Friday, January 15, 2010

கண்ணீர் தீவில் மாயாவி!

வணக்கம்,

தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள், தைத் திருநாள், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம், தைப் பொங்கல், காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல் என அனைத்து நன்னாட்களுக்கும் விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்!

இந்த நன்னாளில் பொங்கல் மலர் ஆக அறிவிக்கப்பட்ட இரும்புக்கை மாயாவி (வேறு யார்?) சாகஸமான முத்து காமிக்ஸ் # 181 – கண்ணீர்த் தீவில் மாயாவி! குறித்த ஒரு விரிவான அலசலைக் காண்போம்!

புத்தக விவரங்கள்:

தலைப்பு : கண்ணீர் தீவில் மாயாவி!
இதழ் : முத்து காமிக்ஸ் (மாத இதழ்)
வெளியீடு # : 181
தேதி : 15 ஜனவரி, 1990 - பொங்கல் மலர் (அறிவிக்கப்பட்டது)
முதல் பதிப்பு : 15 ஏப்ரல், 1990 (Actual Release Date)
பதிப்பாசிரியர் : M.செளந்திரபாண்டியன்
பொறுப்பாசிரியர் : S.விஜயன்
மறுபதிப்புகள் : இதுவரை இல்லை
நாயகன் : இரும்புக்கை மாயாவி
மூலம் : THE VULTURE (ஆங்கிலம்)
இதழ் : VALIANT (Weekly)
பதிப்பகம் : FLEETWAY (I.P.C.)
தேதி : 30-10-1965 முதல் 02-04-1966 வரை (23 வாரங்கள்)
கதை : TOM TULLY
ஓவியம் : JESUS BLASCO/TOM KERR
தமிழில் : S.விஜயன்
பக்கங்கள் : 160 (கருப்பு வெள்ளை)
சைஸ் : 9cmx13cm (பாக்கெட் சைஸ்)
விலை : ரூ:3/- (1990 முதல் பதிப்பின் போது)

Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Credits

விளம்பரம்:

இந்தக் கதைக்கான விளம்பரங்கள் முத்து காமிக்ஸ் # 166 – கொள்ளைக்காரப் பிசாசு! (மறுபதிப்பு) மார்ச் 1988 முதலே வரத் தொடங்கியிருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பொங்கல் மலர் ஆக முத்து காமிக்ஸ் # 180 – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!ல் அறிவிக்கப்பட்டது!

Muthu Comics # 167 - Kanneer Theevil Mayavi - AdMuthu Comics # 180 - Kanneer Theevil Mayavi - Ad 1Muthu Comics # 180 - Kanneer Theevil Mayavi - Ad 2

ஆயினும் முத்து காமிக்ஸ் # 180 – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! புத்தகமே தாமதமாக வந்ததினால் பொங்கல் மலர் ஆக வெளிவர வேண்டிய புத்தகம் மிகத் தாமதமாக ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு மலர் ஆகத்தான் வெளிவந்தது! அறிவிக்கப்பட்டிருந்த பொங்கல் வாழ்த்தும் வழங்கப் படவில்லை என்பது ஞாபகம்! தவறாக இருப்பின் சுட்டிக்காட்டவும்! 

கதைச்சுருக்கம்:

அதிபயங்கர ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கான திறந்த வெளிச் சிறையாக செயல் பட்டு வருகிறது கண்ணீர் தீவு! அதன் வார்டன் வல்ச்சர்-ம் அவனது உதவியாளன் மோர்ட்டோவும் கைதிகளுக்கு சிம்ம சொப்பனம்! இதற்கிடையில் அங்கிருந்து சில கைதிகள் தப்பியோடிவிட இண்டர்போல்-ன் உதவியை நாடுகிறான் வல்ச்சர்! அதே போல் அங்கு நடமாடும் சதுப்பு நில ஆவியும் கைதிகள் தப்பியோட துணை புரிவது புரியாத புதிராகவே உள்ளது!  மர்மத்தைத் துப்புதுலக்க வருகிறார் இரும்புக்கை மாயாவி!

கண்ணீர் தீவு – SIGHTS & SOUNDS:

கதைக்களமான கண்ணீர் தீவின் கண்கொள்ளாக் காட்சிகள்! தீவை நீங்கள் சுற்றிப் பார்க்கும் போது இந்தக் காட்சிகளைத் தவறாமல் கண்டு களிக்கவும்! கண்ணீர் தீவை சென்றடைய கடல் வழி பயணம் மட்டுமே சாத்தியம்! பழங்கால கப்பலில் பயணிகளே துடுப்பு வலித்து கண்ணீர் தீவை அடைவதே ஒரு ரம்மியமான அனுபவம்! உங்களை உற்சாகப் படுத்த சவுக்கடிகளும் உண்டு!

கப்பல் பயணம்! பயணிகள்!
கப்பல் பயணம்! பயணிகள்!

கண்ணீர் தீவில் தங்குவதற்கு சொகுசான சிறைகள் உண்டு! கூடுதல் வசதிகள் விரும்புவோருக்கு ஸ்பெஷலாக பாதாளச் சிறையும் உண்டு!

சிறைச்சாலை! பாதாளச் சிறை!
சிறைச்சாலை! பாதாளச் சிறை!

கண்ணீர் தீவில் மணியடித்தால் சோறு! பந்தியில் முந்துவோருக்கு லெக் பீஸ் கிடைக்கவும் வாய்ப்புள்ளது!

லெக் பீஸ்!
லெக் பீஸ்!

கண்ணீர் தீவில் பயங்கர வேட்டை நாய்களும், ஆட்கொல்லி ஜெல்லி மீன்களும், இன்னபிற கொடிய ஜந்துக்களும் ஏராளம் உண்டு! இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஒரு சொர்க்கம்!

வேட்டை நாய்! ஜெல்லி மீன்!
வேட்டை நாய்! ஜெல்லி மீன்!

கண்ணீர் தீவின் மேலும் சில சுற்றுலா தலங்கள்! உங்கள் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் கல்லுடைப்பது, கீல் வாருவது என பல உடற்பயிற்சிகள் உண்டு! சாகஸத்தில் ஆர்வமுள்ளோருக்கு சதுப்பு நிலத்தில் முங்கு நீச்சல் போடும் வாய்ப்பும் உள்ளது!

கண்ணீர் தீவு - நுழைவாயில்! சதுப்பு நிலத்தில் கைதிகள் அணிவகுப்பு!
கண்ணீர் தீவு – நுழைவாயில்! சதுப்பு நிலத்தில் கைதிகள் அணிவகுப்பு!
கலீயன் மயானம்! கீல் வாரும் மையம்!
கலீயன் மயானம்! கீல் வாரும் மையம்!
சுண்ணாம்பு கல் குவாரி! கழுகுப் பாறை!
சுண்ணாம்புக் கல் குவாரி! கழுகுப் பாறை!

இறுதியாக கண்ணீர் தீவின் STAR ATTRACTION! சதுப்பு நில ஆவி! காணத் தவறாதீர்கள்!

சதுப்பு நில ஆவி!
சதுப்பு நில ஆவி!

உங்கள் அனைத்து சுற்றுலாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரே இடம்  கண்ணீர் தீவு தான் என்பதில் ஐயமில்லை!

கண்ணீர் தீவு – முக்கிய பிரமுகர்கள்:

எந்த ஒரு சூப்பர் ஹீரோவின் கதைகளின் வெற்றி அவர் எதிர்த்து மோதும் வில்லன்களைப் பொறுத்தே அமைகிறது! இதில் வல்ச்சர்-ம், அவனது அடியாள் மோர்ட்டோவும் அவரவர் பணியை திறம்படச் செய்கின்றனர்! மாவீரன் மாண்டிஜூமா அளவிற்கில்லையெனினும் இவர்கள் வழக்கமான வில்லத்தனத்தில் சோடை போகவில்லை!

Vulture Morto கைதிகள்!
வல்ச்சர்! மோர்ட்டோ! கைதிகள்!

வாய்ப்புகள் சரியாக அமையாததால் இப்படங்களை வெகுமதி! போட்டிக்குப் பயன் படுத்த முடியாமல் போனது துரதிர்ஷ்டமே!

சுவாரசியமான சங்கதிகள்:

இரும்புக்கை மாயாவியின் TIME-LINEல் இக்கதை அவரது சக்திகளின் வளர்ச்சியில் இரண்டாம் கட்டத்தில் நடைபெறுவதால் அவருக்கு மிகவும் குறைவான சக்திகளை பிரயோகிக்கும் வாய்ப்புகளே கிடைக்கின்றன! அவை பின் வருமாறு!

  • மாயமாய் மறையும் தண்மை
  • மின்சாரம் பாய்ச்சும் சக்தி 
  • மின் காந்த சக்தி

இரும்புக்கை மாயாவியின் பரிணாம வளர்ச்சி குறித்து தீவிர ஆய்வுகள் செய்து வருகிறேன்! கூடிய விரைவில் அதிரடிப் பதிவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன்! அதுவரை கதையில் இரும்புக்கை மாயாவி புரியும் சில அதிரடி சாகஸங்களைக் கண்டு களியுங்கள்!

மாயாவி-1மாயாவி-2மாயாவி-3

கடைசி படம் கொள்ளைக்காரப் பிசாசு! கதையை லைட்டாக ஞாபகப் படுத்துகிறது, இல்லையா?

ஆங்கிலம்/தமிழ் – ஒரு பார்வை:

கதையின் ஆங்கிலப் பக்கங்கள் சிலவும் அவற்றின் தமிழாக்கப் பக்கங்களும் உங்கள் பார்வைக்கு! ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களின் மொழி பெயர்ப்புத் திறனுக்கு மேலும் ஒரு சான்று! இதில் இரும்புக்கை மாயாவி மின்காந்த சக்தியை பிரயோகிப்பதைக் காணலாம்!

Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 075Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 076Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 077Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 078Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 079Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 080Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Page 081Valiant [1966-01-08] - Steel Claw - The Vulture

இரும்புக்கரத்தில் இன்னமும் ஆயுதங்கள் ஏதும் பொருத்தப்படாததால் விளக்கை உடைக்க மாயாவி கல்லைப் பயன்படுத்துவதையும், பூட்டுகளைத் திறந்து மூட விசேட சாவி உபயோகிப்பதையும் கவனிக்கவும்!

அடுத்த வெளியீடு:

தொடரும் மாதங்களில் வரும் வெளியீடுகளுக்கான விளம்பரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!

Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Coming NextMuthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - Coming Soon

வரவேற்பு:

இந்தக் கதையும் இரும்புக்கை மாயாவி கதைகளுக்குரிய பெருத்த வரவேற்பைப் பெற்றது என்பதைக் கூறவும் வேண்டுமா? அதற்கு சான்றாக அடுத்த வெளியீடான முத்து காமிக்ஸ் # 182 – துரோகியைத் தேடி! இதழில் வெளிவந்த வாசகர் கடிதங்கள் உங்கள் பார்வைக்கு! கடிதம் எழுதுவோரை ஊக்குவிக்க பிரசுரிக்கப்படும் கடிதங்களுக்குப் பரிசும் வழங்கப் பட்டது!

Muthu Comics # 181 - Kanneer Theevil Mayavi - HotlineMuthu Comics # 182 - HotlineMuthu Comics # 182 - Vasagar Kaditham

பதிவைப் படிக்கும் யாரேனும் எழுதிய கடிதங்கள் இதில் பிரசுரமாகியுள்ளனவா? பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன்!

நிறைகள்:

குறைகள்:

  • சட்டை பாக்கெட் சைஸ், தரமற்ற தாள், சுமாரான அச்சு, கண்ணை வருத்தும் சிறிய எழுத்துக்கள் என புத்தகத்தின் அமைப்பே ஒரு மிகப்பெரிய மைனஸ்!
  • பல நாட்கள் விளம்பரம் செய்யப்பட்டும் சரியான நேரத்திற்கு விற்பனைக்கு வராதது!

ஆனால் இரும்புக்கை மாயாவி என்றொரு சூப்பர் ஸ்டார் இருக்கையில் இவைகள் மிகப்பெரிய குறைகளாகத் தெரியவில்லை!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்! ஆங்கில மூலம் குறித்த தகல்வகளை வழக்கம் போல அளித்துதவிய நண்பர் முத்து விசிறி-க்கு மனமார்ந்த நன்றிகள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:

இரும்புக்கை மாயாவி:

பிற சிறப்பிதழ்கள்:

Saturday, January 2, 2010

புத்தாண்டு சிறப்புப் பதிவு!

“லெஸ் டென்சன் மோர் வர்க்! மோர் வர்க் லெஸ் டென்சன்!”
-செந்தில் (படம்: ஜெண்டில்மேன்)
வணக்கம்,

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த புது வருடம் உங்களுக்கும் உங்கள் உற்றார் உறவினர் அனைவருக்கும் இனியதாக அமைய இறைவனை  பிரார்த்திக்கிறேன்! இந்தப் புத்தாண்டில் மேற்குறிப்பிட்டுள்ள வாசகத்தை அனைவரும் தாரக மந்திரமாக ஏற்று வாழ்வில் சிறப்புருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்!

பதிவுக்கு செல்லும் முன் ஒரு முக்கிய தகவல்!

நெடுநாட்களாகக் காணாமல் போயிருந்த இரு காமிக்ஸ் வலைஞர்கள் இன்று அதிரடியாகப் பதிவுலகுக்குத் திரும்பப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! அவர்கள் வேறு யாருமல்ல!

சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி மதிப்பிற்குரிய திரு.அய்யம்பாளையத்தார் அவர்களும், தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடிய மன்னராகியவரும், எனக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியுமாகிய கிங் விஸ்வா-வுமே ஆவர்!

கீழ்காணும் சுட்டிகளின் மூலம் இவர்களை மீண்டும் சந்திக்கலாம்!

ஒகே! மொக்கை போட்டது போதும்! இனி பதிவுக்குப் போவோம்!

புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் எவ்வாறு நமது அபிமான காமிக்ஸ்கள் நம்மை குதூகலப் படுத்தின என்பதை ஒவ்வொரு வருடமாகக் காண்போம்!

1976:

முத்து காமிக்ஸ் # 046 – வைரஸ்-X பின்னட்டையில் 1976-ம் வருட காலண்டர் பிரசுரிக்கப் பட்டது! கடந்த 1975 ஆண்டு அக்டோபர் மாதத்தில் கர்ம வீரர் காமராஜர் மறைந்து விட்டபடியால் அவரது படமும் பிரசுரிக்கப்பட்டது!

Muthu Comics # 046 - Virus - XMuthu Comics # 046 - Virus - X - Calendar

வைரஸ்-X குறித்து முத்து விசிறி-யின் முத்தான பதிவைப் படிக்க கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

வைரஸ்-X ஆங்கில காமிக்ஸ் (AFI) டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

1977:

1977-ல் முத்து காமிக்ஸ்-ல் முதன்முறையாகப் புத்தாண்டு மலர் வெளியிடப்பட்டது! முத்து காமிக்ஸ் # 058 – முகமூடி வேதாளன் அட்டகாசமான சைஸில் இரு வண்ணங்களில் வெளிவந்தது ஜனவரி 1977-ல் வெளிவந்தது! வேதாளர் முத்து காமிக்ஸ்-ல் அறிமுகமானதும் இந்தக் கதை மூலம்தான்!

முத்து காமிக்ஸ்-ல் வெளிவந்த வேதாளர் கதைகள் குறித்து மிக நீண்ட ஆரய்ச்சிப் பதிவொன்றை அ.கொ.தீ.க.வில் விரைவில் எதிர்பாருங்கள்!

Muthu Comics # 057 - Kadalil Thoongiya Bootham - Mugamoodi Vedhalan - AdMuthu Comics # 058 - Mugamoodi Vedhalan

இவ்விதழுடன் புத்தாண்டு பரிசு வழங்கப் பட்டுள்ளது! அது என்ன்வென்று எனக்குத் தெரியவில்லை! தெரிந்தால், யாரிடமேனும் அது இன்னமும் பத்திரமாக இருந்தால் தெரியப் படுத்துங்களேன்!

இக்கதையை ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

உபயம்: http://bookscomics.blogspot.com/

1978:

ஜனவரி 1978-ல் வெளிவந்த முத்து காமிக்ஸ் # 069 – பழி வாங்கும் பாவை பின்னட்டையில் 1978-ம் வருட காலண்டர் பிரசுரிக்கப் பட்டது!

Muthu Comics # 069 - Pazhi Vaangum PaavaiMuthu Comics # 069 - Pazhi Vaangum Paavai - Calendar

1979:

1979-ம் வருடம் ஜனவரி மாதம்  மீண்டும் ஒரு முறை புத்தாண்டு சிறப்பிதழ் ஆக வேதாளர்-ன் அதியற்புத சாகசமான முத்து காமிக்ஸ் # 086 - சூனியக்காரியின் சாம்ராஜ்யம் வெளிவந்தது! இக்கதை குறித்தும் பின்வரும் பதிவுகளில் காண்போம்!

இந்த சமயத்தில் முத்து காமிக்ஸ் மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது!

இக்கதையோ அல்லது இதன் இரண்டாம் பாகமோ இந்திரஜால் காமிக்ஸ்-ல் கூலா-கு கொடுசூலி என்று வந்ததாக ஞாபகம்! தோழர் புலா சுலாகி மனம் வைத்தால் நாம் அனைவரும் படித்து மகிழலாம்!

Muthu Comics # 085 - Mugamoodi Kollaikaari - Sooniyakkaariyin Saamraajyam - AdMuthu Comics # 086 - Sooniyakkaariyin Saamraajyam

இக்கதையை ஆங்கிலத்தில் டவுன்லோடு செய்ய கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்!

உபயம்: http://bookscomics.blogspot.com/

1982:

ஜனவரி 1982-ல் பொங்கல் மலர் ஆக இரும்புக்கை மாயாவி சாகஸமான முத்து காமிக்ஸ் # 132 - தவளை மனிதர்கள் வெளிவந்தது! இதன் பின்னட்டையில் 1982-ம் வருட காலண்டர் பிரசுரிக்கப்பட்டது!

Muthu Comics # 132 - Thavalai ManidhargalMuthu Comics # 132 - Thavalai Manidhargal - Calendar

இக்கதை குறித்த மேல் விவரங்களைத் தனியொரு பதிவில் விரைவில் காண்போம்! அதுவரை காத்திருக்கவும்!

1986:

ஜனவரி 15-31, 1986 தேதியிட்ட ராணி காமிக்ஸ் # 086 – புத்தாண்டு விருந்து! பொங்கல் மலர்-ஆக வெளிவந்தது! ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்களின் வழக்கப்படி பொங்கல் மலர்-ல் வழக்கம் போல இந்திய நாயகரான இன்ஸ்பெக்டர் கருடா கதை பிரசுரிக்கப்பட்டது! முழுக்கதையும் உங்கள் பார்வைக்கு! படித்து மகிழவும்!

Rani Comics # 086 - Puththaandu VirundhuRani Comics # 086 - Puththaandu Virundhu - Page 03Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 04Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 05Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 06Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 07Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 08Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 09Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 10Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 11Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 12Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 13Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 14Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 15Rani Comics # 086 - Puththaandu Virundhu - Page 16

இன்ஸ்பெக்டர் கருடா குறித்த முழு நீளப் பதிவு அ.கொ.தீ.க.வில் விரைவில் வெளிவரும்!

1988:

1988-ல் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் தனது சக்திகளின் உச்சத்தில் இருந்த சமயத்தில் லயன், மினி லயன், திகில் மற்றும் முத்து என சராமரியாக மாதாமாதம் காமிக்ஸ்களை வெளியிட்டுக் கொண்டிருந்த நேரம்! அப்போது லயன், திகில், மினி லயன் ஆகிய மூன்று இதழகளுக்கும் சந்தா கட்டுவோருக்கு இலவச காலண்டர் வழங்கினார்! இதே போல் பின்வரும் வருடங்களின் டீ-ஷர்ட், கீ-செயின் என்று பல ஊக்கப் பரிசுகள் வழங்கினார்!

Mini Lion Comics # 11 - Visithira JodiMini Lion Comics # 11 - Visithira Jodi - Calendar

அந்த காலண்டர், டீ-ஷர்ட் மற்றும் கீ-செயின்  யாரிடமேனும் இன்னமும் பத்திரமாக இருந்தால் தெரியப் படுத்துங்களேன்!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!