வணக்கம்,
இன்று (அக்டோபர் 1, 2010) ஒரு வழியாக எந்திரன் ரிலீஸ் ஆகிறது! ஆகையால் அக்டோபர் மாதம் அ.கொ.தீ.க.வில் எந்திரன் மாதம்!
அக்டோபர் மாதம் முழுவதும் தமிழ் காமிக்ஸ் உலகில் வலம் வந்த எந்திரன்கள் குறித்த விரிவான ஆராய்ச்சிப் பதிவுகள் உங்கள் அபிமான அ.கொ.தீ.க.வில் இடம்பெறும்!
கிங் விஸ்வாவும், ஒலக காமிக்ஸ் ரசிகரும் களத்தில் குதிக்கப் போவதாக வாக்களித்துள்ளனர்!
தமிழ் காமிக்ஸ் உலகின் எந்திரன்களில் நாம் முதலில் காணப்போவது கம்ப்யூட்டர் மனிதன் பற்றி!
ஆகையால் மொக்கை போட்டு மேலும் நேரத்தை வீணாக்காமல் நேரடியாக பதிவுக்கு போவோம்!
புத்தக விவரங்கள்:
அட்டைப்படம் | |
கதை | கம்ப்யூட்டர் மனிதன்! |
இதழ் | ஜூனியர் & மினி லயன் (மாத இதழ்) |
வெளியீடு # | 8 |
முதல் பதிப்பு | செப்டம்பர் 1987 |
மறுபதிப்புகள் | இதுவரை இல்லை |
பதிப்பகம் | பிரகாஷ் பப்ளிஷர்ஸ் |
ஆசிரியர் | S.விஜயன் |
அச்சிட்டோர் | தி விஜய் புக்ஸ் |
நாயகர்(கள்) | கம்ப்யூட்டர் மனிதன் டெவில் |
மூலம் | M.A.C.H.1 - VULCAN (ஆங்கிலம்) |
இதழ் | 2000AD (Weekly) |
வெளியீடு # | PROG 1 - 2 |
முதல் பதிப்பு | 26 FEB 77 - 05 MAR 77 |
பதிப்பகம் | IPC MAGAZINES LTD. |
மறுபதிப்பு | EAGLE (30 AUG 1986 - 29 AUG 1987) |
கதை | PAT MILLS (1)/ROBERT FLYNN (2) |
ஓவியம் | ENIO (1)/IAN KENNEDY (2) |
தமிழில் | S.விஜயன் |
பக்கங்கள் | 132 (32 முழு வண்ணம் + 96 கறுப்பு வெள்ளை) |
சைஸ் | 10cmx14cm |
விலை | ரூ:2.50/- (1987 முதல் பதிப்பின் போது) |
முதல் பக்கம் | |
CREDITS |
விளம்பரம்:
இவ்விதழ் சுதந்திர தின ஸ்பெஷல்! என விளம்பரப்படுத்தப்பட்டது! ஆரம்பத்தில் வந்த விளம்பரத்தில் கம்ப்யூட்டர் மனிதன் இல்லை, ஆனால் புத்தகத்தில் சொல்லாமல் கொள்ளாமல் வந்திறங்கினார்!
ஆனால் பின்னால் வந்த விற்பனையாகிறது விளம்பரத்தில் இது அறைகுறையாக நிவர்த்தி செய்யப்பட்டது!
பிற கதைகள்:
இதில் கம்ப்யூட்டர் மனிதன்! தவிர வேறிரு கதைகளும் வந்தன! அவை ஸ்பைடர் படை! மற்றும் கொரில்லா தீவு! ஆகும்! இதோ அவற்றின் முதல் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு!
இந்தக் கதை தான் ஆங்கிலத்தில் ஸ்பைடரின் முதல் கதையாகும்! இதில் தான் இவர் ஆர்டினியையும், பெல்ஹாமையும் சந்தித்து தனது குற்ற சாம்ராஜ்யத்தை நிறுவுவார்! இன்ஸ்பெக்டர்கள் கில்மோரும், ட்ராஸ்கும் கூட இதில் தான் முதன் முதலில் தோன்றினர்!
ஸ்பைடர் குறித்த மேல் விவரங்களுக்கு கிங் விஸ்வாவின் கீழ்காணும் சுட்டியிலுள்ள பதிவைப் படிக்கவும்!
