Thursday, February 17, 2011

களிமண் மனிதர்கள்!

வணக்கம்,

2011ல் முதன்முறையாக உங்களைச் சந்திப்பதில் பேரானந்தம்! புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், காதலர் தினம் என்று பல சிறப்பு தினங்கள் வந்திட்டாலும் பணிச்சுமை காரணமாக பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன்! அனைத்து சிறப்பு தினங்களுக்கும் எனது தாமதமான வாழ்த்துக்கள்! மன்னிக்கவும்!

இரத்தப்படலம் அலை இன்னும் ஓய்ந்தபாடில்லை! அதற்குள் அடுத்த வெளியீடுகள் வந்துவிட்டன! இன்னும் ஓரிரு மாதத்திற்குள் கருப்பு வெள்ளையில் வெளிவரவிருக்கும் அனைத்து இதழ்களும் வெளிவந்துவிடும்! அதற்குப் பிறகு நாமும் கலர் கலராய் காமிக்ஸ் படிக்கலாம்! வந்துள்ள விளம்பரங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன!

லயன் காமிக்ஸ் # 209 – வெள்ளையாய் ஒரு வேதாளம்! இதழ் குறித்த கிங் விஸ்வாவின் அதிரடிப் பதிவில் மேற்கொண்டு தகவல்களைப் பெறலாம்! படித்து மகிழ கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

இதனுடன் வந்துள்ள இன்னொரு இதழான இரும்புக்கை மாயாவியின் அதிரடி மறுபதிப்பு சாகஸமான காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 25 - களிமண் மனிதர்கள்! குறித்து நாம் காணுவோம்!

படங்களைக் ‘க்ளிக்’கிப் பெரிதாக்கிப் பார்த்து மகிழவும்!

பதிவுக்கு போகும் முன்:

இயக்குனர் மிஷ்கின் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர் என்பது அறிந்ததே! குறிப்பாக இரும்புக்கை மாயாவியின் அதிதீவிர ரசிகர்! இப்புத்தகம் அவர் கையில் கிடைத்ததும் அவர் முகத்தில் கண்ட பூரிப்பை நீங்களே பாருங்கள்! உடனடியாக புத்தகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதித்து விட்டார்!  அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

DSC02824

புகைப்படம் எடுத்து வழங்கிய கிங் விஸ்வாவுக்கு நன்றி!

ஓகே! இனி பதிவுக்குப் போவோம்!

புத்தக விவரங்கள்:

  ஆங்கிலப் பதிப்பு முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு
அட்டைப்படம்    Muthu Comics # 138 - Kaliman Manidhargal  Comics Classics # 25 - Kaliman Manidhargal
கதை WARLOCK களிமண் மனிதர்கள் களிமண் மனிதர்கள்
இதழ் VALIANT முத்து காமிக்ஸ் காமிக்ஸ் க்ளாசிக்ஸ்
# 231-252 (22 ISSUES) 138 25
தேதி 04-03-1967 TO 29-07-1967 15, ஜூலை 1984 ஃபிப்ரவரி 2011
பதிப்பகம் FLEETWAY PUBLICATIONS LTD. முத்து காமிக்ஸ் பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
எடிட்டர்   M.சவுந்திரபாண்டியன் S.விஜயன்
அச்சிட்டோர் FLEETWAY PRINTERS A.M.தியாகராஜன் தி விஜய் புக்ஸ், சிவகாசி
கதை TOM TULLY
ஓவியம் JESUS BLASCO
தமிழில் M.சவுந்திரபாண்டியன்
பக்கங்கள் 44 (2 PAGES PER ISSUE) 108 (கருப்பு வெள்ளை) 108 (கருப்பு வெள்ளை)
சைஸ் A4 13cmx19cm B6
விலை 7d (PER ISSUE) ரூ:2/- (1984 முதல் பதிப்பின் போது) ரூ:10/-

அட்டைப்படம்:

Comics Classics # 25 - Kaliman Manidhargal! - Cover

முதல் பக்கம்:

Muthu Comics # 138 - Kaliman Manidhargal

காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பதிப்பில் சில இடங்களில் மட்டும் எழுத்துக்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள்! முழு புத்தகத்துக்கும் இவ்வாறு செய்திருந்தால் படிப்பதற்கு சுலபமாக இருந்திருக்கும்!

