Showing posts with label 007. Show all posts
Showing posts with label 007. Show all posts

Saturday, April 10, 2010

NO COMMENTS – 007 SPECIAL!

“ஜாபர்கான்பேட்டை ஜேம்ஸ்பாண்டு நாட் நாட் ஏழு!”
-செந்தில் (படம்: மந்திரப் புன்னகை)

வணக்கம்,

நீண்ட காலமாக நிலுவையிலுள்ள பதிவுகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடி இப்போது கணக்கு வைக்க முடியாத அளவுக்கு கை மீறி விட்டது! இந்த வலைப்பூ ஆரம்பிக்க பட்ட நோக்கம் (வலைப்பூவின் தலையங்கத்தை காணவும்) எங்கே நிறைவேறாமல் போய்விடுமோ என்றெண்ணும் அளவுக்கு இந்த பிரச்சனை பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது!

கடந்த பல மாதங்களாகவே பற்பல மொக்கை பதிவுகளை இடுவதில் நேரமும் உழைப்பையும் விரயம் செய்ததினால் நல்ல பதிவுகள் இட நேரம் கிடைக்கவில்லை! இந்த மொக்கை பதிவுகளுக்கு உந்துகோலாகவும், உறுதுணையாகவும் இருந்த கிங் விஸ்வா மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர் ஆகியோரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தே ஆக வேண்டும்!

இப்போது கோடை விடுமுறை வேறு ஆரம்பித்து விட்டதால் கோடை மலர் சிறப்புப் பதிவு வேறு இட வேண்டிய கட்டாயம் உள்ளது! எனது அடுத்த பதிவு கோடை சிறப்பு மலர் தான் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன்! அதை தயார் செய்யும் இடைவெளியில் இதோ ஒரு அதிரடி மினி பதிவு!

NO COMMENTS - 007 SPECIAL:

NO COMMENTS என்ற CONCEPT-ஐ தமிழ் காமிக்ஸ் வலையுலகத்திற்கு அறிமுகப் படுத்திய நண்பர் முத்து விசிறிக்கும் அதை செம்மை படுத்திய கிங் விஸ்வாவிற்கும் இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்! இம்முறை NO COMMENTS பகுதிக்கு நான் தேர்ந்தெடுத்திருப்பது 007 ஜேம்ஸ்பாண்ட்-ஐ மையமாக கொண்டு வந்த அட்டைப்படங்களை! பார்த்து மகிழுங்கள்!

முதலில் 007 ஜேம்ஸ்பாண்ட்-ன் திரைப்பட போஸ்டர்களைத் தழுவி வெளிவந்த அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!

The Living Daylights Muthu Comics # 167 - Muthu Special
A View To A Kill - Poster James Bond - Ad 2
Casino Royale Muthu Comics # 176 - Summer Special
A View To A Kill - Logo James Bond - Ad 1
Moonraker Thihil Comics # 38 - Vinveli Padaiyeduppu
a view to a kill goozee original artwork Muthu Comics # 169 - Thalai Vaangum Silai
The Living Daylights - Poster Muthu Comics # 220 - Pazhi Vaangum Pani
You Only Live Twice
Mini Lion Comics # 14 - Summer Special

மேலும் பல 007 ஜேம்ஸ்பாண்ட் திரைப்படப் போஸ்டர்களைக் காண கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்:

இனி உலகெங்கிலும் இருந்து வெளிவந்த 007 ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ் அட்டைப்படங்களைத் தழுவி வெளிவந்த அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!

James Bond - Permisiion To Die James Bond - Ad 3
James Bond 007 - Serpent's Tooth - Book 1 Muthu Comics # 240 - Puyal Padalam
James Bond 007 - Serpent's Tooth - Book 2 Muthu Comics # 262 - My Dear Mummy
1984_4 Muthu Comics # 249 - Visithira Villan
1984_6 Muthu Comics # 311 - Norungiya Naanal Marmam
1984_8 Lion Comics # 149 - Bermuda Padalam
1988_2 Mekala Comics # 2 - Nadukadalil
73287 Muthu Comics # 237 -  Kallarayil Oru Kavinjan

மேலும் பல 007 ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் அட்டைப்படங்களைக் கண்டு களிக்க கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்:

இறுதியாக, இம்மூன்றில் எது ஒரிஜினல்? இது ஒரு மீள் NO COMMENTS!

