வணக்கம்,
கடந்த 18-12-2009 அன்று இளைய தளபதி டாக்டர் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படம் ரிலீஸானது! இந்தத் திரைப்படத்தைக் கண்டு மனம் நொந்தோருக்கு மருந்தாக ராணி காமிக்ஸ்-ல் வெளிவந்த வேட்டைக்காரி என்கிற 007 ஜேம்ஸ்பாண்ட் சாகஸம் குறித்த ஒரு அலசல் உங்கள் பார்வைக்கு!
புத்தக விவரங்கள்:
ஆங்கில மூலம் | ராணி காமிக்ஸ் | DIAMOND COMICS | ||
கதை | FOR YOUR EYES ONLY | வேட்டைக்காரி | FOR YOUR EYES ONLY | |
பதிப்பாளர் | DAILY EXPRESS (Newspaper Strip) | ராணி காமிக்ஸ் (மாதம் இருமுறை இதழ்) | DIAMOND COMICS | |
# | Strip#988 to #1065 | 117 | DE-1263 | |
முதல் பதிப்பு | 11th September 1961 to 9th December 1961 | மே 1-15, 1989 | ??? | |
மறுபதிப்புகள் | GOLDFINGER TITAN BOOKS (25th February 2005) | ராணி காமிக்ஸ் # 458 வில்லேந்திய வீராங்கனை! (16th July 2003) | - | |
கதை | IAN FLEMING HENRY GAMMIDGE | - | - | |
ஓவியம் | JOHN McLUSKY | - | - | |
தமிழில் | - | அ.மா.சாமி | - | |
பக்கங்கள் | 132 (B&W) | 84 (கருப்பு வெள்ளை) | 44 (COLOR) | |
சைஸ் | A4 | 14cmx18cm | 14cmx18cm | |
விலை | ₤11.99 | ரூ:2/- | Rs.15/- |
மூலம்:
இயன் ஃப்ளெமிங்-ன் சிறுகதைத் தொகுப்பான FOR YOUR EYES ONLY எனும் புத்தகத்தில் வந்த அதே தலைப்பைக் கொண்ட கதை செய்தித்தாள் சித்திரக்கதைத் தொடராக வெளிவந்தது! அதன் தழிழாக்கமே வேட்டைக்காரி! புத்தகத்தின் கண்கவர் அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!
மேலும் பல 007 ஜேம்ஸ்பாண்ட் நாவல் அட்டைப்பட ஓவியங்களைக் காண கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்:NO COMMENTS!
கொசுறாக ஒரு சின்ன NO COMMENTS! இதில் எது ஒரிஜினல்?
மேலும் சில அதிர்ச்சியூட்டும் NO COMMENTS! பதிவுகள்:- http://muthufanblog.blogspot.com/2007/08/no-comments.html
- http://tamilcomicsulagam.blogspot.com/2009/04/no-comments.html
FOR YOUR EYES ONLY:
தண்டனையிலிருந்து தப்பி வாழும் நாஜி போர் குற்றவாளியான VON HAMMERSTEIN ஜமைக்காவில் தஞ்சம் புகுந்து அங்குள்ள நிலங்களை வாங்கிக் குவிக்கிறான்! தனது அடியாள் GONZALES மூலம் COLONEL HAVELOCK –ன் சொத்துக்களையும் அபகரிக்கும் முயற்சியில் அவரையும் அவரது மனைவியையும் கொல்கிறான்!
COLONEL HAVELOCK இங்கிலாந்தின் உளவுப் பிரிவான MI-6ன் தலைவர் Mன் நெருங்கிய நண்பர்! ஆகையால் தனது நண்பரின் மரணத்திற்குப் பழி வாங்கவும் அவரது ஒரே மகளான JUDY-ஐப் பாதுகாக்கவும் VON HAMMERSTEIN-ஐக் கொல்லுமாறு 007-ஐப் பணிக்கிறார்! இப்பணி குறித்து வேறு எவருக்கும் தெரியாத வண்ணம் FOR YOUR EYES ONLY என்று பரம இரகசியமாக வைக்கப்படுகிறது! மனதில் சஞ்சலத்துடன் 007 இப்பணியை மேற்கொள்கிறார்!
மிகச் சிரத்தையாகத் திட்டமிட்டு VON HAMMERSTEIN-ஐ நெருங்கும் 007 சற்றும் எதிர்பாரா வண்ணம் தனது பெற்றோரின் மரணத்திற்குப் பழி வாங்க அங்கு வந்து சேர்கிறாள் JUDY! 007-ம் JUDY-ம் இனைந்து எவ்வாறு எதிரிகளைப் பழி தீர்க்கிறார்கள் என்பதே கதை! இதில் சஸ்பென்ஸ் நிறைந்த பல கட்டங்களை இயன் ஃப்ளெமிங் தனது வார்த்தை ஜாலத்தால் விவரித்திருப்பார்! ஃப்ளெமிங்-ன் வரிகள் பலவற்றை உள்ளது உள்ளபடியே காமிக்ஸ் கதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர் ஹென்றி காம்மிட்ஜ்! ஜான் மெக்லுஸ்கியின் ஓவியங்கள் கதைக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன!
ராணி காமிக்ஸ் # 117 – வேட்டைக்காரி:
தமிழில் இக்கதையை ஆசிரியர் திரு.அ.மா.சாமி அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டார்! கதையின் தன்மை வழக்கமான ராணி ஸ்டைலில் DILUTE செய்யபட்டு வசனங்களின் தரமும் சாமாணியருக்கும் பாமருருக்கும் புரியும் வகையில் மாற்றியமைக்கப் பட்டது! பெயர்களும் தமிழர்களின் வாயில் நுழையும் அளவுக்கு எளிமையாக்கப்பட்டன! உதாரணம் உங்கள் பார்வைக்கு!
JUDY HAVELOCK என்ற பெயர் சிம்பிளாக ரீட்டா வில்சன் என்று மாற்றையமைக்கப் பட்டுள்ளது! VON HAMMERSTEIN என்ற வில்லனும் அவனது அடியாளான GONZALES-ம் கதையில் மேஜர் நிக்சன் என்ற ஒரே பெயரில் வலம் வருகிறார்கள்! கதையின் மூலத்திலிருந்தும் பல மாறுதல்களைக் காணலாம்! இறந்து போன HAVELOCK தம்பதியினரை M-க்கு நெருங்கிய நண்பர்களாச் சித்திரக்கப் படவில்லை! ஆகையால் இது வழக்கமாக 007 -க்கு வழங்கப்படும் பணி போல ஆகிவிடுகிறது! கனடாவுக்குள் 007 திருட்டுத்தனமாக நுழையும் கட்டங்களில் உள்ள சஸ்பென்ஸ் மொழிபெயர்ப்பில் புஸ்ஸாகி விடுகிறது! நொடிக்கொரு தரம் கதையின் தலைப்பை நமக்கு நினைவூட்டுகின்றன வசனங்கள்! சாம்பிள்கள் சில இதோ உங்கள் பார்வைக்கு!
வேட்டைக்காரன்! | “புலி உறுமுது!புலி உறுமுது! வேட்டைக்காரன் வர்றத பாத்து!” | வேட்டைக்காரி! | “என் உச்சி மண்டைல சுர்ருங்குது!” |
“உனக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா! வேற… வேற… வேற… வேட்டைக்காரன் தாண்டா வேணும்!” |
காமிக்ஸ் குத்து!
நெடுநாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை உங்களை இந்தப் பகுதியில் சந்திப்பது குறித்து மகிழ்ச்சி! கதையிலிருந்து சில பளிச் வசனங்கள் உங்கள் பார்வைக்கு!
DIAMOND COMICS:
இக்கதையை DIAMOND COMICS நிறுவனத்தினர் ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்! கண்கவரும் வண்ணங்களில் தரமான தாளில் சிறப்பாக அச்சிடப்பட்டிருப்பதால் இதைப் படிப்பது ஒரு சுகானுபவம்!
DIAMOND COMICS அதிகாரப்பூர்வ வலைத்தளம்:TITAN BOOKS மறுபதிப்பு:
007 ஜேம்ஸ்பாண்ட் செய்தித்தாள் சித்திரக்கதைத் தொடரை TITAN BOOKS நிறுவனத்தினர் ஆரம்பத்திலிருந்து மறுபதிப்பு செய்து வருகின்றனர்! தாறுமாறான விலையும், கதைக்கு கதை வேறுபடும் அச்சுத்தரமும் (சூப்பரிலிருந்து சொதப்பல் வரை – சில கதைகள் நமது ராணி காமிக்ஸ் அச்சுத்தரமே மேல்!) தடைக்கற்களாக அமைந்தாலும் தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு தவிர்க்க முடியாததொரு விருந்து இது!
சமீபத்தில் THE JAMES BOND OMNIBUS என்ற பெயரில் மலிவுப் பதிப்பாக முதல் மூன்று புத்தகங்களில் வெளிவந்த கதைகளை ஒரே புத்தகமாக TITAN BOOKS வெளியிட்டுள்ளனர்! தனிப் புத்தகங்கள் வாங்க யோசிப்போர் இதனை கண்டிப்பாக வாங்கலாம்! இதில் வேட்டைக்காரி தவிர நாம் தமிழில் படித்து மகிழ்ந்த பல சிறந்த கதைகளும் உள்ளன! DON’T MISS IT! புத்தகத்தை வாங்க கீழ்காணும் சுட்டியை பயன்படுத்தவும்!பிற மொழி காமிக்ஸ் அட்டைப்படங்கள்:
பிற மொழிகளில் வந்த FOR YOUR EYES ONLY காமிக்ஸ் அட்டைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு!
