Friday, June 11, 2010

ஒற்றைக் கண் ஜாக்!

You've got to ask yourself one question: 'Do I feel lucky?' Well, do ya, punk?
-CLINT EASTWOOD (DIRTY HARRY)

வணக்கம்,

கடந்த மே 31ம் தேதி பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும், இயக்குனருமான க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடினார்! 80 வயதைக் கடந்தாலும் இன்னும் GRAN TORINO, INVICTUS என்று அசத்திக் கொண்டிருக்கும் அவரது திறமையும், உழைப்பும் நம்மை மலைக்க வைக்கிறது! GRAN TORINO படத்துடன் அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டாலும் அவர் தொடர்ந்து டைரக்‌ஷனில் ஈடுபட்டு வருகிறார்! அவர் மென்மேலும் பல்லாண்டு வாழ்ந்து நமக்கு மேலும் பல சிறந்த படங்களை வழங்கி நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டுமென்று நம் அனைவரின் சார்பிலும் வேண்டிக் கொள்கிறேன்!

க்ளிண்ட் ஈஸ்ட்வுட் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவர் நடித்த கெள-பாய் படங்களே! அதிலும் குறிப்பாக அவர் ஸெர்ஜியோ லியோனியின் இயக்கத்தில் நடித்து வெளிவந்த DOLLARS TRILOGY படங்கள் உலகப் பிரசித்தம்! தான் இயக்கிய UNFORGIVEN படத்தை தனது குருமார்கள் ஸெர்ஜியோ லியோனி மற்றும் டான் ஸீகல் ஆகியோரின் நினைவிற்கு சமர்ப்பித்திருப்பார்! தான் நடித்த MAN WITH NO NAME கெள-பாய் கதாபாத்திரத்தின் வாழ்க்கை பிற்காலத்தில் எவ்வாறு திசைமாறுகிறது என்பதை சித்தரிக்கும் வகையில் UNFORGIVEN அமைந்திருக்கும்!

அதே போல் அவர் நடித்து புகழ்பெற்ற இன்னொரு கதாபாத்திரம் DIRTY HARRY! சட்டத்தின் ஓட்டைகளின் மூலம் தப்பி விடும் குற்றவாளிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிதான் DIRTY HARRY! நம்ம கேப்டன் விஜயகாந்த் நடித்த பற்பல போலீஸ் படங்களிலிருந்து இப்போது வந்துள்ள சாமி, வேட்டையாடு விளையாடு, சிங்கம் வரை இப்படத்தின் தாக்கம் இருக்கிறது! சுருக்கமா சொல்லனும்னா இவரு "போலீஸ் இல்ல, பொறுக்கி!"

1960களின் இறுதியில் அமெரிக்காவில் ZODIAC எனும் சைக்கோ கொலைகாரன் (இந்த மொக்கை சொல்லாடலை கண்டுபிடித்த தமிழ் பத்திரிக்கைகள் வாழ்க) உலவி வந்தான்! அவனை இறுதி வரை யாராலும் பிடிக்க, ஏன் அடையாளம் கூட காண இயலவில்லை! அப்படியே அவன் பிடிபட்டாலும் அவன் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவனுக்கு மரண தண்டனை வழங்க சட்டம் அனுமதிக்காது! இந்த சைக்கோ கொலைகாரனைப் பற்றி சமீபத்தில் ZODIAC என்றொரு திரைப்படமும் வந்தது!

இந்த சூழ்நிலையில் 1971ல் வெளிவந்த படம்தான் DIRTY HARRY! இதிலும் SCORPIO எனும் சைக்கோ கொலைகாரன் ஒரு நகரையே மிரட்டுகிறான்! ஆனால் அதிகாரத்தில் இருப்போர் அவனைப் பிடிக்க பெரிதாக எதுவும் முயற்சி செய்யாதிருக்கையில் DIRTY HARRY சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு எவ்வாறு SCORPIOவுக்கு முடிவு கட்டுகிறார் என்பதே கதை! இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து DIRTY HARRY தொடரில் மேலும் நான்கு திரைப்படங்கள் வந்தன! மேலும் DIRTY HARRY தன் வாழ்நாளின் கடைசி காலங்களை எவ்வாறு கழித்திருப்பார் என்ற கற்பனையே GRAN TORINO திரைப்படம் என்கின்றனர் தீவிர க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ரசிகர்கள்!

