கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று 007 - ஜேம்ஸ்பாண்ட் எனும் அற்புத நாயகனை திரையில் அறிமுகப்படுத்திய டாக்டர் நோ திரைப்படத்தின் தலைப்பின் பெயர் கொண்ட வில்லனாக நடித்த ஜோஸஃப் வைஸ்மேன் இறைவனடி சேர்ந்தார்!
இவரது நினைவாக டாக்டர் நோ-வின் பல்வேறு வடிவங்கள் குறித்த இந்த சிறு பதிவை சமர்ப்பிக்கிறேன்! பதிவை ஒரு மாதம் தாமதமாக இடுவதற்கு மன்னிப்பு கோருகிறேன்!
இயன் ஃப்ளெமிங் இயற்றிய டாக்டர் நோ நாவல் அட்டைப்படங்கள்:
1958-ல் முதன்முதலாக வெளிவந்த 007 ஜேம்ஸ் பாண்ட்-ன் மூன்றாவது நாவல் டாக்டர் நோ-வின் பல்வேறு பதிப்புகளின் அட்டைப்படங்கள் சில இதோ உங்கள் பார்வைக்கு!
மேலும் பல பதிப்புகளின் அட்டைப்படங்களையும், திரைப்பட போஸ்டர்களையும் கண்டு மகிழ கீழ்காணும் சுட்டியை பயன்படுத்தவும்!
டாக்டர் நோ திரைப்பட போஸ்டர்கள்:
டாக்டர் நோ – திரைப்படம்/நாவல் தழுவிய காமிக்ஸ்:
அட்டைப்படங்கள் வேறுபட்டாலும் உள்ளே இருப்பது ஒரே சரக்கு தான்! பதிப்பாளர்கள் தான் வேறுபடுகின்றனர்!
இந்தப் புத்தகத்தைப் படிக்க கீழ்காணும் சுட்டியை பயன்படுத்தவும்!
டாக்டர் நோ - செய்தித்தாள் சித்திரக்கதைத் தொடர்:
நமக்கு மிகவும் பரிச்சயமானது டாக்டர் நோ-வின் இந்த பரிமாணம் தான்! 1958 முதல் 1983 வரை DAILY EXPRESS முதலிய பல பிரிட்டிஷ் செய்தித் தாள்களில் காமிக்ஸ் தொடராக வெளிவந்த பல 007 ஜேம்ஸ்பாண்ட் கதைகளை நாம் அனைவரும் ராணி காமிக்ஸ் மூலம் படித்து மகிழ்ந்துள்ளோம்! அவற்றில் டாக்டர் நோ-வும் ஒன்று!
டாக்டர் நோ மூலக்கதையை செய்தித்தாள் சித்திரக்கதைத் தொடருக்காக உருமாற்றியவர் யார் தெரியுமா? நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான் மாடஸ்டி ப்ளைஸி-யை உருவாக்கிய அதே பீட்டர் ஒ’டான்னல் தான்!
இச்சித்திரத் தொடர் திரைப்படங்களுக்குப் பல வருடங்கள் முன்பே வெளிவந்து திரைப்படத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தன! படத்திற்கு STORYBOARD-ஆக இச்சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டன!
டாக்டர் நோ மொத்தம் இரண்டு கதைகளில் இச்சித்திரக்கதைத் தொடரில் தோன்றியுள்ளார்! என்ன? ஆச்சரியமா இருக்கா?
ஆம்! இயன் ஃப்ளெமிங்-ன் நாவலைத் தழுவிய காமிக்ஸ்/படத்தில் கதையின் முடிவில் டாக்டர் நோ இறந்து விடுவார்! ஆனால் செய்தித்தாள் சித்திரக்கதைத் தொடரில் அவர் மீண்டு(ம்) உயிர்த்தெழுந்து வருவது போல் ஒரு கதை அமைக்கப்பட்டது! அது நமது ராணி காமிக்ஸ்-லும் கதிர் வெடி என்ற பெயரில் வந்தது!
டாக்டர் நோ கதையின் க்ளைமாக்ஸ்!
கதிர் வெடி கதையின் திருப்புமுனைக் காட்சி! டாக்டர் நோ ஓவியர் ஹொராக்கின் கைவண்ணத்தில் மிரட்டுகிறார்!
கதிர் வெடி கதையின் இறுதியிலும் கூட டாக்டர் நோ-வின் முடிவு தீர்மானமாக சொல்லப் படவில்லை! ஒருவேளை அவரை மீண்டும் வேறொரு கதைக்கு உயிர்ப்பிக்கும் திட்டமிருந்திருக்கலாம்!
கதை | : | டாக்டர் நோ | கதிர் வெடி |
மூலம் | : | Dr.NO | ??? |
ஆசிரியர் | : | இயன் ஃப்ளெமிங் | ஜிம் லாரன்ஸ் |
ஆக்கம் | : | பீட்டர் ஒ’டான்னல் | ஜிம் லாரன்ஸ் |
ஓவியர் | : | ஜான் மெக்லுஸ்கி | யரொஸ்லாவ் ஹொராக் |
வெளியீடு | : | DAILY EXPRESS | DAILY EXPRESS |
தேதி | : | May 23, 1960 - October 1, 1960 | ??? |
தமிழில் | : | S.ராமஜெயம் | S.ராமஜெயம் |
வெளியீடு | : | ராணி காமிக்ஸ் # 019 | ராணி காமிக்ஸ் # 029 |
தேதி | : | Apr 01,1985 | Sep 01,1985 |
TITAN BOOKS மறுபதிப்பு:
இந்த செய்தித்தாள் சித்திரக்கதைத் தொடரை TITAN BOOKS நிறுவனத்தினர் ஆரம்பத்திலிருந்து மறுபதிப்பு செய்து வருகின்றனர்! தாறுமாறான விலையும், கதைக்கு கதை வேறுபடும் அச்சுத்தரமும் (சூப்பரிலிருந்து சொதப்பல் வரை – சில கதைகள் நமது ராணி காமிக்ஸ் அச்சுத்தரமே மேல்!) தடைக்கற்களாக அமைந்தாலும் தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு தவிர்க்க முடியாததொரு விருந்து இது!
சமீபத்தில் THE JAMES BOND OMNIBUS என்ற பெயரில் மலிவுப் பதிப்பாக முதல் மூன்று புத்தகங்களில் வெளிவந்த கதைகளை ஒரே புத்தகமாக TITAN BOOKS வெளியிட்டுள்ளனர்! தனிப் புத்தகங்கள் வாங்க யோசிப்போர் இதனை கண்டிப்பாக வாங்கலாம்!
இதில் டாக்டர் நோ தவிர நாம் தமிழில் படித்து மகிழ்ந்த பல சிறந்த கதைகளும் உள்ளன! DON’T MISS IT!
புத்தகத்தை வாங்க கீழ்காணும் சுட்டியை பயன்படுத்தவும்!
நான் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கும் போது டாக்டர் நோ என்கிற பயனர் பெயரை தெரிவு செய்யலாமா என்று கூட ஒரு கணம் தீவிரமாக யோசித்தேன்! டாக்டர் நோ எனும் காலத்தால் அழியாத கதாபாத்திரத்தை நம் மனங்களில் நீங்காத இடம் பெறச் செய்த அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய தமிழ் காமிக்ஸ் உலகின் சார்பாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தலைவர் அவர்கட்கு,
ReplyDeleteதகவல் எனக்கு உங்கள் பதிவு மூலமே தெரிய வந்தது நன்றி. ஹொராக்ஸின் ஜேம்ஸ்பாண்ட் சித்திரங்களைத் தாண்டி என்னால் வேறு எதையும் ரசிக்க இயல்வதில்லை. ஜேம்ஸிற்கு அவர் தந்த ஸ்டைலே அலாதிதான்.
டாக்டர் நோவில் இன்னமும் மறக்காத காட்சி, நீரிற்குள் மூழ்கிய ஜேம்ஸ் ஒர் சிறிய மூங்கில் போன்ற குழாய் வழியாக சுவாசிப்பது.
சிறப்பான பதிவு.
ஆண்டணி....................,,
ReplyDeleteபல்வேறு பாண்டுகளின் நினைவூட்டல்கள்.. மற்றும் அழகான சுட்டிகள்
ReplyDeleteஅன்னாருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteகோர்வையான பதிவு. தொடர்ந்து பதியுங்கள்.
டாக்டர் நோவின் மரணம் எண்ணி மனம் மருகியது! உள்ளம் உருகியது! உணர்வு உடைந்து போனது! கண்கள் கதறியது! அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! மாவீரன் பிறந்தான்... வாழ்ந்தான்... மறைந்தான்..! அதனை எண்ணி என் உள்ளம் ஊமையாய் அழுதது. ஊமையின் உணர்வை உலகம் உணர்ந்ததா? இல்லையே...! அதனால் தான் இந்த பின்னுட்டம்! (இப்போதெல்லாம் இழவு வீட்டில் இலக்கியம் பேசுவது தான் டிரெண்டுங்கண்ணா...)
ReplyDeleteவெல்கம் பேக் அய்யம்பாளையத்தாரே,
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்தின் மூலம் மெளனத்தின் வலியை உணர வைத்து விட்டீர்கள்!
நன்றி!
தலைவர்,
அ.கொ.தீ.க.
ஒரு நல்ல நடிகரின் மறைவு துக்கம் கொள்ள வைக்கிறது. இன்றளவும் அந்த இரும்புக் கைகள் என்னை பயமுறுத்திக் கொண்டே உள்ளன.
ReplyDeleteஅந்த நடிகரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி.
எனக்கு ஒரு சிறிய சந்தேகம். இந்த டாக்டர் நோ கதாபாத்திரத்தின் வெற்றியை அடிப்படையாக வைத்தே இரும்புக்கை கதைகள் தோன்றி இருக்குமோ?
ReplyDeleteஇரும்புக் கை மாயாவியின் மூலம் இதுவாகவும் இருக்கலாமோ?