3592831746_6e2b043cfbSA03 The Devil's Secret(Mali Kottai Marmam)Muthu Comics # 307 - Kaatril Karaintha Kathanayagan

பி.கு.:

  • இந்த பதிவு ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் கடலினும் ஆழ்ந்த காமிக்ஸ் ஆர்வத்திற்கு சமர்ப்பணம்! இந்த அட்டைப்படங்களை வெளியிடுவதன் நோக்கம் அவரது பரந்து விரிந்த காமிக்ஸ் ரசனையை போற்றும் நோக்கமே! அதிலும் குறிப்பாக 007 ஜேம்ஸ்பாண்ட்-ன் தீவிர விசிறி அவர் என்பதை சொல்லவும் வேண்டுமா? ஆகையால் தயவு செய்து யாரும் அவர் காப்பியடிக்கிறார் என்று உண்மையை உணராமல் பிண்ணூட்டமிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்!

உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:

பிற NO COMMENTS பதிவுகள்:

பிற 007 ஜேம்ஸ் பாண்ட் பதிவுகள்:

அட்டைப்படங்கள் உபயம்:

Monday, December 28, 2009

வேட்டைக்காரி!

வணக்கம்,

கடந்த 18-12-2009 அன்று இளைய தளபதி டாக்டர் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படம் ரிலீஸானது! இந்தத் திரைப்படத்தைக் கண்டு மனம் நொந்தோருக்கு மருந்தாக ராணி காமிக்ஸ்-ல் வெளிவந்த வேட்டைக்காரி என்கிற 007 ஜேம்ஸ்பாண்ட் சாகஸம் குறித்த ஒரு அலசல் உங்கள் பார்வைக்கு!

புத்தக விவரங்கள்:

    ஆங்கில மூலம் ராணி காமிக்ஸ் DIAMOND COMICS
    Titan Books - James Bond 007 - Goldfinger Rani Comics # 117 - Vettaikkaari Diamond Comics # DE-1263 - 007 James Bond - For Your Eyes Only
கதை   FOR YOUR EYES ONLY வேட்டைக்காரி FOR YOUR EYES ONLY
பதிப்பாளர்   DAILY EXPRESS
(Newspaper Strip)
ராணி காமிக்ஸ்
(மாதம் இருமுறை இதழ்)
DIAMOND COMICS
#   Strip#988 to #1065 117 DE-1263
முதல் பதிப்பு   11th September 1961 to
9th December 1961
மே 1-15, 1989 ???
மறுபதிப்புகள்   GOLDFINGER
TITAN BOOKS
(25th February 2005)
ராணி காமிக்ஸ் # 458
வில்லேந்திய வீராங்கனை!
(16th July 2003)
-
கதை   IAN FLEMING
HENRY GAMMIDGE
- -
ஓவியம்   JOHN McLUSKY - -
தமிழில்   - அ.மா.சாமி -
பக்கங்கள்   132 (B&W) 84 (கருப்பு வெள்ளை) 44 (COLOR)
சைஸ்   A4 14cmx18cm 14cmx18cm
விலை   ₤11.99 ரூ:2/- Rs.15/-

மூலம்:

இயன் ஃப்ளெமிங்-ன் சிறுகதைத் தொகுப்பான FOR YOUR EYES ONLY எனும் புத்தகத்தில் வந்த அதே தலைப்பைக் கொண்ட கதை செய்தித்தாள் சித்திரக்கதைத் தொடராக வெளிவந்தது! அதன் தழிழாக்கமே வேட்டைக்காரி! புத்தகத்தின் கண்கவர் அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!

777239494_47ad88d8583592831746_6e2b043cfbfor-your-eyes-only2for-your-eyes-only triad granada paperback coverfor-your-eyes-only-cape-firfyeo_bce-dustjacketfyeo-capesignet-for-your-eyes-only

மேலும் பல 007 ஜேம்ஸ்பாண்ட் நாவல் அட்டைப்பட ஓவியங்களைக் காண கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்:

NO COMMENTS!

கொசுறாக ஒரு சின்ன NO COMMENTS! இதில் எது ஒரிஜினல்?

