வணக்கம்,
அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! வழக்கமாக விடுமுறை தின சிறப்புப் பதிவுகளை குறைந்த பட்சம் ஒரு வாரமாவது லேட்டாக வெளியிடும் நான் ஒரு மாறுதலுக்காக இம்முறை ஒரு நாள் முன்பே பதிவை வெளியிடுகிறேன்! படித்து மகிழுங்கள்!
கிறிஸ்துமஸ் சிறப்புப் பதிவாக நமது காமிக்ஸ்களில் வெளிவந்த மிகக் குறைவான சில கிறிஸ்துமஸ் கதைகளையும், சிறப்பிதழ்களையும் காண்போம்!
ராணி காமிக்ஸ் # 038 - சூப்பர் ஹீரோ டைகர் தூள் பறத்தும் கிறிஸ்துமஸ் பரிசு! (ஜனவரி 15-31, 1986)
பொங்கல் மலர்-ஆக வெளிவந்த ராணி காமிக்ஸ் # 038 – கொள்ளைக் கூட்டம்! இதழில் வெளிவந்த ஒரு சிறுகதை! ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்களின் EDITOR’S TOUCH - ஆக பொங்கல் மலர்-ல் வழக்கம் போல இந்திய நாயகர்கள் இன்ஸ்பெக்டர் ஆசாத் மற்றும் மன்னர் பீமா ஆஜர்! கூட போனஸாக சூப்பர் ஹீரோ டைகர் தூள் பறத்தும் கிறிஸ்துமஸ் பரிசு! என்னும் சாகஸ சிறுகதை!
கதை முழுவதும் உங்கள் பார்வைக்கு! படித்து மகிழவும்!
மினி லயன் # 024 - கிறிஸ்துமஸ் கனவுகள்! (ஃபிப்ரவரி 1990)
மினி லயன் # 024 – இரத்த வெறி..!-ல் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் அங்கிள் ஸ்க்ரூஜ்-ன் கிறிஸ்துமஸ் கனவுகள் எனும் சிறுகதையை வெளியிட்டிருந்தார்! நமது பதிவு போல் அல்லாமல் இவ்வி்ரு கதைகளும் மிகத் தாமதமாகவே வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!
கதையின் ஆங்கில மூலம் முழுவதும் உங்கள் பார்வைக்கு! என்சாய்!
அங்கிள் ஸ்க்ரூஜ் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
முத்து காமிக்ஸ் # 180 - கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! (டிசம்பர் 1990)
நானறிந்தவரையில் நமக்கு பரிச்சயமான் காமிக்ஸ் குழுமங்களின் சரித்திரத்தில் வெளிவந்த ஒரே கிறிஸ்துமஸ் சிறப்பிதழ் இதுதான்! தவறாகவும் இருக்கலாம்! இருப்பின் சுட்டிக் காட்டிட மறந்து விட வேண்டாம்!
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்-ன் வெளியீட்டின் பின் ஒரு சரித்திரமே உள்ளது! மே 1989-ல் கோடை மலர் ஆக முத்து காமிக்ஸ் # 176 – சம்மர் ஸ்பெஷல்! வெளியிட்டு வெற்றியும் பெற்ற கையோடு முத்து காமிக்ஸ் # 177 – இரத்தப் பாதை!-ல் தீபாவளி மலர் குறித்து விளம்பரம் செய்தார் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள்!
ஆனால் அடுத்த இதழான முத்து காமிக்ஸ் # 178 – சிங்கத்தின் குகையில்! இதழில் விளம்பரத்தில் சில மாற்றங்கள் செய்தார்! ஜெஸ் லாங் தோன்றும் நெருப்பின் நிழலில்! கதையை இந்த இதழிலிலேயே வெளியிட்டு விட்டார் ஆசிரியர்! ஆகையால் இரவு மனிதன்! என்ற வேறொரு கதையை விளம்பரம் செய்தார்!
