Friday, January 15, 2010

கண்ணீர் தீவில் மாயாவி!

வணக்கம்,

தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள், தைத் திருநாள், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம், தைப் பொங்கல், காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல் என அனைத்து நன்னாட்களுக்கும் விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்!

இந்த நன்னாளில் பொங்கல் மலர் ஆக அறிவிக்கப்பட்ட இரும்புக்கை மாயாவி (வேறு யார்?) சாகஸமான முத்து காமிக்ஸ் # 181 – கண்ணீர்த் தீவில் மாயாவி! குறித்த ஒரு விரிவான அலசலைக் காண்போம்!

புத்தக விவரங்கள்:

தலைப்பு : கண்ணீர் தீவில் மாயாவி!
இதழ் : முத்து காமிக்ஸ் (மாத இதழ்)
வெளியீடு # : 181
தேதி : 15 ஜனவரி, 1990 - பொங்கல் மலர் (அறிவிக்கப்பட்டது)
முதல் பதிப்பு : 15 ஏப்ரல், 1990 (Actual Release Date)
பதிப்பாசிரியர் : M.செளந்திரபாண்டியன்
பொறுப்பாசிரியர் : S.விஜயன்
மறுபதிப்புகள் : இதுவரை இல்லை
நாயகன் : இரும்புக்கை மாயாவி
மூலம் : THE VULTURE (ஆங்கிலம்)
இதழ் : VALIANT (Weekly)
பதிப்பகம் : FLEETWAY (I.P.C.)
தேதி : 30-10-1965 முதல் 02-04-1966 வரை (23 வாரங்கள்)
கதை : TOM TULLY
ஓவியம் : JESUS BLASCO/TOM KERR
தமிழில் : S.விஜயன்
பக்கங்கள் : 160 (கருப்பு வெள்ளை)
சைஸ் : 9cmx13cm (பாக்கெட் சைஸ்)
விலை : ரூ:3/- (1990 முதல் பதிப்பின் போது)

Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Credits

விளம்பரம்:

இந்தக் கதைக்கான விளம்பரங்கள் முத்து காமிக்ஸ் # 166 – கொள்ளைக்காரப் பிசாசு! (மறுபதிப்பு) மார்ச் 1988 முதலே வரத் தொடங்கியிருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பொங்கல் மலர் ஆக முத்து காமிக்ஸ் # 180 – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!ல் அறிவிக்கப்பட்டது!

Muthu Comics # 167 - Kanneer Theevil Mayavi - AdMuthu Comics # 180 - Kanneer Theevil Mayavi - Ad 1Muthu Comics # 180 - Kanneer Theevil Mayavi - Ad 2

ஆயினும் முத்து காமிக்ஸ் # 180 – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! புத்தகமே தாமதமாக வந்ததினால் பொங்கல் மலர் ஆக வெளிவர வேண்டிய புத்தகம் மிகத் தாமதமாக ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு மலர் ஆகத்தான் வெளிவந்தது! அறிவிக்கப்பட்டிருந்த பொங்கல் வாழ்த்தும் வழங்கப் படவில்லை என்பது ஞாபகம்! தவறாக இருப்பின் சுட்டிக்காட்டவும்! 

கதைச்சுருக்கம்:

அதிபயங்கர ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கான திறந்த வெளிச் சிறையாக செயல் பட்டு வருகிறது கண்ணீர் தீவு! அதன் வார்டன் வல்ச்சர்-ம் அவனது உதவியாளன் மோர்ட்டோவும் கைதிகளுக்கு சிம்ம சொப்பனம்! இதற்கிடையில் அங்கிருந்து சில கைதிகள் தப்பியோடிவிட இண்டர்போல்-ன் உதவியை நாடுகிறான் வல்ச்சர்! அதே போல் அங்கு நடமாடும் சதுப்பு நில ஆவியும் கைதிகள் தப்பியோட துணை புரிவது புரியாத புதிராகவே உள்ளது!  மர்மத்தைத் துப்புதுலக்க வருகிறார் இரும்புக்கை மாயாவி!