மேலும் பல 007 ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் அட்டைப்படங்களைக் கண்டு களிக்க கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்:FOR YOUR EYES ONLY திரைப்படம்:
1981-ம் ஆண்டு FOR YOUR EYES ONLY சிறுகதைத் தொகுப்பைத் தழுவி அதே பெயரில் சூப்பர் ஸ்டார் ரோஜர் மூர் நடிப்பில் திரைப்படம் வெளிவந்தது! இத்திரைப்படம் FOR YOUR EYES ONLY மற்றும் RISICO என்ற இரு சிறுகதைகளை மூலமாகக் கொண்டு கதையமைக்கப்பட்டது! RISICO தமிழில் ராணி காமிக்ஸ் # 077 - போதை மருந்து! என்று வெளிவந்தது! இக்கதை குறித்து பின்னொரு பதிவில் விரிவாகக் காண்போம்! திரைப்படத்தைப் பொறுத்த வரையில் ரோஜர் மூர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள்-ல் இது சிறந்தது எனக் கூறலாம்! இதற்கு முந்தைய படங்களின் சாயலிலிருந்து முற்றிலுமாக விலகி ஒரிஜினல் கதைகளின் தண்மை மாறாமல் படமாக்கப்பட்ட விதம் பாராட்டுக்குரியது! இருப்பினும் வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் சமாச்சாரங்கள் எதுவும் குறையாமல் இருப்பது சிறப்பு! இத்திரைப்படம் குறித்த மேல்விவரங்களுக்குக் கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்:
FOR YOUR EYES ONLY திரைப்பட போஸ்டர்கள்:
திரைப்படத்தின் அற்புத போஸ்டர்கள் சில உங்கள் பார்வைக்கு! ரோஜர் மூர்-ன் க்ளாஸிக் ஆக்ஷ்ன் போஸ்கள் இன்றும் அசத்துகிறது!
மேலும் பல 007 ஜேம்ஸ்பாண்ட் திரைப்படப் போஸ்டர்களைக் காண கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்:திரைப்படத்தின் காமிக்ஸ் வடிவம்:
மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தினர் படம் வெளிவந்த போது அதனை காமிக்ஸ் வடிவில் வெளியிட்டனர்! சூப்பர் ஹீரோக்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளேயே பல வருடங்களாகக் குண்டுச் சட்டியில் குதிரையோட்டும் அமெரிக்க காமிக்ஸ்களில் 007 ஜேம்ஸ்பாண்ட் கால்பதித்த வெகுசில தருணங்களில் இதுவும் ஒன்று!
இந்த காமிக்ஸ் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்:
பி.கு.:
ராணி காமிக்ஸ் வேட்டைக்காரிக்கும் இளைய தளபதி டாக்டர் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்! என்னதான் அ.மா.சாமி தனது மொழிபெயர்ப்பால் கதையை நாசம் செய்திருந்தாலும் அது கண்டிப்பாக இளைய தளபதி டாக்டர் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை விட பல்லாயிரம் மடங்கு தேவலாம் என்பதால் ஏற்கெனவே படம் பார்த்தவர்கள் இந்தப் பதிவைப் படித்து மனதைத் தேற்றிக் கொள்ளவும்! இனிமேலும் திரைப்படத்திற்கு போக எண்ணி தற்கொலைக்கு முயற்சிக்கும் வாழ்க்கையில் விரக்தியடைந்தோர் தங்களின் பொன்னான நேரத்தையும், பணத்தையும், உயிரையும் விரயம் செய்யாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு கீழ்காணும் மூன்று செயல்களில் ஏதேனும் ஒன்றில் இறங்கி மனம் மகிழுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்!
- ராணி காமிக்ஸ் வேட்டைக்காரி கதையை படித்துப் புசிக்கலாம்!
- ஒரிஜினல் வேட்டைக்காரன் படத்தைக் கண்டு மகிழலாம்!
- FOR YOUR EYES ONLY படத்தைப் பார்த்துப் பரவசிக்கலாம்!
சமூக நலன் கருதி இந்த செய்தி வெளியிடப் படுகிறது!
தொடர்புடைய இடுகைகள்:
ஒரிஜினல் வேட்டைக்காரன் திரைவிமர்சனம்:
முந்தைய 007 ஜேம்ஸ்பாண்ட் பதிவு:வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!