Comics Classics # 25 - Kaliman Manidhargal

விளம்பரம்:

களிமண் மனிதர்கள்-ன் முதல் பதிப்பு எவ்வித விளம்பரமும் இன்றி திடுதிடுப்பென வந்தது! அதற்கான காரணத்தை பின்னர் அலசுவோம்! ஆனால் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் மறுபதிப்பிற்கு உரிய முறையில் ஏகப்பட்ட விளம்பரங்கள் வெளியிட்டு நம்மையெல்லாம் ஆவலுடன் காக்க வைத்து விட்டார் ஆசிரியர்!

Muthu Comics # 312 - Next Issue AdComics Classics # 24 - Next Issue AdLion Comics # 208 - Next Issue AdComing Soon!

CREDITS:

Muthu Comics # 138 - Kaliman Manidhargal - Credits

கதைச்சுருக்கம்:

இலண்டனுக்கு அருகில் புதிதாக திறக்கப்படவிருக்கும் அனுமின் நிலையத்தை அழிக்க இரும்புக்கை மாயாவியின் பரம வைரிகளான அ.கொ.தீ.க.வினர் முயல்கின்றனர்! அவர்களது நாசவேலை சதிச்செயல்களுக்குப் போர்வையாக அனுமின் உலைக்கு அருகாமையிலுள்ள பழமையான வார்லாக் பகுதியில் நிலவி வரும் மூட நம்பிக்கையான மண் இனத்தவர் பற்றிய கட்டுக்கதைகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்! இரசாயண முறையில் அற்புத சக்தி படைத்த களிமண் மனிதர்களை உருவாக்கி மக்களை அச்சுறுத்துகின்றனர்!  அ.கொ.தீ.க.வினர் மேற்கொள்ளும் முயற்சிகளை மாயாவி முதன்முறையாக சூப்பர் ஹீரோ அவதாரம் பூண்டு எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே கதை!

மாயாவியின் சூப்பர் ஹீரோ அவதாரம்:

களிமண் மனிதர்கள்! கதையிலிருந்து இரும்புக்கை மாயாவி கதைத்தொடரில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன! முக்கியமானதும், முதன்மையானதுமாக மாயாவி சூப்பர் ஹீரோ வேடம் தரிக்கிறார்!

பல வித நூதன சக்திகள் மாயாவிக்கு நிழற்படை விஞ்ஞானிகளால் வழங்கப் படுகிறது! கூடவே எதிரிகள் அவரை அடையாளம் கண்டு கொள்ளாமலிருக்க அவருக்கு சூப்பர் ஹீரோ சீருடையும் வழங்கப்படுகிறது!

சூப்பர் ஹீரோ ஆகிவிட்ட பிறகு ரகசிய அடையாளம் இல்லாமல் எப்படி?!! சூப்பர் ஹீரோ வேடம் தறிக்காத நேரங்களில் டாக்ஸி ஓட்டும் சாதாரண மனிதனாக லண்டனின் தெருக்களில் உலவுகிறார்! இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்!

சிறுவன் மோரீஸ் இக்கதையிலிருந்துதான் அறிமுகம் ஆகிறான்! மாயாவியின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் அவனை தனக்கு துணையாக சேர்த்துக் கொள்கிறார்!

102103

இது வரை முகம்காட்டாத நிழற்படைத் தலைவர் நமக்கு அறிமுகமாகிறார்! பின்னர் வரும் கதைகளில்தான் (விண்வெளிக் கொள்ளையர், இயந்திரப்படை) இவரின் பாத்திரம் முழுமை பெறுகிறது!

071

மாயாவி இப்படி திடீரென ஏன் சூப்பர் ஹீரோவாக மாற வேண்டும்? காரணம், 1960-களில் உலகெங்கிலும் மிகப் பிரபலமடைந்திருந்த பேட்மேன் தொலைக்காட்சித் தொடர்-ன் பாதிப்பேயாகும்!

இத்தொடரைப் பற்றியும் மாயாவி கதைத்தொடரின் மீது அதன் பாதிப்புகள் பற்றியும் ஏற்கெனவே விரிவாக எழுதியுள்ளேன்! படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

மாயாவியின் சக்திகள்:

மாயாவி இக்கதையில் பெறும் விசேட சக்திகளைக் காண்போம்! ரொம்ப விளக்கி எழுத முடியாத அளவுக்கு ‘காதுல பூ’ சுத்தியிருக்காங்க! அதனால் நீங்களே படித்துக் கொள்ளுங்கள்!

006007008

இக்கதையில் மாயாவி மின்காந்த சக்தியை உபயோகித்து சூப்பர்மேன் ரேஞ்சுக்கு பறக்கிறார்! அதுமட்டுமின்றி மின் காந்த சக்தியின் மூலம் அவரை நோக்கி வரும் தோட்டாக்களை சிதறடிக்கிறார்! மயிர்கூச்செறிய வைக்கும் சாகஸம்தான்…இல்லையா?!!

017095

க்ளைமாக்ஸில் மின் காந்த சக்தியை உபயோகித்து ஒரு ஏவுகனையையே அழிக்கிறார்! நம்பமுடிகிறதா?!!

சூப்பர் கார்:

மாயாவி இக்கதையில் விசேட டாக்ஸி ஒன்றை ஓட்டுகிறார்! அதில் பல்வேறு சிறப்பம்சங்கள் பொருந்தியுள்ளன!

012

டாக்ஸி மீட்டரில் சாட்டிலைட் தொலை தொடர்பு வசதி!

021

உடனடி மாயத்தண்மை பெற சக்தி வாய்ந்த கார் பேட்டரி! இதை எந்திரன்-ல் அப்பட்டமாகக் காப்பியடித்துள்ளனர்!

043

எஜெக்டர் ஸீட்!

051

ராக்கெட் என்ஜின்!

BATMOBILE, BLACK BEAUTY, ஜேம்ஸ்பாண்ட் கார்களுக்கு எவ்விதத்திலும் சளைத்ததல்ல மாயாவியின் டாக்ஸி! இல்லையா நண்பர்களே?!!

வில்லன்கள்:

எந்த ஒரு சூப்பர் ஹீரோவின் கதைகளின் வெற்றி அவர் எதிர்த்து மோதும் வில்லன்களைப் பொறுத்தே அமைகிறது! இதில் அ.கொ.தீ.க.வினராக வரும் களிமண் மனிதர்கள் அவர்தம் பணிகளைத் திறம்படச் செய்கின்றனர்! அதாவது மாயாவியிடம் அடி வாங்கி தோற்றோடுகின்றனர்! முக்கிய வில்லனாக வரும் முகம்தெரியாத அ.கொ.தீ.க. தலைவர் கூட ‘சப்’பென்றே இருக்கிறார்!

030

சுவாரசியமான துணுக்குகள்:

 • இது நம் அபிமான காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-ன் 25வது இதழ்!
 • ஜூலை 15, 1984! இந்தத் தேதி முத்துவின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான நாளாகும்! முத்துவின் முதல்  இன்னிங்ஸ் முடிவடைந்த சோக தினம் இதுதான்! அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பின்னரே முத்து காமிக்ஸ் மீண்டும் வந்தது! இதற்கு முன்பு கடைசியாக 1982-ல் தான் முத்து காமிக்ஸ் வெளிவந்தது! நடுவில் நவம்பர் 14, 1982 முதல் ஃபிப்ரவரி 19, 1984 வரை முத்து காமிக்ஸ் வார மலர் இதழ் 22 முறை தட்டுத் தடுமாறி வெளிவந்தது! அந்த சமயத்தில் முத்து காமிக்ஸ் எதுவும் வெளிவரவில்லை!
 • இதே ஜூலை 1984-ல் தான் நமது ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் லயன் காமிக்ஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது! அதுமட்டுமின்றி மேத்தா காமிக்ஸ், ராணி காமிக்ஸ் முதன் முதலாக வெளிவந்ததும் இதே சமயத்தில் தான்!
 • முதல் பதிப்பு சைடில் பின்னடித்து வந்தது! இப்போது வந்துள்ள காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பதிப்பு நடுவில் பின்னடித்து வந்துள்ளது! கெட்டி அட்டையும் இல்லை! இந்த FORMAT-ல் நம் பதிப்பகத்தார் புத்தகம் வெளியிட்டு நெடு நாட்கள் ஆகிறது!

காமிக்ஸ் குத்து!

காமிக்ஸ் குத்து! வெளியிட்டு நெடுநாள ஆகிவிட்ட படியால் இதோ இக்கதையிலிருந்து ஒரு வசனம்! சிறுவன் மோரீஸ் அடிக்கும் ‘பன்ச்’!

காமிக்ஸ் குத்து!

ஹ்ம்ம்ம்… “வெடலப் பசங்கெல்லாம் வெரல சொடுக்குறானுங்க!” (விவேக் | படம்: சிவாஜி)

ஆங்கில மூலம்:

இதுவரை ஆன்லைனில் வெளிவந்துள்ள கதையின் ஆங்கில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு!

Valiant 1st April 1967 0020Valiant 1st April 1967 0021valiant 8th april 1967 0020valiant 8th april 1967 0021valiant 15th april 1967 0020valiant 15th april 1967 0021Valiant 6th May 1967 0014Valiant 6th May 1967 0015Valiant 13th May 1967 0020Valiant 13th May 1967 0021 

ஆங்கிலப் பக்கங்களைப் படித்து விட்டு தமிழில் படிப்போர் ஆங்கிலத்தில் மூலக்கதையமைப்பும், வசனங்களும் எவ்வளவு மொக்கையாக இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்! அதிலும் மாயாவி சூப்பர்மேன் போல் வார்த்தைக்கு வார்த்தை “GREAT DYNAMOS!” என்று ‘பன்ச்’ அடிப்பது ஜீரணிக்கவே முடியவில்லை! தமிழின் மொழிபெயர்ப்புத் தரமும், ஆசிரியர் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்களின் சிறப்பான எடிட்டிங்கும் இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது!

கதாசிரியர்கள் விவரம்:

Tom Tully Jesus Blasco
TOM TULLY JESUS BLASCO

இக்கதையின் ஆசிரியர் TOM TULLY குறித்த மேல் விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

இக்கதையின் ஓவியர் JESUS BLASCO குறித்த மேல் விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

நிறைகள்:

 • டாம் டல்லியின் அதிரடி ஆக்ஷன் கதைக்கு ஜீசஸ் ப்ளாஸ்கோவின் சிறப்பான ஒவியங்கள்!
 • ஆசிரியர் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்களின் சிறப்பான தமிழாக்கம்! ஆங்கிலத்தை விட தமிழில் சிறப்பாக உள்ளது!

குறைகள்:

 • சுமாரான கதையமைப்பு!
 • சொதப்பல் வில்லன்கள்!
 • ஜட்டி போடாத சூப்பர் ஹீரோ மாயாவி!
 • முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு ‘காதுல பூ’ சாகஸங்கள்!

ஆனால் இரும்புக்கை மாயாவி என்றொரு சூப்பர் ஸ்டார் இருக்கையில் இவைகள் மிகப்பெரிய குறைகளாகத் தெரியவில்லை!

அடுத்த வெளியீடு:

அடுத்த வெளியீடாக ஜானி நீரோ சாகஸமான கொலைகாரக் கலைஞன்! மீண்டும் ஒரு முறை மறுபதிப்பு செய்யப்படவிருக்கிறது! இது இக்கதையின் மூன்றாவது மறுபதிப்பாகும்!

Comics Classics# 25 - Next Issue Ad

இக்கதை குறித்த மேல்விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!  

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையுடன் படித்ததற்கு நன்றி! வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆங்கிலப் பதிப்புகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அளித்த நண்பர் முத்து விசிறி-க்கு நன்றி.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:-

 • ஹாட்-லைனில் ஆசிரியர் இம்முறை கூறியிருக்கும் சமாச்சாரங்கள் சிந்தனையைத் தூண்டுகின்றன! இனிமேல் வரும் பெரும்பாண்மையான இதழ்கள் முழு வண்ணத்தில் வருமென்று கூறியுள்ளார்! அப்போது சில இதழ்கள் கருப்பு வெள்ளையிலும் வருமா? அதே போல் சந்தா கூப்பனில் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இடம்பெறவில்லை! அப்போது இனிமேல் தொடர்ந்து காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வெளிவருமா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன! உங்கள் கருத்தைக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
 • அடுத்த பதிவாக நமது அ.கொ.தீ.க.வின் 50வது சிறப்புப் பதிவு வெளிவரவிருக்கிறது! தொடர்ந்திடும் உங்கள் ஆதரவுக்கு நன்றி! ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் பதிவிட்டு உங்கள் அனைவரையும் அசத்தி விடுகிறேன்!

தொடர்புடைய இடுகைகள்:

இரும்புக்கை மாயாவி:

காமிக்ஸ் க்ளாசிக்ஸ்:

22 comments:

 1. பயங்கரவாதி அவர்களே, மீ த ஃபர்ஸ்ட்டு!

  பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன் - என்றெல்லாம் சொல்ல மாட்டேன். படித்து விட்டுதான் கமென்ட் போடுகிறேன். நல்ல பதிவு, நன்றி பயங்கரவாதி. (நப நப).


  கிங் விஸ்வா
  இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

  ReplyDelete
 2. ச்சே, ஜஸ்ட் மிஸ். மீ தி செகண்ட். இருந்தாலும் நம்ம சிபி அண்ணன், முத்து விசிறி அவர்களுக்கு முன்னாடி வந்ததில் மகிழ்ச்சியே. வந்துட்டோம்ல, முன்னாடி.

  ReplyDelete
 3. ஒரு வழியாக, ஆஷஸ் போட்டி தொடர் முடிந்தவுடன் வந்து விட்டீர்கள், ஆனால் நாளை மறுநாள் முதல் உலக கிண்ண தொடர் வேறு ஆரம்பிக்கிறதே, அப்போ இனிமேல் பதிவுகள் எப்படி?

  ஐம்பதாவது ஸ்பெஷல் பதிவுக்கு வெயிட்டிங்.


  கிங் விஸ்வா
  இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

  ReplyDelete
 4. //2011ல் முதன்முறையாக உங்களைச் சந்திப்பதில் பேரானந்தம்!//

  எங்களுக்கோ, பிரம்மானந்தம். (தொடர்ந்து தெலுகு படங்களா பாக்குறதால வந்த பாதிப்பு)

  அடுத்த பதிவு பற்றிய அறிவிப்பு நம்பிக்கையை தூண்டுகிறது - அதாவது நீங்கள் தொடர்ந்து பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையை.

  ReplyDelete
 5. தலைவர் அவர்களே,

  தன் எதிரியை புகழ்ந்து பதிவு எழுத ஒரு மனம் வேண்டும், அது உங்களிற்கு இருக்கிறது :) ஆனால் ஜட்டி போடாத என்று எழுதி மாயாவியை உசுப்பேத்தியிருக்க வேண்டாம் :)

  தனித்தனி இதழ்களாக காமிக்ஸ் கிளாசிக்குகளை வெளியிடாது, ஐந்து அல்லது பத்து இதழ்களை உள்ளடக்கிய தொகுப்புக்களாக, தரமான விதத்தில், சகாய விலையில் ஆசிரியர் வெளியிடலாம். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கலெக்டெர்ஸ் எடிசன்கள் வந்தாலே போதுமானது. இரும்புக்கை மாயாவி கலெக்டர்ஸ் ஸ்பெசல் [ ஜட்டியுடன்] என்ற அறிவிப்பையும் வழங்கலாம் :) சிறப்பான தகவல்களுடன் கூடிய பதிவு, பணிச்சுமை அதிகரிக்க முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. Hi,
  Great Post Dude.

  Your Self and Kind Viswa are doing a grt job for
  Comics Lovers.

  Where can i get the latest issues in chennai.
  I am in saidapet.
  My office at Parrys.
  Kindly guide me.

  Thanks

  ReplyDelete
 7. //ஆங்கிலப் பக்கங்களைப் படித்து விட்டு தமிழில் படிப்போர் ஆங்கிலத்தில் மூலக்கதையமைப்பும், வசனங்களும் எவ்வளவு மொக்கையாக இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்! அதிலும் மாயாவி சூப்பர்மேன் போல் வார்த்தைக்கு வார்த்தை “GREAT DYNAMOS!” என்று ‘பன்ச்’ அடிப்பது ஜீரணிக்கவே முடியவில்லை! தமிழின் மொழிபெயர்ப்புத் தரமும், ஆசிரியர் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்களின் சிறப்பான எடிட்டிங்கும் இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது! //  we dont see tamil pictures only english pictures

  - கலர் காஞ்சனா தனது அறிமுகப் படத்தில் பேசிய தத்துவ முத்துக்கள்

  ReplyDelete
 8. //முதன்முறையாக சூப்பர் ஹீரோ அவதாரம் பூண்டு எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே கதை! //

  ஏன் இங்கே தேவை இல்லாமல் பூண்டு என்ற வார்த்தையை உபயோகித்து இருக்கிறீர்கள்? இங்கே வெங்காயம் என்று வந்தால் பெரிய R கோபித்து கொள்வாரா என்ன?

  ReplyDelete
 9. நல்ல விவரங்கள்.

  ஆசிரியர் மறுபதிப்பு செய்யும்போது இனிமேல் கதைகளை ஆகமவரிசைப்படி வெளியிட்டால் நன்றாக இருக்கும். (முதலில் நியூயார்க்கில் மாயாவி, பின்னர் யார் அந்த மாயாவி என்று).

  சரிதானே?

  ReplyDelete
 10. //we dont see tamil pictures only english pictures

  - கலர் காஞ்சனா தனது அறிமுகப் படத்தில் பேசிய தத்துவ முத்துக்கள்//

  யாருங்க இந்த கலர் காஞ்சனா? அவங்களும் கலெக்டரா? ஓல்ட் முத்து காமிக்ஸ் கலெக்ஷன் அவங்களிடம் தேறுமா? எக்ச்செஞ்சுக்கு வருவாங்களா?

  ReplyDelete
 11. //Where can i get the latest issues in chennai.
  I am in saidapet.
  My office at Parrys.
  Kindly guide me.//

  நண்பரே,
  முதலில் சந்தாதாரர்களுக்கே புத்தகம் வரும். பின்னரே புத்தக கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆகையால் கடைகளில் வாங்க நீங்கள் இன்னமும் ஒரு வாரம் வெயிட் செய்ய வேண்டும்.

  உங்கள் மின் அஞ்சல் முகவரியை tamilcomicsulagam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பவும். புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

  ReplyDelete
 12. காமிக்ஸ் பதிவு போட சொன்னால் காமிக்ஸ் பற்றிய படமே எடுத்துவிடீர்கள் தலைவரே

  ReplyDelete
 13. டாக்டர் ஐயா!

  "பதிவை படித்து விட்டு வந்ததால்" சற்றே காலதாமதம் ஆகிவிட்டது. வழக்கம் போல வளமையான பதிவு!

  கனவுகளின் காதலன் கூறியது -
  "தனித்தனி இதழ்களாக காமிக்ஸ் கிளாசிக்குகளை வெளியிடாது, ஐந்து அல்லது பத்து இதழ்களை உள்ளடக்கிய தொகுப்புக்களாக, தரமான விதத்தில், சகாய விலையில் ஆசிரியர் வெளியிடலாம். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கலெக்டெர்ஸ் எடிசன்கள் வந்தாலே போதுமானது. இரும்புக்கை மாயாவி கலெக்டர்ஸ் ஸ்பெசல் [ ஜட்டியுடன்] என்ற அறிவிப்பையும் வழங்கலாம் :)"

  நல்லதொரு யோசனை. ஆசியரின் பார்வைக்கு கொண்டு செல்லவும்!

  கலெக்டர் பொண்டாட்டியையும், சின்ன r யும் காமிக்ஸ் உலகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.
  கலெக்டர் பொண்டாட்டி என்றால் தங்கம் தொடரில் வரும் கங்காதானே! - அதாங்க ஐயாவோட துணைவியாரோட கடைசி மகளோட அக்கா!

  இவ்வளவு பெரிய பதிவில் பூண்டை கண்டு அறிந்த புண்ணிவான் சின்னr ன் அறிவாற்றலை பாராட்ட வார்த்தைகள் இல்லை!

  ReplyDelete
 14. யாருப்பா அது, என்னோட பொண்டாட்டியோட கடைசி பொண்ணோட அக்காவ பத்தி பேசுறது? ராஸ்கல்ஸ், உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா?

  ReplyDelete
 15. //"பதிவை படித்து விட்டு வந்ததால்" சற்றே காலதாமதம் ஆகிவிட்டது.//

  இதில் ஏதோ உள்குத்து இருக்கும் போல இருக்கிறதே? அய்யம்பாளையம் சாரே, கொஞ்சம் விளக்குங்கள்.

  ReplyDelete
 16. // அடுத்த பதிவாக நமது அ.கொ.தீ.க.வின் 50வது சிறப்புப் பதிவு வெளிவரவிருக்கிறது! தொடர்ந்திடும் உங்கள் ஆதரவுக்கு நன்றி! ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் பதிவிட்டு உங்கள் அனைவரையும் அசத்தி விடுகிறேன்! //

  வாவ் ....... ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம் :))
  .

  ReplyDelete
 17. இந்த கதையை என்னால் முழுமையாக படிக்க முடியவில்லை.
  பழைய காமிக்ஸ்களில் இருக்கும் நல்ல நல்ல கதைகளை விட்டு விட்டு விஜயன் சார் ஏன் இப்படி மொக்கை கதைகளை காமிக்ஸ் கிளாஸிக்கில் வெளியிடுகிறார்.
  கொலைகார 'கலைஞன்' இப்போதானே வந்தது. இந்த தலைப்புடன் தேர்தல் சமயத்தில் மறுபடியும் வெளியிடுவதில் உள் குத்து ஏதும் இருக்கா???

  ReplyDelete
 18. டாக்டர் செவென் அவர்களே தங்களின் அருமையான பதிவை, தங்களுக்கே உரித்தான ஸ்டைலில் எழுதயுள்ளிகள் மிக்க நன்றி
  இரும்புக்கை மாயாவியை பற்றி இவ்வளவு விபரங்களையும் மிக ஆர்வமாக எழுதி உள்ளீர்கள்,

  ////// இது வரை முகம்காட்டாத நிழற்படைத் தலைவர் நமக்கு அறிமுகமாகிறார்! பின்னர் வரும் கதைகளில்தான் (விண்வெளிக் கொள்ளையர், இயந்திரப்படை) இவரின் பாத்திரம் முழுமை பெறுகிறது!/////

  **இதற்கு முன்னதாகவே வெளிவந்த"இயந்திரத்தலை மனிதர்கள் "காமிக்ஸ் கதையில் , மாயாவியோடு இணைந்து நிழல் படைத்தலைவரும் சாகசங்கள் புறிவார், பின்னர் வந்த கொள்ளைக்கார மாயாவி-யில், பாங்கை கொள்ளையடித்த குற்றத்திற்காக 'லாக்கப்' அறையில் இருக்கும் , மாயாவியை, காண வந்த தலைவரை தடிப்பான வார்த்தைகளால் பேசி முகத்தில் ஒரு அடி கொடுத்து, அனுப்புவார். அப்போது அடிவாங்கிய தலைவர் "என்னை வெகுவாக ஏமாற்றிவிட்டாய் நீதிபதி உன்னை கவனித்து கொள்வார்:" என்று அழாத குறையாக சொல்வாரே அதைக்கண்டு, ஐயோ பாவம் என்று இருந்தது எனக்கு

  அப்போதெல்லாம் மிக மரியாதையாக காட்டப்பட்ட நிழல் படைத்தலைவர் பிற்காலத்தில் ஏனோ கிறுக்கு விஞ்ஞானி யைப்போல் காட்டப்பட்டது ஏன்?என்று தெரியவில்லை.

  அன்புடன்
  ஹாஜா இஸ்மாயில் .எம்

  ReplyDelete
 19. வலைச்சரத்தில் தங்கள் காமிக்ஸ் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
  http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_2439.html

  ReplyDelete
 20. மி த 20 வது :))

  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம் :))
  .

  ReplyDelete
 21. டாக்டர் செவென் அவர்களே,
  நான் இலங்கையில் வசிக்கிறேன்.lioncomics என்றால் எனக்கு உயிர்.ஆனால் இங்கே இப்போது எதுவும் கிடைபதில்லை.lion collectors speacial கு ஒரு வருடத்திற்கு மேல் காத்திருந்தும் கிடைக்கவில்லை.இங்குள்ள மதிப்புப்படி அது Rs1000 என்றார்கள்.அதை கூட நாங்கள் பொருட்படுத்தவில்லை.ஆனால் எதுவுமே வரவில்லை. இலங்கைக்கு சந்தா வாவது உண்டா?ஆசிரியர் விஜயன் இப்படி எங்களை கைவிட்டு விட்டாரே?இந்த lion collectors speacial இப்போதும் கிடைக்குமா?தீர்ந்து விட்ததா?

  ReplyDelete
 22. ஜம்போ ஸ்பெஷல் இப்போதும் கிடைக்கிறது.

  இலங்கைக்கு அந்த கலெக்டர்ஸ் ஸ்பெஷலை அனுப்ப வழி இருக்கிறது. உடனடியாக லயன் காமிக்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் சொல்வார்கள் என்ன செய்ய வேண்டுமென்று. (Phone: 04562-62749)

  அயல்நாட்டிற்கு சந்தா உண்டு. மேலே சொன்ன நம்பரிலேயே இதனையும் கேட்டுக்கொள்ளுங்கள்.

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!