Friday, November 14, 2008

அ.கொ.தீ.க. என்றால் என்ன?

வலைப்பூவை வந்து பார்த்து வாழ்த்தியோருக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்! "வெகுமதி!" கேள்விக்கு முந்திக்கொண்டு பதிலளித்த ‘அம்மா ஆசை விசிறி’-க்கு வாழ்த்துக்கள். 'முத்து விசிறி'-க்கு இந்த முறை இரண்டாம் இடம்தான். பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.

சென்ற முறை நான் கூறிய கருத்துக்கள் சிலவற்றிற்கு மக்கள் பயங்கரமாக எதிர்வினை அளித்துள்ளார்கள். காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று நான் கூறியதை நண்பர்கள் நேரிலும், பின்னூட்டம் மூலமாகவும் ஆட்சேபித்துள்ளார்கள். அவர்களுக்கு நான் தெளிவாக பதிலளித்துள்ளேன். சென்ற பதிவிற்கான பின்னூட்டங்களில் இறுதியாக அதைக் காணலாம். மீண்டும் இங்கே கூற மனம் வரவில்லை. ஆகையால் இங்கே 'க்ளிக்'க்கி படித்துக் கொள்ளவும்.

'புலி வருது' கதையாக ரொம்ப நாளாக விளம்பரம் மட்டுமே செய்து வந்த பதிவை நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். என்ஜாய்!

தமிழில் வந்த முதல் லாரன்ஸ் & டேவிட் கதை "ஃப்ளைட் 731"-ல் தான் அ.கொ.தீ.க. முதலில் அறிமுகம் ஆனார்கள். அதன் பிறகு அ.கொ.தீ.க.வினர் ஒவ்வொரு கதையிலும் ஒரு புதிய பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்வர். அவற்றை லாரன்ஸ் & டேவிட் எவ்வாறு முறியடிக்கிறார்கள் என கதைகள் அமையும்.

அ.கொ.தீ.க.வின் உண்மையான பெயர் 'W.A.M.' (War Against Mankind) என்பதேயாகும். இவர்கள் ‘கோட் நேம் : பாரகுடா' என்ற கதைத்தொடரில் வில்லன்கள். சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் நமக்கு பரிச்சயமான சி.ஐ.டி.லாரன்ஸ் தான் 'பாரகுடா'. ஜூடோ டேவிட்டின் பெயர் 'ஃப்ரோலோ'. இவர்கள் இருவரும் அ.கொ.தீ.க.வை ஒழிக்க ஐ.நா. சபையினால் விசேடமாக நியமிக்கப்பட்ட உளவாளிகள்.

இந்தக் கதைத்தொடரை இங்கிலாந்தின் 'ஃப்ளீட்வே' நிறுவனத்தைச் சேர்ந்த 'லயன்' (நமது லயன் அல்ல) பத்திரிகை 10.09.66 முதல் 24.02.68 வரை மொத்தம் 77 வாரங்கள் தொடர்ந்து வெளியிட்டது. வாரம் இரண்டு பக்கம் என மொத்தம் ஏழு கதைகள் தொடராக வந்தன. இவற்றில் மூன்று கதைகள் நமது 'லயன்' காமிக்ஸில் வந்துள்ளது.

இது தவிர 'ஆண்டு மலர்'-களில் நான்கு சிறுகதைகள். அவற்றில் இரண்டு, மூன்று கதைகள் லயனில் வந்ததாக ஞாபகம். அங்கும் நம்மைப் போலவே 'கோடை மலர்', 'ஆண்டு மலர்' எல்லாம் உண்டு. சொல்லப் போனால் அந்த பத்திரிக்கைகளின் பாதிப்பு நமது காமிக்ஸில் நிறையவே உண்டு. வரும் பதிவுகளில் அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

ஆனால் நமக்கு மிகவும் பரிச்சயமான 'முத்து' காமிக்ஸில் வந்த கதைகள் அனைத்தும் 'ஃப்ளீட்வே' வெளியிட்ட டைஜஸ்ட் வடிவிலான காமிக்ஸ்களில் "சீக்ரெட் ஏஜென்ட்" எனும் தொடரில் ஜனவரி 1967 முதல் ஜனவரி 1968 வரை மொத்தம் 13 கதைகள் மாதாமாதம் தொடர்ந்து வெளிவந்தன.

