Saturday, July 4, 2009

1984!

“இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும், எனக்கு சிலை வெப்பாங்க, ஸ்டூடண்ட்ஸெல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க…!”
-கவுண்டமணி (படம்:சூரியன்)

வணக்கம்,

தலைப்பைப் பார்த்து ஏதோ சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்-ன் அடுத்த படத்தின் முன்னோட்டம் என நினைத்து வாசகர்கள் பயந்து ஓட வேண்டாம்! நமது அபிமான லயன் காமிக்ஸ் புவியில் ஒளியூட்ட உதித்த வருடம் அதுதான்! சரியாக 25 ஆண்டுகள் கடந்து வெள்ளி விழா கொண்டாடும் இத்தருணத்தில் அம்மறக்க முடியாத முதல் வருடத்தை மலரும் நினைவுகளாகத் திரும்பிப் பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது!

பதிவிற்கு செல்லும் முன் சில தகவல்கள்!

  • நண்பர் காமிக்ஸ் பிரியர் சிலபல ஆண்டுகளுக்கு முன் இன்றுதான் இப்பூவுலகில் பிறந்தார்! அவரை வாழ்த்தும் வகையில் இப்பதிவு அவருக்கு சமர்ப்பிக்கப் படுகிறது! அவர் இன்று போலவே என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்!
  • கிங் விஸ்வா லயன் காமிக்ஸ் முதல் இதழ் பற்றி விரிவாக எழுதியுள்ளார்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
  • சென்ற பதிவாகிய சம்மர் ஸ்பெஷல்!-க்கு நீங்கள் அனைவரும் வழங்கியுள்ள நல்லாதரவுக்கு நன்றி! தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடுகிறேன்!
  • மேற்குறிப்பிட்டுள்ள கவுண்டரின் ‘பன்ச்’ போல என்றேனும் ஒரு நாள் நமது அபிமான ஆசிரியருக்கு மரியாதைகள் செய்யப் பட வேண்டும் என்பது என் சிறு நப்பாசை!

ஓ.கே. இனி பதிவிற்கு வருவோம்! 

கூற வேண்டிய அனைத்தையும் நண்பர் கிங் விஸ்வா-வின் இடுகையில் பதிவிலும், கருத்துக்களிலும் கூறப்பட்டுவிட்டதால் நான் இங்கு புதிதாக ஒன்றும் கூறிவிடப் போவதில்லை! காமிக்ஸ் ஒரு VISUAL MEDIUM என்பதால் நானும் வார்த்தைகளைத் தவிர்த்து செய்திகளைப் படங்கள் கொண்டே முடிந்தவரைத் தெரிவிக்கிறேன்!

லயனின் முதல் வருடம்:

முதல் வருடத்திலேயே மொத்தம் 14 இதழ்களை வெளியிட்டு அசத்தியிருப்பார் ஆசிரியர்! தமிழ் மாதப் பத்திரிக்கை உலகில் இது ஒரு சாதனை! இதற்கு முன்பும் சரி, பின்னும் சரி எந்த ஒரு மாத இதழும் ஒரே வருடத்தில் 14 இதழ்கள் வெளியிட்டதாக சரித்திரமும் இல்லை, பூகோளமும் இல்லை!

# கதை தேதி
1 கத்தி முனையில் மாடஸ்டி பிளைஸி ஜூலை 1984
2 மாடஸ்டி in இஸ்தான்புல் ஆகஸ்ட் 1984
3 எத்தனுக்கு எத்தன் செப்டம்பர் 1984
4 டாக்டர் டக்கர் அக்டோபர் 1984
5 இரும்பு மனிதன் தீபாவளி மலர்
6 கபாலர் கழகம் நவம்பர் 1984
7 பாதாளப் போராட்டம்! டிசம்பர் 1984
8 கொலைப் படை + மர்மத் தீவு பொங்கல் மலர்
9 பயங்கர நகரம்! ஜனவரி 1985
10 கடத்தல் குமிழிகள்! ஃபிப்ரவரி 1985
11 மரணக் கோட்டை! மார்ச் 1985
12 பழி வாங்கும் பொம்மை! ஏப்ரல் 1985
13 சதி வலை+நதி அரக்கன்(கோடை மலர்) மே 1985
14 காணாமல் போன கடல் ஜூன் 1985

ஆசிரியர் இவ்வாறு 14 இதழ்கள் வெளியிட்ட காரணத்தை ஓரளவு யூகிக்க முடிகிறது! உலகெங்கிலும் வார, மாத இதழ்களின் சிறப்பு வெளியீடுகள் வழக்கமான இதழ்களின் வரிசை எண்ணிலிருந்து விலகியே இருக்கும்! இதனால் வழக்கமாக வரும் இதழ்களின் எண்ணிக்கை குறையாது!