திரைப்படங்களை மட்டுமல்லாது நாம் விரும்பிப் படிக்கும் காமிக்ஸ்களிலும் DIRTY HARRY-ன் தாக்கத்தை நாம் காணலாம்! அவற்றில் தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் பரிச்சயமானதொரு காமிக்ஸ் கதாநாயகன் தான் ஒற்றைக் கண் ஜாக்!

தமிழில் இவர் கதைகள் மினி லயன்-ல் மொத்தம் மூன்றே மூன்றுதான் வந்துள்ளன! அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!

அட்டைப்படம் Mini Lion Comics # 10 - Oru Kalla Parunthin Kathai Mini Lion Comics # 12 - Vellai Pisasu Mini Lion Comics # 14 - Summer Special
முதல் பக்கம் Mini Lion Comics # 10 - One-Eyed Jack! Mini Lion Comics # 12 - One-Eyed Jack! Mini Lion Comics # 14 - One-Eyed Jack!
ஆங்கில மூலம் Valiant_1976-05-08_p01 Valiant_1976-02-28_p01 Valiant_700_1976-07-24_p01 001
முதல் பக்கம் Valiant_1976-05-08_p02 Valiant_1976-02-28_p02 Valiant_700_1976-07-24_p02 001
இதழ் மினி லயன் (மாத இதழ்) மினி லயன் (மாத இதழ்) மினி லயன் (மாத இதழ்)
வெளியீடு # 10 12 14
முதல் பதிப்பு 15th November, 1987 15th Febraury, 1988 15th April, 1988
மறுபதிப்புகள் இதுவரை இல்லை இதுவரை இல்லை இதுவரை இல்லை
பதிப்பகம் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
ஆசிரியர் S.விஜயன் S.விஜயன் S.விஜயன்
அச்சிட்டோர் தி விஜய் புக்ஸ், சிவகாசி தி விஜய் புக்ஸ், சிவகாசி தி விஜய் புக்ஸ், சிவகாசி
நாயகர்(கள்) ஒற்றைக் கண் ஜாக் ஒற்றைக் கண் ஜாக் ஒற்றைக் கண் ஜாக்
மூலம் ONE-EYED JACK  (ஆங்கிலம்) ONE-EYED JACK  (ஆங்கிலம்) ONE-EYED JACK  (ஆங்கிலம்)
இதழ் VALIANT (Weekly) VALIANT (Weekly) VALIANT (Weekly)
வெளியீடு # 689 679 700
முதல் பதிப்பு 8th May, 1976 28th Febraury, 1976 24th July, 1976
மறுபதிப்புகள் EAGLE (Weekly) EAGLE (Weekly) EAGLE (Weekly)
பதிப்பகம் IPC Magazines Ltd. IPC Magazines Ltd. IPC Magazines Ltd.
கதை ஜான் வாக்னர் ஜான் வாக்னர் ஜான் வாக்னர்
ஓவியம் ஜான் கூப்பர் ஜான் கூப்பர் ஜான் கூப்பர்
தமிழில் S.விஜயன் S.விஜயன் S.விஜயன்
சைஸ் 5"x7" 5"x7" 5"x7"
விலை ரூ:2/- (1987 முதல் பதிப்பின் போது) ரூ:2/- (1988 முதல் பதிப்பின் போது) ரூ:3/- (1988 முதல் பதிப்பின் போது)

Mini Lion Comics # 13 - One-Eyed Jack! - Adசுவாரசியமான துணுக்குகள்:

