“என்னடா விளம்பரம்! அந்த சினிமாக்காரங்கதான் அப்படி செய்யறாங்க! தனக்குதானே வால் போஸ்டரடிச்சு செவுத்த நாற வெக்குறாங்க! ஒன்னுமே கிடைக்கலேன்னா பொறந்த நாள் கொண்டாடுறாங்க! அதாவது 33 வயசுக்கு மேல போறானுங்களான்னா, போக மாட்டேங்குறானுங்க, அதே 33ல தான் நிக்குறானுங்க! இவனுங்கதான் பொறந்தானுங்களா இந்தியாவுல?!! நம்மெல்லாம் தேவையில்லாம அனாவசியமா பொறந்துட்டமா?!!” |
-கவுண்டமணி (படம்: கரகாட்டக்காரன்) |
வணக்கம்,
இந்த சித்திரைத் திருநாள்/தமிழ் புத்தாண்டு தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடா மன்னரும், எனக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியுமான கிங் விஸ்வா அவர்களுக்கு பிறந்த நாள்! இந்த நன்னாளில் அவரை வாழ்த்த வயதில்லையெனினும், வணங்குகிறேன்!
கோடை விடுமுறைகள் வேறு ஆரம்பித்து விட்டன! ஆகையால் கோடையின் வெம்மையைத் தணிக்க இதோ ஒரு கோடை மலர் பதிவு! இம்முறை நான் தேர்ந்தெடுத்திருப்பது லயன் காமிக்ஸ்-ன் 50வது இதழாகிய டிராகன் நகரம்!
50வது இதழ் பதிவைப் போடுவதால் கிங் விஸ்வாவின் வயது வெறும் 50 தான் என்று யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்!
ஓகே! மொக்கை போட்டது போதும், இனி பதிவுக்கு போவோம்!
வெளியீட்டு விவரங்கள்:
புத்தகம் | : | டிராகன் நகரம்! |
இதழ் | : | லயன் காமிக்ஸ் (மாத இதழ்) |
வெளியீடு # | : | 50 |
முதல் பதிப்பு | : | மே 1988 |
மறுபதிப்புகள் | : | இதுவரை இல்லை |
பதிப்பகம் | : | பிரகாஷ் பப்ளிஷர்ஸ் |
அச்சிட்டோர் | : | தி விஜய் புக்ஸ், சிவகாசி |
ஆசிரியர் | : | S.விஜயன் |
பக்கங்கள் | : | 212 (கருப்பு வெள்ளை) |
சைஸ் | : | 5"x7" |
விலை | : | ரூ:5/- (1988 முதல் பதிப்பின் போது) |
விளம்பரங்கள்:
லயன் காமிக்ஸ்-ன் 50வது இதழுக்கான விளம்பரங்கள் 1980களில் வளர்ந்த ஒவ்வொரு பள்ளி மாணவனின் வாழ்விலும் மறக்க முடியாத ஒரு அங்கம்! மாதாமாதம் லயன், மினி லயன், திகில் என அனைத்து புத்தகங்களிலும் கண்கவர் விளம்பரங்கள் வெளியிட்டு அசத்தியிருப்பார் ஆசிரியர்! இதோ அவற்றின் அணிவகுப்பு!
50-வது சிறப்பிதழில் வெளிவரவிருக்கும் கதைகளுக்கான விளம்பரம் இதோ! ஆனால் வழக்கம் போலவே விளம்பரப்படுத்தப்பட்ட கதைகளுக்கும் வெளியிடப்பட்ட கதைகளுக்கும் நிறைய வேறுபாடுகள்! ஆர்ச்சியும், இரட்டை வேட்டையர்-ம் வழக்கம் போல ஸ்வாகாவாகி விட வேறிரு கதைகள் வெளிவந்தன!
வெளிவந்த கதைகளின் பட்டியல் இதோ:
- கதை # 1 : மரணத்தைத் தேடி! (வேட்டை வீரர் ஜிம்பா சாகஸம்)
- கதை # 2 : வீனஸ் கல் மர்மம்! (ஸ்பைடர் சாகஸம்)
- கதை # 3 : டிராகன் நகரம்! (டெக்ஸ் வில்லர் சாகஸம்)
- கதை # 4 : ஜார்ஜ் நோலனுடன் துப்பறியுங்கள்!
- கதை # 5 : கடலில் முளைத்த பேய்! (திகில் சிறுகதை)
- கதை # 6 : சுட்டிப் பயல்!
