வணக்கம்,
ஜூலை மாதம் வந்தாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது நமது அபிமான லயன் காமிக்ஸின் ஆண்டு மலரும் வழக்கமாக ஆண்டு மலரில் வரும் மாடஸ்டி கதைகளும் தான்! இந்த ஜூலையில் தனது 26வது பிறந்த நாளைக் கொண்டாடும் லயன் காமிக்ஸிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் அமைந்ததே இந்த சிறப்பு ஆண்டு மலர் பதிவு!
1984-ல் தொடங்கிய நமது அபிமான லயன் காமிக்ஸின் சகாப்தம் தற்போது பல முட்டுக்கட்டைகளைச் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி மென்மேலும் வளர இத்தருணத்தில் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம்! லயன் காமிக்ஸ் மூலம் நமக்கு தொடர்ந்து மகிழ்வூட்டி வரும் நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களையும் இத்தருணத்தில் பாராட்டுவோம்!
சுவாரசியமான துணுக்குகள்:
- ஆண்டு மலர் என்றாலே நம் நினைவுக்கு வரும் மாடஸ்டி பிளைஸி இதுவரை மூன்றே மூன்று ஆண்டு மலர்களில் தான் சாகஸம் புரிந்துள்ளார் என்பது ஆச்சரியமளிக்கிறது! லயன் காமிக்ஸ் முதல் இதழில் தோன்றியது முதல் ஆஸ்தான நாயகியாக விளங்கும் மாடஸ்டியை நாம் லயன் காமிக்ஸின் ஆரம்ப காலத்தில் வந்த ஆண்டு மலர்களில் படித்து மகிழ்ந்த காரணத்தினாலோ என்னவோ ஆண்டு மலர் என்றாலே மாடஸ்டி என்கிற எண்ணம் நம் ஆழ்மனதில் வேரூன்றி விட்டதோ?!!
- இதுவரை ஆண்டு மலரில் அதிகமாகத் தோன்றி சாகஸம் புரிந்தது வழக்கம் போல டெக்ஸ் வில்லர் தான்! அடுத்தபடியாக லக்கி லூக் அதிக சாகஸங்கள் புரிந்திருக்கிறார்!
- 1985 முதல் வருடந்தவறாது வெளிவந்து கொண்டிருந்த ஆண்டு மலர் 2004-ல் தான் முதன் முதலாக வராமல் போனது! அதற்கு காரணம் மே 2004-ல் வந்த மெகா-ட்ரீம் ஸ்பெஷல் தான்!அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வரும் ரூ:100/- விலையிலான ஸ்பெஷல்கள் ஆண்டு மலர்களை கபளீகரம் செய்து விடுவது வழக்கமாகி விட்டது!
- ஆண்டு மலரில் பல சமயங்களில் காணாமல் போய்விட்ட பழைய ஹீரோக்கள் திடீரென வந்து நம்மை திக்குமுக்காடச் செய்வர் (உதா: இரும்புக்கை நார்மன், ஆக்ஷன் ஹீரோ சைமன், இரகசிய ஏஜெண்ட் காரிகன், கேப்டன் பிரின்ஸ்...)!
பட்டியல்:
இது வரை வெளிவந்த லயன் காமிக்ஸ் ஆண்டு மலர்களின் பட்டியல் இதோ! விளம்பரப்படுத்தப்பட்டு வெளிவராத ஆண்டு மலர்களும், ஜூலை மாதம் வந்திட்ட பிற இதழ்களும் இதில் அடக்கம்!
| ஆண்டு மலர் | வருடம் | TITLE | Issue # | விலை | குறிப்புகள் |
| 0 | 1984 | கத்தி முனையில் மாடஸ்டி பிளைஸி | 001 | ரூ:2/- | இங்கு தான் எல்லாம் ஆரம்பித்தது! |
| 1 | 1985 | சைத்தான் விஞ்ஞானி! + குதிரை வீரன் ஆர்ச்சி! | 015 | ரூ:3/- | ஸ்பைடர் + ஆர்ச்சி = மாபெரும் வெற்றி! |
| 2 | 1986 | பவளச்சிலை மர்மம்! | 027 | ரூ:3/- | டெக்ஸ் வில்லரின் சாகஸங்களில் இது தலையானது! |
| 3 | 1987 | அதிரடிப் படை! | 039 | ரூ:3/- | அற்புதமான கதைத் தொடர்! அருமையான ஓவியங்கள்! இத்தொடர் குறித்து விரைவில் பதிவிடுகிறேன்! |
| 4 | 1988 | கானகத்தில் கண்ணாமூச்சி! | 052 | ரூ:2.50/- | மாடஸ்டி + போனஸ் ஆக்ஷன் கதை! சூப்பர் கதையை எப்படி சொதப்புவதென்று வயிரக்கண் பாம்பு கூறும்! |
| 5 | 1989 | நடுக்கடலில் அடிமைகள்! | 062 | ரூ:3/- | மாடஸ்டி + போனஸ் டெக்ஸ் வில்லர் (?!!) சிறுகதை! |
| 6 | 1990 | எமனுடன் ஒரு யுத்தம்! | 070 | ரூ:3/- | டெக்ஸ் வில்லர் குழுவின் ஆக்ஷன் அதிரடி! 3வது பக்கத்திலேயே ‘டுமீல்!’ சத்தம் தொடங்கிவிடும்! கதை முடியும் வரை ஓயாது! |
| 7 | 1991 | மர்ம முகமூடி! | 077 | ரூ:3/- | இரகசிய ஏஜெண்ட் காரிகன் சாகஸம்! |
| 8 | 1992 | மின்னலோடு ஒரு மோதல்! | 084 | ரு:3/- | ஆக்ஷன் ஹீரோ சைமன் சாகஸம்! இவர் குறித்து விரைவில் ஒரு முழு நீள பதிவிடுகிறேன்! |
| 9 | 1993 | கானகக் கோட்டை! | 091 | ரூ:3.50/- | ரிப் கிர்பியின் அற்புத சாகஸம்! |
| 10 | 1994 | மந்திர மண்ணில் மாடஸ்டி! | 102 | மீண்டும் மாடஸ்டி! | |
| 11 | 1995 | பூம்-பூம்-படலம்! | 114 | ரூ:5.50/- | லக்கி லூக்கின் இருவண்ண சாகஸம்! |
| 12 | 1996 | இரத்தப் படலம்! 6 | 122 | ரூ:7.50/- | XIII-ன் கண்ணீர் காவியம்! எனக்கு மிகவும் பிடித்த பாகம்! |
| 13 | 1997 | மிஸ்டர் மஹாராஜா! | 133 | ரூ:5/- | சிக்-பில், டெக்ஸ் என இரு சர்ப்ரைஸ் கதைகள்! நீண்ட இடைவெளிக்குப் பின் நான் மீண்டும் ரெகுலராக காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது இந்த இதழ் முதல்தான்! |
| 14 | 1998 | கானகத்தில் கலவரம்! | 142 | ரூ:7.50/- | கேப்டன் பிரின்ஸ்-ன் கடைசி சாகஸச் சிறுகதை! லக்கி லூக்கின் இருவண்ண போனஸ் சாகஸமும் உண்டு! |
| 15 | 1999 | தலை வாங்கும் தேசம்! | 151 | ரூ:6/- | ரொம்ப நாள் விளம்பரத்திற்குப் பின் வந்த சிக்-பில் குழுவினரின் முழு நீள காமெடி கலாட்டா! |
| 16 | 2000 | இரத்த பூமி! | 162 | ரூ:7/- | வித்தியாசமான கெள-பாய் கதை! |
| 17 | 2001 | மெக்ஸிகோ படலம்! | 169 | ரூ:10/- | டெக்ஸ் வில்லரின் வழக்கமான அதிரடி ஆக்ஷன்! |
| 18 | 2002 | பயங்கரப் பயணிகள்! | 173 | ரூ:10/- | மொக்கை டெக்ஸ் வில்லர் கதையின் சுமாரான முதல் பாகம்! லயன் காமிக்ஸின் மறுமலர்ச்சி காலத்தில் வந்திட்ட முதல் ஆண்டு மலர்! |
| 19 | 2003 | பரலோகத்திற்கொரு பாலம்! | 181 | ரூ:10/- | லக்கி லூக்கின் முழு நீள வண்ண கார்ட்டூன்! |
| 20 | 2004 | ஆண்டு மலர் எதுவும் வெளியிடப்படவில்லை! | |||
| 21 | 2005 | கோட்-நேம் மின்னல்! | ரூ:10/- | விளம்பரப்படுத்தப்பட்டது! ஆனால் வெளிவரவில்லை! | |
| 22 | 2006 | சூ-மந்திரகாளி...! | 196 | ரூ:10/- | லக்கி லூக்கின் முழு நீள வண்ண கார்ட்டூன்! |
| 23 | 2007 | காட்டேரிக் கானகம்! | ரூ:10/- | மீண்டும் மாடஸ்டி! ஆண்டு மலர் என விளம்பரப்படுத்தப்பட்டது! ஆனால் மிகத் தாமதமாக நவம்பரில் தான் வந்தது! ஜூலையில் டெக்ஸ் வில்லர் (காலன் தீர்த்த கணக்கு..!) தான் தாமதமாக வந்தார்! | |
| 24 | 2008 | மரணத்தின் முன்னோடி! | 203 | ரூ:10/- | டெக்ஸ் வில்லர் சாகஸம்! ஜுலையில் வந்தாலும் ஆண்டு மலர் என குறிப்பிடவில்லை! |
| 25 | 2009 | மாண்டவன் மீண்டான்! | 206 | ரூ:10/- | இரகசிய ஏஜெண்ட் காரிகன் மறுபிரவேசம்! 25வது ஆண்டு மலர்! திடீரென வந்து திக்குமுக்காடச் செய்தது! |
| 26 | 2010 | இதுவரையில் எதுவும் வரவில்லை! |
விளம்பரம்:
ஆண்டு மலர் என்றாலே நம் கண் முன் விரியும் காட்சி அநேகமாக இந்த விளம்பரமாகத் தான் இருக்க முடியும்! அப்படி நம் உள்மனதில் ஊறிவிட்ட அந்த விளம்பரத்தின் முதல் பிரதி இதோ உங்கள் பார்வைக்கு!
அட்டைப்படங்கள்:
இதுவரை வெளிவந்த ஆண்டு மலர் அட்டைப்படங்களின் கண்கவர் அணிவகுப்பு இதோ! இதுவரை வெளிவராத, ஜூலையில் வந்த ஆனால் ஆண்டு மலர் என்ரு விளம்பரப்படுத்தப்படாத, ஆண்டு மலர் என்று அறிவித்து தாமதமாக வந்த கதைகளின் அட்டைப்படங்களும் அடக்கம்!
அட்டைப்படங்கள் உபயம்:
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:
மாடஸ்டி பிளைஸி குறித்து கிங் விஸ்வாவின் இடுகை:
கோட்-நேம் மின்னல் குறித்து கனவுகளின் காதலரின் இடுகை:
மாடஸ்தி குறித்து ஒலக காமிக்ஸ் ரசிகரின் இடுகை:
டெக்ஸ் வில்லர் குறித்து முத்து விசிறியின் முத்தான பதிவு:

ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், ஆர்ச்சி படங்களை பார்க்கும் போது, திரும்ப அந்த வயசுக்கு போக முடியாதான்னு தோணுது.
