“அதென்ன தலமேல கீறிப்புள்ள படுத்துருக்கு?!!” |
-கவுண்டமணி (படம்: ஜெய் ஹிந்த்) |
வணக்கம்,
IPL முடியப்போகும் தருவாயில் சீஸனின் ஆரம்பத்திலேயே இட்டிருக்க வேண்டிய இந்த இடுகையை தாமதமாக இடுவதற்கு முதலில் மன்னிக்க வேண்டுகிறேன்!
மங்கூஸ் மட்டை என்று அகில கிரிக்கெட் உலகமே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் போது கூர்ந்து நோக்கினால் அம்மட்டை கண்ட வெற்றிகளை விட (ஒரேயொரு போட்டியில் தான் அம்மட்டையின் சிறப்பு வெளிப்பட்டது) தோல்விகளே பல மடங்கு எண்ணிக்கையில் அதிகம்!
அப்பேற்பட்ட மொக்கை மட்டையை ஏன்தான் எல்லோரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனரோ?
ஆனால் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான இன்னொரு மங்கூஸ் அப்படியில்லை! எப்பொழுதும் தூள் கிளப்புவார்! அவர் வேறு யாருமல்ல! இரத்தப்படலம் கதைத்தொடரின் எதிர்நாயகன் மங்கூஸ் தான் அவர்! அவரது அதிரடிகளின் அணிவகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு! பதிவு முழுவதும் பல ‘காமிக்ஸ் குத்து!’க்கள் இடம்பெற்றுள்ளன! படித்து மகிழுங்கள்!
இரத்தப்படலம் I:
மங்கூஸ் நமக்கெல்லாம் அறிமுகமானது இரத்தப்படலம் பாகம்-Iல் தான்! மூன்றே மூன்று பக்கங்களில் தான் தன் மொட்டைத் தலையைக் காட்டுகிறார்! மூன்று நான்கு வசனங்கள் தான் பேசுகிறார்! இருந்தாலும் நம்மால் மறக்க முடியாத கதாபாத்திரமாக அமைந்துவிடுகிறார்!
ஆனால் இதில் ஒரு சிறு குழப்பம் உள்ளது! XIIIக்கு ஒன்றுமே நினைவில்லை என்றும் கூறும் போது மங்கூஸை மட்டும் எப்படி சரியாக அடையாளம் கண்டு கொண்டார் என்பது தான்? XIIIன் புரியாத பல புதிர்களில் இதுவும் ஒன்று!
வழக்கமாக இரத்தப் படலம் கதைகளில் மங்கூஸ் ENTRY கொடுக்கும் போது கதையின் போக்கே திசைமாறும்! அதுவும் நாம் சற்றும் எதிர்பாராத தருணத்தில் வந்து நம்மையும் XIII-யையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துவார்! இந்த முதல் கதை அந்த ட்ரெண்டை நன்றாகவே பதிக்கிறது!
இரத்தப்படலம் III:
இரண்டேயிரண்டு பக்கங்களுக்கே வந்தாலும் சற்றும் எதிர்பாராத தருணத்தில் வருகிறார்! கதையின் போக்கிலும் வழக்கம் போல ஒரு திருப்பத்தை உண்டாக்குகிறார்!
நான் முதன் முதலில் படித்த இரத்தப்படலம் கதை இந்த மூன்றாம் பாகம்தான்! கதைக்கு உண்டாக்கப்பட்ட HYPEம் கதையின் அற்புதமும் சேர்ந்து என்னை உடனடியாக விசிறியாக மாற்றிவிட்டன! அதில் என்னை மிகவும் கவர்ந்தது மங்கூஸ் பாத்திரப் படைப்புதான் என்பதை சொல்லவும் வேண்டுமா?
இரத்தப்படலம் VI:
இரண்டு பாகங்களுக்கு ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் வரும் மங்கூஸ் இந்த முறை உண்மையிலேயே தூள் கிளப்பியிருக்கிறார்! XIIIஐ கொல்ல தன் அல்லக்கையுடன் வரும் மங்கூஸ் அவனுக்கு XIIIஐக் கொல்வதில் உள்ள சிரமங்களை அற்புதமாக விளக்குகிறார்!
XIII என்றாலே ராசியில்லாத எண்ணாகக் கருதப் படுகையில் மங்கூஸிடமிருந்து இத்தனை முறை தப்பியிருக்கும் XIII உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷடசாலிதான்! இல்லையா?
ஆனால் கதையின் ஹை-லைட் க்ளைமாக்ஸில் தான் வருகிறது! XIIIஐ கொல்லும் முயற்சியில் தோல்வியடையும் மங்கூஸ் XIIIஐ கொல்லத்துடிக்கும் லோக்கல் வில்லன்களை அணுகி தன்னை ஒரு FBI ஏஜெண்டாக அமர்க்களமாக அறிமுகம் செய்து கொள்கிறார்! அவர் அந்த சமயத்தில் கூறும் விஷயங்கள் வாசகர்களான நமக்கு முற்றிலும் நம்பத் தகுந்த வகையில் கூறப்பட்டிருக்கும்!
அதிலும் குறிப்பாக தன் பெயர் காரணத்தை அவர் விளக்கும் கட்டம் அப்பப்பா! சொல்லி மாளாது! நீங்களே கண்டு மகிழுங்கள்!
ஒரு வேளை மங்கூஸ் உண்மையிலேயே FBI உளவாளியோ? XIII உண்மையிலேயே பயங்கர குற்றவாளியோ? என்றெல்லாம் எண்ணத் தூண்டவைக்கும் கதையம்சம்! ஏழாவது பாகம் எப்போது வரும் என காத்திருக்க வைத்த தருணங்கள்! அதுவும் பெரிய சைஸில் முதன் முறையாக XIIIன் அற்புத சித்திரங்களை கண்குளிர காணும் அரிய வாய்ப்பு என்று எல்லாம் சேர்ந்து எனது ஃபேவரைட் மங்கூஸ் தருணமாக இதை மாற்றி விட்டன!
இரத்தப்படலம் தொடரில் என்னை மிகவும் கவர்ந்த பாகமும் இதுவேயாகும்! அதற்கு இந்த மங்கூஸ் தருணம் மட்டுமே காரணமல்ல! இக்கதையில் வரும் இன்னொரு தருணமும் என்னை மிகவும் பாதித்தது! அது குறித்து விரைவில் பதிவிடுகிறேன் என கிங் விஸ்வா போன வருடமே கூறியுள்ளார்!
இரத்தப்படலம் VII:
ஆறாவது பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட ஏமாற்றமளிக்காமல் நிறைவு செய்தது இரத்தப்படலம் ஏழாம் பாகம்! வழக்கம் போல இதிலும் சில பல அதிரடி எண்ட்ரீக்களைக் கொடுக்கிறார் மங்கூஸ்!
க்ளைமாக்ஸில் முதன்முறையாக XIIIம் மங்கூஸும் நேருக்கு நேர் மோதும் அற்புதமான காட்சி! நீங்களே கண்டு மகிழுங்கள்!
இறுதியில் மங்கூஸ் கைது செய்யப் பட்டாலும் அவர் மீண்டும் வருவார் என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும்!
இரத்தப்படலம் VIII:
கதையின் ஆரம்பமே மங்கூஸின் அதிரடி மூலம்தான்! ஜெயிலிலிருந்து தப்பிக்கும் அவரது சாகஸம் மயிகூச்செறிய வைக்கும்! அதுவும் அவர் தப்பிக்க உதவும் ஜெயில் வார்டனுக்கு அவர் கொடுக்கும் வெகுமதியும், செல்லில் அவர் எழுதி வைத்து விட்டு போகும் வாசகமும் ட்ரேட்மார்க் மங்கூஸ் வில்லத்தனம்!
பின்னர் க்ளைமாக்ஸில் தோன்றும் மங்கூஸ் வழக்கமான நையாண்டியுடன் XIII-ஐ எதிர்கொள்கிறார்!
XIII-ஐ கொல்லும் முன் அவர் நினைவாற்றலை இழக்கக் காரணமான சம்பவங்களை அவருக்கு நினைவூட்ட விழைகிறார் மங்கூஸ்! மிக அற்புதமான தருணம் இது! முழு பக்கத்தையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்! படித்து மகிழுங்கள்!
மங்கூஸ் XIII-க்கு பிரியாவிடை கொடுக்கும் போது உதிர்க்கும் ‘காமிக்ஸ் குத்து!’ கனவுகளின் காதலர்-ன் கருத்தைக் கவரும்!
எட்டாவது பாகத்தில் கதை ஒரு வித க்ளைமேக்ஸை எட்டினாலும் XIIIன் வெற்றி பதிப்பகத்தாரை தொடரை மேலும் ஜவ்வாக நீட்டிக்க தூண்டியது! என்னைப் பொறுத்த வரை எட்டாம் பாகத்திலேயே கதையை முடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!
இக்கதை இன்னும் தமிழில் வெளிவராததால் விரிவாக எதையும் நான் கூற விரும்பவில்லை! ஆனால் மங்கூஸின் சகாப்தம் இத்துடன் நிறைவடைகிறது! ஆனால் போகும் போது அவர் ஒன்றும் சும்மா போகவில்லை! தனது தகுதிக்கேற்ப வீர மரணமே அடைந்துள்ளார்! மேலும் நான் எதுவும் கூறப் போவதில்லை! XIII ஸ்பெஷல் வந்ததும் நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்களேன்!
ஆனால் ஒரு விஷயம்! எட்டாம் பாகத்திலேயே முடிந்திருக்க வேண்டிய கதையை அட்லீஸ்ட் இந்த பாகத்திலாவது முடித்திருக்கலாம்! ஆனால் கதையை மேலும் ஜவ்வாக நீட்டி கடைசியில் பத்தொன்பதாம் பாகத்தில் அவசர அவசரமாக முடித்திருப்பார்கள்! கதாசிரியர் வான் ஹாம்மே இதுக்கு மேல நம்மால முடியாதுடா சாமி என்றிடாவிட்டால் இன்னும் கூட கதை நீண்டிருக்கும்! மங்கூஸ் உட்பட பல்வேறு அபிமான கதாபாத்திரங்கள் இறந்துவிடுவதால் பிந்தைய பாகங்களில் கதையின் மேல் ஒரு பற்று இல்லாமல் போய் விடுகிறது!
இக்கதை குறித்த கனவுகளின் காதலர்-ன் இடுகையைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
தொடர் முடிந்த பின்பும் பதிப்பகத்தாருக்கு XIII எனும் பொன் முட்டையிடும் வாத்தை விட மனமில்லை! கதாசிரியர் வான் ஹாம்மேவும் ஓவியர் வில்லியம் வான்ஸ்-ம் தொடரை விட்டு விலகி விட்டாலும் கூட வேறு ஆசிரியர், ஓவியர்களை வைத்து மங்கூஸின் பழைய கதையை வெளியிட்டனர்! இப்போது இரினாவின் கதையும் வந்துள்ளது!
இக்கதை குறித்த கனவுகளின் காதலர்-ன் இடுகையைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
இரினாவின் கதை குறித்தும் விரைவில் கனவுகளின் காதலர் பதிவிடுவார் என ஆவலுடன் காத்திருக்கிறேன்!
இப்படிப்பட்டதொரு அருமையான கதாபாத்திரத்தை படைத்த வான் ஹாம்மேக்கும், அதற்கு அற்புதமான சித்திரங்கள் மூலம் உயிரூட்டிய வில்லியம் வான்ஸ்-க்கும், ஒரிஜினலின் சுவை கொஞ்சம் கூட குன்றாமல் மேலும் மெருகூட்டி நமக்கு அளித்து வரும் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
பி.கு.:
பதிவ முடிக்கறதுக்கு முன்னாடி மங்கூஸ் மட்டை பத்தி இன்னும் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்!
“உன்ன மாதிரி எத்தன கீறிக்குட்டிகள நான் பாத்துருக்குறேன்?!!” |
-கவுண்டமணி (படம்: ஜெய் ஹிந்த்) |
பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:-
மங்கூஸ் மட்டை:
- http://www.cricinfo.com/ipl2010/content/story/452624.html
- http://kanavukale.blogspot.com/2010/03/blog-post_23.html
மங்கூஸ் சித்திர நாவல்:
- http://kanuvukalinkathalan.blogspot.com/2009/02/blog-post_12.html
- http://kanuvukalinkathalan.blogspot.com/2009/01/blog-post_30.html
XIII:
- http://tamilcomicsulagam.blogspot.com/search/label/XIII
- http://kanuvukalinkathalan.blogspot.com/search/label/XIII
- http://mudhalaipattalam.blogspot.com/2008/12/2.html
- http://www.karundhel.com/2010/04/xiii-1.html
- http://muthufanblog.blogspot.com/2006/03/lion-super-special-hi-all-thanks-for.html
XIII ஜம்போ ஸ்பெஷல் இன்று வரை வராதது குறித்த புலம்பல்/அலம்பல் பதிவுகள்:
- http://kanuvukalinkathalan.blogspot.com/2010/03/blog-post_14.html
- http://mrjcomics.blogspot.com/2009/07/xiii-collectors-edition-is-still-dream.html
- http://akotheeka.blogspot.com/search/label/XIII
CINEBOOK வெளியிடவிருக்கும் XIII ஆங்கிலத் தொடர் குறித்த செய்திப் பகிர்வுகள்:
- http://kakokaku.blogspot.com/2009/08/xiii-2010.html
- http://skipcomics.blogspot.com/2010/03/cinebooks-treasure-hunt-in-2010.html
XIII காமிக்ஸ் ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய:
XIII COLLECTOR’S EDITION WIDGET-ஐ உங்கள் வலைத்தளத்தில் இணைக்க:
மீ த ஃபர்ஸ்ட்டு!
ReplyDeleteசற்று பிசியாக இருப்பதால், மீ கம் பேக் லேட்டர்.
மீ த செகண்டு . . .:-)
ReplyDeleteமங்கூஸ் பற்றி ஒரு பின்னும் தொகுப்பு !! வாரே வாஹ் . .!!
பாகம் VIல் மங்கூஸ் ஆள்மாறாட்டம் செய்வது, நம்ம சிவகாமியின் சபதத்தில் நாகநந்தி, புலிகேசியைப் போல் வேடமிட்டு, பல தில்லாலங்கடிகளை செய்வது போலவே உள்ளது . .
பொதுவாகவே மங்கூஸ் ஒரு எதிர்நாயகன் என்றாலும், தான் கொண்ட லட்சியத்தில் பின்வாங்காது, தனது முயற்சியைச் சற்றும் தளரவிடாமல், பதிமூன்றைக் கொல்வதே தான் பிறந்த லட்சியம் என்பதனை நன்றாக வெளிகாட்டுகிறார்.
தமிழில் பதிமூன்றைத் திரைப்படமாக எடுத்தால், மங்கூஸாக யாரைப் போடலாம்?
மில்லியன் டாலர் கேள்வி !!
கருந்தேளாரே,
ReplyDelete//தமிழில் பதிமூன்றைத் திரைப்படமாக எடுத்தால், மங்கூஸாக யாரைப் போடலாம்? //
ஏற்கெனவே வெற்றி விழாவில் சலீம் கோஷ் (ஜிந்தா) மங்கூஸ் பாத்திரத்தில் நடிச்சிட்டாரு!
தலைவர்,
அ.கொ.தீ.க.
>மில்லியன் டாலர் கேள்வி க்கு பதில் !
ReplyDeleteநம்ம பயங்கரவாதி டாக்டர் தான்.
தலைவர் அவர்களே,
ReplyDeleteஅருமை, அருமை, நன்றி, நன்றி.... ஸ்கேன் பக்கங்களிற்கெல்லாம் டாங்ஸோ டாங்ஸ். தமிழ் XIII பக்கங்களை காண வாய்பளித்தமைக்கு மீண்டும் நன்றி.
மங்கூஸ்ட்டிற்கு சமர்பணமாக வந்திருக்கும் இப்பதிவு அசத்துகிறது, காமிக்ஸ் குத்துக்களில் மிஸ்டர் விஜயன் புகுந்து விளையாடி இருக்கிறார்.
நீயும் ஜோன்ஸும் பிரியக்கூடாது, பரலோகம் செல்லும்போது இரண்டு பெண்களின் துணை என்பன தூள் டக்கர் குத்து வகைக்கு உதாரணம்.
ஜம்போ ஸ்பெசல் இந்த ஜென்மத்தில் வராது, இவ்வகையான அருமையான பதிவுகளை படித்து மனதை குளிர் காய்வித்துக் கொள்ள வேண்டியதுதான் :)
சிறு வயதில் தென்னம் ஓலையின் மட்டையை வெட்டி கிரிக்கட் பேட் செய்து விளையாடி மகிழ்வோம் . இப்போது புதிதாக மங்கூஸ் மட்டையா. கலிகாகாலம் அய்யா.. கலிகாலம்
என் பதிவுகளிற்கு சுட்டிகள் வழங்கியமைக்கு நன்றி தலைவரே. கூடிய விரைவில் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன்.
அட்டகாசமான பதிவு.
தமிழ்படத்தில் மங்கூஸ் வேடத்தில் ஒரு புதுமுகம் அறிமுகம். அவர் பெயர் வி.. யில் ஆரம்பிக்கும். தலைவரிற்கும் அவரை நன்கு தெரியும். அவர் இந்த வசனத்தை பேசுவதை கற்பனை செய்து பாருங்கள் "நம்ம நாட்டில பாம்பு, பூச்சி தொல்லை அதிகமாயிருச்சு, மை நேம் இஸ் கூஸ்... அதையே நீட்டிச் சொன்னா மங்கூஸ், சனாதிபதியே தீவிரவாதி மக்குலேனை கவனிக்க என்னை அனுப்பியிருக்காரு. கொசுவுக்கு கொசுவர்த்தி.. மக்குலேனிற்கு மங்கூஸ்.. ஓ யா பேபி"
கவுண்டரின் க்ளிப் அருமை.
ReplyDeleteஜன்னலிற்கு வெளியே கொட்டும் பனியில் மேஜர் ஜோன்ஸின் கவர்ச்சிப் போஸ் கறுப்பு வெள்ளையிலும் உடலைச் சூடாக்குகிறதே :)
ReplyDeleteதம்பி,
ReplyDeleteநீ என்ன வச்சு ரொம்ப தான் விளம்பரம் பாக்குற. இன்னும் எவ்வளவு நாள்தான் என்ன வச்சே பொழப்ப ஓட்டுவீங்க?
இருந்தாலும் கூட இது ஒரு அருமையான பதிவு என்பதால் நான் மன்னித்து விடுகிறேன்.
//தமிழ்படத்தில் மங்கூஸ் வேடத்தில் ஒரு புதுமுகம் அறிமுகம். அவர் பெயர் வி.. யில் ஆரம்பிக்கும். தலைவரிற்கும் அவரை நன்கு தெரியும். அவர் இந்த வசனத்தை பேசுவதை கற்பனை செய்து பாருங்கள் //
ReplyDeleteஇப்பவே கண்ணா கட்டுதே?
பில்லா படத்தில் வரும் பாட்டினை இங்கு ரீமிக்ஸ் செய்து பார்த்தால்,
ReplyDeleteமை நேம் இஸ் மங்கூஸ்,
வாழ்க்கை ஒரு ப்ரூட் ஜூஸ்.
நானும் போகாத இடமில்லை, கொல்லாத ஆளில்ல ஐயா,
நல்ல எதிரி ஒருவன் வேண்டும் (மக்லேன்)
etc etc.
//சிறு வயதில் தென்னம் ஓலையின் மட்டையை வெட்டி கிரிக்கட் பேட் செய்து விளையாடி மகிழ்வோம் //
ReplyDeleteஇந்த விஷயம் தென்னம்பாளயத்தாருக்கு தெரியுமா?
காமிக்ஸ் உலகின் மிகச் சிறந்த பாத்திரப் படைப்புகளில் ஒன்று தான் மங்கூஸ்....
ReplyDeleteஅலட்டல் இல்லாத,கொலைவெறி இல்லாத, calculative mind கொண்ட கொலைகாரன்.
அவர் XIII இடம் பாகம் மூன்றில் சொல்லும் "உன்னை கவனித்துக்கொள்ள ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கிறேன்" மற்றும் பாகம் எட்டில் சொல்லும் "சாகும் போது இரண்டு பெண்களோடு சாகும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வருவதில்லை" டயலாக்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
கொசுவுக்கு கொசுவர்த்தி.. மக்குலேனிற்கு மங்கூஸ்
ReplyDeleteVery good.