3592831746_6e2b043cfbSA03 The Devil's Secret(Mali Kottai Marmam)307 Katril Karaintha Kathanayagan

மேலும் சில அதிர்ச்சியூட்டும் NO COMMENTS! பதிவுகள்:

FOR YOUR EYES ONLY:

fyeo

தண்டனையிலிருந்து தப்பி வாழும் நாஜி போர் குற்றவாளியான VON HAMMERSTEIN ஜமைக்காவில் தஞ்சம் புகுந்து அங்குள்ள நிலங்களை வாங்கிக் குவிக்கிறான்! தனது அடியாள் GONZALES மூலம் COLONEL HAVELOCK –ன் சொத்துக்களையும் அபகரிக்கும் முயற்சியில் அவரையும் அவரது மனைவியையும் கொல்கிறான்!fyeo1

COLONEL HAVELOCK இங்கிலாந்தின் உளவுப் பிரிவான MI-6ன் தலைவர் Mன் நெருங்கிய நண்பர்! ஆகையால் தனது நண்பரின் மரணத்திற்குப் பழி வாங்கவும் அவரது ஒரே மகளான JUDY-ஐப் பாதுகாக்கவும் VON HAMMERSTEIN-ஐக் கொல்லுமாறு 007-ஐப் பணிக்கிறார்! இப்பணி குறித்து வேறு எவருக்கும் தெரியாத வண்ணம் FOR YOUR EYES ONLY என்று பரம இரகசியமாக வைக்கப்படுகிறது! மனதில் சஞ்சலத்துடன் 007 இப்பணியை மேற்கொள்கிறார்!

fyeo2மிகச் சிரத்தையாகத் திட்டமிட்டு VON HAMMERSTEIN-ஐ நெருங்கும் 007 சற்றும் எதிர்பாரா வண்ணம் தனது பெற்றோரின் மரணத்திற்குப் பழி வாங்க அங்கு வந்து சேர்கிறாள் JUDY! 007-ம் JUDY-ம் இனைந்து எவ்வாறு எதிரிகளைப் பழி தீர்க்கிறார்கள் என்பதே கதை! இதில் சஸ்பென்ஸ் நிறைந்த பல கட்டங்களை இயன் ஃப்ளெமிங் தனது வார்த்தை ஜாலத்தால் விவரித்திருப்பார்! ஃப்ளெமிங்-ன் வரிகள் பலவற்றை உள்ளது உள்ளபடியே காமிக்ஸ் கதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர் ஹென்றி காம்மிட்ஜ்! ஜான் மெக்லுஸ்கியின் ஓவியங்கள் கதைக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன!

ராணி காமிக்ஸ் # 117 – வேட்டைக்காரி:

தமிழில் இக்கதையை ஆசிரியர் திரு.அ.மா.சாமி அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டார்! கதையின் தன்மை வழக்கமான ராணி ஸ்டைலில் DILUTE செய்யபட்டு வசனங்களின் தரமும் சாமாணியருக்கும் பாமருருக்கும் புரியும் வகையில் மாற்றியமைக்கப் பட்டது! பெயர்களும் தமிழர்களின் வாயில் நுழையும் அளவுக்கு எளிமையாக்கப்பட்டன! உதாரணம் உங்கள் பார்வைக்கு!

Rani Comics # 117 - VettaikkaariRani Comics # 117 - Vettaikkaari - Intro

JUDY HAVELOCK என்ற பெயர் சிம்பிளாக ரீட்டா வில்சன் என்று மாற்றையமைக்கப் பட்டுள்ளது! VON HAMMERSTEIN என்ற வில்லனும் அவனது அடியாளான GONZALES-ம் கதையில் மேஜர் நிக்சன் என்ற ஒரே பெயரில் வலம் வருகிறார்கள்! கதையின் மூலத்திலிருந்தும் பல மாறுதல்களைக் காணலாம்! இறந்து போன HAVELOCK தம்பதியினரை M-க்கு நெருங்கிய நண்பர்களாச் சித்திரக்கப் படவில்லை! ஆகையால் இது வழக்கமாக 007 -க்கு வழங்கப்படும் பணி போல ஆகிவிடுகிறது! கனடாவுக்குள் 007 திருட்டுத்தனமாக நுழையும் கட்டங்களில் உள்ள சஸ்பென்ஸ் மொழிபெயர்ப்பில் புஸ்ஸாகி விடுகிறது! நொடிக்கொரு தரம் கதையின் தலைப்பை நமக்கு நினைவூட்டுகின்றன வசனங்கள்! சாம்பிள்கள் சில இதோ உங்கள் பார்வைக்கு!

