Thursday, October 15, 2009

தீபாவளி மலர்!

முத்து # 008 - இமயத்தில் மாயாவி - முன்னட்டைப்படம்
முத்து # 008 - இமயத்தில் மாயாவி - முன்னட்டைப்படம்
முத்து # 008 - இமயத்தில் மாயாவி - பின்னட்டைப்படம்
முத்து # 008 - இமயத்தில் மாயாவி - பின்னட்டைப்படம்
முத்து # 193 - இமயத்தில் மாயாவி - மறுபதிப்பு
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 007 - இமயத்தில் மாயாவி
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 007 - இமயத்தில் மாயாவி
Fleetway Super Library - Stupendous Series # 009 - Forbidden Territory
FLEETWAY SUPER LIBRARY - STUPENDOUS SERIES # 009 - FORBIDDEN TERRITORY
Fleetway Super Library - Stupendous Series # 009 - Forbidden Territory - Page 3
FLEETWAY SUPER LIBRARY - STUPENDOUS SERIES # 009 - FORBIDDEN TERRITORY – PAGE 3
இமயத்தில் மாயாவி - பக்கம் 3
இமயத்தில் மாயாவி – பக்கம் 3
பொதுஜனம் : “சாமி… ஐஸ் வெள்ளிங்கிரி மலைன்னா…
அது இமயமலை மாதிரிங்களா?”
ஐஸ் வெள்ளிங்கிரி மலை ஆக்கஜுருஜுருருரப்பாய் அப்புசாமி  : “நீ சொல்றது சாதாரண ஐஸ் மலை!
நான் இருந்தது சேமியா ஐஸ் மலை!”
   

-கவுண்டமணி (படம்: நானே ராஜா நானே மந்திரி)

வணக்கம்,

அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி சிறப்புப் பதிவாக முத்து காமிக்ஸ்-ன் முதல் தீபாவளி மலர்-ஐ உங்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறேன்!

கதைச்சுருக்கம்:

1972 நவம்பர் மாதம் தீபாவளி சிறப்பிதழாக இரும்புக்கை மாயாவி (வேறு யார்?) “இந்திய விஜயம்!” என்று விளம்பரப்படுத்தப்பட்டு வெளிவந்த கதைதான் இமயத்தில் மாயாவி!

இதோ இந்த கதைக்கு வெளியிடப்பட்ட விளம்பரம், கதைச்சுருக்கத்துடன்! கதை கிட்டத்தட்ட கொரில்லா சாம்ராஜ்யம் கதைதான். கொரில்லாக்களுக்கு பதில்  பனி மனிதர்கள் (YETI).

இமயத்தில் மாயாவி - விளம்பரம்

புகழ் பெற்ற மலையேறும் வீரர் ஜான் ஹென்றி-ஐ மர்ம நபர்கள் கடத்தி விடுகின்றனர்! அவரைத் தேடி இமய மலையிலுள்ள மோபால் நாட்டிற்கு செல்கிறார் மாயாவி! அங்கு பனி மனிதர்களின் தாக்குதலிலிருந்து தப்பி எதிரிகளின் பாசறைக்கு வந்தடைகிறார்! இதன் பின்னனியில் தன் பரம விரோதிகளான க.கொ.க.கூ. (நமது காமிக்ஸ் பிரியர் தற்போது தலைவராக இருக்கும் அதே நிறுவனம் தான்) இருப்பதைக் கண்டுகொள்கிறார்!

க.கொ.க.கூ. தலைவராக வரும் டோகோ கான் தான் கதையின் வில்லன்! மின்சாரதால் கட்டுப்படுத்தப்படும் பனி மனிதர்களைக் கொண்டு இமயத்தில் இந்தியாவிற்கு பாதையாக விளங்கும் மோபால் நாட்டினை கைப்பற்றுவதே இவனது திட்டம்! ஜான் ஹென்றி இப்பனி மனிதர்களை கண்டுகொண்டபடியால் அவரை கடத்துகிறான்!

மோபால் மன்னரையும் பனி மனிதர்கள் கொண்டு கடத்துகிறான்! அவரை மூளைச்சலவை செய்து நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அவனது நோக்கம்! மூளைச்சலவைக்கு அவன் மின்சாரத்தையே பயன்படுத்தப் போவதாகவும், அதற்கான சோதனை முயற்சியில் மாயாவியை பயன்படுத்தவும் முடிவெடுக்கிறான்!

டோகோ கான்!

டோகோ கான்!