'முத்து'வின் தீவிர(வாத) ரசிகர்கள் அ.கொ.தீ.க. 'இரும்புக்கை மாயாவி'யின் கதைகளிலும் வருவதை நினைவு கொள்ளலாம். இதில் ஒரு உள்குத்து உள்ளது.

முத்துவின் முதல் இதழான 'இரும்புக்கை மாயாவி'யில் மாயாவி 'க.கொ.க.கூ.' (கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு) என்னும் இயக்கத்துக்கு எதிராக போராடுவார். பின்னர் 'மர்மத்தீவில் மாயாவி' கதையிலும் இக்கூட்டத்தைச் சேர்ந்த 'ஸ்கார்ல்' எனும் வில்லனோடு மோதுவார்.

க.கொ.க.கூ.வின் ஒரிஜினல் பெயர் 'F.E.A.R.' (Federation of Extortion, Assassination and Rebellion) என்பதாகும். இந்தக் கூட்டமைப்புதான் பின்னாளில் வந்த கதைகளில் அ.கொ.தீ.க. என்றே அழைக்கப்பட்டது. ஏன் என்பது முத்து காமிக்ஸ் ஆசிரியருக்கே வெளிச்சம்!

க.கொ.க.கூ. என்று போட்டிக்கு யாரேனும் வலைப்பூ ஆரம்பிக்குமுன் நானே அதை பதிவு செய்து விடவேண்டும்!

இதுவரை வந்த அ.கொ.தீ.க. மற்றும் க.கொ.க.கூ. கதைகள்:

அ.கொ.தீ.க. (லாரன்ஸ் & டேவிட்) கதைகள்
முத்து காமிக்ஸ் # தேதி(1) FLEETWAY LIBRARY #(2) தேதி
ஃப்ளைட் 731 5 Aug-72 Payment in Death SA-10 May-67
காற்றில் கரைந்த கப்பல்கள் 7 Oct-72 The Underground Jungle SA-14 Jul-67
மஞ்சள் பூ மர்மம் 11 Feb-73 The Evil Ones SA-06 Mar-67
விண்ணில் மறைந்த விமானங்கள் 14 May-73 The Death Merchants SA-08 Apr-67
ஃபார்முலா X-13 17 Aug-73 Fatal Formula SA-11 Jun-67
வான்வெளிக் கொள்ளையர் 21 Dec-73 Call For Barracuda SA-04 Feb-67
தலை கேட்ட தங்கப்புதையல் 26 May-74 The Devil’s Ransom SA-16 Aug-67
சிறைப்பறவைகள் 27 Jun-74 Crime Buster SA-18 Sep-67
சி.ஐ.டி. லாரன்ஸ் 29 Aug-74 Code Name - Barracuda SA-02 Jan-67
பனிக்கடலில் ஒரு பயங்கர எரிமலை 34 Jan-75 The Destroyers SA-24 Dec-67
திகிலூட்டும் நிமிடங்கள் 126 Jul-81 Operation Flashpoint SA-20 Oct-67
ஃபார்முலா திருடர்கள் 133 Mar-82 Treacherous Trail SA-26 Jan-68
திசை மாறிய கப்பல்கள் 137 Nov-82 The Phantom Captain SA-22 Nov-67
LION Magazine(3) தேதி
பரலோகப் பயணம் 190 Jul-91 ??? ???
பறந்து வந்த பயங்கரவாதிகள் 197 Oct-91 ??? ???
மறுபதிப்புகள் #(4) தேதி
ஃப்ளைட் 731 139 Jun-85
காற்றில் கரைந்த கப்பல்கள் 143 Oct-85
வான்வெளிக் கொள்ளையர் 146 Jan-86
மஞ்சள் பூ மர்மம் 148 Apr-86
விண்ணில் மறைந்த விமானங்கள் 152 Oct-86
ஃபார்முலா X-13 155 Jan-87
தலை கேட்ட தங்கப்புதையல் 160 Jul-87
சிறைப்பறவைகள் 165 Jan-88
திசை மாறிய கப்பல்கள் ??? 1991
ஃபார்முலா திருடர்கள் ??? 1991
திகிலூட்டும் நிமிடங்கள் 210 Oct-92
சி.ஐ.டி. லாரன்ஸ் 234 May-95
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # தேதி
சிறைப்பறவைகள் 2 Aug-99
ஃப்ளைட் 731 6 Sep-00
மஞ்சள் பூ மர்மம் 8 Mar-01
ஃபார்முலா X-13
திசை மாறிய கப்பல்கள்
11 Jul-02
தலை கேட்ட தங்கப்புதையல் 14 Feb-04
விண்ணில் மறைந்த விமானங்கள் 15 Jun-04
திகிலூட்டும் நிமிடங்கள் 19 Aug-05
ஃபார்முலா திருடர்கள் 21 Aug-06
காற்றில் கரைந்த கப்பல்கள் 23 Sep-08
லயன் காமிக்ஸ் # தேதி LION Magazine தேதி
காணாமல் போன கடல் 14 Jun-85 King Cobra 18.3.67-26.8.67
காணாமல் போன விஞ்ஞானி(5) 25 May-86 The Albino 2.9.67-7.10.67
ஆழ்கடல் யுத்தம்(6) 31 Nov-86 Lion Annual ???(3)
எலிகள் ஜாக்கிரதை(7) 36 Apr-87 Lion Annual 1969
காணாமல் போன கோடீஸ்வரர் 37 May-87 The Richest Man in the World 10.9.66-8.10.66
நடுக்கடல் கொள்ளை(8) 42 Oct-87 Lion Annual ???(3)
க.கொ.க.கூ.('இரும்புக்கை மாயாவி) கதைகள்
முத்து காமிக்ஸ் # தேதி FLEETWAY LIBRARY #(2) தேதி
இரும்புக்கை மாயாவி 1 Jan-72 The Raiders of FEAR FS-01 Jan-67
இமயத்தில் மாயாவி 8 Nov-72 Forbidden Territory SS-09 May-67
மர்மத்தீவில் மாயாவி 13 Apr-73 The Formula of FEAR SS-15 Aug-67
VALIANT Magazine தேதி
மந்திர வித்தை 119 Nov-80 The Magician 9.4.66-17.9.66
களிமண் மனிதர்கள் 138 Jul-84 Warlock 4.3.67-29.7.67
இயந்திரப் படை 157 Mar-87 The Builder 2.3.68-22.11.69
மர்மப் பனி(9) 176 May-89 Mr.No-Face 17.1.70-31.1.70
மறுபதிப்புகள் # தேதி
இரும்புக்கை மாயாவி 148 Oct-87
மர்மத்தீவில் மாயாவி 163 Jun-86
இமயத்தில் மாயாவி 193 May-91
மந்திர வித்தை 228 Oct-94
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # தேதி
இரும்புக்கை மாயாவி 5 Aug-00
இமயத்தில் மாயாவி 19 Jan-01
மர்மத்தீவில் மாயாவி 19 Aug-05

(1)-இங்கு குறிப்பிட்டுள்ள தேதிகள் அனைத்தும் 'குத்துமதிப்பாக' இடப்பட்டவை. தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டத் தவறவேண்டாம். மேற்கொண்டு தகவல்கள் இருப்பினும் தெரியப்படுத்தவும்.
(2)-SA-சீக்ரெட் ஏஜென்ட் சீரீஸ்,FS-ஃபென்டாஸ்டிக் சீரீஸ்,SS-ஸ்டுபெண்டஸ் சீரீஸ்
(3)-ஆங்கில 'லயன்' பத்திரிகையில் வந்த இந்த கதைகளைப் பற்றி மேற்கொண்டு தகவல்கள் கிடைத்ததும் தெரிவிக்கிறேன். உங்களிடம் ஏதேனும் தகவல்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்.
(4)-முத்துவின் 'இருண்ட' காலத்தில் வெளிவந்த புத்தகங்கள் பலவற்றில் வெளியிட்டு எண்ணோ, தேதியோ கண்டுபிடிக்க இயலாது. இது பற்றி மேலும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் தெரிவியுங்களேன்?
(5)-லயன் கோடை மலர் '86-ல் சிறுகதையாக வந்தது.
(6)-லயன் தீபாவளி மலர் '86-ல் சிறுகதையாக வந்தது.
(7)-இந்தக் கதையைப் படித்துள்ளேன். ஆனால் எப்போது வந்தது என ஞாபகம் இல்லை. புத்தகமும் கைவசம் இல்லை. லயன் கோடை மலர் '87-ல் சிறுகதையாக விளம்பரப் படுத்தப்பட்டது. ஆனால் வரவில்லை. தவறாகவும் இருக்கலாம். இருந்தால் சுட்டிக் காட்டவும்.
(8)-லயன் சூப்பர் ஸ்பெஷல்-ல் சிறுகதையாக வந்தது.
(9)- முத்து சம்மர் ஸ்பெஷல் '89-ல் சிறுகதையாக வந்தது.
 

இவை தவிர அ.கொ.தீ.க.(லாரன்ஸ் & டேவிட்)வின் 'லயன்'-ல் தொடராக வந்த 4 கதைகளும் ஒரிரு சிறுகதைகளும் இன்னும் தமிழில் வெளிவரவில்லை. அது போக இன்னும் வெளிவராத இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் கதைகள் சிலபல உள்ளன. ஆர்ச்சி கதைகள் பலபல உள்ளன. அவற்றை பற்றி எழுத தனியாக ஒரு பதிவுதான் (நீங்கள் விரும்பினால்) போட வேண்டும். விஜயன் சார் மனசு வைத்தால் நாம் இவற்றை தமிழில் ரசிக்கலாம்.

இந்த முறை ஏன் படங்கள் எதுவும் வெளியிடவில்லை என நீங்கள் கேட்கலாம்? லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ, இரும்புக்கை மாயாவி ஆகியோரின் கதைகள் அனைத்தையும் விமர்சனம் செய்யலாம் என்றிருக்கிறேன். இப்போதே அனைத்து அட்டைப்படங்களையும் வெளியிட்டு விட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். அதனால்தான்! உங்களுக்கு ரொம்ப போரடிக்காமல் இருக்க வேறு சில பதிவுகளும் வரும்.

வழக்கம் போல ஆங்கிலப் பதிப்புகளைப் பற்றிய அத்துனை தகவல்களையும் அளித்துதவிய நண்பர் 'முத்து விசிறி'க்கு மனமார்ந்த நன்றிகள். இந்த பதிவு சம்பந்தமாக அவர் இட்டுள்ள இடுகைகளையும் பாருங்கள்.

இந்தப் பதிவில் நிறைய தவறுகள் இருக்கலாம் (தேதிகள், வரிசை எண்கள்). இருப்பின் சுட்டிக்காட்டத் தயங்க வேண்டாம். மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள். இதுவரை நான் அளித்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன். இது போன்ற பதிவுகளை மேலும் தொடரலாமா என கருத்துரையிடுங்களேன்?

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்.

தொடர்புடைய இடுகைகள்:

'முத்து'வின் முதல் இதழ் - 'இரும்புக்கை மாயாவி':

'இரும்புக்கை மாயாவி':

'முத்து' இதழ்களின் முழு விவரம்:

ஃப்ளீட்வே/முத்து - ஒரு பார்வை:


'காமிக்ஸ் க்ளாசிக்ஸ்' பற்றிய இடுகைகள்:

17 comments:

  1. அ.கொ.தி.க. என்றால் முழு அர்த்தம் என்ன தோழரே!

    ReplyDelete
  2. if i need all the above books, what is the procedure to purchase them

    ReplyDelete
  3. ஐயா,

    காமிக்ஸ் டாக்டர் என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்கியதில் தவறு ஏதும் இல்லை.

    சென்ற முறை நான் கூறிய கருத்துக்கள் சிலவற்றிற்கு மக்கள் பயங்கரமாக எதிர்வினை அளித்துள்ளார்கள். காமிக்ஸ் என்பது சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று நான் கூறியதை நண்பர்கள் நேரிலும், பின்னூட்டம் மூலமாகவும் ஆட்சேபித்துள்ளார்கள். அவர்களுக்கு நான் தெளிவாக பதிலளித்துள்ளேன் = என்னுடைய கருத்தில் இருந்து நானும் மாறுபடவில்லை.
    க.கொ.க.கூ. என்று போட்டிக்கு யாரேனும் வலைப்பூ ஆரம்பிக்குமுன் நானே அதை பதிவு செய்து விடவேண்டும் = என்ன கொடுமை சர் இது. எங்களுக்கு எல்லாம் அப்ப வலைபூவே கிடையாதா?

    (7)-இந்தக் கதையைப் படித்துள்ளேன். ஆனால் எப்போது வந்தது என ஞாபகம் இல்லை. புத்தகமும் கைவசம் இல்லை. லயன் கோடை மலர் '87-ல் சிறுகதையாக விளம்பரப் படுத்தப்பட்டது. ஆனால் வரவில்லை. தவறாகவும் இருக்கலாம். இருந்தால் சுட்டிக் காட்டவும். = அது அந்த கோடை மலரில் தான் வந்தது. உறுதியாக, நிச்சயமாக, இறுதியாக.

    இந்த முறை ஏன் படங்கள் எதுவும் வெளியிடவில்லை என நீங்கள் கேட்கலாம்? = யோவ், நாங்க எப்பையா அப்படி கேட்டோம்? நீயா ஒரு முடிவு எடுத்தால் அதுக்கு நாங்க என்ன பண்ணுவோம்?

    இப்போதே அனைத்து அட்டைப்படங்களையும் வெளியிட்டு விட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். அதனால்தான் = பூசணிக்காய் சோம்பேறி / ஸ்ட்ரா பெர்ரி சோம்பேறி. ஸ்கான் செய்ய நேரமில்லை என்பதை எப்படி எல்லாம் சமாளிக்கிறார் பாருங்க.

    ReplyDelete
  4. இந்தப் படத்திலிருக்கும் சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் கண்டு பின்னூட்டம் இடுவோருக்கு பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு = இந்த வில்லர் (வில்லைன் என்பதின் மரியாதை நிமித்தமான பெயர்) முகமூடி வீரர் வேதாளரின் கதையில் வரும் செந்தாடி ஆவார். இவர் ஒரு வகையில் பார்த்தால் முகமூடி வீரர் வேதாளரின் தெய்வ மச்சான் ஆவார்.

    ReplyDelete
  5. வணக்கம் தலைவரே, கழகத்தோழர்களே,

    எம் கழகத்தின் வரலாற்றைப் படித்ததும் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது, எப்படி இருந்த கழகம் இப்படி ஆகிவிட்டதே, இருப்பினும் போட்டோக்கள் போடுவதிலேயே கஞ்சத்தனம் காட்டிய தலைவரின் கடமையுணர்வு புல்லரிக்க வைக்கிறது, தலைவர் மீண்டும் கழகத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகிறார் என்பதற்கு இதை தவிர வேறு அத்தாச்சியும் வேண்டுமோ.

    நரகத்தில் செம ஜாலியாக டைம் பாஸ் பண்ணும் எம் பழம்பெரும் தலைவர்களை பெருமிதமடையச் செய்யும் பதிவையிட்ட தலைவரிற்கு பாராட்டுக்கள்.

    ஒவெரு அண்டு அவுட்டு தலவா

    ReplyDelete
  6. செயல் தலைவருக்கு,

    லேட்டா பதிவு போட்டாலும் பின்னி பெடலெடுக்கிறீங்க. கழக வரலாறு ஒவ்வொரு காமிக்ஸ் கண்மணிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷம்.

    கழக கண்மணி

    josh

    ReplyDelete
  7. டாக்டர் அய்யா!

    ராணி காமிக்ஸ் -ல் வெளிவந்த டைகர் (நம்ம ப்ளூ பெர்ரி 'டைகர்' அல்ல) கதைகளில் கூட அ.கொ.தீ.க. வினர் வில்லன்களாக வந்ததாக ஞாபகம். (ராணி காமிக்ஸ் முத்துவை காப்பி அடித்து இருக்கலாம்). பொதுவாக எனது ஞாபக சக்தி ரொம்பவும் குறைவு. (என்னிடம் புத்தகங்களை இரவல் வாங்கியவர்கள் சந்தோசப்பட வேண்டாம்!) எனவே நீங்கள் கூறும் 'புள்ளி விவர' சந்தேகங்களுக்கு என்னால் உதவ இயலாது. மன்னிக்கவும்.
    - முத்து விசிறி, விஷ்வா, ரபிக் ராஜா ஆகியோர் இருக்க பயமேன்!

    படம் இல்லாத காமிக்ஸ் பற்றிய இடுகை பட்டாசு இல்லாத தீபாவளி போல! இனி படத்தோடு பதிவிடுங்கள். அ.கொ.தீ.க.வை விட வில்லத்தனத்தில் அசந்தியவர்கள் 'எட்டு' கும்பல்தான் (மாண்ட்ரேக் கதைகள்). அவர்களை பற்றிய பதிவையும் 'சீக்கிரமே' வெளியிட வேண்டுகிறேன்.

    புள்ளி விவரங்களில் விஜயகாந்த்தையே விஞ்சி உள்ள டாக்டரை 'சோம்பேறி' என்று சொன்ன விஷ்வா -வை வன்மையாக கண்டிக்கிறேன். புள்ளி விவரங்களுக்கு பங்களித்த முத்து விசிறிக்கு நன்றி!

    ReplyDelete
  8. //காற்றில் கரைந்த கப்பல்கள்//

    இந்த கதை பலமுறை திரும்ப திரும்ப படிச்சிருக்கேன் சின்ன வயசுலே!

    ReplyDelete
  9. பங்காளி,

    என்னடா இது, நாம ப்ளாக்'ல போட்டாலும் போட்டோம்; இப்படி ஒருத்தன் கிளம்பிட்டானே என்று தானே நெனைக்குற? என்ன பண்றது, நாங்கல்லாம் சாபட்டுல சால்ட் போட்டு சாபிடுர பரம்பரை.

    அதான் உடனே நாங்களே எங்க கழக ப்ளாக்'அ ஆரம்பிச்சுட்டோம்'ல.

    வாங்க, புது வீட்டுக்கு வந்து பாருங்க பங்காளி.

    ReplyDelete
  10. அடச்சே,

    வீட்டு அட்ரஸ் கொடுக்க மறந்துட்டேன். இதோ புடிங்க அட்ரச:

    http://kakokaku.blogspot.com/

    ReplyDelete
  11. வேண்டா வெறுப்புக்கு புள்ள பெத்துட்டு காண்டாமிருகம்னு பேர் வச்ச மாதிரி , என்ன வேலை இது ஸ்கேன் பண்ண சோம்பேறித்தனம். அதை மறைக்க என்ன வொரு சல்ஜாப்பு
    .அதுசரி .. லாரன்ஸ் & டேவிட் ஐ நா வுக்காக வேலை செய்வதற்கு முன்னால். செம் மலர் உளவு துறையில் பணியாற்றியதை குறிப்பிட மறந்துவிடீர்களே ? குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் என்னை போல் நக்கீரர்கள். உளளதை அறிந்தும் என்ன அலட்சியம் ? சரி போனது போகட்டும் . பொன்முடிப்பை மறக்காமல் கொரியரில் அனுப்பிவிடவும் .

    ReplyDelete
  12. அ.கொ.தீ.க தலைவருக்கு,

    உங்கள் கழக கண்மணிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன. வலையுலகத்திற்கு ஒரு புதிய ஷெரீப் வந்துருக்கார். அது நான் தான்.
    கூடிய சீக்கிரம் கம்பி எண்ணப் போறீங்க. கபர்தார்.

    ReplyDelete
  13. வால் பய்யன் = விடிய விடிய சன் டிவி பார்த்துட்டு கல நிதி மாறன் கலைஞர் டிவி எம் டி யா'ன்னு கேக்குற? லூசாப்பா நீ? அ.கொ.தி.க. என்றால் அழிவு கொள்ளை தீமை கழகம் என்று அர்த்தம்.

