வணக்கம்,
வரும் நாட்களில் வரவிருக்கும் காமிக்ஸ் இதழ்கள் குறித்து சிறு முன்னோட்டமாக இப்பதிவு உங்கள் பார்வைக்கு! முதலில் வரவிருக்கும் இதழ்களின் TENTATIVE LIST! கிடைத்த சைக்கிள் கேப்பில் ஒரு மொக்கை பதிவு!
வெளியீடு | #* | கதை | கதாநாயகர்(கள்) | தேதி* | விலை |
முத்து காமிக்ஸ் | 313 | விண்ணில் ஒரு குள்ளநரி! | விங் கமாண்டர் ஜார்ஜ் | நவம்பர் 2009/ டிசம்பர் 2009 | ரூ:10/- |
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் | 025 | களிமண் மனிதர்கள்! | இரும்புக்கை மாயாவி | டிசம்பர் 2009 | ரூ:10/- |
லயன் காமிக்ஸ் | 208 | வெள்ளையாய் ஒரு வேதாளம்! | சிக்பில் & Co. | டிசம்பர் 2009/ ஜனவரி 2010 | ரூ:10/- |
முத்து காமிக்ஸ் | 314 | மரணத்தின் நிசப்தம்! | ரிப்போர்ட்டர் ஜானி | 2010 | ரூ:10/- |
லயன் காமிக்ஸ் | ??? | காவல் கழுகு! | டெக்ஸ் வில்லர் & Co. | 2010 | ரூ:10/- |
லயன் காமிக்ஸ் | ??? | சாத்தானின் தூதன் டாக்டர் 7! | டாக்டர் 7 உடன் மோதும் FBI ஏஜெண்ட் பிலிப் காரிகன் | 2010 | ரூ:10/- |
லயன் காமிக்ஸ் | ??? | லயன் COLLECTOR’S ஸ்பெஷல்! இரத்தப்படலம்! (1-18) | XIII | 2010 (?!!) | ரூ:200/- |
* - தோராயமானவை |
இனி ஒவ்வொரு இதழாக பார்ப்போம்!
முத்து காமிக்ஸ் # 313: விண்ணில் ஒரு குள்ளநரி!
இன்னும் ஓரிரு வாரங்களில் முத்து காமிக்ஸ் # 313: விண்ணில் ஒரு குள்ளநரி! வரவிருக்கிறது! புத்தகம் கைக்கு கிடைத்தவுடன் வழக்கம் போல சுடச்சுட பதிவும் வரும்! அநேகமாக அடுத்த வாரத்திலேயே அதிரடிப் பதிவை எதிர்பார்க்கலாம்!
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 025: களிமண் மனிதர்கள்!
அதைத் தொடர்ந்து காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 025: களிமண் மனிதர்கள்! வரவிருக்கிறது! புத்தகம் வரும் போது அ.கொ.தீ.க.வில் நிச்சயம் பதிவு இடப்படும்! அதுவரை அட்டைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்!
லயன் காமிக்ஸ் # 208: வெள்ளையாய் ஒரு வேதாளம்!
அதையடுத்து லயன் காமிக்ஸ் # 208: வெள்ளையாய் ஒரு வேதாளம்! வரலாம்! ஆனால் XIII ஸ்பெஷல் வரும் என்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே! எனினும் அட்டைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்!
முத்து காமிக்ஸ் # 314: மரணத்தின் நிசப்தம்!
நம் அனைவரின் அபிமான துப்பறியும் கதாநாயகனான சூப்பர் ரிப்போர்ட்டர் ஜானி நெடுநாட்கள் கழித்து வருவது பெருமகிழ்ச்சியளிக்கிறது! இதோ புத்தகத்துக்கான முன்னோட்டம்!
லயன் காமிக்ஸ் # ???: காவல் கழுகு!
சூப்பர் கெளபாய் டெக்ஸ் வில்லர் & குழுவினரின் ஒரு பாக சாகசம்! வழக்கமாக ஒரே பாகத்தில் முடிவு பெற்றுவிடும் டெக்ஸ் கதைகள் எல்லாம் மொக்கையாக அமையும் என்பது விதி (உம்: மரணத்தின் நிறம் பச்சை! பறக்கும் பலூனில் டெக்ஸ்!)! காவல் கழுகிலாவது அந்த விதியை டெக்ஸ் வெல்கிறாரா என்று பார்ப்போம்!
லயன் காமிக்ஸ் # ???: சாத்தானின் தூதன் டாக்டர் 7!
நெடுநாள் கழித்து டாக்டர் 7 (அட! அது நான்தானுங்க!) தனது பரம வைரியான காரிகன் உடன் மோதுவது இந்த இதழின் ஹை-லைட்! இப்போதிருந்தே பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது விளம்பரம்! அதை இன்னும் பரபரபாக்கும் வகையில் இந்த முன்னோட்டம் அமையும்!
ஒன்று மட்டும் நிச்சயம்! இந்தக் கதையில் டாக்டர் 7-ன் ENTRY அமர்க்களமாக இருக்கும்! அதற்கான சான்று மேற்காணும் படங்களில்!
லயன் காமிக்ஸ் # ???: லயன் COLLECTOR’S ஸ்பெஷல்! இரத்தப்படலம்! (1-18)
இது எப்போது வருமோ? ஆண்டவனுக்கும், ஆசிரியருக்குமே வெளிச்சம்! இருப்பினும் பொங்கலுக்கு வந்தால் சிறப்பாக இருக்குமென்பது எனது சிறிய நப்பாசை!
அட்டைப்படங்களின் EXCLUSIVE புகைப்படங்களை அளித்துதவிய நண்பர் கேப்டன் ஹெச்சாய்-க்கு நன்றிகள் பல!
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
வெளிவரபோகும் லயன் மற்றும் காமிக்ஸ் கிளாசிக்கின் அருமையான அட்டைபடங்களை முன்பே பார்க்க வழி ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றிகள், டாக்டரே.
ReplyDeleteபுத்தகங்களை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டது உங்கள் பதிவு.
சிறப்பான முன்னோட்டம் தலைவரே, உங்கள் ஸ்டில்கள் அபாராமாக உள்ளன.
ReplyDeleteபயங்கரவாதிக்கு வணக்கங்கள்.
ReplyDeleteநீங்களும் முன்னோட்ட பதிவு இடுவது குறித்து மகிழ்ச்சி. அருமையாக இருந்தது. அதைப்போலவே கதை விமர்சனத்தையும் இடுவீர்கள் என்று நம்புகிறேன்.
தொடருங்கள் உங்கள் அட்டகாசத்தை.
மறந்தே போய் விட்டேன்.
ReplyDeleteடாக்டர் செவனின் அந்த அறிமுக பஞ்ச் இருக்கிறதே, அருமை. சூப்பர்.
இதனை படித்ததில் இருந்து இந்த வசனம் தமிழில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டேன். உண்மையில் ஒரு கதாநாயகனின் வெற்றி அவனுடன் மோதும் வில்லனை பொறுத்தே அமையும்.
எம்ஜியாருக்கு நம்பியார் போல காரிகனுக்கு நீங்கள். நீங்கள் இல்லாவிடில் காரிகன் ஒன்றுமே இல்லை என்பது என்னை போன்ற பலரின் கருத்து.
excellent.great scans.
ReplyDeletehoping to read these books immediately. you have increased my passion to look forward to these books endlessly.
the corrigan scans are amazing. when will i get these books?
ReplyDeletecan you send me the scans to my mail id, if you don't mind?
நன்றி
ReplyDelete