அட்டைப்படம்:
கண்கவர் க்ளாசிக் முன், பின் அட்டைப்படங்கள்! சொல்வதற்கு ஒன்றுமில்லை!
ஹாட்-லைன்:
ஹாட்-லைனின் ஆரம்ப காலங்களில் அது இதழின் கடைசி பக்கத்திலேயே இடம்பெற்றிருந்தது! டிராகன் நகரத்தில்தான் முதன் முறையாக முதல் பக்கத்தில் வந்தது! ஆனால் இதற்கு பின்னர் பல வருடங்கள் கழித்து தான் ஹாட்-லைன் முதல் பக்கத்தில் ரெகுலராக வர ஆரம்பித்தது!
இவ்விதழில் முதன்முறையாக லயன் காமிக்ஸ் முதல் 50 இதழ்களின் முழுப்பட்டியல் வெளியிடப்பட்டது! இதுவே பின்னர் 100, 150 மற்றும் 200வது இதழ்களிலும் பின்பற்றப்பட்டது!
இந்த பட்டியலில் எவ்வித குழப்பமும் இல்லாமல் வெளிவந்ததும் அநேகமாக இந்த ஒரு முறையாகத்தான் இருக்கவேண்டும்! இதில் விசேஷம் என்னவென்றால் லயன் காமிக்ஸ் # 048 – சூப்பர் ஸ்டார் ஸ்பைடர்! ஒரு இலவச இணைப்பாகும்! லயன் காமிக்ஸ் # 047 – மரணப் பணி! உடன் அது வழங்கப்பட்டது! ஆனால் இலவச இணைப்பை ஏன் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்கு விடையுண்டு!
லயன் காமிக்ஸ்-ன் 50வது இதழ் கோடை விடுமுறைகளின் போது வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என்றெண்ணிய ஆசிரியர் அதற்காக வழக்கமான ஷெட்யூலிலிருந்து மாற்றி அதை PREPONE செய்ய முயலும் போது இந்த யுக்தி தோன்றியிருக்க வேண்டும்! இதே மார்க்கெட்டிங் மதியூகத்தை அவர் லயன் காமிக்ஸ்-ன் 100வது இதழிலும் கையாண்டிருப்பார்! இந்த யுக்தியினால் இவ்விரு இலவச இதழ்களும் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது!
கதை # 1 : மரணத்தைத் தேடி!
கானக வீரர் ஜிம்பா-வின் சாகஸ சிறுகதை! அற்புதமான ஓவியங்கள் கதையின் ஹை-லைட்! இக்கதையின் ஆங்கில மூலம் LION ANNUAL 1963ல் இடம்பெற்றிருந்தது!
கதை # 2 : வீனஸ் கல் மர்மம்!
ஸ்பைடர்-ன் சாகஸ சிறுகதை! சிறுகதையில் வந்தாலுமே அட்டைப் படத்தில் இடம்பிடிக்கும் அளவுக்கு இருந்திருக்கிறது ஸ்பைடர்-க்கு மவுசு அந்நாட்களில்! இக்கதையின் ஆங்கில மூலம் LION ANNUAL 1968ல் இடம்பெற்றிருந்தது!
கிங் விஸ்வா ரொம்ப வருடங்களாக ஸ்பைடர் சிறப்புப் பதிவு போடுவதாக போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்! இப்ப வருமோ? எப்ப வருமோ?
இக்கதையின் ஆங்கில மூலத்தை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்! உபயம் : COUNTER-X
கதை # 3 : டிராகன் நகரம்!
டெக்ஸ் வில்லர்-ன் டாப் 10 கதைகளில் இக்கதை நிச்சயம் டாப் 5க்குள் வந்துவிடும்! டெக்ஸின் ராட்சத கதைகள் அடங்கிய ஸ்பெஷல்களுக்கு இக்கதையின் பெருவெற்றியே மூலகாரணம்! கதை முழுக்க நிரவியிருக்கும் அதிரடி ஆக்ஷனும், மெல்லிய நகைச்சுவையும் இக்கதையை ஒரு இன்ஸ்டண்ட் க்ளாசிக்காக மாற்றி விடுகின்றன!
டிராகன் நகரம் கதையின் சர்வதேச அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!
