Tuesday, December 15, 2009

மேரா நாம் ஜோக்கர்!

வணக்கம்,

சமீப காலமாக அ.கொ.தீ.க.வில் இரங்கல் செய்திகளாக வந்து கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்! அதிலிருந்து மாறுதலாக இரு மகத்தான ANNIVERSARY-களை முன்னிட்டு சிறப்பு பதிவு!

ANNIVERSARY – I:

தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு விளங்கியிருக்கும்! 14-12-2009 இந்திய சினிமாவின் பிதாமகர்களில் ஒருவரான அமரர் ராஜ் கபூர் அவர்களது 85-வது ஆண்டு நினைவு நாள் ஆகும்! சார்லி சாப்ளின் பாணியிலான அவரது ஆரம்ப கால திரைப்படங்களை உலகம் போற்றினாலும், அவரது தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுவது மேரா நாம் ஜோக்கர் எனும் காலத்தாலழியா திரைக்காவியமாகும்!

அவர் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர் என்பது பலரும் அறியாதது! நமக்கு மிகவும் பரிச்சயமான இன்ஸ்பெக்டர் ஆசாத் காமிக்ஸ் கதாபாத்திரத்தை தழுவி அவர் ஒரு திரைப்படம் எடுக்க எண்ணியிருந்தார்(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா)! ஆனால் காமிக்ஸ் ரசிகர்களின் துரதிர்ஷ்டம, பாபி திரைப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகிவிட, இந்த முயற்சியில் அவரது நாட்டம் குன்றியது! பாபி திரைப்படத்தில் கூட அவர் மிகவும் ரசித்த ஆர்ச்சி காமிக்ஸ் (நமது இரும்பு மனிதன் அல்ல) பாதிப்புகளைக் காணலாம்!

தன் வாழ்நாள் முழுவதும் தன் துயரங்களை மறைத்து நம்மை சிரிக்க வைத்தவர் ராஜ் கபூர்! மேரா நாம் ஜோக்கர் அவரது வாழ்வில் நிகழ்ந்த இந்த IRONY-ஐ திரவடிவில் நமக்குத் தந்தது! அந்த மேதையின் நினைவாக நாம் படித்த காமிக்ஸ்களில் நாம் கண்ட சில வித்தியாசமான ஜோக்கர்களைத் தொகுத்து வழங்குவதே இந்த பதிவின் நோக்கம்! 

ANNIVERSARY - II:

தனது வலைப்பூவைத் தொடங்கி ஒரு வருடமாக வெற்றிகரமாக செயலாற்றி வரும் நமது அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவர் திரு.கனவுகளின் காதலன் அவர்களை இந்தத் தருணத்தில் வாழ்த்தி அவருக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்!

அவரது ஆண்டு மலர் பதிவினைப் படிக்க கீழ்கானும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

கொலைகாரக் கலைஞன்!

முத்து காமிக்ஸ்-ல் அறிமுகமான இந்த கோமாளி இருமுறை மறுபதிப்பும் செய்யப்பட்டிருக்கிறான்! நண்பர் முத்து விசிறி இது குறித்து ஏற்கெனவே சிறப்பாக பதிவிட்டுள்ளார்! படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

என் பங்குக்கு வெறும் அட்டைப்படங்களுடன் சிலபல சுவாரஸ்யமான தகவல்கள் மட்டும் வழங்குகிறேன்!

  ஆங்கில மூலம் முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு மூன்றாம் பதிப்பு
அட்டைப்படம் Fleetway Super Library - Secret Agent Series No. 05 - Assasins Anonymous Muthu Comics # 009 - Kolaikaara Kalaingan Muthu Comics # 161 - Kolaikaara Kalaingan Comics Classics # 015 - Kolaikaara Kalaingan
புத்தகம் ASSASINS ANONYMOUS கொலைகாரக் கலைஞன்! கொலைகாரக் கலைஞன்! கொலைகாரக் கலைஞன்! +
விண்ணில் மறைந்த விமானங்கள்!
இதழ் FLEETWAY SUPER LIBRARY முத்து காமிக்ஸ் முத்து காமிக்ஸ் காமிக்ஸ் க்ளாசிக்ஸ்
# SECRET AGENT Series No.5 009 161 015
தேதி MARCH 1967 DECEMBER 1972 AUGUST 1987 JUNE 2004
பதிப்பகம் FLEETWAY PUBLICATIONS முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ் முத்து காமிக்ஸ் பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
அச்சிட்டோர் GIBIEMME
MILANO, ITALY
முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி A.M.தியாகராஜன்
சிவகாசி
தி விஜய் புக்ஸ்
சிவகாசி
ஆசிரியர் ??? முல்லை தங்கராசன் M.சவுந்திரபாண்டியன் S.விஜயன்
நாயகர்(கள்) JOHNNY NERO ஜானி நீரோ & ஸ்டெல்லா ஜானி நீரோ & ஸ்டெல்லா ஜானி நீரோ & ஸ்டெல்லா
கதை ??? ??? ??? ???
ஓவியம் ??? ??? ??? ???
தமிழில் - முல்லை தங்கராசன் முல்லை தங்கராசன் முல்லை தங்கராசன்
பக்கங்கள் 132 (B&W) 132 (கருப்பு வெள்ளை) 132 (கருப்பு வெள்ளை) 244 (கருப்பு வெள்ளை)
சைஸ் 13cmx18cm 13cmx18cm 10cmx14cm 9.5cmx13.5cm
விலை 1/6d 90 PAISE ரூ:2/- ரூ:10/-

ஒரே குழுமத்தைச் சேர்ந்த ஒரே புத்தகத்தின் பல்வேறு பதிப்புகள் பல பெயர்கள் கொண்ட பதிப்பகங்கள், மற்றும் பதிப்பாசிரியர்களால் வெளியிடப்பட்டிருப்பதைக் கூர்ந்து கவனிக்கவும்! நமது அபிமான காமிக்ஸ் குழுமத்தினரின் பதிப்புலக சரித்திரம் அவர்கள் வெளியிடும் காமிக்ஸ் போன்றே மிகவும் சுவையானது! என்றேனும் ஒரு தினம் இது குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொண்ட பின் அதைப் பதிந்திட முயல்கிறேன்!

கொலைகாரக் கோமாளி!

திகில் காமிக்ஸ்-ல் வெளிவந்து பிரபலமான கறுப்புக் கிழவியின் கதைகள்-ல் ஒன்று! இதன் ஆங்கில மூலத்தை உங்களுக்கு வழங்குகிறேன்! படித்து மகிழுங்கள்!

Thihil # 49 - Kolaikaara Komali - Page 3scanned 020scanned 021scanned 022

scanned 024scanned 025scanned 026

  Grimm's Ghost Stories # 5 Thihil # 49 - Kolaikaara Komali
கதை THE LAST LAUGH கொலைகாரக் கோமாளி!
தொடர் GRIMM’S GHOST STORIES கறுப்புக் கிழவியின் கதைகள்
இதழ் GOLD KEY திகில்
# 5 49
தேதி AUGUST 1972 DECEMBER 1990
பதிப்பகம் WESTERN PUBLISHING COMPANY, INC. பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
அச்சிட்டோர் WESTERN PUBLISHING COMPANY, INC. – NYC - U.S.A. தி விஜய் புக்ஸ்
சிவகாசி
கதை ??? ???
ஓவியம் ??? ???
தமிழில் - S.விஜயன்
பக்கங்கள் 6 (COLOR) 6 (கருப்பு வெள்ளை)
சைஸ் B5 12cmx16cm
விலை 15c ரூ:2/-

சிங்கத்தின் சிறுவயதில் – கறுப்புக் கிழவி ஸ்பெஷல்!

கறுப்புக் கிழவி குறித்து சிங்கத்தின் சிறுவயதில் தொடரில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் வழங்கியிருக்கும் சுவாரஸ்யமான தகவல்களையும் இத்தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

Lion Comics#206 - SSV 13aLion Comics#206 - SSV 13bLion Comics#206 - SSV 13c

Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-01Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-02Lion Comics # 207 - Kolai Seyya Virumbu - SSV-03

ஜோக்கர்: 

காமிக்ஸ் கொலைகாரக் கோமாளிகள் பற்றி குறிப்பிடும் போது இவரை நாம் மறக்கவே முடியாது! அவர்தான் பேட்மேன்-ன் பரம வைரியான ஜோக்கர்!

இவரை தமிழுக்கு அறிமுகப் படுத்திய நமது அபிமான ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு இந்த சமயத்தில் நம் எல்லோரின் சார்பிலும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

Joker2Romero.nicholson.ledger_(joker)Jokerseries1

ஜோக்கரின் பல்வேறு அவதாரங்கள்!

ஜோக்கர்-ஆக திரைப்படங்களில் தோன்றியவர்கள் இருவர் ஆஸ்கார் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது! ஜோக்கர் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே பதிவில் வழங்குவதென்பது இயலாத காரியம்! ஆகையால் இப்போதைக்கு தமிழில் வெளிவந்த ஜோக்கர் கதைகளின் பட்டியல் மற்றும் அட்டைப்படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு!

Thhil # 21 - Siriththu Kolla Vendum Thihil # 28 - Pazhi Vaangum Joker Thhil # 31 - Maranathin Pala Mugangal Thihil # 54 - Sirikkum Maranam
திகில் காமிக்ஸ் # 21
சிரித்துக் கொல்ல வேண்டும்!
(SEPTEMBER 1987)
திகில் காமிக்ஸ் # 28
பழி வாங்கும் ஜோக்கர்!
(APRIL 1988)
திகில் காமிக்ஸ் # 31 (JULY 1988)
பழி வாங்கும் ஜோக்கர்! – படலம் 2
(மரணத்தின் பல முகங்கள்!)
திகில் காமிக்ஸ் # 54
சிரிக்கும் மரணம்!
(NOVEMBER 1991)

இது குறித்து பின்னொரு நாளில் விரிவான பதிவொன்றை இடுகிறேன்! அதுவரை பொறுமை காக்குமாறு அன்பர்களை வேண்டிக்கொள்கிறேன்!

போனஸ் - ’NUFF SAID:

வெகுமதி!

நெடுநாள் கழித்து மீண்டும் ஒரு வெகுமதி! போட்டியில் சந்திப்பது குறித்து மகிழ்ச்சி! எனவே தாமதமின்றி கேள்விக்குச் செல்வோம்!

 • முதல் வீடியோவில் உள்ள ஜீனா யஹா! மர்னா யஹா! பாடலைத் தழுவிய (டியூனைக் காப்பியடித்த) தமிழ் பாடலைக் கூறுக!

சரியான விடையை முதலில் விரைந்து பின்னூட்டமாக அளிப்போருக்கு பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:-

ஜானி நீரோ:

காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பற்றிய இடுகைகள்:

சிங்கத்தின் சிறுவயதில் அனைத்து பாகங்களையும் படிக்க:

36 comments:

 1. Batman கதைகளின் அட்டை படங்களை போட்டு கலக்கி விட்டீர்கள் .கொலைகாரக் கோமாளி கதை போன மாதம் ஒரு பழைய புத்தக கதையில் கிடைத்தது .Dark Knight படம் வெற்றியடைந்ததற்கு Joker பத்திரம் ஓர் முக்கிய பங்கு வகிக்கும் .

  அன்புடன்,
  லக்கி லிமட்,
  உலவல்

  ReplyDelete
 2. அருமை நண்பர் டாக்டர் செவன் அவர்களே,

  அருமையான பதிவு. என்னடா இது நடிகர் ராஜ் கபூருக்கும் தமிழ் காமிக்ஸ் உலகுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால் அவருடைய மேரா நாம் ஜோக்கர் படத்தை கொண்டு ஜோக்கர் வரும் கதைகளை பற்றிய யாரும் எதிர் பார்க்காத ஒரு பதிவை இட்டு அசத்தி விட்டீர்கள்.

  அட்டை படங்கள் யாவும் அருமை. சிறப்பாக இருக்கின்றன. தொடருகள் உங்கள் அசத்தல் பதிவுகளை.

  ReplyDelete
 3. பிலீத்வே புத்தகங்கள் இத்தாலியில் அச்சிடப் பட்டன என்பது ஆச்சர்யமூட்டும் சங்கதி.

  ReplyDelete
 4. மதிபிற்குரிய தலைவர் அவர்கட்கு,

  முதலில் என் இதயத்தோட்டத்தில் பறித்த பூக்களால் நன்றிகள். உங்கள் சமர்ப்பணத்திற்கு நான் தகுதி கொண்டவன்தானா என்பதே கேள்வி. என்னைப் பெருமைப்பட வைத்துவிட்டீர்கள் தலைவரே.

  என்னை எழுதச் சொல்லி தீயைப்பற்ற வைத்தது நீங்கள்தானே. உங்கள் நம்பிக்கையை நான் வீணாக்கவில்லை என்றே நம்புகிறேன். உங்கள் அன்பான ஆதரவுடன் தொடர்வோம் பயணத்தை.

  பிரபல நடிகர் ராஜ்கபூர் அவர்களின் நினைவை இழையாகக் கொண்டு நீங்கள் தந்திருக்கும் ஜோக்கர் பதிவு அருமை தலைவரே.

  அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு கமல் ராஜ் கபூர் மீசை வைத்திருந்ததாகவே எண்ணுகிறேன். அப்புவின் பாடலின் சாயல் புரிகிறது.

  ஹிந்திப்பாடலின் சாயல் கொண்ட பாடல் - காதோடுதான் நான் பாடுவேன், மனதோடுதான் நான் பேசுவேன்- என்று நினைக்கிறேன். தவறாகவும் இருக்கலாம்.

  அருமையான ஸ்கேன்கள், தமிழில் ஒரு பேட்மேன் கதை படிக்க ஆசையாக இருக்கிறது.

  ஜோக்கர் பாத்திரம் நீதிக்காவலன் பேட்மேனைப் பார்த்து சமூகம் சிரிக்கும் சிரிப்பாகவே நான் உணர்கிறேன். அதே போல் ஜோக்கரையும், ஸ்பைடரையும் மோதவிட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அதிரும்மில்ல..

  சுறுசுறுப்புடன் வரும் பதிவுகள் இப்படியே தொடரட்டும்.

  ReplyDelete
 5. நல்ல பதிவு டாக்டர் அவர்களே,
  Dark Knight படத்தில் ஜோக்கர் பாத்திரம் கலக்கலாக படைக்கப்பட்டு இருக்கும். அதில் நடித்த நடிகர் படம் வெளிவரும் முன்பே இறந்து விட்டதாக கேள்விப்பட்டேன். அப்படியா??

  ஜோக்கர் vs ஸ்பைடர் - அருமையான proposal கனவுகளின் காதலர் அவர்களே. ஜோக்கர் vs பேட்மேன் விட சூப்பராக இருக்கும். இந்த யோசனையெல்லாம் ஏன் காமிக்ஸ் படைப்பாளிகளுக்கு வரமாட்டேங்குதோ....

  ReplyDelete
 6. தன்னிகரில்லாத தலைவருக்கு,

  வித்தியாசமான பதிவுகளை இடுவதில் தங்களுக்கு ஈடு இணை இல்லை என்பதை மறுபடியும் நிரூபித்து இருக்கிறீர்கள்.இந்த மாதிரி ஒரு பதிவை இட யாருக்கும் தோணாது. உண்மையில் சிறப்பாக இருந்தது.

  அதுவும் அந்த திகில் காமிக்ஸ் அட்டைப்படங்கள் கண்ணை பறித்தன. திகில் காமிக்ஸ் குறித்து ஒரு பதிவிட வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டது.

  ReplyDelete
 7. கருப்பு கிழவி கதைகளை பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி. அதுவும் முழு கதையை வண்ணத்தில் வழங்கியமைக்கு நன்றி.

  ReplyDelete
 8. very good connectivity with the ultimate showman with the ultimate villain.

  2 months back you, yourself posted a news in which joker was voted as the ultimate villain. Now you have made a post on him relating to the ultimate showman.

  great going.

  ReplyDelete
 9. if this trend continues, what next?

  ReplyDelete
 10. ஆஹா,

  இப்படியெல்லாம் கூட டாபிக் கொண்டு வரலாமா?

  அருமை நண்பரே, அருமை. அட்டை படங்கள் எல்லாமே சூப்பர். பேட்மேன் கதைகளை மறுபடியும் படிக்க ஆவல் எழுகிறது.

  ஆனால் இப்போது வரும் மொக்கை பேட்மேன் கதைகளை விட முன்பு வந்த கதைகளே நன்றாக இருப்பதாக படுகிறது.

  ReplyDelete
 11. புத்தாண்டு பதிவு என்ன தலைவரே?

  ReplyDelete
 12. ரொம்ப பொறாமையா இருக்குங்க. இவ்வளவு காமிக்ஸ் வெச்சுருக்கீங்களே. அதுவும் லயன்,திகில்,முத்து.

  என்னோட பேவரிட் கருப்பு கிழவி கதைகள். இங்கிலீஷ் பதிப்பு எதாவது ஆன்லைன்ல படிக்குற மாதிரி இருந்தா கொஞ்சம் சொல்லுங்க.

  ReplyDelete
 13. Dr 7,

  தாத்தா பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  கரீனா கபூர் (ராஜ் கபூர் பேத்தி).

  ReplyDelete
 14. டாக்டர் செவன்,
  தாத்தா பற்றிய சிறப்பு பிறந்த நாள் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  கரிஷ்மா கபூர் (ராஜ் கபூர் பேத்தி).

  ReplyDelete
 15. டாக்டர் செவன்,
  வேண்டுகோளின்படி ராஜ் கபூர் பற்றிய சிறப்பு பிறந்த நாள் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. மருத்துவர் ஐயா,

  நானும் என்னுடைய மகனும் பேசிக் கொள்வது இல்லை என்றாலும் கூட என் வேண்டுகோளின்படி ராஜ் கபூர் பற்றிய சிறப்பு பிறந்த நாள் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. டாக்டர்,

  தேங்க யு பார் தா ஸ்பெஷல் போஸ்ட் ஆன் மை பிரதர்.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. தம்பி மருத்துவர் ஏழு,

  நன்றிகள் பல.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. சார், பயங்கரவாதி சார்,

  அந்த பதிவ போட்டதற்கு பல கோடி நன்றிகள். மெகான் பாக்ஸ் வந்து உங்கள் கனவில் கெட்ட ஆட்டம் போடட்டும்.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. ஹலோ டாக்டர், ஹவ் ஆர் யு?

  தேங்க்ஸ் பார் த பதிவு.

  பை தி வே, மிஸ்டர் இந்தியா ரெண்டாம் பாகத்தில் நான் வில்லனாக நடிக்க வில்லை.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. தேங்க்ஸ் டாக்டர் தேங்க்ஸ்.

  பை தி வே, மிஸ்டர் இந்தியா ரெண்டாம் பாகத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க வில்லை, என்னுடைய தம்பி வில்லனாக நடிக்க வில்லை.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. ஒக்க மக்கா,

  பதிவில் டிஸ்க்ளைமர்'ல் என்னை பற்றி கொஞ்சம் சொன்னதற்கு நன்றி.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. மருத்துவர் ஐயா,

  பதிவுக்கு நன்றி.


  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. யோவ்,

  எனக்கும் இந்த பதிவுக்கும் என்னையா சம்பந்தம்? இவான் பாவ்லோவ்வுக்கும் காமிக்க்சுக்கும் என்னையா சம்பந்தம்?

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. கபூர் என்று பெயர் இருந்ததால் தான் நானும் கரீனா கபூரும் பிரிந்தோம். ஆனால் உண்மையில் நாங்கள் அண்ணன்-தங்கச்சி கிடையாது.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. தம்பி,


  இப்போதெல்லாம் யாரும் என்னை கவனிப்பதே இல்லை. எனக்கும் ரேப் செய்ய ஏதாவது ஒரு படத்திலோ, அல்லது வேறு விதத்திலோ வாய்ப்பு கொடுங்கள்.


  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. டாக்டர் மாமோய்,

  சால தேங்க்ஸ் மாமோய்.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. நன்றிகள் பல மருத்துவ தோழரே.


  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. வணக்கம் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே,

  என்னை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், ரோஜா படத்தில் நானும் உங்களை போல ஒரு பயங்கரவாதிதான் என்ற முறையில் உங்களிடம் நான் வைத்த வேண்டுகோளை நீங்கள் செவி சாய்த்தமைக்கு நன்றி.


  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. ஹலோ மிஸ்டர் பயங்கரவாதி,

  ஐ ஹெர்ட் எ லாட் அபௌட் யு. தேங்க்ஸ் பார் த ஸ்பெஷல் போஸ்ட் ஆன் ராஜ் கபூர்.  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. ஹலோ மிஸ்டர் பயங்கரவாதி,

  ஐ ஆல்சோ ஹெர்ட் எ லாட் அபௌட் யு. தேங்க்ஸ் பார் த ஸ்பெஷல் போஸ்ட் ஆன் ராஜ் கபூர்.  அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!