கொரில்லா தீவு! கதை குறித்து மேல் விவரங்கள் ஏதும் இப்போது கைவசம் இல்லை! மன்னிகவும்!
- தமிழில் வெளிவந்த ஒரே சுதந்திர தின ஸ்பெஷல்! காமிக்ஸ் இதுதான்!
- இக்கதைத் தொடரின் ஆங்கில மூலம் 2000AD வாராந்திர இதழில் தொடராக வெளிவந்தது! வாராவாரம் புது ஆசிரியர்/ஓவியர் டீமுடன் கதைகள் வெளிவந்தன! இது மட்டுமல்ல, 2000ADல் வெளிவந்த அனைத்துக் கதைகளும் இப்படித்தான்!
- இக்கதைத் தொடரின் ஆசிரியர்களில் ஒருவரான PAT MILLS பிரிட்டிஷ் காமிக்ஸ் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்! உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் காமிக்ஸ் ஹீரோவான JUDGE DREDDஐ உருவாக்கியவர்! BATMAN கதைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார்! கம்ப்யூட்டர் மனிதனையும் உருவாக்கியவர் இவர்தான்! இவரைப் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
- இக்கதைத் தொடரின் ஓவியர்களில் ஒருவரான IAN KENNEDY பல கதைகளுக்கு அற்புதமான ஓவியங்கள் மூலம் உயிரூட்டியுள்ளார்! தமிழில் இவரது ஓவியங்களுடன் சில பல கதைகள் வந்துள்ளன! அவற்றைப் பற்றி பிறகு பார்ப்போம்! இவரைப் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
- இக்கதைதொடர் THE SIX MILLION DOLLAR MAN என்ற பிரபல தொலைக்காட்சித் தொடரைத் தழுவியே அமைக்கப்பட்டதாகும்! கம்ப்யூட்டர் மனிதனின் தோற்றம் கூட அத்தொடரின் நாயகனின் உருவத்தையே ஒத்திருக்கும்! இத்தொலைக்காட்சித் தொடர் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
- M.A.C.H.1 எனபதன் விளக்கம் MAN ACTIVATED BY COMPU-PUNTURE HYPERPOWER என்பதாகும்! இத்தொடரின் நாயகனின் பெயர் JOHN PROBE என்பதாகும்! ஆனால் இதையெல்லாம் படிக்கும் அந்த காலத்து இளம் தமிழ் காமிக்ஸ் புரவலர்களின் வாய்களில் இந்தப் பெயர்களெல்லாம் சுத்தமாக நுழையாது என்பதை நன்குணர்ந்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் அருமையாக கம்ப்யூட்டர் மனிதன் டெவில் என்று பெயர்மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்!
- இக்கதைத் தொடர் 2000AD வாராந்திரப் பத்திரிக்கையில் 27 ஃபிப்ரவரி, 1977 முதல் 13 மே 1978 வரை வெற்றிகரமாக வெளிவந்தது! JUDGE DREDD கதாபாத்திரம் புகழ்பெறும் முன்னர் இக்கதைத்தொடரே 2000ADல் மிகப் பிரபலம்! அப்போது 2000ADல் வெளிவந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் காமிக்ஸின் ஆஸ்தான நாயகனான DAN DAREஐ விட இத்தொடர் பிரபலமடைந்தது!
- பின்னர் EAGLE வாராந்திரப் பத்திரிக்கையில் 30 ஆகஸ்ட், 1986 முதல் 29 ஆக்ஸ்ட், 1987 வரை மறுபதிப்பு செய்யப்பட்டது! அநேகமாக நமது ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் EAGLEல் வந்த மறுபதிப்பையே நமக்கு வழங்கியிருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு!
ஆங்கில மூலம்:
கதையின் ஆங்கில மூலம் முழுவதும் உங்கள் பார்வைக்கு! படித்து மகிழுங்கள்!
இக்கதைத் தொடர் குறித்து மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
நிறைகள்:
- ஆக்ஷன் ரசிகர்களுக்கு, சரியான விருந்து!
- அற்புதமான ஓவியங்கள்! அதுவும் முழு வண்ணத்தில்!
குறைகள்:
- ஒரேயொரு கதையோடு தொடரை நிறுத்தியது! எந்திரன் போல் அல்லாமல் கம்ப்யூட்டர் மனிதன் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை!
நன்றிகள்:
- முத்து விசிறி – வழக்கம் போல ஆங்கிலத் தொடரின் அனைத்து விவரங்களையும் அளித்தமைக்கு!
- ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் – இக்கதைத் தொடரை நமக்கு அறிமுகம் செய்தமைக்கு!
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:
நூற்றாண்டின் நாயகன் ஸ்பைடர்:
ஜூனியர் & மினி லயன்:
- http://tamilcomicsulagam.blogspot.com/2009/05/mini-lion-junior-lion-2-in-1-special.html
- http://muthufanblog.blogspot.com/2006/01/goscinny-i-would-have-lived-without.html
- http://mudhalaipattalam.blogspot.com/2008/12/blog-post_09.html
- http://akotheeka.blogspot.com/search/label/ஜூனியர்%20லயன்
- http://akotheeka.blogspot.com/search/label/மினி%20லயன்
me the First
ReplyDeleteடெவில்லின் பல விஷயங்களை அர்னால்டு காப்பி அடித்த மாதிரி , எந்திரன் ஜீனோவ காப்பி அடித்திருப்பாரோ,,
ReplyDeleteதலைவரே,
ReplyDeleteவழமை போல, மீ த ஃபர்ஸ்ட்டு! (என்று போட வந்தால் ஏற்கனவே இரண்டு பேர் வந்துவிட்டார்கள், ஆகையால் மீ தி தேர்ட்)
ஒரு வழியாக உங்களது புதிய பதிவு வந்தே விட்டது. எத்துனை நாட்கள்தான் நாங்கள் காத்து கிடப்பது? எத்துனை நாட்கள்தான் நாங்கள் இதையே (Temporary Post Used For Theme Detection (d2337f1c-207b-4ad7-9dd2-dacde7ba0542 - 3bfe001a-32de-4114-a6b4-4005b770f6d7) படித்துக்கொண்டிருப்பது? மீண்டும் வந்தமைக்கு நன்றிகள் பல.
பதிவை முழுவதுமாக படித்துவிட்டு வந்து மற்ற விவரங்களை பற்றி கூறுகிறேன்.
ச்சே, ஜஸ்ட் மிஸ்சு.
ReplyDeleteதலைவரே, மீ த செகண்டு (இல்லை, இல்லை, மீ தி போர்த்) . நானும் பதிவை முழுமையாக படித்துவிட்டும், பார்த்து விட்டும் வருகிறேன், எஸ், மீ த பேக் ஆப்டர் ரீடிங்.
அதற்க்கு முன்பாக ஒரு மேட்டர்: பதிவில் உள்ள படங்கள் தேர்வு பிரம்மாதம்.
தலைவரே,
ReplyDeleteகாலை எந்திரன் படத்தை முதல் நாள், முதல் காட்சியாக காணப்போகின்ற இந்த வேளையில் தமிழ் காமிக்ஸ் உலகில் வந்த எந்திரன் பற்றிய தொடர் பதிவை நீங்கள் வெளியிடப்போவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. அதன் முதல் பகுதியாக வந்த இந்த கம்பியூட்டர் மனிதனின் பதிவு உண்மையிலேயே சூப்பர்.
தலைவரே,
ReplyDeleteஅப்பாடா! ஐய்யம்பாளயத்தாருக்கும், சிபிக்கும் முன்னாடி பின்னூட்டம் போட்டாச்சு! என்னுடைய தலையாய பணி இனிதே நிறைவேறியது.
பின் குறிப்பு: உங்கள் பதிவின் கீழே உள்ள புதிய பகுதியாகிய படிக்க தவறாதீர்கள் பார்க்க அம்சமாக இருக்கிறது.
தலைவரே,
ReplyDeleteஇந்த கதையை நான் சிறுவயதில் படிக்கும்போது பிரமிப்பு அடைந்தது என்னவோ உண்மைதான். ஆனால், தற்போது? கதை உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் கம்பியூட்டர் என்பதே ஏதோ ஒரு வேற்றுகிரகவாசி போலத்தான் நமக்கு இருந்திருக்கும். அந்த காலகட்டத்தில் இந்த கதையை உருவாக்கிய ஆசிரியர்கள் மீதும் இதனை அழகுத்தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட நமது எடிட்டர் அவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தே ஆகவேண்டும்.
தலைவரே,
ReplyDeleteஇதென்ன MACH 1? நான் MACH 3 தான் யூஸ் பண்ணுகிறேன். அப்போ நான் இரண்டு மடங்கு புத்திசாலியோ?
அடடா வடை போச்சே
ReplyDeleteதலைவரே நள்ளிரவில் கூட பதிவா
ஒருவேளை நீங்களும் எந்திரனா ( தூங்காமல் இருக்க அவைகளால் தான் முடியும் )
ஆனா சரியான நேரத்தில் சரியான பதிவை இட்டு கலக்கிவிட்டீர்கள்
மேலும் சிறுவயதில் இந்த புத்தகத்தை படிக்கும் போது நாமும் இப்படி ஆனால் எப்புடி இருக்கும் என்றெல்லாம் நினைத்தது உண்டு
ஆனால் விஜயன் சார் இந்த ஒரு கதையோடு நிறுத்தியது மிகுந்த ஏமாற்றம் தான்
.
// அக்டோபர் மாதம் முழுவதும் தமிழ் காமிக்ஸ் உலகில் வலம் வந்த எந்திரன்கள் குறித்த விரிவான ஆராய்ச்சிப் பதிவுகள் உங்கள் அபிமான அ.கொ.தீ.க.வில் இடம்பெறும்! //
ReplyDeleteநினைக்கவே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது
கலக்குங்கள் தலைவரே
// கிங் விஸ்வாவும், ஒலக காமிக்ஸ் ரசிகரும் களத்தில் குதிக்கப் போவதாக வாக்களித்துள்ளனர்! //
ReplyDeleteசூப்பரப்பு .......... :))
.
இந்த கதையை நான் படித்தது இப்போதுதான் ஞாபகம் வருகிறது. ஆனால் கதையை திடீரென்று முடித்து விட்டதாக நினைவு. சரியா?
ReplyDeleteஎன்னால் எந்திரன் படத்தை இப்போதைக்கு ஹிந்தியில் தான் பார்க்க முடியும், இன்றிரவு காணப்போகிறேன். பார்த்துவிட்டு சொல்கிறேன்.
ReplyDeleteபேட் மில்ஸ் பார்ப்பதற்கு நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேக்கப் ஓரம் போலவே இருக்கிறார்.
ReplyDeleteதலைவரே,
ReplyDelete//இவ்விதழ் சுதந்திர தின ஸ்பெஷல்! என விளம்பரப்படுத்தப்பட்டது! ஆரம்பத்தில் வந்த விளம்பரத்தில் கம்ப்யூட்டர் மனிதன் இல்லை, ஆனால் புத்தகத்தில் சொல்லாமல் கொள்ளாமல் வந்திறங்கினார்//
இந்த புத்தகம் கூட சற்றே தாமதமாக தான் வந்தது. ஆகஸ்ட் மாதம் வராமல் செப்டம்பர் மாதம்தான் வந்தது. அதனால் அந்த சிந்துபாத்தின் இரண்டாம் சாகசம் வரவே இல்லை.
Excellent post Dr 7.
ReplyDeleteit is always a question that i wanted to ask you and still haven't done so far: how come you know so much about tamil comics?
i still remember the gorilla theevu story. somehow the other it struck a chord with me in those days.
ReplyDeletei have missed the book somewhere in all those years.
as and when you get the originals of the gorilla theevu story, kindly let me know. atleast, i can read that story in english, as of right now.
kindly do a complete post on detective zed. he was my favourite character.
ReplyDeleteif i remember correctly, i believe zed's 2nd story was announced in one of the special issues. and was not published. correct?
ReplyDeleteதலைவரே,
ReplyDeleteதகுந்த நேரத்தில் தவறாமல், தரமான பதிவுகளை தமிழில் இடுவதற்கு உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?
இந்த புத்தகம் ஒரு பேக்கேஜ் ஆக வந்ததாலே இந்த கதையை வெளியிட முடிந்தது. இல்லை என்றால் வந்திருக்காது.
ReplyDelete//கொரில்லா தீவு! கதை குறித்து மேல் விவரங்கள் ஏதும் இப்போது கைவசம் இல்லை! மன்னிகவும்!//
ReplyDeleteGorilla Island Ran in Tiger Comics.
Episode 1: 13th Feb 1965
Last Episode: 08th May 1965
Artist: Frank Langford (His Sign appears in one of the episodes-13th Mar 1965)