| புளி வியாபாரி | : | “கொட்டை எடுத்தது வேணுங்களா? கொட்டை எடுக்காதது வேணுங்களா?” |
| கவுண்டமணி | : | “ஓ! அத வேற எடுத்துட்டீங்களா?" |
| -படம்: தாலாட்டு கேட்குதம்மா |
வணக்கம்,
1964-ம் வருடம் பொங்கல் அன்று தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில், கே.வி.மஹாதேவன் இசையில் எம்.ஜி.ஆர், நம்பியார், சாவித்ரி, எம்.ஆர்.ராதா, அசோகன், நாகேஷ், ஒரு குழந்தை (பேபி ஷகிலா-ஆண் வேடத்தில்) மற்றும் ஒரு சிறுத்தை ஆகியோரது நடிப்பில் வெளிவந்து பெருவெற்றி பெற்ற வேட்டைக்காரன் திரைப்படத்தைப் பற்றி கல்கி வார இதழில் வெளியான திரை விமர்சனம், இதோ உங்கள் பார்வைக்கு!
எம்.ஜி.ஆர் இதில் கெள-பாய் வேடத்தில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது! விமர்சனத்தில் கட்டிப்பிடிக்கும் காதல் காட்சிகளை கண்டித்திருப்பதை கவனிக்கவும்!
பெயர் குறிப்பிடப்படவில்லையெனினும் வழக்கமாக அந்த காலத்திலெல்லாம் கல்கியில் காந்தன் என்பவர்தான் விமர்சனம் எழுதுவார்! இதுவும் அவர் எழுதியதாகத்தான் இருக்கக் கூடும்!
வெகுமதி:
கல்கியில் காந்தன் திரைவிமர்சனம் செய்யாத போது நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஒருவர் அந்த பணிகளை செய்வதுண்டு! அவர் யார் என சரியாக யூகிப்பவர்களுக்கு பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயமுண்டு!
பி.கு.:
- இளைய(?!!) தளபதி(?!!) மருத்துவர்(?!!) விசய்(?!!) நடித்து(?!!) தீபாவளிக்கோ(?!!), பொங்கலுக்கோ(?!!) வெளிவரவிருக்கும் இதே பெயர் கொண்டதொரு படத்தைப் பார்த்து அதை விமர்சனம் வேறு செய்து சொந்த செலவிலே சூனியம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அகிலமே அஞ்சி நடுங்கும் அ.கொ.தீ.க. தலைவர் ஒன்றும் அடிமடையரல்ல!
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!