அதே ஸ்டைலை ஆரம்பத்தில் ஒரு ஆர்வக் கோளாறில் நமது ஆசிரியரும் பின்பற்றியிருக்க வேண்டும்! அதனால் சிறப்பிதழ்கள் வெளியிடும் மாதங்களில் வழக்கமான இதழ்களும் வந்திருக்க வேண்டும்! இது வெறும் யூகம் மட்டுமே! உண்மை ஆசிரியருக்கே வெளிச்சம்!

இதோ இந்த 14 இதழ்களுக்கான கண்கவர் அட்டைப் படங்கள்! பார்த்து மகிழுங்கள்!

Lion#001 - Kathi Munaiyil Modesty Blaise Lion#002 - Modesty in Isatnbul Lion#003 - Ethanukku Ethan Lion#004 - Doctor Takkar Lion#005 - Irumbu Manidhan Lion#006 - Kabalar Kazhagam Lion#007 - Baathaala Porattam Lion#008 - Kolai Padai Lion#008 - Marma Theevu Lion#009 - Bayangara Nagaram Lion#010 - Kadathal Kumizhigal Lion#011 - Marana Kottai Lion#012 - Pazhi Vaangum Bommai Lion#013 - Cover - Sadhi Valai Lion#013 - Nadhi  Arakan Lion#014 - Kanamal Pona Kadal

முதலாம் ஆண்டின் முடிவில் ஒரு பரிசுப் போட்டியும் அறிவித்திருந்தார் ஆசிரியர்! இதோ லயனின் முதல் ஆண்டு குறித்து எனது பார்வை! என்ன ஒரு 24 வருடங்கள் லேட்டாக வருகிறது! அப்போதே வந்திருந்தால் அந்த ரு:50/- பரிசு எனக்குத்தான், இல்லையா?

Lion#014 - Kanamal Pona Kadal - Year One Review - Contest - Ad

இந்த இதழ்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது! அதை நான் கூறுவதை விட நமது அபிமான ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் தனக்கேயுரிய பாணியில் கூறுவதே சிறப்பாக இருக்குமென நான் எண்ணுகிறேன்!

சிங்கத்தின் சிறுவயதில்…!

லயனின் ஆரம்ப காலம் குறித்த எந்தப் பதிவானாலும் நமது அபிமான ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் தனது ஆரம்ப கால அனுபவங்களைப் பற்றி எழுதி வரும் பேராதரவு பெற்ற சிங்கத்தின் சிறுவயதில்…! தொடரைக் குறிப்பிடாமல் எழுத முடியாது!

ஆகையால் இதோ தமிழ் காமிக்ஸ் வலையுலகில் முதன்முறையாக இது வரை வெளிவந்த அனைத்து சிங்கத்தின் சிறுவயதில்…! தொடர் கட்டுரைகளும், உங்கள் பார்வைக்காக! படித்து மகிழுங்கள்!

SS00-1(L190) SS00-2(L190) SS01-1(L191) SS01-2(L191) SS01-3(L191) SS01-4(L191) SS02-1(L192) SS02-2(L192) SS02-3(L192) SS03-1(L192) SS03-2(L192) SS03-3(L192) SS04-1(L194) SS04-2(L194) SS04-3(L194) SS05-1(L195) SS05-2(L195) SS06-1(L197) SS06-2(L197) SS06-3(L197) SS07-1(L198) SS07-2(L198) SS07-3(L198) SS08-1(L199) SS08-2(L199) SS09-1(200) SS09-2(200) SS10-1(201) SS10-2(201) SS10-3(201) SS11-1(202) SS11-2(202) SS11-3(202) SS12-1(203) SS12-2(203) SS12-3(203)

ஆசிரியரின் மொழி நடைக்கு உங்களைப் போலவே நானும் தீவிர ரசிகன்! ஒவ்வொரு பாகத்தின் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து அவர் முடிக்கும் விதம் எழுத்துலக ஜாம்பவான்களையே பொறாமை கொள்ளச் செய்யும்! நம்மில் பலரும் புத்தகத்தைத் திறந்ததும் முதலில் படிப்பது ஆசிரியரின் ஹாட்-லைன் பகுதியைத் தானே!

தற்போதெல்லாம் அவர் அதிகம் எழுதுவதில்லை என்பது வருத்தத்திற்குறிய விஷயம்! கடைசியாக வந்த இரண்டு லயன் இதழ்களிலுமே அவர் எதுவும் எழுதவில்லை! 25-வது ஆண்டு மலரிலாவது அவர் மீண்டும் இதைத் தொடர வேண்டும் என்பது உங்களைப் போலவே எனது விருப்பமும் கூட!

25-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நமது காமிக்ஸ் உலக அரசனுக்கு இத்தருணத்தில் நம் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! லயனின் புகழ் மென்மேலும் ஓங்கி வளர நம் அனைவரின் ஆதரவும் தேவை! அதுவே நாம் நம் அபிமான ஆசிரியருக்கு ஆண்டு தோறும் செய்யக் கூடிய மிகப்பெரிய தொண்டாகும்!

இப்பதிவைப் படிக்கும் அனைவரும் உடனடியாக நமது மூன்று காமிக்ஸ் வெளியீடுகளுக்கும் ஓராண்டு சந்தாவும், XIII JUMBO ஸ்பெஷலுக்கு மினிமம் ஒரு முன்பதிவாவது செய்துவிட வேண்டும் என்பது அகிலமே அஞ்சும் அ.கொ.தீ.க. தலைவரின் அரசாணை!

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

பி.கு.:-

  • இப்பதிவில் காணப்படும் படங்கள் அனைத்தும் நண்பர்கள் முத்து விசிறி, அய்யம்பாளையத்தார் மற்றும் வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வா ஆகியவர்களின் பேருதவியாலேயே நீங்கள் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிப்பது எனது கடமையாகும்! ஆகையால் உங்களின் போற்றல்கள் அவர்களையே சாரும்!

தொடர்புடைய இடுகைகள்:-

லயன் காமிக்ஸ் முதல் இதழ் குறித்து கிங் விஸ்வா-வின் பார்வை:

கிங் விஸ்வா-வின் 50-வது சிறப்(பிதழ்கள்)புப் பதிவு:

பிற சிறப்பிதழ்கள்:

34 comments:

  1. வணக்கம் தலைவரே,

    மீ த பஸ்ட்டு.

    எப்படி?

    முழு பதிவையும் ரசித்து விட்டு வருகிறேன்.


    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  2. தலைவரே, பயங்கரவாதியே,

    ச்சே, ஜஸ்டு மிஸ்ஸு.

    மீ த செகண்டு.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  3. தலைவரே,

    அருமையான பதிவு, ஆசிரியரின் பக்கங்களை ஒருங்கே வெளியிட்டது என்னைப் போன்றோர்க்கு ஒர் வரப்பிரசாதம் மனதார்ந்த நன்றிகள்.

    ஆசிரியரின் எழுத்து நடையே தனி, அவர் அதனை தொடர வேண்டுமென்பதே என் விருப்பமும். உங்களைப் போன்றே நானும் அப்பகுதியைத்தான் முதலில் படிப்பேன்.

    தொடருங்கள் உங்கள் அன்பான அழிவுச் செயல்களை

    வருங்காலத் தலைவர்
    இளம் சிட்டுக்கள் இல்லம்

    ReplyDelete
  4. தலைவரே,

    கண்ணைப் பறிக்கும் பதிவு.

    //இதற்கு முன்பும் சரி, பின்னும் சரி எந்த ஒரு மாத இதழும் ஒரே வருடத்தில் 14 இதழ்கள் வெளியிட்டதாக சரித்திரமும் இல்லை, பூகோளமும் இல்லை//

    குடிமையியல் என்று ஒன்று இருக்கிறதே, அதனை மறந்து விட்டீர்களோ?

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  5. //நண்பர் காமிக்ஸ் பிரியர் சிலபல ஆண்டுகளுக்கு முன் இன்றுதான் இப்பூவுலகில் பிறந்தார்! அவரை வாழ்த்தும் வகையில் இப்பதிவு அவருக்கு சமர்ப்பிக்கப் படுகிறது! //

    மிக்க நன்றி தலைவரே.

    மறக்கவே இயலாது இதனை.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  6. தலைவரே,

    இந்த பதிவு (குறிப்பாக அட்டைப் படங்களும், தகவல்களும்) வரலாறு தெரியாதவர்களுக்கு ஒரு அறிய பொக்கிஷம். தெரிந்தவர்களுக்கு ஒரு நினைவசைபோடல.

    வழக்கம் போல இந்த பதிவின் பிரதிபலிப்புகளை மற்ற தளங்களில் காணலாமோ?

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  7. தலைவரே,

    //அதே ஸ்டைலை ஆரம்பத்தில் ஒரு ஆர்வக் கோளாறில் நமது ஆசிரியரும் பின்பற்றியிருக்க வேண்டும்! அதனால் சிறப்பிதழ்கள் வெளியிடும் மாதங்களில் வழக்கமான இதழ்களும் வந்திருக்க வேண்டும்! இது வெறும் யூகம் மட்டுமே! உண்மை ஆசிரியருக்கே வெளிச்சம்!// உண்மையில் இதுவே லாஜிகலான பதில்.

    இருந்தாலும் இந்த வருடம் நான்கு இடழாவது வர வேண்டு என்பதே என் அவா.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  8. தலைவரே,

    நமது விஸ்வா இந்த இதழ்களை எல்லாம் அலசி ஒரு முழு நீளப்பதிவு இடப் போகிறார் என்று நினைக்கிறேன், அதுவும் ஆசிரியர் விஜயன் முதல் இண்டர்வியூவுடன். அதனால் தான் நீங்கள் இந்த இதழ்களை முழுமையாக விமர்சனம் செய்யவில்லையோ?

    நமது கரூர் பாலசுபிரமணியன் சார் தான் முதல் விமரிசன பரிசை பெற்றார். அதற்க்கு பிறகு தான் ஆசிரியர் இந்த ஆண்டு ரிவியு போட்டியை அறிவித்தார்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  9. தலைவரே,

    //இப்பதிவைப் படிக்கும் அனைவரும் உடனடியாக நமது மூன்று காமிக்ஸ் வெளியீடுகளுக்கும் ஓராண்டு சந்தாவும், XIII JUMBO ஸ்பெஷலுக்கு மினிமம் ஒரு முன்பதிவாவது செய்துவிட வேண்டும் என்பது அகிலமே அஞ்சும் அ.கொ.தீ.க. தலைவரின் அரசாணை//

    ரிபீட்டே.

    ReplyDelete
  10. பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே,

    இதைவிட வேறு சிறப்பான வகையில் முதல் ஆண்டை கூற இயலாது. சிறந்த பார்வை.

    குறிப்பாக அந்த சிங்கத்தின் சிறுவயதில் ஸ்கான்'கள். அருமை.

    இன்றைக்கு ஒரே பதிவு மழை தான். முடிந்தால் நானும் என்னுடைய பதிவை இரவுக்குள் இட முயல்கிறேன்.

    ReplyDelete
  11. தலைவரே,

    //1984 தலைப்பைப் பார்த்து ஏதோ சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்-ன் அடுத்த படத்தின் முன்னோட்டம் என நினைத்து வாசகர்கள் பயந்து ஓட வேண்டாம்//

    சூப்பர் ட்ச்.

    ReplyDelete
  12. நண்பர்களே,

    இந்த மாதிரி எங்கள் தலைவரை,தமிழகத்தின் நிரந்தர முதல்வரை, அடுத்த பிரதமரை, கிண்டல் செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    1977 படம் பார்க்காமல் தப்பிப் பிழைத்த பெயர் சொல்ல விரும்பாத பரந்தாமன்.

    சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் ரசிகர் மன்ற தலைமை அதிகாரி

    உஸ்பெகிஸ்தான் கிளை

    ReplyDelete
  13. பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே,

    முன்பு யாரோ ஒரு காமிக்ஸ் ரசிகர் லயன் காமிக்ஸ் இதில் எழுதிய கடிதம் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.

    காட்டின் அரசன் லயன்,

    காமிக்ஸ் அரசன் லயன்;

    தமிழ் காமிக்ஸ் உலகின் அரசன் டாக்டர் செவன்.

    (கடைசி வரி நான் ரைமிங் ஆக சேர்த்தது).

    எப்படி?

    ReplyDelete
  14. அனைத்து பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன்., நன்றி தல..,

    ReplyDelete
  15. காமிக்ஸ் டாக்டரே!

    லயனின் முதல்வருட வரலாற்றை இதழ்களின் அட்டைப்படங்களையும் சிங்கத்தின் சிறுவயதில் தொடரையும் முழுமையாக வெளியிட்டதின் மூலம் தெளிவாக சொல்லி விட்டீர்கள். லயனின் ஆரம்பகால இதழ்கள் இல்லாதவர்களுக்கு உங்கள் பதிவு ஒரு பொக்கிஷம்!

    //“இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும், எனக்கு சிலை வெப்பாங்க, ஸ்டூடண்ட்ஸெல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க…!” //

    நீங்கள் எடுத்தாளும் கவுண்டமணி வசனங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கின்றன. மேலும் பதிவிற்கு ஒரு கல கலப்பான தொடக்கத்தை இந்த வசனங்கள் கொடுக்கின்றன. தொடரட்டும் இந்த பாணி!

    காமிக்ஸ் ப்ரியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. காமிக்ஸ் டாக்டரே,

    அருமையான பதிவு. சிறப்பாக இருந்தது அட்டைப் படங்கள்.கருத்தை கவரும் வகையில் இந்த அட்டைப் படங்களை ஒருங்கே பார்க்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்த உங்களுக்கு கோடானு கோடி நன்றி.

    சமீபத்தில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது.அதில் கீழ்க் காணும் அனைத்து புத்தகங்களையும் சேர்த்து விலை ஏழாயிரம் என்று கூறி இருந்தார் ஒருவர். தனி புத்தகத்தின் விலை ஆயிரமாம், மொத்தமாக வாங்கினால் ஐந்நூறு ரூபாயாம்.

    இது போன்றவர்களை நான் எப்போதுm அனுமதிப்பதில்லை என்பதால் நிராகரித்து விட்டேன். ஆனால் அவற்றை எல்லாம் ஒருங்கே விலையே இல்லாமல் பார்க்கச் செய்த உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?

    ஆசிரியர் விஜயனின் எழுத்துக்களுக்கு நானும் ஒரு ரசிகன். முதலில் அவரின் ஹாட் லைனை படிப்பேன், பிறகு சிங்கத்தின் சிறு வயதில், பின்பு தான் கதை.

    தொடர்ந்து எங்களை மகிழ்விக்கும் உமக்கு நன்றி.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
    புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

    ReplyDelete
  17. தலைவரே,

    //இப்பதிவைப் படிக்கும் அனைவரும் உடனடியாக நமது மூன்று காமிக்ஸ் வெளியீடுகளுக்கும் ஓராண்டு சந்தாவும், XIII JUMBO ஸ்பெஷலுக்கு மினிமம் ஒரு முன்பதிவாவது செய்துவிட வேண்டும் என்பது அகிலமே அஞ்சும் அ.கொ.தீ.க. தலைவரின் அரசாணை!//

    இதனை நான் வழி மொழிகிறேன்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
    புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

    ReplyDelete
  18. எங்கள் தலைவர் விஜயனின் அனைத்து பக்கங்களையும் படிக்க வழி செய்த உமக்கு இரண்டாவது நன்றி.

    ReplyDelete
  19. டாக்டரே,

    முழுமையான, அருமையான, திருப்த்தியான, உண்மையான, திறமையான, பிரமாதமான, அற்புதமான, .........................................

    சிறந்த பதிவு இது.

    வேறு வார்த்தைகளே இல்லை. சூப்பர். நீ, நீ மட்டுமே என்பதற்கு உதாரணம் நீங்கள் தான்.

    ReplyDelete
  20. மிக நன்றாக இருக்கின்றது .... இது மாதிரி எல்லா காமிக்ஸ் அட்டை படங்களையும் போட்டாள் மிக நன்றாக இருக்கும்....

    சிங்கத்தின் சிறுவயதில்…!

    ஒரே முச்சில் படித்து முடித்துவிட்டேன் .......

    ReplyDelete
  21. அந்த கவுண்டமணி பஞ்ச எல்லாம் எங்கிருந்து தான் பிடிக்கிறீர்களோ?

    எல்லாமே அருமை மற்றும் தொடர்புடையவை.

    சூப்பர்.


    ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  22. பதிவை இன்னும் எவ்வளவு மணி நேரம் ஆனாலும் பார்த்து கொண்டே இருக்கலாம், அட்டை படங்கள் அவ்வளவு அருமை.

    இந்த கபாலர் கழகம், ஜான் மாஸ்டர் பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா? ஆர்வமாக உள்ளது.

    ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  23. //நமது அபிமான லயன் காமிக்ஸ் புவியில் ஒளியூட்ட உதித்த வருடம் அதுதான்!//

    கவிதை, கவிதை.

    ReplyDelete
  24. Dr 7,

    hats off to your timing and dedication.

    this is the best way to pay tribute to our best comics editor.

    continue.

    ReplyDelete
  25. your next post? ripleys.

    is that a horror/ghost story or the one we have in news papers?

    ReplyDelete
  26. காமிக்ஸ் பிரியரே,

    ////இதற்கு முன்பும் சரி, பின்னும் சரி எந்த ஒரு மாத இதழும் ஒரே வருடத்தில் 14 இதழ்கள் வெளியிட்டதாக சரித்திரமும் இல்லை, பூகோளமும் இல்லை//
    குடிமையியல் என்று ஒன்று இருக்கிறதே, அதனை மறந்து விட்டீர்களோ?//

    பன்ச் டையலாக் சொன்னால் அனுபவிக்கனும், ஆராயக் கூடாது.

    வேற ஒன்னும் இல்ல, இப்ப தான் நம்ம கமல் நடிச்ச பம்மல் கே சம்பந்தம் படத்த ஹிந்தியில பார்த்துட்டு கடுப்பாகி வந்து இருக்கேன் (Kambaqt Ishq - Akshay, kareena, sylvestor stallone, denise richards etc), அதான் இந்த டையலாக்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  27. //காட்டின் அரசன் லயன்,

    காமிக்ஸ் அரசன் லயன்;

    தமிழ் காமிக்ஸ் உலகின் அரசன் டாக்டர் செவன்.//

    யாராவது நம்ம கொலை வெறி கவிஞரை ஜாமீன்ல கொண்டு வாங்கப்பா. போட்டிக்கு போட்டியா கவிதை எழுத வைக்கலாம்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  28. ஜாலி ஜம்ப்பரே,

    //இந்த கபாலர் கழகம், ஜான் மாஸ்டர் பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா? ஆர்வமாக உள்ளது.//

    கபாலர் கழகம் இதுவரையில் மூன்றே முறை வந்த ஒரு குழுவின் முதல் கதை.

    இந்த கதையை நான் ஆங்கிலத்திலும் படித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

    இதனைப் பற்றிய டீடெயில் ஆன பதிவு கிங் விஸ்வா'விடம் இருந்த இந்த மாதத்தில் வரும்.

    ஜான் மாஸ்டர் ஒரு புதிர். இதற்க்கு நண்பர் கிங் விஸ்வா' தான் பதில் சொல்லணும்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  29. Dear Blogger,

    //your next post? ripleys.

    is that a horror/ghost story or the one we have in news papers?//

    it is not about the Horror ghost story series. It is a Post with a difference. Just wait and watch.

    Let me tell you, You'll never regret the waiting period.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  30. From the desk of rebel ravi:

    dr,

    excellent post on the 1st yr of lion comics. the cover scans are magnificent.

    Jai Ho.
    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  31. From the desk of rebel ravi:

    special thanks for the singathin siru vayadhil scans.

    the editor shoud come out with this as a special edition.

    Jai ho.
    Rebel ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!