க்ளைமாக்ஸில் வழக்கம் போல மாயாவியிடமிருந்து உண்மைகளை வரவழைக்கிறேன் பேர்வழி என்று அவரது உடலில் மின்சாரத்தை செலுத்தி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் வில்லன்கள் இன்னும் எத்தனை கதைகளில் தான் வருவார்களோ? ஆனாலும் மாயாவி ஒவ்வொரு முறையும் மாயமாக மறையும் போதும் நாம் அடையும் பரவச இன்பம் இன்னும் எத்தனை முறை இது போன்ற கதைகள் வந்தாலும் நம்மை வரவேற்கவே தூண்டும்!

காமிக்ஸ் குத்து!

முல்லை தங்கராசன்-ன் நயமான மொழிபெயர்ப்பில் சுமாரான கதை கூட சூப்பராக மாறிவிடும் என்பதற்கு இக்கதை சான்று! மாயாவி பேரரசு ரேஞ்சுக்கு ‘பன்ச்’ வசனங்களால் நம்மையெல்லாம் பரவசப் படுத்துகிறார்! சாம்பிளுக்கு ஒன்று! எதிரிகளிடம் சிக்கிக் கொண்ட மாயாவியை விசாரிக்கும் காட்சியில் இடம் பெறும் வசனங்கள் இவை!

எதிரி : “உன் பெயர் என்ன?”
மாயாவி : “உண்டுவளர்ந்தான்!”
எதிரி : “செயற்கை கை! உனக்கு எப்படி வந்தது?”
மாயாவி : “அப்படிக் கேள்! பழைய இரும்புக் கடையில் வாங்கினேன்!”

இலவச இனைப்பு: 

இந்த இதழுடன் இலவச இனைப்பாக தங்க மீன் புத்தகம் வழங்கப் பட்டது! துரதிர்ஷ்டவசமாக அப்புத்தகத்தை நான் கண்ணால் கூட கண்டதில்லை! யாரேனும் அந்தப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருந்தீர்களானால் புகைப்படம் அல்லது ஸ்கேன் அனுப்புங்களேன்… ப்ளீஸ்!

இதோ இலவச இனைப்பு குறித்த விளம்பரம் உங்கள் பார்வைக்கு!

இமயத்தில் மாயாவி - இலவச இனைப்பு - விளம்பரம்

பதிப்புகள்:

இங்கிலாந்தின் ஃப்ளீட்வே (FLEETWAY) நிறுவனம் மே 1967-ல் வெளியிட்ட டைஜஸ்ட் வடிவிலான காமிக்ஸ்களில் ஸ்டுபென்டஸ் ஸீரீஸ் (STUPENDOUS SERIES) எனும் தொடரில் ஒன்பதாவது இதழான ஃபார்பிட்டன் டெரிட்டரி (FORBIDDEN TERRITORY) எனும் கதைதான் இமயத்தில் மாயாவி-ன் மூலம்.

நவம்பர் 1972-ல் தீபாவளி மலராக முத்து காமிக்ஸின் எட்டாவது இதழாக முல்லை தங்கராசன்-ன் முத்தான மொழிபெயர்ப்பில் இக்கதை முதன்முதலில் தமிழுக்கு வந்தது.

அதன் பிறகு முத்து # 193 - மே 1991-லும், காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 007 - ஜனவரி 2001-லும் இக்கதை மறுபதிப்பு செய்யப்பட்டது. இன்னும் எத்தனை முறை வந்தாலும் இக்கதைக்கான வரவேற்பு காமிக்ஸ் ரசிகர்களிடையே குன்றவே குன்றாது! இக்கதைக்கு தமிழில் கிடைத்த வெற்றிக்கு முல்லை தங்கராசன்-ன் மொழிபெயர்ப்பு மாபெரும் பங்கு வகிக்கிறது.

ஆசிரியர் பார்வை:

இக்கதை காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-ல் மறுபதிப்பு செய்யப்பட்ட போது ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் சிலாகித்து எழுதியிருந்த தலையங்கப் பகுதி இதோ உங்கள் பார்வைக்கு! இப்போதெல்லாம் அவர் இது போல் எழுதுவதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்!

காமிக்ஸ் க்ளாசிக்ஸ் # 007 - OLD IS GOLD

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்! அனைத்து ஸ்கேன்களையும் அளித்துதவிய நண்பர் முத்து விசிறிக்கு மனமார்ந்த நன்றிகள்!

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்: 

முத்துவின் முதல் இதழ் - இரும்புக்கை மாயாவி:

இரும்புக்கை மாயாவி:

காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பற்றிய இடுகைகள்:

பிற சிறப்பிதழ்கள்:

முத்து இதழ்களின் முழு விவரம்:

ஃப்ளீட்வே/முத்து - ஒரு பார்வை:

14 comments:

 1. Arputhamaana Pathivu Dr 7. Punch vasanangal ippothuthellam varuvathillai enbathu varundha vendiya vishayam. Editor has mentioned in one of his hot-line that he has to invent wise-cracks for some of the Tex Willer stories recently, though they were not there in the originals.

  Anaivarukkuma Iniya Deepavali Nalvazhthukkal!!!

  ReplyDelete
 2. "அனைத்து ஸ்கேன்களையும் அளித்துதவிய நண்பர் முத்து விசிறிக்கு மனமார்ந்த நன்றிகள்!" இது கொஞ்சம் மட்டும்தான் உண்மை. 8 மற்றும் 193 அட்டைப்படங்களை இப்போதுதான் முதன்முறையாக பார்கிறேன். ஏன் இந்த சோம்பேறித்தனம் டாக்டர். யார் ஸ்கேன்களை கொடுத்தார்களோ அவர்கள் பேரை போட என்ன தயக்கம்?

  ReplyDelete
 3. தலைவரே,

  சிறப்பான பதிவு, அதிலும் அந்த 1972ம் ஆண்டு அட்டைப்பட ஸ்கேன்கள் மனதை எளிதாகக் கொள்ளை கொண்டு விடுகின்றன.

  ஒர் பிறமொழி காமிக்ஸின் வெற்றி அதன் மொழிபெயர்ப்பில் நிச்சயம் தங்கியிருக்கிறது. திரு.முல்லை தங்கராசன் அவர்களின் தேர்ந்த மொழிபெயர்ப்பால் காமிக்ஸ் மேல் காதல் கொண்ட உள்ளங்களும் உண்டு.

  நான் கண்ணிலே கண்டிராத இந்த அரிய காமிக்ஸ் குறித்து பதிவிட்ட உங்களிற்கு என் உளமார்ந்த நன்றிகள் தலைவரே.

  ReplyDelete
 4. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. தலைவருக்கும் தொண்டர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. தலைவரே,

  முத்து காமிக்ஸ் ஆரம்ப காலத்தில் வந்த கதை விளம்பரங்கள் என்னுடைய மனதி கொள்ளை கொண்டவை. உங்களின் பதிவுகளில் அவற்றை மறுபடியும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

  இந்த மாதிரி விளம்பரங்கள் ஒரு திரைப்பட டிரைலர் போல ஆவலை தூண்டுபவை.

  ReplyDelete
 7. அற்புதமான பதிவு. நான் இந்த ரீபிரின்டை படித்து இருக்கிறேன். காமிக்ஸ் கிளாசிக்ஸ் புத்தகத்தில் பிரிண்டிங் நன்றாக வரவில்லை. இருந்தும் வாங்கினேன்.

  உங்களுக்கு என்னுடைய விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்.

  இந்த கவுண்டர் பன்ச்சுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்? முதலில் அந்த பன்ச் எனக்கு புரியவில்லை.

  ReplyDelete
 8. ஸ்கான்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 9. wonderful post.

  iam also planning to do a spl diwali post. it will be done tomorrow.

  the book, it seems, will never been seen for most of the comics lovers eyes. it was such an old gem that it will be a dream to see that again.

  now a days, the 1st reprint in the 90's itself was a rare thing. so, imagine about the original which came in the 70's. amazing.

  the way you post your postings is a treat to read and look. amazing way.

  happy diwali to you as well.

  ReplyDelete
 10. the removal of the side bar designs (i hated the removal) is a blessing in a way as you can post all the content in a easy way.

  this new format and design is nicer to read.

  p.s: the design of another blog - bruno brazil- is also changed now.

  ReplyDelete
 11. தலைவரே ,
  மறு பதிப்பு அட்டை படத்தை விட முதல் பதிப்பு அட்டை படமே என்னை மிகவும் கவர்ந்தது . நானும் அடுத்து ஒரு இரும்பு கை மாயாவி பதிவுக்கு தயாராகி கொண்டு இருக்கிறேன் .
  அன்புடன் ,
  லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்

  ReplyDelete
 12. படங்கள் அனைத்தும் அருமை.

  நம்முடைய காமிக்ஸ் கதைகளில் அதன் மொழி பெயர்ப்பாளர்களை பற்றிய விவரம் வெளியிடப்படுவது இல்லை. அது ஒரு குறையே. ஓரிரு முறை விஜயன் அந்த முயற்சியை மேற்க்கொண்டார். பின்னர் அதுவும் இல்லை. இது போன்ற ரீ பிரிண்டுகளை வெளியிடும்போது அதன் மொழி பெயர்ப்பலரை பற்றி குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

  செய்வார்களா?

  ReplyDelete
 13. nanri nanbare arumaiyana pathivu! intha theepavalikku ethuvum puthu varavugal illai enralum umathu idugai migavum enjoy panna vaithathu! thanks a lot! keep it up!

  ReplyDelete
 14. comics kathalan karuthil enakkum udanpade!
  kai thookuravangallam thookungoppa pls!
  appathan vijayan ketparu!

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!