ReplyDelete(இதை வச்சி, விஸ்வா என் வயசை கிண்டல் அடிச்சா மொத்த புத்தகங்களும் கொள்ளையடிக்கப் படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).
உங்கள் எல்லோருக்கும், இந்த காமிக்குகள் படிக்க வாய்ப்பிருக்கறதை நினைச்சா ரொம்பப் பொறாமையா இருக்கு.
மீ த ஃபர்ஸ்ட்டு.
ReplyDelete//King Viswa said...
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட்டு.//
தோத்தாங்கொள்ளி தொர்ரீர்ரீரிரிரிரி
பிளாக்கரில் வழக்கம் போல ஏதோ பிரச்சினை போல இருக்கிறது.
ReplyDeleteமெயிலில் மூன்று கமெண்ட்டுகள் காட்டுகிறது. ஆனால், பதிவில் எதுவும் இல்லாததால், இது சேப்டிக்கு, மீ த ஃபர்ஸ்ட்டு.
///பிளாக்கரில் வழக்கம் போல ஏதோ பிரச்சினை போல இருக்கிறது.
ReplyDeleteமெயிலில் மூன்று கமெண்ட்டுகள் காட்டுகிறது. ஆனால், பதிவில் எதுவும் இல்லாததால், இது சேப்டிக்கு, மீ த ஃபர்ஸ்ட்டு///
யாருகிட்ட வுடுறீங்க கதை. அதெல்லாம் சரியாதா வொர்க் ஆகுது. எனக்கு கமெண்ட் தெரியும் போது... உங்களுக்கு தெரியலையா??
ஹா.. ஹா.. ஹா.. ஹா..!! வெற்றிச் சிரிப்பு!!!
உண்மையிலேயே ப்ளாக்கரில் ஏதோ பிரச்சனை தான்! எனக்கு மெயிலில் 5 கமெண்ட் வந்திருக்கு! ஆனா இங்க ஒன்னுத்தையுமே காணோம்?!!
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
//யாருகிட்ட வுடுறீங்க கதை. அதெல்லாம் சரியாதா வொர்க் ஆகுது. எனக்கு கமெண்ட் தெரியும் போது... உங்களுக்கு தெரியலையா??
ReplyDeleteஹா.. ஹா.. ஹா.. ஹா..!! வெற்றிச் சிரிப்பு!!//
பாலா அங்கிள்,
சத்தியமா சொல்றேன். இந்தியாவுல அப்படித்தான் இருக்குது. எனக்கு மெயிலில் தான் கமெண்ட்டுகள் காட்டுது. ஆனால் பிளாக்கரில் அப்படித்தான் வருது.
ஹ்ம்ம்மம்ம்மம்ம்ம்ம், (வெற்றி சிந்தனை) இது கொஞ்ச நேரத்துல,, வெறி சிந்தனையாகவும் மாறிடும்.
பாலா அங்கிள் = இதை வச்சி, விஸ்வா என் வயசை கிண்டல் அடிச்சா மொத்த புத்தகங்களும் கொள்ளையடிக்கப் படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஇதுதான் ஒரு ராஜ தந்திரியின் வேலை. அதாவது, நான் கிண்டல் செஞ்சதால பாலா இந்தியா வந்தா பயங்கரவாதி வூட்டுல கொள்ளை அடிப்பார். இதுல ரெண்டு நன்மைகள்:
ஒன்னு: நம்ம வேண்டப்பட்ட விரோதி பயங்கரவாதிக்கு கஷ்டம் (நமக்கு சந்தோஷம்)
ரெண்டு: நம்ம வெல்ல மனசு பாலாவுக்கும் கொஞ்சம் புக்கு கெடைக்கும் (அதனால எனக்கும் கொஞ்சம் தருவார்).
எப்புடி?
வெற்றிச் சிந்தனையா??? ஹா.. ஹா.. ஹா!!
ReplyDeleteவொர்க் ஆகும்போது.. மீ த ஃபர்ஸ்ட் யாருன்னு தெரியும். உஹாஹா.. ஹுஹுஹா.. ஹுஹு. ஹுஹு.. ஹுஹுஹாஹா..!!
மத்தபடிக்கு இங்க கும்மி அலவ்டான்னு தெரியலை. எதுக்கும் தள்ளி நின்னு வெயிட் செஸ்துனான்னு.
அங்கிளா..?? இந்தியாவுக்கு வரும்போது இருக்கு உங்களுக்கு.
அன்னிய நாட்டு சதி. பிளாகரும் அமேரீக புராடெக்ட். பாலாவும் அமெரிக்க ஆளு. ரெண்டு பெரும் சேந்து சதி பண்றாங்க.
ReplyDeleteபின்னே? என்னோட கமெண்ட்டு வந்த டைம பாருங்க.
(King Viswa said...
மீ த ஃபர்ஸ்ட்டு.
JULY 7, 2010 11:13 PM )
பாலா கமென்ட் வந்த டைம பாருங்க.
(ஹாலிவுட் பாலா said...
ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், ஆர்ச்சி படங்களை பார்க்கும் போது, திரும்ப அந்த வயசுக்கு போக முடியாதான்னு தோணுது.
(இதை வச்சி, விஸ்வா என் வயசை கிண்டல் அடிச்சா மொத்த புத்தகங்களும் கொள்ளையடிக்கப் படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).
உங்கள் எல்லோருக்கும், இந்த காமிக்குகள் படிக்க வாய்ப்பிருக்கறதை நினைச்சா ரொம்பப் பொறாமையா இருக்கு.
