Friday, October 1, 2010

கம்ப்யூட்டர் மனிதன்!

வணக்கம்,

இன்று (அக்டோபர் 1, 2010) ஒரு வழியாக எந்திரன் ரிலீஸ் ஆகிறது! ஆகையால் அக்டோபர் மாதம் அ.கொ.தீ.க.வில் எந்திரன் மாதம்!

அக்டோபர் மாதம் முழுவதும் தமிழ் காமிக்ஸ் உலகில் வலம் வந்த எந்திரன்கள் குறித்த விரிவான ஆராய்ச்சிப் பதிவுகள் உங்கள் அபிமான அ.கொ.தீ.க.வில் இடம்பெறும்!

கிங் விஸ்வாவும், ஒலக காமிக்ஸ் ரசிகரும் களத்தில் குதிக்கப் போவதாக வாக்களித்துள்ளனர்!

தமிழ் காமிக்ஸ் உலகின் எந்திரன்களில் நாம் முதலில் காணப்போவது கம்ப்யூட்டர் மனிதன் பற்றி!

ஆகையால் மொக்கை போட்டு மேலும் நேரத்தை வீணாக்காமல் நேரடியாக பதிவுக்கு போவோம்!

புத்தக விவரங்கள்:

அட்டைப்படம் Junior & Mini Lion Comics # 8 - Computer Manidhan - Cover
கதை கம்ப்யூட்டர் மனிதன்!
இதழ் ஜூனியர் & மினி லயன் (மாத இதழ்)
வெளியீடு # 8
முதல் பதிப்பு செப்டம்பர் 1987
மறுபதிப்புகள் இதுவரை இல்லை
பதிப்பகம் பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
ஆசிரியர் S.விஜயன்
அச்சிட்டோர் தி விஜய் புக்ஸ்
நாயகர்(கள்) கம்ப்யூட்டர் மனிதன் டெவில்
மூலம் M.A.C.H.1 - VULCAN (ஆங்கிலம்)
இதழ் 2000AD (Weekly)
வெளியீடு # PROG 1 - 2
முதல் பதிப்பு 26 FEB 77 - 05 MAR 77
பதிப்பகம் IPC MAGAZINES LTD.
மறுபதிப்பு EAGLE (30 AUG 1986 - 29 AUG 1987)
கதை PAT MILLS (1)/ROBERT FLYNN (2)
ஓவியம் ENIO (1)/IAN KENNEDY (2)
தமிழில் S.விஜயன்
பக்கங்கள் 132 (32 முழு வண்ணம் + 96 கறுப்பு வெள்ளை)
சைஸ் 10cmx14cm
விலை ரூ:2.50/- (1987 முதல் பதிப்பின் போது)
முதல் பக்கம் Junior & Mini Lion Comics # 8 - Computer Manidhan - Page 55
CREDITS Junior & Mini Lion Comics # 8 - Credits

விளம்பரம்:

இவ்விதழ் சுதந்திர தின ஸ்பெஷல்! என விளம்பரப்படுத்தப்பட்டது! ஆரம்பத்தில் வந்த விளம்பரத்தில் கம்ப்யூட்டர் மனிதன் இல்லை, ஆனால் புத்தகத்தில் சொல்லாமல் கொள்ளாமல் வந்திறங்கினார்!

Junior & Mini Lion Comics # 7 - Next Issue - AdLion Comics # 41 - On Sale - Ad

ஆனால் பின்னால் வந்த விற்பனையாகிறது விளம்பரத்தில் இது அறைகுறையாக நிவர்த்தி செய்யப்பட்டது!

பிற கதைகள்:

இதில் கம்ப்யூட்டர் மனிதன்! தவிர வேறிரு கதைகளும் வந்தன! அவை ஸ்பைடர் படை! மற்றும் கொரில்லா தீவு! ஆகும்! இதோ அவற்றின் முதல் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு!

Junior & Mini Lion Comics # 8 - Spider Padai

இந்தக் கதை தான் ஆங்கிலத்தில் ஸ்பைடரின் முதல் கதையாகும்! இதில் தான் இவர் ஆர்டினியையும், பெல்ஹாமையும் சந்தித்து தனது குற்ற சாம்ராஜ்யத்தை நிறுவுவார்! இன்ஸ்பெக்டர்கள் கில்மோரும், ட்ராஸ்கும் கூட இதில் தான் முதன் முதலில் தோன்றினர்!

ஸ்பைடர் குறித்த மேல் விவரங்களுக்கு கிங் விஸ்வாவின் கீழ்காணும் சுட்டியிலுள்ள பதிவைப் படிக்கவும்!

Junior & Mini Lion Comics # 8 - Gorilla Theevu

கொரில்லா தீவு! கதை குறித்து மேல் விவரங்கள் ஏதும் இப்போது கைவசம் இல்லை! மன்னிகவும்!

