Sunday, October 4, 2009

வேட்டைக்காரன் – திரை விமர்சனம்!

புளி வியாபாரி : “கொட்டை எடுத்தது வேணுங்களா?
கொட்டை எடுக்காதது வேணுங்களா?”
கவுண்டமணி : “ஓ! அத வேற எடுத்துட்டீங்களா?"
    -படம்: தாலாட்டு கேட்குதம்மா

வணக்கம்,

1964-ம் வருடம் பொங்கல் அன்று தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில், கே.வி.மஹாதேவன் இசையில் எம்.ஜி.ஆர், நம்பியார், சாவித்ரி, எம்.ஆர்.ராதா, அசோகன், நாகேஷ், ஒரு குழந்தை (பேபி ஷகிலா-ஆண் வேடத்தில்) மற்றும் ஒரு சிறுத்தை ஆகியோரது நடிப்பில் வெளிவந்து பெருவெற்றி பெற்ற வேட்டைக்காரன் திரைப்படத்தைப் பற்றி கல்கி வார இதழில் வெளியான திரை விமர்சனம், இதோ உங்கள் பார்வைக்கு!

எம்.ஜி.ஆர் இதில் கெள-பாய் வேடத்தில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது! விமர்சனத்தில் கட்டிப்பிடிக்கும் காதல் காட்சிகளை கண்டித்திருப்பதை கவனிக்கவும்!

பெயர் குறிப்பிடப்படவில்லையெனினும் வழக்கமாக அந்த காலத்திலெல்லாம் கல்கியில் காந்தன் என்பவர்தான் விமர்சனம் எழுதுவார்! இதுவும் அவர் எழுதியதாகத்தான் இருக்கக் கூடும்!

வெகுமதி:

கல்கியில் காந்தன் திரைவிமர்சனம் செய்யாத போது நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஒருவர் அந்த பணிகளை செய்வதுண்டு! அவர் யார் என சரியாக யூகிப்பவர்களுக்கு பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயமுண்டு!

Vettaikaran

பி.கு.:

  • இளைய(?!!) தளபதி(?!!) மருத்துவர்(?!!) விசய்(?!!) நடித்து(?!!) தீபாவளிக்கோ(?!!), பொங்கலுக்கோ(?!!) வெளிவரவிருக்கும் இதே பெயர் கொண்டதொரு படத்தைப் பார்த்து அதை விமர்சனம் வேறு செய்து சொந்த செலவிலே சூனியம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அகிலமே அஞ்சி நடுங்கும் அ.கொ.தீ.க. தலைவர் ஒன்றும் அடிமடையரல்ல!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

34 comments:

  1. சீதா ரவி அப்ப எழுத வரவே இல்லை நண்பரே

    ReplyDelete
  2. சூப்பருங்ணா,

    படத்தின் உன்னை அறிந்தால் பாடல் பற்றிக் குறிப்பிடாத காந்தன் வேஸ்டுங்ணா.

    காதல் காட்சிக்கு கத்திரி வைக்கச் சொல்லி காந்தன் சென்ஸாரை மொத்தியது அவரின் பிரம்மச்சரிய கடுப்பைக் காட்டுதுங்ணா.

    எந்த வேட்டைக்காரன் வந்தாலும் இந்த வேட்டைக்காரனை அடிக்க முடியாதுங்ணா.

    சிறுத்தை வேடத்தில் நடித்தவர் பெயர் சீறும் சிறுத்தை ஜோஸ்ங்ணா.

    காந்தன் இடத்தில் அமர்பவர் வாண்டு மாமா தானுங்ணா. தப்புன்னா மன்னிச்சிடுங்ணா!

    குறும்பிற்கு மறுபெயர் தலைவர் என்று நிரூபிக்கும் பதிவுங்ணா.

    தந்தன தந்தன தந்தன தந்தனங்ணா!

