Saturday, April 10, 2010

NO COMMENTS – 007 SPECIAL!

“ஜாபர்கான்பேட்டை ஜேம்ஸ்பாண்டு நாட் நாட் ஏழு!”
-செந்தில் (படம்: மந்திரப் புன்னகை)

வணக்கம்,

நீண்ட காலமாக நிலுவையிலுள்ள பதிவுகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடி இப்போது கணக்கு வைக்க முடியாத அளவுக்கு கை மீறி விட்டது! இந்த வலைப்பூ ஆரம்பிக்க பட்ட நோக்கம் (வலைப்பூவின் தலையங்கத்தை காணவும்) எங்கே நிறைவேறாமல் போய்விடுமோ என்றெண்ணும் அளவுக்கு இந்த பிரச்சனை பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது!

கடந்த பல மாதங்களாகவே பற்பல மொக்கை பதிவுகளை இடுவதில் நேரமும் உழைப்பையும் விரயம் செய்ததினால் நல்ல பதிவுகள் இட நேரம் கிடைக்கவில்லை! இந்த மொக்கை பதிவுகளுக்கு உந்துகோலாகவும், உறுதுணையாகவும் இருந்த கிங் விஸ்வா மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர் ஆகியோரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தே ஆக வேண்டும்!

இப்போது கோடை விடுமுறை வேறு ஆரம்பித்து விட்டதால் கோடை மலர் சிறப்புப் பதிவு வேறு இட வேண்டிய கட்டாயம் உள்ளது! எனது அடுத்த பதிவு கோடை சிறப்பு மலர் தான் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன்! அதை தயார் செய்யும் இடைவெளியில் இதோ ஒரு அதிரடி மினி பதிவு!

NO COMMENTS - 007 SPECIAL:

NO COMMENTS என்ற CONCEPT-ஐ தமிழ் காமிக்ஸ் வலையுலகத்திற்கு அறிமுகப் படுத்திய நண்பர் முத்து விசிறிக்கும் அதை செம்மை படுத்திய கிங் விஸ்வாவிற்கும் இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்! இம்முறை NO COMMENTS பகுதிக்கு நான் தேர்ந்தெடுத்திருப்பது 007 ஜேம்ஸ்பாண்ட்-ஐ மையமாக கொண்டு வந்த அட்டைப்படங்களை! பார்த்து மகிழுங்கள்!

முதலில் 007 ஜேம்ஸ்பாண்ட்-ன் திரைப்பட போஸ்டர்களைத் தழுவி வெளிவந்த அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!

The Living Daylights Muthu Comics # 167 - Muthu Special
A View To A Kill - Poster James Bond - Ad 2
Casino Royale Muthu Comics # 176 - Summer Special
A View To A Kill - Logo James Bond - Ad 1
Moonraker Thihil Comics # 38 - Vinveli Padaiyeduppu
a view to a kill goozee original artwork Muthu Comics # 169 - Thalai Vaangum Silai
The Living Daylights - Poster Muthu Comics # 220 - Pazhi Vaangum Pani
You Only Live Twice
Mini Lion Comics # 14 - Summer Special

மேலும் பல 007 ஜேம்ஸ்பாண்ட் திரைப்படப் போஸ்டர்களைக் காண கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்:

இனி உலகெங்கிலும் இருந்து வெளிவந்த 007 ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ் அட்டைப்படங்களைத் தழுவி வெளிவந்த அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!

James Bond - Permisiion To Die James Bond - Ad 3
James Bond 007 - Serpent's Tooth - Book 1 Muthu Comics # 240 - Puyal Padalam
James Bond 007 - Serpent's Tooth - Book 2 Muthu Comics # 262 - My Dear Mummy
1984_4 Muthu Comics # 249 - Visithira Villan
1984_6 Muthu Comics # 311 - Norungiya Naanal Marmam
1984_8 Lion Comics # 149 - Bermuda Padalam
1988_2 Mekala Comics # 2 - Nadukadalil
73287 Muthu Comics # 237 - Kallarayil Oru Kavinjan

மேலும் பல 007 ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் அட்டைப்படங்களைக் கண்டு களிக்க கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்:

இறுதியாக, இம்மூன்றில் எது ஒரிஜினல்? இது ஒரு மீள் NO COMMENTS!

3592831746_6e2b043cfbSA03 The Devil's Secret(Mali Kottai Marmam)Muthu Comics # 307 - Kaatril Karaintha Kathanayagan

பி.கு.:

 • இந்த பதிவு ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் கடலினும் ஆழ்ந்த காமிக்ஸ் ஆர்வத்திற்கு சமர்ப்பணம்! இந்த அட்டைப்படங்களை வெளியிடுவதன் நோக்கம் அவரது பரந்து விரிந்த காமிக்ஸ் ரசனையை போற்றும் நோக்கமே! அதிலும் குறிப்பாக 007 ஜேம்ஸ்பாண்ட்-ன் தீவிர விசிறி அவர் என்பதை சொல்லவும் வேண்டுமா? ஆகையால் தயவு செய்து யாரும் அவர் காப்பியடிக்கிறார் என்று உண்மையை உணராமல் பிண்ணூட்டமிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்!

உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:

பிற NO COMMENTS பதிவுகள்:

பிற 007 ஜேம்ஸ் பாண்ட் பதிவுகள்:

அட்டைப்படங்கள் உபயம்:

19 comments:

 1. fantastic post. very interesting to see the bond covers at one place.

  ReplyDelete
 2. அற்புதமான பதிவு. நான் முதலில் படிக்க ஆரம்பித்த காமிக்ஸ் ஹீரோ ஜேம்ஸ் பாண்ட் தான் - அழகியை தேடியில் இருந்து கிட்ட தட்ட எல்லா காமிக்ஸ் புத்தகங்களையும் சேமித்துள்ளேன்.. நானும் இதுபோல ஒரு ஒப்பு நோக்கும் பார்வையுடன் அட்டை படங்களை வைத்துள்ளேன். உங்கள் அளவுக்கு ஆங்கில புத்தகங்கள் என்னிடம் இல்லை - நான் சில திரைப்பட போஸ்டர்களை மட்டுமே வைத்துள்ளேன். சில அட்டைபடங்கள் மிகவும் ஒரிஜினல் - அவை பல நினைவுகளை தூண்டும் அற்புதமான கண்ணாடி.

  ReplyDelete
 3. தலைவர் அவர்களே,

  மிகச் சிறப்பான அட்டைப்பட ஒப்பீட்டுப் பதிவு. ஒரே பதிவில் கண்ணிற்கு காணக்கிடைக்காத அழகு பொக்கிஷங்களை கண் குளிர பார்த்து ரசிப்பதற்கு வாய்பளித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. //இந்த மொக்கை பதிவுகளுக்கு உந்துகோலாகவும், உறுதுணையாகவும் இருந்த கிங் விஸ்வா மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர் ஆகியோரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தே ஆக வேண்டும்//

  இதனை வன்மையாக கண்டித்து பதிவில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்.

  ReplyDelete
 5. வழக்கமாக என்னுடைய கமெண்ட்டை மட்டுமே வெளியிட்டு வந்த நீங்கள் ஏன் இந்த முறை செந்தில் கமெண்ட்டை போட்டு இருக்கிறீர்கள்?


  //கடந்த பல மாதங்களாகவே பற்பல மொக்கை பதிவுகளை இடுவதில் நேரமும் உழைப்பையும் விரயம் செய்ததினால் நல்ல பதிவுகள் இட நேரம் கிடைக்கவில்லை! இந்த மொக்கை பதிவுகளுக்கு உந்துகோலாகவும், உறுதுணையாகவும் இருந்த கிங் விஸ்வா மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர் ஆகியோரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தே ஆக வேண்டும்//

  ஆமாம், இவரு கன்னிப்பொண்ணு, இவர கரும்பு தோட்டத்துக்குள்ள வச்சு நாங்க கற்பழிசுட்டோம்.

  ReplyDelete
 6. //இந்த மொக்கை பதிவுகளுக்கு உந்துகோலாகவும், உறுதுணையாகவும் இருந்த கிங் விஸ்வா மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர் ஆகியோரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தே ஆக வேண்டும்//

  எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா..................................

  ReplyDelete
 7. //இப்போது கோடை விடுமுறை வேறு ஆரம்பித்து விட்டதால் கோடை மலர் சிறப்புப் பதிவு வேறு இட வேண்டிய கட்டாயம் உள்ள//

  அப்படியா? உங்களை யாராவது கட்டயப்படுதினார்களா என்ன?

  "அந்த" குடும்பத்தின் அரசியல் அங்கும் வந்து விட்டதா? உங்களுக்கு அமைதியான பதிவுகள் பிடிக்குமா? அல்லது அதிரடி பதிவுகள் பிடிக்குமா?

  ReplyDelete
 8. தலைவர் அவர்களே,

  கரும்புத் தோட்டத்தில் நடந்த கச்சாமுச்சாவில் என்னைப் பங்கேற்க அழைக்க மறுத்த காரணத்தால் நானும் இப்பதிவிலிருந்து என் ஆட்சேபங்களுடன் வெளியேறுகிறேன்.

  வாழ்க கன்னியர்.. வளர்க கரும்புகள்!

  ReplyDelete
 9. தலைவரே,
  கோடை பதிவை விரைவில் வெளியிடுங்கள்...

  ReplyDelete
 10. அட்டைப் படங்கள் அருமை

  ReplyDelete
 11. டாக்டர் ஐயா!

  போகிற போக்கில் விஸ்வாவை ஏன் குற்றவாளி ஆக்குகிறீர்? இந்த அவசர உலகில் இதுபோன்ற 'பார்க்க' வைக்கும் பதிவுகள்தான் பொருத்தமானவை, 'படிக்க' நேரத்திற்கு எங்கே போவது?

  ReplyDelete
 12. ஜாலியான ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகிகளுக்கும் இருக்கி அனைச்ச ஆடை அனுவித்த 'ஸேடிஸ்ட்' விஜயன் சாருக்கு எனது கண்டனங்கள்

  ReplyDelete
 13. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 14. நல்லதொரு கண்கவர் அட்டைப்பட அணிவரிசை டாக்டர்.

  சூப்பர்.

  ReplyDelete
 15. நண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. excellent.

  was planning for a cover gallery post on anyone of the heroes and i found out that unlike you people, i do not have much of these books or atleast the scans.

  hats of to you.

  great show.

  ReplyDelete
 17. happy tamil new year day to one and all.

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!