வணக்கம்,
சமீபத்தில் கிங் விஸ்வா வெளியிட்டிருந்த காமிக்ஸ் கேள்வி-பதில் பதிவில் நண்பர்கள் சிலர் ஜான் மாஸ்டர் குறித்து விவரங்கள் கேட்டிருந்தனர்! அவர்களது கேள்விகளுக்கு பதில் கூறும் விதமாகவே இப்பதிவு வந்திருக்கிறது! விம்பிள்டன் போட்டிகளின் போதே வெளியிடப்பட்டிருக்க வேண்டிய பதிவு இது! ஆனால் சரியான விவரங்கள் கிடைக்கப் பெறாததால் மிகத் தாமதமாக வருகிறது!
இச்சமயத்தில் எனக்கும் கிங் விஸ்வாவுக்கும் உள்ள வேண்டப்பட்ட விரோதம் குறித்து எழுதியே ஆக வேண்டும்! அவர் தீவிர ரோஜர் ஃபெடரர் வெறியர்! எனக்கு ரஃபேல் நடால்-ஐயும் பிடிக்கும்! இம்முறை ரஃபா விம்பிள்டனில் இரண்டாவது முறையாக வெற்றிவாகை சூடியதில் மனிதர் கடுமையாக கொந்தளித்துப் போயிருக்கிறார்! அதுவும் ஃபைனலில் ஒரு செட்டைக் கூட வெல்ல முடியாத ஒரு மொக்கைப் பாண்டியிடம் அவரது ஆள் குவார்ட்டர்-ஃபைனலிலேயே தோற்றதை அவரால் ஜீரனிக்கவே முடியவில்லை! அவரை சாந்தப் படுத்தும் விதமாக இப்பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்!
ஓகே! மொக்கை போட்டது போதும்! இனி மேலும் நேரத்தை வீணாக்காமல் நேரடியாக பதிவுக்கு போவோம்!
புத்தக விவரங்கள்:
அட்டைப்படம் | |
கதை | சதி வலை! |
இதழ் | லயன் காமிக்ஸ் (மாத இதழ்) |
வெளியீடு | 13 |
முதல் பதிப்பு | மே 1985 (கோடை மலர்) |
மறுபதிப்புகள் | இதுவரை இல்லை |
பதிப்பகம் | லயன் காமிக்ஸ் |
ஆசிரியர் | S.விஜயன் |
அச்சிட்டோர் | முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி |
நாயகர்(கள்) | ஜான் மாஸ்டர் |
மூலம் | MASTER-SPY (ஆங்கிலம்) |
இதழ் | TIGER (Weekly) |
வெளியீடு | IPC MAGAZINES LTD. |
முதல் பதிப்பு | APR 1983 TO JAN 1984 |
கதை | ??? |
ஓவியம் | SANDY JAMES |
தமிழில் | S.விஜயன் |
பக்கங்கள் | (கருப்பு வெள்ளை) |
சைஸ் | 8"x11" |
விலை | ரூ:4/- (1985 முதல் பதிப்பின் போது) |
CREDITS | |
விளம்பரம் | |
முதல் பக்கம் | விம்பிள்டன்-ஐ வெல்ல வேண்டும் என்கின்ற இங்கிலாந்து கனவு இதில் வெளிப்படுகிறது! ஆனால் இன்னும் எந்த இங்கிலீஷ்காரனும் விம்பிள்டன் ஃபைனலுக்கு கூட போகவில்லை என்பது வேடிக்கையான வினோதம்! |
வாசகர் கடிதம் | அந்த காலத்து லயன் காமிக்ஸ்களில் ராணி காமிக்ஸ் ஸ்டைலில் சிறப்பான விமர்சனங்களுக்கு ரூ.25/- பரிசு! வழங்கப்பட்டது! இதோ அதற்கான அறிவிப்பு! லயன் காமிக்ஸ் # 015 - சைத்தான் விஞ்ஞானி-ல் வெளிவந்த வாசகர் கடிதம் பகுதி! பரிசு பெற்ற அந்த விமர்சனம் இதோ! |
அட்டைப்படம் | |
கதை | மாஸ்கோவில் மாஸ்டர்! |
இதழ் | லயன் காமிக்ஸ் (மாத இதழ்) |
வெளியீடு | 23 |
முதல் பதிப்பு | மார்ச் 1986 |
மறுபதிப்புகள் | இதுவரை இல்லை |
பதிப்பகம் | லயன் காமிக்ஸ் |
ஆசிரியர் | S.விஜயன் |
அச்சிட்டோர் | முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி |
நாயகர்(கள்) | ஜான் மாஸ்டர் |
மூலம் | MASTER-SPY (ஆங்கிலம்) |
இதழ் | TIGER (Weekly) |
வெளியீடு | IPC MAGAZINES LTD. |
முதல் பதிப்பு | APR 1983 TO JAN 1984 |
கதை | ??? |
ஓவியம் | SANDY JAMES |
தமிழில் | S.விஜயன் |
பக்கங்கள் | (கருப்பு வெள்ளை) |
சைஸ் | 10cmx14cm |
விலை | ரூ:2.50/- (1986 முதல் பதிப்பின் போது) |
CREDITS | |
விளம்பரம் | |
முதல் பக்கம் | |
வாசகர் கடிதம் |
சுவாரசியமான துணுக்குகள்:
- இக்கதைத் தொடரின் ஓவியர் SANDY JAMES நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானவர்! அதிரடிப் படை, சூப்பர் ஹீரோ டைகர் (ராணி காமிக்ஸ்) கதைகளுக்கு துடிப்பான ஓவியங்கள் வரைந்தது இவர்தான்! துரதிர்ஷ்டவசமாக இவரைப் பற்றிய தகவல்கள் இனையத்தில் எதுவும் கிடைக்கவில்லை! மன்னிக்கவும்! இவரது அற்புத ஓவியங்கள் இக்கதைத் தொடருக்கு மேலும் மெருகூட்டுகின்றன!