கண்ணீர் தீவு – SIGHTS & SOUNDS:

கதைக்களமான கண்ணீர் தீவின் கண்கொள்ளாக் காட்சிகள்! தீவை நீங்கள் சுற்றிப் பார்க்கும் போது இந்தக் காட்சிகளைத் தவறாமல் கண்டு களிக்கவும்! கண்ணீர் தீவை சென்றடைய கடல் வழி பயணம் மட்டுமே சாத்தியம்! பழங்கால கப்பலில் பயணிகளே துடுப்பு வலித்து கண்ணீர் தீவை அடைவதே ஒரு ரம்மியமான அனுபவம்! உங்களை உற்சாகப் படுத்த சவுக்கடிகளும் உண்டு!

கப்பல் பயணம்! பயணிகள்!
கப்பல் பயணம்! பயணிகள்!

கண்ணீர் தீவில் தங்குவதற்கு சொகுசான சிறைகள் உண்டு! கூடுதல் வசதிகள் விரும்புவோருக்கு ஸ்பெஷலாக பாதாளச் சிறையும் உண்டு!

சிறைச்சாலை! பாதாளச் சிறை!
சிறைச்சாலை! பாதாளச் சிறை!

கண்ணீர் தீவில் மணியடித்தால் சோறு! பந்தியில் முந்துவோருக்கு லெக் பீஸ் கிடைக்கவும் வாய்ப்புள்ளது!

லெக் பீஸ்!
லெக் பீஸ்!

கண்ணீர் தீவில் பயங்கர வேட்டை நாய்களும், ஆட்கொல்லி ஜெல்லி மீன்களும், இன்னபிற கொடிய ஜந்துக்களும் ஏராளம் உண்டு! இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஒரு சொர்க்கம்!

வேட்டை நாய்! ஜெல்லி மீன்!
வேட்டை நாய்! ஜெல்லி மீன்!

கண்ணீர் தீவின் மேலும் சில சுற்றுலா தலங்கள்! உங்கள் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் கல்லுடைப்பது, கீல் வாருவது என பல உடற்பயிற்சிகள் உண்டு! சாகஸத்தில் ஆர்வமுள்ளோருக்கு சதுப்பு நிலத்தில் முங்கு நீச்சல் போடும் வாய்ப்பும் உள்ளது!

கண்ணீர் தீவு - நுழைவாயில்! சதுப்பு நிலத்தில் கைதிகள் அணிவகுப்பு!
கண்ணீர் தீவு – நுழைவாயில்! சதுப்பு நிலத்தில் கைதிகள் அணிவகுப்பு!
கலீயன் மயானம்! கீல் வாரும் மையம்!
கலீயன் மயானம்! கீல் வாரும் மையம்!
சுண்ணாம்பு கல் குவாரி! கழுகுப் பாறை!
சுண்ணாம்புக் கல் குவாரி! கழுகுப் பாறை!

இறுதியாக கண்ணீர் தீவின் STAR ATTRACTION! சதுப்பு நில ஆவி! காணத் தவறாதீர்கள்!

சதுப்பு நில ஆவி!
சதுப்பு நில ஆவி!

உங்கள் அனைத்து சுற்றுலாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரே இடம்  கண்ணீர் தீவு தான் என்பதில் ஐயமில்லை!

கண்ணீர் தீவு – முக்கிய பிரமுகர்கள்:

எந்த ஒரு சூப்பர் ஹீரோவின் கதைகளின் வெற்றி அவர் எதிர்த்து மோதும் வில்லன்களைப் பொறுத்தே அமைகிறது! இதில் வல்ச்சர்-ம், அவனது அடியாள் மோர்ட்டோவும் அவரவர் பணியை திறம்படச் செய்கின்றனர்! மாவீரன் மாண்டிஜூமா அளவிற்கில்லையெனினும் இவர்கள் வழக்கமான வில்லத்தனத்தில் சோடை போகவில்லை!

Vulture Morto கைதிகள்!
வல்ச்சர்! மோர்ட்டோ! கைதிகள்!

வாய்ப்புகள் சரியாக அமையாததால் இப்படங்களை வெகுமதி! போட்டிக்குப் பயன் படுத்த முடியாமல் போனது துரதிர்ஷ்டமே!

