வணக்கம்,
தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு அடியேனின் புனித வெள்ளி, மற்றும் உயிர்த்த நன்ஞாயிறு நல்வாழ்த்துக்கள்!
கோடை விடுமுறைகள் ஆரம்பித்துவிட்டன. இந்த காலகட்டத்தில் நம் நினைவில் நிற்பதெல்லாம் சிறுவயதில் நாம் படித்து ரசித்து அகமகிழ்ந்த கோடை மலர்கள் தான். ஆகையினால் இந்தக் கோடைக் காலத்தின் வெம்மையைப் போக்கத் தமிழில் வெளிவந்த கோடை மலர்கள் பற்றிய பதிவுகள் அடுத்தடுத்து வந்து உங்களை அதிரடியாகத் தாக்கத் தயாராக இருக்கின்றன, உஷார்!
இந்தப் பதிவிற்கு நான் தேர்ந்தெடுத்துள்ள கோடை மலர், முத்து#167-முத்து ஸ்பெஷல்!
முத்து#167 - முத்து ஸ்பெஷல்! – அட்டைப்படம்
அட்டைப்படத்தை ‘க்ளிக்’கிப் பெரிதாக்கி உற்று நோக்குங்கள்! எங்கோ பார்த்த மாதிரி உள்ளதா? சந்தேகமே வேண்டாம், இது 1987-ம் ஆண்டு திமோத்தி டால்டன் நடித்து(?!!) வெளியான 007 ஜேம்ஸ்பாண்ட்-ன் 15வது திரைப்படமான த லிவிங் டேலைட்ஸ்-ன் விளம்பரப் போஸ்டரின் தழுவலேயாகும்!
JAMES BOND 007 – THE LIVING DAYLIGHTS - POSTER
20 வருடங்களுக்கு முன் இந்தப் புத்தகத்தை நான் தேர்ந்தெடுக்கப் பல காரணங்கள் உண்டு, அவற்றில் சில…
- முத்துவின் முதல் கோடை மலர்
- நான் படித்த முதல் கோடை மலரும் இதுவே
- முத்துவின் சரித்திரத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை விளைத்திட்ட இதழ் இது!
- துப்பறியும் வீரர் ஜெஸ் லாங் நமக்கு அறிமுகமானது இந்த இதழில் தான்!
அதென்ன முக்கிய சரித்திர நிகழ்வு எனக் கேட்பவர்களுக்கு இதோ பதில். இதுநாள் வரையில் முத்துவை நிர்வகித்து வந்த ஆசிரியர் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்கள் இந்த இதழுடன் ஓய்வு பெற்றுக்கொண்டு பொறுப்புகள் அனைத்தையும் தனது காமிக்ஸ் வாரிசாகிய நம் அபிமான ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்.
முத்து#168 – கடல் பிசாசு! தான் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் இதழ் என்று அவரே கூறினாலும் இந்த இதழிலிலேயே அவரது தனிப்பட்ட முத்திரைகள் பலவற்றையும் நாம் காணலாம்.
முத்து#167 - முத்து ஸ்பெஷல்! – ஆசிரியர் பக்கம் | முத்து#168 - கடல் பிசாசு! - முன்னட்டைப்படம் |
உதாரணத்திற்கு, பாக்கெட் சைஸில் ரூ:5/- விலையில் கோடை மலர்களை 1986 & 87-ம் ஆண்டுகளில் ஏற்கெனவே லயன் & திகில்-ல் வெளியிட்டுப் பெருவெற்றி பெறவைத்த சூரராயிற்றே அவர். அதிலும் தனது தந்தைக்கு பிரிவுபச்சாரம் வழங்கும் இத்தருணத்தில் இத்தகையதொரு சிறப்பிதழை அவர் வழங்கியிருப்பதில் எந்த வியப்புமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து!
இத்தகைய சிறப்பு மிக்க இதழ் எவ்வித பெரிய முன்னறிவிப்புமின்றி திடுதிடுப்பென வெளிவந்தது. இதன் விளம்பரம் ஒரேயொரு இதழில் தான் வந்தது (முத்து#166 – கொள்ளைக்காரப் பிசாசு! – மறுபதிப்பு)
முத்து#166 – கொள்ளைக்காரப் பிசாசு! - விளம்பரம்
வழக்கமாக ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் ஏதேனும் சிறப்பிதழ் வெளியிட்டல் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே விளம்பரங்கள் வெளியிட்டு நமது எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிடுவதில் வல்லவர்! ஒரு வேளை முத்துவில் பரீட்சார்த்த முயற்சியாக இவ்விதழ் முதன்முறையாக வெளிவருவதால் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கலாம்!
ஓ.கே.! இனி கதைகளுக்கு வருவோம்!
கதை#1 – ஆழ்கடல் மயானம்!
ACTION PICTURE LIBRARY No.8 - TERROR OF THE DEEP(1969) - COVER |
கடலும் கடல் சார்ந்ததுமான இந்தக் கதை ஒரு அரிய பொக்கிஷமாகும்! கேப்டன் பிரின்ஸ் கதைத்தொடரை நினைவு படுத்தும் கதாபாத்திரங்கள், புதையல் வேட்டை, கடல் தேவதை என பல சுவாரசியமான அம்சங்கள் கொண்ட இக்கதை ஆங்கிலத்தில் 1969-ல் இங்கிலாந்தின் ஃப்ளீட்வே (FLEETWAY) நிறுவனத்தின் கொஞ்ச காலமே வெளிவந்த ஒரு மாதாந்திர வெளியீடான ACTION PICTURE LIBRARY-ன் 8வது இதழாக 64 பக்கங்கள் கொண்ட கதையாக வெளியானது!
மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான் ஸாண்டோ மிங்கோவில் வசிக்கும் நமது கதானாயகன் மாக்னீ கடலைச் சார்ந்து வாழும் ஒரு மாலூமி. அவனது கப்பல் ஷார்க். கப்பலில் அவனுக்கு உதவியாகப் பணிபுரிபவர்கள் ஜாக் என்னும் முரடனும், ஸ்மட்ஜ் என்னும் பொடியனும்.
மாக்னீ ஒரு முன்கோபி. கதையின் ஆரம்பத்தில் தனது படகை வாடகைக்கு எடுத்து சுறா வேட்டைக்குச் செல்லும் ஒரு செல்வந்தரோடு மோதிக்கொள்கிறான். ஸ்மட்ஜ் அவனை சாந்தப் படுத்துகிறான். கரைக்குச் சென்று சிறையில் ஒரு கைகலப்பில் ஈடுப்பட்டு மாட்டிக்கொண்ட ஜாக்கை அபராதம் கட்டி விடுவிக்கிறான் மாக்னீ.
தனது பழைய நண்பரான புரபஸர் பில்-லுடன் சம்மட்டித் தலை சுறாவின் குட்டி ஒன்றைப் பிடிக்க ஆழ்கடல் மயானம் எனத் தீவுவாசிகளால் அழைக்கப்படும் ஆபத்தானப் பகுதிக்குச் செல்கிறான். அப்பகுதியைக் காத்து வரும் கடல் தேவதை பற்றி ஸ்மட்ஜ்-ன் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கடலுக்குள் பாய்கிறான் மாக்னீ.
கடலுக்கடியில் ஒரு ராட்சஸ சம்மட்டித்தலை சுறாவுடன் மோதும் மாக்னீ அங்கு கிடக்கும் ஒரு பாழடைந்த கப்பலைக் காணுகிறான். சுறாக்குட்டியுடன் வெற்றிகரமாகத் திரும்புகிறான். புரபஸருடன் மீண்டும் கடலுக்குள் சென்று கப்பலின் பீரங்கியை மீட்டெடுத்து வருகிறான்.
அதன் மூலம் கப்பலின் பெயர் ஸான் கிறிஸ்டோபல் என்று அறிகிறார்கள். அதில் ஒரு புதையல் இருப்பதும் தெரிய வருகிறது. புதையல் வேட்டைக்குக் கிளம்புகிறான் மாக்னீ.
அப்போது ரிச்லிண்டர் என்னும் பேராசைக்காரச் செல்வந்தன் மாக்னீயைத் தன்னுடன் கூட்டு சேருமாறு அழைக்கிறான். கோபத்துடன் மறுத்துவிட்டுச் செல்லும் மாக்னீயை தனது மைதாஸ் (என்ன ஒரு பெயர்ப் பொருத்தம்) கப்பலில் பின்தொடர்கிறான் ரிச்லிண்டர்.
கடலில் அவர்கள் பல இன்னல்களைச் சமாளிக்கின்றனர். இவையெல்லாம் கடல் தேவதையின் எச்சரிக்கைகள் எனக் கூறுகிறான் ஸ்மட்ஜ். கடலுக்குள் செல்லும் மாக்னீயும், ஜாக்கும் புதையல் இருக்கும் பெட்டியைக் காப்டனின் அறைக்குள் கண்டெடுக்கும் காட்சி அதியற்புதமானது. வார்த்தைகளால் விளக்குவதைவிட நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்களேன்!
அப்போது அடிபட்டு மயங்கிவிடும் மாக்னீயைச் சுமந்துகொண்டு நீருக்குமேல் விரையும் ஜாக்கை எதிர்கொள்கின்றனர் ரிச்லிண்டரும் அவனது கைக்கூலிகளும். புதையலின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் ரிச்லிண்டர் தனது ஆட்களை அனுப்புகிறான். அவர்களெல்லாம் விசித்திரமான முறையில் மரணமடைய ஸ்மட்ஜைப் பணையக் கைதியாகக் கொண்டு மாக்னீயை கடலுக்குள் அனுப்புகிறான் ரிச்லிண்டர்.
கடலுக்குள் கடல் தேவதையை எதிர்கொள்கிறான் மாக்னீ…
கடல் தேவதை என்பது என்ன? புதையல் யாருக்குக் கிடைத்தது? மாக்னீ, ஸ்மட்ஜ் & ஜாக் உயிருடன் திரும்பினார்களா? இக்கேள்விகளுக்கு விடையளிக்கிறது கதை!
முத்து#167 - முத்து ஸ்பெஷல்! - ஆழ்கடல் மயானம்! | ACTION PICTURE LIBRARY No.8 - TERROR OF THE DEEP(1969) - PAGE 3 |
அதியற்புதமான இக்கதையைத் தமிழில் வெளியிட்ட ஆசிரியரைப் பாராட்ட வார்த்தைகளேயில்லை. த அபிஸ், த டீப் போன்ற ஆழ்கடல் சாகஸத் திரைப்படங்களை நினைவு படுத்துகிறது இக்கதை. அட்டகாசமான சித்திரங்கள் கதைக்குப் ப்ளஸ்! அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு…
சுழிக்காற்று! | கேப்டனின் கேபினில்… |
கடல் தேவதை! |
கனவுகளின் காதலர் ஆழ்கடல் சாகஸங்களைப் பற்றி இட்டுள்ளப் பதிவுகளைக் கீழே சுட்டியுள்ளேன். படித்து மகிழுங்கள்!
வெகுமதி!:-
இந்தப் பதிவுக்கான ‘வெகுமதி!’க் கேள்வி இதோ…
- கேப்டன் பிரின்ஸ்-க்கும் மாக்னீக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்துப் பின்னூட்டமிடுபவர்களுக்கு பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு!
கும்மியடிப்போருக்கான சிறப்புக் கேள்வி…
- கேப்டன் பிரின்ஸ்-க்கும் கேப்டன் விஜயகாந்த்-க்கும் ஆறு வித்தியாசங்களை முடிந்தால் கண்டுபிடித்து பின்னூட்டமிடுங்கள் பார்ப்போம்!
கதை#2 – சுட்டிக் குரங்கு கபீஷ்!
அதிக அறிமுகம் தேவையில்லாத நமது அபிமான சுட்டிக் குரங்கு கபீஷ்-ன் சிறுகதையை நீங்கள் அனைவரும் படித்து மகிழ விரும்புவீர்கள் என எனக்குத் தெரியும்! கோடை விடுமுறை போனஸாக இதோ முழுக்கதையும் உங்களின் பார்வைக்கு! “என்சாய்!” (ஜனகராஜ், படம் – அக்னி நட்சத்திரம்)
கதை#3 – கொலைக்கரம் (மறுபதிப்பு)
சாகஸ ஜோடி ஜானி நீரோ & ஸ்டெல்லாவின் மிகச்சிறந்தக் கதைகளில் இக்கதை தலையானதாகும்! இக்கதை தமிழில் முதன்முறையாக ஃபிப்ரவரி 1974-ல் வெளிவந்தது! மறைந்த திரு.முல்லை தங்கராசன்-ன் அற்புதமான மொழிபெயர்ப்பில் வந்திட்ட இக்கதை ஒரு க்ளாஸிக் க்ரைம் த்ரில்லராகும்!
பின்னர் முத்து ஸ்பெஷல்-லும், காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-ன் நான்காவது இதழாகிய ரிவென்ஜ் ஸ்பெஷல்-லும் (ஏப்ரல் 2000-ல்) இக்கதை மறுபதிப்பாக வெளிவந்தது! இப்பதிப்புகளின் வெற்றியைப் பற்றிக் கூறவும் வேண்டுமா என்ன? கடைசியாக வெளிவந்த காமிக்ஸ் க்ளாசிக்ஸ் இதழ் கூட இப்போது அரிதாகிவிட்டது!
முத்து#023 - கொலைக்கரம்! – அட்டைப்படம்
இக்கதை ஆங்கிலத்தில் ஜனவரி 1967-ல் இங்கிலாந்தின் FLEETWAY நிறுவனத்தினர் வெளியிட்ட FLEETWAY SUPER LIBRARY-ன் SECRET AGENT SERIES தொடரின் முதல் வெளியீட்டில் நமது அபிமான சாகஸ ஜோடியை நமக்கு அறிமுகப்படுத்தியது!
ஜானி நீரோ பற்றி அறியாத அறிவிலிகளுக்கு இந்தப் பத்தியை வீணடிக்கிறேன்! ஜானி நீரோ ஒரு அசகாயத் துப்பறியும் தீரர். ரகசிய உளவுத்துறையிலிருந்து VRS வாங்கிக் கொண்டு இப்போது உலகப் புகழ்பெற்ற ஒரு வியாபார காந்தமாக விளங்குபவர். அவ்வப்போது அவரது மேலதிகாரியான கர்னல் ஜாக்கப்-பின் (இவரது உண்மையான பெயர் COLONEL JASON ஆகும், மறைந்த திரு.முல்லை தங்கராசன் அவர்களின் கைங்கர்யம்) வேண்டுகோளுக்கிணங்க சிரமமான பணிகள் சிலவற்றை மேற்கொள்வதுண்டு!
இவரது காரியதரிசி ஸ்டெல்லா (இவரது உண்மையான பெயர் JENNY BIRD ஆகும், இதுவும் மறைந்த திரு.முல்லை தங்கராசன் அவர்களின் வேலையே) அழகும், அறிவும் இனைந்த ஒரு அரிய பெண்புலி. ஜானி நீரோவின் ஆணாதிக்கத்துவத்திற்கெதிராக உருவாக்கப்பட்ட பெண்ணியப் பாத்திரம்!
ஜானி நீரோ கதைத் தொடருக்குரிய பல சிறப்பம்சங்களை இக்கதை நமக்கு அறிமுகப்படுத்துகிறது! உலகையே மிரட்டும் ஒரு சூப்பர் வில்லன், கர்னல் ஜாக்கப்பின் அதிரடி எண்ட்ரிக்கள், ஜானி நீரோ ஸ்டெல்லாவை ஒதுக்குவதும், ஸ்டெல்லா பின்னர் வந்து ஜானியைக் காப்பதும், அட்டகாசமான இறுதி மோதல் என அனைத்து விஷயங்களும் இக்கதையில் உண்டு!
உலகின் தட்பவெப்ப நிலையை மாற்றியமைக்கக்கூடிய ஒரு கருவியைக் களவாடி, அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானியையும் கொன்றுவிட்டு உலகை அச்சுறுத்துகிறான் ஒரு மர்ம மனிதன். அவனைக் கண்டுபிடிக்க ஜானி நீரோவை அனுகுகிறார் கர்னல் ஜாக்கப்.
அவனை கண்டுபிடித்து ஜானி நீரோ உலகை எப்படிக் காக்கிறார் என்பதே கதை! சாதாரணமாகத் தோன்றும் இக்கதையில் வரும் வில்லனாகிய மைக்கேல்-ன் கதாபாத்திரப் படைப்பின் மூலம் கதையின் தரம் உச்சத்தை எட்டுகிறது!
ஒற்றைக் கையால் எதிரிகளின் கழுத்தை முறிக்கும் ஆற்றல் வாய்ந்த மைக்கேலை ஜானி நீரோ ஒவ்வொரு முறை எதிர்கொள்ளும் போதும் அனல் பறக்கும்! அற்புதச் சித்திரங்கள் கதையின் தரத்தை மேலும் மெருகூட்டுகிறது!
பங்கு வேட்டையர்-க்கு ஜானி நீரோ பிடிப்பதில்லை என்பது உலகறிந்ததே! இக்கதையை அவர் படித்த பின்பும் அவருக்கு ஜானி நீரோ பிடிக்கவில்லையெனில் அவரது பரினாம வளர்ச்சியில் ஏதோ கோளாறு உள்ளது என எண்ணவேண்டியிருக்கும்!
இக்கதையைப் பற்றித் தனியாக ஒரு பதிவே போட வேண்டும் என்று ஆசைதான்! ரசித்திட அத்தனை அம்சங்கள் உள்ளன! நீங்கள் விரும்பினால் பின்னொரு தேதியில் பதிவிடலாம்!
காமிக்ஸ் குத்து!:-
மறைந்த திரு.முல்லை தங்கராசன் அவர்களின் மொழிபெயர்ப்புத் திறனுக்கு மற்றூமொரு சான்று! ஆக்ரோஷமான காவல் நாயுடன் போராடி எழும் ஜானியை மிகக் காஷுவலாக வரவேற்கும் மைக்கேலின் நக்கல் சொற்களே இம்முறைக்கான காமிக்ஸ் குத்து!
JESS LONG#1 (1985) – COVER |
கதை#4 – விசித்திர வியாபாரி!
ஜெஸ் லாங் தமிழில் அறிமுகமான கதை! பல நாட்களாக விளம்பரம் மட்டுமே படுத்தப்பட்ட ஹீரோ இவர். வந்த பிறகு ஏமாற்றவில்லை! அட்டகாசமானதொரு ஆக்ஷன், சஸ்பென்ஸ் கலந்த போலீஸ் த்ரில்லருடன் நம்மை பரவசப்படுத்துகிறார் ஜெஸ்!
