“தமிழ்ல ஞானப்பழம்!
மலையாளத்துல ஞானப்பழா!
தெலுங்குல ஞான பண்டு!
ஹிந்தில ஞான கேலா ஹை!
இங்கிலீஸ்ல இண்டலிஜண்ட் ப்ரூட்!”
-கவுண்டமணி (படம்: ஞானப்பழம்)
வணக்கம்,
நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டு(ம்) வந்திருக்கும் நமது வழக்கத்திற்கு மாறான ஒருகாமிக்ஸ் செய்திப் பதிவு!
அமெரிக்க காமிக்ஸ் படைப்பாளிகளின்(?!!) அட்டூழியம் வர வர எல்லை மீறிக் கொண்டே போகிறது என்பதை உணர்த்தும் இந்த செய்தி தினமலரில் 20-08-2009 அன்று வெளிவந்தது!
அகில உலகெங்கும் (அதாங்க கனடாவுக்கு கீழ, மெக்ஸிகோவுக்கு மேல இருக்குமே,அந்த உலகம் – நன்றி: ஹாலிவுட் பாலா) காமிக்ஸ் உலகின் தலைசிறந்த வில்லன் யாரென நடந்த வாக்கெடுப்பில் வழக்கம் போல ஜோக்கர் வெற்றி பெற்றுள்ளார்! இந்த தேர்தலில் அகிலமேஅஞ்சி நடுங்கும் அ.கொ.தீ.க. தலைவர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது அயல் நாட்டின் அற்ப சதி என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன்!
இந்த தேர்தலில் நடந்திருக்கும் அட்டூழியங்கள் குறித்து விரைவில் ஒரு சிறப்புப் பதிவு வெளியிடுகிறேன்! அது வரைக்கும் இந்த கொசுறு செய்திகளையும் படித்து மகிழுங்கள்!
ஃபேஸ்புக்கில் சேர்ந்தால் உங்கள் அறிவுத் திறன் கூடம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்தான்! ஆனால் ட்விட்டரில் இருக்கும் நண்பர்கள் சிலரைப் பார்க்கும் போது ஒரு வேளை இதில் உண்மை இருக்குமோ என்று கூட தோன்றுகிறது!
ஏற்கெனவே நண்பர்கள் பலரும் வெளியிட்டு விட்ட செய்தி எனினும் நானும் என் பங்குக்கு இதை மீண்டும் வெளியிடுகிறேன்! இந்த செய்தி THE HINDU நாளிதழில் 02-09-2009 அன்று வெளியிடப்பட்டது!
இந்த பதிவில் எழுதுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்பதாலும், செய்திகள் எல்லாம் சற்றே பழையவை என்பதாலும் கடைசியாக ஒன்றே ஒன்றை மட்டும் இங்கு நான் சொல்லிக் கொள்ள விழைகிறேன்!
“நாங்களும் காமிக்ஸ் நியூஸ் போடுவோம்ல!”
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறாங்களான்னெல்லாம் கேட்டு பின்னூட்டமெல்லாம் போடக்கூடாது, சொல்லிப்புட்டேன் ஆமாம்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!