அதே போல் இரும்புக்கை மாயாவி தோன்றும் கண்ணீர்த் தீவில் மாயாவி! கதைக்கு பதில் பச்சை வானம் மர்மம்! எனும் கதை விளம்பரம் செய்யப்பட்டது! பின்னர் பொங்கல் மலர்-ஆக முத்து காமிக்ஸ் # 181 – கண்ணீர்த் தீவில் மாயாவி (ஜனவரி 1990) வெளியிடப் பட்டது!
ஆனால் அக்டோபர் 1989-ல் தீபாவளி மலர்-ஆக வந்ததோ ரூ:2.50/- விலையில் ஒரேயொரு கதை மட்டுமே அடங்கிய முத்து காமிக்ஸ் # 179 - பச்சை வானம் மர்மம்! இது குறித்து ஹாட்-லைன்-ல் ஆசிரியர் கூறியிருப்பதை கவனியுங்கள்!
அடுத்த வெளியீட்டை கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்-ஆக அறிவித்தார் ஆசிரியர்! ஆனால் அடுத்த வெளியீடாக யுத்த வியாபாரிகள்! எனும் ஜான் சில்வர் சாகஸத்தை ரூ:2.50/- விலையில் வெளிவருவதாக விளம்பரம் செய்துள்ளார்! CONFUSED?!! YOU WILL BE!!!
ஒரு வழியாக டிசம்பர் 1989-ல் முத்து காமிக்ஸ் # 180 – ஆழ்கடல் அதிரடி! கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்-ஆக வெளிவந்தது! உள்ளே என்னென்ன கதைகள் வந்தன என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்!
- கதை # 1 : ஆழ்கடல் அதிரடி! (இரகசிய ஏஜெண்ட் டேவிட் சாகஸம்)
- கதை # 2 : விச்சு & கிச்சு!
- கதை # 3 : இரவு மனிதன்! (ஜெஸ் லாங் சாகஸம்)
- கதை # 4 : யுத்த வியாபாரிகள்! (ஜான் சில்வர் சாகஸம்)
- கதை # 5 : மாயாவியுடன் ஒரு மினி! (இரும்புக்கை மாயாவி சாகஸம்)
- கதை # 6 : ஐஸ் பெட்டியில் ஒரு பிணம்! (இன்ஸ்பெக்டர் கருடா சாகஸம்)
விளம்பரப்படுத்தப்பட்ட அதிமேதை அப்பு காணாமல் போயிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்! நிகழ்ந்த பல மாற்றங்களில் இதுவும் ஒன்று! இனி இவற்றை ஒவ்வொன்றாக விரிவாகக் காண்போம்!
அட்டைப்படம்:
அட்டைப்படத்தின் முதுகில் நீங்கள் காணும் கருப்படிக்கப்பட்டப் பகுதியில் ஒரிஜினலாக தீபாவளி ஸ்பெஷல்! என்று அச்சடிக்கப்பட்டிருந்தது! ஸ்கேனில் தெளிவாகக் காண இயலாதெனினும் புத்தகம் கையிலிருப்போர் இதைக் கண்கூடாகக் காணலாம்! மற்றபடிக்கு அட்டைப்படத்தின் தரம் A1! கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள், பாக்கெட் சைஸ் என்று இந்த புத்தகத்தின் பல ஹை-லைட்களில் அட்டைப்படமும் ஒன்று!
இனி கதைகளை ஒவ்வொன்றாகக் காண்போம்!
கதை # 1 : ஆழ்கடல் அதிரடி!
பெயருக்கு ஏற்றார் போல் கதையில் அதிரடிக்குப் பஞ்சமில்லை! இரகசிய ஏஜெண்ட் டேவிட் இதற்கு முன் முத்து காமிக்ஸ் # 178 - சிங்கத்தின் குகையில்! சாகஸம் செய்த பிறகு மீண்டும் ஒரு அற்புதக் கதையில் அசத்துகிறார்! இவரைக் குறித்த தீவிரமான அலசல் செய்யும் ஒரு பதிவு விரைவில் அ.கொ.தீ.க.வில் வெளிவரும்!
இரண்டாம் உலக யுத்தம் சமயத்தில் நடப்பதாக அமைக்கப் பட்டிருக்கும் கதை என்பதால் வழக்கம் போல நாஜிக்களின் சதிச்செயலை முறியடிக்கும் கதைதான் எனினும், கதையின் ஹீரோ தசாவதாரம் கமல் போல நிமிடத்திற்கொரு கெட்டப் மாற்றி நாஜிக்களை மட்டுமன்றி நமது காதிலும் பூ சுற்றுகிறார்! ஆனால் கதையின் வேகம் காரணமாக இது போன்ற லாஜிக் மீறல்கள் பெரிதாக உறுத்தவில்லை!
கதை # 2 : விச்சு & கிச்சு!
விச்சு & கிச்சு-வின் வழக்கமான காமெடி கலாட்டா! படித்து மகிழுங்கள்!
விச்சு & கிச்சு பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
கதை # 3 : இரவு மனிதன்!
ஜெஸ் லாங்-கின் மற்றுமொரு க்ரைம் த்ரில்லர்! இரவு நேரங்களில் தெருக்களில் சுற்றித் திரியும் ஒரு சைக்கோவைப் பற்றிய கதை! நிஜ சம்பவங்களின் அடிப்படையில் கதை எழுதப் பட்டிருப்பது சிறப்பு! தெளிவான ஒவியங்கள் ப்ளஸ் பாயிண்ட்!
ஜெஸ் லாங் குறித்து மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
கதை # 4 : யுத்த வியாபாரிகள்!
ஜான் சில்வர்-ன் மேலுமொரு அதிரடி ஆக்ஷன் கதை! ஒரு கூலிப்படையைத் தனி ஒருவராக ஜான் சில்வர் எவ்வாறு அழிக்கிறார் என்பதுதான் கதை! இதில் சுவாரசியமான விஷயம் வில்லன்களின் பெயர்கள்தான்! சார்ஜெண்ட் சனியன், கர்னல் எமன் என்று பெயராலேயே நம்மை மிரட்டுகிறார்கள்! இவை யாவும் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறனுக்கு சான்று!
ஜான் சில்வர் குறித்து ஒரு சிறப்புப் பதிவு வகு விரைவில் உங்கள் அபிமான அ.கொ.தீ.க. வலைத்தளத்தில் வெளிவரும்! அதுவரை காத்திருக்கவும்!
கதை # 5 : மாயாவியுடன் ஒரு மினி!
சிறப்பிதழ் என்றால் இரும்புக்கை மாயாவி கதை இல்லாமலா! சாகஸ சிறுகதை மூலம் நம்மையெல்லாம் பரவசப் படுத்துகிறார் மாயாவி! வழக்கம் போல உலகையே அச்சுறுத்தும் ஒரு கிறுக்கு விஞ்ஞானியை எதிர்க்கிறார் மாயாவி! இடையில் இரும்புக்கரத்தின் அனைத்து சக்திகளையும் உபயோகிக்கும் வாய்ப்பும் அமைகிறது!
கதை # 6 : ஐஸ் பெட்டியில் ஒரு பிணம்!
இன்ஸ்பெக்டர் ஈகிள்-ன் துப்பறியும் திறனும் ஹவில்தார் நாயக்கின் காமெடியும் நிறைந்த சிறுகதை! இவர்கள் குறித்த ஒரு சிறப்புப் பதிவை பொங்கலுக்குள் எதிர்பாருங்கள்!
