Wednesday, September 23, 2009

அ.கொ.தீ.க. டைம்ஸ்!

“தமிழ்ல ஞானப்பழம்!
மலையாளத்துல ஞானப்பழா!
தெலுங்குல ஞான பண்டு!
ஹிந்தில ஞான கேலா ஹை!
இங்கிலீஸ்ல இண்டலிஜண்ட் ப்ரூட்!”

-கவுண்டமணி (படம்: ஞானப்பழம்)

வணக்கம்,

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டு(ம்) வந்திருக்கும் நமது வழக்கத்திற்கு மாறான ஒருகாமிக்ஸ் செய்திப் பதிவு!

அமெரிக்க காமிக்ஸ் படைப்பாளிகளின்(?!!) அட்டூழியம் வர வர எல்லை மீறிக் கொண்டே போகிறது என்பதை உணர்த்தும் இந்த செய்தி தினமலரில் 20-08-2009 அன்று வெளிவந்தது!

DinaMalar Daily Dated 20-08-2009 Trichy Edition Obama As President Evil

அகில உலகெங்கும் (அதாங்க கனடாவுக்கு கீழ, மெக்ஸிகோவுக்கு மேல இருக்குமே,அந்த உலகம் – நன்றி: ஹாலிவுட் பாலா) காமிக்ஸ் உலகின் தலைசிறந்த வில்லன் யாரென நடந்த வாக்கெடுப்பில் வழக்கம் போல ஜோக்கர் வெற்றி பெற்றுள்ளார்! இந்த தேர்தலில் அகிலமேஅஞ்சி நடுங்கும் அ.கொ.தீ.க. தலைவர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது அயல் நாட்டின் அற்ப சதி என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன்!

deccan chronicle sept 8 tuesday page 12 joker best villainthe hindu sept 2 wednesday page 20 twitter memory harmThe Hindu Daily Dated 25-08-2009 Chennai Edition Young World Page 3 Nancy Drew Comics

இந்த தேர்தலில் நடந்திருக்கும் அட்டூழியங்கள் குறித்து விரைவில் ஒரு சிறப்புப் பதிவு வெளியிடுகிறேன்! அது வரைக்கும் இந்த கொசுறு செய்திகளையும் படித்து மகிழுங்கள்!

ஃபேஸ்புக்கில் சேர்ந்தால் உங்கள் அறிவுத் திறன் கூடம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்தான்! ஆனால் ட்விட்டரில் இருக்கும் நண்பர்கள் சிலரைப் பார்க்கும் போது ஒரு வேளை இதில் உண்மை இருக்குமோ என்று கூட தோன்றுகிறது!

ஏற்கெனவே நண்பர்கள் பலரும் வெளியிட்டு விட்ட செய்தி எனினும் நானும் என் பங்குக்கு இதை மீண்டும் வெளியிடுகிறேன்! இந்த செய்தி THE HINDU நாளிதழில் 02-09-2009 அன்று வெளியிடப்பட்டது!

the hindu sept 2 wednesday page 20 marvel disney news

இந்த பதிவில் எழுதுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்பதாலும், செய்திகள் எல்லாம் சற்றே பழையவை என்பதாலும் கடைசியாக ஒன்றே ஒன்றை மட்டும் இங்கு நான் சொல்லிக் கொள்ள விழைகிறேன்!

“நாங்களும் காமிக்ஸ் நியூஸ் போடுவோம்ல!”

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறாங்களான்னெல்லாம் கேட்டு பின்னூட்டமெல்லாம் போடக்கூடாது, சொல்லிப்புட்டேன் ஆமாம்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

14 comments:

 1. மதிப்பிற்குரிய தலைவர் அவர்கட்கு,

  நீங்கள் பக் இன் பிஸ்னஸ் என்று தெளிவாக காட்டுகிறது பதிவு.

  முன்பு Evil Dead என்ற படத்தின் நாயகன் கூட ஒபாமா போன்று போஸ் தந்ததாக ஞாபகம் இருக்கிறது. சாரா பொலின் அம்மையார் தானா ஒபமா மாமாவின் கால்களை தழுவிக் கொண்டிருப்பது.

  உங்களிடமிருந்து மஞ்சள் பூ மர்மம், மற்றும் 30 வருட நிறைவைக் கொண்டாடும் மாயாவியின் காமிக்ஸ் இதழ்கள் குறித்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  உங்கள் பதிவு உண்மையிலேயே மனதில் மகிழ்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.

  அமர்களம் ஆரம்பம்...

  ReplyDelete
 2. நெடு நாள் கழித்து, மீண்டும் வருகை தந்திருக்கும் காமிக்ஸ் டாக்டர் மற்றும் அகொதீக கழகத்தினருக்கு வாழ்த்துகள்.

  உங்கள் ட்ரேட்மார்க் பாணி நய்யாண்டி மற்றும் வித்தியாசமான காமிக்ஸ் செய்திகள் அருமை. ஒபாமா காமிக்ஸ் கதாநாயகர் என்பது ஒரு ஒன்-டைம்-ஒன்லி கதையாக இருக்கும் என்று நம்புகிறேன். இல்லையேல், பாவம் அமெரிக்க மக்கள் :)

  @ காதலரே: Evil Dead நாயகன் அல்ல, ஒபாமா தான் ஈவில் டெட் பாணியில் போஸ் கொடுத்திருக்கிறார்... கதாசிரியர்கள் அதை வைத்தே அவரை நக்கல் செய்கிறார்களோ என்னவோ :) ?

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்

  பிட் நோட்டீஸ்: வழக்கம் போல அந்த கவுண்டர் பஞ்ச் டயலாக் அருமை.... ஞானபழத்திற்கு இதை விட சிறந்த விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது :) Another Gounder Special Punch :)

  ReplyDelete
 3. தலைவரே ,
  உங்கள் மறுபிரவேசம் மகிழ்ச்சி அளிக்கிறது . உங்களுக்கு போட்டியாக King of Crooks வேறு வந்துருக்கிறார் .

  அன்புடன் ,
  லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்

  ReplyDelete
 4. //அதாங்க கனடாவுக்கு கீழ, மெக்ஸிகோவுக்கு மேல இருக்குமே, அந்த உலகம்//

  அடா அடா அடா

  ReplyDelete
 5. sir,

  great that you came back from hibernation and started posting. Hope the same with other bloggers as well, esp TCU.

  nice scans and are you in trichy now?

  Vedha
  Actually You Can Skip These Pages

  ReplyDelete
 6. this obama comics is inspired by "My name is Bruce", written and directed by bruce campbell who was the hero of Evil dead series, as rightly pointed out by kk.

  in fact the film poster is copied to make the cover artwork of this comics.

  Vedha
  Actually You Can Skip These Pages

  ReplyDelete
 7. thanks for having my blog in the sidebar, even though i do not comment much on your blog so far.

  this shows genuine love for comics.

  Vedha
  Actually You Can Skip These Pages

  ReplyDelete
 8. Hi,

  Happy to see u back.
  Keep continue the good work.

  Krishna

  ReplyDelete
 9. நல்ல தகவல் களஞ்சியம்.

  பதிவுக்கும், பதித்தமைக்கும் நன்றி.

  உங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

  ReplyDelete
 10. //ஆனால் ட்விட்டரில் இருக்கும் நண்பர்கள் சிலரைப் பார்க்கும் போது ஒரு வேளை இதில் உண்மை இருக்குமோ என்று கூட தோன்றுகிறது!//

  உண்மை தான். கண்கூடாக பார்க்கிறேன்.

  ReplyDelete
 11. அட்டகாசம் தலைவரே,

  உங்கள் வருகை எங்களை மகிழ்வித்தது. பதிவை விட உங்களை மீண்டும் பார்த்ததே எங்களை அதிக மகிழ்சிக்கு உள்ளாக்கியது.

  பதிவுக்கும், மீண்டும் வந்தமைக்கும் நன்றி.

  ReplyDelete
 12. தலைவரே, கவுண்டர் பன்ச்சில் ஒரு லைன் குறைகிறதே? எடிட்டிங்கா?

  ReplyDelete
 13. //குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறாங்களான்னெல்லாம் கேட்டு பின்னூட்டமெல்லாம் போடக்கூடாது, சொல்லிப்புட்டேன் ஆமாம்!//

  சார், அப்பா நிஜம்மாவே குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறதில்லயா?

  ReplyDelete
 14. அண்ணன் SUREஷ் அவர்களே,

  //அடா அடா அடா//

  எல்லா புகழும் ஹாலிவுட் பாலாவுக்கே!

  VEDHA,

  //nice scans and are you in trichy now?//

  இன்னுமா என்னய நம்புறாங்க...?!! அப்போ இப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கடா சூனா பானா!

  காமிக்ஸ் பிரியரே,

  //உங்கள் வருகை எங்களை மகிழ்வித்தது. பதிவை விட உங்களை மீண்டும் பார்த்ததே எங்களை அதிக மகிழ்சிக்கு உள்ளாக்கியது.//

  இது ஒரு சிறந்த மொக்கைப் பதிவு என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்!

  //தலைவரே, கவுண்டர் பன்ச்சில் ஒரு லைன் குறைகிறதே? எடிட்டிங்கா?//

  இல்லை, கண்ணட பெயர் ஞாபகம் வரவில்லை, அதனால் விட்டுவிட்டேன்! தெரிந்தால் சொல்லுங்களேன், அப்டேட் செய்து விடுகிறேன்!

  //சார், அப்பா நிஜம்மாவே குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறதில்லயா?//

  NO COMMENTS!

  திருச்சியிலிருந்து...
  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!