- லயன் காமிக்ஸ் # 013 - சதி வலை! தான் லயன் காமிக்ஸ்-ன் முதல் கோடை மலர் ஆகும்! பெரிய சைஸில் ரூ.4/- விலையில் அசத்தலான இந்த புத்தகம் காமிக்ஸ் வேட்டையர்களின் கனவு பொக்கிஷங்களில் ஒன்று! INFACT ஜான் மாஸ்டர் தோன்றும் இவ்விரு புத்தகங்களும் கிடைப்பது மிகவும் அரிது!
- தமிழில் வெளிவந்த முதல் விளையாட்டு சம்பந்தப்பட்ட காமிக்ஸ் ஹீரோ ஜான் மாஸ்டர் தான் என்பது எனது கருத்து! இவரது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!
- இவரது கதைகளில் இவரது கோணங்கி அஸிஸ்டெண்டாக வரும் ராபின் கதாபாத்திரம் காமிக்ஸ் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்! சூப்பர் ஹீரோ டைகர்-க்கு ஒரு ஹென்றி போல் ஜான் மாஸ்டர்-க்கு ஒரு ராபின் அமைந்தது அவரது அதிர்ஷ்டமே! இவரது கண்டுபிடிப்புகள் ஆபத்து நேரத்தில் வேலை செய்கிறதோ இல்லையோ நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்! ஆனால் இவரது ஆங்கில ஒரிஜினல் பெயர்தான் (FERGUS THATERY) வாயில் நுழைய மாட்டேனென்கிறது!
- மொத்தம் இரண்டேயிரண்டு கதைகளில் மட்டுமே வந்திருந்தாலும் கூட தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார் ஜான் மாஸ்டர்! ஆனால் ஆங்கிலத்தில் இவரது நிலைமை பரிதாபகரமானது! இவர் குறித்த இந்த அற்ப தகவல்களை தேடிப் பிடிப்பதற்கே இவ்வளவு காலம் ஆகிவிட்டது! அதுவும் இவர் தோன்றிய TIGER வார இதழ் இவர் போன்ற விளையாட்டு வீரர்களை நாயகர்களாகக் கொண்ட காமிக்ஸ்களுக்கு பெயர் போனது! இவர்களுள் ROY OF THE ROVERS மட்டும் மிகப் பிரபலம்! ஆனால் பல டஜன் கதாநாயகர்களுள் ஜான் மாஸ்டர் காணாமல் போய் விட்டது நமது துரதிர்ஷடமே!
ஆங்கில மூலம்:
இத்தொடரின் ஆங்கில மூலம் ஆன்-லைனில் கிடைப்பதென்பது வெகு அரிதாக உள்ளது! இது வரையில் இது ஒரு பாகம் மட்டுமே ஆன்-லைனில் கிடைத்தது! தமிழில் கூட புத்தகங்கள் எளிதாக கிடைத்துவிடும் போலிருக்கிறது! லயன் காமிக்ஸ் # 023 - மாஸ்கோவில் மாஸ்டர்! கதையிலிருந்து சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு!
ஹாட்-லைன்:
ஜான் மாஸ்டர் கதைகள் ஏன் தொடர்ந்து வருவதில்லை என்று வாசகர்கள் பலரும் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களை பலமுறை கேட்டிருக்கின்றனர்! அவர் எழுதிய முதல் ஹாட்-லைன்-லும் இக்கேள்வி கேட்கப்பட்டது! அதற்கு அவர் அளித்துள்ள சுவாரசியமான பதிலைப் படித்து மகிழுங்கள்!
சிங்கத்தின் சிறுவயதில்:
ஜான் மாஸ்டர் குறித்து சிங்கத்தின் சிறுவயதில் தொடரில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் கூறியுள்ளதைப் படித்து மகிழுங்கள்!
சிங்கத்தின் சிறுவயதில் அனைத்து பாகங்களும் படிக்க:
நிறைகள்:
- ஆக்ஷன் ரசிகர்களுக்கு சரியான விருந்து! விளையாட்டு சார்ந்திருப்பது கூடுதல் சிறப்பு!
- அட்டகாசமான ஓவியங்கள்! அதிரடி கதைத் திருப்பங்கள்! ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் ஜெட் வேக கதையமைப்பு!
குறைகள்:
- ஒன்றும் இல்லை! கதைத் தொடர் இரண்டு கதைகளோடு முடிந்து விட்டதைத் தவிர!
நன்றிகள்:
- முத்து விசிறி – வழக்கம் போல ஆங்கிலத் தொடரின் அனைத்து விவரங்களையும் அளித்தமைக்கு!
- ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் – இக்கதைத் தொடரை நமக்கு அறிமுகம் செய்தமைக்கு!
- பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்த உங்களுக்கும்தான்!
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தலைவரே, மீ த ஃபர்ஸ்ட்டு!
ReplyDeleteபதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!
விம்பிள்டன் முடிந்து பல வாரங்கள் கழித்து வந்துள்ளது இந்த பதிவு. இருந்தாலும்கூட யூ. எஸ் ஓபன் முன்னரே வந்துள்ளதால் பாராட்டுக்கள்.
மாஸ்கோவில் மாஸ்டர் - என்ன ஒரு தலைப்பு. ச்சே, எடிட்டர் பின்னிட்டார்.
தலைவரே, மீ த ஃபர்ஸ்ட்டு!
ReplyDeleteகொய்யால, மீ தி செகண்டு. (நல்ல வேளை) ஹைய்யா! சிபிக்கு முன்னாடி கமெண்ட் போட்டாச்சு!
நீங்க எல்லாம் பதிவு போடுறத பார்த்தால், நானும் கூட ஒரு இரங்கல் பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.
தலைவரே,
ReplyDelete//தமிழில் வெளிவந்த முதல் விளையாட்டு சம்பந்தப்பட்ட காமிக்ஸ் ஹீரோ ஜான் மாஸ்டர் தான் என்பது எனது கருத்து! இவரது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!//
சமீபத்தில் எஸ்ரா கூட இதுபற்றி எழுதி இருந்தார். தமிழில் இதுவரையில் (ஒரே ஒரு சுஜாதா கதை தவிர) கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து கதைகள் எழுதப்படவே இல்லையாம். கால்பந்தாட்டமும் அவ்வாறே உள்ளது. எனவே நீங்கள் கூறும் அந்த காரணம் சரிதான்.
ஒலக காமிக்ஸ் ரசிகரே,
ReplyDeleteசுந்தர ராமசாமி எழுதிய ஜே.கே (மாதவன் பூஜா நடித்த ஜே.ஜே இல்லைங்கோவ்) நாவலில் கால்பந்தாட்டம் இடம் பற்றிருக்கும். மறந்துவிடவேண்டாம்.
//இச்சமயத்தில் எனக்கும் கிங் விஸ்வாவுக்கும் உள்ள வேண்டப்பட்ட விரோதம் குறித்து எழுதியே ஆக வேண்டும்! அவர் தீவிர ரோஜர் ஃபெடரர் வெறியர்! எனக்கு ரஃபேல் நடால்-ஐயும் பிடிக்கும்! இம்முறை ரஃபா விம்பிள்டனில் இரண்டாவது முறையாக வெற்றிவாகை சூடியதில் மனிதர் கடுமையாக கொந்தளித்துப் போயிருக்கிறார்! அதுவும் ஃபைனலில் ஒரு செட்டைக் கூட வெல்ல முடியாத ஒரு மொக்கைப் பாண்டியிடம் அவரது ஆள் குவார்ட்டர்-ஃபைனலிலேயே தோற்றதை அவரால் ஜீரனிக்கவே முடியவில்லை! அவரை சாந்தப் படுத்தும் விதமாக இப்பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்!//
இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தோமாஸ் பெர்டிக் வளர்ந்து வரும் ஒரு வீரர். அவரது பேக் ஹான்ட் மற்றும் ஸ்லைசிங் ஷாட்டுகளை தலைவர் ஒருமுறை மறுபடியும் பார்க்கவேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவர் ஒரு டாப் 5 வீரராக வருவார் என்பது என்னுடைய எண்ணம்.
குறிப்பாக இவருடைய ஆள் கோர்ட் கேம் ஸ்டைலானது இவரை பல இடங்களுக்கு கொண்டு போகும் (His Game Will Take Him To Places என்ற ஆங்கில வசனதிர்ற்கு இணையான தமிழ் வசனம் இதுதானே? வலையுலக "கலைஞர்:, டிரான்ஸ்லேட் சிங்கம் காதலர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும், வந்து எங்கள் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்).
me the first
ReplyDeleteதமிழுக்கு கூட வரமால், பதிவு திறக்கும் முன்னரே பின்னூட்டம் போட நினைத்தேன் நண்பர்கள் இன்னும் வேகமாக வருகிறார்கள்
ReplyDelete//லயன் காமிக்ஸ் # 013 - சதி வலை! தான் லயன் காமிக்ஸ்-ன் முதல் கோடை மலர் ஆகும்! பெரிய சைஸில் ரூ.4/- விலையில் அசத்தலான இந்த புத்தகம் காமிக்ஸ் வேட்டையர்களின் கனவு பொக்கிஷங்களில் ஒன்று! INFACT ஜான் மாஸ்டர் தோன்றும் இவ்விரு புத்தகங்களும் கிடைப்பது மிகவும் அரிது//
ReplyDeleteநல்லவேளையாக இந்த இரண்டு புத்தகங்களுமே என்னிடம் டபுள்ஸ் உள்ளது.
