Showing posts with label ஆண்டு மலர். Show all posts
Showing posts with label ஆண்டு மலர். Show all posts

Wednesday, July 7, 2010

ஆண்டு மலர்!

வணக்கம்,

ஜூலை மாதம் வந்தாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது நமது அபிமான லயன் காமிக்ஸின் ஆண்டு மலரும் வழக்கமாக ஆண்டு மலரில் வரும் மாடஸ்டி கதைகளும் தான்! இந்த ஜூலையில் தனது 26வது பிறந்த நாளைக் கொண்டாடும் லயன் காமிக்ஸிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் அமைந்ததே இந்த சிறப்பு ஆண்டு மலர் பதிவு!

1984-ல் தொடங்கிய நமது அபிமான லயன் காமிக்ஸின் சகாப்தம் தற்போது பல முட்டுக்கட்டைகளைச் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி மென்மேலும் வளர இத்தருணத்தில் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம்! லயன் காமிக்ஸ் மூலம் நமக்கு தொடர்ந்து மகிழ்வூட்டி வரும் நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களையும் இத்தருணத்தில் பாராட்டுவோம்!

சுவாரசியமான துணுக்குகள்:

  • ஆண்டு மலர் என்றாலே நம் நினைவுக்கு வரும் மாடஸ்டி பிளைஸி இதுவரை மூன்றே மூன்று ஆண்டு மலர்களில் தான் சாகஸம் புரிந்துள்ளார் என்பது ஆச்சரியமளிக்கிறது! லயன் காமிக்ஸ் முதல் இதழில் தோன்றியது முதல் ஆஸ்தான நாயகியாக விளங்கும் மாடஸ்டியை நாம் லயன் காமிக்ஸின் ஆரம்ப காலத்தில் வந்த ஆண்டு மலர்களில் படித்து மகிழ்ந்த காரணத்தினாலோ என்னவோ ஆண்டு மலர் என்றாலே மாடஸ்டி என்கிற எண்ணம் நம் ஆழ்மனதில் வேரூன்றி விட்டதோ?!!
  • இதுவரை ஆண்டு மலரில் அதிகமாகத் தோன்றி சாகஸம் புரிந்தது வழக்கம் போல டெக்ஸ் வில்லர் தான்! அடுத்தபடியாக லக்கி லூக் அதிக சாகஸங்கள் புரிந்திருக்கிறார்!
  • 1985 முதல் வருடந்தவறாது வெளிவந்து கொண்டிருந்த ஆண்டு மலர் 2004-ல் தான் முதன் முதலாக வராமல் போனது! அதற்கு காரணம் மே 2004-ல் வந்த மெகா-ட்ரீம் ஸ்பெஷல் தான்!அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வரும் ரூ:100/- விலையிலான ஸ்பெஷல்கள் ஆண்டு மலர்களை கபளீகரம் செய்து விடுவது வழக்கமாகி விட்டது!
  • ஆண்டு மலரில் பல சமயங்களில் காணாமல் போய்விட்ட பழைய ஹீரோக்கள் திடீரென வந்து நம்மை திக்குமுக்காடச் செய்வர் (உதா: இரும்புக்கை நார்மன், ஆக்‌ஷன் ஹீரோ சைமன், இரகசிய ஏஜெண்ட் காரிகன், கேப்டன் பிரின்ஸ்...)!

பட்டியல்:

இது வரை வெளிவந்த லயன் காமிக்ஸ் ஆண்டு மலர்களின் பட்டியல் இதோ! விளம்பரப்படுத்தப்பட்டு வெளிவராத ஆண்டு மலர்களும், ஜூலை மாதம் வந்திட்ட பிற இதழ்களும் இதில் அடக்கம்!

ஆண்டு மலர் வருடம் TITLE Issue # விலை குறிப்புகள்
0 1984 கத்தி முனையில் மாடஸ்டி பிளைஸி 001 ரூ:2/- இங்கு தான் எல்லாம் ஆரம்பித்தது!
1 1985 சைத்தான் விஞ்ஞானி! + குதிரை வீரன் ஆர்ச்சி! 015 ரூ:3/- ஸ்பைடர் + ஆர்ச்சி = மாபெரும் வெற்றி!
2 1986 பவளச்சிலை மர்மம்! 027 ரூ:3/- டெக்ஸ் வில்லரின் சாகஸங்களில் இது தலையானது!
3 1987 அதிரடிப் படை! 039 ரூ:3/- அற்புதமான கதைத் தொடர்! அருமையான ஓவியங்கள்! இத்தொடர் குறித்து விரைவில் பதிவிடுகிறேன்!
4 1988 கானகத்தில் கண்ணாமூச்சி! 052 ரூ:2.50/- மாடஸ்டி + போனஸ் ஆக்‌ஷன் கதை! சூப்பர் கதையை எப்படி சொதப்புவதென்று வயிரக்கண் பாம்பு கூறும்!
5 1989 நடுக்கடலில் அடிமைகள்! 062 ரூ:3/- மாடஸ்டி + போனஸ் டெக்ஸ் வில்லர் (?!!) சிறுகதை!
6 1990 எமனுடன் ஒரு யுத்தம்! 070 ரூ:3/- டெக்ஸ் வில்லர் குழுவின் ஆக்‌ஷன் அதிரடி! 3வது பக்கத்திலேயே ‘டுமீல்!’ சத்தம் தொடங்கிவிடும்! கதை முடியும் வரை ஓயாது!
7 1991 மர்ம முகமூடி! 077 ரூ:3/- இரகசிய ஏஜெண்ட் காரிகன் சாகஸம்!
8 1992 மின்னலோடு ஒரு மோதல்! 084 ரு:3/- ஆக்‌ஷன் ஹீரோ சைமன் சாகஸம்! இவர் குறித்து விரைவில் ஒரு முழு நீள பதிவிடுகிறேன்!
9 1993 கானகக் கோட்டை! 091 ரூ:3.50/- ரிப் கிர்பியின் அற்புத சாகஸம்!
10 1994 மந்திர மண்ணில் மாடஸ்டி! 102   மீண்டும் மாடஸ்டி!
11 1995 பூம்-பூம்-படலம்! 114 ரூ:5.50/- லக்கி லூக்கின் இருவண்ண சாகஸம்!
12 1996 இரத்தப் படலம்! 6 122 ரூ:7.50/- XIII-ன் கண்ணீர் காவியம்! எனக்கு மிகவும் பிடித்த பாகம்!
13 1997 மிஸ்டர் மஹாராஜா! 133 ரூ:5/- சிக்-பில், டெக்ஸ் என இரு சர்ப்ரைஸ் கதைகள்! நீண்ட இடைவெளிக்குப் பின் நான் மீண்டும் ரெகுலராக காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது இந்த இதழ் முதல்தான்!
14 1998 கானகத்தில் கலவரம்! 142 ரூ:7.50/- கேப்டன் பிரின்ஸ்-ன் கடைசி சாகஸச் சிறுகதை! லக்கி லூக்கின் இருவண்ண போனஸ் சாகஸமும் உண்டு!
15 1999 தலை வாங்கும் தேசம்! 151 ரூ:6/- ரொம்ப நாள் விளம்பரத்திற்குப் பின் வந்த சிக்-பில் குழுவினரின் முழு நீள காமெடி கலாட்டா!
16 2000 இரத்த பூமி! 162 ரூ:7/- வித்தியாசமான கெள-பாய் கதை! 
17 2001 மெக்ஸிகோ படலம்! 169 ரூ:10/- டெக்ஸ் வில்லரின் வழக்கமான அதிரடி ஆக்‌ஷன்!
18 2002 பயங்கரப் பயணிகள்! 173 ரூ:10/- மொக்கை டெக்ஸ் வில்லர் கதையின் சுமாரான முதல் பாகம்! லயன் காமிக்ஸின் மறுமலர்ச்சி காலத்தில் வந்திட்ட முதல் ஆண்டு மலர்!
19 2003 பரலோகத்திற்கொரு பாலம்! 181 ரூ:10/- லக்கி லூக்கின் முழு நீள வண்ண கார்ட்டூன்!
20 2004       ஆண்டு மலர் எதுவும் வெளியிடப்படவில்லை!
21 2005 கோட்-நேம் மின்னல்!   ரூ:10/- விளம்பரப்படுத்தப்பட்டது! ஆனால் வெளிவரவில்லை!
22 2006 சூ-மந்திரகாளி...! 196 ரூ:10/- லக்கி லூக்கின் முழு நீள வண்ண கார்ட்டூன்!
23 2007 காட்டேரிக் கானகம்!   ரூ:10/- மீண்டும் மாடஸ்டி! ஆண்டு மலர் என விளம்பரப்படுத்தப்பட்டது! ஆனால் மிகத் தாமதமாக நவம்பரில் தான் வந்தது! ஜூலையில் டெக்ஸ் வில்லர் (காலன் தீர்த்த கணக்கு..!) தான் தாமதமாக வந்தார்!
24 2008 மரணத்தின் முன்னோடி! 203 ரூ:10/- டெக்ஸ் வில்லர் சாகஸம்! ஜுலையில் வந்தாலும் ஆண்டு மலர் என குறிப்பிடவில்லை!
25 2009 மாண்டவன் மீண்டான்! 206 ரூ:10/- இரகசிய ஏஜெண்ட் காரிகன் மறுபிரவேசம்! 25வது ஆண்டு மலர்!  திடீரென வந்து திக்குமுக்காடச் செய்தது!
26 2010       இதுவரையில் எதுவும் வரவில்லை!

விளம்பரம்:

ஆண்டு மலர் என்றாலே நம் கண் முன் விரியும் காட்சி அநேகமாக இந்த விளம்பரமாகத் தான் இருக்க முடியும்! அப்படி நம் உள்மனதில் ஊறிவிட்ட அந்த விளம்பரத்தின் முதல் பிரதி இதோ உங்கள் பார்வைக்கு!

Annual Ad

அட்டைப்படங்கள்:

இதுவரை வெளிவந்த ஆண்டு மலர் அட்டைப்படங்களின் கண்கவர் அணிவகுப்பு இதோ! இதுவரை வெளிவராத, ஜூலையில் வந்த ஆனால் ஆண்டு மலர் என்ரு விளம்பரப்படுத்தப்படாத, ஆண்டு மலர் என்று அறிவித்து தாமதமாக வந்த கதைகளின் அட்டைப்படங்களும் அடக்கம்!

Lion Comics # 001 - Kathi Munaiyil Modesty BlaiseLion Comics # 001 - Kathi Munaiyil Modesty Blaise - BackLion Comics # 015 - Saithaan Vingnani!Lion Comics # 015 - Kudhirai Veeran Archie!

Lion Comics # 027 - Pavalachilai Marmam!Lion Comics # 027 - Pavalachilai Marmam! - BackLion Comics # 039 - Adhiradi Padai!Lion Comics # 039 - Adhiradi Padai! - Back

Lion Comics # 052 - Kaanakathil Kannamoochi!Lion Comics # 062 - Nadukkadalil Adimaigal!Lion Comics # 062 - Nadukkadalil Adimaigal! - BackLion Comics # 070 - Emanudan Oru Yudham!

Lion Comics # 077 - Marma Mugamoodi!Lion Comics # 084 - Minnalodu Oru Modhal!Lion Comics # 091 - Kaanaga Kottai!Lion Comics # 102 - Mandhira Mannil Modesty!

Lion Comics # 114 - Boom-Boom--Padalam!Lion Comics # 122 - Ratha Padalam! 6Lion Comics # 133 - Mr.MaharajaLion Comics # 133 - Mr.Maharaja - Back

Lion Comics # 142 - Kaanagathil Kalavaram!Lion Comics # 151 - Thalai Vaangum Dhesam!Lion Comics # 162 - Ratha Boomi!Lion Comics # 169 - Mexico Padalam!

Lion Comics # 173 - Bayangara Payanigal!Lion Comics # 181 - Paralogathirkoru Palam!Lion Comics - 21st Annual - Code Name Minnal! (Unpublished)Lion Comics # 196 - Choo- Mandhira Kaali...!

Lion Comics # 193 - Kaalan Theertha Kanakku..!Lion Comics # 201 - Katteri Kanagam!Lion Comics # 203 - Maranathin Munnodi...!Lion Comics # 206 - Maandavan Meendaan!

அட்டைப்படங்கள் உபயம்:

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:

மாடஸ்டி பிளைஸி குறித்து கிங் விஸ்வாவின் இடுகை:

கோட்-நேம் மின்னல் குறித்து கனவுகளின் காதலரின் இடுகை:

மாடஸ்தி குறித்து ஒலக காமிக்ஸ் ரசிகரின் இடுகை:

டெக்ஸ் வில்லர் குறித்து முத்து விசிறியின் முத்தான பதிவு:

Saturday, January 2, 2010

புத்தாண்டு சிறப்புப் பதிவு!

“லெஸ் டென்சன் மோர் வர்க்! மோர் வர்க் லெஸ் டென்சன்!”
-செந்தில் (படம்: ஜெண்டில்மேன்)
வணக்கம்,

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த புது வருடம் உங்களுக்கும் உங்கள் உற்றார் உறவினர் அனைவருக்கும் இனியதாக அமைய இறைவனை  பிரார்த்திக்கிறேன்! இந்தப் புத்தாண்டில் மேற்குறிப்பிட்டுள்ள வாசகத்தை அனைவரும் தாரக மந்திரமாக ஏற்று வாழ்வில் சிறப்புருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்!

பதிவுக்கு செல்லும் முன் ஒரு முக்கிய தகவல்!

நெடுநாட்களாகக் காணாமல் போயிருந்த இரு காமிக்ஸ் வலைஞர்கள் இன்று அதிரடியாகப் பதிவுலகுக்குத் திரும்பப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! அவர்கள் வேறு யாருமல்ல!

சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி மதிப்பிற்குரிய திரு.அய்யம்பாளையத்தார் அவர்களும், தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடிய மன்னராகியவரும், எனக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியுமாகிய கிங் விஸ்வா-வுமே ஆவர்!

கீழ்காணும் சுட்டிகளின் மூலம் இவர்களை மீண்டும் சந்திக்கலாம்!

ஒகே! மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்குப் போவோம்!

புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் எவ்வாறு நமது அபிமான காமிக்ஸ்கள் நம்மை குதூகலப் படுத்தின என்பதை ஒவ்வொரு வருடமாகக் காண்போம்!

1976:

முத்து காமிக்ஸ் # 046 – வைரஸ்-X பின்னட்டையில் 1976-ம் வருட காலண்டர் பிரசுரிக்கப் பட்டது! கடந்த 1975 ஆண்டு அக்டோபர் மாதத்தில் கர்ம வீரர் காமராஜர் மறைந்து விட்டபடியால் அவரது படமும் பிரசுரிக்கப்பட்டது!

Muthu Comics # 046 - Virus - XMuthu Comics # 046 - Virus - X - Calendar

வைரஸ்-X குறித்து முத்து விசிறி-யின் முத்தான பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

வைரஸ்-X ஆங்கில காமிக்ஸ் (AFI) டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

1977:

1977-ல் முத்து காமிக்ஸ்-ல் முதன்முறையாகப் புத்தாண்டு மலர் வெளியிடப்பட்டது! முத்து காமிக்ஸ் # 058 – முகமூடி வேதாளன் அட்டகாசமான சைஸில் இரு வண்ணங்களில் வெளிவந்தது ஜனவரி 1977-ல் வெளிவந்தது! வேதாளர் முத்து காமிக்ஸ்-ல் அறிமுகமானதும் இந்தக் கதை மூலம்தான்!

முத்து காமிக்ஸ்-ல் வெளிவந்த வேதாளர் கதைகள் குறித்து மிக நீண்ட ஆரய்ச்சிப் பதிவொன்றை அ.கொ.தீ.க.வில் விரைவில் எதிர்பாருங்கள்!

Muthu Comics # 057 - Kadalil Thoongiya Bootham - Mugamoodi Vedhalan - AdMuthu Comics # 058 - Mugamoodi Vedhalan

இவ்விதழுடன் புத்தாண்டு பரிசு வழங்கப் பட்டுள்ளது! அது என்ன்வென்று எனக்குத் தெரியவில்லை! தெரிந்தால், யாரிடமேனும் அது இன்னமும் பத்திரமாக இருந்தால் தெரியப் படுத்துங்களேன்!

