Sunday, May 1, 2011

முகமூடி வேதாளன்!

வணக்கம்,

கடந்த ஏப்ரல் 28, 2011 அன்று உலகின் தலைசிறந்த செய்தித்தாள் சாகஸ சித்திரக்கதை தொடர்களாகிய வேதாளர் (THE PHANTOM) மற்றும் மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் ஆகிய கதைத் தொடர்களை உருவாக்கிய அமரர் லீ ஃபாக்கின் 100வது பிறந்த நாளாகும்!  

மேலும் 2011ல் வேதாளர் கதைத்தொடர் தொடங்கி 75 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது!

இத்தருணத்தில் நமது அ.கொ.தீ.க. வலைப்பூவின் 50வது பதிவை வெளியிடுவது சிறப்பாக இருக்கும் எனக் கருதி லீ ஃபாக்கின் நினைவுகளுக்கும் அவர் படைத்துச் சென்றுள்ள அற்புதங்களின் உலகிற்கு நன்றி கூறும் விதமாகவும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்!

இக்கதையில் கூட காட்டரசன் வேதாளர் ஒரு நாட்டின் ராணியைத் திருமணம் செய்வது போல் கதை அமைந்திருந்தாலும் நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த ராஜ வைபவத்திற்கும் அதற்கும் ஏதேனும் ஒற்றுமை இருந்தால் அது தற்செயலானதே! 

மேலும் இன்று மே முதல் திங்கள்! உழைப்பாளர் தினம்! ஞாயிற்றுக் கிழமையில் வந்திருக்கும் மேலும் ஒரு அரசு விடுமுறை! மே தினமும் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருப்பது கொடுமை!

எனிவே…அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்! தல ரசிகர்களுக்கு தல பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

ஒகே! மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்குப் போவோம்!

புத்தக விவரங்கள்:

கதை முகமூடி வேதாளன்
இதழ் முத்து காமிக்ஸ் (மாத இதழ்)
வெளியீடு # 58
முதல் பதிப்பு ஜனவரி 1, 1977
மறுபதிப்புகள் இதுவரை இல்லை
பதிப்பகம் MUTHU COMICS
ஆசிரியர் M.சவுந்திரபாண்டியன்
அச்சிட்டோர் SEKAR OFFSET PRESS, SIVAKASI
நாயகர்(கள்) முகமூடி வேதாளன்
மூலம் THE PHANTOM - SUNDAY STRIP # 064 - THE FOUNDING OF THE JUNGLE PATROL
தேதி

5 Jul 1964 - 24 Jan 1965 (30 Weeks)

வெளியிட்டோர் KING FEATURES SYNDICATE
கதை LEE FALK
ஓவியம் SY BARRY
தமிழில் M.சவுந்திரபாண்டியன்
பக்கங்கள் 68 (இரு வண்ணங்களில்)
சைஸ் 16cm X 20cm
விலை ரூ:1/- (1977 முதல் பதிப்பின் போது)

விளம்பரம்:

இவ்விதழ் புத்தாண்டு மலர் என விளம்பரப்படுத்தப்பட்டது! முந்தைய வெளியீடுகள் மட்டுமின்றி 1977 ஜனவரி மாத கோகுலம் இதழிலும் விளம்பரம் வெளிவந்தது! இந்த கோகுலம் விளம்பரங்கள் அந்தக் காலத்தில் ரொம்ப பிரபலம்!

Muthu Comics # 057 - Next Issue - AdGokulam (02-01-1977) - Vintage Muthu Comics Ad

அட்டைப்படம்:

கண்கவரும் அட்டைப்படம்! வேதாளரின் அசத்தல் ஆக்‌ஷனுடன்!  கண்டுகளியுங்கள்! அந்த காலத்தில் கடைகளில் பார்த்தவுடனேயே வாங்கிப் படிக்கத் தூண்டியிருக்க வேண்டும்!

பிற அட்டைப்படங்கள் இதன் மூலத்தை உணர்த்தவே! இக்கதைக்கும் அவைக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை!

முதல் பக்கம்:

Muthu Comics # 058 - Mugamoodi VedhalanThe Phantom - S064 - The Founding of The Jungle Patrol 

The Phantom Annual 1967பிற துணுக்குகள்:

இனி வரும் துணுக்குகள் சில THE PHANTOM ANNUAL 1967 என்ற புத்தகத்திலிருந்து வந்தவையே!

ஓவ்வொரு துணுக்குடனும் அதற்கான ஆங்கில மூலத்தையும் உடன் வழங்கியுள்ளேன்!

கண்டு களியுங்கள்!

இந்த புத்தகத்தை தரவிறக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

உபயம்: http://bookscomics.blogspot.com/

SPLASH PAGE:

Muthu Comics # 058 - Splash PageThe Phantom Annual 1967 - Splash Page

ரிப்லியின் விந்தை உலகம்:

அந்தக் கால முத்து காமிக்ஸ்களின் உள்ளட்டைகளில் வழக்கமாக இடம் பெற்றிருக்கும் துணுக்குதான் ரிப்லியின் விந்தை உலகம்! இதிலும் அப்படியே!

Muthu Comics # 058 - Ripley's Believe It or Not!

இது குறித்த முழு நீளப் பதிவொன்று நெடுநாளாக கிடப்பில் கிடக்கின்றது! அதற்கு எப்போது விடிவு காலம் வரப்போகிறதோ தெரியவில்லை!

சுட்டிப்பயல்:

சுட்டிப்பயல் ஹென்றியின் நகைச்சுவைத் துணுக்குகள் இவ்விதழில் வந்துள்ளது! படித்து மகிழுங்கள்!

இவன் செய்யும் சேட்டைகளுக்குப் பெயர் தான் ஊமைக் குசும்போ?!! என்றேனும் ஒரு நாள் இந்த மொட்டைப் பயலின் சாகஸங்களைப் பட்டியலிட வேண்டும் என்று ஆவல்! நடக்குமா?!! 

Muthu Comics # 058 - Henry - 4Muthu Comics # 058 - Henry - 1Muthu Comics # 058 - Henry - 2Muthu Comics # 058 - Henry - 3

KING FEATURES SYNDICATE இடம் காமிக்ஸ் தொடர்களுக்கு உரிமைகள் வாங்கும் போது அக்காலத்தில் இது போன்ற துணுக்குகளையும் சேர்த்து வாங்கியிருக்கலாம்! அல்லது ஒரு வேளை இவற்றைக் கொசுறாகவும் கொடுத்திருக்கலாம்! ஆனால் அவ்வாறு நடைபெற்றிருக்கும் வாய்ப்புகள் அரிதே!

விளம்பரங்கள்:

வேதாளர் வந்த பிறகு மாண்ட்ரேக் மட்டும் சும்மா இருப்பாரா?!! அவரும் விரைவில் முத்து காமிக்ஸ்-ல் வரப்போகும் விளம்பரம்! கூடவே சிஸ்கோ கிட்டும், ரிப் கிர்பியும்! கண்டு களியுங்கள்!

Muthu Comics # 058 - Coming Soon - AdMuthu Comics # 058 - Coming Soon - AdMuthu Comics # 058 - Next Issue - Ad

வேதாளரின் அடுத்த சாகஸமான ஜூம்போ விளம்பரமும் அதன் ஆங்கில மூலமும்!

Muthu Comics # 058 - Coming Soon - AdThe Phantom Annual 1967 - Phantom's World

CREDITS:

Muthu Comics # 058 - Credits Credits

புதிர் விளையாட்டு:

Muthu Comics # 058 - PuzzleThe Phantom Annual 1967 - Ivory Smugglers

இலவச இணைப்பு:

முகமூடி வேதாளனின் கபாலக் குகை எனும் இலவச தாய விளையாட்டு இவ்விதழுடன் வழங்கப்பட்டது!

Muthu Comics # 058 - Free GiftThe Phantom Annual 1967 - The Phantom's Cave

ஒரிஜினலுக்கும் தமிழ் பதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தைக் காணுங்கள்! தமிழில் வண்ணக் கலவை கண்ணைக் கவர்கிறதல்லவா?

கதை:

பங்கல்லா கானகப் பகுதியைக் காத்து வரும் வனக்காவல் படையை 300 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வேதாளர் உருவாக்கினார் என்பதே கதை! இடையில் ஒரு நாட்டின் ராணியையும் ரொமான்ஸ் செய்கிறார்!

இந்தக் கதையை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை ஹீரோவாகப் போட்டு படமாக எடுத்திருந்தால் ஆயிரத்தில் ஒருவன் (1965) ரேஞ்சுக்கு இன்னொரு அமர்க்களமான திரைப்படம் நமக்குக் கிடைத்திருக்கும்! ஏனென்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்! 

இக்கதையை 20ம் நூற்றாண்டைச் சேர்ந்த நமது வேதாளர் பழைய குறிப்புகளிலிருந்து குரன் மற்றும் ஏனைய பந்தர் குள்ளர்களுக்கும் படித்து காண்பிப்பது போல அமைக்கப் பட்டிருக்கும்!

கடற்கொள்ளையர்களை அடியோடு ஒழிக்க சபதம் பூண்டிருக்கும் வேதாளர் பரம்பரையில் வந்தவர் நமது 17ம் நூற்றாண்டு வேதாளர்! கொள்ளையர்களின் தலைவனாகவும், கப்பல்களுக்கு சிம்மசொப்பனமாகவும் விளங்குகின்றான் செந்தாடி!

Red Beard

செந்தாடி

தன்னை சண்டையில் வீழ்த்தும் ஒருவன் தான் அடுத்த தலைவனாக முடியும் என்று சவால் விடுக்கிறான் செந்தாடி! அந்தச் சவாலை ஏற்று கொள்ளையர்களின் தலைமையிடமான சன்லாய் துறைமுகத்திற்கு செல்ல தீர்மாணிக்கிறார் வேதாளர்! கதை ஆரம்பம் முதல் அனல் பறக்கும் அதிரடிதான்! கதையில் வேதாளரின் எண்ட்ரியே அமர்க்களமாக இருக்கும்!

Phantom Intro

சிங்கம் போல் கோட்டையினுள் நுழையும் வேதாளர் செந்தாடிக்கு சவால் விடுக்கிறார்! ஆனால் அவனுக்கு முன் அவனது தளபதிகளான கோடாரிச் சண்டையில் வல்லவனான BIG BART (தமிழில் கோடாரிக் கொம்பன்), கத்திச் சண்டை வீரன் SALLA (சல்லா) மற்றும் மாமிச மலை CRUSHER (தமிழில் கிங்காங்) ஆகியோர் வேதாளரை எதிர்கொள்கின்றனர்!

வேதாளர் எல்லோரையும் தனது பாணியில் முறியடிக்கிறார்! இறுதியில் செந்தாடியுடனும் மோதுகிறார்! எம்.ஜி.ஆர். போல வேதாளர் கத்திச் சண்டை போடும் அழகைக் காணுங்கள்!

Sword Fight With SallaDuel With Red Beard

செந்தாடியுடன் மோதுகையில் சிறையில் இருக்கும் ஒரு அழகியைக் கண்டு வேதாளரின் கவனம் சிதறுகிறது! கண்டதும் காதலா?!!

Love at First Sight

கண்டதும் காதல்!

ஆனால் மீண்டும் சுதாரித்துக் கொண்டு செந்தாடியை வீழ்த்துகிறார் வேதாளர்! அவனைக் கொல்லுமாறு வேதாளரிடம் அனைவரும் கூற வேதாளரோ அவனை மன்னிக்கிறார்! இது கண்டு கல்நெஞ்சம் கொண்ட கடற்கொள்ளையர் கண்களிலும் கண்ணீர் பெருகுகிறது!

Sentiment

செந்தாடி மற்றும் அவனது தளபதிகளை மன்னிக்கிறார் வேதாளர்! அவர்களும் தங்களது விசுவாசத்தை வேதாளருக்கு சமர்ப்பிக்கின்றனர்! அவர்களோடு நம்பிக்கைக்குரிய நூறு பேரோடு வனக்காவல் படையை துவங்குகிறார் வேதாளர்!

Jungle Patrol

இதற்கிடையில் வேதாளர் சிறையில் பார்த்து மனதைப் பறிகொடுத்த அழகி நவரே நாட்டின் ராணி நடாலியா என்று தெரியவருகிறது! கிடைத்த கேப்பில் அலேக்காக அவரை கபாலக் குகைக்கு உல்லாசப் பயணமாக அழைத்துச் செல்கிறார்! பின்னர் சகல ராஜ மரியாதைகளுடன் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புகிறார் வேதாளர், தன் காதலை வெளிப்படுத்தாமலே!

இறுதியில் ராணியைக் கைப்பற்றினாரா வேதாளர்? வனக்காவல் படையை எவ்வாறு விரிவாக்கினார்? இது போன்ற கேள்விகளுக்கு கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்! பதிவில் கீழே ஆங்கில மூலத்திற்கான டவுன்லோடு லிங்கை அளித்துள்ளேன்! 

இது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே வெளிவந்த தொடர்கதை என்பதால் நடுவில் இடைவெளிக்காக திடீர் திடீரென வேதாளர் கதையை நிறுத்தி விட்டு சாப்பிடவோ, குளிக்கவோ கிளம்பி விடுவார்! மீண்டும் அவர் கதை சொல்ல ஆரம்பிக்கும் வரை பந்தர் குள்ளர்களோடு சேர்ந்து நாமும் ஆவலுடன் காத்திருப்போம்!

Break

இது முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் கதை எனினும் கதையில் ஏகப்பட்ட ரொமாண்டிக் காட்சிகள் நிறைந்திருக்கும்! நீங்களே படித்து மகிழுங்கள்!

Romance

இதயம் முரளி ரேஞ்சுக்கு வேதாளர் உருகுகிறார்! அந்த காலத்திலேயே வேதாளர் சொல்லாமலேயே காதல் புரிந்திருக்கிறார்! கதையைப் படிக்கும் நாமும் கதையோடு ஒன்றிப் போவதால் கதை கேட்கும் பந்தர் குள்ளர்கள் போல கடுப்பாவது இயல்பே!

காமிக்ஸ் குத்து:

கதையில் கானகப் பழமொழிகள் ஏதும் இடம்பெறவில்லையென்றாலும் குத்து வசனங்களுக்கு பஞ்சமே இராது!

செந்தாடியை வேதாளர் எதிர்கொண்டது முதலே செந்தாடி அவரை எருமை என்று ஏளனம் செய்ய ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் பொங்குகிறார் வேதாளர்! மேலும் சல்லாவுடன் கத்தி சண்டை இடும் போதும் வீர வசனம் பேசுகிறார் வேதாளர்!

Phantom Punch - 1Phantom Punch - 2

இவை அனைத்திற்கும் உச்சமாக செந்தாடியை வீழ்த்திய பின்னர் அவனைக் கொல்லாமல் மன்னித்து விட்டு விடுகிறார்! அப்போது அவர் பேசும் வசனம் தான் கடற்கொள்ளையர்களையும் கலங்கச் செய்கிறது!

Phantom Punch - 3

கதை முடிவில் 20ம் நூற்றாண்டு வேதாளர் கூறும் ஒரு வசனம்! கதையைப் படித்து முடித்த பின் நமக்கும் இது போல் உணர்வுகள் தோன்றுவதில் ஆச்சரியமில்லை!

Endஎன்ன நண்பர்களே?!! ஆரம்பத்தில் நான் கூறியது போல் இது புரட்சித் தலைவருக்கு உகந்த கதைதானே?!! திரைப்படமாக வந்திருந்தால் நிச்சயம் வெள்ளி விழா கண்டிருக்கும்தானே?!!

Muthu Comics # 060 - Announcementசுவாரசியமான தகவல்கள்:

  • 1977-ல் முத்து காமிக்ஸ்-ல் முதன்முறையாகப் புத்தாண்டு மலர் வெளியிடப்பட்டது! முத்து காமிக்ஸ் # 058 – முகமூடி வேதாளன்அட்டகாசமான சைஸில் இரு வண்ணங்களில் ஜனவரி 1977-ல் வெளிவந்தது!
  • வேதாளர் முத்து காமிக்ஸ்-ல் அறிமுகமானது இந்தக் கதை மூலம்தான்!
  • இவ்விதழுடன் புத்தாண்டு பரிசாக இலவச தாய விளையாட்டு வழங்கப் பட்டது!
  • ஆரம்பத்தில் பெரிய சைஸில் வந்து கொண்டிருந்த முத்து காமிக்ஸ் நடுவில் பாக்கெட் சைஸுக்கு மாறியது! பின்னர் மீண்டும் பெரிய சைஸுக்கு இக்கதை மூலம் வந்தது! இவ்விதழின் வெற்றியைத் தொடர்ந்து இரு வண்ணங்களில் பெரிய சைஸில் தொடர்ந்து ஓராண்டுக்கு மேல் வெளிவந்தது!
  • ஏற்கெனவே இந்திரஜால் காமிக்ஸ் மூலம் வேதாளர் என்றும், குமுதம் வார இதழ் மூலம் முகமூடி என்றும் தமிழ் வாசகர்களுக்கு வேதாளர் அறிமுகமாகியிருந்தார்! இதனாலேயே முத்து காமிக்ஸ்-ல் முகமூடி வேதாளன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம்!
  • கதையிலும் கூட PHANTOM என்பதற்கு தமிழ்ப்பதமாக குமுதம் பாணியில் முகமூடி என்றும், THE GHOST WHO WALKS என்பதற்கு இந்திரஜால் பாணியில் வேதாளர் (பந்தர் குள்ளர்கள் வழக்கம்) என்றும் குறிப்பிட்டிருப்பர்! பிற்காலத்தில் முகமூடி என்ற சொற்பதம் விடப்பட்டு வேதாளர் என்றே அழைக்கப்பட்டார்!  
  • குமுதத்தில் இக்கதை வந்ததாகத் தெரியவில்லை! இந்திரஜாலிலும், ராணியிலும் தமிழ் மொழிபெயர்ப்பு சகிக்கவில்லை! ஆகையால் முத்து காமிக்ஸ்-ல் வந்ததே சிறந்த மொழிபெயர்ப்பு என்று ஆணித்தரமாகக் கூறலாம்!

கதாசிரியர்கள்:

மேல் விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

Lee Falk Sy Barry
கதாசிரியர் லீ ஃபாக் ஓவியர் சை பேரி

பிற பதிப்புகள்:

இந்தியாவில் இக்கதையின் பிற பதிப்புகள் இதோ! இன்னும் இக்கதை செய்தித்தாள்களிலும், பத்திரிக்கைகளிலும் தொடராக பதிப்பிக்கப் பட்டிருக்கலாம்! இப்போதைக்கு மேலும் தகவல்கள் ஏதும் இல்லை!

  • INDRAJAL COMICS # 026 - THE JUNGLE PATROL (APRIL 1966) - ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளிலும்!
  • ராணி காமிக்ஸ் # 186 - வெள்ளை இளவரசி (16 MARCH 1992)
  • DIAMOND COMICS DIGEST # 058 – PHANTOM # 011 – ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்!
  • DIAMOND COMICS DIGEST # 164 – PHANTOM # 073 (REPRINT) – ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில்!

 Indrajal Comics # 026 - The Jungle PatrolRani Comics # 186 - Vellai IlavarasiDiamond Comics Digest # 058 - Phantom # 011Diamond Comics Digest # 164 - Phantom # 073

இந்திரஜால் காமிக்ஸின் தமிழ் பதிப்பு என்னிடம் இல்லை! ஆகையால் அட்டைப்படம் வெளியிட முடியவில்லை! மன்னிக்கவும்!

ஆங்கிலம்/ஹிந்தி இதழ்களை தரவிறக்க கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

ஆங்கில மூலம்:

இக்கதையை ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

உபயம்: http://bookscomics.blogspot.com/

நிறைகள்:

  • அற்புதமான கதையம்சம்! அருமையான ஓவியங்கள்! சூப்பர் சைஸ்! பளிச் வெள்ளைக் காகிதத்தில் தெளிவான இரு வண்ண அச்சு! சிறந்த மொழிபெயர்ப்பு! அசத்தல் அட்டைப்படம்! நிறைவான துணுக்குகள்! இன்ப அதிர்ச்சியாக இலவச இணைப்பு! ஆவல் தூண்டும் விளம்பரங்கள்! என அனைத்து வகையிலும் நம் ஆவல்களைப் பூர்த்தி செய்கிறது இந்த இதழ்!

குறைகள்:

  • முழு வண்ணத்தில் வராதது மட்டுமே!

நன்றிகள்:

  • ஆசிரியர் லீ ஃபாக் மற்றும் ஓவியர் சை பேரிக்கு! இந்த அற்புதக் கதையை உலகிற்கு வழங்கியதற்கு!
  • ஆசிரியர் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்களுக்கு – முத்து காமிக்ஸ்-ல் இக்கதைத் தொடரை அறிமுகம் செய்தமைக்கு!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

Splash

32 comments:

  1. from spider,
    SUPERB POST.LOTS AND LOTS OF INTERESTING TIDBITS.I HAVE THE TAMIL VERSION.I WILL SEND THE COVER SCAN TOMORROW.

    ReplyDelete
  2. 50 Not Out!

    கலக்கறீங்க டாக்டர். கூடிய விரைவில் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள். ஆனால் அதற்குள் விக்கெட் விழுந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது.

    எங்கள் ஊரில் விடுமுறை ஞாயிற்று கிழமை வந்தால் திங்கள் கிழமை விடுமுறை. :-)

    comparison with English scans are good :-)

    ReplyDelete
  3. //எங்கள் ஊரில் விடுமுறை ஞாயிற்று கிழமை வந்தால் திங்கள் கிழமை விடுமுறை.//

    வாழ்க உங்கள் ஊர்

    ReplyDelete
  4. அரைசதம் கடந்த அயராத தலைவருக்கு நன்றி.

    படிக்க, படிக்க திகட்டாத ஒரு பதிவு இது. ஓரிரு வார்த்தைகளில் சொல்வதாயின் சிம்ப்ளி சூப்பர்.


    கிங் விஸ்வா

    லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்

    ReplyDelete
  5. அன்புள்ள தலைவருக்கு, ஐய்யம்பாளயதார் எழுதுவது, ச்சே, அந்த பாழாப்போன விளம்பரம் பார்த்து பார்த்து அப்படியே வருகிறது.

    அன்பின் தலைவருக்கு, ஐம்பதாவது பதிவு அற்புதம். தூள். பிரம்மாதம். மீ தி அஞ்சாவது.

    ReplyDelete
  6. எப்பா, அது என்னங்க அது லீவு மேட்டர்? உழைப்பாளர் தினம் அன்றுகூட உழைக்கவில்லை என்றால் எப்படி?

    கடின உழைப்பாளி கிங் விஸ்வா

    லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்

    ReplyDelete
  7. //கடின உழைப்பாளி கிங் விஸ்வா//

    இந்த இரண்டு வாரங்களில் ஐந்து பதிவு போட்டு விட்டால் அவர் கடின உழைப்பாளி ஆகி விடுவாரா? இதில் ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி தெரிகிறதே?

    ReplyDelete
  8. ஹால்ப் அடித்த தலைவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அடுத்து மலர இருக்கும் பல பதிவுகளுக்கு முன்கூட்டிய அட்வான்ஸ் வாழ்த்துக்கள். சீக்கிரமே புல் அடிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வழக்கம் போல ராணி காமிக்ஸில் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் தலைப்பு வைத்து இருக்கிறார்கள்.

    அது என்னங்க அது வெள்ளை இளவரசி? ஏதோ நிறவெறி பிடித்த டைட்டில் போல அல்லவா இருக்கிறது? #டவுட்டு.

    ReplyDelete
  10. //இந்த இரண்டு வாரங்களில் ஐந்து பதிவு போட்டு விட்டால் அவர் கடின உழைப்பாளி ஆகி விடுவாரா? இதில் ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி தெரிகிறதே?//

    அது என்னங்க உள்குத்து, வெளிகுத்து என்று? தெளிவாக மூன்று மாதம் பதிவிடாமல் இருந்த தலைவர் என்று சொல்ல வேண்டியது தானே? #டவுட்டு.

    ReplyDelete
  11. //50 not out//

    50 நாட் அவுட் என்றாலும் அந்த 50 அடித்த விதமே தனி ஸ்டைல் தான்.

    சேவாக் மாதிரி ஒரு அப்பர்கட் அடித்து சிக்சர் அடித்தல்லவா ஐம்பதை தொட்டிருக்கிறார்?


    கடின உழைப்பாளி கிங் விஸ்வா

    லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்

    ReplyDelete
  12. //அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்! தல ரசிகர்களுக்கு தல பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!//

    அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

    அது என்ன தல ரசிகர்களுக்கு மட்டும் சிறப்பு வாழ்த்துக்கள். அப்படின்னா இளைய தளபதி பிறந்த நாளுக்கு சிறப்பு பதிவு போட்டு இதே மாதிரி வாழ்த்து சொல்வீங்களா?

    சொல்லணும், சொல்லணும்.

    சொல்லுவீங்க. சொல்லுவீங்க.

    சொல்ல வைப்போம். சொல்ல வைப்போம்.

    இந்த பதிவில் கமென்ட் போட்டு கொண்டிருப்பவர் உங்கள் இளைய தளபதி விஜய் ரசிகர்.

    ReplyDelete
  13. ஐம்பதிற்கு வாழ்த்துக்கள்.

    ஐம்பதிலும் ஆசை வரும் என்பார்களே? அப்போ இனிமேல தான் உங்களுக்கு ஆசை வருமோ? அதாவது அடிக்கடி பதிவுகள் போட ஆசை வருமா?

    ReplyDelete
  14. //கலக்கறீங்க டாக்டர். கூடிய விரைவில் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள். ஆனால் அதற்குள் விக்கெட் விழுந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது.//

    இதுக்கு என்ன அர்த்தம்? ஒன்னும் புரியலையே? கொஞ்சம் விளக்குங்க முத்து விசிறியாரே.


    இந்த பதிவில் கமென்ட் போட்டு கொண்டிருப்பவர் உங்கள் இளைய தளபதி விஜய் ரசிகர்.

    ReplyDelete
  15. ஒவ்வொரு படமும் சிறப்பாகவே இருக்கிறது. காணக்கிடைக்காத அறிய காட்சிகள் ஒருங்கே இங்குமட்டும்தான் இருக்கின்றது. வேதாளனை பற்றிய சிறப்பான பதிவிற்கு நன்றிகள்.

    ராணி காமிக்ஸில் இது மறுபடியும் முழு வண்ணத்தில் பதிபிக்கப்பட்டதாக நினைவு. சரிதானா?

    ReplyDelete
  16. கதை முடியும் அந்த கடைசி கட்டம் சிறப்பாக இருக்கின்றது.

    ரொமண்டிக் வேதாளர் அவர்களை இதயம் முரளியுடன் ஒப்பீடு செய்தது சிறப்பு. இது போன்ற தங்களின் தனிப்பட்ட கருத்துக்கள் பதிவுக்கு சிறப்பு சேர்கின்றன.

    இந்த பதிவில் கமென்ட் போட்டு கொண்டிருப்பவர் உங்கள் இளைய தளபதி விஜய் ரசிகர்.

    ReplyDelete
  17. ஐம்பதாவது தீவிரவாத தாக்குதலை நடத்திய தலைவருக்கு வாழ்த்துக்கள்... ஐம்பதாவது தாக்குதல் வீரியம் அதிகமாக உள்ளது. எவ்ளோ பெரிய போஸ்டு... ஸ்க்ரோல் பண்ணிகிட்டே இருக்க வேண்டியதிருக்கு

    விரைவில் சுட்டிப்பயல் ஹென்றியின் தாக்குதலை எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  18. டாக்டர் ஐயா!
    விவரமான பதிவு! வேதாளனின் இடத்தில் எம்.ஜி.ஆரை வைத்து பார்த்தேன். பொருத்தமோ பொருத்தம்! 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. மாயாவியின் ரசிகன் நான். அப்போது வாங்கிய புத்தகங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை.பத்திரமாக வைத்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. கபாலக் குகை கூட ரொம்ப நாள் மெருகு குலையாமல் வீட்டில் இருந்தது. மாயாவியின் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது "ஹேய்...கிழடுகள் துப்பாக்கி வைத்துக் கொண்டு விளையாடக் கூடாது!" ஜானி நீரோ-ஸ்டெல்லா கொஞ்சம் போர் என்று அப்போது தோன்றும்.

    ReplyDelete
  20. அரை சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள் தலைவரே. மேலும் தொடர்ந்து சளைக்காமல் ஆடி சதமடிக்க வாழ்த்துக்கள்.

    உங்க கிட்ட இருந்து இன்னும், இன்னும் பெட்டரா எதிர்ப்பார்க்கிறேன். நெறைய பதிவுகள் இட்டு எங்களை இதுபோலவே மகிழ்வியுங்கள்.

    ReplyDelete
  21. Congrats for the 50th post. i vividly remember yourself and viswa starting your blogs within a month's time and taking the tamil comics blogs to great height. you were inspiration to many bloggers.

    thanks a thousand times & urging you people to continue.

    ReplyDelete
  22. தலைவரே,

    இலவச இணைப்பு என்பதில் சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதை கண்டுபிடித்ததிர்க்கு எனக்கு என்ன பரிசு?

    அப்புறமா, (அரசியல் பேசுவதற்கு மன்னிக்கணும்) இலவசங்கள் என்பது இப்போதைய டிரென்ட் இல்லையோ? நாப்பது வருஷம் முன்னாடியே இந்த இலவச கல்ச்சர் இருந்திருக்கோ?

    ReplyDelete
  23. there are certain phantom stories which are so romantic that girls go weak on their knees on reading them. espeacially when a MAN like phantom is the romantic person.

    kindly read (you would have read, i believe) a story where the 22nd phantom names his daughter as heloise and tells the story behind the name. that was also a nice romantic story.

    ReplyDelete
  24. கதாசிரியர் பிறந்த நாள், ராணியின் திருமணம் என்று பல விடயங்களை ஒருங்கே இணைக்கும் உங்கள் பதிவுகள் மெஸ்மரிச அலைகள்.

    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. தலைவரே,

    //இந்தியாவில் இக்கதையின் பிற பதிப்புகள் இதோ! இன்னும் இக்கதை செய்தித்தாள்களிலும், பத்திரிக்கைகளிலும் தொடராக பதிப்பிக்கப் பட்டிருக்கலாம்! இப்போதைக்கு மேலும் தகவல்கள் ஏதும் இல்லை!//

    மாலை முரசில் இந்த கதைதானே வந்தது?

    ReplyDelete
  26. on seeing the scans you have provided (Page 37, 44) in the post, i come to the conclusion that the cover image was not inspired from the english covers you have provided next to the tamil muthu comics cover.

    infact, the cover was taken from the inner pages of the story where the phantom takes adieu from the queen and jumps into the water from the ship. hence there is no such inspiration for them.

    ReplyDelete
  27. நண்பரே!!
    மிக அற்ப்புதமான? பதிவை இட்டு அசத்தி விட்டீர்கள் !!திரும்ப திரும்ப எத்தனை தடவை, படித்தாலும் சலிப்பை தராத??, மீண்டும் மீண்டும்! படிக்க தூண்டும் பதிவுக்கு மிக்க நன்றி.. பதிவில் பயன்படுத்தி உள்ள சித்திரங்கள் மிக அருமை.

    தங்களோடு தொலை பேசியில் பேசியபோது, பதிவு ஏதும் , இப்போதைக்கு இல்லை என்பது போலலவா!! சொன்னீர்கள்........அ கொ. தீ. க வின் செயல்பாடுகள் எல்லாமே மிக ரகசியமானது தானோ? அல்லது மர்ம மானதா?

    வேதாளர் மற்றும் மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் ஆகிய கதா பாத்திரங்களை உருவாக்கிய அமரர் லீ ஃபாக்கிற்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது 100வது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக

    அ.கொ.தீ.க. வலைப்பூவின் 50வது பதிவை, ரசிகர்கள் கொண்டாடும் விதமாக

    எங்கோ கண் காணாத தேசத்தில் நடந்த "இந்த ராஜ வைபவத்தை" சிறப்பிக்கும் விதமாக

    உழைப்பாளர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக

    அழகிய பதிவை இட்டு எங்களை இன்ப கடலில் நீந்த வைத்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரவித்துக்கொள்கிறேன்

    முகமூடி வேதாளன் கதையின் விளம்ப்பரம் அன்றைய நாட்களில், கோகுலத்தில் மட்டுமல்ல 'கல்கண்டுவிலும் வெளியிடப்பட்டது, அந்த விளம்பரம் இன்றும் என்னிடம் உள்ளது. அடுத்ததாக கீழே இடப்பட்டுள்ள விளம்பரமான மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்கின் "பேய் நகரம்" முழு புத்தகமாக வரவில்லை, மாறாக ஒவொரு கமிக்ஸிலும் சிறிய அளவு தொடராக வெளி வந்தது
    அன்புடன்
    ஹாஜா இஸ்மாயில்

    ReplyDelete
  28. தலைவர் அவர்களே வாழ்த்துக்கள், இதைப் போன்ற மேலும் பல அரிய பொக்கிஷப் பதிவுகளை வழங்கி எம்மை தொடர்ந்து மகிழ்வியுங்கள். வேதாளர் என்றால் என்ன அவரும் சிட்டுகளிற்கு அடிமைதான் :))

    ReplyDelete
  29. // மேலும் இன்று மே முதல் திங்கள்! உழைப்பாளர் தினம்! ஞாயிற்றுக் கிழமையில் வந்திருக்கும் மேலும் ஒரு அரசு விடுமுறை! மே தினமும் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருப்பது கொடுமை! //

    ஆனால் தாங்கள் அன்றும் அயராது உழைத்து ஒரு சூப்பர் 50வது பதிவு போட்டு கலக்கி விட்டீர்கள்

    தங்களை வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறோம்

    தொடருங்கள் உங்கள் சேவைகளை :))
    .

    ReplyDelete
  30. http://blogintamil.blogspot.com/

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிடுள்ளேன். கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.

    ReplyDelete
  31. அடேயப்பா! என்ன அற்புதமான பொக்கிஷங்களை வைத்திருக்கிறீர்கள்! நானும் 70 களில் இந்திரஜால், லயன், முத்து காமிக்ஸ் படித்திருக்கிறேன். வேதாளர், அவரது ஆழநடுக்காடு (டீப் வுட்ஸ்) ஆகியவை மனதைக் கொள்ளை கொள்ளும்! அந்தப் புத்தகங்களை எடைக்குப்போடவோ, வெளியில் எறியவோ இல்லைதான், என்றாலும் கால ஓட்டத்தில் காணாமலே போய்விட்டன. 'மூன்று தூண் மர்மம்' இருந்தால் வெளியிடுங்கள். மேலும் அமர் சித்ர கதைகளின் மிக அரிய முதல் 10 வெளியீடுகள் அத்தனையும் ஒரு காலத்தில் எங்களிடம் இருந்தன. இன்று இல்லை...மறுபதிப்பும் அவற்றுக்கு இல்லை.

    சரவணன்

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!