Friday, November 12, 2010

அ.கொ.தீ.க. டைம்ஸ்!

வணக்கம்,

இன்று காலை கடைகளுக்கு வந்துள்ள புதிய தலைமுறை (தேதி: 18-11-2010) இதழில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி வந்துள்ளது! அது பிரபல எழுத்தாளரும், வலைப்பதிவருமான யுவகிருஷ்ணா என்கிற லக்கிலுக் எழுதியுள்ள ஒரு கட்டுரையேயாகும்!

லக்கி ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகர் என்பதுதான் உங்கள் எல்லோருக்குமே தெரியுமே! தான் இன்று வரை ரசித்துப் படித்துக் கொண்டிருக்கும் காமிக்ஸ் பற்றி அவர் ஒரு விரிவான கட்டுரை எழுதியுள்ளார்! கட்டுரையை COMICS FOR DUMMIES ரேஞ்சுக்கு காமிக்ஸ் பற்றி பரிச்சயமே இல்லாத ஆளுக்குக் கூட அதன் மீது ஆர்வம் வரும் வகையில் அவர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது! தீவிர காமிக்ஸ் ரசிகர்களுக்கும் அவரது கட்டுரையில் பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் தோண்டத் தோண்டக் கிடைக்கும்!

குறைகள் என்று பார்த்தால் லே-அவுட் விஷயத்தில் கொஞ்சம் சொதப்பல்தான்! காமிக்ஸ் கட்டுரை என்றாலே INVARIABLEஆக ஸ்பைடர்மேனையும் பேட்மேனையும் போட்டு ஏன்தான் இப்படிக் கொல்கிறார்களோ?!! ஸ்பைடர் என்று கட்டுரையில் வருவதால் ஸ்பைடர்மேனை போட்டிருப்பார்களோ! ஆனால் இப்படியெல்லாம் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வருவதே பெரிய விஷயம் என்பதால் அதையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதே சாலச் சிறந்தது!

குறிப்பாக திரு.முல்லை தங்கராசன் அவர்கள் பற்றியும், வாண்டுமாமா பற்றியும் அவர் எழுதியிருக்கும் துணுக்குகள் சுவாரசியம் மிகுந்தவை! அவருக்கும் அதை வெளியிட்டு காமிக்ஸுக்கு பெருமை சேர்த்த புதிய தலைமுறை நிறுவனத்தினருக்கும் நம் அனைவரின் சார்பிலும் எனது நன்றிகளும், பாராட்டுகளும்!

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நமது தமிழ் காமிக்ஸ் வலையுலக ‘முடி’சூடா மன்னன் கிங் விஸ்வா பற்றியும் எழுதியுள்ளார் லக்கி! கூடவே அவரது புகைப்படமும் வந்துள்ளது! அதையெல்லாம் வெளியிட்டு காலையிலேயே உங்களையெல்லாம் கடுப்பேற்ற வேண்டாமென்று சென்சார் செய்து விட்டேன்!

இதையும் மீறி அவரது புகைப்படத்தை பார்த்தேயாக வேண்டும் என்று அடம் பிடிக்கும் திடசித்தமுடையோர் தயவு செய்து இன்று கடைகளுக்கு வந்துள்ள புதிய தலைமுறை (தேதி: 18-11-2010) இதழை வாங்கிப் பார்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கையுடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்! பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்!

லக்கியின் கட்டுரையின் முழு ஸ்கேன்களும் இதோ உங்கள் பார்வைக்கு! கட்டுரையில் என்ன எழுதியுள்ளார் என்பதை விளக்கிக் கூறும் தேவை இல்லாததால் நீங்களே படித்து மகிழுங்களேன்!

Puthiya Thalaimurai Issue Dated 18-11-2010 Comics Article Page 1 & 2

Puthiya Thalaimurai Issue Dated 18-11-2010 Comics Article Page 3Puthiya Thalaimurai Issue Dated 18-11-2010 Comics Article Page 4

பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்ததற்கு எனது நன்றிகள்!  உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

48 comments:

  1. // இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நமது தமிழ் காமிக்ஸ் வலையுலக ‘முடி’சூடா மன்னன் கிங் விஸ்வா பற்றியும் எழுதியுள்ளார் லக்கி! கூடவே அவரது புகைப்படமும் வந்துள்ளது! அதையெல்லாம் வெளியிட்டு காலையிலேயே உங்களையெல்லாம் கடுப்பேற்ற வேண்டாமென்று சென்சார் செய்து விட்டேன்! //

    எப்புடிங்க தலைவரே உங்களால மட்டும் இது மாதிரி யோசிக்க தோணுது :))
    .

    ReplyDelete
  2. கொய்யால,

    வெள்ளிகிழமை அதுவுமா கோவிலுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள ரெண்டு பதிவு. அதிலையும் நம்ம சிபி அண்ணன் நம்மள முந்திட்டாரே?

    என்ன கொடுமை சார் இது?

    இதோ வர்றேன், பதிவை முழுசா படிச்சுட்டு.

    ReplyDelete
  3. nice post. it's been very long since we had a proper article in comics.

    if i remember correctly, the last one was in India times some 10 years ago.

    right?

    ReplyDelete
  4. the article was written in a fantastic way. the only hiccup i could find out was that the title was nowhere near to the content and they have just a passing note on irumbuk kai mayavi.

    isn't it appropriate to have a box news on the greatest ever hero?

    ReplyDelete
  5. also, they could have used the modesty, archie and captain tiger pictures instead of the regular batman and spiderman pics.

    still, this article makes you to forget all these things. hats off to the author.

    ReplyDelete
  6. இது ஒரு நல்ல முயற்சி என்பதில் சந்தேகமில்லை.. கிங் விஸ்வாவின் புகைப்படத்தை வெளியிடாமல் பதிவு மோசடி செய்ததால், இதோ பிரியாணி சாப்பிடும் போராட்டத்தைத் துவக்கி விட்டேன் :-)

    ReplyDelete
  7. கருந்தேள்...

    //கிங் விஸ்வாவின் புகைப்படத்தை வெளியிடாமல் பதிவு மோசடி செய்ததால், இதோ பிரியாணி சாப்பிடும் போராட்டத்தைத் துவக்கி விட்டேன் :-)//

    அந்தப் புகைப்படத்தை நான் வெளியிட்டால் நீங்கள் சாப்பிட்ட பிரியாணியையெல்லாம் வந்தியெடுத்துடுவீங்க! பரவாயில்லையா?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  8. Nice Article.

    Doctor,
    Thanks for the digital version.
    Regards,
    Mahesh

    ReplyDelete
  9. சூப்பர். அருமை. யுவக்ருஷ்ணா சாருக்கு நன்றி. (அதாவது நண்பருக்கு நன்றி).

    ரொம்ப, ரொம்ப நாள் கழித்து காமிக்ஸ் ஆர்டிகிள் தமிழில். நல்ல விஷயம்.

    ReplyDelete
  10. கிங் விஸ்வாவின் படம் இருட்டடிப்பு செய்யப்பட்டது ஏன்?

    ......

    .......


    ..............


    ....................


    ............................

    (இப்படி கேட்க அவர் என்னுடைய அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி இருக்கிறார்)

    ReplyDelete
  11. வழக்கமாக சிபியே முதலில் வருகிறாரே? என்ன ரகசியம்?

    ReplyDelete
  12. பழனியில் ஒரு துணிக்கடை நண்பா

    கொஞ்சம் பெரிய கடை, அங்க ஒரு ஓரத்துல சில புத்தகங்கள் வியாபாரத்துக்கு வைச்சிருப்பாங்க.

    அதிகமாக அளவில துணியெடுத்தா புதிய தலைமுறை புத்தகத்தை இலவச இணைப்பா கொடுப்பாங்க.

    அங்க சமையல் புத்தகங்கள் கூட இருக்கும். அந்த கடை பொறுப்பாளர்கிட்ட காமிக்ஸ் புத்தகங்களாம் வாங்கி வையுங்க. பழனில ஒரு கூட்டம் இருக்கு. நல்லாப் போகும் இங்கிலீஸ்ல வாங்கி வைச்சாக்கூட போகும்னு சொன்னேன்.

    இதெல்லாம் அறிவுப்பூர்வமான புத்தங்களாதாங்க வைக்கறோம். டைம் பாஸ் புத்தகங்கள்ளாம் நாங்க வைக்கறதில்லண்னு சொல்லிட்டார். கொஞ்சம் நேரம் பேசிப் பார்த்திட்டு விட்டுட்டேன்.

    திரும்பவும் போய் பேசிப் பார்க்கலாம்ணு இப்ப தோணுது,

    ReplyDelete
  13. முல்லை தனக்ராசன் அவர்களின் படத்தை பார்க்க வைத்தமைக்கு நன்றி.

    இவ்வளவு விவரமாக வெளியிட்ட லக்கிக்கும் நன்றி.

    ReplyDelete
  14. எனக்கு தெரிந்தவரையில் இதுதான் முல்லை தங்கராசன் அவர்களின் படம் வெளிவந்த முத பத்திரிக்கை. சரிதானே? இதுவரை அவரை நான் பார்த்த்தது கிடையாது.

    ReplyDelete
  15. முல்லை தங்கராசன் அவர்களை பற்றிய செய்திகளுக்கும், படத்திற்கும் முதற்க்கண் நன்றிகள்.

    அநேகமாக இந்த தகவல்களை இணையதளத்தில் முதன்முதலில் தருபவர் லக்கியாகவே இருக்க முடியும். அந்த விஷயத்தில் விஸ்வாவை முந்திவிட்டார்.

    ReplyDelete
  16. லே அவுட் பற்றி கூறினாலும்கூட பிரபல பத்திரிக்கையில் காமிக்ஸ் பற்றிய செய்திகள் வருவது அறவே நின்றுவிட்ட சூழலில் இதுபோன்ற அருமையாக தகவல் களஞ்சியமாக வந்துள்ள இந்த கட்டுரை, வரவேற்க்கதக்க ஒன்றாகும்.

    பகிர்ந்தமைக்கு நன்றி. எழுதியமைக்கு லக்கிக்கும் நன்றி.

    ReplyDelete
  17. இந்த கட்டுரையின் மூலமும், பதிவின் மூலமும் (இலக்கியம் இதனை இட்டுள்ளார், படங்கள் இல்லாமல்) பல லட்சக்கணக்கான வாசகர்களை இந்த ஜம்போ ஸ்பெஷல் விஷயம் சென்றடைவது உறுதியாகிவிட்டது. இப்படியாக அந்த புத்தகம் மென்மேலும் விற்றால் அது நமக்கே நல்லது. விஜயன் சாரும் அடுத்த பெரிய ஸ்பெஷல் புராஜெக்டில் தைரியமாக இறங்குவார்.

    ReplyDelete
  18. //கருந்தேள்...

    //கிங் விஸ்வாவின் புகைப்படத்தை வெளியிடாமல் பதிவு மோசடி செய்ததால், இதோ பிரியாணி சாப்பிடும் போராட்டத்தைத் துவக்கி விட்டேன் :-)//

    அந்தப் புகைப்படத்தை நான் வெளியிட்டால் நீங்கள் சாப்பிட்ட பிரியாணியையெல்லாம் வந்தியெடுத்துடுவீங்க! பரவாயில்லையா?!!//


    சிரிப்பை அடக்கமுடியவில்லை.

    ReplyDelete
  19. சுரேஷ் சார்,

    //பழனியில் ஒரு துணிக்கடை நண்பா

    கொஞ்சம் பெரிய கடை, அங்க ஒரு ஓரத்துல சில புத்தகங்கள் வியாபாரத்துக்கு வைச்சிருப்பாங்க.

    அதிகமாக அளவில துணியெடுத்தா புதிய தலைமுறை புத்தகத்தை இலவச இணைப்பா கொடுப்பாங்க.

    அங்க சமையல் புத்தகங்கள் கூட இருக்கும். அந்த கடை பொறுப்பாளர்கிட்ட காமிக்ஸ் புத்தகங்களாம் வாங்கி வையுங்க. பழனில ஒரு கூட்டம் இருக்கு. நல்லாப் போகும் இங்கிலீஸ்ல வாங்கி வைச்சாக்கூட போகும்னு சொன்னேன்.

    இதெல்லாம் அறிவுப்பூர்வமான புத்தங்களாதாங்க வைக்கறோம். டைம் பாஸ் புத்தகங்கள்ளாம் நாங்க வைக்கறதில்லண்னு சொல்லிட்டார். கொஞ்சம் நேரம் பேசிப் பார்த்திட்டு விட்டுட்டேன்.

    திரும்பவும் போய் பேசிப் பார்க்கலாம்ணு இப்ப தோணுது,//

    நல்ல விஷயம். உடனடியாக செய்யுங்கள்.

    ReplyDelete
  20. இந்த கட்டுரையை ஒரு முதல் முயற்சியாக எடுத்துக்கொண்டு இதைப்போல பல பத்திரிக்கைகளில் பல தமிழ் காமிக்ஸ் விஷயங்கள் தொடர்ந்து வர ஆசை. நிறைவேறுமா?

    ReplyDelete
  21. wonderful. i have bought 4 copies and distributed to my friends today. they felt so happy and then one of them said that it was on puthiya thalaimurai. so i thought of blogging about it today.

    once i on net, there you go. you've already done it.

    thanks for the information and the scans.

    ReplyDelete
  22. // கருந்தேள்...

    //கிங் விஸ்வாவின் புகைப்படத்தை வெளியிடாமல் பதிவு மோசடி செய்ததால், இதோ பிரியாணி சாப்பிடும் போராட்டத்தைத் துவக்கி விட்டேன் :-)//

    அந்தப் புகைப்படத்தை நான் வெளியிட்டால் நீங்கள் சாப்பிட்ட பிரியாணியையெல்லாம் வந்தியெடுத்துடுவீங்க! பரவாயில்லையா?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க. //

    Repeetttttttttu
    எப்புடிங்க தலைவரே உங்களால மட்டும் இது மாதிரி யோசிக்க தோணுது :))
    .

    ReplyDelete
  23. // வழக்கமாக சிபியே முதலில் வருகிறாரே? என்ன ரகசியம்? //

    Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் அண்ணே வணக்கம்
    வழக்கமா நம்ம விஸ்வா அண்ணனும் ஒலக காமிக்ஸ் ரசிகர் அண்ணனும் தான் Me the 1st போடுவாங்க

    ரொம்ப நாளைக்கு அப்புறமா இப்பத்தான் Me the 1st போட்டிருக்கேன்

    அதுவும் தலைவர்கிட்ட போன பதிவுல கேட்டுகிட்டதுக்கு பெரிய மனசு பண்ணி காலையில பதிவு போட்டதால முடிஞ்சது

    இப்புடியெல்லாம் கண்ணு வைக்காதீங்க

    வீட்டுக்கு போயி அம்மாகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லணும் :))
    .

    ReplyDelete
  24. சிபி அண்ணே,

    //ரொம்ப நாளைக்கு அப்புறமா இப்பத்தான் Me the 1st போட்டிருக்கேன்

    அதுவும் தலைவர்கிட்ட போன பதிவுல கேட்டுகிட்டதுக்கு பெரிய மனசு பண்ணி காலையில பதிவு போட்டதால முடிஞ்சது

    இப்புடியெல்லாம் கண்ணு வைக்காதீங்க //

    ஒக்கே, ஒக்கே. டன். இனிமேல சொல்லல.

    ReplyDelete
  25. சிபி அண்ணே,

    //வீட்டுக்கு போயி அம்மாகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லணும்//

    சுத்திய ஏன் போடுறீங்க? அது யார் தலைமேலயாவது விழப்போகுது. ஜாக்கிரதை.

    ReplyDelete
  26. மீ தி 30வது.

    எப்புடி?

    (எப்படியும் விச்வாவும், ஒலக காமிக்ஸ் ரசிகரும், அல்லது சிபி அண்ணனும் மீ தி வது போட்டுடுவாங்க. அதனால ஏதோ எங்களால முடிஞ்சுது)

    ReplyDelete
  27. மீ தி 30வது.

    எப்புடி?

    (எப்படியும் விஸ்வாவும், ஒலக காமிக்ஸ் ரசிகரும், அல்லது சிபி அண்ணனும் மீ தி 50வது போட்டுடுவாங்க. அதனால ஏதோ எங்களால முடிஞ்சுது)

    ReplyDelete
  28. //அந்தப் புகைப்படத்தை நான் வெளியிட்டால் நீங்கள் சாப்பிட்ட பிரியாணியையெல்லாம் வந்தியெடுத்துடுவீங்க! பரவாயில்லையா?!!//

    ஹாஹ்ஹா... இதுக்குன்னே, பவானில போயி, ஒரு புத்தகக் கடைல அவரோட ஃபோட்டோவைப் பார்த்துபுட்டேனே :-) ஹைய்யா :-) .. விஸ்வாவின் புன்னகை தவழும், சாந்தம் நிலவும், அமைதி ததும்பும், உலக அமைதிக்கு வித்திடும் விசாலமான பார்வைகொண்ட அந்தத் திருமுகத்தைப் பார்த்தே விட்டேனே !! :-)

    ReplyDelete
  29. தலைவருக்கு நன்றி. ஸ்கான்'கள் சிறப்பாக உள்ளன. இவற்றை நான் உபயோகப்படுத்தி ஒரு பதிவிடலாம் என்றிருக்கிறேன். ஓக்கேவா?

    ReplyDelete
  30. சிறப்பான கட்டுரையை எழுதிய லக்கி என்கிற யுவ கிருஷ்ணாவிற்கு நன்றி. அந்த கட்டுரையை வெளியிட்ட புதிய தலைமுறை இதழிற்கும் நன்றிகள்.

    வெகு நாட்கள் கழித்து தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு முழு நீள கட்டுரை. மனதிற்கு இனிமையாக உள்ளது.

    ReplyDelete
  31. தலைவரே,

    //குறைகள் என்று பார்த்தால் லே-அவுட் விஷயத்தில் கொஞ்சம் சொதப்பல்தான்! காமிக்ஸ் கட்டுரை என்றாலே INVARIABLEஆக ஸ்பைடர்மேனையும் பேட்மேனையும் போட்டு ஏன்தான் இப்படிக் கொல்கிறார்களோ?!! ஸ்பைடர் என்று கட்டுரையில் வருவதால் ஸ்பைடர்மேனை போட்டிருப்பார்களோ! ஆனால் இப்படியெல்லாம் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வருவதே பெரிய விஷயம் என்பதால் அதையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதே சாலச் சிறந்தது//

    மிகவும் சரியான கருத்து.

    ReplyDelete
  32. காமிக்ஸ் காதலரே...

    //தலைவருக்கு நன்றி. ஸ்கான்'கள் சிறப்பாக உள்ளன. இவற்றை நான் உபயோகப்படுத்தி ஒரு பதிவிடலாம் என்றிருக்கிறேன். ஓக்கேவா?//

    டபுள் ஓகே!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  33. //கூடவே அவரது புகைப்படமும் வந்துள்ளது! அதையெல்லாம் வெளியிட்டு காலையிலேயே உங்களையெல்லாம் கடுப்பேற்ற வேண்டாமென்று சென்சார் செய்து விட்டேன்!
    இதையும் மீறி அவரது புகைப்படத்தை பார்த்தேயாக வேண்டும் என்று அடம் பிடிக்கும் திடசித்தமுடையோர்//

    திட சித்தமுடையோர்களில் நானும் ஒருவன். ஆனால் எனக்கு இன்னமும் இங்கு புத்தகம் கிடைக்கவில்லை. நான் ரெகுலராக வாங்கும் கடையில் தீர்ந்துவிட்டதாம்.

    ReplyDelete
  34. இன்ஸ்டன்ட் பதிலுக்கு நன்றி தலைவரே.

    ReplyDelete
  35. இந்த கட்டுரை மூலம் காமிக்ஸ் பற்றி சிறப்பான ஒரு image கிடைக்கும்.விஸ்வாவின் புகைபடத்தை பார்க்க விடாமல் செய்து விட்டீர்களே...

    ReplyDelete
  36. தலைவரே,

    தகவலுக்கு நன்றி. அருமையான நியூஸ் இது. மறுபடியும் வருகிறதா காமிக்ஸ் மறுமலர்ச்சி? வரவேண்டும்.

    ReplyDelete
  37. பதிவூட்டிய உங்களுக்கும், கட்டுரைஎழுதிய லக்கிக்கும் நன்றி.

    ReplyDelete
  38. //குறைகள் என்று பார்த்தால் லே-அவுட் விஷயத்தில் கொஞ்சம் சொதப்பல்தான்! காமிக்ஸ் கட்டுரை என்றாலே INVARIABLEஆக ஸ்பைடர்மேனையும் பேட்மேனையும் போட்டு ஏன்தான் இப்படிக் கொல்கிறார்களோ?!! ஸ்பைடர் என்று கட்டுரையில் வருவதால் ஸ்பைடர்மேனை போட்டிருப்பார்களோ! ஆனால் இப்படியெல்லாம் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வருவதே பெரிய விஷயம் என்பதால் அதையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதே சாலச் சிறந்தது!//

    உண்மைதான்.

    ReplyDelete
  39. very nice article. still heated arguements over your previous writing.

    cannot avoid replying.

    ReplyDelete
  40. what about today's ananthavikatan scans and post on news?

    ReplyDelete
  41. missing comment in your comics rumour

    comment1:// And if some marketing genius gets into this, there is nothing wrong in him making good money and also help those who put in the hard work make money by coming out with a second, third and fourth prints.//

    S. Raja of singaperumal koil, kindly understand that there is a huge difference between marketing and black marketing. you know what marketing is all about? kindly go and check out with all the new super markets where they sell products at lesser than the MRP's because they are very good in planning. they do not buy hamam soap at 8 rs and sell at 16 rs just because they want the people to have access.

    if the marketing genius is so good, ask him to come out with his own comics. since he is the marketing genius, he can earn from his hard work rather than from somebody else's work. this is plain black marketing and it is hard to understand how people are supporting that without even understanding that all this will bring nothing to the editor. just because he buys 1000 copies, it is not going to help the editor in the logner run. in fact, he is ruining the future by selling at double the price there by creating a illusion about this.

    //At the same time, I am surprised at how low the price of this collectors edition is. How is it even possible for Prakash publishers to sell such a high value book for two hundred rupees//

    you know what? just because there are certain things which are priced lesser, it doesn't mean that they are of low quality or there is something wrong with that. it is called mass production whereby the person who is the master in the field of printing and publishing, used all his experiences to put such a book. instead of praising him, you are wonderign how can he sell at such a price.

    ReplyDelete
  42. சார்,

    //இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது - என்று சிவ்வும் மற்றவர்களும் சொல்வதை நான் வழிமொழிகிறேன். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.//

    என்று முத்து விசிறி அவர்கள் கூறியது உண்மைதான், நான்கூட பதிவொன்றை இட்டுள்ளேன்.

    உங்கள் கருத்தை சொல்லவும்:வெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007

    ReplyDelete
  43. The news of Puthiya Thalaimurai is very nice and how to get Puthiya Thalaimurai live in mobile is there any software.....

    ReplyDelete
  44. பின்னோக்கி போக வச்சிட்டீங்களே boss..hats off...

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!