Tuesday, January 3, 2012

தபால் தலையில் மாயாவி!

வணக்கம்,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த புது வருடம் தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கப் போவதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகிவிட்டன! ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களே சொந்த வலைப்பூ ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்! கம்பேக் ஸ்பெஷல் குறித்த முன்னோட்டங்கள் இனையத்தில் உலாவ ஆரம்பித்து விட்டன! காமிக்ஸ் ஜுரம் கொஞ்சம் கொஞ்சமாக பற்றிக் கொண்டு விட்டது! என் பங்குக்கு நானும் ஒரு சிறிய ‘பிட்’டை போட்டு வைக்கிறேன்!

இந்நிலையில் தமிழ் காமிக்ஸ் சூழல் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள காமிக்ஸ் ரசிகர்களும் வரவேற்கத் தக்க விஷயங்கள் நடந்தேறி வருகின்றன! அந்த வரிசையில் இதோ இன்னுமொரு சுவையான நிகழ்வு!

தமிழ் காமிக்ஸ்களுள் தலையாய நாயகானாகிய இரும்புக்கை மாயாவி மற்றும் வேறுபல காமிக்ஸ்களை கெளரவப்படுத்தும் வகையில் இங்கிலாந்து நாட்டு அஞ்சல்துறை தபால்தலைகளை வெளியிட்டுள்ளது! பிரிட்டிஷ் காமிக்ஸ் வரலாற்றின் 75 வருட பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது! இது குறித்த மேல்விவரங்களுக்கு கீழ்காணும் சுட்டியை சொடுக்கவும்!

இதோ அந்த தபால்தலைகள்! காமிக்ஸ் ரசிகர்கள் கைப்பற்ற வேண்டிய இன்னுமொரு அரிய பொக்கிஷம்! ஆனால் இரும்புக்கை மாயாவியை சிறுமிகள் காமிக்ஸ் வகையில் சேர்த்தது ஏனென்று விளங்கவில்லை!

Picture 12Picture 16Picture 15

இதே போல் 1995ல் அமெரிக்காவில் செய்தித்தாள் சித்திரத் தொடர்களை கெளரவப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட தபால்தலைகள் இதோ! ஃப்ளாஷ் கார்டன், ப்ளாண்டி, டிக் ட்ரேசி மற்றும் தொலைக்காட்சி மூலம் பாப்பை தவிர வேறு எவரையும் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லை என்பது வருந்தத்தக்கது!

Classic Comic Strips

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

12 comments:

 1. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. புது வருடத்தில் தபால்தலைகள் பற்றிய சுவாரசியமான செய்தியுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். இது காமிக்ஸ் ரசிகர்களுக்கான கெளரவம்தான். டிக் டிரெசியின் "கனவே கொல்லாதே"இனை மறக்கமுடியுமா!

  ReplyDelete
 3. தமிழ்நாட்டில் இப்படியொரு முயற்சி நடந்தால் அது யாருக்கு? அதாவது நம்ம ஊர்ல தபால்தலை வெளியிட்டால்.....

  ReplyDelete
 4. வாவ் மிக்க சந்தோசமான செய்தி :))
  .

  ReplyDelete
 5. அன்பு நண்பரே!

  நமது பேரன்பிற்கும், தனிப்பெருமதிப்பிற்கும், ரசனைக்கும் உரிய திரு.வாண்டுமாமா அவர்களுக்கு ஃபேஸ்புக்கில் இதுவரை Fan page இல்லாமல் இருந்தது. எனவே அவருக்காக நான் புதிதாக ஒரு Fan page தொடங்கியுள்ளேன். நீங்கள் அங்கு வந்து உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும் (அதாவது அந்த page-க்கு Like கொடுக்க வேண்டும்) எனவும் உங்கள் வலைப்பூ, ஃபேஸ்புக் அக்கௌண்ட் முதலியவற்றின் மூலம் உங்கள் நண்பர்கள் விசிறிகள் என அனைவருக்கும் இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அன்புடன் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்!

  ReplyDelete
 6. வாண்டுமாமா பக்கத்துக்கு Like கொடுக்க Vaandumama என ஃபேஸ்புக்கில் தேடுங்கள்! அல்லது சொடுக்குக: http://www.facebook.com/#!/pages/Vaandumama-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/256135227797792

  ReplyDelete
 7. அருமையான பகிர்வு... பாராட்டுக்கள்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…

  Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

  ReplyDelete
 8. நமது காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்

  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
  .

  ReplyDelete
 9. மிக அருமையான பதிவு. நம்ம நாட்டுல... அட தபால் தலையெல்லாம் வேண்டாம், மீன்டும் ஒரு காமிக்ஸ் மறுமலர்ச்சியை உண்டு பண்ணினாலே புண்ணியமா போகும் !!

  எனது வலைப்பூவில் தமிழ் காமிக்ஸ் கலாச்சாரம் பற்றியும், தொன்னூறுகளில் அதன் வீழ்ச்சிக்கான காரணங்களையும் " மறைந்தும் மறையாத தமிழ் காமிக்ஸ் கலாச்சாரம் ! " என்ற கட்டுரையில் அலசியுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.

  " மறைந்தும் மறையாத தமிழ் காமிக்ஸ் கலாச்சாரம் ! " - http://saamaaniyan.blogspot.fr/2013/10/blog-post_9.html

  ReplyDelete
 10. SUPER SIR

  BY

  JOTHIDA EXPRESS

  WWW.SUPERTAMILAN.BLOGSPOT.IN

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!