Pat Millsசுவாரசியமான துணுக்குகள்:

 • தமிழில் வெளிவந்த ஒரே சுதந்திர தின ஸ்பெஷல்! காமிக்ஸ் இதுதான்!
 • இக்கதைத் தொடரின் ஆங்கில மூலம் 2000AD வாராந்திர இதழில் தொடராக வெளிவந்தது! வாராவாரம் புது ஆசிரியர்/ஓவியர் டீமுடன் கதைகள் வெளிவந்தன! இது மட்டுமல்ல, 2000ADல் வெளிவந்த அனைத்துக் கதைகளும் இப்படித்தான்!
 • இக்கதைத் தொடரின் ஆசிரியர்களில் ஒருவரான PAT MILLS பிரிட்டிஷ் காமிக்ஸ் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்! உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் காமிக்ஸ் ஹீரோவான JUDGE DREDDஐ உருவாக்கியவர்! BATMAN கதைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார்! கம்ப்யூட்டர் மனிதனையும் உருவாக்கியவர் இவர்தான்! இவரைப் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
 • இக்கதைத் தொடரின் ஓவியர்களில் ஒருவரான IAN KENNEDY பல கதைகளுக்கு அற்புதமான ஓவியங்கள் மூலம் உயிரூட்டியுள்ளார்! தமிழில் இவரது ஓவியங்களுடன் சில பல கதைகள் வந்துள்ளன! அவற்றைப் பற்றி பிறகு பார்ப்போம்! இவரைப் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!
 • இக்கதைதொடர் THE SIX MILLION DOLLAR MAN என்ற பிரபல தொலைக்காட்சித் தொடரைத் தழுவியே அமைக்கப்பட்டதாகும்! கம்ப்யூட்டர் மனிதனின் தோற்றம் கூட அத்தொடரின் நாயகனின் உருவத்தையே ஒத்திருக்கும்! இத்தொலைக்காட்சித் தொடர் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்! SixMillionDollarMan
 • M.A.C.H.1 எனபதன் விளக்கம் MAN ACTIVATED BY COMPU-PUNTURE HYPERPOWER என்பதாகும்! இத்தொடரின் நாயகனின் பெயர் JOHN PROBE என்பதாகும்! ஆனால் இதையெல்லாம் படிக்கும் அந்த காலத்து இளம் தமிழ் காமிக்ஸ் புரவலர்களின் வாய்களில் இந்தப் பெயர்களெல்லாம் சுத்தமாக நுழையாது என்பதை நன்குணர்ந்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் அருமையாக கம்ப்யூட்டர் மனிதன் டெவில் என்று பெயர்மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்!
 • இக்கதைத் தொடர் 2000AD வாராந்திரப் பத்திரிக்கையில் 27 ஃபிப்ரவரி, 1977 முதல் 13 மே 1978 வரை வெற்றிகரமாக வெளிவந்தது! JUDGE DREDD கதாபாத்திரம் புகழ்பெறும் முன்னர் இக்கதைத்தொடரே 2000ADல் மிகப் பிரபலம்! அப்போது 2000ADல் வெளிவந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் காமிக்ஸின் ஆஸ்தான நாயகனான DAN DAREஐ விட இத்தொடர் பிரபலமடைந்தது!
 • பின்னர் EAGLE வாராந்திரப் பத்திரிக்கையில் 30 ஆகஸ்ட், 1986 முதல் 29 ஆக்ஸ்ட், 1987 வரை மறுபதிப்பு செய்யப்பட்டது! அநேகமாக நமது ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் EAGLEல் வந்த மறுபதிப்பையே நமக்கு வழங்கியிருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு!

ஆங்கில மூலம்:

கதையின் ஆங்கில மூலம் முழுவதும் உங்கள் பார்வைக்கு! படித்து மகிழுங்கள்!

2000AD # 1 - Cover2000AD # 1 - M.A.C.H.1 - Page 202000AD # 1 - M.A.C.H.1 - Page 212000AD # 1 - M.A.C.H.1 - Page 222000AD # 1 - M.A.C.H.1 - Page 232000AD # 1 - M.A.C.H.1 - Page 242000AD # 2 - Cover2000AD # 2 - M.A.C.H.1 - Page 112000AD # 2 - M.A.C.H.1 - Page 122000AD # 2 - M.A.C.H.1 - Page 132000AD # 2 - M.A.C.H.1 - Page 142000AD # 2 - M.A.C.H.1 - Page 15

இக்கதைத் தொடர் குறித்து மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளைப் பயன்படுத்தவும்!

நிறைகள்:

 • ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு, சரியான விருந்து!
 • அற்புதமான ஓவியங்கள்! அதுவும் முழு வண்ணத்தில்!

குறைகள்:

 • ஒரேயொரு கதையோடு தொடரை நிறுத்தியது! எந்திரன் போல் அல்லாமல் கம்ப்யூட்டர் மனிதன் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை!

நன்றிகள்:

 • முத்து விசிறி – வழக்கம் போல ஆங்கிலத் தொடரின் அனைத்து விவரங்களையும் அளித்தமைக்கு!
 • ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் – இக்கதைத் தொடரை நமக்கு அறிமுகம் செய்தமைக்கு!

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய இடுகைகள்:

நூற்றாண்டின்  நாயகன் ஸ்பைடர்:

ஜூனியர் & மினி லயன்: