வணக்கம்,
சமீபத்தில் கிங் விஸ்வா வெளியிட்டிருந்த காமிக்ஸ் கேள்வி-பதில் பதிவில் நண்பர்கள் சிலர் புயல் வேக இரட்டையர் குறித்து விவரங்கள் கேட்டிருந்தனர்! அவர்களது கேள்விகளுக்கு பதில் கூறும் விதமாகவே இப்பதிவு வந்திருக்கிறது!
புது முயற்சியாக பல விஷயங்களை விளக்காமல் விவரங்களாக மட்டும் கூறியுள்ளேன்! பதிவை ஆழ்ந்து படிக்குமாறு உங்களனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்!ஆகையால் மொக்கை போட்டு மேலும் நேரத்தை வீணாக்காமல் நேரடியாக பதிவுக்கு போவோம்!
புத்தக விவரங்கள்:
அட்டைப்படம் | ||
கதை | கறுப்புப் பாதிரி மர்மம்! | புயலோடு ஒரு போட்டி! |
இதழ் | மினி லயன் (மாத இதழ்) | முத்து காமிக்ஸ் (மாத இதழ்) |
வெளியீடு | 3 | 195 |
முதல் பதிப்பு | மார்ச் 1, 1987 | ஆகஸ்ட் 15, 1991 |
மறுபதிப்புகள் | இதுவரை இல்லை | இதுவரை இல்லை |
பதிப்பகம் | லயன் புக் ஹவுஸ் | முத்து காமிக்ஸ் |
ஆசிரியர் | S.விஜயன் | M.சவுந்திரபாண்டியன் |
அச்சிட்டோர் | லயன் புக் ஹவுஸ் | தி விஜய் புக்ஸ், சிவகாசி |
நாயகர்(கள்) | புயல் வேக இரட்டையர் | புயல் வேக இரட்டையர் |
மூலம் | THE SPEED KINGS – THE BLACK PRIOR (ஆங்கிலம்) | THE SPEED KINGS – THE KESLEY FLYER (ஆங்கிலம்) |
இதழ் | LION (Weekly) | LION (Weekly) |
வெளியீடு | FLEETWAY PUBLICATIONS LTD. | FLEETWAY PUBLICATIONS LTD. |
முதல் பதிப்பு | 10th August 1968 - 5th October 1968 | 13th January 1968 – 11th May 1968 |
மறுபதிப்பு | LION ANNUAL 1974 | LION ANNUAL 1970 |
கதை | ??? | ??? |
ஓவியம் | RENATO POLESE | RENATO POLESE |
தமிழில் | S.விஜயன் | S.விஜயன் |
பக்கங்கள் | 68 (கருப்பு வெள்ளை) | 132 (கருப்பு வெள்ளை) |
சைஸ் | 10cmx14cm | 9.5cmx13cm |
விலை | ரூ:1/- (1987 முதல் பதிப்பின் போது) | ரூ:3/- (1991 முதல் பதிப்பின் போது) |
விளம்பரம் | ||
கதைச்சுருக்கம் |
|
|
முதல் பக்கம் | ||
ஆங்கில மூலம் |
- இக்கதைத் தொடரின் ஓவியர் RENATO POLESE நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானவர்! பல லாரன்ஸ் & டேவிட் கதைகளுக்கு துடிப்பான ஓவியங்கள் வரைந்தது இவர்தான்! இவரைப் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
- லயன் காமிக்ஸ்-ல் இரட்டை வேட்டையர்-ன் வெற்றிக்கு பிறகு அதே போல் சாகஸ வீரர்கள் மினி லயன்-லும் தேவை என்று உணர்ந்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் தேர்ந்தெடுத்த ஹீரோக்களே நமது புயல் வேக இரட்டையர்!
- இரட்டை வேட்டையர் போலவே இவர்களும் சாகஸ ஸ்டண்ட் வீரர்கள்! ஆனால் இவர்கள் இரட்டை வேட்டையர் போல் இரகசிய உளவாளிகள் இல்லை! தங்களை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் சாதாரண கதாநாயகர்கள் (ஆக்ஷன் ஹீரோ சைமன் போல்)!
- ஸாண்டி, ஜோ என்ற ஸ்டண்ட் சகோதரர்களின் சாகஸங்களின் கதைகள் தான் இவை! அவர்களது ஹெல்மெட்டிலும், ஜெர்க்கினிலும் அவர்களது இனிஷியல்கள் பொறிக்கப்பட்டிருக்கும்!
- இவர்களின் சாகஸக் கதைகள் மொத்தமே இரண்டேயிரண்டுதான் வந்துள்ளன! ஆங்கிலத்திலும் அவ்வளோதான்! இவர்களைப் போல சாகஸ ஹீரோக்கள் அங்கேயெல்லாம் நயா பைசாவுக்கு நாற்பது பேர் கிடைப்பார்கள்! ஆகையால்தான் இவ்வகை ஹீரோக்கள் எவருமே நிலைத்து நிற்கவில்லை!
- புயலோடு ஒரு போட்டி அட்டைப்படத்தின் மூலம் உண்மையில் இரட்டை வேட்டையர்-ன் விளம்பரத்தில் உபயோகிக்கப்பட்ட ஒரு படமாகும்! கைவசம் புத்தகம் இல்லாததால் படம் வெளியிட முடியவில்லை! மன்னிக்கவும்!
நிறைகள்:
- ஆக்ஷன் ரசிகர்களுக்கு, குறிப்பாக வேகவிரும்பிகளுக்கு (LITERALLY) சரியான விருந்து!
- இரட்டை வேட்டையர்-ன் ரசிகர்களுக்கு இக்கதைத் தொடர் மிகவும் பிடிக்கும்!
- அட்டகாசமான ஓவியங்கள்! அதிரடி கதைத் திருப்பங்கள்! ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் ஜெட் வேக கதையமைப்பு!
குறைகள்:
- இரட்டை வேட்டையர் போல் இவர்கள் உளவாளிகளாக இல்லாதிருப்பது கதைக் களங்களை மட்டுப்படுத்துகிறது! ஒரே மாதிரியான கதைக் களங்களே இக்கதைத்தொடரின் தோல்வி!
நன்றிகள்:
- ஸ்டீவ் ஹாலண்ட் – இக்கதைத் தொடரின் ஓவியர் குறித்த விவரங்களைக் கேட்டவுடன் அளித்தமைக்கு!
- முத்து விசிறி – வழக்கம் போல ஆங்கிலத் தொடரின் அனைத்து விவரங்களையும் அளித்தமைக்கு!
- ஹாஜா இஸ்மாயில் - அட்டைப்படங்களுக்காக!
- கிங் விஸ்வா – பல்வேறு வகைகளில் அவர் தொடர்ந்து புரிந்து வரும் உதவிகளுக்கும், உபத்திரவங்களுக்கும்!
- ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் – இக்கதைத் தொடரை நமக்கு அறிமுகம் செய்தமைக்கு!
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!