Friday, February 26, 2010

இரும்பு மனிதன்!

“பழைய இரும்புச் சாமான், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்!”
-குள்ளமணி (படம்: கரகாட்டக்காரன்)

வணக்கம்,

தலைப்பை பார்த்து விட்டு அய்யம்பாளையத்தார் போன்ற அரசியல் சாட்டையடி வீரர்கள் இது ஏதோ இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபபாய் பட்டேல் குறித்த பதிவு என்று நினைத்து கொள்ள வேண்டாம் என கனிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!

எந்திரன் திரைப்படம் எப்போது வெளிவரும் என தமிழ்நாடே ஏங்கிக் கிடக்கும் இவ்வேளையில், நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமானதொரு இரும்பு மனிதன் குறித்த ஒரு சிறு முன்னோட்டப் பதிவைக் காண்போம்!

கடந்த ஃபிப்ரவரி 23-ம் தேதிதான் நமது ஃபேவரைட் இரும்பு மனிதன் ஆர்ச்சியின் பிறந்த நாள் ஆகும்! ஆம் 23-02-1952 அன்று வெளிவந்த LION வாரந்திர காமிக்ஸ் இதழின் முதல் இதழில் தான் முதன்முதலாக ஆர்ச்சி தோன்றி சாகஸம் புரிந்து நம்மைப் போல் உலகெங்கிலும் உள்ள என் போன்ற குழந்தைகளையும், குழந்தை மனம் கொண்டோரையும் கவர்ந்தது!

இதோ அந்த முதல் தோற்றத்தின் புகைப்படம்! உபயம்: வழக்கம் போல நண்பர் முத்து விசிறி! படத்தை ‘க்ளிக்’கி பெரிதாக்கிப் பார்த்து மகிழவும்!

Lion (22-02-1952) - Robot Archie

லயன் காமிக்ஸ் # 004 – இரும்பு மனிதன்! இதழில்தான் நமது அபிமான இரும்பு மனிதன் முதன்முதலாக சாகஸம் செய்தான்! இது குறித்த மேலும் சில சுவாரசியமான தகவல்கள் இதோ! நமது காமிக்ஸ்களில் வெளிவந்த முதல் ஆர்ச்சி கதைகளின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!

அட்டைப்படங்கள்:

Lion Comics # 004 - Irumbu ManidhanLion Comics (English Edition) # 2 - The Amazing Robot Archie

விளம்பரங்கள்:

Lion Comics # 004 - Irumbu Manidhan - Ad (Cover) Lion Comics # 004 - Irumbu Manidhan - Ad (Inside)

சிங்கத்தின் சிறுவயதில்:

ஆர்ச்சியின் தமிழ் அறிமுகம் குறித்து ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் கூறியிருப்பதையும் படியுங்கள்!

SS03-1(L192)SS03-2(L192)SS03-3(L192)

அரிய அட்டைப்படம்:

லயன் காமிக்ஸ் # 004 – இரும்பு மனிதன்! அட்டைப்படம் தயாரிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள்! இதோ அந்த உபயோகிக்கப்படாத அரிய அட்டைப்படம் உங்கள் மேலான பார்வைக்கு! உபயம்: நண்பர் ஹாஜா இஸ்மாயில்!

Lion#004 - Irumbu Manidhan - Alternate Cover

இத்தகைய அதியற்புத ஹீரோவை நமக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்த ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

ஆர்ச்சியின் அதிரடி அட்டைப்படங்கள்:

நீங்கள் கண்டு மகிழ இதோ மேலும் சில ஆர்ச்சியின் அதிரடி அட்டைப்படங்கள்! அதிரடி ஆர்ச்சி, அதிசயத் தீவில் ஆர்ச்சி உள்ளிட்ட எனது ஃபேவரைட்கள் சிலது மிஸ்ஸிங்! மன்னிக்கவும்!

Lion Comics # 008 - Marma TheevuLion Comics # 013 - Nadhi ArakanLion Comics # 015 - Kudhirai Veeran ArchieLion Comics # 016 - Ulaga Poril ArchieLion Comics # 024 - Thanga VettaiLion Comics # 025 - Kodai Malar '86Lion Comics # 030 - Yaar Antha Junior ArchieLion Comics # 031 - Deepavali Malar '86Lion Comics # 034 - Puratchi Thalaivan ArchieLion Comics # 036 - Kodai Malar '87Lion Comics # 045 - Archiekkor ArchieLion Comics # 047 - Marana PaniLion Comics # 087 - Archie in ParisLion Comics # 109 - Archieyodu ModhaadhaeLion Comics # 200 - Supplement

காமிக்ஸ் க்ளாசிக்ஸ்:

Comics Classics # 12 - Marma Theevu (Reprint)Comics Classics # 17 - Thanga Vettai (Reprint)

தமிழ் காமிக்ஸ் உலகில் ஆர்ச்சியின் தாக்கம் குறித்து பலரும் இப்போது குறைவாகவே, ஏன் கேவலமாகவே மதிப்பிடுகின்றனர்! ஆனால் ஆர்ச்சி உச்ச நாயகனாக திகழ்ந்த கால கட்டங்களில் அதன் பாதிப்பை சொற்களால் விவரிக்க முடியாது! ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் ஆர்ச்சியால் தனக்குக் கிடைத்த வெற்றிகளை இவ்வாறெல்லாம் பறைசாற்றியுள்ளார்!

Lion Comics # 067 - Emanukku Eman - Supplement - Lion Album - Front CoverLion Comics # 050 - Dragon Nagaram - Back

நமது அபிமான இரும்பு மனிதன் குறித்த  சிறப்பு ஆய்வுப் பதிவொன்று விரைவில் இடவிருகிறேன்! அதுவரை பொறுத்திருக்கவும்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

படங்கள் உபயம்:

தொடர்புடைய இடுகைகள்:

லயன் காமிக்ஸ் ஆங்கில வெளியீடுகள் குறித்து முத்து விசிறியின் முத்தான பதிவு:

லயன் காமிக்ஸ் சிறப்பிதழ்கள் குறித்து கிங் விஸ்வாவின் பதிவு:

சிங்கத்தின் சிறுவயதில் அனைத்து பாகங்களும் படிக்க:

18 comments:

 1. ஹைய்யா! மீ த ஃபர்ஸ்ட்டு!

  ஒலக காமிக்ஸ் ரசிகன்,
  100% உண்மையான பதிவுகள்.
  Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

  ReplyDelete
 2. சிறார் வயதில் என்னை பெருமளவு குதூகலப்படுத்திய 'படக்கதைகளை' கொண்டு வருவதன் பின் இருந்த முயற்சிகளை பற்றி படிக்கும் பொது திரு விஜயன் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் நன்றியும் தோன்றுகிறது.

  தொழில் முனைவரில் பலர் பதுக்கல் வியாபாரிகளாகவும், அடகு காரர்களாகவும் இருந்த அந்த காலத்தில், தொழிலை மீறிய, 'தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்', என்று ஒரு தலை முறைக்கே அறிந்திராத ஆனந்தத்தை கொண்டு வந்த விஜயன் அவர்கள் தன் வாழ்வை பெரும் வாழ்வாக்கி கொண்டார் என்று நினைக்கிறேன்.

  அவர் இந்த பதிவை படிப்பாரானால், பணத்தின் தேவையே, படக்கதை வாடகைக்கு படிக்கத்தான் என்று ஒரு காலத்தில் நினைத்தவனாக, அவரின் முயற்சிகளால் புது உலகங்கள் அறியப்பெற்றவனாக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  அவர் மட்டும் மல்ல, இப்படி மலரும் நினைவுகளை, பலருக்கும் மலர வைக்கும் உங்கள் சேவைகளுக்கும் என் நன்றி.

  ReplyDelete
 3. டாக்டர் ஐயா

  புரட்சித் தலைவன் ஆர்ச்சியின் அட்டைப் படத்தை உங்களின் புண்ணியத்தால் தரிசிக்கும் பேறு பெற்றேன்.

  நன்றிகள்! நடைமுறை நிகழ்வுகளோடு தொடர்புடைய காமிக்ஸ் செய்திகளை அள்ளித் தருவதில் உங்களுக்கு

  உள்ள சாமார்த்தியத்திற்குப் பாராட்டுக்கள்!ஆர்ச்சி கதைகளில் மரணப்பணி மிகச்சிறந்த கதை என்பது என்

  கருத்து!

  ReplyDelete
 4. நல்ல பதிவு,வழக்கம் போல நேரம் தாழ்த்தி விடாமல் பதிவிட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 5. //நமது அபிமான இரும்பு மனிதன் குறித்த சிறப்பு ஆய்வுப் பதிவொன்று விரைவில் இடவிருகிறேன்! அதுவரை பொறுத்திருக்கவும்! //

  என்ன கொடுமை சார்? நான் இப்படித்தான் பதிவிட நினைத்தேன். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்களே?

  ReplyDelete
 6. //அரிய அட்டைப்படம்://

  நண்பரே, இந்தமாதிரி அரிய அட்டைப்படங்கள் என்னிடம் பல உள்ளன. விரைவில் அவற்றை வலையேற்றி விட்டு விடலாம்.

  ReplyDelete
 7. காமிக்ஸ் நண்பர்களே,

  வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

  புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

  இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
  காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

  ReplyDelete
 8. //தமிழ் காமிக்ஸ் உலகில் ஆர்ச்சியின் தாக்கம் குறித்து பலரும் இப்போது குறைவாகவே, ஏன் கேவலமாகவே மதிப்பிடுகின்றனர்! ஆனால் ஆர்ச்சி உச்ச நாயகனாக திகழ்ந்த கால கட்டங்களில்// அந்த காலங்களில் அதாவது லயனின் ஆரம்ப நாட்களில் ஸ்பைடரும், ஆர்ச்சியும் தான் லக்கி மாஸ்காட்'கள். அதனாலேயே லயனின் முதல் 47 இதழ்களில் மொத்தம் பதினைந்து ஆர்ச்சி கதைகள் வந்து இருக்கும். ஆம், ஒவ்வொரு மூன்று இதழ்களிலும் ஒரு ஆர்ச்சி கதை என்ற நிலை அப்போது.

  ReplyDelete
 9. //குறைவாகவே, ஏன் கேவலமாகவே மதிப்பிடுகின்றனர்! ஆனால் ஆர்ச்சி உச்ச நாயகனாக திகழ்ந்த கால கட்டங்களில் அதன் பாதிப்பை சொற்களால் விவரிக்க முடியாது//

  சற்றும் மறுக்க முடியாத உண்மை. சமீபத்தில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் எடிட்டரிடம் உரையாடிக்கொண்டு இருந்தபோது அவர் கூறிய ஒரு தகவல் இது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாசகர் அவரை சந்திக்க வந்தாராம். அப்போது அவர் மிகவும் நெகிழ்ந்து போய் ஒரு விஷயம் கூறினார். அதாவது அந்த வாசகர் சிறு வயதில் பள்ளி நாட்களில் ஆர்ச்சி கதையின் அதி தீவிர வாசகராம். அந்த ஆர்வத்தினாலேயே பின்னர் பள்ளி படிப்பை முடித்தவுடன் எலக்ட்ரானிக்ஸ் துறையில் படிப்பை தொடர்ந்தாராம். இப்படி தனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு வர காரணமாக இருந்த லயன் காமிக்ஸை அவரால் மறக்க இயலாது என்று கூறி நமது எடிட்டரை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தினார்.

  பின் குறிப்பு: அந்த வாசகர் இப்போதும்கூட சிவகாசியில் அரசாங்கதுறையில் பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
 10. அருமையான அட்டைப்படங்களுக்கு நன்றி. நல்ல பதிவு.

  தொடருங்கள்.

  ReplyDelete
 11. நாமெல்லாம் ஒரு பதிவு இடவே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கையில் நீங்கள் எல்லாம் எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறதோ?

  வாழ்க முத்து விசிறி மற்றும் கேப்டன் ஹெச்சை.

  ReplyDelete
 12. உலகப்போரில் ஆர்ச்சி அட்டை சூப்பர்.

  படங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 13. இப்போதுதான் பல அட்டைப்படங்களை பார்க்கவே முடிகிறது.

  இப்படி பல பதிவுகளின் மூலமாவது அட்டைகளை பார்க்க முடிவதில் சந்தோஷம்.

  ReplyDelete
 14. as a child, used to love archie stories.

  when in teen-age, it was the archie comics of another kind that took me over.

  what do you say? it would be the same for most of us. isn't it?

  ReplyDelete
 15. the scans are excellent.

  thanks for your effort.

  ReplyDelete
 16. what really amazes me is the dedication shown by you people in collecting the memorobilia's.

  it is smazing to know that you have a cover of a book which was not published and was planned in 24 years back.
  super.

  ReplyDelete
 17. நண்பர்களே,

  புதிதாக ஒரு பதிவு இட்டு உள்ளேன். வந்து உங்கள் மேலான கருத்துக்களை பதிக்கவும்.

  நன்றி.

  http://kingofcrooks.blogspot.com/2010/03/blog-post.html

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!