    ReplyDelete
  3. கௌபாய் கதைகள் எந்த மொழியில் வந்தாலும் ஊக்குவிக்கும் பயங்கர வாதியே...,

    கௌகேர்ள் கொங்குநாட்டுத் தங்கத்திற்கும் விமர்சனம் எழுதுங்கள்

    அதுவும் தேவரின் தயாரிப்பு என்றே நினைக்கிறேன்

    ReplyDelete
  4. ஈவ் டீசிங் செய்து கொண்டு எம்.ஜி.யார் பாடும் பாடல் எந்த தளத்திலாவது யாராவது பார்த்திருக்கிறீர்களா...,

    குதிரையில் போய் கொண்டே எம்.ஜி.ஆர் பாடுவார்.

    ஹரிதாஸ் படத்தில் கூட துவக்கக் காட்சியில் தியாகராஜ பாகவதர் குதிரையில் போய் கொண்டே பாடிக்கொண்டே பல பெண்களை விரட்டுவார்

    ReplyDelete
  5. கட்டிப் பிடிப்பதை கண்டித்துவிட்டு பாதிப் பக்கத்திற்கு மேல் அந்தப் படம்தான் போல..,

    ReplyDelete
  6. நான் கூட என்னடா இது படம் இன்னமும் ட்ரெய்லர் கூட வரலையே என்று சந்தேகத்தோட வந்து பார்த்தேன். ஒருவேளை வில்லு பாட்டு நெட்டில் லீக் ஆனது போல ஏதாவது நடந்து விட்டதோ என்று கூட நினைத்தேன்.

    ஆனாலும் தலைவர் தலைவர் தான்.

    தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  7. //பி.கு.:

    இளைய(?!!) தளபதி(?!!) மருத்துவர்(?!!) விசய்(?!!) நடித்து(?!!) தீபாவளிக்கோ(?!!), பொங்கலுக்கோ(?!!) வெளிவரவிருக்கும் இதே பெயர் கொண்டதொரு படத்தைப் பார்த்து அதை விமர்சனம் வேறு செய்து சொந்த செலவிலே சூனியம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அகிலமே அஞ்சி நடுங்கும் அ.கொ.தீ.க. தலைவர் ஒன்றும் அடிமடையரல்ல//

    இந்த பதிவிலேயே அட்டகாசமான பகுதி இந்த பின்குறிப்பு தான். சூப்பர் தலைவா.

    தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  8. தலைவரே,

    நம்ம புரட்சி தலைவர் கவ்பாய் ஆக நடித்து இன்னும் ஒரு படம் கூட வந்து உள்ளது என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை.

    அதனை பற்றி கூற இயலுமா? என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இயலுமா?

    தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  9. //புளி வியாபாரி : “கொட்டை எடுத்தது வேணுங்களா?
    கொட்டை எடுக்காதது வேணுங்களா?”
    கவுண்டமணி : “ஓ! அத வேற எடுத்துட்டீங்களா?" //


    'dog'tor விஜய் நடித்து வெளிவரவிருக்கும் வேட்டைகாரன் படத்துக்கும் மேற்கண்ட டயாலாக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை 'dog'tor அப்பா, சந்திரசேகர் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete
  10. மருத்துவர் பெரிய அய்யா விசய் அவர்களுக்கு நன்றி. இந்த தீபாவளிக்கு நிம்மதியாக இருக்கலாம். ஏனென்றால் அவர் படம் தீபாவளிக்கு வராதாம்.

    ஐய்யா ஜாலி, ஜாலி.

    ReplyDelete
  11. கனவுகளின் காதலரே,

    //காந்தன் இடத்தில் அமர்பவர் வாண்டு மாமா தானுங்ணா. தப்புன்னா மன்னிச்சிடுங்ணா!//

    சரியான விடை கூறி அசத்தி விட்டீர்கள் போங்கள்! பிடியுங்கள் பாராடுக்களை!

    அண்ணன் SUREஷ் அவர்களே,

    //கௌகேர்ள் கொங்குநாட்டுத் தங்கத்திற்கும் விமர்சனம் எழுதுங்கள்//

    அந்த படத்தை இன்னும் நான் பார்த்ததில்லை! பட விவரங்கள் (நாயகன், நாயகி, இயக்குனர்) குறித்து ஏதேனும் குறிப்பிட்டால் DVD வேட்டையாட வசதியாக இருக்கும்

    ஜாலி ஜம்பர் அவர்களே,

    //நம்ம புரட்சி தலைவர் கவ்பாய் ஆக நடித்து இன்னும் ஒரு படம் கூட வந்து உள்ளது என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. அதனை பற்றி கூற இயலுமா? என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இயலுமா? //

    என்ன படம் என்று தெரியவில்லை! அண்ணன் SUREஷ் இடம் விசாரிக்கிறேன்! புரட்சி தலைவர் விஷயங்களில் அவர் என்னை விட பல மடங்கு சீனியர்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  12. எங்கள் இளைய தளபதியை கிண்டல் செய்ததை கண்டித்து உன்னைப் போல் ஒருவன் படத்தையும், இந்த பதிவையும் என்பத்தி மூணு கோடி விஜய் ரசிகர்கள் சார்பில் புறக்கணிக்கிறேன்.

    ReplyDelete
  13. மக்களே!

    உங்களுக்கு தமிழில் வெளிவந்த கெள-பாய், ஜேம்ஸ்பாண்ட் படங்கள் இஷ்டமா? ஆமெனில் அ.கொ.தீ.க வில் தொடர்ந்து இது போன்ற செய்திகள், விமர்சனங்கள் வெளியிடலாம்! உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  14. தலைவர் அவர்களே,

    தொடர்ந்து தமிழ் மாட்டுப் பெண், சேம்சு பாண்டு மற்றும் மாயஜாலப் படங்கள் குறித்து பதிவுகள் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. baby sakilana ippa irukira periya sakilava!


    hi hi hi ellam oru arvamthan

    ReplyDelete
  16. நான் ஏமாறலையே :). இந்த மாதிரி எதாவது ஒரு வேலையாத்தான் இருக்கும்னு என் சிற்றறிவுக்கு எட்டுச்சு

    ReplyDelete
  17. //இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.//

    இந்த கருத்தை நீங்களும் கடைபிடிக்குமாறு கேட்டுகொள்கிறோம்!!!

    ReplyDelete
  18. நண்பரே,

    அருமை. நல்லதொரு ஆரம்பம். அமர்க்களமான ஸ்கான்.

    எனக்கும் சரியாக தெரியவில்லை எனினும் யூகித்து தான் சொல்கிறேன்: இந்த விமர்சனத்தை எழுதியவர் கவ்சிகன் என்ற பெயரில் எழுதிய (எட்டு வருடங்கள் கழித்து வாண்டுமாமாவாக அவதரித்த) நம்முடைய தமிழ் காமிக்ஸ் பிதாமகர் தான்.

    வழமையாக காந்தன் எழுதும் விமர்சனகளுக்கும் இவர் எழுதும் விமர்சனங்களுக்கும் ஒரு வேற்றுமை இருக்கும். காந்தன் இந்த அளவுக்கு ஹார்ட் ஹிட்டிங் ஆக தாக்க மாட்டார். அவருடைய விமர்சனங்கள் தற்போதைய ஹிந்து விமர்சனம் போல சாப்ட் ஆக மட்டுமே இருக்கும். ஆனால் கவ்சிகன் அவருடைய விமர்சனங்கள் டைரெக்ட் ஆக போட்டு தாக்கி விடும். அவர் ஒரு படத்தை பார்த்து விட்டு மனதில் என்ன தோன்றுகிறதோ அதனையே விமர்சனமாக எழுதுவார். அதனால் தான் இது அவருடைய விமர்சனமாக இருக்கும் என்று யூகிக்கிறேன், தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு.

    அதனைப் போலவே இந்த விமர்சனத்தில் பெயர் இருக்காமல் இருக்கவும் அது தான் காரணம். அந்த காலகட்டத்தில் காந்தன் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள தெலுகு படங்களை எல்லாம் பார்த்து தள்ளி விட்டார். அதனால் அவர் இல்லாத தருணத்தில் கவ்சிகன் எழுதும்போது ஆரம்பத்தில் பெயர் போடாமல் இருந்தனர். (கவ்சிகன் கல்கியில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகளில் வந்த விமர்சனம் இது). இந்த கால கட்டத்தில் காந்தன் நாடக விமர்சனம் கூட எழுதி இருப்பார். கவிசிகன் பெயர் 1966 முதல் தான் பிரபலம் அடைய ஆரம்பித்தது.

    ReplyDelete
  19. என்னுடைய கருத்துக்கள் எல்லாமே நான் படித்த விமர்சனங்களை மைய்யமாக வைத்து யூகித்தது கூறப்பட்டது. அதனால் அதனையே அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு. இவை எல்லாம் நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்தவை என்பதை மனதில் கொள்ளவும்.

    ReplyDelete
  20. காமிக்ஸ் காதலரே,

    எனக்கும் இது குறித்து சரியான தகவல்கள் தெரியாது! இருப்பினும் தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    இயந்திரசாமி பதிவு எங்கே?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  21. பின் குறிப்பு , அப்புறம் உங்க நேர்மை ரொம்ப புடிச்சி இருக்குங்க .

    ReplyDelete
  22. ANNO ANNO NENGA PERIYA ALUNGNA ... ANNO NEENGALUM ITHU MADHIRITHAN IRUPPINGLA NA .. VELIYA ONNU ULLA ONNU ..
    YENNA INTHA MADHIRI VIJAY RASIGARGALA YEAMATHRINGA

    ReplyDelete
  23. excellent. this new kind of posting is more interesting. continue.

    ReplyDelete
  24. it kind of puts us (the comic lovers) to receive this kind of reception for the post. when you have put so much of effort on the regular comics post and it receives lukewarm support only.

    here you have put one scan and thats it. it has become popular. i dont get the point.

    this is how the system is.

    ReplyDelete
  25. //நம்ம புரட்சி தலைவர் கவ்பாய் ஆக நடித்து இன்னும் ஒரு படம் கூட வந்து உள்ளது//

    அவர் நடித்த பட படங்களில் குதிரை வீரர்தான்

    ReplyDelete
  26. //உங்களுக்கு கெள-பாய் படங்கள் இஷ்டமா? ஆமெனில் அ.கொ.தீ.க வில் தொடர்ந்து இது போன்ற செய்திகள், விமர்சனங்கள் வெளியிடலாம்!//

    தலைவரே,

    கரும்பு தின்ன அனுமதியா? நடத்துங்கள்.

    ReplyDelete
  27. நானும் நண்பர்களிடம் பேசி விசாரித்தேன். இந்த மேட்டர் (காந்தன், கவ்சிகன்).

    இது அனேகமாக கவ்சிகன் அவர்கள் எழுதிய விமர்சனமாகவே இருக்கும்.

    ReplyDelete
  28. இந்த வேட்டைக்கரனை மருத்துவர் விஜய் நடித்த வேட்டைக் காரன் படம் ரிலீஸ் ஆகும் நாளில் மறுபடியும் ரிலீஸ் செய்தால் புரட்சித் தலைவர் படம் தான் ஹிட் ஆகும்.

    ReplyDelete
  29. //உங்களுக்கு கெள-பாய் படங்கள் இஷ்டமா? ஆமெனில் அ.கொ.தீ.க வில் தொடர்ந்து இது போன்ற செய்திகள், விமர்சனங்கள் வெளியிடலாம்!//

    சூப்பர். தொடரவும்.

    எங்க பாட்டன் சொத்து?

    ReplyDelete
  30. நீங்க எப்பவோ சொல்லிட்டீங்க

    நான் சரியாக இன்று வந்திருக்கேன் இங்கு.

    :)

    ReplyDelete
  31. பயங்கரவாதி அவர்களே,
    என்னுடைய படத்தை பற்றியா பேசுகிறீர்கள்?

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!