அன்டோனியோ காடி – தி க்ரைட்டீரியான் கலெக்ஷன் – டிவிடி அட்டைப்படம் |
வணக்கம்,
வலைப்பூவை வந்து பார்த்து வாழ்த்தியோருக்கு நன்றி! "வெகுமதி!" கேள்விக்கு இந்த முறை நண்பர் செழியன் முந்திக்கொண்டு பதிலளித்துள்ளார். வாழ்த்துக்கள்! பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.
ஒலக சினிமா பற்றி எழுதுவதாக அடிக்கடி பயமுறுத்திக் கொண்டிருந்தேன் அல்லவா? இதோ அதில் முதல் பதிவு.
சமீபத்தில் முத்து காமிக்ஸில் வெளிவந்த 'பொன்னில் ஒரு பிணம்' கதையில் குறிப்பிடப் பட்டுள்ளக் கட்டுமானக் கலைஞராகிய 'அன்டோனியோ காடி' பற்றி வந்திருந்த ஒரு ஆவணப் படத்தை ரொம்ப நாளாக கேள்விப் பட்டிருந்தேன். ‘எண்மிய பல்திற வட்டு’ம் (அட டிவிடிங்க) கிடைத்தது.ஆனால் ஆர்வமின்மை காரணமாகப் பார்க்காமலே விட்டுவிட்டேன். ஆனால் நமது காமிக்ஸில் படித்தவுடன் அவரைப் பற்றி ஆர்வம் மேலிட டிவிடியை தூசு தட்டி எடுத்துப் பார்த்தேன்.
வழக்கமான ஆவணப் படங்கள் என்றால் யாரோ ஒருவர் பின்புலத்தில் நாம் காணும் காட்சிகளை விளக்கிக் கொண்டே வருவார். பல சமயங்களில் அவரே அவ்வப்போது திரையில் தோன்றி அவர் சாப்பிடுவது, தூங்குவது, பல் துலக்குவது என்று எல்லாவற்றையும் காண்பிப்பார். ஆனால் கிட்டத்தட்ட ஒன்றேகால் மணிநேரம் ஓடும் இந்தப் படத்தில் நாம் கேட்கும் வசனங்கள் நான்கோ ஐந்தோ நிமிடங்கள் தான் தேறும்.
முத்து#310 - பொன்னில் ஒரு பிணம் - முன்னட்டைப்படம் |
அதுவும் கடைசி கடைசியில் நமக்கு முத்துவின் மூலம் பரிச்சயமான 'சாக்ரடா ஃபெமிலியா' (புனித குடும்பம்) தேவாலயத்தைப் பற்றி நாம் காணும் போது அதை கட்டி முடிக்கும் முன் காடி எப்படி ட்ராம் விபத்தில் 1926-ல் இறந்தார் என்றும், அவர் உருவாக்கிய மாதிரிகள் அனைத்தும் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரின் போது (1938) அழிக்கப் பட்டது என்றும் அதனால் இப்போது மிகவும் சிரமப்பட்டு மற்ற நிபுணர்களால் கட்டிமுடிக்க எடுக்கப்படும் முயற்சிகள் பற்றியும் சுருக்கமாக பத்து வரிகளில் கூறப்படுகிறது. அவ்வளவுதான்.
மீதி ஒரு மணி நேரத்தில் நாம் காண்பதனைத்தும் பிரமிக்க வைக்கும் காடியின் கலைப் படைப்புகளே. 'டோரு டகேமிட்சு'வின் லயிப்பூட்டும் பின்னணி இசையுடன் காடி உருவாக்கிய ஒவ்வொரு கலைப் படைப்பையும் இயக்குனரின் கேமரா வழியாக நாம் காணும் போது நம்மையும் அறியாமல் நாம் வேறொரு இடத்திற்கு சென்று விடுகிறோம். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வார்த்தைகளை விட காட்சிகளே அதிமாகப் பேசும் மிக அரிய படைப்புகளில் ஒன்று இது.
காடி ஒரு தீவிர கத்தோலிக்கர். அதனால் அவரது படைப்புகள் பெரும்பாலும் தேவாலயங்களாகவே இருக்கும். தேவாலயங்கள் என்றதும் உடனே நமது நினைவுக்கு வருவது நேர்கோட்டு வடிவங்களாலான கட்டிடங்களே ஆகும். ஆனால் காடியின் உந்து சக்தியோ இயற்கையாக அமைந்தது.
இயற்கையின் பாதிப்பில் உருவான இவரது கட்டிடங்களில் காணப்படும் தூண்கள் வழக்கமான தூண்களைப் போல் அல்லாமல் மரங்களைப்போல் கிளைவிட்டும், வேரூன்றியும் காணப்படும்.
