Thursday, October 23, 2008

மொக்கை!


தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகிற்கு எனது முதற்கண் வணக்கம்,

இது வரையில் பிறரின் காமிக்ஸ் வலைப்பதிவுகளில் திரை மறைவு சதி வேலைகளில் ஈடுபட்டும், பின்னூட்டங்களிட்டும் காலம் தள்ளிக் கொண்டிருந்த நான் திடீரென வலைப்பூ ஆரம்பிப்பதற்கான காரணம் என்ன? என்று நீங்கள் அனைவரும் எண்ணலாம்.

பெரிதாக ஒன்றும் இல்லை. இத்தனை நாள் என் சோம்பேறித் தனத்தால் (basically I'm a சோம்பேறி) வலைப்பூவில் எதுவும் எழுதவில்லை (தப்பியது தமிழகம்).

ஆனால் என்னை விட மிகப்பெரும் வாழைப்பழ சோம்பேறியான என் நண்பர் விஸ்வா கூட ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூ ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார். அவரால் எனக்கு வேலைப்பளு அதிகமானது தான் மிச்சம். பல புதிய காமிக்ஸ் ஆய்வுகள் மேற்கொண்டதில், அதிலும் குறிப்பாக 'ராணி' காமிக்ஸ் பற்றி ஆராய்ந்ததில் பெண்டு கழண்டுவிட்டது.

மேலும் நண்பர் ரஃபிக் வேறு தமிழில் காமிக்ஸ் பதிவு போட வேண்டும் என்று என்னையும், விஸ்வாவையும் அடிக்கடி ஆட்டத்திற்கு அழைப்பு விடுவார். எங்கள் சோம்பேறித்தனம் தான் இந்நாள் வரையில் எம்மையும் உம்மையும் காத்தது. ஆனால் இப்போது அதுக்கும் வழியில்லை.

நண்பர் அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கடேஸ்வரன் கூட ஒரு வலைப்பூ ஆரம்பித்து விட்டார். ஆனால் இன்னமும் ஒன்றும் பதிவு செய்யக் காணோம். பின்னே, எங்களுடன் சேர்ந்த பிறகு அவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க முடியுமா என்ன?

ஆகையால் ரோஷம் பொங்கி நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன். பார்ப்போம் எப்படி செல்கிறதென்று.

மக்கள் மனதில் எழக்கூடிய அடுத்தக் கேள்வி, அ.கொ.தீ.க. என்றால் என்ன?

காமிக்ஸ் படிக்கும் எவருக்கும் அ.கொ.தீ.க. பற்றி தெரிந்திருக்கும். அழிவு, கொள்ளை, தீமை கழகம் என்பதன் சுருக்கம் தான் அ.கொ.தீ.க. லாரன்ஸ் & டேவிட் கதைகளில் இந்த தீவிரவாத கும்பல் தான் எப்போதும் வில்லன்கள். சில சமயம் இரும்புக்கை மாயாவி கூட இவர்களுடன் மோதுவார். இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

ஆனால் ஒரு தீவிரவாத இயக்கத்தைத் தலைப்பாகக் கொண்டு ஏன் வலைப்பூ தொடங்க வேண்டும்? ஒரு விளம்பரம்தான் ("அந்த சினிமாக்காரங்க தான் விளம்பரம், விளம்பரம்னு அலையறாங்க, உங்களுக்கெதுக்கு இதெல்லாம்" என நண்பர் விஸ்வா கவுண்டமணி ஸ்டைலில் நக்கலடிப்பது கேட்கிறது).

பொதுவாக எல்லா வலைஞர்களும் ஹீரோக்களைப் பற்றியே எழுதுவார்கள். அவற்றிலிருந்து வேறுபட வேண்டும் என்பதாலும், சில வித்தியாசமான விஷயங்களை பொதுவாக எந்த வலைத்தளத்திலும் பதிவு செய்யாததாலும், அவற்றிக்கான ஒரு இடமாக இந்த வலைப்பூ விளங்கும்.

அதுவுமில்லாமல் நாம் அனைவரும் விரும்பும் காமிக்ஸை அழிவு, கொள்ளை, தீமை ஆகியவற்றிலிருந்து காக்கவும் இது பயன்படும் (இது விஸ்வா பஞ்ச்).