தலைவரே . . சலீம் கோஸ் எல்லாம் சரி தான். . ஆனால், நானு சொல்றது நிஜம்மாவே பதிமூணை அப்புடியே எடுத்தா . . இதுக்கு யாரு சரியா வருவாங்கன்னு மண்டைய ஒடைச்சிட்டு யோசிச்சா, ஒண்ணுமே விளங்கல. . பேசாம கெவின் ஸ்பேசிய தமிளுக்குக் கூட்டிகினு வந்துர வேண்டியது தான் . .:-)
ReplyDelete//தமிழ்படத்தில் மங்கூஸ் வேடத்தில் ஒரு புதுமுகம் அறிமுகம். அவர் பெயர் வி.. யில் ஆரம்பிக்கும். தலைவரிற்கும் அவரை நன்கு தெரியும். அவர் இந்த வசனத்தை பேசுவதை கற்பனை செய்து பாருங்கள் "நம்ம நாட்டில பாம்பு, பூச்சி தொல்லை அதிகமாயிருச்சு, மை நேம் இஸ் கூஸ்... அதையே நீட்டிச் சொன்னா மங்கூஸ், சனாதிபதியே தீவிரவாதி மக்குலேனை கவனிக்க என்னை அனுப்பியிருக்காரு. கொசுவுக்கு கொசுவர்த்தி.. மக்குலேனிற்கு மங்கூஸ்.. ஓ யா பேபி"//
ஹாஹ்ஹா . . இதோ அவரு வந்திட்டாரு . . .ப்ரேஸ் யுவர்செல்ஃப் . . :-)
டாக்டர் அய்யா!
ReplyDeleteமங்கூஸ் - பெயர் ஒன்றே அந்த எதிர்நாயகனின் (நல்ல தமிழாக்கம் - நன்றி!) திறமையை பறைச் சாற்றுகிறதே. இரத்தப்படலத்தை முழுமையாக படிக்கும் ஆவலை அதிகப்படுத்தி விட்டது உங்களது பதிவு. இன்று நாளை என்பது போய், இந்த மாதம் அடுத்த மாதம் என்பதும் போய், இந்த வருடமா அடுத்த வருடமா அல்ல்ல்ல்....லது... என்று யோசிக்க வைக்கிறது ஜம்போ ஸ்பெஷல்?
கவுண்டரின் வசனங்கள் அனைத்து மனப்பாடமாக தெரியுமோ உங்களுக்கு?
தலைவரே ,
ReplyDeleteஅருமையான மங்கூஸ் பதிவு... மங்கூஸ் பாண்டி என வைத்திருந்தால் நல்ல காமெடியாக இருந்திருக்கும். பள்ளிகூடத்தில் படிக்கும் பொது சிலரை மங்கூஸ் பாண்டிஎன கேலி செய்து விளையாடியது உண்டு
கவுண்டமணி கமெண்ட்டுகள் அனைத்தும் அருமை.
ReplyDeleteகவுண்டரின் பன்ச்சுகளுக்கு காபிரைட் உரிமை உங்களிடமே உள்ளதோ?
மங்கூஸ் கிரிக்கெட்டில் சோடை போனாலும்கூட காமிக்ஸில் சோடை போகாது.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபதிவிற்கு நன்றி ஜயா.
ReplyDelete'கெத்' தான வில்லன்தான்
ReplyDeleteமங்கூஸ் பார்க்கும் போது, வயிற்றைக் கலக்கும். சிறு வயதில், அந்த கதாப்பாத்திரத்தை பார்த்து பயந்திருக்கிறேன். அருமையான பதிவு
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநீங்கள் என் தமிழ் காமிக்ஸில் வந்த எதிர்நாயகர்களை பற்றிய தொடர் பதிவொன்றை ஆரம்பிக்கக்கூடாது?
அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.
ReplyDeleteநிர்வாக குழு,
தகவல் வலைப்பூக்கள்.....
http://thakaval.info/blogs/comics
பயங்கரவாதியே,
ReplyDeleteமலையாளத்தில் வந்த சுறா பற்றி உங்களுக்கு தெரியுமா? மலையாளத்தில் சுறா - സുരാ
என்னங்க ரொம்ப நாளா ஆளக்காணோம்? என்ன ஆச்சு?
ReplyDeleteHi friend.A new post has been upped.Please do visit and spread the word..
ReplyDeleteசிறை மீட்டிய சித்திரக் கதை.......
http://illuminati8.blogspot.com/2010/05/blog-post_28.html
kindly delete this comment after reading...