வணக்கம், சமீபத்தில் சிலபல இந்தி(ய) காமிக்ஸ் வலைத்தளங்களில் கண்ட ஒரு துக்ககரமான செய்தியே இப்பதிவை நான் இட காரணம்! கடந்த 09-12-2009 அன்று பிரபல இந்திய காமிக்ஸ் ஓவியர் திரு.கோவிந்த் பிரம்மாணியா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்!
இவர் பிரபல இந்திரஜால் காமிக்ஸ் கதாநாயகனான பஹதூர் கதைகளின் ஓவியர் ஆவார்! பஹதூர் கதைகளை நாமெல்லாம் ரசித்திருந்தாலும் கூட நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான இன்னொரு காமிக்ஸ் கதாபாத்திரத்தின் ஓவியராகவும் இவர் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
அவர் வேறு யாரும் அல்ல நமக்கெல்லாம் ராணி காமிக்ஸ் மூலம் அறிமுகமான மன்னர் பீமா தான் அவர்!
அண்ணாரது நினைவாக இத்தருணத்தில் மன்னர் பீமா குறித்த சில தகவல்களை உங்களுடன் பரிமாறிக் கொள்கிறேன்!
மன்னர் பீமா:
அபித் சுர்த்தி, கோவிந்த் பிரம்மாணியா என பஹதூர்-ஐ உருவாக்கிய அதே வெற்றிக் கூட்டணிதான் மன்னர் பீமாவையும் உருவாக்கினர்! ஆரம்பத்தில் மன்னர் பீமா கதைகள் செய்தித்தாள்களில் சித்திரக்கதைத் தொடராக வெளிவந்தன! பின்னர் காமிக்ஸ் வடிவில் வெளிவந்தன!
மன்னர் பீமா கதைகளை ஆங்கிலத்தில் SPACE AGE COMICS வெளியிட்டுள்ளனர்! ஹிந்தியில் மதுமுஸ்கான் காமிக்ஸ் வெளியிட்டுள்ளனர்! தமிழில் முத்து காமிக்ஸ் வார மலர்-லும், ராணி காமிக்ஸ்-லும் வந்தது!
முதல் கதை:
இதுதான் மன்னர் பீமா கதை வரிசையில் முதல் கதையாகும்! இக்கதை முத்து காமிக்ஸ் வார மலர்-ல் வனராஜா யார்? என்ற பெயரில வெளிவந்தது! இதில் அவரது வீர பராக்கிரமங்கள் நமக்கு அறிமுகப் படுத்தப்படுகின்றன! கிட்டத்தட்ட வேதாளர்-ஐ நினைவு படுத்தினாலும் கூட கதையில் காணப்படும் மண்ணின் மணம் நம்மை கவரவே செய்கிறது!
ஹிந்தியில் வெளிவந்த மன்னர் பீமா காமிக்ஸ் தரவிறக்கம் செய்ய கீழ்காணும் சுட்டியை பயன்படுத்தவும்! அகர் ஆப்கோ ஹிந்தி மாலூம் ஹை தோ கஹானி பட்கர் மஜா உட்டாயியே!
முத்து காமிக்ஸ் வார மலர்:
மன்னர் பீமா தமிழில் முதன்முதலாக முத்து காமிக்ஸ் வார மலர்-ல் தான் அறிமுகமானார்! முல்லை தங்கராசன்-ன் மேற்பார்வையில் வெளிவந்த முத்து காமிக்ஸ் வார மலர்-ன் முதல் இதழில் (14-11-1982) மன்னர் பீமாவும் இடம்பெற்றிருந்தார்!
கதை செய்தித்தாள்களில் வெளிவந்த அதே SUNDAY STRIP வடிவில் வெளிவந்திருப்பது சிறப்பு! வண்ண அச்சு மேலும் மெருகூட்டுகிறது! மொத்தம் 17 இதழ்களுக்கு கதை தொடர்ந்தது!