இதில் காமிக்ஸ் சம்பந்தப்பட்ட நல்ல விஷயங்களை தமிழில் எவர் பதிவு செய்ய விரும்பினாலும் வரவேற்கப் படுகிறார்கள். அவர்களின் பெயரில் வெளியிட நான் தயார். அவர்கள் இந்த வலைப்பூவில் ஆசிரியர்களாகவும் சேர்த்துக் கொள்ளப் படுவர். என்ன ரஃபிக், மகிழ்ச்சிதானே?

காமிக்ஸ் பதிவுகள் தவிர அவ்வப்போது இது போல் எனது மொக்கைகளும் தொடரும். நான் பார்த்த 'ஒலக சினிமா' பற்றி கூட எழுதலாம் என்றிருக்கின்றேன் (ஒலக சினிமான்னா ஏதோ மேட்டர் படம்னு நெனச்சுடாதீங்க, எல்லாம் தரமான படங்கள்).

தயை கூர்ந்து பொறுத்தருளி தங்கள் நல்லாதரவை இந்த சாமானியனுக்கு வழங்குமாறு அன்பர்களை வேண்டிக் கொள்கிறேன்.

அப்புறம் ஒரு இன்பமும் துயரமும் கலந்த சேதி. ஓவியர் செல்லத்தை உங்களில் எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளீர்கள் எனத் தெரியவில்லை. திங்களன்று நானும் விஸ்வாவும் அவரை சந்தித்து ஒரு பேட்டி கண்டோம். அதை விரைவில் வீடியோவாக வலையிலேற்றவும் உள்ளோம். இது இனிப்பான செய்தி. துயரச் செய்தியை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதை நினைத்தாலே மனம் கனக்கிறது.

வழக்கம் போல வந்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக இட்டுச் செல்லுங்கள் என்பது என் அன்புக்கட்டளை. மீறக்கூடாது. அப்புறம் சிலபல போட்டிகளும், வாக்கெடுப்புக்களும் உண்டு. கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்போதைக்கு பரிசு எதுவும் தரும் பொருளாதாரச் சூழ்நிலையில் நான் இல்லை என்பதால் வெறும் பாராட்டுக்கள் மட்டுமே வழங்க முடியும்.

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்.


18 comments:

 1. Hi buddy

  It's been raining blogs for comics fans.The inception post itself promises a lot . Right from the blog title , i liked everything . It would be great if u come up with a separate vote regarding who is the greatest villian for each of comics hero like Spider , Archie ,Tex viller etc .
  Keep the good work going amico .

  ReplyDelete
 2. டாக்டர் சார், வலை பதிவு உலகத்துக்கு வருக வருக என்று வரவேற்கிறேன். முத்துவெரியர்'க்கு அப்புறம் இன்னொரு நெடுநாள் முத்து, லைன் வாசகரான "காமிக்ஸ்- டாக்டர்" இந்த முயற்சி தொடங்குவது ஒரு தனி சிறப்பு.

  வலை பூவிற்கு "அ.கொ.தீ.க." என்று தலைப்பு சூடியதிலேயே ஒரு சிக்ஸர் அடித்து விட்டீர்கள். சின்ன வயதில் முத்து காமிக்ஸில் அந்த எழுத்துக்களை கஷ்ட பட்டு படித்தது இன்றும் நியாபகம் இருக்கிறது. அதற்க்கு ஒரு புது அர்த்தம் சூட்டி, தொடங்கியிருப்பது வரவேற்க தக்க விஷயம்.

  என் பெயரை "ரஃபிக்" என்ற பால்ய பருவ உச்சரிப்பில், மிக நாள் சென்று திரும்ப படிக்க உதவியதற்கு நன்றி. Rafiq என்ற எனது பெயரின் மிக சரியான இந்த உச்சரிப்பை, பள்ளி பதிவுகளில் ஏற்ற எவ்வல்லோவ முயன்றும், அவர்களின் அறியாமையால், ரபீக் என்றும், ரபிக் என்றும், உருமாறி லயித்து போனது துரதிர்ஷ்டம். சுய புராணத்துக்கு மன்னிக்கவும். :)

  இணைய துணை ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி. என் பெயரை முதலில் அதற்கு பதிந்து கொள்ள ஆவன செய்கிறேன். சீக்கிரம் அழைப்பு அனுப்புங்கள்.

  அப்புறும், சோம்பேறிகள் பட்டியலில் என் பெயர் விட்டு சதி பண்ணியதற்காக வன்மையாக கண்டிக்கிறேன்.

  கடைசியாக, மற்ற பின்னூட்டவாதிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அனைவரும் பின்னூட்டம் பதிந்தாலும் தமிழில் பதிய கண்டிப்பாக முயல வேண்டும். எப்படி என்பதற்கு இங்கு சுட்டி காணுங்கள் :

  http://www.google.co.in/transliterate/indic/Tamil
  http://www.google.co.in/transliterate/indic/about_ta.html

  நமது சுந்தர தமிழில் உரை ஆடுவது, அதுவும் நம்முடைய பால்ய பருவத்தை நினைவு கூறும் சமயத்தில், ஒரு தனி சுகம். "எவ்வளவோ செய்கிறோம், இதை பண்ண மாட்டோமா..." என்ன சொல்கிறீர்கள் ? :).

  தீவிரவாதி No. 1
  ரஃபிக் ராஜா
  காமிக்கியல் - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"  பி.கு.:
  1. ஓவியர் செல்லம் 'மின் தற்போதைய நிலைமையை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன். மனம் வருந்த கூடிய விஷயம் தான். அவரின் பேட்டி படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

  2. எதோ ஒரு மாயாவி கதையில் அந்த பயங்கரவாதியை பார்த்த நியாபகம். பழைய புத்தங்களை புரட்டி விட்டு, விரைவில் பின்னூட்டம் இடுகிறேன்.

  ReplyDelete
 3. Welcome doctor!!!

  As Rafiq said, sixer in the first ball. Others thought a traditional names, but as usual you have thought differently and got a good one.

  The villain in the picture is Dr Skaal and the story is Marmatheevil Maayavi(Muthu No-13 first print).

  Keep up the good work!!!

  Regards,
  Muthufan

  ReplyDelete
 4. அட தமிழில் அடிக்க சுலபமாகத்தான் இருக்கிறது. இனிமேல் தமிழிலேயே பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

  -முத்து விசிறி

  ReplyDelete
 5. கா.கொ.க்.து தலைவரே ,2011ன் காமிக்ஸ் முதல்வரே வருக வருக, ஆரம்பமே அட்டகாசமாக வேதாளரின் பன்ச்சுடன், ச்சும்மா அதிருதில்ல. ஒரு சந்தேகம் மேட்டரான படங்களில் தரமான படங்கள் இல்லையா... மற்றும் படி சோம்பேறி என்பதெல்லாம் அவையடக்கம். இப்படி நமீதா மாதிரி வலைப்பூ போட்டதிற்கு பிடியுங்கள் பாராட்டுகளை.உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். quantum of solaceக்கு முதல் விமர்சனத்தைப் போடுங்களேன்.

  ReplyDelete
 6. ஆரம்பமே அட்டகாசமா இருக்கு. ஆமா, இந்த காமிக்ஸ் பிரியர்கள் எல்லோரும் ஏன் வாழைப்பழ சோம்பேறிகளாக இருக்கிறார்கள்?
  எப்படியோ, பயங்கரமா கிளம்பி இருக்கீங்க. எல்லோரையும் ஜோதியில் ஐக்கியம் பண்ணிடலாம்.

  josh

  ReplyDelete
 7. உங்களை கராத்தே டாக்டர் என்று விஸ்வா சொன்னார். உண்மையா? உண்மையென்றால், ஜானி நீரோ பற்றிய என்னுடைய கருத்துகளை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். அப்புறம், நமது சங்க உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு சீக்ரெட் பாஸ்வேர்ட் கொடுத்து தான் தலைமையிடம் பேச வேண்டுமா? எனக்கு கொடுக்கப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா? "Kill Johnny". நிஜமாதான்.

  ReplyDelete
 8. சூப்பர்.... முதல் பதிவிலேயே அசத்தி விட்டீர்கள்..............
  காமிக்ஸ் "குத்து"! ஐ continue பண்ணவும்.......
  காமிக்ஸில் இருந்து தடம் மாறாமல் இந்த ப்ளொக்ஐ காமிக்ஸ்கு மட்டும் dedicate பண்ணவும்

  ReplyDelete
 9. காணாமல் போன கடல் வில்லன் கிங் கோப்ரா மற்றும் திசை மார்யா கப்பல்கள் வில்லன் கேப்டன் போளிதொவை முக்கிய வில்லன்கள் வரிசையில் சேர்க்கவும் .மேலும் நம் நெஞ்சை தொட்ட வில்லன் செந்தாடியை ( முகமூடி வேதாளர் ) மறக்க முடியுமா ?

  ReplyDelete
 10. நானும் ஒரு வாழைப்பழ சோம்பேறிதான்
  புரிஞ்சி இருக்குமே ஆமாம் நானும் ஒரு காமிக்ஸ் வெறியன்தான்
  நாலு கழுதை வயசு ஆச்சு ( எனக்குதான்) இப்பவும் காமிக்ஸ் படிக்கிறதை நிறுத்த முடியல.எங்கயாவது official டூர் போனா கூட 10 இல்ல 20 காமிக்ஸ் எடுத்துகிட்டு போறேன்.
  வீட்ல மட்டும் இல்ல வெளியே கூட ஒரு மாதிரியா பாக்கறாங்க.அதுவே நம்மை தனியா காட்டுது அப்படிங்கற நெனப்பு எனக்கு.ரொம்ப சுய புராணம் எழுதிட்டேன்னு நினைக்கிறேன்.

  பயங்கரவாதி ன்னு பேர் வெச்சிக்கிட்டு எங்களை எல்லாம் சந்தோஷ படுத்திட்டிங்க.
  எல்லாரும் ஏதேதோ எழுதி இருக்காங்க ஆனா நம்ம மார்க்கெட்டிங் மேனேஜர் விஸ்வா ஒண்ணுமே எழுதலியே ஏன்?

  எப்படியோ நானும் இத கூட்டத்துல சேந்துட்டேன்னு நெனைக்கிறேன்.
  தீவிரவாதி No.1ன்னு நம்ப ரஃபிக் ராஜா போட்டதால

  தீவிரவாதி No.2
  GOPS

  ReplyDelete
 11. உளவு துறை தலைவர் சதீஷ்'க்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  தோழர் கிங் விஸ்வா,உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  அம்மா ஆசை இரவுகள் விசிறி

  ReplyDelete
 12. டாக்டர் டக்கர் அவர்களுக்கு,

  தீபாவளி நல்வாழ்த்துகள்

  பர்மாவிலிருந்து பாட்சா.

  ReplyDelete
 13. தோழர்,

  நானும் ஒரு தீவிரவாதி தான் என்றாலும், தலைவன் என்கிற முறையில் நானே வந்து பின்னூட்டம் இட்டால் நன்றாக இராது என்பதால் தான் இதுவரை பொறுத்து இருந்தேன்.

  ஆனால், இந்த பின்னூட்டத்தின் எண்ணோ 13. எங்கள் தானை தலைவரின் எண்ணும் (XIII) அதுவே என்பதால் மிக சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  கும்மி அடித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

  தொடர்ந்து உங்களின் பொன்னான ஆதரவை எமக்கு அளிக்கும்படி தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்.

  தீவிரவாதிகளின் தலைவன்

  பயனர் பெயர் : கிங் விஸ்வா

  கடவுச் சொல் : XIII

  ReplyDelete
 14. ஒரு வழியாக முத்து #310 சந்தாதாரர் பதிப்பு கைவசம் வந்து சேர்ந்தது. ஒரு முன்னோட்டம் விட எனது வலை பதிவை சுட்டி பாருங்கள்.

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்
  - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"

  ReplyDelete
 15. டாக்டர் அய்யா!

  நீங்கள் இந்த அளவுக்கு சரளமாக எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அருமையான நடை. உங்களோடு போட்டி போட என்னால் முடியுமா என்று தெரியவில்லை. உங்களது நினைவாற்றல் வியக்க வைக்கிறது.

  நமது சூப்பர் வில்லன் ஸ்பைடர் பற்றி எழுதுங்களேன். மற்ற காமிக்ஸ் நாயகர்களை பற்றி நிறைய பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். ஆனால் ஸ்பைடர் பற்றி அறிந்தது குறைவே.

  ஆமாம், டெக்ஸ் வில்லர் கூட ஸ்பைடர் போல தொடக்கத்தில் வில்லனாக இருந்ததாகவும் பின்னர் மனம் திருந்தி ஹீரோவாக ஆனதாகவும், நல்லவராக மாறிய பிறகே 'டெக்ஸ் வில்லன்' என்ற பெயர் ' டெக்ஸ் வில்லர்' ஆக மாறியதாக ஒரு வதந்தி உலாவுகிறதே உண்மையா டாக்டர் அய்யா?

  ReplyDelete
 16. கராத்தே டாக்டரே,

  நீங்கள் எங்கே?

  கிங் விஸ்வவை வாழைப்பழ சோம்பேறி என்றும், வெங்கி சாரை பூசணிக்காய் சோம்பேறி என்றும் கூறும் நீங்கள் ஒரு ஸ்ட்ரா பெர்ரி சோம்பேறி.

  அதாவது, நீங்கள் ஒரு ஐஸ் ப்ரூட் அய்யர். (டைரக்டர் பாக்யராஜ் வாழ்க)

  தயவு செய்து அடுத்த அப்டேட் போடும் அய்யா.

  ReplyDelete
 17. அடடே,

  உங்கள் வலைப்பூவில் சிறிய மாற்றங்கள்.

  காமிக்ஸ் குத்து சிறப்பாக உள்ளது. அதனை படித்த உடன் காமிக்ஸ் classics'il வந்த Re-பிரிண்ட் ஆனா கதையை மீண்டும் படிக்க ஆசை வந்தது.

  படத்தில் காணப்படும் மங்கை "மஞ்சள் பூ மர்மம்" என்ற இலக்கியத்தில் வரும் ஜுனைதா என்ற பேரழகி. சரியா?

  இன்னும் இரண்டாவது இடுகையை காணவில்லை. ஆனால் நீங்கள் மற்றவரை சோம்பேறி என்று கூறுகிறீர்கள்.

  இடைப்பட்ட காலகட்டத்தில் கிங் விஸ்வா இரண்டு பதிவுகளையும் வெங்கடேஷ்வரன் அவர்கள் இரண்டு பதிவுகளையும் இட்டுள்ளனர்.

  அம்மா ஆசை இரவுகள் விசிறி.

  ReplyDelete
 18. ஏதேது, தீபாவளிக்கு லீவு போட்டு ஊருக்கு போயிட்டு வந்தால் இவ்வளோ பேர் நம்மளையும் மதிச்சு வந்து கருத்து தெரிவிச்சிருக்காங்க, பரவாயில்லையே?

  அன்பிற்குரிய அருண் பிரசாத் அவர்களே,

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! பின்வரும் பதிவுகளிலும், ஒட்டெடுப்புகளிலும் தனித்தனியே அந்தந்த கதைத்தொடர்களின் வில்லன்களைப் பற்றி விரிவாகப் பார்த்து விடுவோம். சரிதானே? இனிமேல் தமிழிலிலேயே பின்னூட்டம் போடலாமே? தமிழில் பின்னூட்டமிட இங்கே 'க்ளிக்'கவும்.

  அன்பிற்குரிய ரஃபிக் ராஜா அவர்களே,

  தாங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பதிவிடலாம். மேட்டரை ரெடி செய்து விட்டு ஒரு மெயில் தட்டி விடுங்களேன். உடனே உங்களை ஆசிரியர் ஆக்கி சோம்பேறிகள் லிஸ்ட்டில் சேர்த்து விடுகிறேன். பதிவையும் எந்தவிதத்திலும் எடிட் செய்யாமல் போட்டுவிடுகிறேன்.

  அன்பிற்குரிய முத்து விசிறி அவர்களே,

  வருகைக்கு நன்றி!பளிச்சென்று பதில் கூறியதற்கு பாராட்டுக்கள்! விரைவில் தமிழில் பதிவிடவும்! ஆவலோடு எதிர்நோக்குகிறோம்!

  அன்பிற்குரிய ஷங்கர்விஸ்வலிங்கம் அவர்களே,

  பதிவு போட்டு பேர் வாங்குபவர்கள் இருக்கிறார்கள், ஆனால் நீங்கள் பட்டங்கள் கொடுத்தே பேர் வாங்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே? ஒலக சினிமா பற்றி நான் இங்கு எழுதப் போவதெல்லாம் காமிக்ஸ் சம்பந்தமாகத்தான் இருக்கும். தரமான மேட்டர் படங்களை நான் ரசித்தாலும் அவை இந்த இடத்தில் சம்பந்தமில்லாமல் துருத்திக் கொண்டு கவனத்தை திசைதிருப்பும் என்பதால்தான் அப்படி எழுதினேன்.
  தங்களின் 'க்வாண்டம் ஆஃப் சோலேஸ்' விமர்சனம் கண்டேன். நன்று!

  அன்பிற்குரிய பங்குவேட்டையர் ஜோஷ் அவர்களே,

  ஜானி நீரோ பற்றி தாங்கள் பதிவு செய்துள்ள அவதுறுகளைத் தலைமையகம் மன்னிக்கத் தயாராக உள்ளது. என்னதான் அவர் நம் எதிரியாக இருந்தாலும் அவரைப் பற்றி இப்படி எழுதுவது தவறு என்பதையும், அவரது வீரதீர பராக்கிரமங்களை தாங்கள் மீண்டும் பலமுறை படித்துப் பார்த்து தங்கள் கருத்தை மாற்றியமைக்குமாறும் கேட்டுக்கொள்கிறது.
  ஆனால் இரகசிய கடவுச்சொல்லை வெளியிட்டதற்கு தண்டனையாக தாங்கள் எழுதும் கவிதைகளை தாங்களே ஆயிரம் முறை "இம்போசிஷன்" எழுதுமாறு தலைமையகம் தங்களைப் பணிக்கிறது.


  அன்பிற்குரிய ஸ்ரீநி அவர்களே,

  வருகைக்கு நன்றி! நான் ஒலக சினிமா பற்றிப் போடும் பதிவுகள் காமிக்ஸ் சம்பந்தப் பட்டவையாகவே இருக்கும். ஓகேதானே?

  அன்பிற்குரிய இரவுக்கழுகார் ரகு அவர்களே,

  செந்தாடி பற்றி விரைவில் உங்களுக்காகவே ஸ்பெஷல் பதிவு உண்டு!

  அன்பிற்குரிய கோப்ஸ் அவர்களே,

  வருகைக்கு நன்றி! தங்கள் ஆதரவை மேலும் எதிர்பார்க்கிறேன்.

  வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வா அவர்களே,

  ஆமா நீங்க எப்போ தலைவர் ஆனீங்க? தீவிரவாத கும்பலுக்குள்ளேயே பிரிவினைவாதமா? தங்களின் டைமிங் அற்புதம். தொடர்ந்து கலக்குங்கள்.

  அன்பிற்குரிய அய்யம்பாளையம் லெட்சுமணன் வெங்கேஸ்வரன் அவர்களே,

  ஸ்பைடர், டெக்ஸ் வில்லர் பற்றி விரைவில் எழுதுகிறேன். தங்களின் 'காமிக்ஸ் பூக்கள்'-ம் டக்கராக உள்ளது.

  கூட இருந்தே குழிபறிக்கும் செயல் வீரர் செழியன் அவர்களே,

  அதென்னய்யா ஸ்ட்ராபெரி சோம்பேறி? அப்போ நீங்க என்ன, பலாப்பழ சோம்பேறியா? 'மொக்கை காமிக்ஸ்'-ல சீக்கிரம் பதிவு போடுங்க.

  அன்பிற்குரிய அம்மா ஆசை இரவுகள் விசிறி அவர்களே,

  பதிவு போடுவதற்குள் என்ன அவசரம்? இருந்தாலும் முந்திக்கொண்டு விடையளித்ததற்கு பாராட்டுக்கள்.  புதுப்பதிவை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்களேன்!

  கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தங்கள் நல்லாதரவை தொடர்ந்து வழங்க வேண்டிக்கொள்கிறேன். (அப்பாடா, பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பது பதிவு போடுறத விட கஷ்டமா இருக்கு. சோம்பேறித்தனம் ரொம்ப அதிகமாத்தான் ஆயிடுச்சு!)

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!