    ஜீவ்ஸ் = all you have to purchase all these old books is to get into a TIME MACHINE and adjust the time to Early 1972 & That is when the 1st issue of muthu comics got published. is this information OK to you?

    யோவ் அய்யம்பாளையம் = ராணி காமிக்ஸ் டைகர் கதையில வர்ற இயக்கம் "சர்வதேச தீவிரவாதிகள் இயக்கம்' ஆகும். நல்ல கேக்குராங்கய்ய டீடைலு.

    கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு = யோவ், யாருயா நீ? அட்ரஸ் குடுத்தா போதுமா? போன் நம்பர் யாரு தருவா? கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.


    ப்ரூனோ ப்ரேசில் = சார், நீங்க யாரு, எங்க இருந்து வர்றேங்கனு எங்களுக்கு ராடர் மூலமா தெரிஞ்சு போச்சு. எங்களுக்கு உஷார் சொல்லும் நீங்கள் மறக்க கூடாத ஒன்று என்ன வேனில் உங்க தம்பிய போட்டு தள்ளுனது நாங்க தான்.

    ReplyDelete
  14. டாக்டர், புள்ளி விவரங்களுடன் போட்டு தாகி இருகிறீர்கள் பதிவை..... கூடவே சில படங்கள் தள்ளி இருந்தால், ஒரு ஆய்வு கட்டுரை படிக்கும் என்னத்தை தவிர்த்து இருக்கலாம்.

    தாமதமான பின்னூடத்திற்கு மன்னிக்கவும். திடீரெண்டு எண்ணற்ற வலை பதிவுகள் தமிழ் காமிக்ஸ் பற்றி முளைத்து இருப்பதால், என்னால் இப்போது வேலை பளுவின் நடுவே முன்பு போல அனைத்தையும் படித்து பின்னோட்டம் விட முடிவது இல்லை...

    ராணி காமிக்ஸ் பற்றி தமிழில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்க நினைத்து இருந்த என்னத்தை இப்போதைக்கு ஒதுக்கி வைத்து உள்ள காரணமும் அதுவே. இப்போதைக்கு அந்த வலை கட்டுமான பணிகளுடன் பாதியில் நின்று கொண்டு இருக்கிறது. கூட்டு வலை முயற்சி செய்தால் மாறுமே அது சாத்தியம், ஆனால் அதற்க்கு இப்போதைக்கு யாரும் முன் வரவில்லை.

    இப்படியே எத்தனை பதிவுகளை படித்து கருத்து பகிர முடியும் என்று தெரிய வில்லை. முடிந்த வரை தொடருகிறேன்.

    செழி கூறியது போல, ராணி காமிக்ஸ் டைகர் கதையில் வந்தது சர்வதேச தீவிரவாதிகள் சங்கமே.... அனேகமாக நமது டாக்டருடன் தொடர்புடைய இயக்கம் என்று எண்ணுகிறேன்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்
    - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"

    ReplyDelete
  15. அ.கொ.தீ.க என்றால் அழிவு கொள்ளை தீமை கழகம். இதை பழைய காமிக்ஸ் இதழ்களில் தெளிவாக சொல்லியுள்ளார்கள். லாரன்ஸ் டேவிட் கதைகளில் வரும் வில்லன் கூட்டம்.

    லாரன்ஸ் டேவிட் - ஐ நா வில்லன் அ கொ தீ க
    ஜானி நீரோ - நிழற்படை

    ReplyDelete
  16. காந்தியை சுட்டு கொன்றவன் பெயர் கோட்சே. இதை பழைய ஹிந்து பேப்பரில் தெளிவாக சொல்லி உள்ளார்கள். கோட்சே இவரை கொன்றவன்.

    அதனால், இனிமேலாவது யாரும் பதிவை முழுதும் படிக்காமல், பதிவின் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு வந்து, ஆமாம் காந்தி செத்துட்டார் என்று சொல்ல வேண்டாம்.

    ReplyDelete
  17. I want Lawrence and David books please send me 9962578123

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!