மேல்விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
- http://www-en.sergiobonellieditore.it/auto/alborist?collana=1&numero=46&subnum=0
- http://www-en.sergiobonellieditore.it/auto/alborist?collana=1&numero=47&subnum=0
டெக்ஸ் வில்லர் ஆங்கில பதிப்புகள் குறித்து முத்து விசிறியின் முத்தான பதிவு!
கதை # 4 : ஜார்ஜ் நோலனுடன் துப்பறியுங்கள்!
ஜார்ஜ் நோலன்-ன் வழக்கமான பாணியிலான துப்பறியும் சிறுகதை! இவ்வகை கதைகள் என்னை மிகவும் கவர்ந்தவையாகும்! ஒரு சாம்பிள் பக்கம் மட்டும் உங்கள் பார்வைக்கு!
கதை # 5 : கடலில் முளைத்த பேய்!
திகில் சிறுகதை! இக்கதையின் ஆங்கில மூலம் SCREAM! - HOLIDAY SPECIAL (1986)ல் இடம்பெற்றிருந்தது! நம் ஆரம்ப கால திகில் இதழ்களுக்கு மூலமாக அமைந்தது இந்த SCREAM! வார இதழே! திகில் குறித்து ஒரு தீர்க்கமான ஆராய்ச்சிப் பதிவொன்று விரைவில் அ.கொ.தீ.க.வில் அரங்கேறும்!
இக்கதையின் ஆங்கில மூலத்தை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்! இலவச இனைப்பாக வழங்கப்பட்ட தாய விளையாட்டும் இப்புத்தகத்தில் இடம்பெற்றதே!
பல திகில் காமிக்ஸ் கதைகளின் ஆங்கில மூலம் இந்த தளத்தில் உள்ளது! என்சாய்!
கதை # 6 : சுட்டிப் பயல்!
சுட்டிப் பயல் மொட்டைத் தலையன் ஹென்றியின் ஒரு பக்க நகைச்சுவைத் துணுக்கு! கூடவே ஆர்ச்சி கதை வெளியிடாததற்கு சப்பைக்கட்டு காரணமும்!
இலவச இனைப்பு:
இலவச இனைப்பாக பேய் வேட்டை என்னும் தாய விளையாட்டு வழங்கப்பட்டது!
இந்த தாய விளையாட்டின் மூலம் SCREAM! - HOLIDAY SPECIAL (1986) இதழில் இடம்பெற்றிருந்தது!
இது குறித்த கிங் விஸ்வாவின் பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
வாசகர் கடிதம்:
புத்தகத்திற்கு கிடைத்த பெருத்த வரவேற்பு குறித்து ஆசிரியர் ஹாட்-லைனில் கூறியிருப்பதை படியுங்கள்! இந்த புத்தகத்தின் வெற்றியே இன்று வரை நாம் படித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் டெக்ஸ் வில்லர் தோன்றும் சிறப்பிதழ்களுக்கு மூல காரணம்! டெக்ஸை லயனின் டாப் ஹீரோவாக உயர்த்தியது இது போன்ற சிறப்பிதழ்கள்தானே!
போனஸ்:
போனஸாக இதோ உங்கள் பார்வைக்கு டிராகன் நகரம் அட்டைப்படங்களின் ஒரிஜினல் ஓவியங்களின் புகைப்படங்கள்! உபயம் : கேப்டன் ஹெச்சை
இப்படியொரு சிறப்பான புத்தகத்தை நமக்களித்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! ஆங்கில பதிப்புகளின் அத்தனை விபரங்களையும் அளித்த நண்பர் முத்து விசிறிக்கு மனமார்ந்த நன்றிகள்! உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:-
டெக்ஸ் வில்லர் பதிவுகள்!
- http://muthufanblog.blogspot.com/2008/11/it-is-no-secret-that-most-of-muthulion.html
- http://tamilcomicsulagam.blogspot.com/search/label/Tex%20Willer
- http://mudhalaipattalam.blogspot.com/2009/11/blog-post.html
பிற சிறப்பிதழ்கள்:
- http://tamilcomicsulagam.blogspot.com/2009/06/one-man-show-special-issues-in-tamil.html
- http://muthufanblog.blogspot.com/2007/06/as-we-are-waiting-for-arrival-of-cowboy.html
- http://muthufanblog.blogspot.com/2006/03/lion-super-special-hi-all-thanks-for.html
- http://akotheeka.blogspot.com/search/label/தீபாவளி%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/பொங்கல்%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/கோடை%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/புத்தாண்டு%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/கிறிஸ்துமஸ்%20ஸ்பெஷல்
- http://akotheeka.blogspot.com/search/label/ஆண்டு%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/தமிழ்%20புத்தாண்டு%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/ஸ்பெஷல்
me the first!
ReplyDeleteமுழுமையாக படித்து விட்டு மீண்டும் பதிவிடுகிறேன்!
//இந்த நன்னாளில் அவரை வாழ்த்த வயதில்லையெனினும், வணங்குகிறேன்!// ஹா!ஹா!ஹா!ஹா!
ReplyDelete//மாதாமாதம் லயன், மினி லயன், திகில் என அனைத்து புத்தகங்களிலும் கண்கவர் விளம்பரங்கள் வெளியிட்டு அசத்தியிருப்பார் ஆசிரியர்!// கடந்த சில வருடங்களாக இந்த department இல் ஆசிரியர் கவனம் செலுத்துவதில்லை என்பது என் கருத்து!
//இந்த பட்டியலில் எவ்வித குழப்பமும் இல்லாமல் வெளிவந்ததும் அநேகமாக இந்த ஒரு முறையாகத்தான் இருக்கவேண்டும்! //யானைக்கும் அடிசறுக்கும் :-)
//கானக வீரர் ஜிம்பா-வின் சாகஸ சிறுகதை! அற்புதமான ஓவியங்கள் கதையின் ஹை-லைட்! //இது ஒரு சிறுகதைதான் என்றாலும் டெக்ஸ் வில்லர் அளவிற்கு தரமான கதை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை!
//கிங் விஸ்வா ரொம்ப வருடங்களாக ஸ்பைடர் சிறப்புப் பதிவு போடுவதாக போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்! இப்ப வருமோ? எப்ப வருமோ?// சீக்கிரம் போடுங்கப்பா!
//இப்படியொரு சிறப்பான புத்தகத்தை நமக்களித்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!//அதை நான் வழிமொழிகிறேன்!
பதிவில் ஒரு சில படங்கள் முழுதாக லோடாக மறுக்கின்றனவே! ஏனோ?
மொத்தத்தில் இந்த பதிவும் கோடை வெப்பம் தணிக்க வந்த ஒரு ஜில் இளநீர்! அடச்சே! ஜன்னலை திறந்தால் வெளியே மழை பெய்கிறது.
ஆறுண்ணா சிக்ஸ், ஏழுன்னாத்தான் செவன்
ReplyDelete//இந்த நன்னாளில் அவரை வாழ்த்த வயதில்லையெனினும், வணங்குகிறேன்!//
ReplyDeleteஎன்னதான் நான் உங்களை விட அறிவில் மூத்தவனாக இருந்தாலும்கூட, வயதில் நீங்களே பெரியவர் அங்கிள். அதனால் நீங்கள் என்னை வாழ்த்தலாம். தவறில்லை.
//50வது இதழ் பதிவைப் போடுவதால் கிங் விஸ்வாவின் வயது வெறும் 50 தான் என்று யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்!//
ReplyDeleteநன்றி அங்கிள். Thanks for the remainder.
சுரேஷ் சார்,
ReplyDelete//ஆறுண்ணா சிக்ஸ், ஏழுன்னாத்தான் செவன்// என்ன இது? சற்று விளக்குங்களேன்?
////இந்த பட்டியலில் எவ்வித குழப்பமும் இல்லாமல் வெளிவந்ததும் அநேகமாக இந்த ஒரு முறையாகத்தான் இருக்கவேண்டும்! //யானைக்கும் அடிசறுக்கும் :-)//
ReplyDeletekindly explain sir.
டாக்டர் அய்யா!
ReplyDeleteதமிழ் புத்தாண்டை சிறப்பித்த உங்களுக்கு நன்றி. கவுண்டரின் டயலாக்குக்கும் இந்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்?
//லயன் காமிக்ஸ்-ன் 50வது இதழுக்கான விளம்பரங்கள் 1980களில் வளர்ந்த ஒவ்வொரு பள்ளி மாணவனின் வாழ்விலும் மறக்க முடியாத ஒரு அங்கம்! //
உண்மை! உண்மை!! அதிகளவில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு இதழ் என்று கூட கூறலாம்.
//இந்த சித்திரைத் திருநாள்/தமிழ் புத்தாண்டு தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடா மன்னரும்,//
சித்திரைத் திருநாளா? அப்புடீன்னா?
பயங்கரவாதியே,
ReplyDelete//சித்திரைத் திருநாளா? அப்புடீன்னா?//
முடிந்தால் இந்த கேள்விக்கு பதில் சொல்லவும்.
அன்புடையீர்,
ReplyDeleteஅனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.
கிசு கிசு கார்னர் 7 வலையேற்றப்பட்டுள்ளது.
லெட் த கும்மி ஸ்டார்ட்.
இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
I remember reading "Mr . JET" in my childhood days. But i don't have those copies now with me --- missing a lot. When u think about next post please consider Mr.Jet
ReplyDeleteThanks
தலைவர் அவர்களே,
ReplyDeleteவிஸ்வாவின் வயதை[உண்மை] கூறினால் அவர் எரிமலையாகக் கொதிப்பார் எனத் தெரிந்தும் அவரிற்கு நீங்கள் சவால் விட்டிருப்பது நீங்கள்தான் கேங் லீடரு என்பதை தெளிவாக்குகிறது.
பல மொழிகளில் வித்தியாசமான அட்டைகளில் டெக்ஸு வந்தாலும் அவர் தன் கப்படிக்கும் ஆடைகளை மாற்றவில்லை என்பதை அவதானியுங்கள், சில நண்பர்கள் இதனையே வயதைச்[உண்மை] சொல்வதில் கடைப்பிடிப்பார்கள் :)))
மரணத்தை தேடிக் கதையின் சித்திரங்கள் அருமை.
மிகவும் சிறப்பான பதிவு தலைவரே.
அருமையான பதிவு. இந்த புத்தகத்தினை நான் புதிய புத்தகமாக வாங்கி, பஸ்ஸில் வீடு வராமல் மூன்று கிலோ மேட்டர் நடந்தே வந்தேன் - புத்தகத்தினை படித்துக் கொண்டு. அந்த அளவுக்கு அற்புதமான கதை.
ReplyDeleteஅணைத்து கதைகளின் ஆங்கில வடிவத்தினை அளித்தமைக்கு நன்றி.
நண்பர் முத்து விசிறிக்கும், கேப்டனுக்கும் நன்றிகள்.
ReplyDeleteSUPER.
ReplyDeleteKING VISWA,
ReplyDeleteUNGALAI VAZHTHA VAYATHU ULLATHU.
SO LONG LIVE KING VISWA.
VIJAYASANKAR.L
TRICHY
ரயில் வண்டி முன் டெக்ஸ் கொடுக்கும் போஸ் அருமை அருமை
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வணக்கம் தலைவரே . . இந்தப் பதிவைப் படித்துவிட்டு, கன்னாபின்னாவென்று பழைய நினைவுகளில் மூழ்கி, அப்படியே அமர்ந்து விட்டேன் . . டிராகன் நகரம், நான் தேடித்தேடி அலைந்து, கஷ்டப்பட்டு வாங்கிய ஒரு காமிக்ஸாகும். அந்தக் கதை இன்னமும் பசுமையாக எனக்கு நினைவுள்ளது. குறீப்பாக, அந்த இரு கைகளை தலைக்கு மேல் க்ராஸ் செய்து, மரண அறிவிப்பு செய்யும் அந்த சிக்னல்.
ReplyDeleteஇனி அடிக்கடி விசிட் செய்வேன் . . பட்டையைக் கிளப்புங்கள் . . அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் எல்லாம் கிழிந்து தொங்கட்டும் !! :-)
ஸ்டார்ட் மியூசிக்................................................................................................
ReplyDeletewow...fantastic post, brought back the glorious days
ReplyDeleteதம்பி டாக்டர் செவன்,
ReplyDeleteஎன் பேர யூஸ் பண்ணியே நீ நெறைய சம்பாதிச்சுட்டியாமே? என்னோட கமென்ட் எல்லாம் போட்டே எல்லா பதிவையும் வேற ஆரம்பிக்குற? இந்த டிவி செனல்காரங்கதான் என்னோட பேர வச்சி சம்பாதிக்குறாங்க என்று பார்த்தால் நீ வேறவா? சரி, சரி, நமக்கு வரவேண்டிய கட்டிங்க ஒழுங்க அனுப்புவ இல்லையா?
யாருப்பா அந்த விஸ்வா? அவருக்கு என்ன ஸ்பெஷலான பொறந்த நாள்?
ReplyDelete