இக்கதையை ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

உபயம்: http://bookscomics.blogspot.com/

1978:

ஜனவரி 1978-ல் வெளிவந்த முத்து காமிக்ஸ் # 069 – பழி வாங்கும் பாவை பின்னட்டையில் 1978-ம் வருட காலண்டர் பிரசுரிக்கப் பட்டது!

Muthu Comics # 069 - Pazhi Vaangum PaavaiMuthu Comics # 069 - Pazhi Vaangum Paavai - Calendar

1979:

1979-ம் வருடம் ஜனவரி மாதம்  மீண்டும் ஒரு முறை புத்தாண்டு சிறப்பிதழ் ஆக வேதாளர்-ன் அதியற்புத சாகசமான முத்து காமிக்ஸ் # 086 - சூனியக்காரியின் சாம்ராஜ்யம் வெளிவந்தது! இக்கதை குறித்தும் பின்வரும் பதிவுகளில் காண்போம்!

இந்த சமயத்தில் முத்து காமிக்ஸ் மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது!

இக்கதையோ அல்லது இதன் இரண்டாம் பாகமோ இந்திரஜால் காமிக்ஸ்-ல் கூலா-கு கொடுசூலி என்று வந்ததாக ஞாபகம்! தோழர் புலா சுலாகி மனம் வைத்தால் நாம் அனைவரும் படித்து மகிழலாம்!

Muthu Comics # 085 - Mugamoodi Kollaikaari - Sooniyakkaariyin Saamraajyam - AdMuthu Comics # 086 - Sooniyakkaariyin Saamraajyam

இக்கதையை ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

உபயம்: http://bookscomics.blogspot.com/

1982:

ஜனவரி 1982-ல் பொங்கல் மலர் ஆக இரும்புக்கை மாயாவி சாகஸமான முத்து காமிக்ஸ் # 132 - தவளை மனிதர்கள் வெளிவந்தது! இதன் பின்னட்டையில் 1982-ம் வருட காலண்டர் பிரசுரிக்கப்பட்டது!

Muthu Comics # 132 - Thavalai ManidhargalMuthu Comics # 132 - Thavalai Manidhargal - Calendar

இக்கதை குறித்த மேல் விவரங்களைத் தனியொரு பதிவில் விரைவில் காண்போம்! அதுவரை காத்திருக்கவும்!

1986:

ஜனவரி 15-31, 1986 தேதியிட்ட ராணி காமிக்ஸ் # 086 – புத்தாண்டு விருந்து! பொங்கல் மலர்-ஆக வெளிவந்தது! ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்களின் வழக்கப்படி பொங்கல் மலர்-ல் வழக்கம் போல இந்திய நாயகரான இன்ஸ்பெக்டர் கருடா கதை பிரசுரிக்கப்பட்டது! முழுக்கதையும் உங்கள் பார்வைக்கு! படித்து மகிழவும்!

Rani Comics # 086 - Puththaandu VirundhuRani Comics # 086 - Puththaandu Virundhu - Page 03Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 04Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 05Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 06Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 07Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 08Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 09Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 10Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 11Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 12Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 13Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 14Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 15Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 16

இன்ஸ்பெக்டர் கருடா குறித்த முழு நீளப் பதிவு அ.கொ.தீ.க.வில் விரைவில் வெளிவரும்!

1988:

1988-ல் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் தனது சக்திகளின் உச்சத்தில் இருந்த சமயத்தில் லயன், மினி லயன், திகில் மற்றும் முத்து என சராமரியாக மாதாமாதம் காமிக்ஸ்களை வெளியிட்டுக் கொண்டிருந்த நேரம்! அப்போது லயன், திகில், மினி லயன் ஆகிய மூன்று இதழகளுக்கும் சந்தா கட்டுவோருக்கு இலவச காலண்டர் வழங்கினார்! இதே போல் பின்வரும் வருடங்களின் டீ-ஷர்ட், கீ-செயின் என்று பல ஊக்கப் பரிசுகள் வழங்கினார்!

Mini Lion Comics # 11 - Visithira JodiMini Lion Comics # 11 - Visithira Jodi - Calendar

அந்த காலண்டர், டீ-ஷர்ட் மற்றும் கீ-செயின்  யாரிடமேனும் இன்னமும் பத்திரமாக இருந்தால் தெரியப் படுத்துங்களேன்!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!