இரண்டாவது கதை 18வது இதழ் (17,24-04-1983) முதல் தொடங்கியது! 5 இதழ்களுக்கு மட்டுமே கதை வெளிவந்தது! கருப்பு வெள்ளை மட்டுமே! முத்து காமிக்ஸ் வார மலர் 22 இதழ்களோடு (19-02-1984) நின்று விட்டதால் இக்கதை பாதியிலேயே நின்று விட்டது!
முத்து காமிக்ஸ் வார மலர் பற்றி மேலும் அறிந்து கொள்ள முத்து விசிறியின் முத்தான பதிவைப் படிக்கவும்!
ராணி காமிக்ஸ்:
ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்கள் அறிமுகப்படுத்திய அற்புத கதாநாயகர்களின் இந்திய வரிசையில் மன்னர் பீமாவும் அடங்குவார்! மொத்தம் நான்கு கதைகள் வெளிவந்தன! அவற்றில் 3 ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்களின் மேற்பார்வையில் வெளிவந்தன!
| # | கதை | தேதி | குறிப்பு |
| 033 | நரபலி! | 01-11-1985 | |
| 038 | ஏழாவது குகை! | 15-01-1986 | பொங்கல் மலர் கொள்ளைக் கூட்டம்! இரண்டாவது கதை |
| 079 | பறக்கும் மனிதன்! | 01-10-1987 | தொடரும் அபாயம்! இரண்டாவது கதை |
| 114 | மண்டை ஓட்டு மர்மம்! | 16-03-1989 |
தமிழ் கலாச்சாரத்தைத் தழுவும் வகையில் கதையின் சூழலை ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்கள் எவ்வாறு அற்புதமாக மாற்றியமைத்துள்ளார் என்று கூர்ந்து கவனி்த்தால் அவரது மேதைமை நமக்கு விளங்கும்!
இவற்றில் கடைசி கதையான ராணி காமிக்ஸ் # 114 - மண்டை ஓட்டு மர்மம் வெளிவந்த போது திரு.அ.ம.சாமி அவர்கள் ராணி காமிக்ஸ் ஆசிரியராக பொறுப்பு வகித்தார் என்பதை நான் சொல்லாமலே நீங்களாகவே முதல் கட்டத்தைப் படித்தவுடனேயே புரிந்து கொண்டிருப்பீர்கள்!
கண்ணீர் அஞ்சலி:
பஹதூர், மன்னர் பீமா என்ற காலத்திலழியா காமிக்ஸ் கதாபாத்திரங்களை நமக்களித்த அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய தமிழ் காமிக்ஸ் உலகின் சார்பாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!
![]() |
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:
அமரர் கோவிந்த் பிரம்மாணியாவுக்கு காமிக்ஸ் வலைஞர்களின் கண்ணீர் அஞ்சலிகள் சில:
- http://www.facebook.com/pages/CHITRAKATHA-Indian-Comics-Beyond-Balloons-and-Panels/153893846552
- http://indiacomic.blogspot.com/2009/12/great-indian-comics-artist-govind.html
- http://skipcomics.blogspot.com/2009/12/govind-bramania-02-03-1938-09-12-2009.html
- http://comic-guy.blogspot.com/2009/12/first-hero.html
- http://theskullcavetreasures.blogspot.com/2009/12/obituary.html
- http://gesturegraphics.wordpress.com/2009/12/10/remembering-the-creator-of-first-indian-comic-hero-bahadur/
முத்து காமிக்ஸ் வாரமலர் குறித்து முத்து விசிறியின் முத்தான பதிவு:
படங்கள் உபயம்:
- CHITRAKATHA: Indian Comics Beyond Balloons and Panels is on Facebook
- http://indiacomic.blogspot.com/
- http://comic-guy.blogspot.com/
- http://tamilcomicsulagam.blogspot.com/
- http://muthucomics.com/
- http://ayyampalayam.blogspot.com/
DISCLAIMER:
பதிவுக்கும் கீழ்காணும் சுட்டியில் உள்ள தமிழ் திரைப்படத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று இங்கு தெரிவித்துக் கொள்ள நான் கடமைப் பட்டிருக்கிறேன்!














