வணக்கம்,
வரும் நாட்களில் வரவிருக்கும் காமிக்ஸ் இதழ்கள் குறித்து சிறு முன்னோட்டமாக இப்பதிவு உங்கள் பார்வைக்கு! முதலில் வரவிருக்கும் இதழ்களின் TENTATIVE LIST! கிடைத்த சைக்கிள் கேப்பில் ஒரு மொக்கை பதிவு!
வெளியீடு | #* | கதை | கதாநாயகர்(கள்) | தேதி* | விலை |
முத்து காமிக்ஸ் | 313 | விண்ணில் ஒரு குள்ளநரி! | விங் கமாண்டர் ஜார்ஜ் | நவம்பர் 2009/ டிசம்பர் 2009 | ரூ:10/- |
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் | 025 | களிமண் மனிதர்கள்! | இரும்புக்கை மாயாவி | டிசம்பர் 2009 | ரூ:10/- |
லயன் காமிக்ஸ் | 208 | வெள்ளையாய் ஒரு வேதாளம்! | சிக்பில் & Co. | டிசம்பர் 2009/ ஜனவரி 2010 | ரூ:10/- |
முத்து காமிக்ஸ் | 314 | மரணத்தின் நிசப்தம்! | ரிப்போர்ட்டர் ஜானி | 2010 | ரூ:10/- |
லயன் காமிக்ஸ் | ??? | காவல் கழுகு! | டெக்ஸ் வில்லர் & Co. | 2010 | ரூ:10/- |
லயன் காமிக்ஸ் | ??? | சாத்தானின் தூதன் டாக்டர் 7! | டாக்டர் 7 உடன் மோதும் FBI ஏஜெண்ட் பிலிப் காரிகன் | 2010 | ரூ:10/- |
லயன் காமிக்ஸ் | ??? | லயன் COLLECTOR’S ஸ்பெஷல்! இரத்தப்படலம்! (1-18) | XIII | 2010 (?!!) | ரூ:200/- |
* - தோராயமானவை |
இனி ஒவ்வொரு இதழாக பார்ப்போம்!
முத்து காமிக்ஸ் # 313: விண்ணில் ஒரு குள்ளநரி!
இன்னும் ஓரிரு வாரங்களில் முத்து காமிக்ஸ் # 313: விண்ணில் ஒரு குள்ளநரி! வரவிருக்கிறது! புத்தகம் கைக்கு கிடைத்தவுடன் வழக்கம் போல சுடச்சுட பதிவும் வரும்! அநேகமாக அடுத்த வாரத்திலேயே அதிரடிப் பதிவை எதிர்பார்க்கலாம்!
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 025: களிமண் மனிதர்கள்!
அதைத் தொடர்ந்து காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 025: களிமண் மனிதர்கள்! வரவிருக்கிறது! புத்தகம் வரும் போது அ.கொ.தீ.க.வில் நிச்சயம் பதிவு இடப்படும்! அதுவரை அட்டைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்!
லயன் காமிக்ஸ் # 208: வெள்ளையாய் ஒரு வேதாளம்!
அதையடுத்து லயன் காமிக்ஸ் # 208: வெள்ளையாய் ஒரு வேதாளம்! வரலாம்! ஆனால் XIII ஸ்பெஷல் வரும் என்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே! எனினும் அட்டைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்!
முத்து காமிக்ஸ் # 314: மரணத்தின் நிசப்தம்!
நம் அனைவரின் அபிமான துப்பறியும் கதாநாயகனான சூப்பர் ரிப்போர்ட்டர் ஜானி நெடுநாட்கள் கழித்து வருவது பெருமகிழ்ச்சியளிக்கிறது! இதோ புத்தகத்துக்கான முன்னோட்டம்!
லயன் காமிக்ஸ் # ???: காவல் கழுகு!
சூப்பர் கெளபாய் டெக்ஸ் வில்லர் & குழுவினரின் ஒரு பாக சாகசம்! வழக்கமாக ஒரே பாகத்தில் முடிவு பெற்றுவிடும் டெக்ஸ் கதைகள் எல்லாம் மொக்கையாக அமையும் என்பது விதி (உம்: மரணத்தின் நிறம் பச்சை! பறக்கும் பலூனில் டெக்ஸ்!)! காவல் கழுகிலாவது அந்த விதியை டெக்ஸ் வெல்கிறாரா என்று பார்ப்போம்!
லயன் காமிக்ஸ் # ???: சாத்தானின் தூதன் டாக்டர் 7!
நெடுநாள் கழித்து டாக்டர் 7 (அட! அது நான்தானுங்க!) தனது பரம வைரியான காரிகன் உடன் மோதுவது இந்த இதழின் ஹை-லைட்! இப்போதிருந்தே பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது விளம்பரம்! அதை இன்னும் பரபரபாக்கும் வகையில் இந்த முன்னோட்டம் அமையும்!
ஒன்று மட்டும் நிச்சயம்! இந்தக் கதையில் டாக்டர் 7-ன் ENTRY அமர்க்களமாக இருக்கும்! அதற்கான சான்று மேற்காணும் படங்களில்!
லயன் காமிக்ஸ் # ???: லயன் COLLECTOR’S ஸ்பெஷல்! இரத்தப்படலம்! (1-18)
இது எப்போது வருமோ? ஆண்டவனுக்கும், ஆசிரியருக்குமே வெளிச்சம்! இருப்பினும் பொங்கலுக்கு வந்தால் சிறப்பாக இருக்குமென்பது எனது சிறிய நப்பாசை!
அட்டைப்படங்களின் EXCLUSIVE புகைப்படங்களை அளித்துதவிய நண்பர் கேப்டன் ஹெச்சாய்-க்கு நன்றிகள் பல!
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!