இன்ஸ்பெக்டர் ஈகிள் குறித்து நண்பர் ஷிவ் இட்டுள்ள பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
புத்தகம் | : | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! |
இதழ் | : | முத்து காமிக்ஸ் (மாத இதழ்) |
வெளியீடு # | : | 180 |
முதல் பதிப்பு | : | டிசம்பர் 1989 |
பதிப்பாசிரியர் | : | M.சவுந்திரபாண்டியன் |
பொறுப்பாசிரியர் | : | S.விஜயன் |
தமிழில் | : | S.விஜயன் |
பக்கங்கள் | : | 240 (கருப்பு வெள்ளை) |
சைஸ் | : | 9.5cmx13.5cm (பாக்கெட் சைஸ்) |
விலை | : | ரூ:5/- (1989 முதல் பதிப்பின் போது) |
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
பி.கு:
வரும் வாரங்களில் அ.கொ.தீ.க. மிகவும் பிஸியாக இருக்கும்! சராமரியாக சிறப்புப் பதிவுகள் உங்களை வந்து தொடர்ந்து தாக்கும்! அவை குறித்த ஒரு சிறு முன்னோட்டம்!
- டிசம்பர் 26-ம் தேதி அமரர் எம்.ஜி.ஆர்.ன் நினைவு தினம்! அது குறித்த ஒரு வித்தியாசமான சிறப்புப் பதிவு வரும் வார இறுதியில் வெளிவரும்!
- புத்தாண்டு, பொங்கல் முன்னிட்டு சிறப்புப் பதிவுகளும் தயாராகி வருகின்றன! பதிவு மழை உஷார்!
- வலையுலகமே வேட்டைக்காரன் திரைப்படத்தினால் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது! நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?
“ஓடு! ஓடு! ஓடு! ஓடு! ஓடு! ஓடு! ஓடு! ஓடு!
வர்றான் பாரு வேட்டைக்காரன்!”
தொடர்புடைய இடுகைகள்:
பிற சிறப்பிதழ்கள்:
- http://akotheeka.blogspot.com/search/label/தீபாவளி%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/பொங்கல்%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/ஸ்பெஷல்
ஜெஸ் லாங் பற்றி கிங் விஸ்வாவின் இடுகை:
விச்சு & கிச்சு பற்றி கிங் விஸ்வாவின் இடுகை:
இன்ஸ்பெக்டர் ஈகிள் குறித்து நண்பர் ஷிவ் இட்டுள்ள இடுகை:
மீ தி பர்ஸ்ட்.
ReplyDeleteபடிக்க ரொம்ப நேரம் ஆகும்போல இருக்கே..,
ReplyDeleteதலைவரே, அருமையான ஸ்கேன்களுடன் வந்திருக்கும் நல்லதொரு பதிவு. முடியலை..ரொம்ப களைக்குது...யாராவது என்னைக் காப்பாத்துங்க... அய்யய்யோ பக்கத்திலபுலி உறுமுது..
ReplyDeleteமெரி கிறிஸ்மஸ்.
தலைவரே, சென்ற பதிவில் மேரா நாம் ஜோக்கர் குறித்த கேள்விக்கு சரியான விடை என்ன என்று கூறுங்களேன்.
ReplyDeleteநீங்க குறிப்பிட்டுள்ள ஒரு கதையைக் கூட படித்ததில்லை.ம்ம்ம்..நிறைய மிஸ் பண்ணிட்டேன். மினி லயன் பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதலைவரே,
ReplyDeleteசூப்பர் பதிவு. நிறைவான கல்யாண விருந்து போல இருந்தது.
ராணி காமிக்ஸ் கதைகளில் ஒன்றில் பாட்ஷா கிறிஸ்துமஸ் அன்று நடைபெறுவதாக இருந்ததாக நினைவு.
தேர்ந்தெடுக்கப்பட்ட சித்திரங்களுடன் கூடிய மிகவும் நேர்த்தியான பதிவு.
ReplyDeleteஇரத்தப்படலம் ஜனவரி 2010 வராது என கேள்விப்பட்டேன். இவ்வளவு சித்திரக்கதை அன்பர்கள் இணையத்தில் முயற்சி செய்தும் (குறைந்தபட்சம் பத்து பேருக்கு மேலாவது இதனால் சந்தா கட்டியிருப்பார்கள் என நம்புகிறேன்) வராமல் போனாது வருத்தம்தான்.
தொடருங்கள் உங்களின் சிறப்பு பதிவுகளை.
belated christmas wishes to all.
ReplyDelete