வணக்கம்,
இன்று காலை கடைகளுக்கு வந்துள்ள புதிய தலைமுறை (தேதி: 18-11-2010) இதழில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி வந்துள்ளது! அது பிரபல எழுத்தாளரும், வலைப்பதிவருமான யுவகிருஷ்ணா என்கிற லக்கிலுக் எழுதியுள்ள ஒரு கட்டுரையேயாகும்!
லக்கி ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர் என்பதுதான் உங்கள் எல்லோருக்குமே தெரியுமே! தான் இன்று வரை ரசித்துப் படித்துக் கொண்டிருக்கும் காமிக்ஸ் பற்றி அவர் ஒரு விரிவான கட்டுரை எழுதியுள்ளார்! கட்டுரையை COMICS FOR DUMMIES ரேஞ்சுக்கு காமிக்ஸ் பற்றி பரிச்சயமே இல்லாத ஆளுக்குக் கூட அதன் மீது ஆர்வம் வரும் வகையில் அவர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது! தீவிர காமிக்ஸ் ரசிகர்களுக்கும் அவரது கட்டுரையில் பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் தோண்டத் தோண்டக் கிடைக்கும்!
குறைகள் என்று பார்த்தால் லே-அவுட் விஷயத்தில் கொஞ்சம் சொதப்பல்தான்! காமிக்ஸ் கட்டுரை என்றாலே INVARIABLEஆக ஸ்பைடர்மேனையும் பேட்மேனையும் போட்டு ஏன்தான் இப்படிக் கொல்கிறார்களோ?!! ஸ்பைடர் என்று கட்டுரையில் வருவதால் ஸ்பைடர்மேனை போட்டிருப்பார்களோ! ஆனால் இப்படியெல்லாம் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வருவதே பெரிய விஷயம் என்பதால் அதையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதே சாலச் சிறந்தது!
குறிப்பாக திரு.முல்லை தங்கராசன் அவர்கள் பற்றியும், வாண்டுமாமா பற்றியும் அவர் எழுதியிருக்கும் துணுக்குகள் சுவாரசியம் மிகுந்தவை! அவருக்கும் அதை வெளியிட்டு காமிக்ஸுக்கு பெருமை சேர்த்த புதிய தலைமுறை நிறுவனத்தினருக்கும் நம் அனைவரின் சார்பிலும் எனது நன்றிகளும், பாராட்டுகளும்!
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நமது தமிழ் காமிக்ஸ் வலையுலக ‘முடி’சூடா மன்னன் கிங் விஸ்வா பற்றியும் எழுதியுள்ளார் லக்கி! கூடவே அவரது புகைப்படமும் வந்துள்ளது! அதையெல்லாம் வெளியிட்டு காலையிலேயே உங்களையெல்லாம் கடுப்பேற்ற வேண்டாமென்று சென்சார் செய்து விட்டேன்!
இதையும் மீறி அவரது புகைப்படத்தை பார்த்தேயாக வேண்டும் என்று அடம் பிடிக்கும் திடசித்தமுடையோர் தயவு செய்து இன்று கடைகளுக்கு வந்துள்ள புதிய தலைமுறை (தேதி: 18-11-2010) இதழை வாங்கிப் பார்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கையுடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்! பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்!
லக்கியின் கட்டுரையின் முழு ஸ்கேன்களும் இதோ உங்கள் பார்வைக்கு! கட்டுரையில் என்ன எழுதியுள்ளார் என்பதை விளக்கிக் கூறும் தேவை இல்லாததால் நீங்களே படித்து மகிழுங்களேன்!
பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!