JULY 7, 2010 11:13 PM)
ரெண்டு கமெண்டும் ஒரே நேரத்துல வந்திருந்தாலும் அமெரிக்கர் என்பதால் பாலாவின் கமெண்டுக்கு முன்னுரிமை அளித்த பிளாக்கரின் இந்த கொடுங்கோல் ஆட்சியை கண்டித்து, ச்சே, மன்னிச்சுடுங்க, தமிழ் நாட்டில் இருப்பதால் இப்படியே வருது, பிளாக்கரின் இந்த சதியை கண்டித்து கருந்தேளுடன் சேர்ந்து புட்டு சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்.
வாழ்க புட்டு. வளர்க புட்டு சாபிடுவோர்.
//மத்தபடிக்கு இங்க கும்மி அலவ்டான்னு தெரியலை//
ReplyDeleteஉண்டுங்க எஜமான், கும்மி உண்டு. அடிச்சு ஆடுங்க.
ஹும்... தீர்ப்பை அகொதீக தலைவர் சொல்லட்டும். அப்புறம் பேசுவோம்.
ReplyDeleteஇங்கு புட்டு கிடைக்காது. அதனால் பிஸா சாப்பிடும் போராட்டம் பின் தொடரும்.
(பாவம் தல..! இப்படி கும்மியடிச்சி கொடுமை பண்ணுறாங்களேன்னு கண்ணீர் விட்டுகிட்டு இருப்பார்ன்னு நினைக்கிறேன்).
பல கமென்ட் கண்ட பாலாவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதோல்வியை வெற்றியுடன் ஏற்றுக்கொண்ட கிங் விஸ்வா
மனசாட்சி: கொய்யால, நீயே டைப் பன்னும்போதுகூட கிங் விஸ்வாதானா?
ReplyDelete//தோல்வியை வெற்றியுடன் ஏற்றுக்கொண்ட கிங் விஸ்வா//
ReplyDeleteபொய்ச்சி போங்க!! இனிமே மீ த ஃபர்ஸ்ட் கமெண்ட் எங்கனா பார்த்தேன். அம்புட்டுதான்!! :)
ஹைய்யா,
ReplyDeleteமீ த தேர்டு.
பாலா + விஸ்வா, நானும் கும்மியில் வரலாமா?
ரசிகரே... தலைவர் காண்டாகப் போறாரு..!! :)
ReplyDelete//இனிமே மீ த ஃபர்ஸ்ட் கமெண்ட் எங்கனா பார்த்தேன். அம்புட்டுதான்//
ReplyDeleteஇன்னா தல, ஒரு கொழந்தையை ஒரேடியா இப்புடி மிரட்டுறீங்க?
இதெல்லாம் ரொம்ப ஓவர்.
அப்புறம் உங்க வூட்டுக்கு கலைஞரின் இளைஞன் பட டிவிடி அனுப்பவேண்டி இருக்கும்.
ஹாலிபாலா சார்,
ReplyDeleteஅதுக்கெல்லாம் எங்க தலிவர் அசர மாட்டார். அவர் எப்படிபட்டவர் என்றால் தமிழில் ராவணன் படம் பார்த்துவிட்டு ஒருவேளை ஹிந்தியில் நல்ல இருக்குமோ என்று மறுநாளே ஹிந்தியிலும் ராவணை பார்த்தவர். இதெல்லாம் அவருக்கு ஜூஜூபி.
//அப்புறம் உங்க வூட்டுக்கு கலைஞரின் இளைஞன் பட டிவிடி அனுப்பவேண்டி இருக்கும்///
ReplyDeleteசூப்பர்!! அடுத்தப் படம் ஆரம்பிச்சாச்சா? பெண் சிங்கத்தையே தைரியமா எதிர் நோக்கியப்பின்.. இளைஞன் என்ன... குழந்தையென்ன?!!
எச்சூஸ் மீ...
ReplyDeleteஇங்க என்ன நடக்குது?
//ஒருவேளை ஹிந்தியில் நல்ல இருக்குமோ என்று மறுநாளே ஹிந்தியிலும் ராவணை பார்த்தவர்//
ReplyDeleteஇம்புட்டு அப்பாவியா??? ஹா.. ஹா.. ஹா!!!
இல்ல.. ஒவ்வொரு தபா கமெண்ட் போடும் போதும்.. மேல பெரிசா ஒரு டிஸ்கி போட்டிருக்காரே. அதுதான் கண்ணில் பட்டு தொந்தரவு பண்ணுது.
கடுமையாக உழைத்து விட்டு வந்து டையர்டாக இருப்பதால், இப்போதைக்கு மீ த 22nd + குட் நைட்.
ReplyDelete//கடுமையாக உழைத்து விட்டு வந்து டையர்டாக இருப்பதால்//
ReplyDeleteரெண்டு ஜோக்கு!! ஒன்னு கமெண்ட்டிலேயே இருக்கு. ரெண்டாவது.... இப்பவும் நம்பர் தப்பு..!! ஹா.. ஹா. ஹா.. ஹா
ஏன்பா புள்ளையாண்டான்களா,
ReplyDeleteதலிவருதான் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பதிவ போட்டு இருக்காரே, இங்க வந்து எதுக்கு கும்மி அடிக்குறீங்க? பாவன்பா அவரு.
இருந்தாலும் ஏதோ, என் பங்குக்கு: மீ தி டொண்டி போர்த்து.
ஹாலிபாலா,
ReplyDeleteநீங்க இப்படி என்னோட லைனில் வந்துவிட்டதால், என்னோட கவுண்டிங் மிஸ் ஆயிடுச்சு.
ஆனாலும் நீங்க சொன்ன அந்த "கமெண்டில் இருக்கும் ஜோக்" சூப்பர் மேட்டர்.
இங்கே என்னதான் நடக்குது? ஹாலிவுட் பாலாவும் விஸ்வாவும் சேர்ந்து கும்மி மழை பொழியராங்குலே?
ReplyDeleteபயங்கரவாதி சார்? வேர் ஆர் யூ?
எச்சூஸ் மீ...
ReplyDeleteஇந்த பதிவுல எனக்கு வேலையே இல்லையா?
//நீங்க இப்படி என்னோட லைனில் வந்துவிட்டதால், என்னோட கவுண்டிங் மிஸ் ஆயிடுச்சு.///
ReplyDeleteஇன்னைக்கு ஏகப்பட்ட லைன் க்ராஸிங். ;)
//பயங்கரவாதி சார்? வேர் ஆர் யூ//
இந்த பாலாவுக்கு எதுக்கு க்ரூப் மெயில் அனுப்புனோம்னு ரொம்ப விரக்தியா யோசிச்சிக்கிட்டு இருப்பாரோ??? ;)
///தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு. ///
ReplyDeleteபாருங்க..!! நான் எப்படி நல்லப்புள்ளையா சட்டதிட்டத்தை மதிச்சி... ஒழுங்கா முதல் கமெண்ட் போட்டேன். எல்லாம் நம்ம விஸ்வாதான் ரீஸன்.
அப்பாலிக்கு... தலைவரை அழவிட வேணாமேன்னு பெரிய மனசுப் பண்ணி ஏரியாவை காலி செய்கிறேன்.
//மீ த ஃபர்ஸ்ட்டு said...
ReplyDeleteஎச்சூஸ் மீ...
இந்த பதிவுல எனக்கு வேலையே இல்லையா?//
யாருப்பா நீங்கல்லாம்? எங்கர்ந்து வர்றீங்க? கும்மி மழையா இருக்கே?
இருந்தாலும் பதிவுக்கே ரிலேட் ஆகிற முதல் கமென்ட்: தலிவரே, படங்கள் சூப்பர். கண்ணில் நீர் பொங்குகிறது.
விஜயன் சார் பல ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுமலர் வெளியிட எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுவோம்.
அந்த அட்டைப்படங்களிலேயே சூப்பர் எது என்றுகூட நீங்கள் ஒரு "போல்" வைக்கலாம். என்னுடைய வோட்டு கோட் நேம் மின்னல் அட்டைக்குதான்.
கதை என்று பார்த்தால், அது பவள சிலை மர்மமும், அதிரடிப்படையும்தான்.
அதேசமயம், ஆண்டுமலரில் வந்த துனைக்கதைகள் என்று பார்த்தால், அது கானகத்தில் கண்ணாமூச்சு கதையில் வரும் அந்த இரண்டாவது கதைக்குதான் (தக்கிக்கள் வரும் அந்த இந்தியாவில் நடந்த கதை).
தலைவர் அவர்களே,
ReplyDeleteகண்கவரும் அட்டைப்படங்களின் கவர்ச்சி அணிவகுப்பு சிறப்பாக இருக்கிறது.
ஹாலிவுட் பாலா...
ReplyDelete//தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.//
அதான் முடிந்தளவுக்குன்னு ஒரு ரைடர் போட்டிருக்கோமே! என்னால முடியன்னுட்டு கும்மிகளை கண்டினியூ பண்ண வேண்டியதுதானே?!!
ஆனாலும் ஒவ்வொரு முறையும் பின்னூட்ட விதிகளை கோடிட்டு காட்டி கும்மியடிக்கும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
தலைவர்,
அ.கொ.தீ.க.
பேஷன் பரேடு மாதிரி இங்கே கண்ணை கவரும் ஆண்டு மலர் அட்டைப்படங்களின் கண்கவர் அணிவகுப்பு என்று அசத்திவிட்டீர்கள்
ReplyDeleteஎன்ன சார் நடக்குது இங்கே ஒரே கும்மி மழையா இருக்கே :)
ReplyDeleteஎன்ன சொல்லுறது அப்புடின்னு தெரியலே வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் பதிவு போட்டா
Me the 1stக்கு எப்புடி போட்டி போடுறது
ம்ம்ம்ம் இப்ப போறேன் ஆனா நெக்ஸ்ட்டு ...........
me the 50th க்கு
நெக்ஸ்ட்டு மீட் பண்ணுறேன்
பதிவு சூப்பர். அட்டைப்படங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்துள்ளன.
ReplyDeleteஅதிலும் குறிப்பாக அந்த அதிரடிப்படை அட்டை - இதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை.
கும்மி அல்லவ்ட்'ஆ? பூந்து விளையாடலாமா?
ReplyDeleteசிறந்த அட்டைப்படம் - மரணத்தின் முன்னோடி
ReplyDeleteசிறந்த கதை - நடுக்கடலில் அடிமைகள்
சிறந்த துணைக்கதை - கானகத்தில் கலவரம் பிரின்ஸ் கதைக்கு நடுவில் வந்த லக்கிலூக் கதை
காலன் தீர்த்த கணக்கு கூட சூப்பர் அட்டை டிசைன். மறக்க முடியாத கதையும் கூட.
ReplyDeleteஆண்டுமலரிலேயே வந்த மொக்கையான கதை - பயங்கரப்பயனிகள். ஆசிரியரே இதனை ஒத்துக்கொண்டார்.
ReplyDelete//எமனுடன் ஒரு யுத்தம் - டெக்ஸ் வில்லர் குழுவின் ஆக்ஷன் அதிரடி! 3வது பக்கத்திலேயே ‘டுமீல்!’ சத்தம் தொடங்கிவிடும்! கதை முடியும் வரை ஓயாது//
ReplyDeleteஇருந்தாலும்கூட கதை சுமார் ரகம்தான். அதே சமயம் இந்த வரிசையில் நீங்கள் இரத்தப்படலம் தொடரை கணக்கில் எடுக்காதீர்கள். அது ஒரு மாஸ்டர் கிளாஸ், குறிப்பாக அந்த ஆறாம் பாகம்.
wow very good effort excellent
ReplyDeleteசிறந்த அட்டைப்படம் என்று எதனையும் தனிப்படுத்தி சொல்ல முடியவில்லை. ஆனால் worst காட்டேரிக் கானகம்தான்.
ReplyDeleteசைத்தான் விஞ்ஞானியின் பின்னட்டை கிடைக்கவில்லையோ, ஒரிஜினல் டிசைனை உபயோகபடுத்தியிருக்கிறீர்களே?
சமீபத்தில் பவழச் சிலை மர்மம் கதையின் ஒரிஜினலை முழு வண்ணத்தில் பார்த்தேன். அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போங்கள். Download லிங்க் யாராவது போடுங்களேன்(டெக்ஸ் வில்லரின் கதை எண் 200). டெக்ஸ் வில்லர் எப்போது வண்ணத்தில் வருவார்(தமிழில்?). Rs 25 விலையில் இனிமேல் எல்லாம் வண்ண இதழ்கள் என்று அறிவிப்பு வந்ததில் இருந்து இதற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். ஹூம்!!!
அட்டையை photoshop செய்வது என்று ஆனபின்னர் விலையை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள். அதையும் கரெக்ட் செய்வதுதானே(அதிரடிப் படை மற்றும் நடுக்கடலில் அடிமைகள்)
வராத கதையின் அட்டையை போடுவது எந்த விதத்தில் ஞாயம்?
26- வது ஆண்டு மலர்தான்(ஜம்போ ஸ்பெஷல்????) லயன் காமிக்ஸ்க்கு முக்கிய திருப்பமாக அமையும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
கும்மியடித்து கமெண்ட்ஸ் எண்ணிக்கையை ஏற்றி விட்ட புண்ணியவான்கள் வாழ்க. இன்று ஒரு போட்டியே இருக்கும் போல, ஐம்பதாவது கும்மி...சாரி கமெண்ட் போடுவதற்கு? வெற்றி பெறப்போவது யார்? Any bets?
ReplyDeleteஇப்போது தான் இந்தப் பதிவைப் பற்றிப் படித்ததால், படுலேட்டாக வந்து, கும்மி மிஸ்ஸான சோகத்தில் இதை எழுதுகிறேன் ;’-(
ReplyDeleteஆண்டு மலர்களின் நினைவு மீண்டும் வந்துவிட்டது இப்பதிவைப் பார்த்து.. குறிப்பாக எனக்கு மிகப்பிடித்த ஆண்டு மலர் - அதிரடிப் படை !!!!
கானகத்தில் கலவரம் + கண்ணாமூச்சி கதைகளையும் என்னால் மறக்கவே இயலாது !!
அட்டகாசமான பதிவு இது !
மற்றபடி, புட்டு திங்கும் போராட்டத்துக்கு நானு ரெடி ! எப்ப ஆரம்பிக்கணும்னு சொல்லுங்க விஸ்வா.. பின்னியெடுத்துரலாம் ! ;-)
it is really Jumbo special is coming as Andu malar
ReplyDeleteஹாய்
ReplyDeleteஆண்டு மலர் அட்டைப் படங்கள் சூப்பர் !!!
தலைவரே,
ReplyDeleteபதிவு சூப்பர். அட்டைப்படங்களின் அணிவகுப்பு கண்ணை பறிக்கிறது.
அடுத்து கோடை மலர் , தீபாவளி மலர், என்றெல்லாம் கூட பதிவிடலாம் போலுள்ளதே?
முத்து விசிறியின் கருத்தை நான் வழி மொழிகிறேன் (மோசமான அட்டைப்படம் - காட்டேரி கானகம்).
ReplyDeleteசிறந்த அட்டைப்படம் - மரணத்தின் முன்னோடி
ஆகையால், நாந்தான் ஐம்பதாவது. எப்படி?
ReplyDeleteசிபி சார், விஸ்வா, பயங்கரவாதி கோவித்துக்கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
சிறந்த கதை - இரத்தப்படலம் ஆறு.
ReplyDeleteசிறந்த காமெடி கதை - பூம் பூம் படலம்
சிறந்த இரண்டாவது கதை - லக்கிலுக்கின் கதை கானகத்தில் கலவரம்
மீ தி 50த் போட விடாமல் சதி செய்த இந்த சென்னை டிராபிக்கை கண்டித்து உடனடியாக "அனந்தபுரத்து வீடு" படத்தின் சிறப்பு காட்சிக்கு செல்கிறேன்.
ReplyDelete//அட்டையை photoshop செய்வது என்று ஆனபின்னர் விலையை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள். அதையும் கரெக்ட் செய்வதுதானே(அதிரடிப் படை மற்றும் நடுக்கடலில் அடிமைகள்)//
ReplyDelete:)
போச்சே........ போச்சே..!!!!!!!!
ReplyDeleteஇப்புடி சைக்கிள் கேப்புல காமிக்ஸ் பிரியன் உள்ள பூந்து எல்லா புட்டையும் அநியாயமா தள்ளிகிட்டு போயிட்டாரே
இத கண்டிச்சு விஸ்வா தலைமையில லட்டு சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன் :)
//Cibi
ReplyDeleteபோச்சே........ போச்சே..!!!!!!!!
இப்புடி சைக்கிள் கேப்புல காமிக்ஸ் பிரியன் உள்ள பூந்து எல்லா புட்டையும் அநியாயமா தள்ளிகிட்டு போயிட்டாரே
இத கண்டிச்சு விஸ்வா தலைமையில லட்டு சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன் :) //
என்ன கொடுமை சார் இது?
இப்பதான் புட்டு பஞ்சாயித்து முடிஞ்சது, இப்போ லட்டு சாப்பிடும் போராட்டமா?
முடியல.
இந்த வருடம் ஆண்டு மலரை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறேன்
ReplyDeleteம்ம்ம்ம் இப்ப போறேன் ஆனா நெக்ஸ்ட்டு ...........
ReplyDeleteme the 75th க்கு
நெக்ஸ்ட்டு மீட் பண்ணுறேன்
விடமாட்டோம்ல்ல
கத்தி முனையில் மாடஸ்டி பிளைசி: நான் பல வருடங்கள் கழித்து தான் படித்தேன். மிகவும் அருமையான ஒரு கதை. மாடச்டியின் ஒரு குறிப்பிட்ட டெம்பிளேட்டில் அமைந்து இருந்தாலும்கூட சிறப்பாக இருக்கும். அந்த வில்லன் ஒருவன் வருவான் பாருங்கள், அட்டகாசம். குறிப்பாக மாடஸ்டியை என் கையாலேயே கொள்ளவேண்டும் என்று சொல்லும் அவனுடைய எண்ணமே அவனுக்கு எமனாக அமைகிறது முடிவில். பறவை ஆராய்ச்சியாளராக வெங் வருவது ஒரு குறிப்பிடவேண்டிய அம்சம்.
ReplyDeleteமொத்தத்தில், டிரேட்மார்க் மாடஸ்டி கதை. அட்டைப்படங்கள் (முன் அட்டை + பின் அட்டை இரண்டுமே) சிறப்பு. பின் அட்டையில் கதையின் சுரக்கும் இருப்பது அட்டகாசமான ஒரு திட்டம். ஆனால் அதனை பின்பற்றவில்லை என்பது வருத்தப்படவேண்டிய விஷயம்.
முதலாம் ஆண்டு மலர்:
சைத்தான் விஞ்ஞானி: ஒரு பேன்டசி கதை. ஸ்பைடர் மேனியா உச்சத்தில் இருந்தபோது வந்ததால் பிழைத்தது. இருந்தாலும் அந்த காலகட்டத்தில் இதனை மிகவும் ரசித்து படிப்பேன். பக்கம் இல் அந்த விஞ்ஞானி பார்ப்பதற்கு நம்ம பட்லர் டெஸ்மாண்ட் போலவே தோற்றமளிப்பது என் பார்வைக்கு மட்டுமா அல்லது அனைவருக்குமா என்றொரு சந்தேகம் பல வருடங்களாக உண்டு.
குதிரை வீரன் ஆர்ச்சி: ஆர்ச்சி கவ் பாய் ஆக வரும் இந்த கதை ஒரு சூப்பர் ஹிட் கதை. ஆர்ச்சி தான் அந்த ஊரின் மார்ஷலாக மாறுவது கதையின் சிறப்பு.
இரண்டாம் ஆண்டு மலர்:
பவளச்சிலை மர்மம்: இந்த புத்தகத்தின் அட்டை இதுநாள் வரையில் நான் நேரில் பார்த்தது கிடையாது. ஸ்கான் மூலமாகவே பார்த்து வருகிறேன். ஒரே வார்த்தையில் சொல்கிறேன்: அட்டகாசம். அவ்வளவுதான். சூப்பர் கதை இது. மறந்து விடாதீர்கள். அதுவும் மாந்திரீகம், அமானுஷ்யம், பழிவாங்குதல், போராட்டம், நரபலி, மனிதாபிமானம், காதல் என்று பல அம்சங்களை கொண்ட சூப்பர் டுபர் ஹிட் கதை இது. அதிலும் டெக்சும், கார்சனும் ஒருவருக்காக மற்றொருவர் தியாகம் செய்ய துணிவது என்று அவர்களின் நட்பை ஆழமாக உணர்த்தி இருந்தார்கள். இது போல பல விஷயங்களுக்காக இந்த கதை எனக்கு பிடித்த ஒன்றாகும்.
அட்டைப்படம் அருமையான ஒன்றாகும். நன்றி நண்பர்களே.
மூன்றாம் ஆண்டு மலர்:
ReplyDeleteஅதிரடிப்படை: ஆசிரியர் என் இந்த கதைகளை எல்லாம் மறந்துவிட்டார் என்று பல முறை நான் நினைத்தது உண்டு. ஒரு திரைப்படம் எடுப்பதற்குரிய அணைத்து அம்சங்களும் இந்த கதைக்கு உண்டு. ஒரு கட்டத்தில் அந்த வில்லனை எனக்கு பிடித்தே விட்டது. ஆனால், அவனுக்கும் மேஜருக்கும் நடக்கும் சண்டையில் பல தருணங்கள் என்னை வியக்க வைத்தன. குறிப்பாக தனை நோக்கி வீசப்பட்ட கத்தியையே சுட்டுத்தள்ளும் திறன் வாய்ந்த அந்த வில்லனின் அசகாயசூரத்தனம் என்னை கவர்ந்தது.
இரண்டாவதாக மற்றுமொரு கதையும் இருந்தது. அட்டை சூப்பர். நல்ல வண்ணக்கொர்வையாக இருந்தது.
நான்காம் ஆண்டு மலர்:
கானகத்தில் கண்ணாமூச்சி: முதலில் நான் இந்த கதையை வயிரக்கன் பாம்பு என்று ராணி காமிக்ஸில் படித்து விட்டேன். ஆகையால் பெரிய இன்டெரெஸ்ட் இல்லை. ஆனால் லயனில் படித்தவுடன் பிடிக்க ஆரம்பித்த கதை, இன்னமும் டாப் டென் மாடஸ்டி கதையில் உள்ளது. குறிப்பாக வில்லனை தாடியை நீக்கும் அந்த காட்சி - சூப்பர்.அதிலும் இரண்டாவதாக வரும் ஒரு கதை இந்தியாவில் நடைபெறுவதாக அமைந்து இருக்கும். அந்த நாட்களில் அதை மிகவும் ரசித்தேன். ஆனால் இப்போது படிக்கும்போது பிடிக்கவே இல்லை. வெள்ளைக்காரன் ஹீரோவாம், நம்ம ஊர் ஆட்கள் காளி பக்தர்கள் எல்லாரும் நரபலி செய்பவர்களாம், என்னமோ தெரியவில்லை, இப்போது பிடிக்கமாட்டேன்கிறது.
அட்டைப்படங்கள் அட்டகாசம். அதுவும் அந்த வண்ணக் கலவை சூப்பர் ஆக இருக்கும். ஆனால், அட்டைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று இதுநாள்வரை யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
ஐந்தாம் ஆண்டு மலர்:
நடுக் கடலில் அடிமைகள்: ஒன் ஆப் தி வெரி பெஸ்ட். அட்டகாசமான கதை. பாராட்ட வார்த்தைகளே இல்லை. கதையின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு கண்ணுக்கு புலப்படாத சென்டிமென்ட் இழை கதை முழுவதும் கோர்த்துக்கொண்டே வரும். அதுவும் கிளைமேக்சில் நடக்கும் அந்த சம்பாஷனைகள் - சிம்ப்ளி சுபெர்ப். குறிப்பாக, மாடஸ்டியை கடிந்து கொள்ளும் அந்த அரசாங்க அதிகாரியை டாரண்ட் வருதேடுக்கும் அந்த ஒரு ஸீன் கண் முன்னே நிற்கும். மிகவும் அற்புதமான கதை. மிஸ் செய்ய வேண்டாம். மாடஸ்டியின் டாப் கதைகளில் கண்டிப்பாக top மூன்று கதைகளில் வந்து விடும்.
அட்டைப்படங்கள் புதுமாதிரியாக இருக்கும், போட்டோ வடிவில். இந்த புத்தகத்தில் போனஸ் ஆக இரண்டு கதைகளும் இருக்கும். அதில் ஒன்று துப்பறியும் கம்பியூட்டர். சூப்பர் கதை.
தலைவரே,
ReplyDeleteபுது டெம்பிளேட் கண்ணை கவர்கிறது. சூப்பர்.
வாழ்த்துக்கள்.
வெகு விரைவில் மற்ற கதைகளை பற்றிய விமர்சனத்துடன் வருகிறேன்.
ReplyDeleteசிறந்த அட்டைப்படம்: மரணத்தின் முன்னோடி
ReplyDeleteசிறந்த கதை: இரத்தப்படலம் ஆறு.
சிறந்த நகைச்சுவை கதை: பூம் பூம் படலம்
சிறந்த மொக்கை கதை: பயங்கர பயணிகள்
சிறந்த மொக்கை அட்டை: மாண்டவன் மீண்டான்
1st of all, the new style in your blog is amazing.
ReplyDeletei love the new colour, which is very soothing to the eye.
the concept of the annual special issue is faded out from the lofty 80's and died a natural death in the '00s.
ReplyDeleteam unlucky in the sense that i no longer have many of these issues with me, eventhough i have read all of them.
still the cover gallery is stunning.
Best cover - as usual, Rathappadalam & kaalan theertha kanakku.
ReplyDeleteBest story: adhiradippadai.
They are the best of the best and hence no worst or other such kind.
To Pula-sulaki:
ReplyDeletekindly do a separate post of your comments on these books. they are lovely.
//ஆண்டு மலர் என்றாலே நம் நினைவுக்கு வரும் மாடஸ்டி பிளைஸி இதுவரை மூன்றே மூன்று ஆண்டு மலர்களில் தான் சாகஸம் புரிந்துள்ளார் என்பது ஆச்சரியமளிக்கிறது! லயன் காமிக்ஸ் முதல் இதழில் தோன்றியது முதல் ஆஸ்தான நாயகியாக விளங்கும் மாடஸ்டியை நாம் லயன் காமிக்ஸின் ஆரம்ப காலத்தில் வந்த ஆண்டு மலர்களில் படித்து மகிழ்ந்த காரணத்தினாலோ என்னவோ ஆண்டு மலர் என்றாலே மாடஸ்டி என்கிற எண்ணம் நம் ஆழ்மனதில் வேரூன்றி விட்டதோ//
ReplyDeletethats a bloody amazing stat. Wow.
நாங்களும் வந்துட்டோம்ல.
ReplyDeleteஆஹா,
ReplyDeleteகும்மியில் யாருமே இல்லையா? விஸ்வா, சிபி, பாலா, ஒலக ரசிகர்?
என்ன சார் ஆச்சு? மீ தி 75த் போட முடியாதா?
மீ த 70th
ReplyDeleteyenna nadakkuthu inge
ReplyDeleteதோ நாங்களும் கும்மிக்கு வந்துட்டோம்ல
ReplyDeleteதலைவரே மன்னிச்சுடுங்க வேற வழியே தெரியல இந்த முறை கோப்பை எனக்கு தான்
ReplyDeleteஇப்போ 74
ReplyDeleteஆக கூடி இது 75th
ReplyDeleteரொம்ப தேங்க்ஸ் காமிக்ஸ் பிரியரே
எல்லாம் நீங்க கத்து கொடுத்த பாடம் தான் உங்களோட
ச்சே,
ReplyDeleteஎல்லாம் இந்த பாலாவால் வந்தது. எப்போ அவர் மீ த பர்ஸ்ட் போட்டாரோ, அப்பவே எல்லாரும் நம்மளை முந்திக்கிட்டாங்க.
அதனால, ஒண்ணுமே இல்லீங்கோவ். மீ தி 76.
எங்கே தலைவர காணோமே :)
ReplyDelete.