Monday, May 31, 2010

புயல் வேக இரட்டையர்!

வணக்கம்,

சமீபத்தில் கிங் விஸ்வா வெளியிட்டிருந்த காமிக்ஸ் கேள்வி-பதில் பதிவில் நண்பர்கள் சிலர் புயல் வேக இரட்டையர் குறித்து விவரங்கள் கேட்டிருந்தனர்! அவர்களது கேள்விகளுக்கு பதில் கூறும் விதமாகவே இப்பதிவு வந்திருக்கிறது!

புது முயற்சியாக பல விஷயங்களை விளக்காமல் விவரங்களாக மட்டும் கூறியுள்ளேன்! பதிவை ஆழ்ந்து படிக்குமாறு உங்களனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்!ஆகையால் மொக்கை போட்டு மேலும் நேரத்தை வீணாக்காமல்  நேரடியாக பதிவுக்கு போவோம்!

புத்தக விவரங்கள்:

அட்டைப்படம் Mini Lion Comics # 3 - Karuppu Pathiri Marmam Muthu Comics # 195 - Puyalodu Oru Potti
கதை கறுப்புப் பாதிரி மர்மம்! புயலோடு ஒரு போட்டி!
இதழ் மினி லயன் (மாத இதழ்) முத்து காமிக்ஸ் (மாத இதழ்)
வெளியீடு 3 195
முதல் பதிப்பு மார்ச் 1, 1987 ஆகஸ்ட் 15, 1991
மறுபதிப்புகள் இதுவரை இல்லை இதுவரை இல்லை
பதிப்பகம் லயன் புக் ஹவுஸ் முத்து காமிக்ஸ்
ஆசிரியர் S.விஜயன் M.சவுந்திரபாண்டியன்
அச்சிட்டோர் லயன் புக் ஹவுஸ் தி விஜய் புக்ஸ், சிவகாசி
நாயகர்(கள்) புயல் வேக இரட்டையர் புயல் வேக இரட்டையர்
மூலம் THE  SPEED KINGS – THE BLACK PRIOR (ஆங்கிலம்) THE  SPEED KINGS – THE KESLEY FLYER (ஆங்கிலம்)
இதழ் LION (Weekly) LION (Weekly)
வெளியீடு FLEETWAY PUBLICATIONS LTD. FLEETWAY PUBLICATIONS LTD.
முதல் பதிப்பு 10th August 1968 - 5th October 1968 13th January 1968 – 11th  May 1968
மறுபதிப்பு LION ANNUAL 1974 LION ANNUAL 1970
  Lion Annual 1974 Lion Annual 1970
கதை ??? ???
ஓவியம் RENATO POLESE RENATO POLESE
தமிழில் S.விஜயன் S.விஜயன்
பக்கங்கள் 68 (கருப்பு வெள்ளை) 132 (கருப்பு வெள்ளை)
சைஸ் 10cmx14cm 9.5cmx13cm
விலை ரூ:1/- (1987 முதல் பதிப்பின் போது) ரூ:3/- (1991 முதல் பதிப்பின் போது)
விளம்பரம் Mini Lion Comics # 2 - Next Issue (Ad) Muthu Comics # 194 - Next Issue (Ad)
கதைச்சுருக்கம்

புயல் வேக இரட்டையரின் இரண்டாவது மற்றும் இறுதிக் கதை! டைசன் பிரபுவின் குடும்பத்தின் மீது விழுந்த சாபத்தின் படி கறுப்புப் பாதிரியைக் கண்டவர்களுக்கு மரணம் நிச்சயம்! அந்த சாபம் உண்மையா? இல்லை வெறும் மூட நம்பிக்கையா? அல்லது  டைசன் பிரபுவின் மரணத்தினால் இலாபமடையக்கூடியவர்கள் நிகழ்த்தும் நாடகமா? என்பதை தங்கள் வழக்கமான அதிரடி பாணியில் இரட்டையர்கள் துப்புத் துலக்குகின்றனர்!

புயல் வேக இரட்டையரின் முதல் கதை! இரட்டையர்களை கார் ரேஸில் பங்கேற்க வைத்து அவர்கள் மூலம் தங்கத்தாலான கார் ஒன்றை கடத்த முயலும் ஒரு கும்பலுக்கும், அதைக் கைப்பற்ற நினைக்கும் வேறொரு கும்பலுக்கும் இடையே சிக்கிகொண்டு இரட்டையர்கள் நிகழ்த்தும் சாகஸங்கள் தான் கதை! பரபரப்பான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை!

முதல் பக்கம் Mini Lion Comics # 3 - Karuppu Pathiri Marmam Muthu Comics # 195 - Puyalodu Oru Potti
ஆங்கில மூலம் The Speed Kings - The Black Prior The Speed Kings - The Kesley Flyer

Renato Poleseசுவாரசியமான துணுக்குகள்:

  • இக்கதைத் தொடரின் ஓவியர் RENATO POLESE நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானவர்! பல லாரன்ஸ் & டேவிட் கதைகளுக்கு துடிப்பான ஓவியங்கள் வரைந்தது இவர்தான்! இவரைப் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
  • லயன் காமிக்ஸ்-ல் இரட்டை வேட்டையர்-ன் வெற்றிக்கு பிறகு அதே போல் சாகஸ வீரர்கள் மினி லயன்-லும் தேவை என்று உணர்ந்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் தேர்ந்தெடுத்த ஹீரோக்களே நமது புயல் வேக இரட்டையர்!
  • இரட்டை வேட்டையர் போலவே இவர்களும் சாகஸ ஸ்டண்ட் வீரர்கள்! ஆனால் இவர்கள் இரட்டை வேட்டையர் போல் இரகசிய உளவாளிகள் இல்லை! தங்களை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் சாதாரண கதாநாயகர்கள் (ஆக்‌ஷன் ஹீரோ சைமன் போல்)!
  • ஸாண்டி, ஜோ என்ற ஸ்டண்ட் சகோதரர்களின் சாகஸங்களின் கதைகள் தான் இவை! அவர்களது ஹெல்மெட்டிலும், ஜெர்க்கினிலும் அவர்களது இனிஷியல்கள் பொறிக்கப்பட்டிருக்கும்!
  • இவர்களின் சாகஸக் கதைகள் மொத்தமே இரண்டேயிரண்டுதான் வந்துள்ளன! ஆங்கிலத்திலும் அவ்வளோதான்! இவர்களைப் போல சாகஸ ஹீரோக்கள் அங்கேயெல்லாம் நயா பைசாவுக்கு நாற்பது பேர் கிடைப்பார்கள்! ஆகையால்தான் இவ்வகை ஹீரோக்கள் எவருமே நிலைத்து நிற்கவில்லை!
  • புயலோடு ஒரு போட்டி அட்டைப்படத்தின் மூலம் உண்மையில் இரட்டை வேட்டையர்-ன் விளம்பரத்தில் உபயோகிக்கப்பட்ட ஒரு படமாகும்! கைவசம் புத்தகம் இல்லாததால் படம் வெளியிட முடியவில்லை! மன்னிக்கவும்!

நிறைகள்:

  • ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு, குறிப்பாக வேகவிரும்பிகளுக்கு (LITERALLY) சரியான விருந்து!
  • இரட்டை வேட்டையர்-ன் ரசிகர்களுக்கு இக்கதைத் தொடர் மிகவும் பிடிக்கும்!
  • அட்டகாசமான ஓவியங்கள்! அதிரடி கதைத் திருப்பங்கள்! ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் ஜெட் வேக கதையமைப்பு!

குறைகள்:

  •  இரட்டை வேட்டையர் போல் இவர்கள் உளவாளிகளாக இல்லாதிருப்பது கதைக் களங்களை மட்டுப்படுத்துகிறது! ஒரே மாதிரியான கதைக் களங்களே இக்கதைத்தொடரின் தோல்வி!

நன்றிகள்:

  • ஸ்டீவ் ஹாலண்ட் – இக்கதைத் தொடரின் ஓவியர் குறித்த விவரங்களைக் கேட்டவுடன் அளித்தமைக்கு!
  • முத்து விசிறி – வழக்கம் போல ஆங்கிலத் தொடரின் அனைத்து விவரங்களையும் அளித்தமைக்கு!
  • ஹாஜா இஸ்மாயில்  - அட்டைப்படங்களுக்காக!
  • கிங் விஸ்வா – பல்வேறு வகைகளில் அவர் தொடர்ந்து புரிந்து வரும் உதவிகளுக்கும், உபத்திரவங்களுக்கும்!
  • ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் – இக்கதைத் தொடரை நமக்கு அறிமுகம் செய்தமைக்கு!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

17 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு!

    பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன் (அடுத்த வாரத்தில், ஆம் - டாட்டா போட்டான் பிளஸ் புட்டுகிச்சு).

    ReplyDelete
  2. இரண்டாவதாக நான். தகவல்களுக்கு நன்றி. புயல் வேக இரட்டையர் மற்றும் வேக இரட்டையர் கதைகள் எதுவுமே நான் படித்ததில்லை.

    ReplyDelete
  3. தலைவர் அவர்களே,

    புயல்வேக இரட்டையர் கதைகள் குறித்து மிகவும் சிறப்பான தகவல்களை உள்ளடக்கிய உங்கள் பதிவு அருமை. சிறப்பான ஸ்கேன்களிற்கு நன்றி.

    ReplyDelete
  4. ஷோலே, வெற்றிக் கரங்கள் மாதிரியான கதைகளைக் கூட காமிக்குகளாக மாற்றலாமோ!

    ReplyDelete
  5. யப்பா, சில வாரங்களுக்குப் பிறகு மிக கடுமையான முயற்சிக்குப் பிறகு ஒரு பின்னூட்டம் போட்டாயிற்று

    ReplyDelete
  6. செவன் அவர்களே,நீங்கள் சொன்னது சரி.'புயலோடு ஒரு போட்டி' யின் அட்டைப் படம், 'மீண்டும் ஹிட்லர்' கதையின் ஒரு பகுதியே...

    பதிவுக்கும்,தகவல்களுக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  7. தலைவரே - கிங் விஸ்வாவின் கேள்வி பதிலில், நான் முற்றிலும் குழப்பிக்கொண்ட கறுப்புப் பாதிரி மர்மத்தைப் பற்றி எழுதியமைக்கு மிக்க நன்றி . . இக்கதை, இன்னமும் தெள்ளத்தெளிவாக நினைவிலுள்ளது.. ஆனால், இது இரட்டை வேட்டையர் சாகஸம் என்று குழப்பிக்கொண்டு விட்டேன் :-)

    மனம் பழைய காலத்துக்குச் சிறகடித்துப் பறக்கத் தொடங்கிவிட்டது . . ஆஹா

    இரும்புக்கை நார்மன் பற்றிய பதிவையும் ஆவலாக எதிர்பார்க்கிறேன் . .

    ReplyDelete
  8. மிக சிறந்த தகவல்கள்

    // புயலோடு ஒரு போட்டி அட்டைப்படத்தின் மூலம் உண்மையில் இரட்டை வேட்டையர்-ன் விளம்பரத்தில் உபயோகிக்கப்பட்ட ஒரு படமாகும்! //

    மிக சிறந்த நினைவாற்றல்

    கலக்குங்க தலைவரே

    ReplyDelete
  9. தலைவரே,
    புயல் வேக இரட்டையர் கதைகளை நானும் படித்ததில்லை.ஆனால் அந்த ஆங்கில ஸ்கேன்களை கைபற்ற இயலும் என நினைக்கிறன் இல்லையா?

    ReplyDelete
  10. rompa nalla irukku doctor. inime thodarnthu unka pathivai padikka aaramikkiren

    ReplyDelete
  11. தலைவர் அவர்களே,

    Very Good post on The Speed Kings!!!!!!!

    ReplyDelete
  12. சூப்பர் தலைவரே, சூப்பர் பதிவு.

    அட்டைப்படங்கள் அருமை.

    ReplyDelete
  13. புதிய முயற்சி பதிவு அருமை.

    தொடரலாமே?

    ReplyDelete
  14. இந்த லயன் 1974 ஆன்னுவல் அட்டைப்படம்தான் சதிவலை அட்டையின் பின்புறம் வந்தது. அதனியும் கூறி இருக்கலாமே?

    ReplyDelete
  15. தலைவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. சிறப்பு பிறந்த நாள் பதிவுகள் எதுவும் இல்லையோ?

    ReplyDelete
  17. read as பிறந்த நாள் சிறப்பு பதிவுகள் எதுவும் இல்லையோ?

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!