  • ஒற்றைக் கண் ஜாக் கதைகளுக்கு அற்புதமாக ஓவியங்கள் வரைந்த ஜான் கூப்பர் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான மற்றொரு காமிக்ஸ் தொடரான இரும்புக்கை நார்மன் கதைகளுக்கும் ஓவியம் வரைந்துள்ளார்!
  • கதாசிரியர் ஜான் வாக்னர் பல வகையான காமிக்ஸ் தொடர்களின் ஆசிரியர்! JUDGE DREDD தொடரில் வெற்றிகரமாக  பணியாற்றியவர்! JUDGE DREDDம் பார்க்கப் போனால் DIRTY HARRYன் தழுவலே! சில காமிக்ஸ் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்! தமிழில் சில பல JUDGE DREDD கதைகள் வந்துள்ளன! அவற்றை விரிவாக பின்பொரு நாளில் காண்போம்!
  • ஒற்றைக் கண் ஜாக்கிற்கு பிறகு அதே போல் DREDGER எனும் கதாபாத்திரத்தையும் ஜான் வாக்னர் உருவாக்கியுள்ளார்! இதில் ஒரேயொரு கதை மட்டும் தமிழில் படித்த ஞாபகம்!
  • VALIANTல் இத்தொடர் ஆரம்பிக்கும் போது அதன் ஆசிரியராகப் பணியாற்றிய ஜான் வாக்னர் காலத்திற்கேற்ப பழைய பாணியிலிருந்து மாறி பல புது வித ஆக்‌ஷன் தொடர்கள் வர வழிவகை செய்தார்! ஒற்றைக் கண் ஜாக் அந்த புது முயற்சிகளில் ஒன்று!
  • தமிழிலும் அதே போல் மினி லயன்-ல் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பல புதுவித மாற்றங்கள் கொண்டு வரும்போது ஒற்றைக் கண் ஜாக்கை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்! அந்த மாற்றங்கள் குறித்த மேல் விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
  • ஒற்றைக் கண் ஜாக் கதைகளுக்கு ஒரேயொரு முறைதான் விளம்பரம் செய்யப்பட்டது! அது மினி லயன் # 14 – சம்மர் ஸ்பெஷல்!க்கான விளம்பரமே! ஆனால் விளம்பரப் படுத்தப் பட்ட பெயரில் கதை வரவில்லை!

போனஸ்:

ஆங்கிலத்தில் வெளிவந்த ஒற்றைக் கண் ஜாக் அட்டைப்படங்களின் அழகிய அணிவகுப்பு, இதோ உங்கள் பார்வைக்கு!

Valiant 1975-12-27Valiant 1976-01-10Valiant 1976-02-07Valiant 1976-03-13

Valiant 1976-03-27Valiant 1976-04-10Valiant 1976-04-17Valiant 1976-05-15

Valiant 1976-05-22Valiant 1976-06-12Valiant 1976-06-19Valiant 1976-08-28

மேற்காணும் அட்டைப்படங்களுடன் கீழ்காணும் DIRTY HARRY ஆக்‌ஷன் ஸ்டில்களை ஒப்பிட்டுப் பாருங்கள்! க்ளிண்ட் ஈஸ்ட்வுட் சாயல் தெரிகிறதா?

dirty_harrydirty_harry (1)dirtyharryDirtyHarry1dirtyharry (1)dirty-harry-big2Magnum-Dirty-Harry

மேலும் நீங்கள் படித்து மகிழ தமிழில் வந்த ஒற்றைக் கண் ஜாக் கதைகளின் ஆங்கில மூலங்கள்! என்சாய்!

Valiant_1976-05-08_p02Valiant_1976-05-08_p03Valiant_1976-05-08_p04Valiant_1976-05-08_p05

Valiant_1976-02-28_p02Valiant_1976-02-28_p03Valiant_1976-02-28_p04Valiant_1976-02-28_p05

Valiant_700_1976-07-24_p02 001Valiant_700_1976-07-24_p03 001Valiant_700_1976-07-24_p04 001

தொடர்புடைய இடுகைகள்:

ஒற்றைக் கண் ஜாக் குறித்து பிரிட்டிஷ் காமிக்ஸ் சரித்திர சான்றோன் ஸ்டீவ் ஹாலண்ட்-ன் பதிவு! ஒற்றைக் கண் ஜாக்கின் முதல் கதையையும் இங்கே படித்து மகிழலாம்:

கதாசிரியர் ஜான் வாக்னர் பற்றி மேலும் அறிந்து கொள்ள:

ஓவியர் ஜான் கூப்பர் பற்றி மேலும் அறிந்து கொள்ள:

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

58 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு!

    பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  2. தலைவர் அவர்களே,

    மதிப்பிற்குரிய கலைஞர் க்ளிண்ட் இஸ்ட் வூட் அவர்கள் பற்றிய தகவல்கள் சிறப்பாக இருந்தன. இந்த வயதிலும் என்ன வேகமாக அவர் இயங்குகிறார் என்பது பெரும் ஆச்சர்யமே.

    //கெள-பாய் கதாபாத்திரத்தின் வாழ்க்கை பிற்காலத்தில் எவ்வாறு திசைமாறுகிறது என்பதை சித்தரிக்கும் வகையில் UNFORGIVEN அமைந்திருக்கு// எவ்வளவு உண்மையான வரிகள்.

    ஒற்றைக் கண் ஜாக் கதைகளை நான் படித்ததில்லை, அட்டைப்படங்களிற்கும் ஸ்கேன்களிற்கும் நன்றி. நீங்கள் கூறியவாறே ஆங்கில அட்டைப்படங்களில் க்ளிண்ட்டின் ஸ்டில்களின் சாயல் கலந்தே இருக்கிறது.

    அருமையான பதிவு, நபநப அல்ல :)

    ReplyDelete
  3. வழக்கம் போல கலக்கிட்டீங்க தல

    அட்டைப் படங்களின் ஸ்கேன் மிக அருமை அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கு

    ஆரம்பத்துல இருக்கிற க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பார்க்கும் பொழுது X-men Hero போல தெரிகிறார்

    ReplyDelete
  4. டர்ட்டி ஹரியின் பன்ச் வரிகள் சூப்பர், நீங்கள் வழங்கியிருக்கும் வீடியோ க்ளிப்கள் மட்டுப்படுத்தப்பட்ட பாவனைக்குரியவையாக இருக்கின்றன.

    ReplyDelete
  5. காதலரே...

    // நீங்கள் வழங்கியிருக்கும் வீடியோ க்ளிப்கள் மட்டுப்படுத்தப்பட்ட பாவனைக்குரியவையாக இருக்கின்றன//

    ஒன்னுக்கு ரெண்டு முறை அமுக்கினால் YOUTUBEல் பார்க்கலாம்! லிங்குகள் இதோ மீண்டும்!

    http://www.youtube.com/watch?v=maBJzJgYjto&feature=player_embedded

    http://www.youtube.com/watch?v=daFb3J-cwLg&feature=player_embedded

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  6. அமுக்குவது இன்பம், இரு தடவை அமுக்குவது ஹாஹாஹா பேரின்பம்... அமுக்குகிறேன் அனுபவிக்கிறேன்... க்ளிப்புக்களைத்தான் :))

    ReplyDelete
  7. \\கடந்த மே 31ம் தேதி பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும், இயக்குனருமான க்ளிண்ட் ஈஸ்ட்வுட்தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடினார்! 80 வயதைக் கடந்தாலும்\\

    உங்களைவிட பத்தே பத்து நாள் மூத்தவரான க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பற்றி பதிவிட்டது ஒக்கே, ஆனால் ஏழு நாள் சீனியரான கலைஞர் பற்றி ஏன் பதிவிடவில்லை?

    ReplyDelete
  8. //ஒற்றைக் கண் ஜாக் கதைகளுக்கு ஒரேயொரு முறைதான் விளம்பரம் செய்யப்பட்டது! அது மினி லயன் # 14 – சம்மர் ஸ்பெஷல்!க்கான விளம்பரமே! ஆனால் விளம்பரப் படுத்தப் பட்ட பெயரில் கதை வரவில்லை!//

    ஆன் செகன்ட் தாட், இது போன்ற சீரிஸ் ஆக வரும் தொடர்களுக்கு ஒவ்வொரு இதழிலும் தலைப்பு இருப்பதில்லை (உதாரணம்- குண்டன் பில்லி, பரட்டை தலை ராஜா). ஆகவே இந்த வேட்டை என்ற தலைப்பு அந்த மிக்கி மவுஸ் கதைக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  9. //இந்த சைக்கோ கொலைகாரனைப் பற்றி சமீபத்தில் ZODIAC என்றொரு திரைப்படமும் வந்தது//

    இவ்வளோ சொல்லதெரிந்த உமக்கு டேவிட் பின்ச்சர் பற்றி ஒருவரி சொல்ல தெரியவில்லையா?

    ReplyDelete
  10. //மேலும் DIRTY HARRY தன் வாழ்நாளின் கடைசி காலங்களை எவ்வாறு கழித்திருப்பார் என்ற கற்பனையேGRAN TORINO திரைப்படம் என்கின்றனர் தீவிர க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ரசிகர்கள்//

    படத்தின் முதல் முப்பதாவது நிமிடத்திலேயே என்னால் முடிவை கெஸ் பண்ண முடிந்தளும்கூட கடைசிவரை பார்க்கதூண்டிய படம்.

    ReplyDelete
  11. நல்ல பதிவு, நன்றி அய்யம்பாளயத்தாரே.

    ReplyDelete
  12. ஆஹா. . நானும் வந்தாச்சு . . ஒற்றைக்கண் ஜாக் - அந்த மிக்கி மௌஸ் முகமூடி பார்த்தவுடன், இக்கதையைப் படித்தது நினைவு வந்தது.. ஆனால் கதை சுத்தமாக மறந்துபோய்விட்டது..

    க்ளிண்ட் ஈஸ்ட்வுட் - வெல்.. வாய்ப்பே இல்லாத ஒரு ஆள்! அவரைப் பற்றியும் அழுக்கான ஹாரி(!!)யைப் பற்றியும் எழுதியதற்கு நன்றி தலைவரே. .

    மிகவும் பிடித்தது இந்தப் பதிவு..

    வெல்.. கடைசியில்... அதே தான்.. நீங்கள் நினைத்த அந்த வரிகளே தான் ;-)

    நபநப !

    ReplyDelete
  13. அதே போல், ஜட்ஜ் ட்ரெட், தங்கத்தலைவர் ஸ்டாலோன் நடித்து, படமாகவும் வந்துள்ளது..

    நம்ம லயனில் கூட, ஜட்ஜ் ட்ரெட் போன்ற ஒரு கதாபாத்திரம், எதிர்கால போலீஸாக வருமே . . அதன் பெயர் மறந்து விட்டது . . அந்தக் கதையும், சிறுவயதில் எனது ஃபேவரைட்டுகளில் ஒன்று..

    ReplyDelete
  14. வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வா அவர்களே...

    //உங்களைவிட பத்தே பத்து நாள் மூத்தவரான க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பற்றி பதிவிட்டது ஒக்கே, ஆனால் ஏழு நாள் சீனியரான கலைஞர் பற்றி ஏன் பதிவிடவில்லை?//

    அதை நான் செய்வதை விட நீங்களே செய்தால் சிறப்பாக இருக்குமே என்றுதான்!

    //ஆகவே இந்த வேட்டை என்ற தலைப்பு அந்த மிக்கி மவுஸ் கதைக்கும் பொருந்தும்.//

    அது நாமளா பொருத்திகிட்டாதான் உண்டு!

    //இவ்வளோ சொல்லதெரிந்த உமக்கு டேவிட் பின்ச்சர் பற்றி ஒருவரி சொல்ல தெரியவில்லையா?//

    இத...இத...இதத்தான் உங்க கிட்டிருந்து எதிர்பார்த்தேன்!

    //நல்ல பதிவு, நன்றி அய்யம்பாளயத்தாரே.//

    நல்ல பின்னூட்டம், நன்றி முத்து விசிறி!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  15. கருந்தேள் கண்ணாயிரம்...

    //நம்ம லயனில் கூட, ஜட்ஜ் ட்ரெட் போன்ற ஒரு கதாபாத்திரம், எதிர்கால போலீஸாக வருமே . . அதன் பெயர் மறந்து விட்டது . . அந்தக் கதையும், சிறுவயதில் எனது ஃபேவரைட்டுகளில் ஒன்று..//

    JUDGE DREDD தமிழில் ஆசிரியர் திரு.S.ராமஜெயம் மூலம் 007 ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ்-ல் வெளிவந்தது! மேல் விவரங்களுக்கு கீழ் காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

    http://tamilcomicsulagam.blogspot.com/search/label/Judge%20Dredd

    லயன்-ல் மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷலில் 3 சிறுகதைகளை மட்டும் போட்டு சொதப்பி விட்டார் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள்!

    அஷோக், மேத்தா காமிக்ஸ்களில் விளம்பரம் மட்டுமே வந்தது! கதைகள் எதுவும் வரவில்லை! விரைவில் விரிவான ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  16. இந்த பதிவை படித்தவர்கள் உடனடியாக இந்த லின்க்கை கிளிக் செய்யவும் = Dirty Harry

    ReplyDelete
  17. இந்த பதிவை படித்தவர்கள் உடனடியாக இந்த லின்க்கை கிளிக் செய்யவும் Dirty Harry Link = http://www.thehindubusinessline.com/catalyst/2003/05/01/images/2003050100170404.jpg

    ReplyDelete
  18. //நல்ல பின்னூட்டம், நன்றி முத்து விசிறி!//

    நல்ல தகவல், நன்றி காதலரே.

    ReplyDelete
  19. தன்னுடய சீரிய உழைப்பால் இன்று பலரின் மனதை கவர்ந்த இரண்டு நபர்களுக்கும் (கிழக்கு கட்டை + டாக்டர் செவன்) பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை சொல்ல கடமைபட்டுள்ளேன்.

    முத்துவிசிரி அவர்களின் பாணியில் சொல்வதானால் "வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்".

    ReplyDelete
  20. அன்னாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நல்ல பதிவு, நன்றி பயங்கரவாதி.

    ReplyDelete
  21. பயங்கரவாதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நல்ல பதிவு, நன்றி பயங்கரவாதி.

    ReplyDelete
  22. நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  23. கொய்யால, கும்மியா அடிக்குறீங்க? டேய் நகுல பாண்டிகளா, மரியாதையாக ஓடிப் போய்டுங்க.

    இது பயங்கரவாதி அவர்களின் சிறப்பு பதிவு.

    பதிவு சிறப்பாக இருந்தது. இருந்தாலும்கூட சென்ற பதிவில் செய்ததைப்போல கதை சுருக்கமும் இட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  24. சர்ப் சுத்தானந்தா, (நல்ல வேலை, ஒருக்கால், ஒரு கால் அதிகமாக இருந்திருந்தாலும்கூட சு என்பது சூ ஆக மாறி இருக்கும்).

    ஏனுங்க, டர்டி ஹாரி (அதாங்க அழுக்கு ஹாரி) பற்றி பதிவிட்டால் உடனடியாக சர்ப் எக்சல் படம் லிங்க் கொடுப்பீங்களா? உங்களை எல்லாம் நித்தியிடம் தான் சிஷ்யனாக விடனும்.

    ReplyDelete
  25. //அதை நான் செய்வதை விட நீங்களே செய்தால் சிறப்பாக இருக்குமே என்றுதான்//

    இதனை நான் வன்மையாக கண்டித்து இன்னமும் இரண்டு பின்னுட்டம் இடுவேன் என்று சபதமேர்கிறேன்.

    ReplyDelete
  26. ஒலக காமிக்ஸ் ரசிகரே...

    //பதிவு சிறப்பாக இருந்தது. இருந்தாலும்கூட சென்ற பதிவில் செய்ததைப்போல கதை சுருக்கமும் இட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//

    கதையே சுருங்கித்தான் இருக்கிறது! இதுல கதை சுருக்கம் வேறா?!! அதான் மொத்த கதையையும் ஆங்கிலத்தில் போட்டு விட்டோமே! படித்து இன்புறுங்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  27. சுருங்கிய கதையின் கதை சுருக்கத்தை வெளியிட மறுத்த பயங்கரவாதியை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் ஞாயிறு அன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற இருக்கிறது. அனைவரும் வாரீர், அலைகடலென திரள்வீர்.

    ReplyDelete
  28. சூப்பர் பதிவு.

    நான் இதுவரை இந்த படம் பார்த்ததில்லை. இருந்தாலும்கூட பார்க்கதூண்டுகிறது உங்கள் பதிவு.

    ReplyDelete
  29. ஒற்றைக்கண்ணனையும் கிழக்கு கட்டையையும் இணைக்க சிந்தித்ததே தனி ஒரு சிந்தனை தான். சூப்பர்.

    ReplyDelete
  30. கிரான் டோரிநோவில் அவர் ஒரு ஓய்வு பெற்ற கார் கம்பெனி ஊழியர் அல்லவா?

    ReplyDelete
  31. அருமையான படங்கள். கண்ணை கவரும் பதிவு.

    ReplyDelete
  32. க்ளிண்ட் ஈஸ்ட்வுட் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நாளை விரிவான கமென்ட் இடப்படும்.

    ReplyDelete
  33. பல வருடங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் இவர். இன்னமும்கூட இவரின் படங்கள் தொலைக்கட்சியில் வரும்போது நான் அவற்றை ரசிப்பது உண்டு. மிகவும் நிறைவான ஒரு பதிவு.

    அட்டைப்படங்களும், மற்ற (ஒப்பீட்டு படங்களும்) மிகவும் அருமை. ஒற்றைக்கண் ஜாக்கின் பின்புலத்தில் இப்படி ஒரு தகவல் இருப்பதே ஆச்சர்யமான ஒரு தகவல். அறிந்திராத ஒன்று.

    ReplyDelete
  34. ஆங்கிலத்திலாவது, முழு கதைகளை அளித்தமைக்கு நன்றி.

    சமீப பதிவுகள் புது மாதிரியாக இருப்பது மகிழ்வை தருகிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  35. wonderful, excellent, awesome, magnificent, super, etc etc

    iam running short of words for this post. Clint is my fav guy in thos teenage years. still is. that is the charm he has.

    i just loved him in a old western film in which he used to enter a hotel using no less than a train, yes TRAIN, to bedazzle the enemies.

    can you name the film? would love to see that film again.

    ReplyDelete
  36. in fact, i read all three of these mini lion stories thousands of times so far. i never had the faintest idea to interconnect these two individuals.

    awesome. after reading this post, i went over wiki to find any connecting points and still searching for them. thanks again for this post. you have made my day.

    as am under medication for the last 6 weeks, am unable to do either posts or comments regularly. thats why the delay in comments.

    ReplyDelete
  37. AND, another set of thanks for the english full scans. of late, my system is full of downloaded comics and am not complaining. :)

    ReplyDelete
  38. ஜாலி ஜம்பர்...

    //கிரான் டோரிநோவில் அவர் ஒரு ஓய்வு பெற்ற கார் கம்பெனி ஊழியர் அல்லவா?//

    ஆம்! மேலும் அவர் வியட்னாம் போரில் போராடியதாலேயே அவரது அருகில் வசிக்கும் ஆசியர்களிடம் ஆரம்பத்தில் அவ்வளவு துவேஷத்துடன் நடந்து கொள்கிறார்!

    UNFORGIVENல் எவ்வாறு MAN WITH NO NAME கதாபாத்திரம் ஆத்மார்த்த நிலையில் சித்தரிக்கப் படுகிறதோ, அதே போல் தான் GRAN TORINOவில் DIRTY HARRY ஆத்மார்த்த நிலையிலேயே வருகிறார்!

    தனது பழைய ஹிட் படங்களின் இயக்குனர்களுக்கு, தனது துரோணர்களுக்கு, ஏகலைவனாக க்ளிண்ட் மரியாதை செய்யும் விதமே இப்படங்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  39. //UNFORGIVENல் எவ்வாறு MAN WITH NO NAME கதாபாத்திரம் ஆத்மார்த்த நிலையில் சித்தரிக்கப் படுகிறதோ, அதே போல் தான் GRAN TORINOவில் DIRTY HARRY ஆத்மார்த்த நிலையிலேயே வருகிறார்//

    கவிதை, கவிதை. நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்க

    ReplyDelete
  40. வேதா...

    //i just loved him in a old western film in which he used to enter a hotel using no less than a train, yes TRAIN, to bedazzle the enemies.

    can you name the film? would love to see that film again.//

    படத்தின் பெயர் JOE KIDD! இப்போதுதான் மீண்டும் DVDல் பார்த்து மகிழ்ந்தேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  41. //கவிதை, கவிதை. நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்க//

    யா இட்ஸ் மீ! நாங்களும் விளிம்பு நிலை பின்
    நவீனத்துவ எழுத்தாளர் ஆக வேண்டாமா?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  42. வாழும் வள்ளுவர், புதிய கவிஞர், அன்பு தலைவர், பசு நேசர் எங்கள் ஆசான், பெரியண்ணா பயங்கரவாதி டாக்டர் செவன் வாழ்க.

    ReplyDelete
  43. //படத்தின் பெயர் JOE KIDD //

    இதற்கும் நம்ம லக்கி லுக்கின் பில்லி தி கிட் கதைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா தலைவரே?

    ReplyDelete
  44. தலைவரை ஏன் ஓரிரு நாட்களாக வலையுலகப் பக்கமே காணவில்லை?

    பிறந்த நாள் கொண்டாட்டங்களின் பின்விளைவோ?

    ReplyDelete
  45. யாருங்க அது சர்ப் சுத்தானந்தா?

    நம்ம குத்தானந்தா மாதிரி அவரும் அஜால் குஜால் ஆளா?

    ReplyDelete
  46. excellent post on eastwood. loved it.

    thanks.

    ReplyDelete
  47. வெல், மீ தி பிப்டியத் (50th). எப்புடி?

    ஹாப் அடித்த தலைவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. என்னதான் இது என்னுடைய வலைப்பூவா இருந்தாலும் கூட என்னால இந்த வாய்ப்ப நழுவ விட மனசு வரல!

    அதனால...

    அ.கொ.தீ.க. வரலாற்றில் முதன் முறையாக...

    மீ த 50வது!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  49. அடச்சே! ஜஸ்ட்டு மிஸ்ஸு!

    மீ த 51வது & 52வது!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  50. மீ த 53வது, ஒண்ணு பெரிசா,50 பெரிசா, இல்ல 51 & 52 பெரிசா ? ....53 தான் பெரிசு!!!!!!!!

    DIRTY HARRY ஆக்‌ஷன் ஸ்டில்கள் அற்புதம்
    தலைவரே... நீங்களும் விஸ்வாவும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் பிரிச்சு எறிகீர்கள்.

    அப்புறம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  51. From The Desk Of Rebel Ravi:

    Doc 7,

    excellent post on clint eastwood. loved every part of it. waiting for more such posts from your end.

    and, me the comeback again. will be present now.

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  52. From The Desk Of Rebel Ravi:

    doc 7,

    your new design is very good, eventhough it is plain and simple.

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  53. nice comparison with clint eastwood! good to see the cover art.

    ReplyDelete
  54. நண்பரே,

    வலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.

    http://007intamil.blogspot.com/2010/06/x.html

    ReplyDelete
  55. மீ தி பிப்டி எய்ட்து.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!