அன்டோனியோ காடி |
இவரது வடிவங்கள் பெரும்பாலும் வளைவு, நெளிவு, சுளிவுகளுடன் இருக்கும். இயற்கையின் வடிவங்கள் பலவற்றையும் பல்வேறு முறைகளில் தனது ஆக்கங்களில் இவர் பயன்படுத்தியிருப்பார்.
இயற்கை வழிபாட்டிற்கு எதிரான கிறிஸ்துவர்கள் இவரது படைப்புகளைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இப்போது அவரது மறைவுக்குப் பிறகு அவரை புனிதராக்கும் முயற்சிகள் கூட நடைபெற்று வருகின்றன.
இவரது படைப்புகளை விவரிக்கும் அளவுக்கு எனக்கு கட்டிடக்கலையோ, தமிழோ தெரியாது என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். காண மட்டுமே கண்கள் கோடி வேண்டும் போலிருக்கிறது. நேரில் காணும் பாக்கியமாவது இந்தப் பிறவியிலேயே நமக்கு அமைய வேண்டுமென கலைக்கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
படத்தின் இயக்குனரான 'ஹிரோஷி டேஷிகாஹாரா' சிறு வயதில் தனது தந்தையுடன் பார்சிலோனாவிற்கு சென்ற போது அவர் காடியின் கலைப் படைப்புகளைக் கண்டு பிரமித்து அதை ஒரு படமாக பதிவு செய்தார்.
அவரது தந்தை ஜப்பானின் புகழ்பெற்ற பூவலங்காரக் கலையான 'இகிபானா'வில் தேர்ந்தவர். அவர் அக்கலையில் புதிதாக ஒரு பாணியை உருவாக்கி அந்த குழுமத்தின் தனிமுதற் தலைவராக விளங்கினர்.
ஹிரோஷி டேஷிகாஹாரா |
இயற்கையை உந்துதாலாகக் கொண்ட காடியின் படைப்புகள் இயற்கைக் கலை புரியும் ஒரு ஏகலைவருக்கு துரோணராக விளங்கியதில் வியப்பில்லை.
பின்னாளில் சர்வதேசப் புகழ்பெற்ற பரீட்சார்த்தப் புதுமைப் படைப்பாளியாக விளங்கிய இயக்குனர் டேஷிகாஹாரா தான் சிறுவயதில் தற்குறியாக எடுத்த காடி படத்தை மறக்காமல் இந்தப் படத்தை இயக்கினார்.
தானே ஒரு தலைசிறந்த படைப்பாளியாக இருப்பினும் அந்த மமதை துளியும் தலைதூக்காவண்ணம் காடியின் காலத்தால் அழியாத கலையை முன்னிலைப்படுத்தி படமெடுத்திருப்பது பிரமிக்க வைக்கிறது.
இரண்டு தலைசிறந்த கலைஞர்கள் இணைந்தால் என்னாகும்? அமர்க்களம்தான்!
சாக்ரடா ஃபெமிலியா |
இந்தப் படத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாது பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள். இந்தப் பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி! இது போன்ற பதிவுகளை மேலும் தொடரலாமா என கருத்துரையிடுங்களேன்?
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்.
பி.கு.:
- அய்யம்பளையத்தார் பின்னிப்பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது வலைப்பூவின் வடிவமைப்பு நாளுக்குநாள் மெருகேறிக்கொண்டேயிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்வந்த அம்புலிமாமா இதழை அவர் நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். படிக்க இங்கே 'க்ளிக்'கவும்.
- இதுவரை 'ஹைக்கூ' எழுதுகிறேன் பேர்வழி என்று நம்மையெல்லாம் இம்சித்துக்கொண்டிருந்த 'பங்கு வேட்டையர்' இப்போது 'கௌபாய்' கதை வேறு எழுதுகிறார். அதில் எல்லோரது டவுசரையும் அவிழ்த்து விடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார். உஷார்! மக்களே, உஷார்! பாகம்-1, பாகம்-2.
- நமக்குப் போட்டியாக 'க.கொ.க.கூ.' மற்றும் 'முதலை பட்டாளம்' என இரு சக தீவிரவாதிகள் வலைப்பூக்களை ஆரம்பித்துள்ளனர். இதில் 'முதலை பட்டாளம்' வைத்திருக்கும் ‘ப்ருனோ பிரேசில்’ ஒரு கவுண்டர்-டெர்ரரிஸ்ட் என கூறிக்கொள்கிறார்! வரவேற்கிறோம்! அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! சும்மா ஒரு பதிவோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து காமிக்ஸ் பற்றி எழுதுங்கள். காமிக்ஸ் பற்றி உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். காமிக்ஸ் என்பது ஒரு கடல். அதில் எல்லோரும் சேர்ந்தே முத்தெடுக்கலாமே?
தொடர்புடைய இடுகைகள்:
- http://tamilcomicsulagam.blogspot.com/2008/10/review-n3-muthu-comics-310-ponnil-oru.html
- http://comicology.blogspot.com/2008/10/muthu-310-martin-mystery-oct.html
- http://sharehunter.wordpress.com/2008/10/31/பொன்னில்-ஒரு-பிணம்-முத்த/
படவிவரங்கள்:
வருடம் | : | 1984 |
ஓடும் நேரம் | : | 72 நிமிடங்கள் |
மொழி | : | ஜப்பானிய மொழி |
சப்-டைட்டில் | : | ஆங்கிலம் |
இயக்கம் | : | ஹிரோஷி டேஷிகாஹாரா |
இசை | : | டோரு டகேமிட்சு குரோடோ மௌரி ஷின்ஜி ஹோரி |
ஒளிப்பதிவு | : | யோஷிகாசு யானாகிடா ரியு ஸெகாவா |
எடிட்டிங் | : | ஹிரோஷி டேஷிகாஹாரா எய்கோ யோஷிடா |
தயாரிப்பு | : | ஹிரோஷி டேஷிகாஹாரா நோரிகோ நொமூரா |
வெளியீடு | : | தி க்ரைட்டீரியான் கலெக்ஷன் |
கண்கொள்ளாக் காட்சிகள்:
ட்ரைலர்:
டாக்டரே,
ReplyDeleteஇம்முறையாவது நான்தான் முதலில் பின்னூட்டம் இட வேண்டும் என்று கங்கணம் (கங்கனா ருனுட் அல்ல) கட்டிக் கொண்டு இருந்தேன்.
பிடியுங்கள்: மீ த பாஸ்ட்டு.
மிகவும் சிறப்பான ஒரு இடுகை. அதுவும் முத்து காமிச்சி படித்து முடித்து பார்த்தல் இந்த படத்தை பற்றி எழுதி உள்ளீர்கள்.
எண்மிய பல்திற வட்டு = இது கிடைத்தால் எனக்கும் sollungalen.
பல சமயங்களில் அவரே அவ்வப்போது திரையில் தோன்றி அவர் சாப்பிடுவது, தூங்குவது, பல் துலக்குவது என்று எல்லாவற்றையும் காண்பிப்பா = மிகவும் சரி.
இயற்கை வழிபாட்டிற்கு எதிரான கிறிஸ்துவர்கள் இவரது படைப்புகளைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இப்போது அவரது மறைவுக்குப் பிறகு அவரை புனிதராக்கும் முயற்சிகள் கூட நடைபெற்று வருகின்றன = அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
படத்தின் இயக்குனரான 'ஹிரோஷி டேஷிகாஹாரா' = இவரை கூர்ந்து பார்த்தல் இந்திய கிரிக்கெட் வீரரான சேவாக்'ஐ போல உள்ளார்.
பின்னாளில் சர்வதேசப் புகழ்பெற்ற பரீட்சார்த்தப் புதுமைப் படைப்பாளியாக = என்னங்க சர் இது? நீங்களும் பின் நவீனம், முன் நவீனம், என்று எல்லாம் ஆரம்பிசுடீங்கலே?
இது போன்ற பதிவுகளை மேலும் தொடரலாமா என கருத்துரையிடுங்களேன்? = தொடருங்கள் அய்யா.ப்ளீஸ், உங்களுக்கு புண்ணியமாக போகும்.
மிக நன்றாக உள்ளது.
ReplyDeleteஇந்த ஆவன படம் ஆங்கிலத்தில் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் கூற வில்லையே? இல்லையெனில் இதர்க்கு மொழிமாற்று விளக்க உரை உள்ளதா என்றும் கூறவும்.
தொடர்ந்து செய்யுங்கள் சினிமா விமர்சனகளை.
மொழிமாற்று விளக்க உரை = Sub Title
ReplyDeleteஏனென்றால், ஒரு முறை பெங்காலி படத்தை நண்பரின் தொந்தவிர்க்க்க பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை.
அதான்.
அன்பிற்குரிய திரு.அம்மா ஆசை விசிறி அவர்களே,
ReplyDeleteஎன்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?
இது ஒரு ஜப்பானிய மொழிப்படம் என்றாலும் படத்தின் கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே ‘வாய்ஸ்-ஓவர்’ல் இயக்குனர் பேசுவார். அதற்கு ஆங்கிலத்தில் சப்-டைட்டிலும் உண்டு.
தவறுக்கு மன்னிக்கவும். உடனே சரி செய்து விடுகிறேன். மேலும் விவரங்களுக்கு இங்கே ‘க்ளிக்’கவும்.
தலைவர்,
அ.கொ.தீ.க.
இதைத்தான் , ஏன் இதைவிட இன்னும் சிறப்பான பெறுமதியான பதிவுகளை தான் நான் வரவேற்கிறேன்.
ReplyDeleteசாக்ரடா பெமிலியாவின் முற்பக்கபடம் நல்ல அழகு. அ.கொ.தீ.க என்றொரு அமைப்புண்டு அதற்கென தனி ரசனையுண்டு என நீருபிக்க வந்துள்ள பதிவு. பிடியுங்கள் பராட்டுக்களை.
உற்சாகாத்துடன் தொடருங்கள்.
என்ன கேள்வி இது டாக்டர் , இது போல் உருப்படியான பல இடுகைகளை தமிழ் கூறும் நல்லுலகின் சர்பில் உங்களிடம்மிருந்து வரவேற்கிறேன் . தொடரட்டும் உங்கள் கலை சேவை .கிளம்பட்டும் படை .டாக்டர் இருக்க பயமேன் .அயில்மேன்ட் கொடுப்பார்
ReplyDeleteஏற்கெனவே நான் போட்ட கமெண்ட் இன்னும் தென்படவில்லை. அதனால்தான் இன்னொன்று.
ReplyDeleteஒவ்வொரு வரிகளிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது. இது போன்ற இடுகைகள் காமிக்ஸ் வரலாற்றிற்கு முக்கியம். தொடர்ந்து எழுதுங்கள். புனித குடும்பத்தை பற்றி எழுதவே இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. நம் நாட்டிலும் இது போன்ற விஷயங்கள் நிறைய உள்ளன. எல்லாத்தியேயும் பூந்து புறப்படுங்கள்.
நம்ப கௌ பாய் காப்பியத்தில் அந்தோனியா காடியை இழுத்துகலாமா என தீவிர யோசனையில் இருக்கிறேன்.
Arumaiyaana superaana amsamaana website idhu. En kanippil, Satheesh dhaan akotheeka matrum kakokaku irandirkum kolgai parappu seyalaalar aavaar. Adhu pol chezhi and viswa irandum ore nabar. Eppadiyo, Ellaam arpudhamana tamil comics sevai purigireergal.
ReplyDeleteஅய்யா பெயரில்லா,
ReplyDeleteதயவு செய்து நீங்கள் இப்படி அவதுறு பரப்புவதை விட்டொழியுங்கள். நானே மற்றுமொரு காமிக்ஸ் ப்ளாக் ஆரம்பிக்கும் எண்ணத்தில் உள்ளேன். தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து பாருங்கள் அபோது தெரியும் உங்களுக்கு நான் யாரென்று. ஆகையால் நீங்கள் இப்படி ஒரு தவறான எண்ணம் இருந்தால் அதை விட்டு விட்டு உண்மையை மட்டும் பாருங்கள். என்னுடைய மெயில் ஐ டி இதுதான்:cheziyan.k@gmail.com
உங்களுக்கு வேண்டும் என்றால் மெயில் அனுப்புங்கள் நான் என்னுடைய கை பேசி என்னை அந்த மெயில்'இல் தருகிறேன். சந்தேகப் பேர்வழி.
காமிக்ஸ் கதைகள் வெறும் வறட்டு கற்பனைகளுடன் உருவாக்கப்படுவதில்லை; ஒவ்வொரு கதைக்கு பின்னாலும் செறிவான ஆராய்ச்சிகளும், வரலாற்றுப் பின்புலங்களும் உண்டு என்பதை நெற்றியில் அடித்தாற்போல் சொல்லுகிறது கட்டக்கலை நிபுணர் காடி பற்றிய உங்களது இடுகை.
ReplyDeleteஇவ்வளவு தகவல்களையும் திரட்ட உங்களது வார விடுமுறையை தியாகம் செய்துள்ளீர்கள். நிச்சயம் உங்களது உழைப்பு வீண் போகாது. காமிக்ஸ் வாசிப்பை கௌரவப்படுத்தும் இது போன்ற உங்களது இடுகைகளை வரவேற்கிறேன்.
காடி பற்றிய இடுகையில் சில பல இடங்களில் 'இலக்கிய' வாசனை வீசுகிறதே? கழகப்பணியை விட்டு விட்டு அங்கெல்லாம் போக வேண்டாம்... உங்க சேவை நாட்டுக்கு ரொம்பவும் தேவை..!
மருத்துவரே,
ReplyDeleteஉமக்கு காமிக்ஸ் டாக்டர் என பட்டம் கொடுத்ததில் தவறேதும் இல்லை என மறுபடியும் நிருபித்து உள்ளீர்கள். வித்தியாசமான இடுகைகளை வழங்குவதில் முன்னணியில் இருந்த உங்களுக்கு இப்போது அய்யம்பாளையம் லெச்சுமணன் வெங்கடேஷ்வரன் அவர்கள் கடும் போட்டியாளராக இருப்பார் என மக்கள் கருதுகின்றனர்.
ஆனால் காமிக்ஸ் உலகின் அடுத்த முதல்வரான நீங்கள் இதையே ஒரு காரணமாக கொண்டு மறுபடியும் உங்களை அடுத்த கட்ட நிலைக்கு தயார் படுத்தி கொள்வீர்கள் என நம்புகிறேன். அப்படி செய்தால் நீங்கள் காமிக்ஸ் உலகின் நிரந்தர முதல்வராக விளங்குவீர்கள் என்பது உறுதி.
கிங் விஸ்வா.
தலைவரே,
ReplyDeleteநீங்கள் கமெண்ட் மாடரெஷனை எடுத்தற்காக சென்னையில் அடுத்த வாரம் வெற்றி விழா ஒன்று கொண்டாட உள்ளோம். அதற்கு பெரிய அரசியல் தலைவர்களெல்லாம் பங்கேற்க உள்ளார்கள்.
நீங்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என கழகம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கழக பொருளாளர் விஷ்வா இது தொடர்பாக பிரபல நிறுவனங்களிடம் கோடிக் கணக்கில் வசூல் செய்துள்ளார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக கண்மணி
சிறந்த பட ஆய்வு. காடியின் படைப்புகளை பார்க்க கிடைக்கும் ஒரு நல்ல உபாயம். உடனே அந்த குறுந் தகடை தருவித்து பார்த்து விட எண்ணம் தோன்றுகிறது. ஆங்கில மொழி அடி கற்றைகளுடன் இருபது நலமே. முன்பு ஜப்பானீஸ் கற்க வகுப்றை சென்று பேந்த பேந்த முழித்தது மாதிரி ஆகி விடாது.
ReplyDeleteஆமாம், மற்ற இடுகைகள் பற்றிய பின்குரிப்புகளில் என்னடோய பதிவை பற்றி போடாது ஏன்?.... தமிழ் ஆர்வலர்கள் சேர்ந்து என்னை எதவாது கருப்பு லிஸ்ட் பண்ணி விட்டீர்களா என்ன.... :)
ரஃபிக் ராஜா
காமிக்கியல் - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"
தலைவரே,
ReplyDeleteஅடுத்த நாசவேலைக்கான அஸைன்மென்ட் பெற்றுக் கொள்ள தலைமையகத்திற்கு வந்து உங்களை சந்தித்து விட்டு வீடு திரும்பினால் என் வாட்சை காணோம்.
இதெல்லாம் பெரிய மனுஷனுக்கு அழகா? ராசியான வாட்சுங்க அது. என் வாட்சை ஒழுங்கா திருப்பி கொடுத்துருங்க.
அய்யா உங்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிய இடுகை ஒன்று எமது இயக்க வலை தளத்தில் இடப்பட்டு உள்ளது.
ReplyDeleteகண்டு களிக்கவும்.
Hiya,
ReplyDeleteNice post on the great artist gaudi. kudos to you for bringing this to the limelight.
this is the speciality of the stories of martin mystere. he brings many things to the table so that the ordinary comics reader has a chance to enhance his knowledge base through the passion / hobby he has (reading comics). for this alone, the editors of martin stories must be appreciated.
நல்லதொரு பதிவு..
ReplyDeleteநண்பரே
ReplyDeleteஇப்பதிவுக்கு கிங் விஸ்வா என் லூயி கான் பற்றிய பதிவில் சுட்டி கொடுத்திருந்தார்.மிக நல்ல பதிவு,நான் இதை வைரைவில் தரவிறக்கி பார்த்து விடுவேன்,நேரம் எடுத்து அபாரமான தகவல்கள் சேர்த்து எழுதப்பட்ட பதிவுக்கு நன்றி,காடி என மனம் கவர்ந்த ஆர்க்கிட்டெக்ட் ஆவார்.