“காட்ட வித்தே கள்ளக் குடிச்சாலும்… கவுண்டன் கவுண்டன்தான்!”
-கவுண்டமணி (படம்: நான் பாடும் பாடல்)
வணக்கம்,
நேற்று எவனோ ஒரு டிரங்கன் மங்க் நகைச்சுவை மன்னன் அண்ணன் கவுண்டமணி அவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி ஆள் அப்பீட் ஆகிவிட்டார் என்று வதந்திகளைக் கிளப்பி விட அகில உலக இனையமே அல்லோலகல்லோலப்பட்டுப் போனது!
கவுண்டர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? அவர் கடைசி உயிலில் செந்தில்-க்கு ஏதாவது எழுதி வைத்து விட்டு போயிருக்கிறாரா? (அட்லீஸ்ட் ஒரு உதையாவது!) என்றெல்லாம் மக்கள் மனக்கிலேசத்துடன் தாறுமாறாக யோசிக்க, ஒரு சில வலைப்பதிவர்கள் “அண்ணாருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலி!” என்றெல்லாம் பதிவு போட ரெடியாகிவிட்டனர்!
இந்நிலையில் கவுண்டர் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வந்ததும்தான் நிம்மதியாயிற்று! அவர் மேலும் பற்பல ஆண்டுகள் நலமுடனும், வளமுடனும் வாழ்ந்து மேலும் பற்பல திரைப்படங்களில் நடித்து நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும் என்று ஆண்டவனிடம் இத்தருணத்தில் வேண்டிக் கொள்கிறேன்!
அவரது மேன்மையைப் போற்றும் விதமாக நமது காமிக்ஸ் உலகின் கவுண்டமணி & செந்தில் ஜோடியின் அட்டைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு! இப்போதைக்கு இவர்களின் மினி லயன் சாகஸங்களின் அட்டைப்படங்கள் மட்டுமே வெளியிட்டுள்ளேன்! கூடிய விரைவில் சிக்பில் குழுவினர் குறித்த முழு நீள ஆய்வுக் கட்டுரை ஒன்றை நீங்களனைவரும் அ.கொ.தீ.க.வில் படித்து மகிழலாம்!
உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:
விற்பனைகொரு ஷெரீப்! ஒரு விரிவான பார்வை:
மீ த ஃபர்ஸ்ட்டு.
ReplyDeleteTCU Will be back'u, After reading the Post'u.
ஒவ்வொரு கதை தலைப்பும் அற்புதம். பெயர்களை மட்டும் படித்து பாருங்களேன் மறுபடியும் ஒருமுறை.
ReplyDeleteஇந்த கதைகளிலேயே டாப் நீலப் பேய் மர்மம் தான்.
ReplyDeleteஏனென்றால் அந்த கதை முதல் தான் ஆசிரியர் ஒரு முடிவுக்கு வருவார் (அதாவது சிக் பில்லை முன் நிறுத்தாமல் டாக் புல் கிட ஆர்ட்டின் ஜோடியின் காமெடியை முன் நிறுத்துவது என்று).
இதற்க்கு காரணம் விற்பனைக்கு ஒரு ஷெரிப்பின் வெற்றி தான் (அந்த கதையில் Basic-காகவே டாக் புல் மற்றும் கிட ஆர்ட்டின் தான் கதை நாயகர்கள்).
ஆனாலும் எங்கள் ஒட்டு மொத்த குழுவின் பேவரிட் மொன்டானா கிட் தோன்றும் விசித்திர ஹீரோ தான்.
ReplyDeleteநன்றி~
ReplyDeleteகலக்கிட்டீங்க..!!!!!1
ReplyDeleteபத்த வச்சிட்டயே பரட்டை..,
ReplyDeleteநீங்கள் வழங்கியிருக்கும் அட்டைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன.
ReplyDeleteநீங்கள் வழங்கி இருக்கும் கவுண்டமணி படம் சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteஹி.. ஹி... சரி மற்றய அட்டைப் படங்களையும் போடுங்க தலைவா.
ReplyDeleteநானும் இந்த வதந்திகளை கேட்டு வருத்த பட்டேன்...
ReplyDeleteடாக் புல் மற்றும் கிட ஆர்ட்டின் ஜோடியை எனக்கு ரோம்பபிடிகும்...
i just love gounder.
ReplyDeletethank god, he's alive. hope he will do more films.
the covers are just great.
ReplyDeletethanks for that.
டாக்டர் அய்யா
ReplyDeleteகவுண்டரின் மேல் தாங்கள் கொண்டுள்ள அபிமானம் தங்களுடைய பதிவில் தெரிந்தது. ஆனாலும் சம்பந்தமே இல்லாமல் "முன் வைத்த காலை பின் வைக்க கூடாது" என்ற பழமொழி நினைவுக்கு வந்தது ஏனென்று புரியவில்லை.
என்ன தம்பி இது?
ReplyDeleteநான் ரிவர்சில் போகுற ஆள் (முதல்ல வயசான ஆளா நடிச்சேன் - நான் யூத்தா இருந்தபோது), பிறகு யூத்தா நடிச்சேன் (நான் வயசானவனா இருக்கும்போது).
அதனால் என்னோட படத்த கொஞ்சம் யூத்புல்லா போடவும்.
என்மேல் நீங்கள் கொண்டிருக்கும் அன்பிற்கு நன்றி.
ReplyDeletevazthukkal nalla title select seytha vijayan & soundra pandiyan avargalaithan intha nerathil ninaikiren!
ReplyDelete