட்டு தமிழில் படிப்போர் ஆங்கிலத்தில் மூலக்கதையமைப்பும், வசனங்களும் எவ்வளவு மொக்கையாக இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்! அதிலும் மாயாவி சூப்பர்மேன் போல் வார்த்தைக்கு வார்த்தை “GREAT DYNAMOS!” என்று ‘பன்ச்’ அடிப்பது ஜீரணிக்கவே முடியவில்லை! தமிழின் மொழிபெயர்ப்புத் தரமும், ஆசிரியர் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்களின் சிறப்பான எடிட்டிங்கும் இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது!

கதாசிரியர்கள் விவரம்:

Tom Tully Jesus Blasco
TOM TULLY JESUS BLASCO

இக்கதையின் ஆசிரியர் TOM TULLY குறித்த மேல் விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

இக்கதையின் ஓவியர் JESUS BLASCO குறித்த மேல் விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

நிறைகள்:

  • டாம் டல்லியின் அதிரடி ஆக்ஷன் கதைக்கு ஜீசஸ் ப்ளாஸ்கோவின் சிறப்பான ஒவியங்கள்!
  • ஆசிரியர் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்களின் சிறப்பான தமிழாக்கம்! ஆங்கிலத்தை விட தமிழில் சிறப்பாக உள்ளது!

குறைகள்:

  • சுமாரான கதையமைப்பு!
  • சொதப்பல் வில்லன்கள்!
  • ஜட்டி போடாத சூப்பர் ஹீரோ மாயாவி!
  • முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு ‘காதுல பூ’ சாகஸங்கள்!

ஆனால் இரும்புக்கை மாயாவி என்றொரு சூப்பர் ஸ்டார் இருக்கையில் இவைகள் மிகப்பெரிய குறைகளாகத் தெரியவில்லை!

அடுத்த வெளியீடு:

அடுத்த வெளியீடாக ஜானி நீரோ சாகஸமான கொலைகாரக் கலைஞன்! மீண்டும் ஒரு முறை மறுபதிப்பு செய்யப்படவிருக்கிறது! இது இக்கதையின் மூன்றாவது மறுபதிப்பாகும்!

Comics Classics# 25 - Next Issue Ad

இக்கதை குறித்த மேல்விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!  

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையுடன் படித்ததற்கு நன்றி! வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆங்கிலப் பதிப்புகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அளித்த நண்பர் முத்து விசிறி-க்கு நன்றி.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:-

  • ஹாட்-லைனில் ஆசிரியர் இம்முறை கூறியிருக்கும் சமாச்சாரங்கள் சிந்தனையைத் தூண்டுகின்றன! இனிமேல் வரும் பெரும்பாண்மையான இதழ்கள் முழு வண்ணத்தில் வருமென்று கூறியுள்ளார்! அப்போது சில இதழ்கள் கருப்பு வெள்ளையிலும் வருமா? அதே போல் சந்தா கூப்பனில் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இடம்பெறவில்லை! அப்போது இனிமேல் தொடர்ந்து காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வெளிவருமா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன! உங்கள் கருத்தைக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
  • அடுத்த பதிவாக நமது அ.கொ.தீ.க.வின் 50வது சிறப்புப் பதிவு வெளிவரவிருக்கிறது! தொடர்ந்திடும் உங்கள் ஆதரவுக்கு நன்றி! ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் பதிவிட்டு உங்கள் அனைவரையும் அசத்தி விடுகிறேன்!

தொடர்புடைய இடுகைகள்:

இரும்புக்கை மாயாவி:

காமிக்ஸ் க்ளாசிக்ஸ்:

Friday, February 26, 2010

இரும்பு மனிதன்!

“பழைய இரும்புச் சாமான், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்!”
-குள்ளமணி (படம்: கரகாட்டக்காரன்)

வணக்கம்,

தலைப்பை பார்த்து விட்டு அய்யம்பாளையத்தார் போன்ற அரசியல் சாட்டையடி வீரர்கள் இது ஏதோ இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபபாய் பட்டேல் குறித்த பதிவு என்று நினைத்து கொள்ள வேண்டாம் என கனிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!

எந்திரன் திரைப்படம் எப்போது வெளிவரும் என தமிழ்நாடே ஏங்கிக் கிடக்கும் இவ்வேளையில், நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானதொரு இரும்பு மனிதன் குறித்த ஒரு சிறு முன்னோட்டப் பதிவைக் காண்போம்!

கடந்த ஃபிப்ரவரி 23-ம் தேதிதான் நமது ஃபேவரைட் இரும்பு மனிதன் ஆர்ச்சியின் பிறந்த நாள் ஆகும்! ஆம் 23-02-1952 அன்று வெளிவந்த LION வாரந்திர காமிக்ஸ் இதழின் முதல் இதழில் தான் முதன்முதலாக ஆர்ச்சி தோன்றி சாகஸம் புரிந்து நம்மைப் போல் உலகெங்கிலும் உள்ள என் போன்ற குழந்தைகளையும், குழந்தை மனம் கொண்டோரையும் கவர்ந்தது!

இதோ அந்த முதல் தோற்றத்தின் புகைப்படம்! உபயம்: வழக்கம் போல நண்பர் முத்து விசிறி! படத்தை ‘க்ளிக்’கி பெரிதாக்கிப் பார்த்து மகிழவும்!

Lion (22-02-1952) - Robot Archie

லயன் காமிக்ஸ் # 004 – இரும்பு மனிதன்! இதழில்தான் நமது அபிமான இரும்பு மனிதன் முதன்முதலாக சாகஸம் செய்தான்! இது குறித்த மேலும் சில சுவாரசியமான தகவல்கள் இதோ! நமது காமிக்ஸ்களில் வெளிவந்த முதல் ஆர்ச்சி கதைகளின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!

அட்டைப்படங்கள்:

Lion Comics # 004 - Irumbu ManidhanLion Comics (English Edition) # 2 - The Amazing Robot Archie

விளம்பரங்கள்:

Lion Comics # 004 - Irumbu Manidhan - Ad (Cover) Lion Comics # 004 - Irumbu Manidhan - Ad (Inside)

சிங்கத்தின் சிறுவயதில்:

ஆர்ச்சியின் தமிழ் அறிமுகம் குறித்து ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் கூறியிருப்பதையும் படியுங்கள்!

SS03-1(L192)SS03-2(L192)SS03-3(L192)

அரிய அட்டைப்படம்:

லயன் காமிக்ஸ் # 004 – இரும்பு மனிதன்! அட்டைப்படம் தயாரிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள்! இதோ அந்த உபயோகிக்கப்படாத அரிய அட்டைப்படம் உங்கள் மேலான பார்வைக்கு! உபயம்: நண்பர் ஹாஜா இஸ்மாயில்!

Lion#004 - Irumbu Manidhan - Alternate Cover

இத்தகைய அதியற்புத ஹீரோவை நமக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

ஆர்ச்சியின் அதிரடி அட்டைப்படங்கள்:

நீங்கள் கண்டு மகிழ இதோ மேலும் சில ஆர்ச்சியின் அதிரடி அட்டைப்படங்கள்! அதிரடி ஆர்ச்சி, அதிசயத் தீவில் ஆர்ச்சி உள்ளிட்ட எனது ஃபேவரைட்கள் சிலது மிஸ்ஸிங்! மன்னிக்கவும்!

Lion Comics # 008 - Marma TheevuLion Comics # 013 - Nadhi  ArakanLion Comics # 015 - Kudhirai Veeran ArchieLion Comics # 016 - Ulaga Poril ArchieLion Comics # 024 - Thanga VettaiLion Comics # 025 - Kodai Malar '86Lion Comics # 030 - Yaar Antha Junior ArchieLion Comics # 031 - Deepavali Malar '86Lion Comics # 034 - Puratchi Thalaivan ArchieLion Comics # 036 - Kodai Malar '87Lion Comics # 045 - Archiekkor ArchieLion Comics # 047 - Marana PaniLion Comics # 087 - Archie in ParisLion Comics # 109 - Archieyodu ModhaadhaeLion Comics # 200 - Supplement

காமிக்ஸ் க்ளாசிக்ஸ்:

Comics Classics # 12 - Marma Theevu (Reprint)Comics Classics # 17 - Thanga Vettai (Reprint)

தமிழ் காமிக்ஸ் உலகில் ஆர்ச்சியின் தாக்கம் குறித்து பலரும் இப்போது குறைவாகவே, ஏன் கேவலமாகவே மதிப்பிடுகின்றனர்! ஆனால் ஆர்ச்சி உச்ச நாயகனாக திகழ்ந்த கால கட்டங்களில் அதன் பாதிப்பை சொற்களால் விவரிக்க முடியாது! ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் ஆர்ச்சியால் தனக்குக் கிடைத்த வெற்றிகளை இவ்வாறெல்லாம் பறைசாற்றியுள்ளார்!

Lion Comics # 067 - Emanukku Eman - Supplement - Lion Album - Front CoverLion Comics # 050 - Dragon Nagaram - Back

நமது அபிமான இரும்பு மனிதன் குறித்த  சிறப்பு ஆய்வுப் பதிவொன்று விரைவில் இடவிருகிறேன்! அதுவரை பொறுத்திருக்கவும்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

படங்கள் உபயம்:

தொடர்புடைய இடுகைகள்:

லயன் காமிக்ஸ் ஆங்கில வெளியீடுகள் குறித்து முத்து விசிறியின் முத்தான பதிவு:

லயன் காமிக்ஸ் சிறப்பிதழ்கள் குறித்து கிங் விஸ்வாவின் பதிவு:

சிங்கத்தின் சிறுவயதில் அனைத்து பாகங்களும் படிக்க: