வணக்கம்,
பதிவின் தலைப்பைப் பார்த்து விட்டு யாரும் இது 300 பருத்திவீரர்கள்-க்கு முன்னாடி வந்த திரைப்பட விமர்சனமோ என எண்ண வேண்டாம்!
நேற்று நிகழ்ந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்!
இச்சாதனையை பாராட்டும் விதமாக நமது காமிக்ஸ்களின் இருநூறாவது இதழ்கள் சிலவற்றின் அட்டைப் படங்கள் இதோ உங்கள் மேலான பார்வைக்கு!
முத்து காமிக்ஸ்:
ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு வெளிவந்த மிக மொக்கையான சிறப்பிதழ் இதுதான் என்பது எனது கருத்து! இது குறித்து விரைவில் ஒரு பதிவிடுகிறேன்! அதில் நெடுநாட்களாக என்/நம் மனதில் உள்ள விரக்திகளை வெளிக்கொணர முயற்சிக்கிறேன்!
கொரில்லா சாம்ராஜ்யம் குறித்து மேல்விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளை பயன்படுத்தவும்!
லயன் காமிக்ஸ்:
லயன் காமிக்ஸ் # 200 – கெளபாய் ஸ்பெஷல்! அட்டைப்படம் உங்கள் பார்வைக்கு! முத்து காமிக்ஸ் 200வது இதழை எந்த அளவுக்கு மொக்கையாக வழங்கியிருப்பாரோ அதற்கு நேர்மாறாக லயன் காமிக்ஸ் # 200 – கெளபாய் ஸ்பெஷல்!ஐ அசத்தியிருப்பார் ஆசிரியர்!
இந்த இதழ் குறித்த மேல்விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
- http://www.comicology.in/2007/08/lion-200-cowboy-special-july.html
- http://tamilcomicsulagam.blogspot.com/2009/06/one-man-show-special-issues-in-tamil.html
ராணி காமிக்ஸ்:
ராணி காமிக்ஸ் # 200 – விசித்திர குள்ளர்கள்! என்னிடம் இல்லையென்பதால் அதன் அட்டைப்படத்தை வெளியிட முடியவில்லை! ராணி ரசிகர்கள் மன்னிக்கவும்!
இந்திரஜால் காமிக்ஸ்:
தமிழில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ் # 200 என்னிடம் இல்லையென்பதால் அதன் அட்டைப்படத்தை வெளியிட முடியவில்லை! இந்திரஜால் ரசிகர்கள் மன்னிக்கவும்! ஆங்கில இந்திரஜால் காமிக்ஸ் # 200 அட்டைப்படம் உங்கள் பார்வைக்கு!
இந்த இதழை தரவிறக்கம் செய்து படித்து மகிழ கீழ்காணும் சுட்டியை பயன்படுத்தவும்!
பி.கு.:
இப்பதிவுக்கு உந்துதலாக விளங்கியோர் மூவர்! அவர்களுக்கு எனது நன்றிகள்!
- முதன்முதலாக தமிழ் காமிக்ஸ் வலையுலகில் இது போன்று மொக்கைப் பதிவொன்றை இட்டு மற்ற அனைவருக்கும் வழிகாட்டிய கிங் விஸ்வாவுக்கு முதற்கண் நன்றிகள்! அவர் எழுதிய பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
- அடுத்த படியாக தொடர்ந்து மூன்று தினங்களில் மூன்று மொக்கைப் பதிவுகளிட்ட ஒலக காமிக்ஸ் ரசிகர்-க்கு எனது நன்றிகள்! அவரது பதிவுகளைப் படிக்க கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
- இறுதியாக ஆனால் உறுதியாக நான் நன்றி கூற விரும்பும் நபர்தான் இந்தப் பதிவுக்கான ஐடியாவை வழங்கியவர்! அவர் வேறு யாருமல்ல நமது நெடுநாள் நண்பர் முத்து விசிறி தான்! அவர் இட்டுள்ள ஒரு மொக்கைப் பதிவை (அவரது வார்த்தைகளில்) படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!
தொடர்புடைய இடுகைகள்:
பிற சிறப்பிதழ்கள்:
- http://akotheeka.blogspot.com/search/label/தீபாவளி%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/பொங்கல்%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/கோடை%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/புத்தாண்டு%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/கிறிஸ்துமஸ்%20ஸ்பெஷல்
- http://akotheeka.blogspot.com/search/label/ஆண்டு%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/தமிழ்%20புத்தாண்டு%20மலர்
- http://akotheeka.blogspot.com/search/label/ஸ்பெஷல்
- http://tamilcomicsulagam.blogspot.com/2009/06/one-man-show-special-issues-in-tamil.html
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
me the first
ReplyDeleteதலைவரே,
ReplyDeleteடெண்டுல்கர் 200 போட்டதால் எங்களுக்கு ஒரு பதிவு அசத்தி விட்டீர்கள்.
லயன் காமிக்ஸ் 200 வது இதழ் ஒரு அசத்தலான இதழ். இதை நான் சிவகாசி லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் சென்று கைபற்றினேன்.
ReplyDeleteஅன்புடன்,
லக்கி லிமட்
புதிய டிவிட்டர் பின் தொடர் பட்டன்
ஜஸ்ட்டு மிஸ்ஸு,
ReplyDeleteமீ த செகண்டு.
ஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்
//லயன் காமிக்ஸ் 200 வது இதழ் ஒரு அசத்தலான இதழ். இதை நான் சிவகாசி லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் சென்று கைபற்றினேன்.//
ReplyDeleteநானும் தான்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
டாக்டர் ஐயா
ReplyDeleteஒரு ஊர்ல ஒரு பொம்பளை இருந்தாளாம். அவ ஒரு நாளைக்கு கடைக்கு போயி ஒரு புது சேலை வாங்கி வந்தாளாம். சேலையை தளைய தளைய கட்டிக்கிட்டு தெருவுல குறுக்கும் நெடுக்கும் நடந்தாளாம்.ஆனா ஒருத்தர் கூட புது சேலையையை பத்தி விசாரிக்களயாம். வெறுத்து போன அவ ஒவ்வொரு ஊட்டுக்கும் போயி "புது சேலை கட்டியிருக்கேன். தாகமாயிருக்கு தண்ணீ கொடுங்கன்ணு கேட்டு குடிச்சாளாம்"
மொக்கைப் பதிவுன்னு முடிவு செய்த பின்னர் காரணம் என்ன வேண்டி கிடக்கு காரணம்? தெண்டுல்கர் 200 முறை ஓடினாராம். இவர் சிறப்பு பதிவு போட கிளம்பிட்டாராம். (நானும் பதிவு போடலாம்... லாம்... லாம்... என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க நீங்கள் மட்டும் தொடர்ந்து பதிவு போட்டால் வெறுப்பா இருக்காதா என்ன?)
அய்யம்பாளையத்தாரே,
ReplyDeleteபழமொழியோடு இப்போது நீதிக் கதைகளும் சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா? பலே!
தலைவர்,
அ.கொ.தீ.க.
அதே ஆட்டத்தில் டோனி 68 எடுத்து அசத்தியிருக்கிறார். எனவே 68வது இதழ்கள் பற்றிய சிறப்புப் பதிவினை எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteHi. I love Your post. I love Sachin the Master.
ReplyDeleteHave a look @ here too.
Anjali Tendulkar Rare Photos
East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin.
ReplyDeleteCongrats to Sachin Dear Little Master.
Have a look at here too..
Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos
//முதன்முதலாக தமிழ் காமிக்ஸ் வலையுலகில் இது போன்று மொக்கைப் பதிவொன்றை இட்டு மற்ற அனைவருக்கும் வழிகாட்டிய கிங் விஸ்வாவுக்கு முதற்கண் நன்றிகள்! அவர் எழுதிய பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்! //
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது? மக்களே, இப்படித்தான் பலர் நம்ம பேரைக் கெடுக்கவே இருக்காங்க. அந்த மாதிரி எல்லாம் தொடர்ந்து நடந்த அதா பாத்துகிட்டு நான் சும்மா இருக்க மாட்டேன். மதம் மாறி கன்வர்ட் ஆயிடுவேன், ஆமாம்.
//இறுதியாக ஆனால் உறுதியாக நான் நன்றி கூற விரும்பும் நபர்தான் இந்தப் பதிவுக்கான ஐடியாவை வழங்கியவர்! அவர் வேறு யாருமல்ல நமது நெடுநாள் நண்பர் முத்து விசிறி தான்//
ReplyDeleteஇதனை பற்றி நம்முடைய அய்யம்பாளையம் வெங்கி சாரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது அவர் ஒரு யோசனை கூறினார். அதாவது அடுத்த மேட்ச்சில் டெண்டுல்கர் பதினாறு ரன் (அல்லது எவ்வளவோ - ஒரு பேச்சுக்கு பதினாறு என்று வைத்துக் கொள்வோம்) எடுத்தால், அப்போது ஒவ்வொரு காமிக்சிலும் பதினாறாவது இதழின் பதினாறாவது பக்கத்தை ஸ்கான் செய்து வெளியிடலாமே? என்பதுதான் அந்த யோசனை.
எப்படி?
காமிக்ஸ் நண்பர்களே,
ReplyDeleteவேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?
புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்
இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
முற்றிலும் புதுமையான யோசனை. பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல அட்டைப்படங்கள்.
இரண்டு அட்டைகளிலும் முத்து 200 என்று இருப்பதை கவனியுங்கள்.
ReplyDeleteof late, i have lost interest in cricket and this incident has surely brought back the good feelings towards the game again.
ReplyDeletewhen i wanted to watch the next game, bang. i was in for a shcok. sachin, sehwag and many people were not playing and india lost the game as well.so, it is back to sqaure one.
thanks for the nice scans though.
just loved venkatesh's comment on this post.
ReplyDeletethat is the best part of the post.
:)
nice post thank for sharing this.
ReplyDeleteICC T20 World Cup 2020 Schedule
ICC T20 World Cup 2020 Schedule PDF