இன்றுதான் சுடச்சுட தபால் மூலம் வந்திறங்கியிருக்கும் லயன் காமிக்ஸ்#207: கொலை செய்ய விரும்பு! காமிக்ஸ் புத்தகத்தின் முதற்பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இதைப் படிக்கும் உங்களைப் போலவே நானும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!
பதிவிற்கு செல்லும் முன் சிலபல தகவல்கள்!
- முத்து விசிறி நீண்ட நாள் கழித்து பதிவிட்டுள்ளார், அதுவும் சுந்தரத் தமிழில்! படிக்க இங்கே ‘க்ளிக்’கவும்!
- இந்தப் புத்தகம் உண்மையில் தமிழ் காமிக்ஸ் வலையுலகின் ‘முடி’சூடிய மன்னனும் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதியுமான கிங் விஸ்வா-வின் சந்தா பிரதி! புத்தகம் எனக்கு இன்னும் வரவில்லை! எவருக்கும் முன்னர் அவருக்கு புத்தகம் மீண்டும் ஒரு முறை வந்திருப்பதனால் அவருக்கு லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் உள்குத்து இருக்கிறது என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகிறது!
- அவர் நாட்டில்/வீட்டில் இல்லாத காரணத்தால், புத்தகத்தை அங்கிருந்து நைஸாக லவட்டிக் கொண்டு வந்து ஸ்கேன் செய்து நமக்கெல்லாம் வழங்கிய அய்யம்பாளையத்தார்-க்கு இந்த தருணத்தில் நாமெல்லாம் நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறோம்!
மொக்கை போட்டது போதும், இனி பதிவுக்கு வருவோம்!
ஆண்டு மலர்-ஆக வந்திருக்க வேண்டிய இந்த புத்தகம் மிக தாமதமாக தீபாவளி மலர்-ஆக வந்துள்ளது! தீபாவளி மலர் என்றதும் ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம்! ஆனால் பல சரவெடி சமாச்சாரங்கள் புத்தகத்தில் ஒளிந்துள்ளன! அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்!
அட்டைப்படம்:
ஏற்கெனவே நண்பர் ஜாலி ஜம்பர் மூலம் நீங்கள் அனைவரும் இந்த அட்டைப் படத்தை முன்னோட்டம் கண்டிருப்பீர்கள்! ஆகையால் இதில் புதுமை ஒன்றுமில்லை! எனினும் இதோ அட்டைப்படம் மீண்டும் உங்கள் பார்வைக்கு!
ஹாட்லைன்:
புத்தகத்தைத் திறந்தவுடன் நான் படிக்கும் முதல் விஷயம் இதுதான்! உங்களில் பலரும் இதைத்தன் முதலில் படிக்க விரும்புவீர்கள் என்று தெரியும்! எனவே மேலும் வளவளவென எழுதாமல், ஓவர் டூ மிஸ்டர்.S.விஜயன்!
பல கருத்துக்களை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார்! புத்தகத்திலேயே இந்த இரு பக்கங்கள் தான் ஹை-லைட்! படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்களேன்!
விளம்பரங்கள்:
ஹாட்லைனுக்குப் பிறகு என் கண்கள் நாடுவன விளம்பரங்கள்தான்! இதோ அதியற்புத விளம்பரங்களின் அணிவகுப்பு! சிக்பில்லை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
இதில் கடைசி விளம்பரம் நம் கவனத்தைக் கவர்கிறது! மீண்டும் ஒரு முறை எனது பரம வைரியுடன் மோதும் நாளை விரைவில் எதிர்பார்க்கிறேன்! டெக்ஸ் வில்லர் கதை ஒரே பாகத்தில் முடிகிறதென்றால் கண்டிப்பாக கதை மொக்கையாகத்தானிருக்குமென்பது வரலாறு (மரணத்தின் நிறம் பச்சை, பறக்கும் பலூனில் டெக்ஸ்)! பொறுத்திருந்திருந்து பார்ப்போம்!
XIII ஸ்பெஷலுக்கு முன்பதிவு செய்திருக்கும் வாசகர்கள் பட்டியல் இதிலும் தொடர்கிறது! நீங்களும் விரைந்து முன்பதிவு செய்து பட்டியலில் உங்கள் பெயரை இடம்பெறச் செய்யுங்களேன்!
சிங்கத்தின் சிறுவயதில்:
புத்தகத்தில் நான் அடுத்து படிக்கும் பகுதி இதுதான்! ஆசிரியரின் அற்புத நடையில் மீண்டும் ஒரு முறை திளைக்கும் வாய்ப்பு! படித்து மகிழுங்கள்!
சென்ற இதழான லயன் காமிக்ஸ்#206: மாண்டவன் மீண்டான்! இதழில் வெளிவந்த சிங்கத்தின் சிறுவயதில் இதோ!
இதற்கு முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ்கானும் சுட்டியை பயன்படுத்தவும்!
கொலை செய்ய விரும்பு!
கதையைப் படிக்க விரும்பும் பல வாசகர்களின் நலன் கருதி கதையை நான் இங்கு விமர்சிக்கப் போவதில்லை! மாறாக கதை குறித்த விவரங்கள் மற்றும் பயனுள்ள சுட்டிகள் மட்டுமே வழங்கப் போகிறேன்!
அச்சுத் தரம்(?!!) குறித்து நான் எதுவுமே கூறத் தேவையில்லை! நீங்க்ளே கண்கூடாகக் காணலாம்! ஹ்ம்ம்ம்! தமிழில் தரமான அச்சில் காமிக்ஸ் படிப்பதென்பது தற்சமயம் நிறைவேறாத கனவாகாவே உள்ளது!
ஒரு கொசுறு தகவல்! கதையில் ஒரு கிரிக்கெட் பந்து முக்கிய பங்கு வகிக்கிறது! நேற்று நமது இந்திய கிரிக்கெட் அணியினர் சொதப்பியதிலிருந்து மீள இந்தப் புத்தகத்தின் வருகை ஓரளவேணும் உதவக்கூடும்!
| கதை | : | SWEET CAROLINE – கொலை செய்ய விரும்பு! |
| ஆசிரியர் | : | பீட்டர் ஒ’டான்னல் |
| ஓவியர் | : | நெவில் கால்வின் |
| தமிழில் | : | S.விஜயன் |
| வெளியீட்டு விபரங்கள் | : | 29-11-1983 – 19-04-1984 (120 Strips) EVENING STANDARD (5815-5914A) |
| தமிழில் | : | லயன் காமிக்ஸ் # 207 – நவம்பர் 06, 2009 |
துப்பறியும் ஜார்ஜ் நோலன்:
போனஸ் சிறுகதையாக வெளிவந்திருக்கும் துப்பறியும் ஜார்ஜ் நோலன் சிறுகதையின் சாம்பிள் பக்கம் ஒன்று இதோ உங்கள் பார்வைக்கு!
தீர்ப்பு:
நெடுநாள் கழித்து வந்திருக்கும் இந்தப் புத்தகம் காமிக்ஸ் ரசிகர்களுக்கு, குறிப்பாக மாடஸ்டி ரசிகர்களுக்கு நிச்சயம் நல்லதொரு விருந்தாக அமையும்! ஹாட்-லைன், சிங்கத்தின் சிறுவயதில், மற்றும் விளம்பரங்கள் கூடுதல் மதிப்பெண்களை அள்ளுகின்றன!
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!
தொடர்புடைய இடுகைகள்:
லயன் காமிக்ஸ்#207: கொலை செய்ய விரும்பு! முன்னோட்டம்:
சிங்கத்தின் சிறுவயதில்:
மாடஸ்தி:
