Showing posts with label பேட்மேன். Show all posts
Showing posts with label பேட்மேன். Show all posts

Tuesday, December 15, 2009

மேரா நாம் ஜோக்கர்!

வணக்கம்,

சமீப காலமாக அ.கொ.தீ.க.வில் இரங்கல் செய்திகளாக வந்து கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்! அதிலிருந்து மாறுதலாக இரு மகத்தான ANNIVERSARY-களை முன்னிட்டு சிறப்பு பதிவு!

ANNIVERSARY – I:

தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு விளங்கியிருக்கும்! 14-12-2009 இந்திய சினிமாவின் பிதாமகர்களில் ஒருவரான அமரர் ராஜ் கபூர் அவர்களது 85-வது ஆண்டு நினைவு நாள் ஆகும்! சார்லி சாப்ளின் பாணியிலான அவரது ஆரம்ப கால திரைப்படங்களை உலகம் போற்றினாலும், அவரது தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுவது மேரா நாம் ஜோக்கர் எனும் காலத்தாலழியா திரைக்காவியமாகும்!

அவர் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர் என்பது பலரும் அறியாதது! நமக்கு மிகவும் பரிச்சயமான இன்ஸ்பெக்டர் ஆசாத் காமிக்ஸ் கதாபாத்திரத்தை தழுவி அவர் ஒரு திரைப்படம் எடுக்க எண்ணியிருந்தார்(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா)! ஆனால் காமிக்ஸ் ரசிகர்களின் துரதிர்ஷ்டம, பாபி திரைப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகிவிட, இந்த முயற்சியில் அவரது நாட்டம் குன்றியது! பாபி திரைப்படத்தில் கூட அவர் மிகவும் ரசித்த ஆர்ச்சி காமிக்ஸ் (நமது இரும்பு மனிதன் அல்ல) பாதிப்புகளைக் காணலாம்!

தன் வாழ்நாள் முழுவதும் தன் துயரங்களை மறைத்து நம்மை சிரிக்க வைத்தவர் ராஜ் கபூர்! மேரா நாம் ஜோக்கர் அவரது வாழ்வில் நிகழ்ந்த இந்த IRONY-ஐ திரவடிவில் நமக்குத் தந்தது! அந்த மேதையின் நினைவாக நாம் படித்த காமிக்ஸ்களில் நாம் கண்ட சில வித்தியாசமான ஜோக்கர்களைத் தொகுத்து வழங்குவதே இந்த பதிவின் நோக்கம்! 

ANNIVERSARY - II:

தனது வலைப்பூவைத் தொடங்கி ஒரு வருடமாக வெற்றிகரமாக செயலாற்றி வரும் நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவர் திரு.கனவுகளின் காதலன் அவர்களை இந்தத் தருணத்தில் வாழ்த்தி அவருக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்!

அவரது ஆண்டு மலர் பதிவினைப் படிக்க கீழ்கானும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

கொலைகாரக் கலைஞன்!

முத்து காமிக்ஸ்-ல் அறிமுகமான இந்த கோமாளி இருமுறை மறுபதிப்பும் செய்யப்பட்டிருக்கிறான்! நண்பர் முத்து விசிறி இது குறித்து ஏற்கெனவே சிறப்பாக பதிவிட்டுள்ளார்! படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

என் பங்குக்கு வெறும் அட்டைப்படங்களுடன் சிலபல சுவாரஸ்யமான தகவல்கள் மட்டும் வழங்குகிறேன்!

  ஆங்கில மூலம் முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு மூன்றாம் பதிப்பு
அட்டைப்படம் Fleetway Super Library - Secret Agent Series No. 05 - Assasins Anonymous Muthu Comics # 009 - Kolaikaara Kalaingan Muthu Comics # 161 - Kolaikaara Kalaingan Comics Classics # 015 - Kolaikaara Kalaingan
புத்தகம் ASSASINS ANONYMOUS கொலைகாரக் கலைஞன்! கொலைகாரக் கலைஞன்! கொலைகாரக் கலைஞன்! +
விண்ணில் மறைந்த விமானங்கள்!
இதழ் FLEETWAY SUPER LIBRARY முத்து காமிக்ஸ் முத்து காமிக்ஸ் காமிக்ஸ் க்ளாசிக்ஸ்
# SECRET AGENT Series No.5 009 161 015
தேதி MARCH 1967 DECEMBER 1972 AUGUST 1987 JUNE 2004
பதிப்பகம் FLEETWAY PUBLICATIONS முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ் முத்து காமிக்ஸ் பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
அச்சிட்டோர் GIBIEMME
MILANO, ITALY
முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி A.M.தியாகராஜன்
சிவகாசி
தி விஜய் புக்ஸ்
சிவகாசி
ஆசிரியர் ??? முல்லை தங்கராசன் M.சவுந்திரபாண்டியன் S.விஜயன்
நாயகர்(கள்) JOHNNY NERO ஜானி நீரோ & ஸ்டெல்லா ஜானி நீரோ & ஸ்டெல்லா ஜானி நீரோ & ஸ்டெல்லா
கதை ??? ??? ??? ???
ஓவியம் ??? ??? ??? ???
தமிழில் - முல்லை தங்கராசன் முல்லை தங்கராசன் முல்லை தங்கராசன்
பக்கங்கள் 132 (B&W) 132 (கருப்பு வெள்ளை) 132 (கருப்பு வெள்ளை) 244 (கருப்பு வெள்ளை)
சைஸ் 13cmx18cm 13cmx18cm 10cmx14cm 9.5cmx13.5cm
விலை 1/6d 90 PAISE ரூ:2/- ரூ:10/-

ஒரே குழுமத்தைச் சேர்ந்த ஒரே புத்தகத்தின் பல்வேறு பதிப்புகள் பல பெயர்கள் கொண்ட பதிப்பகங்கள், மற்றும் பதிப்பாசிரியர்களால் வெளியிடப்பட்டிருப்பதைக் கூர்ந்து கவனிக்கவும்! நமது அபிமான காமிக்ஸ் குழுமத்தினரின் பதிப்புலக சரித்திரம் அவர்கள் வெளியிடும் காமிக்ஸ் போன்றே மிகவும் சுவையானது! என்றேனும் ஒரு தினம் இது குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொண்ட பின் அதைப் பதிந்திட முயல்கிறேன்!