//His Game Will Take Him To Places //
ReplyDeleteஅவளது ஆட்டம் அரங்கேறும் நாளில் அகிலமே அவள் ஆளுகைக்குள்
தல,
ReplyDelete//அவளது ஆட்டம் அரங்கேறும் நாளில் அகிலமே அவள் ஆளுகைக்குள்//
கவிதை கவிதை. இத கொஞ்சம் நோட் பண்ணுங்கப்பா. அடுத்த செம்மொழி மாநாட்டிற்கு தலைவர் ரெடி. (ரெட்டி இல்லீங்கோவ், ரெடி).
தல, நீங்க பயங்கர பிசியா? ரொம்ப நாலா உங்க அதிரடி பதிவுகள காணோம்? பணிச்சுமை அதிகமோ?
தலைவர் அவர்களே,
ReplyDeleteஜான் மாஸ்டர் குறித்த உங்கள் பதிவு வழி மேலும் ஒரு நாயகனைக் குறித்து அறிந்து கொள்ளமுடிந்தது நன்றி.
தலைவரே,
ReplyDeleteமீ தி டென்த். வந்துட்டோம்ல. நாங்களும் நடால் வெறியர்கள்தான். பெடரர் அங்கிள் இன்னுமா ரிடயர்ட் ஆகல?
தோழர்,
ReplyDelete//பெடரர் அங்கிள் இன்னுமா ரிடயர்ட் ஆகல?// இது கொஞ்சம் இல்லை, ரொம்பவும் ஓவர். இதனை கண்டித்து நான் உடனடியாக ஜெயசூர்யா ஸ்நாக்ஸ் சாப்பிடும் விரதத்தை மேற்கொள்கிறேன்.
நம்முடைய எடிட்டரிடம் கொஞ்சம் இந்த விளம்பரங்களை மறுபடியும் காட்டுங்கள். ஒரு காலத்தில் கதைகளை விட விளம்பரங்களை சுவையாக வெளியிட்டவர் அவர். அவருடைய டீசர் விளம்பரங்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஆனால் தற்போது வெறும் அரை பக்க மற்றும் ஒரு பக்க விளம்பரங்களையே வெளியிடுகிறார். தீபாவளியை விட தீபாவளிக்கு காத்திருத்தலே அதிக சுகம் என்பது உண்மை. அதைப்போல புத்தகங்களை விட அதற்காக ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வாங்க வைப்பது தனி சுகம்.
ReplyDeleteஇப்போது பந்து ஆசிரியரின் கோர்ட்டில் உள்ளது. the ball is in his court (எங்களுக்கும் இங்கிலீஷ் தெரியும்ல?)
Suimply superb. awesome find. all along i've been waiting to find more about john master and finally you've given it here. i just love the way the entire storyline is designed.
ReplyDeletei was just wondering about the blue colour advertisement for master's 1st ad. wonder in which magazine it came.
ReplyDeletealso for the moscowil master story, i've seen only the 2nd ad and not the 1st one. can you just mention in which magazine these appeared?
Thanks for the complete post including all adverts, letters and editorial response. it's like this: to know everything about john master, one should come here.
ReplyDeletejust like the advertisement, this post is 6 in 1 (Ads, Cover, 1st page, letters, editorial respsonse and english original).
//Vedha said...
ReplyDeletei was just wondering about the blue colour advertisement for master's 1st ad. wonder in which magazine it came.
also for the moscowil master story, i've seen only the 2nd ad and not the 1st one. can you just mention in which magazine these appeared?//
படங்களின் மேல் மெளஸை ஓட்டினாலே செய்தாலே அவற்றின் விவரங்களை அறிய முடியும்! இருப்பினும் இதோ இன்னொரு முறை!
லயன் காமிக்ஸ் # 011 - மரணக் கோட்டை! (Back Inner Wrapper - Hence the blue color)
லயன் காமிக்ஸ் # 012 - பழி வாங்கும் பொம்மை!(சதி வலை!)
லயன் காமிக்ஸ் # 022 - சதுரங்க வெறியன்! (மாஸ்கோவில் மாஸ்டர்!)
திகில் # 03 - பயங்கரப் பூனைகள்! (விற்பனையாகிறது விளம்பரம்)
தலைவர்,
அ.கொ.தீ.க.
தலைவர் தூள் கிளப்பி விட்டார். நானும் இந்த ஜான் மாஸ்டர் பற்றிய கேள்வியை கேட்டுள்ளேன். தெரியபடுதியமைக்கு நன்றி.
ReplyDeleteஜான் மாஸ்டரின் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் அந்த தெளிவான படங்கள். அதைப்போலவே அதிரடிப்படை ஓவியங்களும் அருமையாக இருக்கும். அதிரடிப்படை கதையில் கேப்டன் ஜான் வெஸ்ட் இறந்தபோது நானும் அழுதுள்ளேன். சிறுவயதில் என்னை மிகவும் பாதித்த சம்பவங்களில் அதுவும் ஒன்று.
ReplyDeleteஇந்த ஓவியர்தான் மிஸ்டர் ஜெட்டும் வரைந்தாரா என்பதை தெளிவு படுத்தவும்.
//தமிழில் வெளிவந்த முதல் விளையாட்டு சம்பந்தப்பட்ட காமிக்ஸ் ஹீரோ ஜான் மாஸ்டர் தான் என்பது எனது கருத்து! இவரது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்//
ReplyDeleteகண்டிப்பாக அது ஒரு காரணம். சிறந்த கதையமைப்பும், தெளிவான ஓவியங்களும் மற்ற காரணங்கள்.
//ஆனால் இவரது ஆங்கில ஒரிஜினல் பெயர்தான் (FERGUS THATERY) வாயில் நுழைய மாட்டேனென்கிறது!//
இதுகூட நமது எடிட்டரின் திறமைகளில் ஒன்று. பெயர்கள் சரியாக இல்லையென்றால் அந்த ஹீரோ வெற்றி பெறுவது கடினமே. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெர்குஸ் தட்டெறி என்ற பெயரை எப்படி படித்திருப்பார்களோ தெரியாது, என்னால் சிறுவயதில் ஒழுங்காக படிக்க இயலாது. அதனால் அந்த பெயரை சிம்பிளிபை செய்து ராபின் என்று வைத்து விட்டார் ஆசிரியர்.
அந்த காலத்தில் வந்திருந்த வாசகர் கடிதங்களை படிப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி. பல கடிதங்கள் கவிதைகளாக இருப்பது மற்றுமொரு சிறப்பு. எனக்கு தெரிந்தவரை ராணி காமிக்ஸில் ஒரு வாசகர் கடிதம்கூட கவிதை வடிவில் வந்தது கிடையாது.
ReplyDeleteஅதனைப்போலவே ஹாட் லைனில் ஆசிரியர் அப்போதே ஓவியர்களைப்பற்றிய விவரங்களை தரவிழைந்துள்ளதை கவனியுங்கள்.
தலைவரே,
ReplyDelete// INFACT ஜான் மாஸ்டர் தோன்றும் இவ்விரு புத்தகங்களும் கிடைப்பது மிகவும் அரிது!//
என்னிடம் இந்த இரண்டு புத்தகங்களுமே தற்சமயம் கைவசம் இல்லாததால் சில பல கேள்விகள்:
1. சதி வலை கதையில் ஜான் மாஸ்டரின் சகாவாக வந்து பாதியில் இறந்துவிடும் அந்த உளவாளியின் பெயர் என்ன?
2. இந்த இரண்டு கதைகளை தவிர வேறொரு ஜான் மாஸ்டர் கதைக்கும் ஆசிரியர் விளம்பரம் கொடுத்ததாக நினைவு (தவறாகவும் இருக்கலாம்). இந்த தகவலை சரிபார்த்து கூறுங்கள்.
3. ஜான் மாஸ்டர் உண்மையில் உளவாளியாக சேர்ந்தாரா? அல்லது உளவுத்துறையினரால் பயன்படுத்தப்பட்டாரா? முதல் கதையில் அவரை வற்புறுத்தியே உளவு வேளையில் பயன்படுத்தியதாக நினைவு.
தலைவரே,
ReplyDeleteஇந்த புதிய டெம்பிளேட்டில் உங்களின் பதிவுகள் கண்ணை உறுத்தாமல் ஒரு தென்றல் போல எங்கள் எண்ணங்களை வருடுகின்றன. பழைய நினைவுகள் என்னும் ஊஞ்சலில் எங்களை தாலாட்டும் உங்களுக்கு நன்றி என்னும் மூன்று வார்த்தையை விட பெரிதாக வேறென்ன சொல்ல இயலும்?
மீ த பேக்.
ReplyDeleteபதிவு சூப்பர்.
வழக்கத்தை விட பெரிதான படங்கள், பல விமர்சனக் கடிதங்கள் என்று இந்த பதிவு களை கட்டுகிறது.
//ஜான் மாஸ்டர் உண்மையில் உளவாளியாக சேர்ந்தாரா? அல்லது உளவுத்துறையினரால் பயன்படுத்தப்பட்டாரா? முதல் கதையில் அவரை வற்புறுத்தியே உளவு வேளையில் பயன்படுத்தியதாக நினைவு.//
ReplyDeleteவேண்டாவெறுப்பாகவே ஜான் மாஸ்டர் உளவாளியாக செயல்பட்டதாக நினைவு.
ஜான் மாஸ்டரும் ஜான் சில்வரும் ஒரு வகையில் ஒரே மாதிரியான கதைகளே. இருவரும் விருப்பமில்லாமலே உளவு வேளையில் ஈடுபடுகின்றனன்ர்.
கதைகளின் சுருக்கத்தையும் இனிவரும் பதிவுகளில் சேர்த்து விடுங்கள் தலைவரே. அப்போதுதான் இந்த பதிவுகள் முழுமையாக இருக்கும்.
ReplyDeleteமுன்பு நீங்கள் கதை சுருக்கத்தையும் அளித்து வந்தீர்கள் (புயல் வேக இரட்டையல் பதிவில் பார்க்கவும்). அதனைப்போலவே கதை சுருக்கம் அளிக்கவும்.
வாசகர் கடிதங்கள் வெளியிட்டது இந்த பதிவின் ஒரு சிறப்பு அம்சம்.
ReplyDeleteகுறிப்பாக லயன் முத்து காமிக்ஸ் கதைகளில் வரும் வாசகர் கடிதங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். ராணி காமிக்ஸில் வரும் வாசகர் கடிதங்களை சற்று கவனியுங்கள். மூன்று பேர் சேர்ந்து ஒரு கருத்தை சொன்னதுபோல பப்ளிஷ் செய்து இருப்பார்கள். நானும் ஒரு முறை கடிதம் எழுதினேன். ஆனால் அந்த கருத்தை வெளியிடாமல் வேறொரு கருத்துடன் என்னுடைய ஊர் மற்றும் என் பெயரையும் வெளியிட்டு விட்டனர்.
அட்டைப்படங்கள் இரண்டுமே அருமை. ஆனால் இரண்டாவது அட்டையில் கலரிங் மேட்ச் ஆகாமல் சற்று விலகியிருப்பதை கவனியுங்கள்.
ReplyDeleteசில அட்டைப்படங்களில் இப்படி ஆகிவிடுவது உண்டு. பின்னர் இவை ரேர் ஆன லிஸ்டில் சேர்த்துவிடலாம் (வெளிநாடாக இருந்தால்).
தலைவரே வோட்டளிக்க இயலவில்லை. சற்று கவனியுங்கள்.
ReplyDeleteதலைவரே,
ReplyDeleteமினி லயனில் கூட ஒரு கதை வந்தது. ஆனால் இந்த ஜான் மாஸ்டர் கதைகளுக்கு பிறகே வந்தது. அதுகூட விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையே. அதில் ஒரு வாலிபன் டேபிள் டென்னிஸ் விளையாடுவான். ஆனால் அவன் தந்தை அவனை புட்பால் கோல்கீப்பராக்க விரும்புவார். ஒரு உணர்ச்சிகரமான கதை அது.
//காமிக்ஸ் காதலன் said...
ReplyDeleteஇந்த ஓவியர்தான் மிஸ்டர் ஜெட்டும் வரைந்தாரா என்பதை தெளிவு படுத்தவும்.//
நிச்சயமாக இல்லை! அதை வரைந்தவர் வேறொருவர்! மிஸ்டர் ஜெட் குறித்த பதிவு விரைவில் வெளிவரும் போது அவர் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்படும்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//காமிக்ஸ் காதலன் said...
ReplyDelete1. சதி வலை கதையில் ஜான் மாஸ்டரின் சகாவாக வந்து பாதியில் இறந்துவிடும் அந்த உளவாளியின் பெயர் என்ன?//
பதில்: “வெகுமதி!” போட்டி அறிவித்து வெகுநாட்களாகின்றபடியால் இக்கேள்விக்கான விடையை சரியாகக் கூறுவோருக்கு பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு!
//2. இந்த இரண்டு கதைகளை தவிர வேறொரு ஜான் மாஸ்டர் கதைக்கும் ஆசிரியர் விளம்பரம் கொடுத்ததாக நினைவு (தவறாகவும் இருக்கலாம்). இந்த தகவலை சரிபார்த்து கூறுங்கள்.//
பதில்: வாய்ப்பே இல்லை! ஆங்கிலத்தில் வந்ததே மொத்தம் இரண்டுதான்! நீங்கள் வேறு எதையாவது பார்த்து குழம்பியிருக்க வேண்டும்!
//3. ஜான் மாஸ்டர் உண்மையில் உளவாளியாக சேர்ந்தாரா? அல்லது உளவுத்துறையினரால் பயன்படுத்தப்பட்டாரா? முதல் கதையில் அவரை வற்புறுத்தியே உளவு வேளையில் பயன்படுத்தியதாக நினைவு.//
பதில்: இதற்கான பதிலை ஜாலி ஜம்பர் கூறி விட்டார்! அவருக்கு நன்றிகள்! இரும்புக்கை மாயாவி கூட விருப்பமில்லாமல் தான் உளவு வேலை பார்த்து வந்தார்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//காமிக்ஸ் பிரியன் said...
ReplyDeleteகதைகளின் சுருக்கத்தையும் இனிவரும் பதிவுகளில் சேர்த்து விடுங்கள் தலைவரே. அப்போதுதான் இந்த பதிவுகள் முழுமையாக இருக்கும்.//
கதைச்சுருக்கம் கொடுக்காததற்கு மன்னிக்கவும்! ஆனால் சதி வலை ஒரு கோடை மலர் என்பதால் அதில் வந்துள்ள மற்ற கதைகளையும் சேர்த்து விரிவாகப் பதிவிடலாம் என்றெண்ணியே கதைச்சுருக்கம் வழங்கவில்லை!
விரைவில் உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் போக்கும் வகையில் ஒரு முழு நீளப் பதிவொன்றை வெளியிடுகிறேன்! அதற்குள் ஆங்கில மூலம் பற்றிய மேல் விவரங்களையும் சேகரித்து வெளியிட முயல்கிறேன்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...
ReplyDeleteராணி காமிக்ஸில் வரும் வாசகர் கடிதங்களை சற்று கவனியுங்கள். மூன்று பேர் சேர்ந்து ஒரு கருத்தை சொன்னதுபோல பப்ளிஷ் செய்து இருப்பார்கள். நானும் ஒரு முறை கடிதம் எழுதினேன். ஆனால் அந்த கருத்தை வெளியிடாமல் வேறொரு கருத்துடன் என்னுடைய ஊர் மற்றும் என் பெயரையும் வெளியிட்டு விட்டனர்.//
குத்துங்க எஜமான் குத்துங்க! இந்த ராணி காமிக்ஸே இப்படித்தான்!
//மினி லயனில் கூட ஒரு கதை வந்தது. ஆனால் இந்த ஜான் மாஸ்டர் கதைகளுக்கு பிறகே வந்தது. அதுகூட விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையே. அதில் ஒரு வாலிபன் டேபிள் டென்னிஸ் விளையாடுவான். ஆனால் அவன் தந்தை அவனை புட்பால் கோல்கீப்பராக்க விரும்புவார். ஒரு உணர்ச்சிகரமான கதை அது.//
அதே கதை வரிசையில் ஒரு பனிச்சறுக்கு வீரன் கதையும் வரும்! அதில் பேய், பிசாசு என்று சற்று அமானுஷய்ம கலந்து வரும்!
தமிழில் எனக்குத் தெரிந்து விளையாட்டு சம்பந்தப்பட்டு வந்தது மொத்தமே இவ்வளவுதான் என்று எண்ணுகிறேன்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
amazing post with lots of information.
ReplyDeletethis guy was one of my favourite character in my childhood and later on, i almost forgot him as there were no other stories of him to continue reading.
there was no other hero like him.
thanks for the post.
Mr Zed was my another fav storyline. unfortunately it ended with just one story.
ReplyDeletekindly update on this character as well.
hey, now i remember that Mr Zed was advertised in lion century special / lion top 10 special. right?
ReplyDelete//தமிழில் எனக்குத் தெரிந்து விளையாட்டு சம்பந்தப்பட்டு வந்தது மொத்தமே இவ்வளவுதான்//
ReplyDeleterani comics has published one story with sports. remember?
Mr Walker,
ReplyDelete//hey, now i remember that Mr Zed was advertised in lion century special / lion top 10 special. right?//
Yes, you are Right. That was Lion Top 10 Special in 1995. Here is what i have blogged about that in TCU: Year 1995: The Summer Special was also one of the Most innovative Special issues as they announced 16 Stories and as it was Named Top 10 Special, there will be Only 10 of them making it to the print. Which 10 Stories will they be? was the contest that ran for months.
Link For the Post: Lion Top 10 Special
Link For Mr Zed Ad: Mr Zed Unpublished Story Advt
தலைவரே,
ReplyDelete\\சதி வலை கதையில் ஜான் மாஸ்டரின் சகாவாக வந்து பாதியில் இறந்துவிடும் அந்த உளவாளியின் பெயர் என்ன?//
பதில்: “வெகுமதி!” போட்டி அறிவித்து வெகுநாட்களாகின்றபடியால் இக்கேள்விக்கான விடையை சரியாகக் கூறுவோருக்கு பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு//
அவரது பெயர்தான் நினைவுக்கு வர மறுக்கிறது. ஒரு ரகசிய கதவை திறக்கும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் அம்புகளால் அவர் மரணமடைகிறார்.
அவருக்கு போ டை கட்ட வராது.
அவர் ஒரு கறுப்பர் இனத்தவர்.
தலை மொட்டை அடித்து இருப்பார்.
யாரோ மண்டபத்தில் சொல்லி, நான் வந்து பதில் சொல்லவில்லை. ஆகையால், எவ்வளவு சரியான விடையோ, அவ்வளவு அளவுக்கு பரிசை தரவும்.
////3. ஜான் மாஸ்டர் உண்மையில் உளவாளியாக சேர்ந்தாரா? அல்லது உளவுத்துறையினரால் பயன்படுத்தப்பட்டாரா? முதல் கதையில் அவரை வற்புறுத்தியே உளவு வேளையில் பயன்படுத்தியதாக நினைவு.//
ReplyDeleteபதில்: இதற்கான பதிலை ஜாலி ஜம்பர் கூறி விட்டார்! அவருக்கு நன்றிகள்! இரும்புக்கை மாயாவி கூட விருப்பமில்லாமல் தான் உளவு வேலை பார்த்து வந்தார்!//
அட, ஆமாம், அந்த மேட்டரை மறந்து விட்டோமே?
//படங்களின் மேல் மெளஸை ஓட்டினாலே செய்தாலே அவற்றின் விவரங்களை அறிய முடியும்! இருப்பினும் இதோ இன்னொரு முறை!
ReplyDeleteலயன் காமிக்ஸ் # 011 - மரணக் கோட்டை! (Back Inner Wrapper - Hence the blue color)
லயன் காமிக்ஸ் # 012 - பழி வாங்கும் பொம்மை!(சதி வலை!)
லயன் காமிக்ஸ் # 022 - சதுரங்க வெறியன்! (மாஸ்கோவில் மாஸ்டர்!)
திகில் # 03 - பயங்கரப் பூனைகள்! (விற்பனையாகிறது விளம்பரம்)//
Yeah, i noticed that. still it would have been niced had you put that with the book title like Thigil 3 = bayangara poonaigal, etc.
Mr zed was also my favourite hero. kindly do another post like this with zed.
ReplyDeletewonderful post on john master.
ReplyDeletethanks Dr 7. your style of blogging is quite unique among all other bloggers.
there are some heroes who have appeared in many stories and we don't even remember how many of them.
ReplyDeletebut there are some heroes who have came in just one or 2 stories and we even remember each and every panel of their stories. among one is john master.
wow wonderful
ReplyDeleteSimply superb
ReplyDelete// கொய்யால, மீ தி செகண்டு. (நல்ல வேளை) ஹைய்யா! சிபிக்கு முன்னாடி கமெண்ட் போட்டாச்சு! //
ReplyDeleteஎன்ன கொடும சார் !!!!!!!!!
super post doctor. keep it up.
ReplyDeleteraja guru.
ஹைய்யா...மீ த 50வது!
ReplyDeleteஎன்ன சொல்லுறதுன்னு தெரியல தலைவரே நீங்க என்னடான்னா விஸ்வா அண்ணன் ப்ளாக்ல நம்மள பத்தி கமெண்ட் போடுறீங்க
ReplyDeleteஒலக காமிக்ஸ் ரசிகன் என்னடான்னா உங்க ப்ளாக்ல நம்மள பத்தி கமெண்ட் போட்டு தாக்குறாரு
ஹ்ம்ம் என்னத்த பண்ணுறது கொஞ்சம் நிறையவே பிஸி
.
சிபி சார்,
ReplyDelete// சிபி சார் இனிமேல் அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் அலுவலகப் பணியில் பயங்கர பிசியாக இருப்பார். ஆகையால் நீங்கள் அடித்து ஆடலாம்.// கோவப்படவேண்டாம். நீங்க ரொம்ப பிசி என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதனாலத்தான் ஒலக காமிக்ஸ் ரசிகரும் அப்படி கூறி இருக்கார்.
எப்படியோ லேட்டா வந்தாலும் லேடஸ்டா வந்துட்டோம்ல
ReplyDeleteஉங்களுக்கு போட்டியா உங்களோட ப்ளாக்ல
Me th 50th போடலாம்ன்னு பாத்தா
அடச்சே ஐயோ ஐயோ இந்த விஸ்வா அண்ணன் கேப் புல உள்ள பூந்து ராக்கெட்ட வுட்டுட்டாரே :(
இத வன்மையாக கண்டித்து இன்று முதல் வந்த படங்களை வரிசையாக பார்ப்பது என்று முடிவு பண்ணியுள்ளேன் :))
.
எப்படியோ லேட்டா வந்தாலும் லேடஸ்டா வந்துட்டோம்ல
ReplyDeleteஉங்களுக்கு போட்டியா உங்களோட ப்ளாக்ல
Me th 50th போடலாம்ன்னு பாத்தா
அடச்சே ஐயோ ஐயோ இந்த விஸ்வா அண்ணன் கேப் புல உள்ள பூந்து ராக்கெட்ட வுட்டுட்டாரே :(
இத வன்மையாக கண்டித்து இன்று 1950 முதல் 1970 வரை வந்த படங்களை வரிசையாக பார்ப்பது என்று முடிவு பண்ணியுள்ளேன் :))
கும்மிக்கு தலைவர் மன்னிக்கவும்
// கோவப்படவேண்டாம். நீங்க ரொம்ப பிசி என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதனாலத்தான் ஒலக காமிக்ஸ் ரசிகரும் அப்படி கூறி இருக்கார். //
ReplyDeleteரொம்ப தேங்க்ஸ் விஸ்வாஜி
ச்சே ச்சே இதுக்கெல்லாம் போயி கோவப்படுவாங்களா :))
.
//இத வன்மையாக கண்டித்து இன்று 1950 முதல் 1970 வரை வந்த படங்களை வரிசையாக பார்ப்பது என்று முடிவு பண்ணியுள்ளேன்//
ReplyDeleteபின்னூட்ட புலி சிபி அவர்களே.
வெல்கம் டு தி கிளப். வாழ்த்துக்கள்.
தலைவரே,
ReplyDelete//1. சதி வலை கதையில் ஜான் மாஸ்டரின் சகாவாக வந்து பாதியில் இறந்துவிடும் அந்த உளவாளியின் பெயர் என்ன?//
பதில்: “வெகுமதி!” போட்டி அறிவித்து வெகுநாட்களாகின்றபடியால் இக்கேள்விக்கான விடையை சரியாகக் கூறுவோருக்கு பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு!//
வழக்கம் போல நானே தான் பதில் சொல்லவேண்டுமா என்ன? இருந்தாலும் இதுக்கு மேலே வெயிட் பண்ண முடியாது. இந்தாங்க பதில்: வின்ஸ்டன் ஸ்மித்.
தலைவரே,
ReplyDeleteடீ இன்னும் வரலை?
i want english comics of john master link
ReplyDelete