சுவாரசியமான சங்கதிகள்:

இரும்புக்கை மாயாவியின் TIME-LINEல் இக்கதை அவரது சக்திகளின் வளர்ச்சியில் இரண்டாம் கட்டத்தில் நடைபெறுவதால் அவருக்கு மிகவும் குறைவான சக்திகளை பிரயோகிக்கும் வாய்ப்புகளே கிடைக்கின்றன! அவை பின் வருமாறு!

  • மாயமாய் மறையும் தண்மை
  • மின்சாரம் பாய்ச்சும் சக்தி 
  • மின் காந்த சக்தி

இரும்புக்கை மாயாவியின் பரிணாம வளர்ச்சி குறித்து தீவிர ஆய்வுகள் செய்து வருகிறேன்! கூடிய விரைவில் அதிரடிப் பதிவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன்! அதுவரை கதையில் இரும்புக்கை மாயாவி புரியும் சில அதிரடி சாகஸங்களைக் கண்டு களியுங்கள்!

மாயாவி-1மாயாவி-2மாயாவி-3

கடைசி படம் கொள்ளைக்காரப் பிசாசு! கதையை லைட்டாக ஞாபகப் படுத்துகிறது, இல்லையா?

ஆங்கிலம்/தமிழ் – ஒரு பார்வை:

கதையின் ஆங்கிலப் பக்கங்கள் சிலவும் அவற்றின் தமிழாக்கப் பக்கங்களும் உங்கள் பார்வைக்கு! ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் மொழி பெயர்ப்புத் திறனுக்கு மேலும் ஒரு சான்று! இதில் இரும்புக்கை மாயாவி மின்காந்த சக்தியை பிரயோகிப்பதைக் காணலாம்!

Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 075Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 076Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 077Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 078Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 079Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 080Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 081Valiant [1966-01-08] - Steel Claw - The Vulture

இரும்புக்கரத்தில் இன்னமும் ஆயுதங்கள் ஏதும் பொருத்தப்படாததால் விளக்கை உடைக்க மாயாவி கல்லைப் பயன்படுத்துவதையும், பூட்டுகளைத் திறந்து மூட விசேட சாவி உபயோகிப்பதையும் கவனிக்கவும்!

அடுத்த வெளியீடு:

தொடரும் மாதங்களில் வரும் வெளியீடுகளுக்கான விளம்பரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!

Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Coming NextMuthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Coming Soon

வரவேற்பு:

இந்தக் கதையும் இரும்புக்கை மாயாவி கதைகளுக்குரிய பெருத்த வரவேற்பைப் பெற்றது என்பதைக் கூறவும் வேண்டுமா? அதற்கு சான்றாக அடுத்த வெளியீடான முத்து காமிக்ஸ் # 182 – துரோகியைத் தேடி! இதழில் வெளிவந்த வாசகர் கடிதங்கள் உங்கள் பார்வைக்கு! கடிதம் எழுதுவோரை ஊக்குவிக்க பிரசுரிக்கப்படும் கடிதங்களுக்குப் பரிசும் வழங்கப் பட்டது!

Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - HotlineMuthu Comics # 182 - HotlineMuthu Comics # 182 - Vasagar Kaditham

பதிவைப் படிக்கும் யாரேனும் எழுதிய கடிதங்கள் இதில் பிரசுரமாகியுள்ளனவா? பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன்!

நிறைகள்:

குறைகள்:

  • சட்டை பாக்கெட் சைஸ், தரமற்ற தாள், சுமாரான அச்சு, கண்ணை வருத்தும் சிறிய எழுத்துக்கள் என புத்தகத்தின் அமைப்பே ஒரு மிகப்பெரிய மைனஸ்!
  • பல நாட்கள் விளம்பரம் செய்யப்பட்டும் சரியான நேரத்திற்கு விற்பனைக்கு வராதது!

ஆனால் இரும்புக்கை மாயாவி என்றொரு சூப்பர் ஸ்டார் இருக்கையில் இவைகள் மிகப்பெரிய குறைகளாகத் தெரியவில்லை!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்! ஆங்கில மூலம் குறித்த தகல்வகளை வழக்கம் போல அளித்துதவிய நண்பர் முத்து விசிறி-க்கு மனமார்ந்த நன்றிகள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:

இரும்புக்கை மாயாவி:

பிற சிறப்பிதழ்கள்:

19 comments:

  1. மருத்துவர் ஐயா அவர்கட்கு,

    பொங்கல் நன்னாளில் சிறந்த ஒரு பதிவினை வழங்கியமைக்கு பாராட்டுக்கள். மாயாவியின் கதைகள் என்றுமே டாப் தான். நான் என்னுடய பதிவில் கூறவிறுப்பது போல பொங்கல் பண்டிகையில் காமிக்ஸ் படிக்கும் சுகமே அலாதி தான்.

    கண்நீர்தீவில் மாயாவி நீண்ட நாள் விளம்பரப்படுத்தப்பட்டு வந்த கதை என்பதால் எனக்கு மிகவும் நன்றாக நினைவிருக்கிறது. இது முத்து காமிக்ஸ் ரீசார்ஜ் செய்யப்பட்டு வந்த காலத்தில் வந்த புத்தகம். ஆம், இந்த காலத்தில் தான் நூற்றி ஐம்பது காசுகளுக்கு ஒரு காமிக்ஸ் விற்கப்பட்டது.

    அருமையான ஸ்கான்'களுக்கு நன்றி.

    வாசகர்கள் அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்.

    பை தி வே, மீ த பர்ஸ்ட்டு.

    ReplyDelete
  2. மருத்துவரே,

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். (எப்படி, நான் முந்திக் கொண்டு விட்டேன்ல?)

    வழமையான உங்கள் நடையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க சர்காஸ்டிக் நடையில் எழுதி என்னை வீட்டுக்கு அனுப்பி விடுவீர்கள் போல இருக்கிறதே?

    ஏதேது, விட்டால் அனைவருமே ஒலக காமிக்ஸ் ரசிகனை போல ஆரம்பித்து விடுவீர்கள் போல இருக்கிறதே? உங்களை எல்லாம் அடக்க அந்த "எரிந்த மனிதன்" தான் வரவேண்டும் போல இருக்கிறதே?

    தொடருங்கள் இதே பாணியில், அப்போது தான் எனக்கும் ஒரு போட்டி இருக்கும்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  3. தலைவரே,

    கதையை முதன் முதலில் நான் படிக்கும்போதே மாயாவி என் மயக்க வாயுவை உபயோகப்படுத்தவில்லை? மின்சாரத்தை பாய்ச்சவில்லை என்றெல்லாம் யோசித்ததுண்டு. பின்னர் தான் இந்த டைம்லைன் மேட்டர் தெரியவந்தது. அந்த முழுநீள பதிவை விரைவில் இட வேண்டுகிறேன்.

    படங்கள் அருமை. இப்போதெல்லாம் நீங்கள் நிறைய படங்களை பதிவில் உபயோகப் படுத்த ஆரம்பித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  4. தலைவரே,

    இந்த கதையில் முக்கியமான விஷயம் என்னவெனில் கைதிகளும் கூட ஒரு கட்டத்தில் மாயாவிக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். காரணம், மாயாவி தன்னுடைய உயிரை பணயம் வைத்து ஜெயில் வார்டன் வல்ச்ச்சரின் உயிரை காப்பாற்றியது தான். அந்த கட்டமும், மாயாவி சதுப்பு நிலத்தில் தப்புவதும் எனக்கு பிடித்த கட்டங்களாகும். கிளைமாக்சில் அந்த ராட்சச ஜெல்லி மீனுடன் மாயாவி மோதுவது மயிகூச்செரிய வைக்கும் ஒரு கட்டம்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  5. யோவ் ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    //மாயாவி தன்னுடைய உயிரை பணயம் வைத்து ஜெயில் வார்டன் வல்ச்ச்சரின் உயிரை காப்பாற்றியது தான். அந்த கட்டமும், மாயாவி சதுப்பு நிலத்தில் தப்புவதும் எனக்கு பிடித்த கட்டங்களாகும். கிளைமாக்சில் அந்த ராட்சச ஜெல்லி மீனுடன் மாயாவி மோதுவது மயிகூச்செரிய வைக்கும் ஒரு கட்டம்//

    இப்படி எல்லா சீன்களை பற்றியும் கூறவேண்டி இருந்தால் மொத்த கதையையுமே வெளியிடவேண்டி இருக்கும். அதனால் விமர்சனத்தில் கொஞ்சமே படங்களை போடவேண்டி இருக்கும் மொத்தமும் பார்க்க ஆசைப்பட்டால் கதையை படிக்கவும், விமர்சனத்தை அல்ல.

    இது ஒரு தொடர்கதை என்பதால் வாராவாரம் ஏதாவது ஒரு திருப்பத்தை கொணரவேண்டி இருக்கும். அதனால் பல செட்-பீஸ் ஆக்க்ஷன் சீன்கள் இருக்கும்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  6. அருமையான பதிவு. உங்களின் அயராத உழைப்பும், அதனை, பதிவு படுத்திய விதமும் அருமை. ஒவ்வொரு கேரக்டருக்கும் படம் போட்டு. சூப்பர். இந்த கதை படித்ததில்லை. படித்த நிறைவைத் தருகிறது.

    கிளாஸிக் காமிக்ஸில் இக்கதை வரும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. தலைவர் அவர்கட்கு,

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். பதிவு முழுக்க செம கிண்டலில் அருமையாக வந்திருக்கிறது. இக்கதையை நான் படித்ததில்லை ஆனால் உங்கள் பதிவு அற்புதமான ஒரு ட்ரெயிலர் போல் அமைந்து மனதை மகிழ்வூட்டியது.லெக்பீஸ் செம கடி. கண்ணீர் தீவு என்பது கூட அருமையான தலைப்பே. அற்புதமான ஸ்கேன்களை தந்ததிற்கு நன்றி தலைவரே.

    ReplyDelete
  8. தலைவரே உங்கள் பிறந்ததினம் இன்றல்லவே!! இருப்பினும் என் வாழ்த்துக்களை அட்வான்சாக ஏற்றுக் கொள்ளவும். உங்களை சங்கடப்படுத்தியதற்காக என் மன்னிப்புக்களை கோருகிறேன். பிழை பொறுத்தருள்க.

    ReplyDelete
  9. அருமையான நினைவு கூர்தல் தலைவரே.

    மாயாவியின் முழு பதிவை விரைவில் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

    ஆமாம், சிக் பில் மற்றும் ரிபோர்டர் ஜானி பற்றிய பதிவு எப்போது?


    காமிக்ஸ் காதலன்
    பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்

    ReplyDelete
  10. தலைவரிடம் இயற்கையாகவே இருக்கும் நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டது மகிழ்ச்சி.


    காமிக்ஸ் காதலன்
    பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்

    ReplyDelete
  11. தமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    காமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு
    தமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.

    ReplyDelete
  12. thanks for the wonderful post on steel claw.

    i remember reading this story while going on a train. nice memories of this. my uncle bought this book and gave it to me in train and i was so happy to pass out time by reading the book.

    some years ago, i found that i missed this book from my collection and trying to buy this book. this is somehow became my personal favourite story.

    this is the 1st steel claw story that i bought as a new book and read.

    thanks to you.

    ReplyDelete
  13. Also a special thanks to the muthufan who seems to be having all the books that we talk.

    thanks you sir.

    ReplyDelete
  14. now only i remember that i wrote a letter after reading that we will get prize money for writing letter.

    i gave the letter to my uncle to post and after 2 months, i saw the same letter in my uncle's suitcase.

    what luck......................

    ReplyDelete
  15. அட்டைப்படத்தை போட்டு அசத்தி விட்டீர்கள். கதையின் விவரிப்பு அருமையாக உள்ளது. இக்கதையை நானும் படித்தது இல்லை. ஒரு அருமையான Trailor காட்டி விட்டீர்கள்.

    // இரும்புக்கை மாயாவியின் பரிணாம வளர்ச்சி குறித்து தீவிர ஆய்வுகள் செய்து வருகிறேன்! ///

    விரைவில் ஆய்வு முடிவுகளை அளியுங்கள் தலைவா...

    அன்புடன்,
    லக்கி லிமட்
    காமிக்ஸ் உலவல் - கிமுவில் சோமு

    ReplyDelete
  16. excellent article on the great character steel claw.

    ReplyDelete
  17. my first steel claw book.

    i used to sign as mayavi in my school days.

    thanks for the post.

    ReplyDelete
  18. the images are lovely and add a special value to the post. great work.

    thanks to muthufan.

    ReplyDelete
  19. I'VE WRITTEN A POST ON V FOR VENDETTA MY FRIEND.DO COME AND SEE THE POST.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!