கொலைகாரக் கோமாளி!

திகில் காமிக்ஸ்-ல் வெளிவந்து பிரபலமான கறுப்புக் கிழவியின் கதைகள்-ல் ஒன்று! இதன் ஆங்கில மூலத்தை உங்களுக்கு வழங்குகிறேன்! படித்து மகிழுங்கள்!

Thihil # 49 - Kolaikaara Komali - Page 3scanned 020scanned 021scanned 022

scanned 024scanned 025scanned 026

  Grimm's Ghost Stories # 5 Thihil # 49 - Kolaikaara Komali
கதை THE LAST LAUGH கொலைகாரக் கோமாளி!
தொடர் GRIMM’S GHOST STORIES கறுப்புக் கிழவியின் கதைகள்
இதழ் GOLD KEY திகில்
# 5 49
தேதி AUGUST 1972 DECEMBER 1990
பதிப்பகம் WESTERN PUBLISHING COMPANY, INC. பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
அச்சிட்டோர் WESTERN PUBLISHING COMPANY, INC. – NYC - U.S.A. தி விஜய் புக்ஸ்
சிவகாசி
கதை ??? ???
ஓவியம் ??? ???
தமிழில் - S.விஜயன்
பக்கங்கள் 6 (COLOR) 6 (கருப்பு வெள்ளை)
சைஸ் B5 12cmx16cm
விலை 15c ரூ:2/-

சிங்கத்தின் சிறுவயதில் – கறுப்புக் கிழவி ஸ்பெஷல்!

கறுப்புக் கிழவி குறித்து சிங்கத்தின் சிறுவயதில் தொடரில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் வழங்கியிருக்கும் சுவாரஸ்யமான தகவல்களையும் இத்தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

Lion Comics#206 - SSV 13aLion Comics#206 - SSV 13bLion Comics#206 - SSV 13c

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-01Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-02Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-03

ஜோக்கர்: 

காமிக்ஸ் கொலைகாரக் கோமாளிகள் பற்றி குறிப்பிடும் போது இவரை நாம் மறக்கவே முடியாது! அவர்தான் பேட்மேன்-ன் பரம வைரியான ஜோக்கர்!

இவரை தமிழுக்கு அறிமுகப் படுத்திய நமது அபிமான ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு இந்த சமயத்தில் நம் எல்லோரின் சார்பிலும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

Joker2Romero.nicholson.ledger_(joker)Jokerseries1

ஜோக்கரின் பல்வேறு அவதாரங்கள்!

ஜோக்கர்-ஆக திரைப்படங்களில் தோன்றியவர்கள் இருவர் ஆஸ்கார் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது! ஜோக்கர் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே பதிவில் வழங்குவதென்பது இயலாத காரியம்! ஆகையால் இப்போதைக்கு தமிழில் வெளிவந்த ஜோக்கர் கதைகளின் பட்டியல் மற்றும் அட்டைப்படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு!

Thhil # 21 - Siriththu Kolla Vendum Thihil # 28 - Pazhi Vaangum Joker Thhil # 31 - Maranathin Pala Mugangal Thihil # 54 - Sirikkum Maranam
திகில் காமிக்ஸ் # 21
சிரித்துக் கொல்ல வேண்டும்!
(SEPTEMBER 1987)
திகில் காமிக்ஸ் # 28
பழி வாங்கும் ஜோக்கர்!
(APRIL 1988)
திகில் காமிக்ஸ் # 31 (JULY 1988)
பழி வாங்கும் ஜோக்கர்! – படலம் 2
(மரணத்தின் பல முகங்கள்!)
திகில் காமிக்ஸ் # 54
சிரிக்கும் மரணம்!
(NOVEMBER 1991)

இது குறித்து பின்னொரு நாளில் விரிவான பதிவொன்றை இடுகிறேன்! அதுவரை பொறுமை காக்குமாறு அன்பர்களை வேண்டிக்கொள்கிறேன்!

போனஸ் - ’NUFF SAID:

வெகுமதி!

நெடுநாள் கழித்து மீண்டும் ஒரு வெகுமதி! போட்டியில் சந்திப்பது குறித்து மகிழ்ச்சி! எனவே தாமதமின்றி கேள்விக்குச் செல்வோம்!

  • முதல் வீடியோவில் உள்ள ஜீனா யஹா! மர்னா யஹா! பாடலைத் தழுவிய (டியூனைக் காப்பியடித்த) தமிழ் பாடலைக் கூறுக!

சரியான விடையை முதலில் விரைந்து பின்னூட்டமாக அளிப்போருக்கு பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:-

ஜானி நீரோ:

காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பற்றிய இடுகைகள்:

சிங்கத்தின் சிறுவயதில் அனைத்து பாகங்களையும் படிக்க: