Wednesday, August 4, 2010

ஜான் மாஸ்டர்!

வணக்கம்,

சமீபத்தில் கிங் விஸ்வா வெளியிட்டிருந்த காமிக்ஸ் கேள்வி-பதில் பதிவில் நண்பர்கள் சிலர் ஜான் மாஸ்டர் குறித்து விவரங்கள் கேட்டிருந்தனர்! அவர்களது கேள்விகளுக்கு பதில் கூறும் விதமாகவே இப்பதிவு வந்திருக்கிறது! விம்பிள்டன் போட்டிகளின் போதே வெளியிடப்பட்டிருக்க வேண்டிய பதிவு இது! ஆனால் சரியான விவரங்கள் கிடைக்கப் பெறாததால் மிகத் தாமதமாக வருகிறது!

இச்சமயத்தில் எனக்கும் கிங் விஸ்வாவுக்கும் உள்ள வேண்டப்பட்ட விரோதம் குறித்து எழுதியே ஆக வேண்டும்! அவர் தீவிர ரோஜர் ஃபெடரர் வெறியர்! எனக்கு ரஃபேல் நடால்-ஐயும் பிடிக்கும்! இம்முறை ரஃபா விம்பிள்டனில் இரண்டாவது முறையாக வெற்றிவாகை சூடியதில் மனிதர் கடுமையாக கொந்தளித்துப் போயிருக்கிறார்! அதுவும் ஃபைனலில் ஒரு செட்டைக் கூட வெல்ல முடியாத ஒரு மொக்கைப் பாண்டியிடம் அவரது ஆள் குவார்ட்டர்-ஃபைனலிலேயே தோற்றதை அவரால் ஜீரனிக்கவே முடியவில்லை! அவரை சாந்தப் படுத்தும் விதமாக இப்பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்!

ஓகே! மொக்கை போட்டது போதும்! இனி மேலும் நேரத்தை வீணாக்காமல்  நேரடியாக பதிவுக்கு போவோம்!

புத்தக விவரங்கள்:

அட்டைப்படம் Lion Comics # 013 - Sadhi Valai
கதை சதி வலை!
இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
வெளியீடு 13
முதல் பதிப்பு மே 1985 (கோடை மலர்)
மறுபதிப்புகள் இதுவரை இல்லை
பதிப்பகம் லயன் காமிக்ஸ்
ஆசிரியர் S.விஜயன்
அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி
நாயகர்(கள்) ஜான் மாஸ்டர்
மூலம் MASTER-SPY (ஆங்கிலம்)
இதழ் TIGER (Weekly)
வெளியீடு IPC MAGAZINES LTD.
முதல் பதிப்பு APR 1983 TO JAN 1984
கதை ???
ஓவியம் SANDY JAMES
தமிழில் S.விஜயன்
பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
சைஸ் 8"x11"
விலை ரூ:4/- (1985 முதல் பதிப்பின் போது)
CREDITS Lion Comics # 013 - Sadhi Valai - Credits
விளம்பரம் Lion Comics # 011 - Sadhi Valai - AdLion Comics # 12 - Sadhi Valai - Ad
முதல் பக்கம்

விம்பிள்டன்-ஐ வெல்ல வேண்டும் என்கின்ற இங்கிலாந்து கனவு இதில் வெளிப்படுகிறது! ஆனால் இன்னும் எந்த இங்கிலீஷ்காரனும் விம்பிள்டன் ஃபைனலுக்கு கூட போகவில்லை என்பது வேடிக்கையான வினோதம்!

Lion Comics # 013 - Sadhi Valai - First Page

வாசகர் கடிதம் அந்த காலத்து லயன் காமிக்ஸ்களில் ராணி காமிக்ஸ் ஸ்டைலில் சிறப்பான விமர்சனங்களுக்கு ரூ.25/- பரிசு! வழங்கப்பட்டது! இதோ அதற்கான அறிவிப்பு!
Lion Comics # 013 - Sadhi Valai - Rs.25 Parisu

லயன் காமிக்ஸ் # 015 - சைத்தான் விஞ்ஞானி-ல் வெளிவந்த வாசகர் கடிதம் பகுதி!
Lion Comics # 015 - Vasagar Kaditham

பரிசு பெற்ற அந்த விமர்சனம் இதோ!
Lion Comics # 015 - Vasagar Kaditham - Rs.25 Parisu

அட்டைப்படம் Lion Comics # 023 - Moscowil Master
கதை மாஸ்கோவில் மாஸ்டர்!
இதழ் லயன் காமிக்ஸ் (மாத இதழ்)
வெளியீடு 23
முதல் பதிப்பு மார்ச் 1986
மறுபதிப்புகள் இதுவரை இல்லை
பதிப்பகம் லயன் காமிக்ஸ்
ஆசிரியர் S.விஜயன்
அச்சிட்டோர் முத்து ஃபைன் ஆர்ட் பப்ளிகேஷன்ஸ், சிவகாசி
நாயகர்(கள்) ஜான் மாஸ்டர்
மூலம் MASTER-SPY (ஆங்கிலம்)
இதழ் TIGER (Weekly)
வெளியீடு IPC MAGAZINES LTD.
முதல் பதிப்பு APR 1983 TO JAN 1984
கதை ???
ஓவியம் SANDY JAMES
தமிழில் S.விஜயன்
பக்கங்கள் (கருப்பு வெள்ளை)
சைஸ் 10cmx14cm
விலை ரூ:2.50/- (1986 முதல் பதிப்பின் போது)
CREDITS Lion Comics # 023 - Moscowil Master - Credits
விளம்பரம் Lion Comics # 022 - Moscowil Master - AdThigil # 03 - Moscowil Master - Ad
முதல் பக்கம்

Lion Comics # 023 - Moscowil Master - First Page

வாசகர் கடிதம் Lion Comics # 024 - Vasagar Kaditham

சுவாரசியமான துணுக்குகள்:

 • இக்கதைத் தொடரின் ஓவியர் SANDY JAMES நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானவர்! அதிரடிப் படை, சூப்பர் ஹீரோ டைகர் (ராணி காமிக்ஸ்) கதைகளுக்கு துடிப்பான ஓவியங்கள் வரைந்தது இவர்தான்! துரதிர்ஷ்டவசமாக இவரைப் பற்றிய தகவல்கள் இனையத்தில் எதுவும் கிடைக்கவில்லை! மன்னிக்கவும்! இவரது அற்புத ஓவியங்கள் இக்கதைத் தொடருக்கு மேலும் மெருகூட்டுகின்றன!
 • லயன் காமிக்ஸ் # 013 - சதி வலை! தான் லயன் காமிக்ஸ்-ன் முதல் கோடை மலர் ஆகும்! பெரிய சைஸில் ரூ.4/- விலையில் அசத்தலான இந்த புத்தகம் காமிக்ஸ் வேட்டையர்களின் கனவு பொக்கிஷங்களில் ஒன்று! INFACT ஜான் மாஸ்டர் தோன்றும் இவ்விரு புத்தகங்களும் கிடைப்பது மிகவும் அரிது!
 • தமிழில் வெளிவந்த முதல் விளையாட்டு சம்பந்தப்பட்ட காமிக்ஸ் ஹீரோ ஜான் மாஸ்டர் தான் என்பது எனது கருத்து! இவரது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!
 • இவரது கதைகளில் இவரது கோணங்கி அஸிஸ்டெண்டாக வரும் ராபின் கதாபாத்திரம் காமிக்ஸ் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்! சூப்பர் ஹீரோ டைகர்-க்கு ஒரு ஹென்றி போல் ஜான் மாஸ்டர்-க்கு ஒரு ராபின் அமைந்தது அவரது அதிர்ஷ்டமே! இவரது கண்டுபிடிப்புகள் ஆபத்து நேரத்தில் வேலை செய்கிறதோ இல்லையோ நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்! ஆனால் இவரது ஆங்கில ஒரிஜினல் பெயர்தான் (FERGUS THATERY) வாயில் நுழைய மாட்டேனென்கிறது!
 • மொத்தம் இரண்டேயிரண்டு கதைகளில் மட்டுமே வந்திருந்தாலும் கூட தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார் ஜான் மாஸ்டர்! ஆனால் ஆங்கிலத்தில் இவரது நிலைமை பரிதாபகரமானது! இவர் குறித்த இந்த அற்ப தகவல்களை தேடிப் பிடிப்பதற்கே இவ்வளவு காலம் ஆகிவிட்டது! அதுவும் இவர் தோன்றிய TIGER வார இதழ் இவர் போன்ற விளையாட்டு வீரர்களை நாயகர்களாகக் கொண்ட காமிக்ஸ்களுக்கு பெயர் போனது! இவர்களுள் ROY OF THE ROVERS மட்டும் மிகப் பிரபலம்!  ஆனால் பல டஜன் கதாநாயகர்களுள் ஜான் மாஸ்டர் காணாமல் போய் விட்டது நமது துரதிர்ஷடமே!

ஆங்கில மூலம்:

இத்தொடரின் ஆங்கில மூலம் ஆன்-லைனில் கிடைப்பதென்பது வெகு அரிதாக உள்ளது! இது வரையில் இது ஒரு பாகம் மட்டுமே ஆன்-லைனில் கிடைத்தது! தமிழில் கூட புத்தகங்கள் எளிதாக கிடைத்துவிடும் போலிருக்கிறது! லயன் காமிக்ஸ் # 023 - மாஸ்கோவில் மாஸ்டர்! கதையிலிருந்து சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு!

000190002000021

ஹாட்-லைன்:

ஜான் மாஸ்டர் கதைகள் ஏன் தொடர்ந்து வருவதில்லை என்று வாசகர்கள் பலரும் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களை பலமுறை கேட்டிருக்கின்றனர்! அவர் எழுதிய முதல் ஹாட்-லைன்-லும் இக்கேள்வி கேட்கப்பட்டது! அதற்கு அவர் அளித்துள்ள சுவாரசியமான பதிலைப் படித்து மகிழுங்கள்!

Lion Comics # 042 - Lion Deepavali Super Special - Hotline

சிங்கத்தின் சிறுவயதில்:

ஜான் மாஸ்டர் குறித்து சிங்கத்தின் சிறுவயதில் தொடரில் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் கூறியுள்ளதைப் படித்து மகிழுங்கள்!

Lion Comics # 192 - Singathin Siruvayadhil - John Master

சிங்கத்தின் சிறுவயதில் அனைத்து பாகங்களும் படிக்க:

நிறைகள்:

 • ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு சரியான விருந்து! விளையாட்டு சார்ந்திருப்பது கூடுதல் சிறப்பு!
 • அட்டகாசமான ஓவியங்கள்! அதிரடி கதைத் திருப்பங்கள்! ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் ஜெட் வேக கதையமைப்பு!

குறைகள்:

 • ஒன்றும் இல்லை! கதைத் தொடர் இரண்டு கதைகளோடு முடிந்து விட்டதைத் தவிர!

நன்றிகள்:

 • முத்து விசிறி – வழக்கம் போல ஆங்கிலத் தொடரின் அனைத்து விவரங்களையும் அளித்தமைக்கு!
 • ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் – இக்கதைத் தொடரை நமக்கு அறிமுகம் செய்தமைக்கு!
 • பதிவை இவ்வளவு தூரம் பொறுமையாகப் படித்த உங்களுக்கும்தான்!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!