கடத்தல் கும்பல் ஒன்றின் மிரட்டலுக்குப் பணிந்து ஒரு அப்பாவி ட்ரக் ட்ரைவரும் அவரது மகளும் சட்ட விரோதமான சரக்கொன்றை ஏற்றிச் செல்கின்றனர். வழியில் போலீஸாரால் துரத்தப்படும் போது நேரும் விபத்தில் தந்தை இறந்து விடுகிறார். மகளைப் பணயமாகக் கொண்டு எதிரிகளை எப்படி ஜெஸ் லாங் முறியடிக்கிறார் என்பதே கதை!
அட்டகாசமான துரத்தும் காட்சிகள் (சேஸிங்) கதையின் ஹை-லைட். இக்கதை 70& 80-களில் வெளிவந்தப் பல பிரபலமான கார் சேஸிங் திரைப்படங்களை நினைவூட்டுகிறது!
முத்து#167 - முத்து ஸ்பெஷல்! – விசித்திர வியாபாரி! | JESS LONG#1 (1985) - PAGE 17 |
கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சரக்கு உண்மையில் அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் சட்டவிரோதமாக நுழைய முயலும் பிற நாட்டவர் ஆவர் (குறிப்பாக லத்தீன் அமெரிக்கர்கள்). இது போன்ற ஆட்கடத்தும் மாஃபியாக்கள் அங்கு பிரபலம். ஆனால் தமிழில் பியூர்ட்டோரிகோ நாட்டைச் சேர்ந்தவர்களை சிலோன் அகதிகள் என ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு வேளை கதை வெளிவந்த 1988-ல் (நான் அப்போது பச்சிளம் பாலகன்) போர் காரணமாக இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து அகதிகள் பலர் வந்து தஞ்சம் அடைந்திருக்கலாம்! இது போல லோக்கல் டச் கொடுப்பதில் நம் ஆசிரியர்தான் வல்லவராயிற்றே!
ஜெஸ் லாங் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நண்பர் கிங் விஸ்வா இட்டுள்ள பதிவை இங்கே ‘க்ளிக்’கிப் படிக்கவும்
கதை#5 – ஸ்விட்சர்லாந்தில் மாயாவி!
இரும்புக்கை மாயாவியின் சிறுகதை! இக்கதை BOULDERMAN என்ற பெயரில் VALIANT வாராந்திர இதழில் 29-11-69 முதல் 10-01-70 வரை மொத்தம் 7 வாரங்கள், வாரம் 2 பக்கங்கள் வீதம் வெளிவந்தது! பின்னர் VULCAN HOLIDAY SPECIAL (1976)-ல் மொத்தமாக மறுபதிப்பு செய்யப்பட்டது!
- கதை : டாம் டல்லி (TOM TULLY)
- ஓவியம் : கார்லோஸ் க்ரூஸ் (CARLOS CRUZ)
முத்து#167 - முத்து ஸ்பெஷல்! கதை#5 – ஸ்விட்சர்லாந்தில் மாயாவி!
14 பக்க சிறுகதையை தமிழில் 40 பக்கங்களுக்கு மாற்றி வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர். இக்கதையை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் நண்பர் லிமட்டின் வலைப்புவிற்கு சென்று டவுன்லோடு செய்து படித்து மகிழலாம்! தரவிறக்கம் செய்ய இங்கே ‘க்ளிக்’கவும்! “என்சாய்!” (ஜனகராஜ், படம் – அக்னி நட்சத்திரம்)
இப்படியொரு சிறப்பான புத்தகத்தை நமக்களித்த ஆசிரியர்கள் திரு.M.சவுந்திரபாண்டியன் அவர்களுக்கும், திரு.S.விஜயன் அவர்களுக்கும் நம் அனைவரின் சார்பிலும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்! வழக்கம்போல ஆங்கில பதிப்புகளின் அத்தனை விபரங்களையும் அளித்த நண்பர் முத்து விசிறிக்கு மனமார்ந்த நன்றிகள்!
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
பி.கு.:-
- நான் இல்லாத நேரத்தில் வலையுலகில் பற்பல மாற்றங்கள்! இன்னமும் நான் வலையுலகிற்கு முழுமையாகத் திரும்ப இயலாததால் அவற்றைப் படித்துக் குறிப்பிட முடியாமைக்கு வருந்துகிறேன்! இப்பதிவைக் கூட தலைமையகத்திலிருந்தல்லாமல் வெளியில் ஒரு ரகசிய வலை மேயும் தளத்திலிருந்து வெளியிட வேண்டியிருந்தது! ரொம்ப நாளாக இத்தருணத்தை எதிர்பார்த்துத் தயாரிப்பில் இருந்தபடியால் தான் பதிவைச் சிரமமின்றி வெளியிட முடிந்தது! காத்திருந்த அனைவருக்கும் நன்றிகள்!
தொடர்புடைய இடுகைகள்:-
கனவுகளின் காதலர்-ன் கடலும் கடல் சார்ந்தக் கதைகளும்:
- http://kanuvukalinkathalan.blogspot.com/2009/04/blog-post_09.html
- http://kanuvukalinkathalan.blogspot.com/2009/01/blog-post_4049.html
ஜெஸ் லாங் பற்றி கிங் விஸ்வாவின் இடுகை:
முத்துவின் முதல் இதழ் - இரும்புக்கை மாயாவி:
- http://muthufanblog.blogspot.com/2008/07/i-have-been-collecting-english.html
- http://muthufan.0catch.com/firstmuthu.html
- http://muthufan.tripod.com/firstmuthu.html
இரும்புக்கை மாயாவி:
- http://muthufan.0catch.com/Maayavi.htm
- http://muthufan.tripod.com/Maayavi.htm
- http://sharehunter.wordpress.com/2008/10/17/comicssupers2/
- http://sharehunter.wordpress.com/2008/10/21/ironclaw2/
- http://akotheeka.blogspot.com/search/label/இரும்புக்கை%20மாயாவி
காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பற்றிய இடுகைகள்:
- http://muthufanblog.blogspot.com/2005/10/thanks-for-encouraging-messages-for-my.html
- http://muthufanblog.blogspot.com/2005/10/apologiesapologiesapologies-thanks-for.html
- http://muthufanblog.blogspot.com/2005/10/thanks-for-visiting-my-blog-and-big.html
- http://muthufan.0catch.com/classics/index.htm
- http://muthufan.tripod.com/classics/index.htm
- http://tamilcomicsulagam.blogspot.com/search/label/Comics%20Classics
- http://comicology.blogspot.com/search/label/Comics%20Classics
பிற சிறப்பிதழ்கள்:
பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களுக்கு,
ReplyDeleteமுத்துகாமிக்ஸ் ஸ்பெஷல் இதழ்களில் இதுதான் சிறந்தது என்று நான் கூறுவேன்.
ஆழ் கடல் மயானத்தில் நீங்கள் கப்பல் கேப்டன் தோன்றும் காட்சியை குறிப்பிட்டு கூறி இருக்கலாம். தமிழ் காமிக்ஸ் உலகத்தில் தலை சிறந்த காட்சிகளில் இதுவம் ஒன்று.
மிக மிக விரைவில் ACTION PICTURE LIBRARY-இன் முப்பது கதைகளை பற்றிய பதிவை தமிழ் காமிக்ஸ் உலகம் வலையுலகில் எதிர்பாருங்கள் தோழர்களே.
கொலைக்கரம் சாகஸ ஜோடி ஜானி நீரோ & ஸ்டெல்லாவின் மிகச்சிறந்தக் கதைகளில் இக்கதை இரண்டாவது இடத்திற்கே வரும். முதல் கதை மைக்ரோ அலைவரிசை 848. அதே சமையம் இந்த கதையும் மிக அருகில் உள்ளது. சிறப்பான வில்லன்கள் இருந்தாலே கதை சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து (பேட்மன் - ஜோக்கர்). இந்த வில்லனை யாராலும் மறக்க முடியாது.
அதே சமயத்தில் அவனை கண்டு பிடிக்க அவனின் Luxurious எண்ணமே வழி வகுப்பதையும் மறக்க இயலாது.
முல்லை தங்கராசனை பற்றி ஒன்றும் தெரியாமல் அவரின் முடிவுகளை விமர்சிக்கும் மற்றவர்களுக்கு இது ஒரு பாடம்.
//கதை வெளிவந்த 1988-ல் (நான் அப்போது பச்சிளம் பாலகன்)// நான் அப்போது பிறக்கவே இல்லை.
மாயாவியின் மொக்கை கதைகளில் இதுவும் ஒன்று.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
காமிக்ஸ் டாக்டரே,
ReplyDeleteவெகு நாள் கழித்து வந்தாலும், முத்து ஸ்பெஷல் பதிவின் மூலம் 5 கதைகள் ஒரு சேர உள்ள ஒரு புத்தகத்தை விமர்சித்து கலக்கி விட்டீர்கள். இந்த புத்தகத்தை இது வரையில் நான் படித்தது இல்லை. அந்த குறையை உங்கள் பதிவு மூலம் போக்கி விட்டீர்கள்.
// 20 வருடங்களுக்கு முன் இந்தப் புத்தகத்தை //
அப்போ இது 1989 ஆ... உண்மையிலயே அந்த சமயத்தில் நான் காசு கொடுத்து காமிக்ஸ் புத்தகம் வாங்கி கூட இருப்பேனா என்று சந்தேகமே. வாரம் 2 ரூபாய் பட்ஜெட்டில் நான் பட்டாணி சுண்டல் வாங்கவே முடியாது, இதில் காமிக்ஸ் கை கெட்டா கணிதான். காமிக்ஸ் பதிவர்களிலேயே நெடுநாள் முத்து வாசகர் நீங்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை.
முல்லை தங்கராசனின் மேத்தா காமிக்ஸ் பதிப்பை பற்றி சமீபத்தில் நான் பதிந்த போது, அவர் அதற்கு சூட்டிய பெயர் காரணம் பிடிக்காமல் அதை விமர்சித்தாலும், அவர் மொழிபெயர்ப்பில் எந்த குறையையும் கண்டு பிடிக்க முடியாது. அதற்கு தகுந்தாற்போல நீங்களும் அவரின் இன்னொரு இதழை இட்டிருப்பது அவருக்கு செய்த மிக பெரிய மரியாதையாகவே நான் எண்ணுகிறேன். பதிவை முழுவதும் படிக்காமல் கருத்திடுவோர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
// ஜானி நீரோ பற்றி அறியாத //
இதை படித்த பின்பும் யாரும் ஜானி யாரென்று கேட்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன் :). நண்பர் ஜோஷ் உட்பட :), ஆர்பாட்டம் இல்லாமல், எந்த வித நவீன உபகரணமும் இல்லாமல் அவர் செய்யும் சாகசங்களுக்கு நானும் ரசிகன். அவரைப் பற்றி ஒரு தனி பதிவுக்கு என்னுடைய ஓட்டை எண்ணி கொள்ளுங்கள்.
கூடவே நமது சுதேசி தயாரிப்பான கபீஷை முழு கதையும் வெளியிட்டு அமர்களப்படுத்தி விட்டீர்கள். டிங்கிள் மூலம் அறிமுகமான இவரை பற்றி நான் ஒரு பதிவு இட மிக காலம் எண்ணி கொண்டிருந்தேன். இப்போது அதற்கு சேர்ப்பித்து கொள்ள இன்னொரு ஸ்கான் அளித்தமைக்கு நன்றி.
// ஒரு வேளை கதை வெளிவந்த 1988-ல் (நான் அப்போது பச்சிளம் பாலகன்) //
நான் நம்பி விட்டேன் சந்தோசமா.... :)
அடுத்த பதிவும் இன்னொரு சம்மர் ஸ்பெஷலா கலக்குங்கள். ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
//காமிக்ஸ் பதிவர்களிலேயே நெடுநாள் முத்து வாசகர் நீங்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை.//
ReplyDeleteநண்பர் ரஃபிக்,
அந்தப் பெருமை என்னைச் சாராது, முத்து விசிறியே அதற்குரியவர்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
தலைவரே, முத்து விசிறியை இப்போதெல்லாம் நான் ஒப்பீடுக்கு கூட சேர்ப்பதில்லை. காமிக்ஸ் ரசிகர்களில் அவருக்கு என்று தலைமையான தனி இடம் உண்டு என்று யாவரும் அறிந்ததுதானே. நம் வலைப்பக்கத்துக்கு எல்லாம் முன்னோடியாயிற்றே.
ReplyDeleteஅவர் வலைப்பூவில் அவரை தவிர முதல் பதிவை இட்ட இன்னொருவர் நீங்கள் தான். எனவே முதன்மை ரசிகர் என்ற பெருமை உங்களையும் சாரும் :)
கூடவே இப்படி கூறி தங்கள் வயதை குறைத்து கொள்ள முயற்சியா....? :) சரி நீங்கள் இந்தியாவின் பெஞ்சமின் பட்டன் என்று ஒத்து கொள்கிறேன். ;)
அடுத்த பதிவு எப்போது ?
நல்வரவு,
ReplyDeleteநீண்ட நாட்கள் காக்க வைத்து ஒரு அருமையான பதிவினை இட்டிருக்கிறீர்கள். கடல் பிசாசு எனக்கு மிகவும் பிடித்த சித்திரக் கதை. அக்கதையின் நாயகர்களின் சாகசங்கள் மேலும் இருக்கிறதா?
கொலைக்கரம் என்ற தலைப்புடன் வந்திருக்கும் படம் சார்பாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.
தன் மனதை கவர்ந்த கள்வன் ஜானி நீரோவின் கழுத்தை ஒரு கயவன் பிடிக்கும்போது ஸ்டெல்லாவின் ஆப்ஷன்கள்
1) புறங்கையை திருப்பி வாயின் அருகே வைத்துக்கொண்டு வீல் என அலற வேண்டும்.
2) பக்கத்தில் இருக்கும் நாற்காலி, பாட்டில், கட்டை, ஹைஹீல் செருப்பு போன்ற உபகரணத்தை கொண்டு அந்த கயவனை தாக்க வேண்டும்.
ஆனால், ஸ்டெல்லா பார்க்கும் பார்வை இருக்கிறதே. ‘இந்த ஆண்களே இப்படிதான், எசமான்’ என்ற மாதிரியல்லவா இருக்கிறது.
அடுத்தது,மைக்கேல் கையால் தாக்கி ஒருவரை வீழ்த்தவதில் வல்லவரே. சூரரும் கூட. தீரரும் கூட. வீரரும் கூட.
அப்படியாகப்பட்ட ஒருவர் கதாநாயகனின் கழுத்தை பிடிக்கும்போது கதாநாயகனின் தொண்டையிலிருந்து ‘கக் கக் அல்லது பக் பக் அல்லது ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்’ என்கிற மாதிரியல்லவா சத்தம் வரும்?
இதிலும் சொந்த அனுபவம் இருக்கிறது. நான் ஆறாவது படிக்கும்போது எட்டாவது படிக்கும் மாணவன் என் கழுத்தை பிடித்து ‘மகாக்கிட்ட இனிமே பேசுவியா?’ கேட்டபொழுது என்னால் தெளிவாக பதில் சொல்ல முடியவில்லை.
இது போன்று ஜானி நீரோவின் கதைகளில் எனக்கு ஏராளமான சந்தேகங்கள் இருப்பதால் அவற்றினை என்னால் இரசிக்க முடியவில்லை. தவறாக எண்ணவேண்டாம்.
From The Desk Of Rebel Ravi:
ReplyDeleteWow,
i have this book without cover. i used to wonder how the cover will look like. you have solved it.
thanks for the downlaod links of steel claw. is there any download link availabke for johhny nero?
i agree that this is the the best johnny nero story. The 1st story is wonderful one also.
steel claw is steel claw. even the mokkai story used to get good sales for the editors.
it was believed that if he is featured in the cover, book will be sold out.
you can check this with the publishers as all the comics classics featuring steel claw are sold out.
maayaavi still rocks.
Jai Ho.
Rebel Ravi,
Change is the Only constant thing in this world.
வாருங்கள் தலைவரே, எப்போதும் போல் அட்டகாசமான பதிவொன்றுடனும், அசத்த வைக்கும் முன்னோட்டங்களுடனும் செயமாலினி போல் ஜொலிக்கிறது இந்தப் பதிவு.[ செயமாலினி கிளுகிளு டான்ஸ் ஆடிய போது நான் ஒர் பிஞ்சு- முற்றிய]
ReplyDeleteஆழ்கடல் மயானம் கதையின் தலைப்பே சொக்க வைக்கிறதே. ஸ்கேன்கள் யாவும் அருமை. டீப் படம் பார்த்தீர்களா, அதில் கூட கதை ஏறக்குறைய இப்படித்தான்.
காப்டன் பிரின்ஸ் எதிர் காப்டன் விஜயகாந்த் 6 வித்தியாசங்களிற்கு கொஞ்சம் டைம் தாருங்கள் என்று சொல்ல மாட்டேன்.
1- துப்பாக்கியால சுடுவாரு பிரின்சு, துப்பாக்கி இல்லாமலே சுடுவாரு காப்டன் காந்து
2- நடந்து அடிப்பாரு பிரின்சு, பறந்து அடிக்கிறவரு தான் காப்டன் காந்து.
3- கப்பல்ல கொடி காட்டுவாரு பிரின்சு, அட கோட்டைக்கே கோடி காட்டுருவரு தான் காந்து.
4- பத்து கும்முல ஒர் ஆள விழுத்துவாரு பிரின்சு, ஒர் ஏய்ய்ய்ல பத்துப் பேரை வீழ்த்திடுவார் காப்டன் காந்து
5- பிரின்சு பாவம் எக்ஸ் இண்டர் போல், காப்டன் காந்து, வல்லரசு
6-பிரின்சுக்கு பிரென்சும், தமிழும் தெரியும், காந்திற்கு உலக மொழியெல்லாத்தையும் தமிழ்ல பேசத் தெரியும்.
உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன், ஜானி நீரோ ஜூடோ ஜோசுடன் மோதத் தயாரா.
இலங்கை அகதிகள் பலர் ஐரோப்பாவில் எல்லைகள் தாண்டும் போது ஆட் கடத்துபவர்களால் இவ்விதம் கடத்தப் பட்டிருக்கிறார்கள்.இதனை விட மோசமான முறைகளில் கடத்தப் பட்டு இறந்தவர்களும் உண்டு.
சிறப்பான ஒர் இதழ் இது, நான் இதனைப் படிக்கவில்லையெனினும் உங்கள் பதிவு அதைப் படித்த ஒர் உணர்வைத் தருகிறது.
என் பதிவுகளை சுட்டிக் காடியதிற்கு நன்றிகள்.
ஜானி நீரோ லேட்டாகத்தான் வருவார், ஆனால் லேட் கூட ஜூடோ ஜோஸிடம் நேரத்திற்கு வந்து விடும்.
உற்சாகத்துடன் தொடருங்கள்.
ஜோஷ், கழுத்தை நெறிக்கும் போது வார்த்தைகள் எவ்வகைபடும் என்ற தங்கள் கருத்தை ரசித்தேன். காமிக்ஸும் ஒரு ஊடகம் தானே.... அப்படி இருக்கையில், கதாநாயகர்கள் வலி, வேதனை இவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் போல சித்தரிப்பது இயல்பு. எல்லா கதாநாயகர்களும் இப்படி தான்.
ReplyDeleteஉதாரணத்துக்கு, நம் திரைப்படங்களிள் க்ளைமாக்ஸ் காட்சியில் குண்டடிபட்டு உயிருக்கு போராடும் கட்டத்திலும், மொத்த ப்ளாஷ்பேக்கையும் ரீவைண்டு செய்து சொல்லி விட்டு சுபம் போட்ட பின்பே கதாபாத்திரங்கள் உயிர் விடுவது இல்லையா.... அப்போ கழுத்து நெறிபடும் போது வார்த்தைகள் வருவெதல்லாம் ஜுஜுபி தானே :)
ஜோஷ் சான்னின் காவியங்கள் வெளியாகப்போகும் தருணத்தில் இப்படி கதைகளுக்கு நாம் பழகி கொள்ளவேண்டும்.... சரிதானே :)
அதெல்லாம் இருக்கட்டும், மகாகிட்ட அப்புறம் பேசுனீங்களா இல்லையா.... வயக்கரா தாத்தா கேட்க சொன்னார்.... அம்புட்டுதான்.
பேராண்டி ஜோஸ், மகாவுட போன் நம்பர குடுக்க முடியுமாப்பா. அந்த எட்டாம் வகுப்பு மாணவன் மகா வீட்டுக்கு அருகில் இல்லையே.
ReplyDeleteசித்திரக் கட்டத்திற்குள்ள டயலாக் பேசுவாரு பிரின்சு, கட்டம் கட்டமா புள்ளி டயலாக் பேசுவாரு காந்து, ஆங்ங்..
என் உயிர்க் காதலர் ஜோஸ், வயக்கரா தாத்தாவிற்கு போன் நம்பரைக் கொடுங்கள். அவரிடம் நான் உங்களிற்கு ஒன்று தந்து அனுப்புவேன்.
ReplyDeleteதலைவர் அவர்களே,
ReplyDeleteஉங்களின் பதிவிலேயே சிறந்த பதிவு இது என்று நான் கூறுவேன்.
இந்த புத்தகத்தை நான் பல முறை படித்து ரசித்து இருக்கிறேன். அந்த ஆழ்கடல் மயானம் கதையின் ஒரிஜினல் பற்றி பதிவிட்டது ஆச்சர்யப் பட வைக்கிறது.
ஒரு காமிக்ஸ் பதிவு என்று சாதாரணமாக எண்ணி விடாமல் இப்படி பல ஆராய்ச்சி செய்து உள்ளது வியக்க வைக்கிறது. தொடருங்கள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
Excellent post doctor.
ReplyDeleteIs there any resemblance between the villain and the man in the right hand bottom corner in the first page of the story. I think they look alike. Normally the artists tend to recycle same scenes and faces many times in the same story or different stories. Just my opinion :-)
என்னுடைய காமிக்ஸ் வலையுலக குரு நீண்ட நாள் கழித்து வந்து இருப்பதில் திருப்தி.
ReplyDeleteஅதுவும் நம்ம விஜய டி ராஜேந்தர் கட்சியில மன்சூர் அலிகான் சேர்ந்த இந்த நன்னாளில் நீங்க வந்து இருக்கீங்க. அற்புதம்.அபாரம்.
பதிவை கவனிப்போம். அட்டைப் படங்கள் கண்ணை பறிக்கின்றன. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் பற்றிய அறிவிப்பு.
முழு வணனத்தில் வந்த இரண்டு மாயாவியின் கதைகளில் முதல் கதை அது.
விவேக் ஒரு படத்தில் சொல்வது போல (உங்களுக்கு சினிமா டையலாக் பிடிக்கும் என்பதால் சொல்கிறேன்) கேட்பார்: "எப்ப போடுவீங்க, எப்ப போடுவீங்க?" என்று. அதைப் போல நானும் கேட்கிறேன் எப்ப போடுவீங்க, எப்ப போடுவீங்க அந்தப் பதிவை?" என்று.
இந்தப் பதிவு சூப்பர். விஜயன் அவர்களின் பாணி தெரிகிறது ஒவ்வொரு கதையிலும்.
முல்லை தங்கராசன் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக காத்து இருக்கிறோம்.
இப்போதுதான் விஸ்வா'வின் வலையில் வந்து வித்தியாசமான என்னத்தை வெளிப் படுத்திய முத்து விசிறி இங்கும் வந்து தான் ஒரு கிங் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
தொடருங்கள்.
பின் குறிப்பு: விஸ்வா + நீங்க என இருவரும் வேறு வேறு ஸ்கான் செய்த படங்களை உபயோகப் படுத்தி இருப்பது தெளிவாக தெரிகிறது.
பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களே ,
ReplyDeleteஇந்த இதழ்களில் நான் ஒன்றை கூட படித்தது இல்லை . இரும்பு கை மாயாவிஇன் கதை மட்டும் ஆங்கில பதிப்பின் லிங்க் கிடைத்தது. இந்த பதிப்பை பார்த்த பின் இந்த இதழ்களை படிக்கவில்லையே என சின்ன வருத்தம், இந்த இதழ்கள் வரும் போது நான் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்துருப்பேன். இந்த இதழ்களை அறிமுக படுத்தியதற்கு நன்றி . நன்றி
Lucky Limat
டேய்,
ReplyDeleteயாருடா இந்த பிரின்சு?
என்ன மாதிரி அவனால லெஃப்ட்டு கால செவுத்துல ஊணி ரைட்டு காலால சுழட்டி, சுழட்டி அடிக்க முடியுமாடா?
ஆங்ங்!
அடேய் ஜூடோ ஜோஷ்,
ReplyDeleteநீ சரியான ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர், ஒண்டிக்கு ஒண்டி வாடா! நீயா, நானான்னு ரெண்டுல ஒண்ணு, இல்ல ரெண்டுல ரெண்டே பாத்துரலாம்! வாடா!
டேய், நீ ஜூடோவில ப்ளாக் பெல்ட் வாங்கியிருக்கலாம், ஆனா நான் லெதர் பெல்ட்டே வாங்குனவண்டா!
கழுத்த ஒருத்தன் முறிக்கும்போதும் பன்ச் டயலாக் விட ஒரு தனித்தெறம வேணுமடா! அது நீ ஆறாங்கிளாஸ் படிக்கும்போதே உனக்கந்த தெறம இல்லன்னு தெரிஞ்சு போச்சுடா!
நேருல வாடா! உன்ன குத்தி, கொல பண்ணி, துப்பாக்கில சுட்டு, மர்டர் பண்ணீர்றேண்டா டோங்ரே!
தலைவருக்கு தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் முதிய பதிவில் இருந்து ஒரு அட்டைப் படத்தை எடுத்து நான் என்னுடைய பதிவில் உபயோகப் படுத்தி இருக்கிறேன்.
இதற்காக என்னை நீங்கள் கொதிக்கும் என்னை கொப்பரையில் தள்ளலாம் என்றோ அல்லது குண்டூசி கொண்டு என் நகக் கண்களை சிதைக்கலாம் என்றோ தயவு செய்து எண்ணி விடாதீர்கள்.
இதோ என் மன்னிப்பு. மன்னியுங்கள். உத்தரவு பெறாமல் செய்த இந்த செயலை.
தலைவரே,
ReplyDeleteஉங்களால பாருங்க என்ன கஷ்டம் என்று.
இந்த கொலைக்கரம் கதையை படிக்க vendi என்னுடைய காமிக்ஸ் கிளாசிக்ஸ் புத்தகங்களை எடுத்தால் அவற்றை என்னுடைய நண்பன் சமீர் எடுத்து சென்றது நினைவுக்கு வந்து, முப்பது கிலோ மீடர் மறுபடியும் பயணம் செய்து நேற்று இரவே அந்த கதையை படித்து முடித்தேன்.
ஆனாலும் இந்த மாதிரி கதைகளை எவளவு முறை படித்தாலும் சலிப்பு தட்டுவதே இல்லை. ஆனால் ராணி காமிக்ஸ், ippodhu வரும் முத்து காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ் போன்றவற்றை ஒருமுறைக்கு மேல் படிக்கும் ஆர்வம் வருவதில்லை.
மறந்து விட்டேன்.
தலைவருக்கும் தலைவிக்கும் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
காமிக்ஸ் வலையுலக நண்பர்களுக்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த வருடம் உங்களுக்கு எல்லா நலன்களையும் வளங்களையும் கொழிக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுவதோடில்லாமல், அதற்காக உழைக்கவும் முயல்வோம். உழைப்பு இல்லையேல் உயர்வில்லை. .
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
//உன்ன குத்தி, கொல பண்ணி, துப்பாக்கில சுட்டு, மர்டர் பண்ணீர்றேண்டா டோங்ரே!//
ReplyDeleteFilm = University
Actor = Vivek.
Right?
//‘இந்த ஆண்களே இப்படிதான், எசமான்’//
ReplyDeleteபங்கு வேட்டையரே, தங்களின் ஆழ்ந்த அறிவுசெறிந்த கருத்துக்களுக்கு நன்றி! ஜானி நீரோவும், ஜூடோ ஜோஷும் நேருக்கு நேர், ஒற்றைக்கு ஒற்றை ஒருவருக்கொருவர் மோதினால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு தெரியும்!
//maayaavi still rocks.//
REBEL RAVI, YOU SAID IT MAN! இந்த இதழில் கூட மாயாவி சிறுகதையில் வந்தாலும் கூட முன்னடடை, பின்னட்டை, விளம்பரம் என அனைத்திலும் வியாபித்திருப்பதிருப்பதே நீங்கள் கூறும் கருத்துக்கு சான்று!
//ஜானி நீரோ ஜூடோ ஜோசுடன் மோதத் தயாரா.//
அயல்நாட்டு அ.கொ.தீ.க. தலைவர் கனவுகளின் காதலரே, போட்டிக்கு நடுவர் நாட்டாமையாக இருக்க நீங்கள் தயாரா? ‘பன்ச்’ வசனங்களும், ஆறு வித்தியாசங்களும் அருமை!
ஃபுல் புக் டவுன்லோடு போடும் புலா சுலாகி அவர்களே,
//அந்த ஆழ்கடல் மயானம் கதையின் ஒரிஜினல் பற்றி பதிவிட்டது ஆச்சர்யப் பட வைக்கிறது.//
முத்து விசிறிக்கு நன்றிகள்!
//முப்பது கிலோ மீடர் மறுபடியும் பயணம் செய்து நேற்று இரவே அந்த கதையை படித்து முடித்தேன்.//
தவறொன்றுமில்லை, இதை இனி வாழ்வில் மறக்க மாட்டீர்கள்!
//Film = University//
ஆக்சுவலி, அது தித்திக்குதே என்ற சிறந்த மொக்கைப் படம்! விவேக்கின் பெயர் ‘பன்ச்’ பாலா!
//கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்//
அருமையான ‘பன்ச்’ வசனம்! ‘காமிக்ஸ் குத்து!’ல யூஸ் பண்ணிக்கவா?
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய திரு.முத்து விசிறி அவர்களே,
//Is there any resemblance between the villain and the man in the right hand bottom corner in the first page of the story.//
வருகைக்கு நன்றி! இதுக்கே இப்படீங்கறீங்களே, நடுநிசிக் கள்வன்-ல சில சமயத்திலே மாயாவிக்கும், மாண்டிஜூமாவுக்குமே வித்தியாசம் தெரியாது!
//அதுவும் நம்ம விஜய டி ராஜேந்தர் கட்சியில மன்சூர் அலிகான் சேர்ந்த இந்த நன்னாளில் நீங்க வந்து இருக்கீங்க. அற்புதம்.அபாரம்.//
காமிக்ஸ் பிரியன் க.கொ.க.கூ. அவர்களே, நான் ஏதோ புனித வெள்ளி, உயிர்த்த நன்ஞாயிறுன்னு நாள் நட்சத்திரம் பாத்து பதிவு போட்டா, இப்படியொரு மேட்டரச் சொல்லி கவுத்துப்புட்டீங்களே!
அப்புறம் மன்னிப்பெல்லாம் தேவையில்லை, எனக்கொரு சுட்டி கொடுத்தால் போதும், நன்றியுடையவனாயிருப்பேன்!
லக்கி லிமட், IT IS NEVER TOO LATE TO START! புத்தகத்தைத் தேடிப் பிடித்துப் படித்து விடுங்கள்!
தலைவர்,
அ.கொ.தீ.க.