வேட்டைக்காரன்! புலி உறுமுது! புலி உறுமுது! வேட்டைக்காரி! என் உச்சி மண்டை சுர்ருங்குது!
வேட்டைக்காரன்! “புலி உறுமுது!புலி உறுமுது!
வேட்டைக்காரன் வர்றத பாத்து!”
வேட்டைக்காரி! “என் உச்சி மண்டைல சுர்ருங்குது!”
உனக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா!
“உனக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா! வேற… வேற… வேற… வேட்டைக்காரன் தாண்டா வேணும்!”

காமிக்ஸ் குத்து!

நெடுநாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை உங்களை இந்தப் பகுதியில் சந்திப்பது குறித்து மகிழ்ச்சி! கதையிலிருந்து சில பளிச் வசனங்கள் உங்கள் பார்வைக்கு!

காமிக்ஸ் குத்து - 1!காமிக்ஸ் குத்து - 2!காமிக்ஸ் குத்து - 3! 

DIAMOND COMICS:

இக்கதையை DIAMOND COMICS நிறுவனத்தினர் ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்! கண்கவரும் வண்ணங்களில் தரமான தாளில் சிறப்பாக அச்சிடப்பட்டிருப்பதால் இதைப் படிப்பது ஒரு சுகானுபவம்!

Diamond Comics # DE-1263 - 007 James Bond - For Your Eyes Only Diamond Comics # DE-1263 - 007 James Bond - For Your Eyes Only - Inner

DIAMOND COMICS அதிகாரப்பூர்வ வலைத்தளம்:

TITAN BOOKS மறுபதிப்பு:

007 ஜேம்ஸ்பாண்ட் செய்தித்தாள் சித்திரக்கதைத் தொடரை TITAN BOOKS நிறுவனத்தினர் ஆரம்பத்திலிருந்து மறுபதிப்பு செய்து வருகின்றனர்! தாறுமாறான விலையும், கதைக்கு கதை வேறுபடும் அச்சுத்தரமும் (சூப்பரிலிருந்து சொதப்பல் வரை – சில கதைகள் நமது ராணி காமிக்ஸ் அச்சுத்தரமே மேல்!) தடைக்கற்களாக அமைந்தாலும் தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு தவிர்க்க முடியாததொரு விருந்து இது!

Titan Books - James Bond 007 - Goldfingerbook_tb_BondOmnibus001

சமீபத்தில் THE JAMES BOND OMNIBUS என்ற பெயரில் மலிவுப் பதிப்பாக முதல் மூன்று புத்தகங்களில் வெளிவந்த கதைகளை ஒரே புத்தகமாக TITAN BOOKS வெளியிட்டுள்ளனர்! தனிப் புத்தகங்கள் வாங்க யோசிப்போர் இதனை கண்டிப்பாக வாங்கலாம்! இதில் வேட்டைக்காரி தவிர நாம் தமிழில் படித்து மகிழ்ந்த பல சிறந்த கதைகளும் உள்ளன! DON’T MISS IT! புத்தகத்தை வாங்க கீழ்காணும் சுட்டியை பயன்படுத்தவும்!

பிற மொழி காமிக்ஸ் அட்டைப்படங்கள்:

பிற மொழிகளில் வந்த FOR YOUR EYES ONLY காமிக்ஸ் அட்டைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு!

1986_4Daily Express Strip_FYEO_title Rani Comics Vettaikkari Chile03_coverDaily Express Strip_FYEO_title Rani Comics Vettaikkari Denmark08_1966_ForYourEyesOnlyDaily Express Strip_FYEO_title Rani Comics Vettaikkari Denmark_movie_cover

Daily Express Strip_FYEO_title Rani Comics Vettaikkari jamesbond_annual82Daily Express Strip_FYEO_title Rani Comics Vettaikkari Sweden1974_2_coverDaily Express Strip_FYEO_title Rani Comics Vettaikkari Diamond_1981_FYEO

மேலும் பல 007 ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் அட்டைப்படங்களைக் கண்டு களிக்க கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்:

Rani Comics # 077 - Bodhai MarundhuFOR YOUR EYES ONLY திரைப்படம்:

1981-ம் ஆண்டு FOR YOUR EYES ONLY சிறுகதைத் தொகுப்பைத் தழுவி அதே பெயரில் சூப்பர் ஸ்டார் ரோஜர் மூர் நடிப்பில் திரைப்படம் வெளிவந்தது! இத்திரைப்படம் FOR YOUR EYES ONLY மற்றும் RISICO என்ற இரு சிறுகதைகளை மூலமாகக் கொண்டு கதையமைக்கப்பட்டது! RISICO தமிழில் ராணி காமிக்ஸ் # 077 - போதை மருந்து! என்று வெளிவந்தது! இக்கதை குறித்து பின்னொரு பதிவில் விரிவாகக் காண்போம்! திரைப்படத்தைப் பொறுத்த வரையில் ரோஜர் மூர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள்-ல் இது சிறந்தது எனக் கூறலாம்! இதற்கு முந்தைய படங்களின் சாயலிலிருந்து முற்றிலுமாக விலகி ஒரிஜினல் கதைகளின் தண்மை மாறாமல் படமாக்கப்பட்ட விதம் பாராட்டுக்குரியது! இருப்பினும் வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் சமாச்சாரங்கள் எதுவும் குறையாமல் இருப்பது சிறப்பு! இத்திரைப்படம் குறித்த மேல்விவரங்களுக்குக் கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்:

FOR YOUR EYES ONLY திரைப்பட போஸ்டர்கள்:

திரைப்படத்தின் அற்புத போஸ்டர்கள் சில உங்கள் பார்வைக்கு! ரோஜர் மூர்-ன் க்ளாஸிக் ஆக்ஷ்ன் போஸ்கள் இன்றும் அசத்துகிறது!

for-your-eyes-only-artwork japanfor_your_eyes_onlyfor-your-eyes-only

மேலும் பல 007 ஜேம்ஸ்பாண்ட் திரைப்படப் போஸ்டர்களைக் காண கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்:

திரைப்படத்தின் காமிக்ஸ் வடிவம்:

மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தினர் படம் வெளிவந்த போது அதனை காமிக்ஸ் வடிவில் வெளியிட்டனர்! சூப்பர் ஹீரோக்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளேயே பல வருடங்களாகக் குண்டுச் சட்டியில் குதிரையோட்டும் அமெரிக்க காமிக்ஸ்களில் 007 ஜேம்ஸ்பாண்ட் கால்பதித்த வெகுசில தருணங்களில் இதுவும் ஒன்று!

for your eyes only comic covers art james bond

இந்த காமிக்ஸ் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்:

பி.கு.:

ராணி காமிக்ஸ் வேட்டைக்காரிக்கும் இளைய தளபதி டாக்டர் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்! என்னதான் அ.மா.சாமி தனது மொழிபெயர்ப்பால் கதையை நாசம் செய்திருந்தாலும் அது கண்டிப்பாக இளைய தளபதி டாக்டர் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை விட பல்லாயிரம் மடங்கு தேவலாம் என்பதால் ஏற்கெனவே படம் பார்த்தவர்கள் இந்தப் பதிவைப் படித்து மனதைத் தேற்றிக் கொள்ளவும்! இனிமேலும் திரைப்படத்திற்கு போக எண்ணி தற்கொலைக்கு முயற்சிக்கும் வாழ்க்கையில் விரக்தியடைந்தோர் தங்களின் பொன்னான நேரத்தையும், பணத்தையும், உயிரையும் விரயம் செய்யாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு கீழ்காணும் மூன்று செயல்களில் ஏதேனும் ஒன்றில் இறங்கி மனம் மகிழுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்!

சமூக நலன் கருதி இந்த செய்தி வெளியிடப் படுகிறது!

தொடர்புடைய இடுகைகள்:

ஒரிஜினல் வேட்டைக்காரன் திரைவிமர்சனம்:

முந்தைய 007 ஜேம்ஸ்பாண்ட் பதிவு:

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!